PDA

View Full Version : பெருங்குடி மக்கள்



சுகந்தப்ரீதன்
09-08-2010, 11:14 AM
"அன்று நண்பர்கள் தினம்..!!

நேரம் நள்ளிரவை நெருங்கிடுச்சி… என்னடா இதுவரைக்கும் நண்பன்னு சொல்லிக்கிற ஒரு நாதாரியைக்கூட இந்த பக்கம் காணோம்… ஒரு மெசேஜ்கூட அனுப்பாம எங்கபோய் தொலைஞ்சானுங்க இவனுங்கல்லாம் இன்னிக்குன்னு.. யோசிச்சிக்கிட்டு இருந்தேன்…!!

திடீர்ன்னு அந்தநேரம் பார்த்து கையில இருந்த மொபைல் ‘டாடி மம்மி வீட்டிலில்ல’-ன்னு சிணுங்குது. ஆவலா எடுத்து யார்ன்னு பாத்தா, அடி ஆத்தி…. நம்ப வடிவேல் சார்பேர்ல ஒரு மெசேஜூ..!!

‘ஹேப்பி பிரண்ஸ்ஷிப் டே” இப்படிக்கு வைகைபுயல் வடிவேலு.
நானென்ன இளிச்சவாயனா? எவனோ தெரிஞ்சவந்தான் நம்பளை கலாய்க்கிறான்னு நம்பரை நோண்டி பார்க்கலாம்ன்னு போனா, அதுக்குள்ள அதே நம்பர்லருந்து எனக்கு கால் வேற வருது.

‘ஹலோ, வணக்கம் தம்பி… நாந்தான் வைகைபுயல் வடிவேல் பேசுறேன்’

‘சரி, அதுக்கென்ன இப்போ..?”

‘என்னய்யா நீயி… இப்படி பொசுக்குன்னு சொல்லிப்புட்ட.. நான் எப்பேர்பட்ட ஆளு..’

‘ஏண்டா.. வடிவேலு மாதிரி பேசுறவன்லாம் வடிவேல்னா அப்ப நான் யாராம்..? யார்ரா நீ… அதை சொல்லுடா முதல்ல..?’

‘தம்பி.. தம்பி.. எமோசனலாகாதிங்க…. நானே நாளைக்கு, உங்களை நேர்ல வந்து சந்திக்கிறதா இருக்கேன்… இப்ப நா சொல்றதை மட்டும் கொஞ்சம் காது கொடுத்து கேளுப்பா..?’

‘சரி சொல்லுங்க… தம்பின்னு வேற சொல்லிப்புட்டீங்க..’

‘நாந்தாம்பா நாயகன் வடிவேலு பேசுறேன்’

‘அடங்கொய்யால… மறுபடியுமா..? என்னை வில்லனாக்காம சொல்ல வந்ததை சொல்விட்டு ஓடிரு..?’

‘நான் வந்ததே உன்னை வில்லனாக்கத்தாம்ப்பா..?’

‘என்னாது…?’

‘பின்ன.. இந்த மிட்நைட்டுல உனக்கு மீல்ஸ் வாங்கிதரவா போன் பண்ணுவாங்க..?’

‘ஒன்னுமே புரியலை..’

‘அதுக்குள்ள அவசரப்பட்டா எப்படி..? நாங்களே டீட்டெய்லா சொல்லுவோம்ல…’

‘அடேய்… எங்க அப்பன் சாகும்போது சொல்லிட்டுதான் செத்தான்… ‘மிட்நைட்டுல மிடாஸ் சரக்கு அடிக்காதடா மகனே’ன்னு… அப்பன் பேச்சை கேட்காததால.. இப்ப எவன்எவன் பேச்சையெல்லாமோ எனக்கு கேட்க வேண்டியிருக்கு..’

‘என்ன தம்பி, கொஞ்சம்கூட மரியாதையில்லாம அவன் இவன்னு பேசிக்கிட்டு…’

‘வீணா என்னை கொலக்காரனா ஆக்காத… ஒழுங்கா உனக்கு என்ன வேணும் அதை மட்டும் சொல்லு..’

‘உங்கிட்ட என்னப்பா நான் பெரிசா எதிர்பார்த்திட போறேன்… வர சட்டமன்ற தேர்தல்ல விசயகாந்துக்கு எதிரா விருத்தாசலத்துல நீ சுயேட்சையா போட்டியிடனும்… அம்புட்டுதேன்..’

