PDA

View Full Version : கொல்லி(வெள்ளி) விழா - இறுதிப் பாகம்!



தாமரை
05-08-2010, 03:17 PM
ம்ம்ம்

என்னடா ரைமிங்கா பேர் வச்சுட்டாரே, என்னச் சொல்லப் போறாரோ :icon_hmm: அப்படின்னு யோசிக்கறீங்களா..?

அது ஒண்ணுமில்லீங்க....

எங்க கல்லூரிக்கு வெள்ளி விழா...

1985 ல் ஒரு நர்சரிப் பள்ளியில் ஆரம்பிச்ச எங்க கல்லூரிக்கு இப்போ 25 வயசாகுதாம்.

இந்த ஜீலை மாதம் 21 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு பெரும் விழாவா கொண்டாடத் திட்டம் போட்டு இன்விடேஷன் அனுப்பிட்டாங்க..

அதில இறுதி நாள் முன்னாள் மாணவர்கள் (24 ஆம் தேதி) முன்னாள் மாணவர்கள் கூட்டம் போடறதாகவும், அதுக்கு சிறப்பு விருந்தினரா எங்கள் கல்லூரி மாணவரும் இன்னாள் புகழ் பெற்ற இயக்குனருமான கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் ஞான சம்பந்தன் ஆகியோர் இருப்பார்கள் என்றும் அழைப்பிதழ் கட்டியம் கூறிற்று..

ஆனா எங்க செட் மாணவர்களிடம் இருந்து பேச்சு மூச்சையேக் காணோம். நானும் இரண்டு மூணு பேரை தொலை பேசியில் தொடர்பு கொண்டேன்.

ம்ம்.. ஆமா தாமரை செய்யணும்.. பேசிகிட்டு இருக்கோம்.. நாளைக்கு மெயில் வரும்..

இப்படியே சில நாட்களாக பதில் வந்தது..

நான் வேற பெருமையா எங்க காலேஜ்ல வெள்ளி விழா.. கௌதம் மேனன் வர்ரார்.. ஆனையாக்கும் அம்பாரியாக்கும்னு வீட்ல நிறைய கதை விட்டு வச்சிருந்தேன்.. அந்த வீம்புக்காவது தனி ஆளா போக வேண்டிய கட்டாயம் என்னை உறுத்த ஆரம்பிச்சது..

வர்ரேன் அப்படின்னு உறுதி மொழிப் பத்திரம் அனுப்பியாச்சு...

இனி விதி விட்ட வழி...

தொடரும்.

ரங்கராஜன்
05-08-2010, 05:31 PM
ஹா ஹா ஹா கல்லூரிகளில் பழைய நண்பர்கள் சேருவது என்பது மிகவும் சவாரஸ்யமான விஷயம் தான் அண்ணா. ஆனால், பல பேர் வாழ்க்கையை திரும்பி பார்ப்பதே இல்லை, சிலர் திரும்பி பார்க்கிறார்கள் 60 வயதுக்கு அப்புறம் (உங்களை போல..), இன்னும் பலர் கல்லூரி முடிந்த ஒரே வருடத்தில் திரும்பி பார்த்து வாழ்க்கையையே வீண் அடித்துக் கொள்கிறார்கள்........

வயது அதிகமாக அதிகமாக, எதாவது ஒரு விதத்தில் நாம் அனைவரும் சிறுபிள்ளையாகி வருகிறோம்.....

சீக்கிரம் தொடருங்கள் உங்கள் கொல்லி கதையை:lachen001::lachen001::lachen001::lachen001:

தாமரை
06-08-2010, 02:19 AM
21 ஆம் தேதிதான் அந்தப் ஃபோன் வந்தது. பேசியது "பேஸ்"கர்.

அது ஒண்ணுமில்லீங்க. அவன் காலேஜ் ஆர்க்கெஸ்ட்ராவில பேஸ் கிடார் வாசிப்பான். அதான் அவன் பேர் "பேஸ்"கர்.

டேய், தாமரை சில்வர் ஜூப்லி வர்ரதானே... குரலில் ஆர்வம் பொங்க கேட்டான்..

"என்னத்தை சொல்றது.. நானும் ஈமெயில் ஃபோன் அப்படின்னு எல்லாத்துகிட்டையும் கேட்கறேன்.. ஒருத்தனும் என்ன செய்யலாம்னு வாயையே திறக்க மாட்டேங்கறான்.. " நான் சொல்ல

"இல்லைடா சென்னை மக்கள் பிளான் போட்டுட்டாங்க.. 24 ஆம் தேதி காலேஜ் போயிட்டு அன்னிக்கு சாயங்காலம் கொல்லி மலை போறோம். ஞாயிற்றுக் கிழமை மதியம் திரும்பி வர்ரோம்.. எம்.ஜி.ஆர் மெயில் அனுப்பலையா?" அவன் கேட்டான்.


சரி நான் நம்ம மண்டலத்தில இருக்கிற மக்களை கேட்டு யார் யார் வர்ராங்கன்னு மாலையில் சொல்றேன் என்றேன்.

கொல்லி மலை.. முன்னால் சேலம் மாவட்டத்தில் இருந்து இப்போது நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மலைப் பிரதேசம். ஊட்டி, கொடைக்கானல் ஏற்காடு இப்படி எல்லாம் வியாபாரத்திற்காக ஃபேஷன் ஷோ ரேம்ப் வாக் போட்டுக் கொண்டிருக்க... கிராமத்து அழகியாய் நவீன வசதிகள் எதுவும் இன்னும் புகாத மலை.

