PDA

View Full Version : எப்படி நீ அப்படிக் கேட்கலாம்.

அமரன்
11-08-2010, 07:38 PM
வழக்கத்துக்கு மாறாக இன்று இரண்டு மணி அளவில் உணவு கொள்ளப் போனேன். வழக்கம் போல அறுசுவை சலட்டையும், வாட்டிய இறைச்சித் துண்டு ஒன்றையும், வெதுப்பிய காய்கறிகளையும் பிளாஸ்டிக் தட்டில் எடுத்துக் கொண்டு ஐஸ்கிறீம் வித் ஃபுருட்டுக்கு பிறகு வருவதாகச் சொல்லி விட்டு தனிமையாக இருந்த மினிப்பூங்காவின் மேசையில் செட்டிலானேன்.

சாப்பிடலாம் என்று சாலட்டில் கரண்டியை வைத்தபோதுதான் நினைவுக்கு வந்தது சலட் சோஸ் எடுக்க மறந்தது. மீண்டும் கண்டீனின் உள்ளே போய், வைட் வைன் கலந்த சோசை புறந்தள்ளி விட்டு சித்ரஸ் கலவையை எடுத்துட்டுத் திரும்பினால் எதிர்ப்பட்டாள் அல்ஜீரியக் குட்டித்தேவதை. என்னடா இந்த நேரத்தில என்று தொடங்கி உங்கூட உக்காந்து உண்ண நானும் வாறேன் என்று முடித்துக் கூடவே கூட்டிச் சென்றாள்.:)

இத்தனைக்கும் எனக்கும் அவளுக்கும் அரைமணிப் பழக்கம்தான். ஆனால் என்னை அவள் கவனித்திருக்கிறாள் என்பது அப்போது புரிந்து விட்டிருந்தது. பின்னே, எப்பப் பாத்தாலும் கருமக் கண்ணாயிரம் போல தனி ஆவர்த்தனம் வாசித்தால் எவர்தான் கவனிக்க மாட்டார்கள் இந்த நாட்டில்.

இருவரும் மேசையில் அமர்ந்ததும் என் தட்டை உற்றுப் பார்த்து விட்டுக் கேட்டாள் ‘நீ முசல்மானா’. பின்னே முஸ்லிம்கள் தவிர்க்கும் அத்தனையும் என் தட்டில் மறுப்புச் செய்யப்பட்டிருந்தால் அப்படித்தானே கேட்பாள். இல்லை என்றேன். இல்லை இல்லை.. இல்லை என்று தலையாட்டினேன். கிறித்தவனா எனும் அவள் கேள்விக்கும் வழக்கமான என் பாணியிலேயே பதில் சொன்னேன். அப்ப நீ யாரடா புறம்போக்கு என்ற மாதிரிப் பார்த்தாள்.

நான் இலங்கையில் பிறந்த தமிழன் என்று வாய் திறந்து சொன்ன பிற்பாடும் அவள் அடங்கவில்லை. முறைச்சுப் பார்த்து விட்டு என்ன மதம் என வினவினாள். அன்பே சிவம் என்ற மாதிரி முறுவல் பூத்தேன். அவளுக்கு இந்துக் கடவுளரைப் பற்றியும் தெரிந்திருந்தது.

‘கையில கைத்தியுடன், நீண்ட பற்கள் தெரிய, ஒருத்தன் மேல ஏறி நிற்குமே ஒரு பொண்ணு. அந்த மதமா’ என்றாள். ’இப்படியே பேசிட்டிருந்தால் கொஞ்ச நேரத்தில் நீ அந்த மாதிரி ஆயிடுவே’ என்ற மாதிரிப் பார்த்தேன். கையில இருந்த குத்துக் கரண்டியைக் காட்டி ‘இதை வாயில குத்தி, கழுத்திய கவடி :) வைத்து ஆடுவினமே.. அந்த மதமா’ என்றாள். ‘நீ எப்படிக் கேட்டாலும் நான் சொல்ல மாட்டேனே’ என்று வாட்டிய இறைச்சியால் வாயை அடைத்தேன்.

ஒரு கட்டத்தில் அவள் பொறுமையை இழந்தாலோ இல்லையோ நான் சாப்பிட்டு முடித்திருந்தேன். முடிக்கவும் அலைபேசி அலறவும் சரியாக இருந்துச்சு. ‘லவ்வரா’ என்ற கேள்விக்கும் ஆமாம் ஆட்டிட்டு எக்ஸ்கியூஸ் மீ யுடன் அப்பால் நகர்ந்தேன்..

