PDA

View Full Version : சொல்லாத கதை



த.ஜார்ஜ்
11-08-2010, 05:40 PM
பி.கே.சி.யில் [தான் படிக்க வந்து போனதாக தனது வலைதளத்தில் ஜெயமோகன் சொல்லியிருப்பாரே.. அதே கல்லூரி. அதை ஒட்டிய காலக்கட்டம்] எம்.என்.சார் ஒரு சிம்ம சொப்பனம் [அது என்ன சொப்பனம் என்று கேட்கப்படாது..} அத்தனை .கண்டிப்பு. வார்த்தைகள் கணீர் கணீர் என்று எதிரொலிக்கும். சாட்டையாய் உரசிச் செல்லும். அவரது கெடுபிடியினால் சீக்கிரமே ‘எமன்’ சார் என்று புகழ் பெற்றார்.

அவரது வகுப்புதான் கல்லூரியை ஒரு சீர்திருத்த பள்ளியாக உருமாற்றிவிடும் வல்லமை கொண்டது.. ஆங்கில வார்த்தைகளை அவர் உச்சரிக்கும் விதத்தைக் கண்டால் ஆங்கிலேயன் கூட பிரமித்து போவான்.[மிரண்டு போவான் என்றும் சொல்லலாம்] “ஸ்ஷட் அப்” என்று அவர் சொன்னால் பக்கத்து வகுப்புகள் கூட மிரண்டு போய் மூச்சுவிட மறக்கும்.

பொயட்ரியை அவர் வாசித்துக் கொண்டிருக்க.... வாய்க்குள் அவர் நாவு சுழன்று கொண்டிருப்பதை வாய் பிழந்து பார்த்துக் கொண்டிருப்போம். அப்பேர்பட்ட திறமை வாய்ந்த எமன் சார்.....

அவர் அன்று அவசரமாய் சற்று தாமதாமாக வந்தார். வகுப்பில் அந்த இடைப்பட்ட நேரத்தில் எழுந்த சத்தத்தை கேட்டுக்கொண்டு வந்திருப்பார். முகத்தில் கோபம்.

“காலேஜ்தானே இது.. சந்தைகடை மாதிரி என்ன கூச்சல்.... அறிவில்ல.... ஸ்டுபிட்.. “ ஆங்கிலத்தில் இன்னும் என்னன்னவோ சொன்னார். நமக்கு புரியவில்லை. ஆனால் பார்ட்டி செம கோபத்திலிருக்கு என்று மட்டும் புரிந்தது.

கவிழ்ந்தே இருந்த எல்லோரும் ஒருவாறாக பாடம் தொடங்கியதும்தான் நிமிர்ந்து பார்த்தோம். அப்போதுதான் எமன் சாரிடம் அந்த வித்தியாசம் பளிச்சென்று தெரிந்தது.

ஒருவருக்கொருவர் மாறி மாறி பார்த்துக்கொண்டோம். சின்னதாய் ஒரு சலசலப்பு. கோபமாய் முறைத்தார். “கீப் கொய்ட்” என்றார். [ இங்கு ‘ட்’ கால் மாத்திரையை விட குறைவு.] ஏனோ நிறைய பேருக்கு சிரிப்பு வந்தது. பயலுகளுக்கு பயம் விட்டு போயிருச்சா.. புத்தகத்தை மேஜை மேல் விட்டெறிந்தார். மேஜைக்கு முன்புறமாய் வந்து மார்புக்கு குறுக்காய் கையை கட்டிக் கொண்டு நின்றார். மேஜையில் பின்புறத்தால் ஏறி உட்காருகிற நிலையில் நின்றபடி “சொல்லுங்க. உங்களுக்கு என்னடா வேணும். இடியட்ஸ்ஸ்ஸ்”

எல்லோருக்கும் அவரிடம் சொல்வதற்கு ஒரு விசயம் இருந்தது. ஆனால் சொல்ல தைரியம் வரவில்லை. யார் முதலில் சொல்வது என்று மறுபடியும் பக்கத்து முகங்களை பார்த்துக் கொண்டோம். கடைசி பெஞ்சில் அமர்ந்திருந்த கோலப்பன் உட்கார்ந்து சைகையால் எதுவோ சொல்ல.. அவருக்கு கடுமையான கோபம்.. “எனக்கு இது பிடிக்காதுன்னு தெரியுமில்ல.. உட்கார்ந்துட்டு டான்சா ஆடுற ராஸ்ஸ்ஸ்கல்.” ஓடிப்போய் அவன் மண்டையில் குட்டினார். ‘ட்டங்’ என்று ஓசை கேட்டது. வகுப்பு வலியோடு அமைதியாயிற்று.