கொல்லிமலை என்றதுமே நினைவுக்கு வர்ரது என்னன்னா..

கொல்லிமலைத் தேன், தேன் சொட்டும் பலாப்பழங்கள், அன்னாசிப் பழங்கள், மலை வாழைப்பழம், ஆட்டுக்கால் கிழங்கு.. ஆகாச கங்கை அருவி, அறப்பளீஸ்வரர் கோவில், வல் வில் ஓரி, கிராம்பு, சீரகம், கொத்தமல்லி, சோம்பு, மிளகு, வெந்தயம், இலவங்கப் பட்டை, அன்னாசிப் பூ இப்படி பலவகைப்பட்ட ம்சாலா ஐட்டங்கள்..

கொல்லிமலை என்றால் கூடவே என் அப்பாவும் அம்மாவும் கூட ஞாபகம் வருவார்கள், அம்மாவோட பிறந்த ஊர் நாமக்கல்தான். நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவங்க தெருதான். சின்ன வயதில் கொல்லி மலை அடிவாரச் சந்தைகளுக்கு வண்டி கட்டிப் போய் மசாலா சாமான்கள் வாங்கி வந்த கதைகளை எத்தனையோ முறை சொல்லி இருக்கார்.

அப்பா வருஷா வருஷம் ஆடி மாசம் கொல்லி மலை போவார். போகும் போதே கோழி, அரிசி கூடவே நிறைய சாராயம் என எல்லாம் கொண்டு போவங்க அவரும் அவரின் நண்பர்களும். கொல்லி மலையில் குடிசைகளின் பரண்கள் வாடகைக்கு கிடைக்குமாம். குடிசை வாசிகளே சமைத்தும் தருவார்களாம். கும்பலா போய் ஆகாச கங்கை நீர்வீழ்ச்சியில் குளிச்சிட்டு கொல்லி மலையின் மடியில் கூடிக் கூத்தடித்து விட்டு இரண்டு மூணு நாள் கழிச்சு தான் வருவாங்க. வரும் பொழுது அன்னாசி, பலாப்பழம், மசாலா ஐட்டங்கள் என நமக்கெல்லாம் அல்வா வாங்கி வந்து கொடுத்திருவாங்க..

இன்னொரு விஷயத்துக்காகவும் எங்க அப்பா கொல்லி மலை போவார். அது மூலிகை பறிக்க.

எங்க பங்காளி வகையறாவில் அப்பாவுக்கு அண்ணன் முறையில் விஸ்வநாதன் அப்படின்னு ஒருத்தர் இருக்கார். அவரோட தொழிலே ஜோஷியம், நாட்டு வைத்தியம், மாந்தரீகம் தான். எங்க அப்பாவுக்கு அவர் ரசமணி (பாதரசத்தை மூலிகை சேர்த்துக் கட்டி, உருண்டையான உலோகக் குண்டா மாத்தி) செய்து கொடுத்திருக்கார். அதில் வேர்வை பட்டால் விபூதி வரும் (ஹி ஹி).

அவரும் அப்பாவும் மூணு மாசத்துக்கு ஒரு முறை சேர்வாராயன் மலை, கொல்லி மலை, கல்ராயன் மலை, வையப்ப மலை இப்படிப் பல மலைகளுக்கு மூலிகை பறிக்கப் போவாங்க. (சில சமயம் எனக்குக் குறிஞ்சிப் பூ கூட பறிச்சு வந்து கொடுத்திருக்காங்க) இப்படி அப்பா ஊரா ஊரூரா சுத்தறதும் எங்களுக்கு அல்வா குடுக்கறதுமா இருந்த காலம் போய் நாம ஊர் சுத்தற காலம் வந்தாச்சு..

எங்க மூத்த அண்ணன் கூட தன்னோட கல்யாணத்திற்கான பேச்சுலர் பார்ட்டியை கொல்லிமலையில் தான் நடத்தினார். 36 கோழியை எண்ணி எண்ணி வண்டியில் ஏத்திய (மூணு நாளைக்காம்) என் மனசில் அந்த ஃப்ரேம் அப்படியே ரீவைண்ட் ஆகி ஆகி கீறல் விழுந்த ரிகார்டு மாதிரி திரும்பத் திரும்ப.. திரும்பத் திரும்ப வரும்..

கொல்லி மலை என்றவுடன் மனசில சிலுசிலுப்பு வரக் காரணம் புரிஞ்சிருக்குமே.. கொல்லி மலையில் மொத்தம் 72 கொண்டை ஊசி வளைவுகள் என்று படிச்சிருக்கேன் கேட்டிருக்கேன். அங்கே வாழும் மலையாளிகளின் விருந்தோம்பலும் கேள்விப்பட்டிருக்கேன்.. மாசு படாத காற்றும் மனங்களும் எனக்கு ரொம்பவே பிடிக்கும்.. அதை நினைச்ச உடனே புத்துணர்வு பெருக ஆரம்பிச்சிட்டது..

உடனே முதலில் "தகதகா" வாசுவுக்கு ஃபோன் செஞ்சு மேட்டர் சொன்னேன். ஒரு கம்பெனியைச் சுமக்கும் அவனால் உடனடியா முடிவெடுத்து ஒண்ணுமே சொல்ல முடியலை.. இரவு சொல்றேண்டா என்னான்..