‘அப்ப உண்மையிலேயே நீங்க வடிவேல்தானா..?’

‘அடப்பாவி…. இதை சொன்னா நீ நம்புவன்னு எனக்கு முன்னமே தெரியாம போயிடுச்சே…. அந்த வடிவேலன்மேல சத்தியமா சொல்லுறேன்ப்பா.. நாந்தான் வடிவேலு..வடிவேலு..வடிவேலு..’

‘ஸாரி சார்… யாரோ என்னைய வச்சி காமடி பண்றாங்கன்னு நெனைச்சி அப்படி பேசிட்டேன்…. இப்ப நான் நம்புறேன் சார்..!! ஆனா இன்னமும் ஒன்னு மட்டும் எனக்கு சுத்தமா புரியவே இல்லை..!’

‘என்னது..?’

‘நீங்க எதுக்கு சார் என்னை தேர்ந்தெடுத்து இந்த நேரத்துல போன் பண்ணனும்..?’

‘ஹூம்… நாலு பரோட்டா வாங்கி நாலரை வண்டியில சென்னைக்கு பார்சல் அனுப்பி வைக்க சொல்றதுக்குதான்..’

‘என்ன சார் நீங்க.. இப்படி காமடி பண்ணுறீங்க..? இந்த நேரத்துல எந்த ஹோட்டல் சார் திறந்திருக்கும்..? ம்ம்ம்.. ஞாபகம் வந்துடுச்சி, அந்த ‘டாஸ்மாக்’ பக்கத்துல, இருக்குற பாண்டிகடை இன்னேரம் முன்னாடி பூட்டி, விடியுற வரைக்கும் பின்னாடி திறந்துதான் இருக்கும்..!! நான் அங்கபோயி இப்பவே உங்களுக்கு வாங்கி அனுப்புறேன் சார்.., அப்ப அந்த சீட் கண்டிப்பா எனக்குதானே சார்..?!

‘ஏன்… ஏன்… பஞ்சத்துல அடிபட்டவன் மாதிரி பறக்குற நீயி…? இது ஒன்னும் பஞ்சாயத்து தேர்தல் இல்ல.. பாராளுமன்ற தேர்தல்... எதையும் ஃப்ளான் பண்ணிதான் பண்ணனும்..’

‘அப்படியா சார்… அப்ப சரி…!! ஆனா கொஞ்ச நேரத்துக்கு முன்னால சட்டமன்ற தேர்தல்ன்னு சொன்னீங்களே..’

‘அட குமட்டை.. இப்பவும் அதைத்தாண்டா சொல்றேன்… பார்+ஆளும் மன்றம் = பாராளுமன்றம்தானே..?’

‘அண்ணே.… உங்களோட ஆங்கில, இலக்கிய, கணித அறிவை பார்த்து எனக்கு ‘புல்’லரிக்குதுண்ணே’

‘’நீ என்னதான் ஐஸ் வச்சாலும் உனக்கு ஐஸ்ல வைக்காத பீருதான்டா கிடைக்கும்… தேர்தல்ல ஜெயிச்சாதான் உனக்கு ஆஃபு, புல்லெல்லாம்… தோத்தேன்னு வையி உனக்கு ஆப்புதாண்டியோய்..!’

‘என்னண்ணே இப்படி சொல்லிபுட்டீங்க… இது எங்க ஊர்ண்ணே… நான் ஜெயிக்காம வேறு யார்ண்ணே ஜெயிப்பா..’

‘அப்புறம் எப்புடி எங்கூர் ஆளு உங்கூர்ல ஜெயிச்சாராம்..?’

‘அண்ணே… போனவாட்டி நான் போட்டியிடலை… அது தெரியாம பேசாதீங்க..!’

‘தம்பி, நீ ஜெயிப்பியா தோப்பியாங்கறதெல்லாம் எனக்கு தேவையில்லாத விசயம்… எனக்கு என் எதிரி தோக்கணும் அவ்ளோதான்…’

‘அதுக்கு நான் என்ன செய்யனும்ன்னு… அதை தெளிவாச் சொல்லுங்க..?’

‘நீ தேர்தல்ல நின்னு ஓட்டை பிரிக்கனும்..?’

