PDA

View Full Version : ஹைக்கூ கவிதைகள்



Vel Tharma
09-08-2010, 04:10 PM
அதிட்டக் கட்டை
உண்டியலில் போட்டேன்
லாட்டரிச் சீட்டு
கடவுளும் என் போலே

வாழ்க்கை
வாழ்கிறாள் அவள் எனக் கூற
தன் வாழ்விழந்தது
மல்லிகைப் பூ

மறுவாழ்வு
வெள்ளாடை விதைவை
பட்டுச் சேலை உடுத்தாள்
வானவில்

கொள்கை(ளை)
மகன் சாகட்டும்
மருமகள் தாலி அறட்டும்
இந்திய வெளியுறவுக் கொள்கை

எழும்பியது
பொறுமை இடறி விழுந்தது
இடறு பட்ட மிருகம்
கோபம்

சிசுக்கொலை
தமிழீழம் பெண் குழந்தையா
முள்ளிவாய்க்காலில் கொடுத்தனர்
கள்ளிப் பால்

தாபம்
உணர்வுப் பட்டறையின்
வெப்பம் வெளியே வந்தது
கன்னியவள் மூச்சு

பெயரென்ன?
பாதுகாப்பு வலயத்தில்
பலியானோர் எண்பதாயிரம்
நாமம் கரணம்

செய்வன திருந்தச் செய்
வந்து செய்தது சரியில்லை
மீண்டும் வருவார்
கடவுள் அவதாரம்

ஊமைகள்
மின்சாரமில்லா வானொலிப் பெட்டி
அதிகாரமில்லா தமிழர்கள்
வாயில்லாப் பிறவிகள்

வியாசன்
09-08-2010, 08:30 PM
நல்ல கவிதைகள் மூன்று வரிகளில் வேல் தர்மா உங்கள் வலிகளை சுமந்து வந்த
சிசுக்கொலை , பெயரென்ன கவிதைகள் என்னயும் கவர்ந்துள்ளது .வாழ்த்துக்கள்

meera
10-08-2010, 06:08 AM
தாபம்
உணர்வுப் பட்டறையின்
வெப்பம் வெளியே வந்தது
கன்னியவள் மூச்சு

பெயரென்ன?
பாதுகாப்பு வலயத்தில்
பலியானோர் எண்பதாயிரம்
நாமம் கரணம்

செய்வன திருந்தச் செய்
வந்து செய்தது சரியில்லை
மீண்டும் வருவார்
கடவுள் அவதாரம்

ஊமைகள்
மின்சாரமில்லா வானொலிப் பெட்டி
அதிகாரமில்லா தமிழர்கள்
வாயில்லாப் பிறவிகள்



உஙளின் கவிதை பாரதியை நினைவு கூறுகிறது. "என்று தணியும் இந்த சுதந்திர தாகம்.????????"


விரைவில் விடியட்டும் வெளிச்சம் பரவட்டும்.

நம் மன்றத்தில் மலர்த்த உங்கள் கவிதைக்கு வாழ்த்துகள் சகோதரா

ஆதவா
10-08-2010, 06:18 AM
உஙளின் கவிதை பாரதியை நினைவு கூறுகிறது. "என்று தணியும் இந்த சுதந்திர தாகம்.????????"


விரைவில் விடியட்டும் வெளிச்சம் பரவட்டும்.

நம் மன்றத்தில் மலர்த்த உங்கள் கவிதைக்கு வாழ்த்துகள் சகோதரா

யாருங்க அது புதுசா.....

meera
10-08-2010, 09:47 AM
யாருங்க அது புதுசா.....

மறந்து போச்சா ஆதவா? இனி வருவோம்ல............:lachen001::lachen001::lachen001: