PDA

View Full Version : என் நட்பே!!!



இன்பக்கவி
09-08-2010, 03:50 PM
http://www.kathiyavad.com/scraps/scrapsimg/girls%20friendship-day-orkut.jpg
கடந்த காலம்
கசப்பாய் கடந்து விட
நிகழ் காலம்...
நெருப்பாய் சுட்டுவிட
எதிர்காலம்...
கவலையில் கலங்கிவிட..
அனாதையாய் பல நாட்கள்
தனிமையில் சிதைந்து விட...

சொந்தமாய்
என் சொந்தமாய்
எதுமே இல்லாத போதும்...
தோல்வியில்
துவண்டு துடித்த
என்னை
தோள் கொடுத்து
தூக்கி நிறுத்தி...

ஆதரவாய் ஆறுதல்
வார்த்தை பேசி
என் கிறுக்கல்களையும்
ரசித்து....
என் உயிர் மூச்சில் கலந்து
இன்றும் என்னை நேசித்து
என் துயர் மாற செய்யும்
என் உறவே..
என் நட்பு
தோட்டத்துக்குள்
வந்து போகும் பறவையே..
உன் நட்பில் துயர் மறக்கிறேன்...
உன் சிரிப்பில்
என் கண்ணீரை மறைக்கிறேன்
துயர் துடைக்கும்
உன் கரங்களுக்கு
என் ஆயிரம் முத்தங்கள்..

என் நட்பே!!!
எனக்கும் மட்டும்
உன் அன்பை தந்துவிடு...
பாசத்தை பகிர்ந்து தருவது
அன்னையாக மட்டுமே
இருந்து போகட்டும்:)

வியாசன்
09-08-2010, 03:53 PM
http://www.kathiyavad.com/scraps/scrapsimg/girls%20friendship-day-orkut.jpg


என் நட்பே!!!
எனக்கும் மட்டும்
உன் அன்பை தந்துவிடு...
பாசத்தை பகிர்ந்து தருவது
அன்னையாக மட்டுமே
இருந்து போகட்டும்:)


இன்பகவி உங்களிடமிருந்து ஒரு நல்ல ஏக்கத்தை வெளிப்படுத்தும் கவிதை.
ஆனாலும் பேராசை அன்பை உங்களுடன் மட்டும்தான் பகிர வேண்டுமா? :icon_ush:

Vel Tharma
09-08-2010, 04:02 PM
உன்னோடு பாசம் பகிர்வது
உன் அன்னை மட்டுமாக இருக்கட்டும்