‘இதையென்ன… இம்புட்டு ஈஸியா வீட்டுமேல நின்னு ஓட்டைப்பிரிக்குற மாதிரி சொல்லிப்புட்டிங்க… அதுக்கெல்லாம் அதிகமா செலவாகும்ண்ணே..?’

‘அதபத்தி நீயேன் கவலைபடுற… அதான் அண்ணன் நானிருக்கேன்ல்ல?’

‘நீங்க இருந்தா மட்டும் போதுமா..? ‘பாட்டில்’ இல்லன்னா இங்க பங்காளிவூட்டு காரியத்தக்கூட ஒருபயபுள்ளயும் பாக்கவராது..!! இதுல எந்த பயபுள்ள உங்களுக்காவோ இல்ல உணர்வுக்காகவோ கொடிப்புடிக்க வந்திறப்போவுது..?!

‘பயபுள்ள வரலன்னா என்ன… பொட்டபுள்ளய கூப்புட்டுக்க வேண்டியதுதான..?’

‘அப்படியாண்ணே..? அப்ப நீங்களே வந்து கூப்புட்டுக்குங்க…?’

‘என்ன தம்பி… இப்படி பாதியில அத்துவுட்டு போறீங்க…?! நான் சொல்றதை கொஞ்சம் கேளுப்பா… வர எலக்சனுக்குள்ள மதுவை கொஞ்சம் கொஞ்சமா விலக்கி வைக்க போறாத பேசிக்கிறாங்க..?’

‘ஏன் இப்படியெல்லாம் கமெடி பண்ணுறீங்க… மதுவை எப்படி விளக்க முடியும்.? வேணும்ன்னா பாட்ல விளக்கலாம்..!!

‘அட.. விளங்காம போனவனே… அது விளக்குல்லடா.. விலக்கு..?’

‘அப்புடியா.. அப்பசரி…!! ஆமா, இன்னிக்கு வரைக்கும் நாட்ல நம்பர்-ஒன் வியாபாரமா அது நல்லாதான போயிகிட்டு இருக்குது.. அப்புறம் என்னண்ணே திடீர்ன்னு..?!’

‘அதெல்லாம் எனக்கு தெரியாது தம்பி... அவுங்க விளக்கேத்தாம ஆரம்பிச்சுவச்ச வியாபாரத்தை இப்ப விளக்கம் சொல்லி அமுக்க நினைக்குறாங்க போலிருக்கு.. எது எப்படியோ இதனால நாட்டுமக்களுக்கு நல்லபுத்தி கிடைச்சா சரிதான்..!!’

‘அப்படின்னா வர தேர்தல் அறிக்கையில… மக்களுக்கு இலவசமா எதுவுமே கிடையாதாண்ணே..?’

‘ஏண்டா உங்களுக்கு இப்படியெல்லாம் புத்தி போகுது…? இதுவரைக்கும் உங்க முதுகுல போட்ட பட்டையும் நாமமும் போதாதாடா… இதுல இன்னும் வேறயா..? எரியறதை இழுத்தா… கொதிக்கறது தானா நிக்குமடா தம்பி..!’

‘அதெல்லாம் எனக்கு தெரியாதுண்ணே… ஆனா நீங்க சொல்றது மட்டும் நடந்துச்சின்னா.. எங்கூர்ல்ல பல குடும்பங்கள்ல ஆம்பளைங்க வயிறு எறியறதும்… பொம்பளைங்க மனசு கொதிக்கறதும் நிச்சயமா நிக்கும்ண்ணே..?’

‘ஏண்டா தம்பி… இப்படி திடீர்ன்னு ‘விக்ரமன்’ பட வசனம் மாதிரி பேசுற..?’

‘ஏன்னா… எங்கப்பன் ஒரு குடிகாரண்ணே…?’

‘அப்ப நீயி..?’

