PDA

View Full Version : அப்படி என்னதான் செய்து விட்டேன்!அமரன்
09-08-2010, 07:59 PM
 
நீயாண்ணா எனும்
தங்கையின் பார்வை..

திருத்தவே முடியாதெனும்
அண்ணனின் தோரணை..

என்னடா..
இப்படிப் பண்ணிட்ட என்ற
அம்மாவின் வாஞ்சை..

எதுவுமே
எதுவும் செய்திடவில்லை
எப்போதும் போல..

அப்பா மட்டும்தான் மிச்சமெனும்
நினைப்புத்தான் மிஞ்சியது.

சட்டென்று ஒரு வலி
சுள்ளென்றது
காய்ந்த காயத்தில் முரட்டுச் சுவர் தேய்த்த மாதிரி..
எப்போதும்
திட்டியே பழக்கப்பட்ட அப்பா
எதுவும் பேசாமல் போன போது..

வியாசன்
09-08-2010, 08:21 PM
அவர் பேசாமல் இருப்பதற்காகத்தான் மற்றவர்கள் அப்படி நடந்தார்களோ
அமரன் எதற்காக இப்படி நடந்தது என்று தெரியவில்லை .

வர வர மன்றத்திலை கவிதையாலை அசத்துறாங்கப்பா

பாரதி
10-08-2010, 12:16 AM
எதுவுமே
எதுவும் செய்திடவில்லை
எப்போதும் போல..

தலைப்பும்... நினைப்பும் ... ஒப்பீடு

எப்போதும் வழமையாக நிகழும் ஒன்று, வேண்டுமென்றே தவிர்க்கப்படுவது போன்ற ஒரு உணர்வு இக்கவிதையை எழுப்பி இருக்கிறது.

சொற்களும், பகிரப்பட்ட பாங்கும் மனதை கவர்கின்றன. இனிய பாராட்டு.:icon_b:

நீங்கள் ஏன் கவிதைகளை அதிகம் படைப்பதில்லை அமரன்?

ஆதவா
10-08-2010, 04:32 AM
வரவர நல்லா எழுதறாய்ங்கப்பா.... நமக்குத்தான் ஒண்ணும் தோணமாட்டேங்குது..

மெளனம் சில சமயம் குத்தும்...

சின்ன வயதில் ஒருமுறை நான் அப்பாவின் பாக்கெட்டிலிருந்து பணம் எடுத்துவிட்டேன். அதை அவரும் கண்டுபிடித்துவிட்டார்... அம்மா என்னை அடி அடியென்று அடித்துவிட்டார்கள்.. என்றாலும் நான் திருடுவதை நிறுத்தவேயில்லை. (பாக்கெட் மணிக்கு பணம் கொடுத்தாத்தான்யா...) மறுமுறை மாட்டிக் கொள்ளும் பொழுது அப்பா, என்னை ஒருமாதிரியாகப் பார்த்ததோடு சரி.... அந்த பார்வை பயத்தைக் கொடுப்பதாக இருந்தது... பிறகு பணம் எடுக்கவேயில்லை.

மெளனம் என்பது சம்மதத்திற்கான அறிகுறியல்ல. ஆராய்தல் பின் வழங்குதல் என்பதற்கான குறியீடு.

காய்ந்த காயம் என்பதற்குப் பதில் வேறு வார்த்தை கொடுத்திருக்கலாம், காயத்தில் சுவர் தேய்ப்பது என்பது ஒத்துவராது. சுவற்றில்தான் காயத்தை நம்மால் தேய்க்க இயலும். இன்னும் சொல்லப் போனால் அந்த வரியே தேவையற்றது (இது என் கருத்து.)

நல்லவேளை.... இந்த தவறு செய்துவிட்டேன், அதை செய்துவிட்டேன் என்று நீட்டி முழக்காமல் பொதுவாக தவறிழைத்தவனாகக் காட்டினீர்கள்!!!

அமரன்
10-08-2010, 05:31 AM
அவர் பேசாமல் இருப்பதற்காகத்தான் மற்றவர்கள் அப்படி நடந்தார்களோ
அமரன் எதற்காக இப்படி நடந்தது என்று தெரியவில்லை .

வர வர மன்றத்திலை கவிதையாலை அசத்துறாங்கப்பா

எல்லாம் மன்றத்தவர் குடுக்கும் ஊக்கம்தான் வியாசன்.

நன்றி.

அமரன்
10-08-2010, 05:34 AM
தலைப்பும்... நினைப்பும் ... ஒப்பீடு

எப்போதும் வழமையாக நிகழும் ஒன்று, வேண்டுமென்றே தவிர்க்கப்படுவது போன்ற ஒரு உணர்வு இக்கவிதையை எழுப்பி இருக்கிறது.

சொற்களும், பகிரப்பட்ட பாங்கும் மனதை கவர்கின்றன. இனிய பாராட்டு.:icon_b:

நீங்கள் ஏன் கவிதைகளை அதிகம் படைப்பதில்லை அமரன்?

பாராட்டுக்கு நன்றி அண்ணா.

கவிதைகளைப் படைக்க எனக்கும் விருப்பம்தான். ஆனால் கவிதைகள் நெடுநாளாகத் தங்கி விடுகின்றன, என் மனப்பையில். ஏனெனத் தெரியவில்லை.

அமரன்
10-08-2010, 05:37 AM
காய்ந்த காயம் என்பதற்குப் பதில் வேறு வார்த்தை கொடுத்திருக்கலாம், காயத்தில் சுவர் தேய்ப்பது என்பது ஒத்துவராது. சுவற்றில்தான் காயத்தை நம்மால் தேய்க்க இயலும். இன்னும் சொல்லப் போனால் அந்த வரியே தேவையற்றது (இது என் கருத்து.)

நல்லவேளை.... இந்த தவறு செய்துவிட்டேன், அதை செய்துவிட்டேன் என்று நீட்டி முழக்காமல் பொதுவாக தவறிழைத்தவனாகக் காட்டினீர்கள்!!!

ஆதவா.. எப்படிப்பா...

படைத்தவன் கண்ணைப் பறித்துப் பார்க்குறீர்கள். நீங்கள் சொன்ன வரிகளைச் சேர்க்கவே இல்லை முதலில். பிறகு வலிந்து நுழைத்தேன். ஆனால், அகற்றப் போவதில்லை. பாடமாக இருக்கட்டும் எனக்கு.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
10-08-2010, 05:46 AM
காட்டுக் கத்தல்களை விட சில மௌனங்களின் தாக்கங்கள் கொடூரமானதாய் இருக்கும். திட்டுதல்களில் மூலமாக மட்டும் தவறுகள் திருத்தப்படுவதில்லை(வழமையா பண்ணினா அது வேறு வகை). கவிதை வடிக்கப்பட்ட விதம் அருமை அமரா.

கீதம்
10-08-2010, 06:05 AM
எப்போதும் மெளனமாய் இருப்பவர் சட்டென்று ஏசினால் ஒரு வலி. எப்போதும் ஏசுபவர் மெளனப்பார்வை பார்த்தால் மகாவலி.

காய்ந்த காயத்தில் உரசும் சுவர்....ஸ்ஸ்ஸ்..... அப்படியே இருக்கட்டும் அந்த வரிகள். படிக்கும்போதே தோலைப் பிறாண்டி குருதி வழியச்செய்கிறதே!

பாராட்டுகள், அமரன். தொடரட்டும் கவிமுழக்கம்.

சுகந்தப்ரீதன்
10-08-2010, 12:59 PM
வாழ்க்கையில் வழக்கத்துக்கு மாறான எந்தவொரு திடீர் செயலும் நமக்கு வலியைத்தான் தருகிறது..!! இதை நல்லாவே புரிஞ்சு வச்சிருக்காரு அப்பா..!!

அமரா.. புரியுற மாதிரியும் உனக்கு கவிதை எழுத தெரியும்ன்னு எனக்கு இப்பத்தாம்ப்பா புரிஞ்சுது...!! வாழ்த்துக்கள்..!!

அமரன்
10-08-2010, 09:01 PM
காட்டுக் கத்தல்களை விட சில மௌனங்களின் தாக்கங்கள் கொடூரமானதாய் இருக்கும். திட்டுதல்களில் மூலமாக மட்டும் தவறுகள் திருத்தப்படுவதில்லை(வழமையா பண்ணினா அது வேறு வகை). கவிதை வடிக்கப்பட்ட விதம் அருமை அமரா.

நன்றி சுனைத்.

நறுக்கெனக் கவிதையை கொட்டி விட்டீர்கள்.

அமரன்
10-08-2010, 09:09 PM
எப்போதும் மெளனமாய் இருப்பவர் சட்டென்று ஏசினால் ஒரு வலி. எப்போதும் ஏசுபவர் மெளனப்பார்வை பார்த்தால் மகாவலி.

காய்ந்த காயத்தில் உரசும் சுவர்....ஸ்ஸ்ஸ்..... அப்படியே இருக்கட்டும் அந்த வரிகள். படிக்கும்போதே தோலைப் பிறாண்டி குருதி வழியச்செய்கிறதே!

பாராட்டுகள், அமரன். தொடரட்டும் கவிமுழக்கம்.

ஆமாம் கீதம்.

இலங்கையில் மகாவலி என்றொரு நதி உண்டு. இலங்கையின் பெரும்பான்மையான பாசனம் அந்நதியின் கொடை. நீங்கள் குறிப்பிட்ட மகாவலியும் பசுமையின் பிறப்பிடம்தான்.

அப்பா மட்டும்தான் மிச்சமெனும்
நினைப்புத்தான் மிஞ்சியது.
....
காய்ந்த காயத்தில் முரட்டுச் சுவர் தேய்த்த மாதிரி..

கவிதையை எழுதியபோது மேலுள்ள மூவரிகள் இல்லை. கவிதையை வாசித்த போது சட்டென முறிவதாக ஒரு தோற்றம். வலுக்கட்டாயமாக இவ்வரிகளைச் சேர்த்தேன்.

