PDA

View Full Version : அம்மா என்றொரு மனுஷிகீதம்
10-08-2010, 08:01 AM
புதிய திரைப்படத்தின்
திருட்டுப் பதிப்பினைப் பார்வையிட
கூடத்தில் அனைவரும் கூடியிருக்கும் வேளையிலும்
உணவு தயாரிக்கும் உரிமை மட்டும்
எக்காரணம் கொண்டும்
எவராலும் பறிக்கப்படாமல்
அவளிடமே அதீதமாய் விட்டுவைக்கப்படுகிறது.

முன்தினம்முதலாய் குளிர்சுரம் கண்டு
கம்பளிக்குள் முடங்கி
பினாத்திக்கொண்டிருந்தவள்,
மாத்திரை முழுங்கிய மறுகணமே
பரவாயில்லை இப்போதென்று சொல்லி
பட்டென எழுந்துகொள்வாளென்று
எல்லோராலும் அனுமானிக்கப்படுகிறது.

குற்றாலத்துக்கு குடும்பத்துடன்போக
மகிழுந்து பேசி மற்றவரெல்லாம் ஏறியபின்
அவளொருத்திக்கு மட்டும் இடமில்லையென்பது
இறுதிகணத்தில் தெரியவர....
'நானிருக்கேனே வீட்டில்!'
வழக்கம்போலவே அந்த வாசகம்
அவள் வாயிலிருந்தே வரவேண்டுமென்று
உளமாற வேண்டப்படுகிறது.

அவளது ஒப்புதலின்றி எதுவும் செய்வதில்லையென்ற
அப்பாவின் பிரதாபப் பேச்சுக்குமுன்
ஊமையாகிப் போகின்றன,
பலவந்தமாய்ப் புறக்கணிக்கப்பட்ட
அவளது எதிர்ப்புகளும், மறுப்புகளும்.

இத்தனைக்குப் பின்னும்
இயந்திரமனுஷியாய் இல்லாமல்
புன்னகையுடனும் புத்துணர்வுடனும்
வலம்வரவேண்டுமென்று அனைவராலும்
அதிகபட்சமாய் எதிர்பார்க்கப்படுகிறது.

வியாசன்
10-08-2010, 08:08 AM
கீதம் அதுதான் அம்மா
யதார்த்தமான கரு வாழ்த்துக்கள் கீதம்

சுகந்தப்ரீதன்
10-08-2010, 12:31 PM
எதார்த்தத்தில் ’விட்டுக்கொடுத்தல்’ என்ற உயர்ந்த பண்பு அம்மாக்களுக்கு மட்டுமே விட்டுக் கொடுக்கபட்டிருக்கிறது..!! அவளுக்குள்ளும் ஒரு மனுசி உண்டெண்பதை உணர்த்தி, அம்மாவுக்கு மரியாதை செய்யும் விதத்தில் அமைந்த கவிதை... வாழ்த்துக்கள் கீதம் அவர்களே..!!

பா.ராஜேஷ்
10-08-2010, 01:27 PM
அருமையான கவிதை... பாராட்டுக்கள் கீதம்... மிக நன்றாக எழுதி உள்ளீர்கள் ..

கலையரசி
10-08-2010, 01:46 PM
அம்மாவின் இந்த விட்டுக்கொடுத்தலும் குடும்பத்துக்காகச் செய்யும் தியாகமும் தான் எல்லாக் காலத்திலும் போற்றப்படுகின்ற விஷயங்களாக இருக்கின்றன. ஆனால் அவளும் ஒரு மனுஷி; அவளுக்கும் அபிலாஷைகள் இருக்கும் என்ற உண்மையைக் கருவாகக் கொண்ட இக்கவிதை பாராட்டப்பட வேண்டிய ஒன்று. வாழ்த்து கீதம்!

