PDA

View Full Version : என்றாள் ஜெஸிகா.

ஆதவா
10-08-2010, 04:55 AM
மாயத்திரைக்குள் சினைமுட்டைகளை
அடைகாத்தபடி இருந்த
கடல்குதிரையின் வால்
யானையின் முதுகில்
படர்ந்தபடி இருந்தது
கொப்பளங்கள் குவிந்து
வெடித்து சீர்த்து
வெண்மையாக ஒழுகிக் கொண்டிருந்தது
முதுகின் ஒரு புறம்
காணவியலா பிம்பத்தை
மறுபுறத்தில் ஒளித்துக் கொண்டு
யாரோ ஒருத்தியின் கெண்டைக் கால்கள்
சொறுகி வைக்கப்பட்டிருந்தது
அறுவறுப்பு ஏதுமில்லை,
அங்கே
உறுப்புகளிழந்தவன்
நின்றுகொண்டிருந்தான்.
அவன் ஒரு கோடும் வரைந்திருந்தான்
மாண்டரின் அறிந்த எகிப்தியன்
இதை எகிப்தின் எல்லைக் கோடென்றான்
இன்னொருவன் மயனின் ஓவியமென்றான்
வர்ணங்கள் ஏதுமில்லை
மேலே எழுதிய யாவும்
ஒரு அணு எழுப்பிய
புகை மேகத்தினுள் நுழைந்து கொண்டிருந்தது
இதனிடையே
மலையிடுக்கிலிருந்து நீண்டிருந்தன
பல கோட்டோவியங்கள்
இக்கவிதை எழுதிய பிறகு
என்ன தலைப்பிடவேண்டுமெனத்
தெரியவில்லை
சகாராவுக்கு மேல் மேகம்
என்றாள் ஜெஸிகா.

படிச்சுட்டு அடிக்க வராதீங்கோ!!

samuthraselvam
10-08-2010, 05:50 AM
எனக்கு ரொம்ப புடிச்சுது இந்தக் கவிதை...
இதை எழுதின உங்களை எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை...
கனவில் கொள்ளுப் பாட்டி வந்து கதை சொன்னாங்களா?
(இதை படிச்சுட்டு அடிக்க வராதீங்கோ!! )

கீதம்
10-08-2010, 05:55 AM
ஜெஸிகா சொன்னது ரொம்பசரி. சகாராவுக்கு மேல் மேகம் என்று தலைப்பிட்டிருந்தால் என்னைப் போன்ற சாமான்யர்களுக்கு ஆரம்பத்திலிருந்தே கவிதை புரிந்திருக்கும்.

கவிதை உணர்த்தும் மறைபொருள் என்னவென்று புரியவில்லை. நேர்பொருள் எளிதாய் விளங்குகிறது. அழகான மேகோவியங்களை உங்கள் பாணியில் வர்ணித்திருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். பாராட்டுகள் ஆதவா.

ஆதவா
10-08-2010, 06:05 AM
எனக்கு ரொம்ப புடிச்சுது இந்தக் கவிதை...
இதை எழுதின உங்களை எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை...
கனவில் கொள்ளுப் பாட்டி வந்து கதை சொன்னாங்களா?
(இதை படிச்சுட்டு அடிக்க வராதீங்கோ!! )

ரொம்ப நன்றிங்க. எனக்கெல்லாம் கனவுன்னு ஒண்ணு வரும், அதில தமன்னாவை தவிர வேறெந்த பா(ர்)ட்டிகளுக்கும் இடமேயில்லை!!! :D

ஜெஸிகா சொன்னது ரொம்பசரி. சகாராவுக்கு மேல் மேகம் என்று தலைப்பிட்டிருந்தால் என்னைப் போன்ற சாமான்யர்களுக்கு ஆரம்பத்திலிருந்தே கவிதை புரிந்திருக்கும்.

கவிதை உணர்த்தும் மறைபொருள் என்னவென்று புரியவில்லை. நேர்பொருள் எளிதாய் விளங்குகிறது. அழகான மேகோவியங்களை உங்கள் பாணியில் வர்ணித்திருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். பாராட்டுகள் ஆதவா.