வேலை முடித்து தொடருந்தில் வீட்டுக்கு வந்துகொண்டிருந்த போது அந்தக் காட்சி மீள் ஒளிபரப்பானது மனப்பெட்டியில். அப்போது என்னையே நான் கேட்டேன்.. ‘இலங்கையில் பிறந்த தமிழன்’ என்றுதானே சொன்னேன். ’இலங்கையில் பிறந்தவன்’ என்று சொல்லவில்லை. ஏன்.....!!!!!!???????

அன்புரசிகன்
11-08-2010, 10:06 PM
தற்சமயம் நானிருக்கும் நாட்டில் இந்த கேள்வி ஒருவர் கேட்டிருந்தால் நான் ஒரு மில்லியனர் ஆகியிருப்பேன். இனமதப்பாகுபாடு எந்த வாக்கியத்திலும் இங்கு வரக்கூடாது?

எல்லாவற்றையும் அவருக்கு அவர் மூலமாவே செய்து காட்டியிருக்கலாமே... :D

Ravee
11-08-2010, 11:16 PM
அமரா நீங்க சிவனே என்று அமர்ந்தாலும் சக்தி லொள்ளு பண்ணுது பார்த்தீங்களா ? :lachen001: ஆமாம் , அலைபேசில கூப்பிட்ட லவ்வர்
யாரு ரூ ரூ ரூ ..........? ? ? :confused: :confused: :confused:

அன்புரசிகன்
11-08-2010, 11:32 PM
அமரா நீங்க சிவனே என்று அமர்ந்தாலும் சக்தி லொள்ளு பண்ணுது பார்த்தீங்களா ? :lachen001: ஆமாம் , அலைபேசில கூப்பிட்ட லவ்வர்
யாரு ரூ ரூ ரூ ..........? ? ? :confused: :confused: :confused:
இவரே Profile tune setting ல் சென்று ஏதாவது ஒன்றை இசைக்கச்செய்துவிட்டு கிளம்பியிருப்பார்.... :D :D :D அப்படித்தானே அமரா...

Ravee
11-08-2010, 11:47 PM
இவரே Profile tune setting ல் சென்று ஏதாவது ஒன்றை இசைக்கச்செய்துவிட்டு கிளம்பியிருப்பார்.... :D :D :D அப்படித்தானே அமரா...

அல்ஜீரியக் குட்டித்தேவதை - வர்ணனைய்ய கவனிங்க அன்பு :icon_36: ... இந்த பூனையை நம்பலாமா ...:icon_35:

பாரதி
12-08-2010, 12:22 AM
சில நேரங்களில் நாம் கூறும் சொற்களை பிற்பாடு புரட்டிப்போட்டுப் பார்த்தால்... ஏன் அப்படி என்ற ஐயம் எழத்தான் செய்கிறது. இதனால்தான் என ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி சமாதானப்படுகிறது..ஹும்...

அப்புறம் அமரன்.... மீள் ஒளிபரப்பில் இந்த கேள்வி மட்டும்தான் வந்ததா...?:lachen001:

அன்புரசிகன்
12-08-2010, 12:50 AM
அல்ஜீரியக் குட்டித்தேவதை - வர்ணனைய்ய கவனிங்க அன்பு :icon_36: ... இந்த பூனையை நம்பலாமா ...:icon_35:
இந்த நேரத்தில் அமரன் சிங்களத்தில் அனுபவித்து பேசியிருந்தால்.............

ஓஓஓஓஓஓ அனே................. மகே அல்ஜீரிய புஞ்சி சுறாங்கனி...........................

இப்படியே சுறாங்கனி பாட்டு பாடியிருப்பார்... :D :D :D

Ravee
12-08-2010, 01:03 AM

அந்த மாலு கண்ணா இவர்தானா ஹா ஹா ஹா :lachen001: :lachen001: :lachen001:

அன்புரசிகன்
12-08-2010, 01:06 AM
அந்த மாலு கண்ணா இவர்தானா ஹா ஹா ஹா :lachen001: :lachen001: :lachen001:
இவருக்கு எப்படி மாலு கண்ணு இருக்கும். நொள்ளக்கண் தான் இருக்கும். அது தான் தான் ஆவர்த்தனம் பாடியதை தானே வர்ணித்தாரே...