Ravee
10-08-2010, 01:56 PM
போற இடத்தில எப்படி இருக்கப் போறாளோ , பரவாயில்லை தூங்கட்டும் , பரவாயில்லை, டிவி பார்க்கட்டும் , பரவாயில்லை என்ஜாய் பண்ணட்டும் ... இப்படி சொல்லி அப்பாவிடம் இருந்து பெண்களை காப்பாற்றிய நிறைய தாயுள்ளங்களை பார்த்து இருக்கிறேன் . நல்ல கவிதை கீதம் வாழ்த்துக்கள். :icon_b:

அமரன்
10-08-2010, 08:53 PM
அம்மாதான் குடும்பத்தின் ஆதாரம் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமுமில்லை. குடும்ப சந்தோசத்தையே அவள் விரும்புகிறாள். அதுக்காக தன்னைத் தேய்க்கவும் அவள் துணிகிறாள். அவளளவுக்கு இல்லாவிடினும் அவளது சேலை நூலளவுக்கு என்றாலும் மற்றவர்கள் அவள்மேல் அக்கறை காட்டவேண்டும்.

கவிதையின் ஓட்டத்தில் அம்மாவைப் புறக்கணிப்போர் அனைவரும் குழந்தைகளாகத் தெரிகிறார்கள்.

அம்மா ஆரம்பத்தில் விட்டுக்குடுக்கப்போய் அதையே பழக்கமாக்கிவிட்டார்கள். கால ஓட்டத்தில் அம்மாவுக்கும் அவை பழக்கமாகிவிட்டிருக்கும். அவள் இயந்திரமாகிவிட மற்றவர்கள் இயக்குபவர்கள் ஆகிவிகின்றனர். அப்போ சக்தி எங்கிருந்து கிடைக்கிறது..

ஆங்காங்கே மறைந்திருக்கும் இல்லத்தரசியின் இயலாமையை கடைசிக்கு முதல் பத்தி வெளிப்படுத்துகிறது. இந்த நிலையில் பல இல்லத்து அரசிகள் இருக்கிறார்கள் என்பது வேதனையான உண்மை.

இயல்பான கவிதைக்குப் பாராட்டுகள் கீதம்.

govindh
10-08-2010, 10:52 PM
அம்மாவின் மனமறிந்து
அவர்களை மகிழ்வாக வைக்க வேண்டுமென
எண்ணத் தூண்டும் கவி வரிகள்.

பாராட்டுக்கள்.

கீதம்
11-08-2010, 12:13 AM
கீதம் அதுதான் அம்மா
யதார்த்தமான கரு வாழ்த்துக்கள் கீதம்

பல வீடுகளில் நிகழும் யதார்த்த நிலைதான் என்றாலும் மனம் பாதிக்கும் நிகழ்வு அல்லவா? முதற்பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி, வியாசன் அவர்களே.

கீதம்
11-08-2010, 12:17 AM
எதார்த்தத்தில் ’விட்டுக்கொடுத்தல்’ என்ற உயர்ந்த பண்பு அம்மாக்களுக்கு மட்டுமே விட்டுக் கொடுக்கபட்டிருக்கிறது..!! அவளுக்குள்ளும் ஒரு மனுசி உண்டெண்பதை உணர்த்தி, அம்மாவுக்கு மரியாதை செய்யும் விதத்தில் அமைந்த கவிதை... வாழ்த்துக்கள் கீதம் அவர்களே..!!

சில அம்மாக்களின் தியாகங்கள் இறுதிவரையிலும் புரிந்துகொள்ளப்படாமலேயே இருக்கின்றன. வாழ்த்துக்கு நன்றி, சுகந்தவாசன்.

கீதம்
11-08-2010, 12:18 AM
அருமையான கவிதை... பாராட்டுக்கள் கீதம்... மிக நன்றாக எழுதி உள்ளீர்கள் ..

மிகவும் நன்றி, ராஜேஷ். அம்மா கவிதைகள் இன்னும் வரும்.:)

கீதம்
11-08-2010, 12:22 AM
அம்மாவின் இந்த விட்டுக்கொடுத்தலும் குடும்பத்துக்காகச் செய்யும் தியாகமும் தான் எல்லாக் காலத்திலும் போற்றப்படுகின்ற விஷயங்களாக இருக்கின்றன. ஆனால் அவளும் ஒரு மனுஷி; அவளுக்கும் அபிலாஷைகள் இருக்கும் என்ற உண்மையைக் கருவாகக் கொண்ட இக்கவிதை பாராட்டப்பட வேண்டிய ஒன்று. வாழ்த்து கீதம்!

