PDA

View Full Version : இந்தியா நியூசிலாந்து கிரிக்கட் போட்டி



வியாசன்
10-08-2010, 09:39 AM
இந்தியா நியூசிலாந்து ஒருநாள் போட்டியை கண்டு களிப்பதற்கு

போட்டியை இணையத்தில் கண்டு களிக்க (http://isaitoday.com)

aren
10-08-2010, 10:24 AM
நன்றாகத் தெரிகிறது வியாசன். நன்றி.

வியாசன்
10-08-2010, 05:16 PM
இந்தியா இந்தப்போட்டியில் 88 ஓட்டங்களுக்கு 10 விக்கட்டுக்களை இழந்து பரிதாபகரமாக தோற்றது .இந்த தோல்வியில் சச்னுக்கு பங்கு இல்லை

மச்சான்
10-08-2010, 05:54 PM
இந்தியா இந்தப்போட்டியில் 88 ஓட்டங்களுக்கு 10 விக்கட்டுக்களை இழந்து பரிதாபகரமாக தோற்றது.
எல்லோரும் தண்ணிபோட்டுட்டு விளையாடி இருப்பாங்களோ....?:food-smiley-009::food-smiley-022:

அமரன்
10-08-2010, 07:49 PM
அதிர்ச்சிதான்.. நியூசிலாந்தின் முன்னணி, அனுபவ ஆட்டக்காரர்கள் ஆடாமலே இப்படித் தோற்றது பலத்த அதிர்ச்சிதான். ஷேவாக், சர்மா, யுவராஜ் என அனுபவ ஆட்டக்காரர்கள் தமது வழக்கமான வீக்பொயிண்ட்டின் மூலம் ஆட்டமிழந்தாக போட்டியைப் பாத்த ஒருத்தர் சொன்னார். இது எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சி.

aren
11-08-2010, 02:15 AM
தோனியிடம் இருந்த சரக்கு தீர்ந்துவிட்டதா அல்லது இதுவரை சரக்கே இல்லாமல் காலம் தள்ளினாரா.

இவர்கள் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். கொஞ்சம் ஓரம் கட்டினால்தான் நல்லது.

அன்புரசிகன்
11-08-2010, 03:12 AM
அதிர்ச்சிதான்.. நியூசிலாந்தின் முன்னணி, அனுபவ ஆட்டக்காரர்கள் ஆடாமலே இப்படித் தோற்றது பலத்த அதிர்ச்சிதான்.

இதில் அதிர்ச்சிக்கு இடமேது அமரா? சுத்தி சுத்தி சுப்பற்ற கோடிக்குள் நிற்பது போல் அதே பாணியை பின்பற்றினால் இது தான் நிகழும். தற்போதய இங்கிலாந்து நியூசிலாந்து அவுஸ்திரேலிய அணிகளில் இளம் ஆட்டக்காரர்கள் மிகுந்த சிரத்தையுடன் வந்து தம் இடங்களை தக்கவைக்க மிகவும் வருத்தி போராடுகிறார்கள். ஒவ்வொரு வருடமும் பல முது முகங்கள். ஆனால் இலங்கை இந்தியா பாக்கிஸ்தானில் எவரையா புதுசு... 90% ஆனவர்கள் நான் பல்கலையில் 1ம் வருடத்தில் படிக்கும் போது விளையாடியவர்கள் தான் இப்போதும் விளையாடுகிறார்கள்... நியூசிலாந்து வீரர்களின் பந்து வீச்சினை நிச்சயம் பாராட்டவேண்டும். துடுப்பாட்டக்காரர்களுக்கு தக்கவாறு பந்துவீச்சினை அடிக்கடி மாற்றுகிறார்கள். திறமையானவர்களை பாராட்டவே வேண்டும்.

சராசரி ஆட்ட வீதம் இத்தனைக்கு மேல் என்றால் தான் விளம்பரத்திற்கு செல்லலாம் என்று சட்டம் வைச்சால் சரி வரும்.