அப்புறம் நாடிராஜை நாடினேன். அவனோ ஓடினான்..

இப்படி ஒவ்வொருத்தரா(பாலகுமார், விஜய குமார், சுப்பிரமணி...) கழண்டு கொள்ள.. கடைசியா பெரிசோட பேசினேன்..

பெரிசு அலையஸ் பெரியசாமி என்னோட அப்பாவி குரூப் நண்பர்களில் ஒருத்தன். நம்ம மாவட்டமா இருந்து நாமக்கல் மாவட்டமா மாறினவந்தான்..

பெரிசை நினைச்சா எனக்குப் பெரிய சிவலிங்கமும் கோவணமும்தான் ஞாபகம் வரும்.. ஏன் தெரியுமா?


தொடரும்

அன்புரசிகன்
06-08-2010, 02:37 AM
இன்டரஸ்டிங்................ தொடருங்கள்...

ஆதவா
06-08-2010, 04:31 AM
ஆஹா... ட்ரிப் கட்டுரையா;.. சூப்பர்... தொடருங்கள். பின்னாடியே வாரொம்.

Akila.R.D
06-08-2010, 04:57 AM
அனுபவங்களை கேட்க ஆர்வமாக உள்ளோம்..
தொடருங்கள்...

பூமகள்
06-08-2010, 05:16 AM
ஹ்ம்ம்... எனக்கு கொல்லி மலை பார்க்கனும்னு ரொம்ப நாள் ஆசை. உங்க மூலமா இப்ப பார்த்துக்கறேன்.. தொடருங்கள் அண்ணா. :)

மதி
06-08-2010, 05:21 AM
கொல்லிமலை எனக்கு நெருக்கமான ஊர்.. அடிவாரத்திற்கு அருகில் தான் பூர்வீகம். அப்போல்லாம் ப்ரேக்ஃபாஸ்ட்டுக்கு நானும் என் தம்பியும் ஒரேஒரூ பழம் தான் சாப்பிடுவோம்.. எப்படியும் முந்நூறு நானூறு சுளைகள் இருக்கும்.. :lachen001::lachen001:

அன்புரசிகன்
06-08-2010, 06:08 AM
கொல்லிமலை எனக்கு நெருக்கமான ஊர்.. அடிவாரத்திற்கு அருகில் தான் பூர்வீகம். அப்போல்லாம் ப்ரேக்ஃபாஸ்ட்டுக்கு நானும் என் தம்பியும் ஒரேஒரூ பழம் தான் சாப்பிடுவோம்.. எப்படியும் முந்நூறு நானூறு சுளைகள் இருக்கும்.. :lachen001::lachen001:
ப்பலாப்.......................பழமா................ காலையிலா.................... :eek:

தாமரை
06-08-2010, 06:35 AM
1986 ல் நடந்த நிகழ்ச்சி அது. பெரிசும் நானும் ஹாஸ்டலில் ஒரே ஹாலில் தங்கி இருந்தோம். பெரிசோட வீடு என்னோட மூத்த அக்காவோட வீட்டில் இருந்து 2 கிலோமீட்டர்தான். அவன் வீட்டுக்கு வர அடையாளம் கேட்டபோது.. சக்கராம் பாளையத்தில ரோட்டோரமா பெரிய சிவலிங்கம் இருக்கே, அதன் பக்கத்தில் தான் என்று சொல்லி இருந்தான். அக்கா கல்யாணத்திற்கு பின்னாடி வழக்கமா பரீட்சை லீவுக்கு அக்கா ஊருக்குத்தான் போவோம்.

இந்த முறை அண்ணனையும் மாமாவையும் அழைச்சிகிட்டு பெருமையா பெரியசாமியைப் பார்க்கப் போனேன்.

பெரிய சாமி வயலுக்கு போயிருக்கறதா அவங்க அம்மா சொன்னாங்க. அப்பதான் கறந்த பசும் பாலில் திக்கா டீ போட்டுக் குடுத்தாங்க. பேசிகிட்டு இருக்கும் போது

ஏரைத் தோளில் தூக்கிகிட்டு கோவணத்தோட வந்தான் பெரியசாமி. இவன் தான் பெரிய சாமி அப்படின்னு சொல்லக்கூட எனக்குக் கூச்சமா இருந்தது. வந்தவன் நல்ல வேளையா உடனடியா கிணத்தடிக்குப் போய் குளிச்சிட்டு சட்டை வேட்டியோட வந்தான். ரொம்ப நேரம் பேசிகிட்டு இருந்தோம்..

பெரிசுன்னாவே அந்தக் கோலம்தான் இன்னும் கண்ணில் நிக்குது. பெரிசு நான் ஊருக்குப் போறேன். ஆண்டளூர் (சேலம் - நாமக்கல் சாலையில் பாதி வழி) கேட்கிட்ட வந்து என்னை பிக்கப் பண்ணிக்குங்க அப்படீன்னான்.

அப்புறம் பாஸ்கர் கிட்ட சொன்னேன். பாஸ்கர் மந்திராவாதி மகாதேவனும் நம்ம கூட வர்ரேன்னு சொன்னான் அப்படின்னான்.

