PDA

View Full Version : நானில்லாத அவன்



சசிதரன்
11-08-2010, 05:16 PM
அவன் என்னைப் போல் இருப்பதாய்
அடையாளம் காட்டப்பட்டான்.

அவன் கண்களில் இருந்த வெறுமை
இதுவரை நான் பார்த்திராதது.

அவன் நிறைய பேசினான்.
மௌனங்களை மொழிபெயர்த்து
அவன் பேசிய வார்த்தைகள்
நான் எதிர்பாராதது.

நட்பா குரோதமா என கணிக்கவியலாதபடிக்கு
ஒரு புன்னகை வைத்திருந்தான்.

மிக மெல்லிதான ஒரு விசும்பல்
அவனிடமிருந்து கேட்டுக் கொண்டேயிருந்தது.
அதை நான் கண்டுகொண்டது அவனை
ஆச்சர்யப்படுத்தியிருக்கக்கூடும்.
சிறிதாய் வெளிக்காட்டி பின் சுதாரித்துக் கொண்டான்.

அவன் யாருடைய தேற்றுதலையும்
ஏற்றுக் கொள்ளாமல் புறக்கணித்தான்.
தோள் தொட்டால் உடைந்துவிடும் பயம்
அவனுள் இருந்தது.

நிச்சயமாய் என்னைப் போல் இல்லை எனினும்
அவன் என்னைப் போல் இருப்பதாகவே
அடையாளம் காட்டப்பட்டான்.

Ravee
12-08-2010, 12:01 AM
கண்ணாடியில் சில சமயம் என்னை பார்க்கும் போது இதே போல எண்ண அலைகள் ஓடும் சசி ... எனக்கு தெரிந்த நானே மூன்றாம் மனிதனாய் ..... :confused:

பாரதி
12-08-2010, 12:26 AM
வெளியில் உள்ள உருவமும், அகத்தில் இருக்கும் உணர்வும் வேறாக இருப்பதாக... உள்ளதை வார்த்தைப்பசைகளால் கோர்த்திருக்கிறார் கவிஞர்.

அகமும் புறமும் ஒன்றாகி சிவம் காணட்டும்.

பாராட்டு நண்பரே.

சுடர்விழி
12-08-2010, 09:18 AM
உள்ளும் வெளியும் உள்ள உணர்வு வேறுபாடுகளை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்..உங்கள் கவிதை எல்லாமே இயல்பாகவும்,எளிமையாகவும் வித்தியாசமாகவும் இருக்கு...இந்த ரசிகையின் பாராட்டுக்கள்...

சுகந்தப்ரீதன்
12-08-2010, 04:15 PM
அகம் வேறு.. புறம் வேறு.. அகம்புறமின்றி நானேது..?!

சசி... எனக்குள் ஒருவன்... உன்னைப்போல் ஒருவன்.. என்பதைப்போல நானில்லாத அவன்..!! தேர்ந்த தலைப்பு கவிதைக்கு... வாழ்த்துக்கள்..!!

பூமகள்
13-08-2010, 01:35 AM
அருமை சசி.. வரிகள் கட்டிப் போட்டுவிடுகின்றன..

விசும்பும் அகம்.. புறத்தோடு சந்திப்பது போல் இருப்பது அற்புதம்.

தலைப்பு, கவிதை வரி, கவிதைக் கரு அனைத்தும் அருமை. தேர்ந்த எழுத்தாளராவது உறுதி. அப்போது எங்களை மறக்காமல் இருந்தால் சரி தான். விரைவில் புத்தகம் வெளியிட எண்ணமா சசி?

மனம் நிறைந்த பாராட்டுகள். :)

சசிதரன்
17-08-2010, 04:09 PM
கண்ணாடியில் சில சமயம் என்னை பார்க்கும் போது இதே போல எண்ண அலைகள் ஓடும் சசி ... எனக்கு தெரிந்த நானே மூன்றாம் மனிதனாய் ..... :confused:

நன்றி ரவி... :)

சசிதரன்
17-08-2010, 04:10 PM
வெளியில் உள்ள உருவமும், அகத்தில் இருக்கும் உணர்வும் வேறாக இருப்பதாக... உள்ளதை வார்த்தைப்பசைகளால் கோர்த்திருக்கிறார் கவிஞர்.

அகமும் புறமும் ஒன்றாகி சிவம் காணட்டும்.

பாராட்டு நண்பரே.

நன்றி பாரதி அண்ணா...:)

சசிதரன்
17-08-2010, 04:10 PM
உள்ளும் வெளியும் உள்ள உணர்வு வேறுபாடுகளை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்..உங்கள் கவிதை எல்லாமே இயல்பாகவும்,எளிமையாகவும் வித்தியாசமாகவும் இருக்கு...இந்த ரசிகையின் பாராட்டுக்கள்...

மிக்க நன்றி சுடர்விழி... :)

சசிதரன்
17-08-2010, 04:12 PM
அகம் வேறு.. புறம் வேறு.. அகம்புறமின்றி நானேது..?!

சசி... எனக்குள் ஒருவன்... உன்னைப்போல் ஒருவன்.. என்பதைப்போல நானில்லாத அவன்..!! தேர்ந்த தலைப்பு கவிதைக்கு... வாழ்த்துக்கள்..!!

மிக்க நன்றி சுகந்தவாசன்... :)

சசிதரன்
17-08-2010, 04:14 PM
அருமை சசி.. வரிகள் கட்டிப் போட்டுவிடுகின்றன..

விசும்பும் அகம்.. புறத்தோடு சந்திப்பது போல் இருப்பது அற்புதம்.

தலைப்பு, கவிதை வரி, கவிதைக் கரு அனைத்தும் அருமை. தேர்ந்த எழுத்தாளராவது உறுதி. அப்போது எங்களை மறக்காமல் இருந்தால் சரி தான். விரைவில் புத்தகம் வெளியிட எண்ணமா சசி?

மனம் நிறைந்த பாராட்டுகள். :)

மிக்க நன்றி பூமகள்... புத்தகம் போடும் அளவு எண்ணம் இல்லை... மன்றத்தில் இருக்கும் தேர்ந்த கவிஞர்கள் முதலில் போடட்டும்... :)