PDA

View Full Version : ப்பிரிய பிம்பங்கள்..



சசிதரன்
08-08-2010, 04:51 PM
http://www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-98/po-sasi.jpg

நீ எதிர்பார்ப்பது மிக பத்திரமாய்
என்னிடம் இருக்கிறது.

கதவுகள் திறப்பதற்கென
காத்துக் கொண்டிருக்கிறாய்..
அதன் சாவி என்னிடம் பத்திரமாய் இருக்கிறது.

மௌனம் உன்னைக் கொல்வதாய்
கவலை கொள்கிறாய்..
உனக்கான வார்த்தைகள்
என்னிடம் பத்திரமாய் இருக்கிறது.

ரசமிழந்த நிலைக் கண்ணாடியில்
நம் பிம்பத்தைத் தேடிக்கொண்டிருக்கிறாய்..
பிரியங்களின் பாதரசம்
என்னிடம் பத்திரமாய் இருக்கிறது.

வெற்றுக் காகிதங்களை
வெறித்துக் கொண்டிருக்கிறாய்..
நிலவினை முகமெனவும்
நட்சத்திரங்களைப் புன்னகையெனவும்
உருவகப்படுத்தும் ஓர் கவிதை
என்னிடம் பத்திரமாய் இருக்கிறது.

கனவின் நீள்பாதையில் நீ பூக்கள் விரும்பிக் காத்திருக்கிறாய்
நான் இரவின் வேர்களைப் பலப்படுத்திக் கொண்டிருக்கிறேன்..

அதுவரை...

நீ எதிர்பார்ப்பது மிக பத்திரமாய்
என்னிடமே இருக்கும்.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
08-08-2010, 08:23 PM
இனியும் இன்னமுமாய்
கவிந்து கொண்டிருங்கள்
அது வரை எங்களிடம்
பத்திரமாய் பாராட்டுக்கள்

வியாசன்
08-08-2010, 08:57 PM
எதிர்பார்ப்பதை வேறு யரிடமும் கொடுக்க மாட்டீர்கள் என்றால் சரிதான்
உங்கள்படைப்புக்களை உற்றுக்கவனிக்கின்றேன் நன்றாக உள்ளது.

சசிதரன்
11-08-2010, 01:54 PM
இனியும் இன்னமுமாய்
கவிந்து கொண்டிருங்கள்
அது வரை எங்களிடம்
பத்திரமாய் பாராட்டுக்கள்

:) நன்றி எஸ்.எம். சுனைத் ஹஸனீ

சசிதரன்
11-08-2010, 01:55 PM
எதிர்பார்ப்பதை வேறு யரிடமும் கொடுக்க மாட்டீர்கள் என்றால் சரிதான்
உங்கள்படைப்புக்களை உற்றுக்கவனிக்கின்றேன் நன்றாக உள்ளது.

மிக்க நன்றி வியாசன்... :)

Ravee
11-08-2010, 02:56 PM
கனவின் நீள்பாதையில் நீ பூக்கள் விரும்பிக் காத்திருக்கிறாய்
நான் இரவின் வேர்களைப் பலப்படுத்திக் கொண்டிருக்கிறேன்..

அதுவரை...

நீ எதிர்பார்ப்பது மிக பத்திரமாய்
என்னிடமே இருக்கும்.

மேலே உள்ள வரிகள் எனக்குப் பிடித்தது

காத்திருப்பது சுகம்தான் ... அது நனவாகும் பொழுது .

சுடர்விழி
12-08-2010, 09:13 AM
அருமையான கவிதை....

“ரசமிழந்த நிலைக் கண்ணாடியில்
நம் பிம்பத்தைத் தேடிக்கொண்டிருக்கிறாய்..
பிரியங்களின் பாதரசம்
என்னிடம் பத்திரமாய் இருக்கிறது.”

நான் ரசித்த வரிகள்...பாராட்டுக்கள்....

கீதம்
12-08-2010, 09:38 AM
உன் தேடல்கள் யாவும்
என்னுடன் முடிந்துவிடும்
உன் ஆசைகள் யாவும்
என்னால் பூர்த்தி செய்யப்படும்

இப்படி ஒரு உத்திரவாதம் கிடைத்துவிட்டால் யாருக்குதான் நிம்மதி உண்டாகாது?

அன்பின், அக்கறையின், ஆழ்மனதின் வெளிப்பாடு மிக அருமை. பாராட்டுகள், சசிதரன் அவர்களே.

(தலைப்பில் இருக்கும் ப் அல்லது பி இரண்டு எழுத்துகளில் ஒன்றை நீக்கினால் சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது. கவனியுங்களேன்.)

Nivas.T
12-08-2010, 10:27 AM
உனக்காக நான்
எனக்காக நீ என சொல்வது எப்பொழுது?
காத்திருக்கிறேன் நான் உன்னில்.

பிரிய பிம்பங்கள் விழுந்தால்
நிச்சயம் பிரதிபலிக்கும்
காதல் கண்ணாடி

அழகான காதல் கவிதை
நன்றி சசிதரன்