எனக்கு ஷாக்.. மகாதேவன் மன்னார்குடி காலேஜ்ல இல்ல இருக்கான் இங்க எப்படி?

வந்து ஆறுமாசமாச்சாம். என்றான்

கடைசியா நான், பாஸ்கர், மகாதேவன் மூணு பேரும் பெங்களூரிலிருந்து கிளம்பி வழியில் பெரிசை பிக்கப் பண்ணிக்க ஏற்பாடு.

இன்னும் யார் யார் வர்ராங்க?

இந்தக் கேள்விக்கு மதியம் "பாச்சா"வோட பேசினதில் கொஞ்சம் விடை கிடைச்சது..

சென்னையில் இருந்து சுந்தர், "ஆப்பு" உமாசங்கர். "புல்டாக்" கண்ணன், "அஞ்சு ரூபா" செந்தில், "கருத்த பாண்டியன்" திருநடனசிகாமணி, ராஜகணபதி, "ஆமை" தியாகு, எம்.ஜி.ஆர், பாஷா, "டிரம்ஸ்" சுதர்சன் இவங்க எல்லாம் வர்ராங்க.. கொல்லி மலையில் ரிசார்ட் புக் செய்தாச்சு எனத் தகவல் வந்தது.

மேலும் ஆள்சேர்க்க எடுத்துகிட்ட முயற்சி பலிக்கலை.

முதல்ல இன்னோவா எடுக்கலாம் என்ற ஆசை இருந்தது. பாஸ்கருக்கு ஃபுட்பால் ஆடி முட்டி வலி என்பதால் கடைசியில் என் காரையே எடுத்திடலாம்னு முஇவு பண்ணினோம்.

24 ஆம் தேதி காலை 2:00 மணிக்கு எழுந்து அண்ணிக்குப் பிரியா விடை கொடுத்திட்டு எங்க வீட்டுச் சாலைக்கு அந்தப்பக்கம் இருக்கும், இதுவரை நான் போகவே போகாத பாஸ்கர் வீட்டுக்குப் போனேன்..

பாஸ்கர் தயாரா இருந்தான். மந்திரவாதி மகாதேவன் வரலையாம். ஒரத்த நாட்டில வேலை இருக்குன்னு கழண்டுகிட்டான்.

பெரிசோட பிளானும் மாறிப் போச்சி..

தொடரும்

அன்புரசிகன்
06-08-2010, 06:40 AM
அட. அந்த புல்டோக் அஞ்சுரூபா கதையையும் சேர்த்துக்குங்கோ............. உங்க பெருசு வந்த கோலத்த படிக்கும் போது நம்ம ஓவியன நினைச்சுப்பார்த்தேன். சிப்பு வந்திடிச்சு சிப்பு... (அவர் நம்மள ஹீரோ ஹொண்டாவில் அரை மணிநேரமா அவரோட வயல சுற்றி காட்டினவர்)

மதி
06-08-2010, 06:57 AM
ப்பலாப்.......................பழமா................ காலையிலா.................... :eek:
:D:D:D

அதெல்லாம் ஒரு காலம்... ம்ம்ம்

மதி
06-08-2010, 07:03 AM
அட. அந்த புல்டோக் அஞ்சுரூபா கதையையும் சேர்த்துக்குங்கோ............. உங்க பெருசு வந்த கோலத்த படிக்கும் போது நம்ம ஓவியன நினைச்சுப்பார்த்தேன். சிப்பு வந்திடிச்சு சிப்பு... (அவர் நம்மள ஹீரோ ஹொண்டாவில் அரை மணிநேரமா அவரோட வயல சுற்றி காட்டினவர்)
ஹீரோ ஹோண்டாஆஆஆஆஆ:cool::cool::cool:

தாமரை
06-08-2010, 07:06 AM
புல்டாக்கிற்கு அவரோட ஃபேஸ்கட்டினால அந்தப் பேர்வந்தது, அஞ்சு ரூபா கதையே தனி.. அவர் பாக்கெட்டில எப்பவும் அஞ்சு ரூபா மட்டும் இருக்கும். தினம் அஞ்சு ரூபாய் எடுத்துகிட்டு காலேஜ் வந்தா காஃ-பீடீ அப்படின்னு அந்த அஞ்சு ரூபா சரியா இருக்கும்.

அஞ்சு ரூபாயை வச்சுகிட்டே நாளை ஓட்டிடுவார். அதான் அஞ்சு ரூபா...

செல்வா
06-08-2010, 08:39 AM
அறிஞர் அண்ணாவோட பாத்திரப் படைப்புகள் பெரும்பாலும் பட்டப் பெயர்களோடே இருக்கும்.
ஈரோட்டிலருக்கும் போது கொல்லிமலைக்குப் போகணும்னு பேசி்க்கிட்டதுண்டு. ஆனால் வாய்ப்பு வந்ததில்ல.பண்ணாரி, ஹாசனுர், கொடிவேறி யோட முடிஞ்சிடுச்சு. உங்க கொல்லிமலை அனுபவங்கள் தெரிஞ்சுக்க ஆர்வமாருக்கு. தொடருங்கோ...

அன்புரசிகன்
06-08-2010, 08:48 AM
புல்டாக்கிற்கு அவரோட ஃபேஸ்கட்டினால அந்தப் பேர்வந்தது, அஞ்சு ரூபா கதையே தனி.. அவர் பாக்கெட்டில எப்பவும் அஞ்சு ரூபா மட்டும் இருக்கும். தினம் அஞ்சு ரூபாய் எடுத்துகிட்டு காலேஜ் வந்தா காஃ-பீடீ அப்படின்னு அந்த அஞ்சு ரூபா சரியா இருக்கும்.