“ஸ்டுடன்னா.. ஒரு ஒழுங்கு இருக்கணும். வகுப்பு அதைவிட ஒழுங்கா இருக்கணும் அதுவும் என் வகுப்புக்கு அமைதியா இருந்து படிக்க வராதவன் வீட்டுக்கு போயிரு” வகுப்பை குறுக்கு வாட்டில் அளப்பதுபோல் நடந்து கொண்டே எச்சரிக்கைகள் விடுத்து முடிவதற்குள் மணி அடித்து விட்டது. “அடுத்த வகுப்பில வந்து வச்சிகிறேன்” என்று வெளியேறிப் போனார். அப்போது எதிரே வந்த அந்த கல்லூரியின் ஒரே ஒரு பெண் பேராசிரியர் இவரைக்கண்டு முகத்தை திருப்பிக்கொண்டு போனார்.

இப்படியாக அவர் ஜிப்பை மாட்டிக்கொள்ளச் சொல்லி யாருமே சொல்ல முடியாமல் போயிற்று.

அமரன்
11-08-2010, 08:02 PM
ஹஹ்ஹ்ஹா..

கொஞ்சமாவது ஈரம் தெரிந்தால்தானே சொல்றதுக்கு..

சொன்னாலும்....

பாடத்தைத் தவிர மற்ற எல்லாத்தையும் கவனிக்கிறாய் என்று சாத்துப்படி நடக்குமே.

அன்புரசிகன்
11-08-2010, 10:01 PM
இன்னா அனுபவம் அமரனுக்கு...

அந்த பெண் திரும்பியதற்கு பிறகாவது பின்னர் அவரை கண்டபோது போட்டிருந்தாரா போடவில்லையா?:lachen001:

மச்சான்
11-08-2010, 10:16 PM
எமன் எப்போ போட்டாரு ஜிப்பு......?:medium-smiley-025:

மதி
12-08-2010, 01:28 AM
கஷ்டகாலம்... எப்போ தான் சொன்னீங்க அவர்கிட்ட??

தாமரை
12-08-2010, 09:13 AM
கஷ்டகாலம்... எப்போ தான் சொன்னீங்க அவர்கிட்ட??

இப்போதான் சொல்றாரு ஜார்ஜ்.. எமன் ஒரு வேளை இங்கயே இருக்கலாம்..:aetsch013:

ஆதவா
12-08-2010, 09:50 AM
இப்போதான் சொல்றாரு ஜார்ஜ்.. எமன் ஒரு வேளை இங்கயே இருக்கலாம்..:aetsch013:

அப்போ இத்தனை நாளும்???? :lachen001::lachen001:

உங்க கல்லூரியில் பெண்கள் உண்டோ? :aetsch013:

த.ஜார்ஜ்
12-08-2010, 10:24 AM
இரண்டு விசங்கள் சொல்லாமல் விடுபட்டுவிட்டது.
1 அவர் எப்போதும் தொந்தி தெரிய சட்டையை இன் செய்திருப்பார்.
2 .இப்போதுதான் அந்த கல்லூரியில் இருபாலர் பயில்கின்றனர்.
இதன் தொடர்ச்சியாக இன்னொரு சம்பவமும் நினைவுக்கு வந்து தொலைக்கிறது. சொன்னால்... வேண்டாம் கைப்புள்ள அப்படியே... மெய்ண்டன் பண்ணு.

த.ஜார்ஜ்
12-08-2010, 10:25 AM
அமரனுக்கு அன்புரசிகன் சொன்ன ஆலோசனையை எதற்கும் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

த.ஜார்ஜ்
12-08-2010, 10:28 AM
கஷ்டகாலம்... எப்போ தான் சொன்னீங்க அவர்கிட்ட??

அதுதான் சொல்லாத கதை

சுகந்தப்ரீதன்
12-08-2010, 07:09 PM
இதுக்கு தலைப்பு "சொல்ல பயந்த கதை"ன்னு வச்சிருக்கலாம்..!!

பாவம்... கோலப்பன்... அவருக்கு என் அனுதாபத்தை சொல்லிடுங்க ஜார்ஜ்..!!:D