‘அதையேதான் என் புள்ளயும் சொல்றாண்ணே…’

‘அடேய்… விட்டா கமெடியனுக்கே நீ கண்ணீரை வரவைப்ப போலிருக்கு… அன் டைமாயி போச்சி, நீ முதல்ல போனை வையி… நாம மிச்சத்தை நேர்ல பேசிக்கலாம்…! இல்லைண்ணா சந்தேகப்பட்டு உளவுதுறையிலருந்து ஒட்டுக்கேட்க ஆரம்பிச்சுருவாங்க…’

- இப்படி பேச்சும் பேச்சா இருக்கும்போதே, யாரோ இடையில என்னை குச்சியால பலமா தட்டுற மாதிரி இருந்திச்சி…!! ‘யார்ரா அது’ன்னு கஸ்டப்பட்டு கண்முழிச்சி பாத்தா விரைப்பா ரெண்டு உளவுதுறை ஆளுங்க… ஸாரி்..ஸாரி… காவல்துறை ஆளுங்க..!!

‘இந்த நேரத்துல இங்க பஸ்டாண்டுல படுத்து என்னடா உளறிக்கிட்டு இருக்க…?’

‘கடைசி பஸ்ஸை மிஸ் பண்ணிட்டேன் சார்… அதான் விடிஞ்சதும் போகலாம்ன்னு அப்படியே படுத்துகிடந்தேன்..’

‘கணக்கு வழக்கில்லாம மூக்குமுட்ட குடிக்க வேண்டியது, அப்புறம் கீழக்கெடந்து பெணாத்த வேண்டியது.. கேட்டா கடைசி பஸ்ஸை மிஸ் பண்ணிட்டேன்னு கதை விடறது…!! எந்திரிச்சி வாடா நாயே..’

‘எங்க சார்…?’

‘லாட்ஜ்ல சாருக்கு ஏசி ரூம் போட்டிருக்கோம்.. வந்து தூங்கிட்டு போங்க சார்..’”

- “நெசமாலுமே உனக்கு ஏசியில ரூம் போட்டு கொடுத்தாங்களா மாப்ள..?”

“வயித்தெரிச்சலை கிளப்பாத.. அவனுங்க லாட்ஜ்ன்னு சொன்னது… லாக்கப்புடா..”

“அப்புறம் என்னாச்சிடா மாப்ள…?”

“அப்புறமென்ன… அன்னையோட குடிக்கனும்ங்கிற ஆசையே அத்துபோச்சி..மச்சான்..”

“ஆனா எனக்கு இப்ப ஆசையா இருக்கே மாப்ள…?”

“எதுக்கு…?”

“குடிக்கறதுக்கு…?”

“நீதான் குடிக்கறதை நிறுத்திட்டியேடா… இப்ப என்ன திடீர்ன்னு… லவ் பெயிலியரா.?”

“அடப்போடா வெண்ணை… அப்படி பார்த்தா ஊர்லருக்குற ஆணு, பொண்ணு அத்தனையும்ல்ல குடிக்கனும்..?”

“அப்படின்னா என்னதான் விசயமாம்..?”

“மதுவிலக்கு வருதுன்னு நீ சொன்னீல்ல..?”

“ஆமாம்.. சொன்னேன்…”

“அதுவந்துட்டா, அப்புறம் குடிக்க முடியாதில்ல…அதான்டா மாப்ள...”

“அட பைத்தியக்காரா.… பாண்டிச்சேரி பக்கத்துலதாண்டா இருக்கு..!!”.

ravichandran@1955
09-08-2010, 01:12 PM
:lachen001::wuerg019:

கலையரசி
09-08-2010, 01:50 PM
நல்ல தமாஷ்! வடிவேலு வசனம் ரொம்பப் பொருத்தமாக இருந்தது. பாராட்டுக்கள்.

பாரதி
09-08-2010, 01:58 PM
:lachen001::aktion033::aktion033:...!!
படிக்க மிகவும் நன்றாக இருந்தது. உங்கள் எழுத்தாளுமைக்கு ஒரு எடுத்துக்காட்டு.
சிரித்து மகிழ்ந்தேன். நன்றியும் பாராட்டும்.

வியாசன்
09-08-2010, 03:50 PM
அருமையான கற்பனை பாராட்டுக்கள்

அமரன்
09-08-2010, 06:17 PM
உரையாடல்லயே உறைய வைச்சுட்டியேப்பா கதையை..

பாரதிண்ணா சொன்னது போல சொல்லாளுமை சொக்க வைக்குது.

நாடு தழுவிய மதுவிலக்கு வரவே வாராதா..

தாமரை
10-08-2010, 03:30 AM
“அதுவந்துட்டா, அப்புறம் குடிக்க முடியாதில்ல…அதான்டா மாப்ள...”