அஞ்சு ரூபாயை வச்சுகிட்டே நாளை ஓட்டிடுவார். அதான் அஞ்சு ரூபா...
1960ம் ஆண்டிலேயே 5 ரூபா தினம் செலவழிப்பவர் என்றால் அவர் பெரிய பணக்காரர் தான். :D

தாமரை
06-08-2010, 08:50 AM
1960ம் ஆண்டிலேயே 5 ரூபா தினம் செலவழிப்பவர் என்றால் அவர் பெரிய பணக்காரர் தான். :D

ஆமாம்பா ஆமாம். .அவன் அஞ்சு ரூபா நோட்டுக் கட்டு வச்சிருப்பான். தினம் அஞ்சு ரூபா அதில் இருந்து எடுத்துகிட்டு வருவான். ஆனாலும் உங்களுக்குப் போங்குதான். கல்லூரி ஆரம்பிச்சதே 1985 ல திரி ஆரம்பத்தில சொல்லிட்டேன்.. உங்களுக்கு பொறாமை ஏற ஏற என் வயசையும் ஏத்தப்பாக்கறீங்களா?

அன்புரசிகன்
06-08-2010, 08:53 AM
ஆனாலும் உங்களுக்குப் போங்குதான். கல்லூரி ஆரம்பிச்சதே 1985 ல திரி ஆரம்பத்தில சொல்லிட்டேன்.. உங்களுக்கு பொறாமை ஏற ஏற என் வயசையும் ஏத்தப்பாக்கறீங்களா?
அடச்சே...... அவசரத்தில அந்த வருசத்த பார்க்க மறந்துட்டனே............

போங்கு.. புதுச்சொல்லு. இன்று தான் கேள்விப்படுகிறேன். போங்கு என்பதன் மறுபதம்..??? (அத தெரிஞ்ச சொல்லா சொல்லுங்க...:lachen001:)

தாமரை
06-08-2010, 08:56 AM
அடச்சே...... அவசரத்தில அந்த வருசத்த பார்க்க மறந்துட்டனே............

போங்கு.. புதுச்சொல்லு. இன்று தான் கேள்விப்படுகிறேன். போங்கு என்பதன் மறுபதம்..??? (அத தெரிஞ்ச சொல்லா சொல்லுங்க...:lachen001:)

http://www.tamilmantram.com/vb/showthread.php?p=378797&highlight=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81#post378797

இங்க போய் படிங்க

தாமரை
06-08-2010, 09:39 AM
பெரிசோட பிளான் எப்படி மாறிச்சுன்னுதானே யோசிக்கறீங்க. ஒண்ணுமில்லை. பெரிசு ஊருக்கு போகலை. ஹொசூரிலேயே பிக்கப் செய்ய சொல்லிட்டான்.

காலை 3:00 மணிக்கு பயணம் இனிதே தொடங்கியது. ஹொசூரில் பெரிசை 4:00 மணிக்கு பிக்கப் செய்தோம்.

பயண நேரத்தில கொஞ்சம் கொல்லி மலையைப் பற்றித் தெரிஞ்சுக்கலாமே..

கொல்லி மலை கிழக்கு தொடர்ச்சி மலைகளில் சேர்வராயன் மலை, கல்ராயன் மலைகள் தாண்டி கொல்லிமலை இருக்கிறது.

கொல்லிமலையில் அரிய வகை மூலிகைகளும், தாவரங்களும் நிறைந்துள்ளது. மேலும், அகத்தியர், பாம்பாட்டி, கோரக்கர், சிவவாக்கியர், காலிங்கநாதர், கருவூரார், போகர், கொங்கனர், பெண் அவ்வையார் என 18 சித்தர்கள் வழிபாடு நடத்திய ஸ்தலம் எனவும் கொல்லிமலை சிறப்பு பெற்றுள்ளது.கொல்லிமலை சதுரகிரி என்றும், அறப்பளீஸ்வரர் சதகத்தில் அறம் வளர்த்த நாயகி என்றும் 63 நாயன்மார்களில் ஒருவரான அப்பரால் பாடல் பெற்ற வைப்புத்தலமாகவும் விளங்குகிறது.கடல் மட்டத்திலிருந்து 1,300 மீட்டர் உயரமும், 280 கிலோ மீட்டர் சதுர பரப்பளவும் கொண்டது.

அறப் பள்ளி ஈஸ்வரன் - ஈசனே இங்கு ஈகை குணத்தோட அறப்பள்ளி நாயகனாக இருக்க அறம் வளர்த்த நாயகியாய் அம்மை இருக்க.. வல் வில் ஓரியின் வள்ளல் தன்மைக்கு ஊற்றுகண்ணாக இருப்பது புரியுமே.

இக்கோயிலுக்குப் பக்கத்தில் "மீன்பள்ளி" ஆறு ஓடுகிறது. இம்மீன்பள்ளியாற்றில், இறைவன் மீன்களின் வடிவில் விளங்குவதாக ஐதீகம். இக்கோயில் ' மீன் கோயில் ' என்றும் அழைக்கப்படுகிறது. எனவே மீன்களுக்கு பழம், தேங்காய் வைத்துப் படைத்து, அவற்றுக்கு உணவு தரும் பழக்கம் பண்டை நாளில் இருந்து வந்துள்ளது.