மிகவும் நன்றி, அக்கா. அம்மா என்னும் மனுஷிக்கு என்னால் இயன்ற கவியாரம் சூட்டினேன்.

கீதம்
11-08-2010, 12:24 AM
போற இடத்தில எப்படி இருக்கப் போறாளோ , பரவாயில்லை தூங்கட்டும் , பரவாயில்லை, டிவி பார்க்கட்டும் , பரவாயில்லை என்ஜாய் பண்ணட்டும் ... இப்படி சொல்லி அப்பாவிடம் இருந்து பெண்களை காப்பாற்றிய நிறைய தாயுள்ளங்களை பார்த்து இருக்கிறேன் . நல்ல கவிதை கீதம் வாழ்த்துக்கள். :icon_b:

நீங்கள் சொல்வதைத்தான் நானும் செய்துகொண்டு இருக்கிறேன். வாழ்த்துக்கு நன்றி, ரவி.

கீதம்
11-08-2010, 12:36 AM
அம்மாதான் குடும்பத்தின் ஆதாரம் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமுமில்லை. குடும்ப சந்தோசத்தையே அவள் விரும்புகிறாள். அதுக்காக தன்னைத் தேய்க்கவும் அவள் துணிகிறாள். அவளளவுக்கு இல்லாவிடினும் அவளது சேலை நூலளவுக்கு என்றாலும் மற்றவர்கள் அவள்மேல் அக்கறை காட்டவேண்டும்.

கவிதையின் ஓட்டத்தில் அம்மாவைப் புறக்கணிப்போர் அனைவரும் குழந்தைகளாகத் தெரிகிறார்கள்.

அம்மா ஆரம்பத்தில் விட்டுக்குடுக்கப்போய் அதையே பழக்கமாக்கிவிட்டார்கள். கால ஓட்டத்தில் அம்மாவுக்கும் அவை பழக்கமாகிவிட்டிருக்கும். அவள் இயந்திரமாகிவிட மற்றவர்கள் இயக்குபவர்கள் ஆகிவிகின்றனர். அப்போ சக்தி எங்கிருந்து கிடைக்கிறது..

ஆங்காங்கே மறைந்திருக்கும் இல்லத்தரசியின் இயலாமையை கடைசிக்கு முதல் பத்தி வெளிப்படுத்துகிறது. இந்த நிலையில் பல இல்லத்து அரசிகள் இருக்கிறார்கள் என்பது வேதனையான உண்மை.

இயல்பான கவிதைக்குப் பாராட்டுகள் கீதம்.

கவிதை எழுதுமுன் எனக்குள் எழுந்த உணர்வுகளை அப்படியே எழுதியுள்ளீர்கள், அமரன்.

'அம்மா என்ன செய்யிறா?' என்று அப்பா கேட்டால் பிள்ளை என்ன சொல்லும்? "அவ சமைக்கிறா.' என்றுதானே? இதையே 'அம்மா என்ன செய்யிது?' என்றால் 'அது சமைக்கிது' என்று பதில் வரும். 'அம்மா என்ன செய்யிறாங்க?' என்றால் 'அவங்க சமைக்கிறாங்க.' என்று சொல்லும்.

ஆக ஒரு குடும்பத்தில் பிள்ளைகள் தாயை மதிக்கவில்லையென்றால் அந்ததவறுக்கு பிள்ளையார்சுழி எங்கு போடப்பட்டிருக்கிறது என்று தெரிந்துகொள்ளமுடியும். தந்தையை மதிக்காத வீட்டுக்கும் இது பொருந்தும்.

விமர்சனத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி.

கீதம்
11-08-2010, 12:41 AM
அம்மாவின் மனமறிந்து
அவர்களை மகிழ்வாக வைக்க வேண்டுமென
எண்ணத் தூண்டும் கவி வரிகள்.

பாராட்டுக்கள்.

அம்மாவை மகிழ்விப்பதைவிடவும் வருத்தாமல் இருப்பதே அவர்களுக்கு நாம் செய்யும் பெருந்தொண்டு என்று நினைக்கிறேன். பாராட்டுக்கு நன்றி, கோவிந்த்.