“அட பைத்தியக்காரா.… பாண்டிச்சேரி பக்கத்துலதாண்டா இருக்கு..!!”.

இனியென்னை புதிய உயிராக்கி
மதிதன்னை மிகத்தெளிவு செய்து
என்றும் சந்தோசம் கொண்டிருக்க செய்வாய்..!!

இது கூட கதையின் பகுதி மாதிரியே கனகச்சிதமா பொருந்துதே!!

அன்புரசிகன்
10-08-2010, 04:38 AM
உண்மையாகவே பெருங்குடிமக்கள் தான். (உங்களை போல.................) நகைச்சுவையாக ஆரம்பித்து நிகழ்கால யதார்த்தத்தை புரியவைத்துள்ளீர்கள். தொடருங்கள் உங்கள் எழுத்தை... வாழ்த்துக்கள் சுவா

ஆதவா
10-08-2010, 04:48 AM
நீங்க சினிமாவுக்கு வசனம் எழுதப்போகலாம்... அவ்ளோ நல்லா இயல்பா வந்து இருக்கு

பசங்க இப்படித்தான்.... போனவாரம் ‘லைட்டா அடிச்சுட்டு,

“மாப்ள,. பாஸ்போர்ட் வெச்சுருக்கீல்ல? அடுத்த மாசம் இலங்கைக்கு போறோம், நல்லா சுத்தறோம், திரும்பி வர்றோம். ஆளுக்கு அம்பதினாயிரம் ரூவா”

“அம்பதாயிரமா?”

“எல்லாருக்கும் ஸ்பான்ஸர் பண்ரேன், வந்து கொடுத்தீங்கன்னா போதும்”

”இலங்கை எங்கடா இருக்கு”

“இந்தியாவுக்கு கீழ”

“நாமதான் இந்தியாவிலயே இல்லையே”

“வேற எங்க இருக்கீங்க”

“இந்தியாவுல..”

“பார்ரா”

இடையில ஒருத்தன் வாந்தியெடுக்கறமாதிரி உவ்வேன்னு சவுண்ட் விட்டான்

“மாப்ல, இலங்கைக்கு போய்ட்டு வாந்தி எடுத்து இந்தியாவோட மானத்தை இவன் கப்பலேத்திடுவான், அதனால இவன் வேண்டாம்”

“அவன் இல்லாமல் நான் வரமாட்டேன்”

“சரி, நீயும் வராதே”

“நீங்க ரெண்டு பேரு மட்டும் போய் என்னத்த கிழிக்க போறீங்க”

“நாங்களும் போகமாட்டோம்”

“அப்ப இலங்கை”

உவ்வே...................... நு ஒரு சத்தம்....

அவன் வாந்தியெடுத்துட்டு இருந்தான்......

“மாப்ல, பாஸ்போர்ட் எடுக்காதவன் எடுத்திருங்கடா” சொன்னவனை நாங்க என்ன பண்ணியிருப்போம்னு நீங்க நினைக்கிறீங்க?

அமரன்
10-08-2010, 05:29 AM
“அதுவந்துட்டா, அப்புறம் குடிக்க முடியாதில்ல…அதான்டா மாப்ள...”

“அட பைத்தியக்காரா.… பாண்டிச்சேரி பக்கத்துலதாண்டா இருக்கு..!!”.

இனியென்னை புதிய உயிராக்கி
மதிதன்னை மிகத்தெளிவு செய்து
என்றும் சந்தோசம் கொண்டிருக்க செய்வாய்..!!

இது கூட கதையின் பகுதி மாதிரியே கனகச்சிதமா பொருந்துதே!!


அப்ப அந்த ரெண்டு பேரு, மதியும் சுகந்தவாசனும்தானா..

