PDA

View Full Version : அங்காடி தெரு..



இன்பக்கவி
06-08-2010, 11:41 AM
http://files.stv.tv/img/articles/94032-gamesindias-beggars-eye-commonwealth-windfall-200.jpg
பாமரரும்
பணக்காரர்களும்
பணத்தை பணமாக
பாராமல்
பகட்டுக்காக சிலரும்
வறுமையிலும்
சுய கவுரவதிற்காய்
சிலரும்
எண்ணியதை வந்து
வாங்கி செல்லும்
ஒரே தெரு...

கோடிகள் புரளும்
நகரம்...
கூட்டமே உனக்கு ஓய்வே
இல்லையோ???
நினைக்க தோன்றும்
மனது...

தினமும் வியாபாரம்
சலிக்காமல் நடக்கும்
ஒரே தெரு...
பார்த்தவர்கள் கூட
படமாக்க தோன்றிய
ஒரே தெரு..

மங்கலத்துக்கும்
அமங்கலதுக்கும்
ஒரே கடையில்
துணி எடுக்கும்
ஒரே தெரு....

கண்டும் காணாமலும்
பல காரியங்கள்
நொடியில் நடந்தேறும்
ஒரே தெரு...

ஏனோ காண சகிக்கவில்லை
புழுவாய் ஊறி செல்லும்
மனிதனை....
கூட நெரிசலில்
ஊறி செல்லுகையில்
ஐயோ என கதறும்
மனது...

விலங்கினை காக்கும்
சமூகம்
ஏனோ இவரை மறந்தது...????

பரிதாபத்தில் சிலரும்
அருவருப்பில் சிலரும்
கடந்து போகையில்
என் மனம்
அங்கே இருந்து
நகர மறுக்கிறது...
நகர மறுத்தது மனமே..
என்னை நகராமல்
நகர்த்தி சென்றது
பெருங்கூட்டம்...


முன்னூறு கோடியை
ஐந்து நாளில்
அனாயாசகமாக செலவழித்த
தமிழ் மனிதர்களுக்கு
இந்த அவலங்கள் ஏனோ
கண்ணில் புலப்படவில்லை???


வாழ்வே பிடிக்கவில்லை
புலம்பத நாள் இல்லை..
எல்லாம் இருந்தும்
வாழ மறுக்கும்
கோழை நான்...
எதுவுமே இல்லாமல்
வாழ்ந்து துடிக்கும்
ஜீவனை காணுகையில்
ஏதோ ஒன்று என்னை
தலை குனிய வைக்கிறது...

சுகந்தப்ரீதன்
06-08-2010, 01:13 PM
என்னால் இயன்றவற்றை மாற்றக்கூடிய வல்லமையையும் இயலாதவற்றை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தையும் எனக்கு கொடு இறைவா என்று இத்தருணங்களில் வேண்டுவதை தவிர வேறுவழியில்லை..!! சுயகழிவிரக்கம் இங்கே தேவையில்லாதது என்றே தோன்றுகிறது..!!

நீண்டநாட்களுக்கு பிறகு கவியுடன் மன்றவந்த இன்பக்கவியை வரவேற்க்கிறேன்.. வாழ்த்துக்கள்..!!

மச்சான்
06-08-2010, 01:21 PM
மனதை நெருடிய பாடல் நண்பரே....! எல்லாம்வல்ல இறைவன் இப்படியும் சில படைப்புகளை படைத்து ஏன் அவர்களை சோதிக்கிறான்....? உருகாமல் இருக்க முடியவில்லை.

கலையரசி
06-08-2010, 01:26 PM
நம்மால் முடிந்தவரை அடுத்தவருக்கு உதவி செய்து வாழ வேண்டும். எல்லாவற்றையும் நம்மால் மாற்ற முடியாது. சிலவற்றை விரும்பியோ விரும்பாமலோ நாம் ஏற்றுக் கொண்டு தான் வாழ வேண்டியிருக்கிறது. அதற்காக வாழ்வை வெறுப்பதோ, வாழப் பிடிக்கவில்லை என்று புலம்புவதோ கூடாது.
நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

அமரன்
07-08-2010, 01:30 PM
எத்தனை முறை பார்த்துச் சலித்தாலும் சிலதை மட்டும் சலித்தெடுத்துப் பார்க்கிறது பாழாய்ப்போன மனசு.

பார்வை நீளும் தூரம்வரை கரங்கள் நீள வழி இல்லாததால் ஏற்படும் உளைச்சல் கவிதையாகி உள்ளது. தூர இருந்து இன்னொருவர் நோக்கி விரியும் விரலாகி உள்ளது கவிதை.

யாரை நான் குற்றம் சொல்ல.

கூட்டத்தோடு கூட்டமாக அடித்துச் செல்லப்படுவது நிதர்சனம்.

பாராட்டுகள் இன்பக்கவி.

இன்பக்கவி
07-08-2010, 05:19 PM
நன்றிகள் அனைவருக்கும்:icon_b:

வியாசன்
07-08-2010, 08:51 PM
இன்பக்கவி என்று பெயரை வைத்துக்கொண்டு மனதை நெருட வைத்துவிட்டீர்களே

எதுவுமே இல்லாமல்
வாழ்ந்து துடிக்கும்
ஜீவனை காணுகையில்
ஏதோ ஒன்று என்னை
தலை குனிய வைக்கிறது

மனிதநேயமின்மைதானே தலையை குனிய வைக்கின்றது. நெருட வைத்த கவிஞரே வாழ்த்துக்கள்