கொல்லி மலையில் அறப்பளீஸ்வரர் கோயிலுக்கு அருகில் ஆகாய கங்கை அருவி அய்யாறு ஆற்றின் மீது உள்ளது. 200 அடி உயரமுடைய இந்நீர் வீழ்ச்சியில் குளித்தால் செய்த பாவங்கள் நீங்கும் என்று நம்பப் படுகிறது. இந்த நீர்வீழ்ச்சியை அடைய சுமார் 760 படிகட்டுகள் கீழிறங்கிச் செல்ல வேண்டும். ஒரு கிலோ மீட்டர் தூரம் கீழே இறங்க வேண்டும். (அப்படின்னா படிகள் எப்படி நெத்துகுத்தலா இருக்கும்னு புரிஞ்சிக்கோங்க.)

இரசாயனம் சாராமலும் மாசு இல்லாமலும் இயற்கையாக வளரும் மூலிகைகள் இன்று மலைப் பிரதேசங்களிலே கிடைக்கின்றன. கொல்லி மலையும் ஒன்று. கொல்லிமலையின் தட்ப வெப்பமும், மண்வளமும், மூலிகை வளர ஏதுவாகின்றன. இங்குள்ள மூலிகைகளின் மருத்துவப் பயன்கள் அதிக வீரியம் கொண்டவையாக உள்ளன.

கொல்லிமலை 17 மைல் பரப்பளவிற்கு விரிந்து படர்ந்த அடர் மூலிகை காடுகளுடன் தனித்து ஒரு அமானுஷ்யமாக விளங்குகிறது.

2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க காலத்து புலவர்களால் பாடப்பெற்ற சிறப்புடைய கொல்லிமலையில் மிளகு, பலா, அன்னாசி, தேன், வாழை, நெல், கொய்யா, பப்பாளி, பட்டை போன்ற பயிர்கள் பரவலாக எங்கும் செழித்து வளர்ந்து காணக் கிடைக்கிறது. கல்பகாலம் தொட்டு ஏராளமான சித்தர்களும், முனிவர்களும் தொடர்ந்து வாசம் புரிந்து வந்த கொல்லிமலையின் மூலிகை வளம் குறிப்பிடப்பட வேண்டியது. கருநெல்லி, கருநொச்சி, ஜோதிப்புல் உள்ளிட்ட அரிய மூலிகைகள் இங்கு கிடைக்கிறது.

கொல்லிமலையின் புகழுக்கு மற்றுமொரு காரணமாக விளங்கும் ‘கொல்லிப்பாவை‘ பற்றி பல கதைகள் நிலவுகின்றன. அசுரர்கள் தேவர்களை எதிர்த்து போரிட வந்தபோது, அசுரர்களை தடுத்து நிறுத்த தெய்வ தச்சன் ஆகிய மயன் என்பவன், கண்ணையும் கருத்தையும் கவர்ந்து காமத்தை ஏற்படுத்தி மயக்கி கொல்லவல்ல அழகிய பாவையின் படிமத்தினை செய்து வைத்தான். தனது அழகினால் மயக்கி அசுரர்களை கொன்று வந்த அப்பாவை ‘கொல்லிப்பாவை‘ என பெயரிட்டு அழைக்கப்பட்டதாக கருதப்படுகிறது. அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய சங்க இலக்கியங்களில் கொல்லிப்பாவை பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளது.


கடையெழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி கொல்லிமலையையும் அதனை சூழ்ந்திருந்த நிலப்பரப்புகளையும் அரசாண்டு வந்திருக்கிறான். ஒரே அம்பில் ஐந்து விலங்குகளை அடிக்கும் வல்லமை பெற்ற ஓரி..

அதெல்லாம் சரி... இன்னும் எதாச்சும் புதுசா?

கொல்லி மலையில் வனவிலங்குகளும் அதிகம். இங்கிருக்கும் கரடிகள் பலாப்பல மரத்தில் ஏறி பழத்தைப் பறித்து தொபீர்னு கீழ போடுமாம். கீழே விழுந்து சிதறிய பழத்தை முடிந்த வரை தின்னுட்டு மிச்ச்த்தை அப்படியே விட்டுட்டுப் போயிடுமாம். அவ்வளவு ருசியாக சரியான அளவு பழுத்த பழங்களை நாம தேடித் தேடி அலைஞ்சாலும் கிடைக்காதும்பாங்க.

சீக்குப்பாறை, தற்கொலை முனை, கொல்லிப்பாவை கோயில், சித்தர் குகைகள் என்று மர்மங்களை அதிகப்படுத்தி கதைகளுக்கு கரு கொடுக்கும் இடங்கள் கொல்லி மலையில் நிறையவே உண்டு...

‘முடவாட்டு கால்‘ என்பது கொல்லிமலை பாறைகளுக்கு இடையில் விளையும் ஒரு கிழங்கு வகை ஆகும். பார்ப்பதற்கு ஆட்டின் கால்களை போலவே இருக்கும் இந்த கிழங்கை நீரிலிட்டு வேக வைத்து, மிளகு கலந்து குடித்தால் ஆட்டு கால் சூப் குடிப்பது போல அதே மணத்துடன் இருக்கிறது. மூட்டு சம்பந்தமான உபாதைகளுக்கு இது மிகவும் சிறந்த மூலிகை மருந்தாக கூறப்படுகிறது.