சுகந்தப்ரீதன்
10-08-2010, 09:53 AM
:lachen001::wuerg019::medium-smiley-031:

நல்ல தமாஷ்! வடிவேலு வசனம் ரொம்பப் பொருத்தமாக இருந்தது. பாராட்டுக்கள்.பாராட்டுக்கு மிக்க நன்றி கலையக்கா..!! இந்த கதைக்கு உந்துதலே உங்க ‘உண்ணாவிரதம்’ கதைதான்.. இதுல தாமாஷ் என்னன்னா கடைசியில உங்க ஊருவந்து இங்க மாட்டிக்கிட்டதுதான்..:D

:lachen001::aktion033::aktion033:...!!
படிக்க மிகவும் நன்றாக இருந்தது. உங்கள் எழுத்தாளுமைக்கு ஒரு எடுத்துக்காட்டு.
சிரித்து மகிழ்ந்தேன். நன்றியும் பாராட்டும்.மிக்க நன்றி பாரதியண்ணா..!! என் பதிவில் உங்களின் முதல் பின்னூட்டம் இதுவென நினைக்கிறேன்..!!:icon_ush:

அருமையான கற்பனை பாராட்டுக்கள்மிக்க நன்றி வியாசரே...:mini023:

உரையாடல்லயே உறைய வைச்சுட்டியேப்பா கதையை..
பாரதிண்ணா சொன்னது போல சொல்லாளுமை சொக்க வைக்குது.
நாடு தழுவிய மதுவிலக்கு வரவே வாராதா..அதெல்லாம் எனக்கு தெரியாது அமரா..:icon_drunk:

சுகந்தப்ரீதன்
10-08-2010, 10:12 AM
“அதுவந்துட்டா, அப்புறம் குடிக்க முடியாதில்ல…அதான்டா மாப்ள...”
“அட பைத்தியக்காரா.… பாண்டிச்சேரி பக்கத்துலதாண்டா இருக்கு..!!”.
இனியென்னை புதிய உயிராக்கி
மதிதன்னை மிகத்தெளிவு செய்து
என்றும் சந்தோசம் கொண்டிருக்க செய்வாய்..!!

இது கூட கதையின் பகுதி மாதிரியே கனகச்சிதமா பொருந்துதே!!இப்படியெல்லாம் பொருத்திவிடுவீங்கன்னு தெரிஞ்சுதான்.. இதை எச்சரிக்கையா கதைபகுதியில பொருத்துனமாக்கும்..!!:icon_rollout:

உண்மையாகவே பெருங்குடிமக்கள் தான். (உங்களை போல.................) நகைச்சுவையாக ஆரம்பித்து நிகழ்கால யதார்த்தத்தை புரியவைத்துள்ளீர்கள். தொடருங்கள் உங்கள் எழுத்தை... வாழ்த்துக்கள் சுவாபார்டா... சமயம் பார்த்து கழண்டுக்கிட்டு போறதை... அன்பு எனக்கு வேணும் உங்க அன்பு..:wuerg019:


“மாப்ல, பாஸ்போர்ட் எடுக்காதவன் எடுத்திருங்கடா” சொன்னவனை நாங்க என்ன பண்ணியிருப்போம்னு நீங்க நினைக்கிறீங்க?அதிகபட்சம் அவனை ஆம்லெட் போட வச்சிருப்பீங்க..?!:food-smiley-009:
என்னையெல்லாம் மதிச்சி சினிமாவுக்கு அனுப்பிவச்ச ஆதவனுக்கு என் நன்றி..:D

கலையரசி
10-08-2010, 02:13 PM
”பாராட்டுக்கு மிக்க நன்றி கலையக்கா..!! இந்த கதைக்கு உந்துதலே உங்க ‘உண்ணாவிரதம்’ கதைதான்.. இதுல தாமாஷ் என்னன்னா கடைசியில உங்க ஊருவந்து இங்க மாட்டிக்கிட்டதுதான்..”

என் கதை உங்களுக்கு உந்துதலாயிருந்தது என்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன் சுகந்தவாசன். நகைச்சுவையாய் எழுதுவது கடினம். இந்தக்கதையை நான் படித்துச் சிரித்தேன். மேலும் எழுதுங்கள்.

புதுச்சேரி என்றாலே குடிக்குப் பெயர் போனது என்பது மாதிரியான வாசகங்களை ஏற்கெனவே பல முறை கேட்டிருந்ததால் பாதிப்பு எதுவுமில்லை. இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் புதுச்சேரிகாரர்களில் பெரும்பாலோர் குடிகாரர்கள் அல்ல. தெருவில், பேருந்து நிலையத்தில் அளவுக்கதிகமாகக் குடித்து விட்டுக் கிடக்கும் அனைவருமே வெளிமாநிலத்துக்காரர்கள் என்பது தான் உண்மை.