ஓவியன்
11-08-2010, 06:44 AM
தோனியிடம் இருந்த சரக்கு தீர்ந்துவிட்டதா அல்லது இதுவரை சரக்கே இல்லாமல் காலம் தள்ளினாரா.

ஒவ்வொரு போட்டியின் தோல்விக்கும் தோனியையே குறை சொல்லிக் கொண்டிருக்க முடியாது அண்ணா, துடுப்பாட்டக் காரர்களில் யாருமே போராடியதாகத் தெரியவில்லையே, முக்கியமான துடுப்பாட்டக் காரர்கள் slip இல் பிடிகொடுத்திருக்கின்றார்கள் - அதற்கு தோனிதான் என்ன செய்வார் பாவம்...!! :)

இந்திய கிரிக்கட் தேர்வாளர்களிலும் முக்கிய பொறுப்பு இருக்கின்றது, திவாரியை உட்கார வைத்து வேடிக்கை பார்கிறார்கள், அத்துடன் வாய்ப்புக் கிடைக்காத பல நல்ல ஆட்டக்காரர்கள் இந்தியாவிலே இருந்து கொண்டு தொலைக்காட்சியில் போட்டியைப் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

aren
11-08-2010, 08:26 AM
நீங்கள் சொல்வது சரியே. தோனி தலைவராக இருந்து அவருடைய சிபாரிசின் பெயரிலேயே டீம் தேர்ந்தெடுக்கப்படுகிறது. ஆகையால் அவரே முழுப் பொறுப்பு ஏற்கவேண்டும்.

தோல்விக்கு தலைவரே காரணம் என்பது என் கருத்து. நீங்களே திவாரியை ஏன் உள்ளே உட்கார வைத்திருக்கிறார்கள் என்று கேட்டுள்ளீர்கள். அதற்கு யார் காரணம்? தோனிக்கு வேண்டியவர்கள் உடனே டீமுக்குள் வந்து விடுகிறார்கள். அப்படியென்றால் அவர் தானே தோல்விக்கும் காரணகர்த்தா.

வியாசன்
11-08-2010, 10:40 AM
நீங்கள் சொல்வது சரியே. தோனி தலைவராக இருந்து அவருடைய சிபாரிசின் பெயரிலேயே டீம் தேர்ந்தெடுக்கப்படுகிறது. ஆகையால் அவரே முழுப் பொறுப்பு ஏற்கவேண்டும்.

தோல்விக்கு தலைவரே காரணம் என்பது என் கருத்து. நீங்களே திவாரியை ஏன் உள்ளே உட்கார வைத்திருக்கிறார்கள் என்று கேட்டுள்ளீர்கள். அதற்கு யார் காரணம்? தோனிக்கு வேண்டியவர்கள் உடனே டீமுக்குள் வந்து விடுகிறார்கள். அப்படியென்றால் அவர் தானே தோல்விக்கும் காரணகர்த்தா.

வெற்றி பெற்றபோதெல்லாம் அதிஷ்ட தலைவன் என்றோம்தானே. அதனால் தோல்விக்கும் அவரே பொறுப்பேற்க வேண்டும்:

அமரன்
11-08-2010, 06:49 PM
கவலைப்படாதேள்.. அடுத்த போட்டியில் பட்டையைக் கிளப்புவாங்க மக்கள்.

மச்சான்
11-08-2010, 09:48 PM
கவலைப்படாதேள்.. அடுத்த போட்டியில் பட்டையைக் கிளப்புவாங்க மக்கள்.
பட்டையை(:food-smiley-004:) போட்டுட்டு வராம இருந்தா சரிதான்......!:D

xavier_raja
13-08-2010, 01:39 PM
சச்சின் இல்லாததனால்தான் தோற்றது என்பதை நான் ஒத்துகொள்ள மாட்டேன்.. அவர் இருந்தும் எத்தனையோ ஆட்டங்கள் மண்ணை கவ்வி இருக்கிறோம்..