இங்கு கிடைக்கிற ஆட்டிறைச்சியும், நாட்டு கோழி இறைச்சியும் கூட கோழிகளும் ஆடுகளும் மூலிகை தழைகளை உண்பதால் மிகவும் சுவையாக இருக்கும்.

எல்லாவற்றையும் விட முக்கியமான குறிப்பு கொல்லிமலையில் மர்ம பிரதேசங்கள் நிறைய இருக்கிறது. ஏற்கனவே வாழ்ந்த சித்தர்களின் வசிப்பிடங்கள் அவை என கூறப்படுகிறது.

ஆமாம் முன்னால் நான் மலையாளிகள் என்று சொல்லி இருந்தேனில்லையா? அப்படின்னா மலையாளம் பேசுபவர்கள் என்று நினைச்சுக்காதீங்க. அவர்கள் மலைவாழ் மக்கள். இவர்க்ளோட தொழில் காடுகளில் கிடைக்கிற கனி. மூலிகை, மசாலா வகைகளை சேகரிச்சுகிட்டு வந்து சந்தைகளில் விற்பது. சனி மற்றும் புதன் கிழமைகளில் காலை 5 மணிக்குச் சந்தை ஆரம்பமாகும். 9 மணிக்கே எல்லாத்தையும் வித்துட்டுப் போய்கிட்டே இருப்பாங்க.

கொல்லிமலையில் கிராமங்கள் அதிகம். செம்மேடு என்ற இடத்தில் இரண்டு தங்கும் விடுதிகளும், ஒரு அரசு காட்டேஜூம் இருக்கு. தேவயானதை எல்லாம் கீழ இருந்தே கொண்டு போயிடணும்.


ம்ம்ம்.. மூச்சு விட்டுக்குங்க மிச்சம் திங்கள் கிழமை எழுதறேன்

தாமரை
06-08-2010, 09:51 AM
ஹ்ம்ம்... எனக்கு கொல்லி மலை பார்க்கனும்னு ரொம்ப நாள் ஆசை. உங்க மூலமா இப்ப பார்த்துக்கறேம்.. தொடருங்கள் அண்ணா. :)

கொல்லிமலை - இப்படித்தான் இருக்கும். பாத்துகிட்டீங்களா? :icon_b:

தாமரை
06-08-2010, 09:52 AM
கொல்லிமலை எனக்கு நெருக்கமான ஊர்.. அடிவாரத்திற்கு அருகில் தான் பூர்வீகம். அப்போல்லாம் ப்ரேக்ஃபாஸ்ட்டுக்கு நானும் என் தம்பியும் ஒரேஒரூ பழம் தான் சாப்பிடுவோம்.. எப்படியும் முந்நூறு நானூறு சுளைகள் இருக்கும்.. :lachen001::lachen001:

நான் 2 பலாப்பழங்கள் 10 அன்னாசிப் பழம் இரண்டு கிலோ ஆட்டுக்கால் கிழங்கு வாங்கிட்டு வந்தேன்... எல்லாம் காலி..கிழங்கைத்தவிர..

தாமரை
06-08-2010, 09:56 AM
அறிஞர் அண்ணாவோட பாத்திரப் படைப்புகள் பெரும்பாலும் பட்டப் பெயர்களோடே இருக்கும்.
ஈரோட்டிலருக்கும் போது கொல்லிமலைக்குப் போகணும்னு பேசி்க்கிட்டதுண்டு. ஆனால் வாய்ப்பு வந்ததில்ல.பண்ணாரி, ஹாசனுர், கொடிவேறி யோட முடிஞ்சிடுச்சு. உங்க கொல்லிமலை அனுபவங்கள் தெரிஞ்சுக்க ஆர்வமாருக்கு. தொடருங்கோ...

பட்டம் கொடுப்பது ஒரு வகையில் காசு கொடுக்காம கௌரவம் கொடுப்பது.. ஒவ்வொருத்தருக்கும் பட்டம் இருக்க வேண்டும் என்பது பெரியார் / அண்ணா கொள்கைகளில் ஒண்ணு..

நமக்குக் கூட பட்டங்கள் கொடுத்தாங்க இல்லையா மன்றத்தில....

நாம பட்டத்தைப் பெருமையா போட்டுகிட்டா நான் குடுத்த பட்டமாக்கும்னு சிலர் பெருமை பட்டுக்கிறாங்க.. ஆக கொடுப்பவரையும் வாங்குபவரையும் சந்தோஷமும் பெருமையும் பட வைப்பது பணம் இல்லீங்க. பட்டம்தான்.. :icon_b:

ஆதவா
06-08-2010, 10:36 AM
கொல்லிமலை பூர்வீகம் தெரிந்தது. அதிலும் அந்த பட்டபெயரெல்லாம் சூப்பருங்கோ!!
ஒரு மலையைப் பத்தி இவ்வளவு விவரம் சேகரிச்சு வெச்சிருக்கீங்க... நாங்கல்லாம் போனா.... சைட் அடிக்கிறதோட சரி... ரொம்ப பிடிச்சிருந்தா பேரைத் தெரிஞ்சுக்குவோம்!!!