கீதம்
10-08-2010, 10:43 PM
கதையோட்டம் மிகவும் சீராக இருந்தது. போதையிலும் நகைச்சுவை பொங்கிவழிகிறது. பாராட்டுகள் சுகந்தவாசன்.

தலைப்பு என்னை மிகவும் ஈர்த்தது. ஏனெனில் நாங்களும் ஒருகாலத்தில் பெருங்குடி மக்கள்தான்.அவசரப்படாதீங்க. அது எங்க ஊர் பேருங்க.(திருவான்மியூர் பக்கத்தில் இருக்கு.)

பூமகள்
11-08-2010, 01:24 AM
சுகந்தா.. நலமா? நீண்ட நாட்கள் கழித்து மன்றத்தில் உன் வரிகள் கண்டு மகிழ்ச்சி.

அசத்தல் சுகந்தா. 'குடி' மக்களின் இயல்பான உரையாடல்களாகவே இருக்கிறது. வித்தியாசமான எழுத்து நடையில் நைசாக கருத்தைக் கொண்டு வந்த பாங்கு அருமை..

மெருகேறிய எழுத்துத் திறன் பளிச்சிடுகிறது சுபி இல்ல இல்ல சுவா. ;)

கலக்கல்..

தாமரை
11-08-2010, 04:09 AM
சமீபத்தில் ஒரு நாவல் படித்து முடிச்சதும் என்னுள் ஓர் எண்ணம்..

"இத்தனை பெரிய அண்டவெளியில் நம் பூமி ஓர் அணு போலவே.அணுவுக்குள் இருக்கும் மைக்ரோ துகள்களாக மனிதர்கள். அண்டத்தின் சிறு பாதிப்பும் நம் பூமியை இல்லாமல் ஆக்கிவிடும். அடிக்கடி சுனாமி,பூகம்ப எச்சரிக்கை. இருந்தும் ஏன் இன்னும் மனிதருக்கு போட்டி, பொறாமை, எரிச்சல், புகைச்சல், சுய நலம், வில்லத்தனம் சக மனிதத்தின் மீதே..??!! எதைக் கொண்டு செல்ல இத்தனை வன்மப் போராட்டம் எல்லார் இடத்தும்?".

ஏன் எங்கியோ படிச்சீங்க தங்கச்சி.. இங்கயே படிச்சிருக்கலாமே!!!
http://www.tamilmantram.com/vb/showpost.php?p=316642&postcount=6

ஆதவா
11-08-2010, 04:37 AM
ஏன் எங்கியோ படிச்சீங்க தங்கச்சி.. இங்கயே படிச்சிருக்கலாமே!!!
http://www.tamilmantram.com/vb/showpost.php?p=316642&postcount=6

சிமிலியரா இதே மாதிரின்னா இருக்கு....

இதெல்லாம் எப்படி ஞாபகத்தில வெச்சிருக்கிங்க?

ஆதி எங்கிட்ட பேசும்போது, நான் ஒரு பின்னூட்டம் போட்டதைப் பற்றி பேசினார். ங்கொய்யாலே எனக்கே அது தெரியாது.... நேத்திக்கு போட்டத நேத்தியோடவே மறந்திடற ஜாதி நம்மது!!

சுகந்தப்ரீதன்
11-08-2010, 08:06 AM
கதையோட்டம் மிகவும் சீராக இருந்தது. போதையிலும் நகைச்சுவை பொங்கிவழிகிறது. பாராட்டுகள் சுகந்தவாசன்.
தலைப்பு என்னை மிகவும் ஈர்த்தது. ஏனெனில் நாங்களும் ஒருகாலத்தில் பெருங்குடி மக்கள்தான்.அவசரப்படாதீங்க. அது எங்க ஊர் பேருங்க.(திருவான்மியூர் பக்கத்தில் இருக்கு.) பாராட்டுக்கு மிக்க நன்றி சகோதரி..!! உங்களுக்கும்கூட நகைச்சுவை நல்லாவரும் போலிருக்கே...:D