மறைபொருள் ஏதுமில்லைங்க கீதம். ஜெஸிகா சொன்னதே சரியானது!!
நன்றிங்க

சுகந்தப்ரீதன்
10-08-2010, 12:38 PM
ஆதவா... இதுல இருக்குற மறைபொருள் திரைபொருள்ன்னு எனக்கு எதுவுமே புரியலை...
தயவுசெய்து ஜெஸிகா என்ன சொன்னாள் என்று சற்று தெளிவாக சொல்லிவிட்டு செல்லுங்கள்..!!
(இல்லையேல் வீணாக தமன்னாவை என் கனவில் அழைத்து நான் விளக்கம் கேட்க வேண்டியிருக்கும்..)

ஆதவா
11-08-2010, 04:52 AM

மறை பொருள் எதுவும் இல்லை சுபி! மீண்டும் ஒருமுறை படித்தால் உங்களுக்குப் புரியும் என்று நம்புகிறேன்.

தாமரை
11-08-2010, 04:56 AM
கவிதையின் மறைபொருள் ஆதவாவுக்கே தெரியாத மாதிரி மறைஞ்சிருக்கு..

மனமும் வானமும் ஒண்ணு.

அங்கே மேகங்கள்
இங்கே எண்ணங்கள்

சகாரா - குறியீடு. .பாலைவனம் மாதிரியான வறண்ட மனத்தை எடுத்துக்குங்க.

இதை நுனியா வச்சுகிட்டு உள்ளே போங்க...

ஜெஸ்ஸிகா - மருந்திட வந்த மங்கை

ஆதவா
11-08-2010, 05:08 AM

இத வெச்சு, இந்த கவிதைக்கு நானும் விளக்கம் தேடத்தான் வேணும்...
ஆனால் அபாரம். சற்றும் யோசிக்கக்கூட இல்லை. இக்கவிதை உங்கள் பதிலால் அடுத்த கட்டத்திற்குள் நுழைந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

நன்றி அண்ணா.

அமரன்
11-08-2010, 08:26 PM
கவிதையின் மறைபொருள் ஆதவாவுக்கே தெரியாத மாதிரி மறைஞ்சிருக்கு..

மனமும் வானமும் ஒண்ணு.

அங்கே மேகங்கள்
இங்கே எண்ணங்கள்

சகாரா - குறியீடு. .பாலைவனம் மாதிரியான வறண்ட மனத்தை எடுத்துக்குங்க.

இதை நுனியா வச்சுகிட்டு உள்ளே போங்க...

ஜெஸ்ஸிகா - மருந்திட வந்த மங்கை

இதுக்குத்தான் நீங்கள் தேவைங்கிறது.

என்னதான் ஆதவா மறைவில் எதுவுமில்லை எனக் சூடம் அணைத்தாலும் ஏதோ இருக்கடான்னு சொல்லிட்டே இருந்துச்சு மனசு. உங்கள் பதிவைப் பார்த்ததும் இவதான் அவள் என்ற மாதிரியான எண்ணம் தோன்றியது.

Ravee
11-08-2010, 11:40 PM
http://www.modernart-painting.com/images/modern_art_paintings_21st.-merello._flores_de_africa.jpg

ஆதவா நல்ல கவிதை , மேல உள்ள படத்தை பார்த்தா ஜெனிபர் கிட்ட என்ன கேட்கனும் என்று தோணும் ??? :aetsch013:

புத்தக கண்காட்சி போனா சந்தியா :D ஆர்ட் கேலரி போனால் ஜெசிகாவா :eek: , மதி இந்த கொடுமைய என்னன்னு கேக்குறது இல்லையா ? ? ? :lachen001:

பாரதி
12-08-2010, 12:14 AM
சில முறை வாசிப்பிற்கு பிறகு எளிதானது.

இதனிடையே
மலையிடுக்கிலிருந்து நீண்டிருந்தன
பல கோட்டோவியங்கள்

இச்சொற்றொடர் பொருந்தி வருவதாக எனக்குத் தோன்றவில்லை. இதைப் பொருத்தி நேரிடையாக பொருள் கொண்டால் ”சகாரா மேல் மேகம்” பொருந்தாது என்று தோன்றுகிறது.

அதைத்தவிர்த்தால்...
இயற்கை போடும் ஜாலங்களை
எண்ணத்தில் வடித்த விதம் சிறப்பே.

பாராட்டு ஆதவா.