மதி
12-08-2010, 01:32 AM
அரைமணிநேரத்திலும் குசும்பு.. அந்த பெண் முன்னாடி சுத்திட்டு "என்னையே அரைமணி நேரம் பார்த்துட்டு இருந்தாள் போலும்"..

அது சரி... போன்ல யாரு?:D:D:D

பென்ஸ்
12-08-2010, 01:49 AM
அமரன்... என்ன குசும்பு இது.... அப்படியே சைக்கிள் கேப்புல என்ன நடக்குது...????:D:D:D:D

அப்படியே கடைசி டச்... ரியல் டச் :icon_good:

Ravee
12-08-2010, 06:50 AM
‘இலங்கையில் பிறந்த தமிழன்’ என்றுதானே சொன்னேன். ’இலங்கையில் பிறந்தவன்’ என்று சொல்லவில்லை. ஏன்.....!!!!!!???????

சொல்லுறதை சொல்லிட்டு அப்புறம் ஏன்னு எங்ககிட்ட கேட்டா ??? :confused: :confused: :confused:

தாமரை
12-08-2010, 09:33 AM
‘இலங்கையில் பிறந்த தமிழன்’ என்றுதானே சொன்னேன். ’இலங்கையில் பிறந்தவன்’ என்று சொல்லவில்லை. ஏன்.....!!!!!!???????

சொல்லுறதை சொல்லிட்டு அப்புறம் ஏன்னு எங்ககிட்ட கேட்டா ??? :confused: :confused: :confused:

அது யாரோட கைன்னு யாரும் கேக்கலியே சந்தோஷம்!!!

த.ஜார்ஜ்
12-08-2010, 09:42 AM
ஆமா ஏன்?

ஆதவா
12-08-2010, 09:57 AM
அதுசரி!! ஏன்??

அல்ஜீரிய குட்டி தேவதை??
உங்க பாணியில கொஞ்சம் வர்ணிப்பு தேவை!!

அப்பறம், 18000+ வாழ்த்துக்கள்!!

Nivas.T
12-08-2010, 10:48 AM
எங்கு பிறந்தும்
தமிழன் என்று சொல்வதே பெருமை

அது சரி அந்த பொண்ணு டைலாக் மட்டுதான் இருக்கு
உங்க டைலாக் எல்லாம் கட்
அப்டிதானே ?

தாமரை
12-08-2010, 10:49 AM
அதெல்லாம் ஜொள்ளில அழிஞ்சு போச்சு

செல்வா
12-08-2010, 11:11 AM
அதெல்லாம் ஜொள்ளில அழிஞ்சு போச்சு

அமிழ்ந்து போச்சு :D

Nivas.T
12-08-2010, 11:11 AM
அதெல்லாம் ஜொள்ளில அழிஞ்சு போச்சு

:redface: :sprachlos020: :aetsch013: :confused: :D ;) :p :eek: :mini023: :frown: :rolleyes: :icon_b: :fragend005: :traurig001: :mad: :wuerg019:
:icon_rollout: :lachen001: :lachen001: :lachen001: :lachen001: :icon_rollout:

சுகந்தப்ரீதன்
12-08-2010, 02:55 PM
அது சரி அந்த பொண்ணு டைலாக் மட்டுதான் இருக்கு
உங்க டைலாக் எல்லாம் கட்
அப்டிதானே ?அப்படியில்ல நிவாஸ்... "இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில் மனிதர்க்கு மொழியே தேவையில்லை.!!"

எனக்கு புரிஞ்சுடுச்சி... உங்களுக்கு புரியலையா..?!:wuerg019:

அமரன்
12-08-2010, 06:54 PM
தற்சமயம் நானிருக்கும் நாட்டில் இந்த கேள்வி ஒருவர் கேட்டிருந்தால் நான் ஒரு மில்லியனர் ஆகியிருப்பேன். இனமதப்பாகுபாடு எந்த வாக்கியத்திலும் இங்கு வரக்கூடாது?

எல்லாவற்றையும் அவருக்கு அவர் மூலமாவே செய்து காட்டியிருக்கலாமே... :D

இங்கயும் அப்படித்தான் அன்பு. நிறத்தை, மொழியை, இனத்தை, மதத்தை வைத்து சந்தேகப்பட்டு விசாரித்தால், ஏன் கதைத்தாலே காவல்துறைமேல் கூட வழக்குத் தொடுக்கலாம்.