சுகந்தா.. நலமா? நீண்ட நாட்கள் கழித்து மன்றத்தில் உன் வரிகள் கண்டு மகிழ்ச்சி.
அசத்தல் சுகந்தா. 'குடி' மக்களின் இயல்பான உரையாடல்களாகவே இருக்கிறது. வித்தியாசமான எழுத்து நடையில் நைசாக கருத்தைக் கொண்டு வந்த பாங்கு அருமை..
மெருகேறிய எழுத்துத் திறன் பளிச்சிடுகிறது சுபி இல்ல இல்ல சுவா. ;)
கலக்கல்..வாம்மா தங்கச்சி.. நான் நலம் நீ நல்லாயிருக்கியா..?! (இன்னும் எத்தனைவாட்டி..?)
கவிதாயினியே கலக்கல்ன்னு சொல்லிட்டீங்க... இதுக்குமேல கலக்கி குடிக்க வேண்டியது மட்டும்தான் பாக்கி..:food-smiley-022:

”புதுச்சேரி என்றாலே குடிக்குப் பெயர் போனது என்பது மாதிரியான வாசகங்களை ஏற்கெனவே பல முறை கேட்டிருந்ததால் பாதிப்பு எதுவுமில்லை. இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் புதுச்சேரிகாரர்களில் பெரும்பாலோர் குடிகாரர்கள் அல்ல. தெருவில், பேருந்து நிலையத்தில் அளவுக்கதிகமாகக் குடித்து விட்டுக் கிடக்கும் அனைவருமே வெளிமாநிலத்துக்காரர்கள் என்பது தான் உண்மை. ’வாயைக்கொடுத்து வாங்கிக் கட்டிக்காதடா சுகந்தா’ன்னு யவனியக்கா சொல்றது சரியாத்தானிருக்கும் போல..!! அக்கா, கதைக்களப்படி புதுச்சேரிதான் பக்கத்தில் இருக்கிறது.. மற்றப்படி உங்கள் கூற்றில் இருக்கும் நியாயத்தை நானும் அறிவேன்.. அதை இல்லையென்று மறுப்பதற்க்கில்லை..!! இங்கே அமரன் சொன்ன காந்தியின் அந்த கனவுதான் எனது விருப்பமும்கூட..!!

தமிழகத்தில் மதுவிலக்குக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் எடுத்த எடுப்பில் சொல்லும் காரணம் அண்டை மாநிலங்களில் அது அமலில்லை என்பதுதான்..!! குஜராத்தில் கொஞ்ச காலம் இருந்ததனால் இதை சொல்கிறேன்.. அண்டை மாநிலங்களில் அமலில்லாதபோதும் அங்கே எல்லோயோரங்களில் நடக்கும் ஒருசில அத்துமீறல்கள் தவிர்த்து மாநிலம் முழுதும் மதுவிலக்கு நல்லமுறையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது..!! ஆனால் அங்கேயும் போதை, ‘பான்பராக்’ ‘ஹான்ஸ்’ போன்று வேறுவடிவில் உலவிக் கொண்டுதானிருக்கிறது.. அதனால் பெருகிவரும் வாய்புற்று நோயை தடுக்க அந்த அரசு மிகச்சிரத்தையுடன் விழிப்புணர்வை நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டுதானிருக்கிறது ..!!

உண்மையில் ஆண்டுதோறும் மதுவால் வரும் லாபத்தைவிட அதிகமாக, அதனால் சமூகத்திற்க்கு ஏற்படும் மறைமுக பாதிப்புகளை சமாளிப்பதற்க்கு தமிழகஅரசு செலவிட்டுக் கொண்டிப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன..!! அப்புறம் எதற்கு இந்த முட்டாள்தனத்தை இன்னும் தொடர வேண்டுமாம்..? ஏன்னா, கள்ளுகடை காசினில்தானே இங்கே கட்சிக்கொடிகள் ஏறிக்கிட்டிருக்கு..!! மது வீட்டுக்கு, நாட்டுக்கு, உயிருக்கு கேடு.. அதை ஆளும் அரசே ஊக்குவிப்பது எதிர்வரும் சந்ததிக்கே கேடு..!!

தமிழ்ப் பெருங்குடி மக்கள் என்பதை முத்தமிழறிஞர் தப்பா புரிஞ்சுக்கிட்டாரா? இல்லை மூத்தக்குடி மக்கள் தப்பா புரிஞ்சுக்கிட்டாங்களான்னு காலம்தான் பதில் சொல்லனும்..!!:D