தாமரை
12-08-2010, 04:01 AM
மாயத்திரைக்குள் சினைமுட்டைகளை
அடைகாத்தபடி இருந்த
கடல்குதிரையின் வால்
யானையின் முதுகில்
படர்ந்தபடி இருந்தது
கொப்பளங்கள் குவிந்து
வெடித்து சீர்த்து
வெண்மையாக ஒழுகிக் கொண்டிருந்தது
முதுகின் ஒரு புறம்
காணவியலா பிம்பத்தை
மறுபுறத்தில் ஒளித்துக் கொண்டு
யாரோ ஒருத்தியின் கெண்டைக் கால்கள்
சொறுகி வைக்கப்பட்டிருந்தது
அறுவறுப்பு ஏதுமில்லை,
அங்கே
உறுப்புகளிழந்தவன்
நின்றுகொண்டிருந்தான்.
அவன் ஒரு கோடும் வரைந்திருந்தான்
மாண்டரின் அறிந்த எகிப்தியன்
இதை எகிப்தின் எல்லைக் கோடென்றான்
இன்னொருவன் மயனின் ஓவியமென்றான்
வர்ணங்கள் ஏதுமில்லை
மேலே எழுதிய யாவும்
ஒரு அணு எழுப்பிய
புகை மேகத்தினுள் நுழைந்து கொண்டிருந்தது
இதனிடையே
மலையிடுக்கிலிருந்து நீண்டிருந்தன
பல கோட்டோவியங்கள்
இக்கவிதை எழுதிய பிறகு
என்ன தலைப்பிடவேண்டுமெனத்
தெரியவில்லை
சகாராவுக்கு மேல் மேகம்
என்றாள் ஜெஸிகா.

படிச்சுட்டு அடிக்க வராதீங்கோ!!

மாயத்திரைக்குள் சினைமுட்டைகளை
அடைகாத்தபடி இருந்த

உள் நோக்க முடையதாக

கடல்குதிரையின் வால்
யானையின் முதுகில்
படர்ந்தபடி இருந்தது

சம்பந்தா சம்பந்தமில்லாதவரை இகழ்ந்தும் புகழ்ந்தும் கொண்டுமிருக்க

கொப்பளங்கள் குவிந்து
வெடித்து சீர்த்து
வெண்மையாக ஒழுகிக் கொண்டிருந்தது

குரோத எண்ணங்கள் குவிந்து, வெடித்தி புண்ணாகி சீழ் பிடித்து இருக்கிறது

முதுகின் ஒரு புறம்
காணவியலா பிம்பத்தை
மறுபுறத்தில் ஒளித்துக் கொண்டு
யாரோ ஒருத்தியின் கெண்டைக் கால்கள்
சொறுகி வைக்கப்பட்டிருந்தது

அழகுகளை கைப்பற்றி தனதாக்கி ஆதிக்கம் செலுத்தும் எண்ணங்கள் வருகிறது

அறுவெறுப்பு ஏதுமில்லை,

ச்சீ ச்சீ இதெல்லாம் கேவலமானவை என்ற எண்ணமே வருவதில்லை

அங்கே
உறுப்புகளிழந்தவன்
நின்றுகொண்டிருந்தான்.

ஒன்றுமே செய்ய இயலவில்லை. பாழாகிக் கிடந்தது..

அவன் ஒரு கோடும் வரைந்திருந்தான்

அதில் ஒரு விதண்டாவாதமும் இருந்தது.

மாண்டரின் அறிந்த எகிப்தியன்

எனக்கு எல்லாம் தெரியும் என்ற மூட எண்ணம்

இதை எகிப்தின் எல்லைக் கோடென்றான்

அதற்கு வக்காலத்து வாங்கியது. இது என்னுடையது என..

இன்னொருவன் மயனின் ஓவியமென்றான்

இன்னொரு எண்ணம் இதுதான் அழகு.. இதுதான் சரி என்று சப்பைகட்டு கட்டியது

வர்ணங்கள் ஏதுமில்லை
மேலே எழுதிய யாவும்
ஒரு அணு எழுப்பிய
புகை மேகத்தினுள் நுழைந்து கொண்டிருந்தது

ஒரு சின்ன விசயத்திற்காக இத்தனை விபரீத எண்ணங்கள் (வஞ்சகம், சுயநலம், குரூரம், பேராசை இத்யாதி இத்யாதி) ஏற்படுகின்றன. மனம் குழப்பத்தில் ஆழ்கிறது.

மலையிடுக்கிலிருந்து நீண்டிருந்தன
பல கோட்டோவியங்கள்

இன்னும் பல கேலியான எண்ணங்கள் மனதின் இண்டு இடுக்குகளில் எட்டிப்பார்க்கின்றன

இக்கவிதை எழுதிய பிறகு
என்ன தலைப்பிடவேண்டுமெனத்
தெரியவில்லை

இதனையெல்லாம் அறியும் போது இதற்குக் காரணங்கள் எனக்குப் புரிபடவில்லை..