பாவம்யா அந்தப் பொண்ணு. பயப்படுத்த வேண்டாமே என்று பார்க்கிறேன்.

அமரன்
12-08-2010, 07:00 PM
அமரா நீங்க சிவனே என்று அமர்ந்தாலும் சக்தி லொள்ளு பண்ணுது பார்த்தீங்களா ? :lachen001: ஆமாம் , அலைபேசில கூப்பிட்ட லவ்வர்
யாரு ரூ ரூ ரூ ..........? ? ? :confused: :confused: :confused:

த்தோடா.. நல்லா கேக்குறாரப்ப டீட்டைல்சு.

இவரே Profile tune setting ல் சென்று ஏதாவது ஒன்றை இசைக்கச்செய்துவிட்டு கிளம்பியிருப்பார்.... :D :D :D அப்படித்தானே அமரா...

அவ்வளவு நல்லவனாப்பா நான்.

அல்ஜீரியக் குட்டித்தேவதை - வர்ணனைய்ய கவனிங்க அன்பு :icon_36: ... இந்த பூனையை நம்பலாமா ...:icon_35:

நோ கொமன்ஸ்.:redface:

இந்த நேரத்தில் அமரன் சிங்களத்தில் அனுபவித்து பேசியிருந்தால்.............

ஓஓஓஓஓஓ அனே................. மகே அல்ஜீரிய புஞ்சி சுறாங்கனி...........................

இப்படியே சுறாங்கனி பாட்டு பாடியிருப்பார்... :D :D :D

அட! இது நல்லாஇருக்கே. பச்சைப் புல்வெளி. நட்டு வைச்ச கட்டைப் பனைமரம். பூத்துக்குலுங்கும் வண்ணப் பூச்செடிகளின் அணிவகுப்பு. நல்ல லொக்கேசந்தாம்பா.

அந்த மாலு கண்ணா இவர்தானா ஹா ஹா ஹா :lachen001: :lachen001: :lachen001:

மீன் கூடத் தோத்துடும் ரவீ அந்தப் பெண்ணின் கண்களை கண்டால்.

இவருக்கு எப்படி மாலு கண்ணு இருக்கும். நொள்ளக்கண் தான் இருக்கும். அது தான் தான் ஆவர்த்தனம் பாடியதை தானே வர்ணித்தாரே...

பொறாமை.. பொறாமை...

தனியாவர்த்தனம் பலராலும் கவனிக்கப்படும்கிறது அறியாத சிறுவனா நீ.

அமரன்
12-08-2010, 07:01 PM
அப்புறம் அமரன்.... மீள் ஒளிபரப்பில் இந்த கேள்வி மட்டும்தான் வந்ததா...?:lachen001:

நான் ஏன் ஐஸ்கிறீமை வாங்கவே இல்லை.

வேற ஏதாச்சும் எதிர்பார்த்தீங்களா அண்ணா.

அமரன்
12-08-2010, 07:04 PM
அது சரி... போன்ல யாரு?:D:D:D

இத நீங்க நேருல கேட்டிருக்கனும்:D

அமரன்... என்ன குசும்பு இது.... அப்படியே சைக்கிள் கேப்புல என்ன நடக்குது...????:D:D:D:D

ஹி...ஹி...

ஆமா ஏன்?

அதானே ஏன்.

அமரன்
12-08-2010, 07:05 PM
அது யாரோட கைன்னு யாரும் கேக்கலியே சந்தோஷம்!!!

:confused::confused::confused::confused::confused:

அமரன்
12-08-2010, 07:10 PM
அதுசரி!! ஏன்??

அல்ஜீரிய குட்டி தேவதை??
உங்க பாணியில கொஞ்சம் வர்ணிப்பு தேவை!!

அப்பறம், 18000+ வாழ்த்துக்கள்!!

வேணாம்.. வம்பாயிடும்

நன்றி தல

அது சரி அந்த பொண்ணு டைலாக் மட்டுதான் இருக்கு
உங்க டைலாக் எல்லாம் கட்
அப்டிதானே ?
அந்தப் பொண்ணு வாய்க்கு லாக்கே இல்ல.
எனக்கு டைலாக்கே இல்ல.
நான் அப்படித்தாங்க.. பேசுவது குறைவு.