நன்றிங்க கீதம்.

அமரன்
10-08-2010, 09:13 PM
வாழ்க்கையில் வழக்கத்துக்கு மாறான எந்தவொரு திடீர் செயலும் நமக்கு வலியைத்தான் தருகிறது..!! இதை நல்லாவே புரிஞ்சு வச்சிருக்காரு அப்பா..!!

அமரா.. புரியுற மாதிரியும் உனக்கு கவிதை எழுத தெரியும்ன்னு எனக்கு இப்பத்தாம்ப்பா புரிஞ்சுது...!! வாழ்த்துக்கள்..!!

உன் குசும்புக்கு அளவே இல்லயாப்பா.:)

மச்சான்
10-08-2010, 09:54 PM
அப்படி என்னதான் செஞ்சிப்புட்டீங்க......? இப்படி ஆளாளுக்கு நோண்டி நொங்கெடுக்கிறாங்க.....!!:lachen001: ஐயோ.... என் தலையையும் பிச்சிக்க வச்சிட்டாரேய்யா.....?:)

govindh
10-08-2010, 11:23 PM
வார்த்தைகள்....அவனை
வலிக்க வைக்கவில்லை....

மௌனமான (முரட்டு) பார்வை
அவனுள் வலி உண்டாக்கி
அவனை முறைப்படுத்த முயல்கிறது.

மௌனம் கூட நிறைய மாற்றங்களை உருவாக்கும்.

வலி மிகுதியினை சொன்ன விதம் அருமை.

Ravee
11-08-2010, 02:33 PM
ஒருவேளை தான் முன்னர் செய்த தவறுகளும் அப்பாவுக்கும் குத்தி இருக்குமோ. அதான் அமைதி காத்தாரோ ... :eek: :eek: :eek:

Nivas.T
11-08-2010, 04:31 PM
பேசி வரும் சொல்லை விட
பேசாமல் வரும் மௌனம்
கொள்ளியிடும்

அழகான உணர்ச்சிக் கவிதை

ஆனா அப்படி என்னதான் செஞ்சீங்க?
கடைசி வரைக்கும் சொல்லவே இல்ல!

அமரன்
11-08-2010, 08:37 PM
அப்படி என்னதான் செஞ்சிப்புட்டீங்க......? இப்படி ஆளாளுக்கு நோண்டி நொங்கெடுக்கிறாங்க.....!!:lachen001: ஐயோ.... என் தலையையும் பிச்சிக்க வச்சிட்டாரேய்யா.....?:)

ஆருக்குங்க தெரியும். மீன் என்ன செஞ்சுதுன்னு ஆளாளுக்கு நோண்டுறங்க. ஆனாலும் மீனு சுத்தமாகி சத்தான சாப்பாடாகுதில்ல.

ம்ஹும்.. இருக்கிற நீங்க பிச்சுக்குறீங்க. இல்லாதவங்க..

நன்றி மச்சான்.

அமரன்
11-08-2010, 08:39 PM
வார்த்தைகள்....அவனை
வலிக்க வைக்கவில்லை....

மௌனமான (முரட்டு) பார்வை
அவனுள் வலி உண்டாக்கி
அவனை முறைப்படுத்த முயல்கிறது.

மௌனம் கூட நிறைய மாற்றங்களை உருவாக்கும்.

.

இனி அவன் வாழ்க்கைப் படகை நன்றாக வலிப்பான். அதில் பலபேரைப் பயணப்பட வைப்பான்.

நல்லதொரு குறுங்கவிதையுடன் கருத்துரைத்துள்ளீர்கள்.

நன்றி கோவிந்த்.

அமரன்
11-08-2010, 08:41 PM
ஒருவேளை தான் முன்னர் செய்த தவறுகளும் அப்பாவுக்கும் குத்தி இருக்குமோ. அதான் அமைதி காத்தாரோ ... :eek: :eek: :eek:

இப்படியும் யோசிக்கலாமோ..

என்னமா யோசிக்கிறாங்கப்பா..

அமரன்
11-08-2010, 08:42 PM
ஆனா அப்படி என்னதான் செஞ்சீங்க?
கடைசி வரைக்கும் சொல்லவே இல்ல!
தெரிஞ்சாத்தானே சொல்ல!

நன்றி நிவாஸ்.

கலையரசி
14-08-2010, 10:17 AM
வழக்கமாகத் திட்டும் அப்பா திட்டி விட்டால், இன்றைய டோஸ் முடிந்து விட்டது என்று துடைத்து விட்டு விட்டு நிம்மதியடைந்து விடலாம். ஆனால் வழக்கத்துக்கு மாறாக அப்பா மெளனமாக இருந்தால்? அதுவே சரியான மண்டை குடைச்சலை ஏற்படுத்தி நிம்மதி இழக்க வைத்து விடும்.
நல்ல கவிதை அமரன். தொடர்ந்து எழுதுங்கள்.