சகாராவுக்கு மேல் மேகம்
என்றாள் ஜெஸிகா.

பாழ் பட்டுப் போன, ஈரமற்ற, மனங்களில் ஓடும் சிந்தனை என்றார்கள் என் மீது அக்கறை கொண்டவர்கள்..

நாம ஏன் இப்படிக் கேவலமா சிந்திக்கிறோம் என வெட்கப்படுபவனின் மன வெளிப்பாடு இது...:D:D:D:D

ஆதவா இப்படி எல்லாமா சிந்திக்கறீங்க

ஆதவா
12-08-2010, 04:14 AM
இதுக்குத்தான் நீங்கள் தேவைங்கிறது.

என்னதான் ஆதவா மறைவில் எதுவுமில்லை எனக் சூடம் அணைத்தாலும் ஏதோ இருக்கடான்னு சொல்லிட்டே இருந்துச்சு மனசு. உங்கள் பதிவைப் பார்த்ததும் இவதான் அவள் என்ற மாதிரியான எண்ணம் தோன்றியது.

நன்றி அமரன். என்ன... இனிமேலும் கவிதை எழுதும்பொழுது சற்று யோசிக்க வைத்துவிட்டார்!!

ஆதவா நல்ல கவிதை , மேல உள்ள படத்தை பார்த்தா ஜெனிபர் கிட்ட என்ன கேட்கனும் என்று தோணும் ??? :aetsch013:

புத்தக கண்காட்சி போனா சந்தியா :D ஆர்ட் கேலரி போனால் ஜெசிகாவா :eek: , மதி இந்த கொடுமைய என்னன்னு கேக்குறது இல்லையா ? ? ? :lachen001:

ரவீ!! இதை வைத்து கவிதை எழுதினால் எனக்கு இருக்கும் சின்னமூளையும் குழம்பிவிடும்!!

நன்றிங்க

சில முறை வாசிப்பிற்கு பிறகு எளிதானது.

இதனிடையே
மலையிடுக்கிலிருந்து நீண்டிருந்தன
பல கோட்டோவியங்கள்

இச்சொற்றொடர் பொருந்தி வருவதாக எனக்குத் தோன்றவில்லை. இதைப் பொருத்தி நேரிடையாக பொருள் கொண்டால் ”சகாரா மேல் மேகம்” பொருந்தாது என்று தோன்றுகிறது.

அதைத்தவிர்த்தால்...
இயற்கை போடும் ஜாலங்களை
எண்ணத்தில் வடித்த விதம் சிறப்பே.

பாராட்டு ஆதவா.

மலையிடுக்கு என்பது மேகமலை என்பதே என் குறியீடு. நீண்டிருந்த கோட்டோவியங்கள் சூரியனின் கதிர்கள் அண்ணா. இருப்பினும் அதை வலுக்கட்டாயமாக திணீத்துவிட்டதைப் போன்றுதான் நானும் உணர்கிறேன். (அது இறுதியாக நுழைத்தது)

நன்றிங்க அண்ணா.

ஆதவா
12-08-2010, 04:17 AM
ஆதவா இப்படி எல்லாமா சிந்திக்கறீங்க

நான் நேரடி அர்த்தமாற்றத்தை மட்டுமே பெயர்க்கப் பார்த்தேன். அது சரிவராது என்று மட்டும் தோன்றியது. ஏனெனில் கவிதை எழுதும்பொழுது மறைபொருள் குறித்து சிறிதும் யோசிக்கவில்லை என்பதே. ஆனால் எல்லா கவிதைக்குள்ளும் மறைபொருள் உண்டு என்று சொல்லியது உங்கள் வரிகள்!

பின்னவீனத்துவக் கவிதையாக மாறிவிட்டது. சில நுண்ணிய சிக்கலான வரிகளை நீக்கிவிட்டால் சரியாக இருக்குமோ என்றும் யோசிக்கிறேன்.
தவிர, நேற்று என்னை கொஞ்சம் யோசிக்க வைத்துவிட்டீர்கள் (இதுக்கு முன்ன யோசிச்சா கவிதை போடறோம்? ஏதோ விரலுக்கு வந்தது!!)

மிக்க நன்றி அண்ணா... (கவிதை விமர்சனத்திற்கு மற்றும் யோசிக்க வைத்ததற்கு!)

ஆதி
12-08-2010, 04:40 AM
பின்னவீனத்துவக் கவிதையாக மாறிவிட்டது.

