PDA

View Full Version : கனவுகண்டேன் வெறும் கனவாய் போனதே....



Nivas.T
07-08-2010, 04:18 PM
கனவுகண்டேன் வெறும் கனவாய் போனதே!

உணர்வு கொண்டேன் உருக்குலைந்து போனதே!

தமிழுக்கு ஒரு நாடு என்றும்!

ஈழம்தான் அதன் வீடு என்றும்!

ஆயிரம் ஆண்டு பன்மையான இனம்!

உலகை ஆண்ட தொன்மையான இனம்!

அடிமை பட்டுதான் கிடக்குது அங்கே!

அதனை காக்கும் உணர்வுதான் போனது எங்கே?

மாநாடு போடும் கூட்டம் இங்கே!

தன்மான உணர்வுதான் போனது எங்கே?

அரைகூவல் விடுக்கும் எமது அன்பர்களே?

ஈழத்தின் அழுகுரல் உமக்கு கேட்களையோ?

கண்ணீர் வடிக்கும் எமது கண்களில்தான்!

குருதி தோய்வது உமக்கு தெரியலையோ?

எம்மக்களின் கதிதான் உமக்கு புரியலையோ?

எம்மினத்திற்கு விடிவுதான் வரவில்லையோ?

கலையரசி
07-08-2010, 04:45 PM
இனவுணர்வு இல்லாத ஒரே இனம் தமிழ் இனம் தான். ஈழத்தில் கொல்லப்பட்டவர்கள் தமிழர்களாக இல்லாமல், மலையாளிகளாகவோ, சீக்கியர்களாகவோ இருந்திருந்தால், இந்நேரம் இந்தியாவே கொந்தளித்திருக்கும்.
என்ன செய்வது? கண்ட கனவு கலைந்து போய் விட்டாலும், விடி வெள்ளி முளைக்கும் என்ற நம்பிக்கையில் வாழ வேண்டியது தான். நம்பிக்கை தானே வாழ்க்கை!
மனத்தைக் கனக்க வைக்கும் கவிதை. பாராட்டுக்கள் நிவாஸ்! தொடர்ந்து எழுதுங்கள்.

வியாசன்
07-08-2010, 09:00 PM
நிவாஸ்
உங்கள் எங்கள் உள்ளக்கிடக்கையை கொட்டிவிட்டீர்கள் நன்றி

Nivas.T
08-08-2010, 07:36 AM
நிவாஸ்
உங்கள் எங்கள் உள்ளக்கிடக்கையை கொட்டிவிட்டீர்கள் நன்றி
.

இந்த ஜனநாயக நாட்டில் அரசாங்கத்தையோ, இந்திய ஒருமைபட்டையோ விமர்சிப்பது தவறு ஆனால் அரசாங்கம் அலுவல் அல்லாத செயல்களை விமர்சிக்க எவருக்கும் உரிமையுண்டு. மாநாடு வேண்டாம் என்று நான் சொன்னதில்லை ஆனால் இது சரியான நேரம் இல்லை என்பதுதான் என்வாதம். இரண்டு மாதம் முன்பு வரை பல போராட்டங்கள் செய்துவிட்டு இன்னும் சில கொந்தளிப்புகள் அடங்காத நிலையில் இப்படி ஒரு விழா என்றால் இந்தியர்கள் அல்ல உலகமே சிரிக்கிறது. மத்தபடி வீண் பொல்லாப்பை பற்றியெல்லாம் நான் கவலைப்பட மாட்டேன். என்னை பொறுத்தவரை தமிழக அரசியலும் சரி அரசியல் வாதிகளும் சரி............. வெற்றுப்பை :mad:

நன்றி வியாசகன் :)

Nivas.T
08-08-2010, 07:42 AM
இனவுணர்வு இல்லாத ஒரே இனம் தமிழ் இனம் தான். ஈழத்தில் கொல்லப்பட்டவர்கள் தமிழர்களாக இல்லாமல், மலையாளிகளாகவோ, சீக்கியர்களாகவோ இருந்திருந்தால், இந்நேரம் இந்தியாவே கொந்தளித்திருக்கும்.
என்ன செய்வது? கண்ட கனவு கலைந்து போய் விட்டாலும், விடி வெள்ளி முளைக்கும் என்ற நம்பிக்கையில் வாழ வேண்டியது தான். நம்பிக்கை தானே வாழ்க்கை!
மனத்தைக் கனக்க வைக்கும் கவிதை. பாராட்டுக்கள் நிவாஸ்! தொடர்ந்து எழுதுங்கள்.

உண்மை முற்றிலும் உண்மை

அந்தவிடிவெள்ளி நம்மில் யார் என்பதுதான் கேள்வி
அதற்க்கான சந்தர்ப்பத்தைத்தான் எதிர்ப்பது காத்திருக்கிறேன்

காலம் மாறும் என்ற நம்பிக்கையுடன்

நன்றி கலையரசி அவர்களே

அமரன்
08-08-2010, 03:29 PM
தூங்குபவர்களாலும் விழித்திருப்பவர்களாலும் கனவுகள் காணப்படுகின்றன.

தூக்கத்தில் இருப்பதாகவும், விழிப்புடன் இருப்பதாகவும் நடிப்பவர்களால் கனவுகள் களவாடப்படுகின்றன.

என்னைப் பொறுத்தமட்டில் இதுதான் நிதர்சனம்... நிஜம்.

ஆ.... தங்கமே என்ற ஆதங்க வெளிப்பாடு அருமை நிவாஸ்.

அன்புரசிகன்
08-08-2010, 10:01 PM
நிவாஸின் கவிதை அதற்கு தகுந்த பின்னூட்டம் அதற்கு நிவாஸின் பதில் அதற்கு ஆக்கபூர்வமான பதில் என்று மட்டும் திரி பயணிக்கட்டும். மற்றவர்களின் விவாதங்கள் தனித்திரியில் பயணிக்கட்டும். இனியும் தொடர்ந்தால் ஆக்கபூர்வமற்றவை என்று கருதும் பதிவுகள் தனித்திரியாக்கப்படும். தேவையான நேரத்தில் தகுந்த நடவெடிக்கை எடுக்கப்படும். அனைவரும் மன்ற விதிகளுக்கு கட்டுப்பட்டே ஆகவேண்டும். தேவைப்பட்டால் மீள படிக்கலாம்.

Nivas.T
09-08-2010, 05:22 AM
தூங்குபவர்களாலும் விழித்திருப்பவர்களாலும் கனவுகள் காணப்படுகின்றன.

தூக்கத்தில் இருப்பதாகவும், விழிப்புடன் இருப்பதாகவும் நடிப்பவர்களால் கனவுகள் களவாடப்படுகின்றன.

என்னைப் பொறுத்தமட்டில் இதுதான் நிதர்சனம்... நிஜம்.

ஆ.... தங்கமே என்ற ஆதங்க வெளிப்பாடு அருமை நிவாஸ்.

களவாடிகளின் கரங்கள் அறுபடும்
கனவுகள் ஒருநாள் மீட்கப்படும்
நிச்சயம் மீட்கப்படும்

நன்றி திரு அமரன்

வியாசன்
10-08-2010, 08:42 AM
தூங்குபவர்களாலும் விழித்திருப்பவர்களாலும் கனவுகள் காணப்படுகின்றன.

தூக்கத்தில் இருப்பதாகவும், விழிப்புடன் இருப்பதாகவும் நடிப்பவர்களால் கனவுகள் களவாடப்படுகின்றன.

என்னைப் பொறுத்தமட்டில் இதுதான் நிதர்சனம்... நிஜம்.

ஆ.... தங்கமே என்ற ஆதங்க வெளிப்பாடு அருமை நிவாஸ்.

உங்கள் பின்னூடடம் யதார்த்தத்தை எடுத்துக்கூறுகின்றது நன்றி அமரன்.

ஓவியன்
10-08-2010, 09:39 AM
நம்பிக்கை ஒன்றுதான் ஈழத்தமிழர்களிடம் மிச்சமாக இருப்பது, அதுவும் இப்போது தன் கடைசி அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருக்கின்றதோ என எண்ணத் தோன்றுகிறது...

`அரசன் அன்று கொல்வானாம், தெய்வம் நின்று கொல்லும்` என்றொரு வழக்கு தமிழில் உண்டு.

பார்க்கலாம் தெய்வம் இன்னமும் எத்தனை காலத்துக்குதான் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்குமென...

ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த கவி வரிகளுக்கு மிக்க நன்றி நிவாஷ்..!!

meera
10-08-2010, 09:57 AM
ஈழத்தின் நிலை இறுகிய மனதையும் கசக்கி பிழியும். ஆனால் இதயம் இல்லாதவர்களிடம் நியாயத்தை எதிர் பார்க்கமுடியாது.

அரசியல் நடக்கவில்லை,வியாபாரம் நடக்கிறது.


இந்த நிலை மாறும். விரைவில் மலரும் சுதந்திர மலர்.

செழியன்
10-08-2010, 11:24 AM
உறவுகளே காலம் தவறிய கார்த்திகைப்பூவாக நாமும் ஒருநாள் மலர்வோம்

அன்புரசிகன்
11-08-2010, 02:59 AM
இந்த திரியில் தகுந்த பின்னூட்டங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இனியும் தேவையற்ற விவாதங்கள் தொடர்ந்தால் முன்னெச்செரிக்கை எதுவும் இன்றி எச்செரிக்கைப்புள்ளிகள் வழங்கப்படும். பின்னரும் தொடர்ந்தால் சம்பந்தப்பட்ட உறுப்பினர் அல்லது உறுப்பினர்கள் மன்ற விதிகளின் படி மென்தடை அல்லது நிரந்தர தடை செய்யப்படுவார் அல்லது செய்யப்படுவார்கள்.