PDA

View Full Version : எக்காலமும் நிலாக் காலம்



எஸ்.எம். சுனைத் ஹஸனீ
07-08-2010, 05:27 AM
நிலாக் கதைகள்
நிறையவே உண்டு
அனுவும் பிசகாமல்
அப்படியே
முழுதுமாய் சிலாகிக்கப்படும்
முழு நீள நிலாக் கதைகளும்,
சீரக இலவங்கப் பட்டைகளாய்
ஒப்புக்காய் அதன் ஓரம் கிள்ளி
சுவை கூட்டும்
ஒப்புமைக் கதைகளும்
எல்லா இலக்கியங்களிலும் உண்டு
பெரும்பான்மை
நவீன கருப் பொருட்களின்
முக்கியப் பொருட்கள்
இவைகளே,
நிலாக்களின்றி
எக்கவிதைகளும் சுகமடைவதில்லை
அவைகளின்றி
எக்காதலிகளும் அழகுறுவதில்லை,
அநேக அடக் குழந்தைகளை
அவைகள்தான் ஆற்றி தேற்றி
போஜனமிட்டிருக்கின்றன
அவர்களின் அம்மாக்களை விட,
இன்னமும் அரவமற்ற இரவினில்
தலைக்கு மேலான நிலாவில்
ரொட்டி தட்டும் பாட்டியை
தேடி கண்கள் ஆயும்,
சுற்றெங்கும் இருளடங்கிய
ஒற்றையடிப் பாதை மீதான
வழிப் போக்கனிடம்
அதன் கதை கேளுங்கள்
வீடு வரை அவன் தோள் பற்றி
அளவளாவிச் சேர்க்கும் அதன் கதையை
அர்ராத்திரி முழுதும் சொல்வான்
இன்று நிலாச் சோறிடும் போதும்
நாளை நிலாவில் சோறிடும் போதும்
நம் மேலான அதன் பிரதானத்துவங்களை
என்றென்றும் இழக்கப்போவதில்லை
அந்நிலாக்கள்.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

ஆதவா
07-08-2010, 05:45 AM
நேற்றுதான் இதேமாதிரி விஷயத்தை ஆதியும் நானும் பேசிக் கொண்டிருந்தோம். இன்று நீங்கள் கவிதை கொடுத்திருக்கிறீர்கள்.... எத்தனை தற்செயல் ஒற்றுமை பாருங்கள்!!!!

மச்சான்
07-08-2010, 06:13 AM
நல்ல கவிதை நண்பரே. பாராட்டுக்கள்.

கீதம்
07-08-2010, 10:16 AM
அழகு நிலா எனக்கு இன்னும் அழகு. (என் மகளின் பெயரல்லவா?)

கவிதை முழுவதும் நிலவொளி வழிந்து கிடக்கிறது. அந்த வழிப்போக்கனின் தோள் பற்றி அளவளாவிச் செல்லும் நிலா! கற்பனையே வெகு சுகமாக உள்ளது. மிகுந்த பாராட்டுகள், சுனைத் ஹஸனீ அவர்களே.

சுகந்தப்ரீதன்
08-08-2010, 11:21 AM
நீயின்றி நானில்லை...
நிலவின்றி நிலமில்லை..!!

எக்காலமும் நிலாக்காலம்... அர்த்தசெறிவுடன் கூடிய அழகிய தலைப்பு..!! வாழ்த்துக்கள் சுனைத் அண்ணா..!!

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
09-08-2010, 05:48 AM
அனைவரின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றிகள் தோழர்களே.