ஆதவா இதை கொஞ்சம் விளக்க இயலுமா ?

தாமரை
12-08-2010, 05:56 AM
பின்னவீனத்துவக் கவிதையாக மாறிவிட்டது

ஆதவா இதை கொஞ்சம் விளக்க இயலுமா ?

சும்மா தமாஷூக்கு.. ஆதவா என்ன பதில்சொல்வார்னு யோசிக்கிறேன்..:icon_b::icon_b::icon_b:

மாடர்ன் டிரஸ் போட்டுகிட்டு பின்னால இருந்து பாக்கறப்ப சூப்பர் ஃபிகரா தெரியற ஒண்ணு...:D:D:D:D:D

முன்னால போய் பாத்தா தத்துவம் சொல்லலாம் போலத் தோணும்..:eek::eek::eek::eek:

ஆதவா
12-08-2010, 06:01 AM
ஆதவா இதை கொஞ்சம் விளக்க இயலுமா ?
என்றாள் ஜெஸிகா, ஒரு யதார்த்தத்தை மையமாகக் கொண்டு புனையப்பட்டது. போலி கற்பனைகள் அற்றது. ஆனால் அதனை உடைத்து பிரித்து, படிமங்களாக்கி அதற்கு முக்கியத்துவம் அளித்தலே பின்னவீனத்துவம் (ஜெயமோகனின், நவீன தமிழிலக்கிய வரலாறு) வார்த்தைகள் இப்போது படிமங்களாகி நிற்கின்றன. அதனை உடைத்துக் கொள்வது உங்கள் வாசிப்புத்திறனாகும்.

சஹாராவை வறண்ட மனமாகவோ, அல்லது நீண்ட பயணவெளியாகவோ, அல்லது நீர்மமற்ற உலகெனவோ எப்படிவேண்டுமானாலும் கொள்ளலாம்,, அது வாசக யூகிப்பு.

அதே நேரம் ஜெஸிகா, வறண்ட மணலுக்கு மழையாக அதாவது மகிழ்விப்பாளாக, காதலியாக, நீண்ட பயணத்தின் இளைப்பாறலாக, நீர்மை அளிப்பவளாக, எப்படிவேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

உங்கள் கருத்தென்ன?

தாமரை
12-08-2010, 06:25 AM

அச்சச்சோ... இது காதலா காதலா படத்தில கமலோட மாடர்ன் ஆர்ட் மாதிரியில்ல இருக்கு!!!!

ஆதி
12-08-2010, 07:25 AM
என்றாள் ஜெஸிகா, ஒரு யதார்த்தத்தை மையமாகக் கொண்டு புனையப்பட்டது. போலி கற்பனைகள் அற்றது. ஆனால் அதனை உடைத்து பிரித்து, படிமங்களாக்கி அதற்கு முக்கியத்துவம் அளித்தலே பின்னவீனத்துவம் (ஜெயமோகனின், நவீன தமிழிலக்கிய வரலாறு) வார்த்தைகள் இப்போது படிமங்களாகி நிற்கின்றன. அதனை உடைத்துக் கொள்வது உங்கள் வாசிப்புத்திறனாகும்.

சஹாராவை வறண்ட மனமாகவோ, அல்லது நீண்ட பயணவெளியாகவோ, அல்லது நீர்மமற்ற உலகெனவோ எப்படிவேண்டுமானாலும் கொள்ளலாம்,, அது வாசக யூகிப்பு.

அதே நேரம் ஜெஸிகா, வறண்ட மணலுக்கு மழையாக அதாவது மகிழ்விப்பாளாக, காதலியாக, நீண்ட பயணத்தின் இளைப்பாறலாக, நீர்மை அளிப்பவளாக, எப்படிவேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

உங்கள் கருத்தென்ன?

உங்கள் கருத்தில் மாற்றுக்கருத்தில்லை ஆதவா, பின்னவீனத்துவம் என்று சொல்வதை தவிர :)

ஏன் சொல்றேன்னா இது நவீனத்துவக் கவிதை, பின்னவீனத்துவமில்லை..

பின்னவீனத்தின் முக்கிய கோட்பாட்டில் ஒன்று மையம், விளிம்பு இரண்டையும் சமம் செய்தல்..

//ஒரு யதார்த்தத்தை மையமாகக் கொண்டு புனையப்பட்டது. போலி கற்பனைகள் அற்றது//

இப்படி நீங்களே சொல்லி இருப்பதன் மூலம், விளிம்பு நிலை, மையம் என்று இரு அலகும் கவிதைக்கும் வந்துவிடுகிறது இல்லையா..