அதெல்லாம் ஜொள்ளில அழிஞ்சு போச்சு
:p:p:p

அமிழ்ந்து போச்சு :D

அப்படியில்ல நிவாஸ்... "இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில் மனிதர்க்கு மொழியே தேவையில்லை.!!"

எனக்கு புரிஞ்சுடுச்சி... உங்களுக்கு புரியலையா..?!:wuerg019:

யோவ்.. நீ வேற குட்டையைக் கிளறாதய்யா.

அன்புரசிகன்
12-08-2010, 10:03 PM
இன்றுவரை வெளிநாட்டில் நீ எங்கிருந்து வந்திருக்கிறாய் என்று கேட்டால் இலங்கையை சொன்னால் பல விளக்கம் கொடுக்க வேண்டி வரும். உதாரணமாக தற்சமயம் அவுஸ்திரேலிய அரசாங்கத்தை நிர்ணயிக்கும் ஒரு காரணிகளில் படகு மூலம் படையெடுக்கும் ஆப்கான் இலங்கை அகதிகள்.... மதசம்பந்தமாக எவனும் பேசமாட்டான். அந்தளவு பயம். :D :D :D (பயப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.)

பூமகள்
13-08-2010, 04:59 AM
கிட்டத் தட்ட இதே மாதிரி அனுபவம் எனக்கும் ஏற்பட்டிருக்கிறது அமர் அண்ணா.. அதைக் கருவாக்கி எழுதலாம்னு நினைத்திருக்கையில் உங்கள் இந்தப் பதிவு..

அந்த குட்டி தேவதையின் கேள்விகளுக்கு உங்கள் விழி, முகம் கொடுத்த விடை என் மனக்கண் முன்னே.. :)

கடைசி வரை மதத்தைச் சொல்லாமல் விட்டு, ஒரு புன்னகையை விடையாக்கிய விதம் பலவற்றைப் புரிவித்தது.

நாம் தமிழர் என்பதில் பெருமிதம் கொள்வோம்.

ஏன் தமிழன் என்பதை மறக்காமல் சொன்னீர்கள் என்பது எங்களுக்கு புரியாமலா இருக்கும். :cool:

அமரன்
13-08-2010, 07:56 PM
பூமகள்..

எத்தனையோ காரணங்கள் அகம்மோத ஒன்றிரண்டு வெட்க வைக்கின்றன.

நான் அவசரப்படாமல் இருந்திருந்தால் உங்களிடமிருந்து அருமையான பதிவு ஒன்று வந்திருக்கும். இப்பவும் கெட்டுப் போகவில்லை. பதிவு செய்திடுங்க.

விகடன்
06-10-2010, 10:50 AM
இதுவரையில் ”நீங்கள் ஏன் அப்படிச் சொன்னீர்கள்?” என்ற கேள்விக்கு பதிலெழுதவேயில்லையே!

அமரன்
06-10-2010, 06:18 PM
இதுவரையில் ”நீங்கள் ஏன் அப்படிச் சொன்னீர்கள்?” என்ற கேள்விக்கு பதிலெழுதவேயில்லையே!

ரம்லானுக்கு தடல் புடலா விருந்து வைச்சுக் கவனிச்ச அவளே கேக்கல. இவரு வந்துட்டாருய்யா டீட்டெய்லாக் கேக்குறதுக்கு..:cool:

விகடன்
06-10-2010, 08:57 PM
எங்களைப்போல புத்திசாலிகளை மன்றத்தில் மட்டுந்தானே காணமுடிகிறது அமரா :mini023:

பூமகள்
07-10-2010, 05:35 AM
பூமகள்..

எத்தனையோ காரணங்கள் அகம்மோத ஒன்றிரண்டு வெட்க வைக்கின்றன.

நான் அவசரப்படாமல் இருந்திருந்தால் உங்களிடமிருந்து அருமையான பதிவு ஒன்று வந்திருக்கும். இப்பவும் கெட்டுப் போகவில்லை. பதிவு செய்திடுங்க.
ஹா ஹா.. என்ன அண்ணா... உங்களோட இந்த பதிவு தானே என்னை எழுதத் தூண்டியே இருக்கு.. இல்லாட்டி எழுதலாமா வேண்டாமா என்ற அலைமோதலில் எழுதாமலே போயிருப்பேனே.. :rolleyes:

பதிவு பதிச்சாச்சே.. சந்தோசம் தானே. :icon_b::icon_rollout: