PDA

View Full Version : எனக்காக ஒரு நிமிடம்!



Nivas.T
07-08-2010, 12:24 PM
அமைதி உறங்கிப்போன நகரம்!

ஆரவாரம் மட்டுமே விழித்திருக்கும் நரகம்!

வாழ்கையோ எந்திரமானது!

பணம் மட்டுமே உதிரமானது!

நிற்கவும் நேரமில்லை!

பார்க்கவும் நேரமில்லை!

ஏன் இந்த ஓட்டம்? ஏனோ இத்தனை வாட்டம்?

பேருந்துகள் நடைபிணம் சுமக்கும் வாகனமானது?

வாகனங்கலோ எமனாய் மாறிப் போனது!

ஓ! மனிதர்களே கடற்கரைக்கு மட்டும் ஏன் ஆறுநாள் விடுமுறை?

மரங்களை வெட்டிவிட்டு மழைக்காக காத்திருப்பவர்களே!!!

மனங்களை விட்டுவிட்ட பிணங்கலா நாம்?

ஏன் இப்படி? எங்கே ஓடுகிறோம்?

எதன் பின்னால் ஓடுகிறோம்? எதற்காக ஓடுகிறோம்?

எத்தனை நாள் ஓடுகிறோம்?

ஒரு நிமிடம்!, ஒரே ஒரு நிமிடம் யோசித்துபாருங்கள்!

வழக்கை சுகமாகும், அமைதி வரமாகும், இன்பம் வசமாகும்,

எனக்காக ஒரு நிமிடம்! ஒரே ஒரு நிமிடம்!!!!!.

அமரன்
07-08-2010, 12:38 PM
மரணத்தை விரட்டுகிறேன்..
மரணம் மிரண்டு ஓடுகிறது..
விடாது துரத்துகிறேன்..

ஒரு கட்டத்தில்
நின்று விடுகிறது மரணம்.
ஓடவே இல்லை நான்.

நான் விட்ட இடத்திலிருந்து
தொடர்கிறார் ஒருத்தர்..
ஓடாமல் இராது ஓட்டம் ..

********************************

கவிதையில் சுயநலம் செறிந்துள்ளது.
எனக்காக ஒரு நிமிடம்... சுயநலங்களின் திரட்டு.

ஓடனும்...
இரத்தோட்டம் மாதிரி!!!!!

பாராட்டுகள் நிவாஸ்.

Nivas.T
07-08-2010, 01:22 PM
ஓடி உழைப்பது தவறில்லை!
இரத்தோட்டமுள்ள மனிதனாய் ஓடு!

இயந்திரமாய் இராதே!
இயந்திரமாய் இருந்துவிட்டால்!

மனிதத் தன்மை மறைந்துவிடும்!
பாசம் கரைந்துவிடும்!
பண்பு பறந்து விடும்!
இனமே இறந்துவிடும்!

நன்றி அமரன் அவர்களே

Nivas.T
07-08-2010, 01:26 PM
கவிதையில் சுயநலம் செறிந்துள்ளது.
எனக்காக ஒரு நிமிடம்... சுயநலங்களின் திரட்டு.


:confused: :confused: :confused: :confused: :confused:

எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்
மனிதர்கள் மனிதத் தன்மையுடன் வாழ வேண்டும்
பணத்தைவிட மனிதன் மனிதனை மதிக்க வேண்டும் என்று நினைப்பது எப்படி சுயநலம் ஆகும் :)

அன்பு மிகுந்த உரிமையில் "எனக்காக" என்பது சுயனலச்செரிவு ஆகாது என்பது எமது கருத்து. :rolleyes:

அமரன்
07-08-2010, 01:38 PM
நிவாஸ்..

கவிதையில் நீங்கள் எடுத்தாண்ட மனிதச்செயற்பாடுகள் அத்தனையும் சுயநலத்தின் வெளிப்பாடுகள். நான், என், எனக்கு, எனக்காக என்பவற்றின் வடிப்புகள். இவற்றுள் தலையானது எனக்காக என்பது. அது தலைப்பானதை அப்படிச் சுட்டினேன்.

Nivas.T
07-08-2010, 02:12 PM
நிவாஸ்..

கவிதையில் நீங்கள் எடுத்தாண்ட மனிதச்செயற்பாடுகள் அத்தனையும் சுயநலத்தின் வெளிப்பாடுகள். நான், என், எனக்கு, எனக்காக என்பவற்றின் வடிப்புகள். இவற்றுள் தலையானது எனக்காக என்பது. அது தலைப்பானதை அப்படிச் சுட்டினேன். :sprachlos020:

:eek:

மிக்க நன்றி! மிக்க நன்றி! :)

:rolleyes: நான்தான் தவறாக விளங்கிக்கொண்டேன் :confused:

nambi
07-08-2010, 02:53 PM
கவிதை நன்று! பகிர்வுக்கு நன்றி!
(....''வழக்கை''...?)

Nivas.T
07-08-2010, 03:01 PM
கவிதை நன்று! பகிர்வுக்கு நன்றி!
(....''வழக்கை''...?)

நன்றி நம்பி

வாழ்க்கை என்பதை தவறாக புரிந்துகொண்டதன் விளைவுதான் இவை