இது முழுக்க முழுக்க நவீனத்துவக் கவிதை,

எஸ்ரா.பவுண்டு தான் இந்த படிமங்களில் கோட்பாட்டை வகுத்தவர்..

படிமம் என்பது எல்லா காலத்திலும் உள்ளது, புத்திசாலிக்கு கற்பூர புத்தி என்று படிமம் தந்தோம், சிரமப்பட்டு புரிந்து கொள்வவனுக்கு கரி புத்தி என்று படிமம் தந்தோம், கடைநிலை மாணவனுக்கு வாழைத்தண்டை படிமமாய் தந்தோம்..

காலப்போக்கில் புத்திசாலியை, குண்டு பல்பு என்று, சிரமப்பட்டு புரிந்து கொள்பவனை டியூப் லைட் என்று சொல்லி படிமம் உருவாக்குகிறோம்..

இந்த படிமங்கள் காற்று மாதிரி நம்மை சுற்றிக் கொண்டிருக்கின்றன, நாமும் அதனை அன்றாட வாழ்வில் பயன்படுத்திக் கொண்டுத்தான் இருக்கிறோம், இதே உக்தியை இலக்கியத்தில் நுழைத்தார்கள் நவீன உகத்தார்கள்..

நவீனம் என்றால்,

வாட்டார வழக்கில், மொழியில் படைப்புகளை படைத்தல்

படைக்கும் படைப்புக்களை குறீயிடு, படிமங்களை முடிந்து வைத்து கருத்தை சொல்லுதல்

இந்த கவிதையில் நவீனத்துக்கான எல்லாம் இருக்கு ஆதவா..

ஆதவா
12-08-2010, 10:41 AM
சும்மா தமாஷூக்கு.. ஆதவா என்ன பதில்சொல்வார்னு யோசிக்கிறேன்..:icon_b::icon_b::icon_b:

மாடர்ன் டிரஸ் போட்டுகிட்டு பின்னால இருந்து பாக்கறப்ப சூப்பர் ஃபிகரா தெரியற ஒண்ணு...:D:D:D:D:D

முன்னால போய் பாத்தா தத்துவம் சொல்லலாம் போலத் தோணும்..:eek::eek::eek::eek:

:lachen001::D:sauer028:

ஆதி
12-08-2010, 10:45 AM
சும்மா தமாஷூக்கு.. ஆதவா என்ன பதில்சொல்வார்னு யோசிக்கிறேன்..:icon_b::icon_b::icon_b:

மாடர்ன் டிரஸ் போட்டுகிட்டு பின்னால இருந்து பாக்கறப்ப சூப்பர் ஃபிகரா தெரியற ஒண்ணு...:D:D:D:D:D

முன்னால போய் பாத்தா தத்துவம் சொல்லலாம் போலத் தோணும்..:eek::eek::eek::eek:

இதை அப்துல் ரஹுமாம் ஒரு கவிதையில் ஏமாற்றத்திற்கு உவமையா சொல்லிருப்பார் அண்ணா..

உலகத்தில் இந்த அனுபவமில்லாத ஆண்களே இருக்க இயலாது என்பது என் கருத்து..

தாமரை
12-08-2010, 10:47 AM
இதை அப்துல் ரஹுமாம் ஒரு கவிதையில் ஏமாற்றத்திற்கு உவமையா சொல்லிருப்பார்..

சந்தைக் கடையில
ஒரு பொண்ணு பின்னால
நான் மயங்கி நின்னேனா
அவ மூஞ்சி நல்லால்லே!!!

அதுக்கும் முன்னாலயே சொல்லிட்டாங்க:icon_b:

govindh
12-08-2010, 01:43 PM
சகாராவில் படுத்துக் கொண்டு...
அண்ட வெளியையும், ஆதவனையும்
கண்டு ரசித்த நம் ஆதவா -

படைத்த கவி விருந்து வெகு சுவை...!
பாராட்டுக்கள்.

சுகந்தப்ரீதன்
12-08-2010, 03:45 PM
எப்படித்தான் முடியுதோ இப்படியெல்லாம் இவங்களால யோசிக்க...:confused:

கடைசியில எல்லோரும் என்னை மறந்துட்டாங்க என்றாள் ஜெஸிகா..:D

சசிதரன்
17-08-2010, 04:16 PM
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=3280

உயிரோசையில் உங்கள் கவிதை ஆதவா... வாழ்த்துக்கள்... :)