தாமரை
06-08-2010, 10:43 AM
கொல்லிமலை பூர்வீகம் தெரிந்தது. அதிலும் அந்த பட்டபெயரெல்லாம் சூப்பருங்கோ!!
ஒரு மலையைப் பத்தி இவ்வளவு விவரம் சேகரிச்சு வெச்சிருக்கீங்க... நாங்கல்லாம் போனா.... சைட் அடிக்கிறதோட சரி... ரொம்ப பிடிச்சிருந்தா பேரைத் தெரிஞ்சுக்குவோம்!!!

போற எடத்தில நமக்கு நிறைய தெரியும்னு பீலா விட வேணாமா? அதுக்காகவாவது தெரிஞ்சி வச்சுக்கறதுதான்.


இன்னும் காசி யாத்திரை எழுதணும். அது வேற பாக்கி இருக்கு..

செல்வா
06-08-2010, 10:48 AM
என்ன ஆதவா... திக் திக் பயணம் மாதிரி.. கொல் கொல் பயணம் போலாமா? :)

கொல்லிமலை போக வேற எந்த விசாரணையும் செய்யவேண்டாம் போலருக்கே... :)

தாமரை
06-08-2010, 10:49 AM
என்ன ஆதவா... திக் திக் பயணம் மாதிரி.. கொல் கொல் பயணம் போலாமா? :)

கொல்லிமலை போக வேற எந்த விசாரணையும் செய்யவேண்டாம் போலருக்கே... :)

விசா வேணாம்.. ரணை வேணும்னா நான் கூட வர்ரேன். :aetsch013::aetsch013::aetsch013::aetsch013:

ஆதவா
06-08-2010, 10:51 AM
மந்திராவாதி மகாதேவனும்


மந்த்ரா கோவிச்சுக்கப்போறாங்க.. :D

தாமரை
06-08-2010, 10:53 AM
கோவிச்சுகிட்டாலும் அழகுதானே!!:aetsch013:

ஆதவா
06-08-2010, 10:58 AM
என்ன ஆதவா... திக் திக் பயணம் மாதிரி.. கொல் கொல் பயணம் போலாமா? :)

கொல்லிமலை போக வேற எந்த விசாரணையும் செய்யவேண்டாம் போலருக்கே... :)

’கொல்’லிமலைதானுங்க.... ஊருக்கு வந்துட்டு கூப்பிடுங்க.. போலாம்!!!! (சிங்கம் சிக்னல் காட்டியாச்சு!!)

அமரன்
07-08-2010, 12:18 PM
உங்க கட்டுரைகளின் ருசியே தனிதான். அனைத்தும் அடங்கி இருக்கும்.

அந்த விபூதி மேட்டரைத் தெரிஞ்சுமா உங்க வீட்ல ஒருத்தரும் ஆசிரமம் ஆரம்பிக்கல.

தாமரை
10-08-2010, 11:32 AM
உங்க கட்டுரைகளின் ருசியே தனிதான். அனைத்தும் அடங்கி இருக்கும்.

அந்த விபூதி மேட்டரைத் தெரிஞ்சுமா உங்க வீட்ல ஒருத்தரும் ஆசிரமம் ஆரம்பிக்கல.

எங்க அப்பாவோட அப்பா, அம்மா இரண்டு பேரும் கடைசி காலத்தில் தீட்சை வாங்கி சாமியார்களா வாழ்ந்தவங்கதான்..

ஆசிரமம் ஆரம்பிக்கத்தான் நிறைய எழுதி ஆஸ்தி சேர்த்துகிட்டு இருக்கமில்ல.

கூடிய சீக்கிரம் ஆரம்பிச்சிருவோம்..

தாமரை
10-08-2010, 11:50 AM
போகிற வழியில் தமிழ்மன்றம் பற்றியும், இங்கே நான் ஆடற ஆட்டத்தை பற்றியும் விலாவரியா பா(பே)ஸ்கருக்கும், பெரிசுக்கும் சொல்லிகிட்டே போனேன். திருச்சியை அடைந்த போது காலை ஏழரை மணி. (ஏழரை எப்பவோ வந்தாச்சுன்னு ஆதவா புலம்பறது எனக்குக் கேட்டிருச்சி).

ஹோட்டல் நியூ குறிஞ்சிக்கு அருகில் காரை நிறுத்திட்டு திவ்யமா

பொங்கல்,
இட்லி,
வடை,
நெய் மசால் தோசை,
பூரி,
ரவா ஆணியன் தோசை

இத்தனியும் சாப்பிட்டு விட்டு, ஸ்ட்ராங்கா ஒரு காஃபி குடிச்சிட்டு மெட்ராஸ் குழுவிற்கு ஃபோன் செய்தோம்.

மெட்ராஸ் குழு விடியற்காலை வந்து ஹோட்டல் அரிஸ்டோவில் தங்கி இருந்தாங்க. சரி ஹோட்டல் அரிஸ்டோவிற்குக் கிளம்பினோம்.

20 வருஷத்திற்கு முன்னால ஹோட்டல் அரிஸ்டோவை வழியில் பார்த்த ஞாபகம். தோராயமா இதுதான் ரூட் எனச் சொல்லிப் போனேன்.

ஒரு சிக்னல் வந்தது. இங்கதான் எங்கியோ ஹோட்டல் அரிஸ்டோ என போர்ட் பார்த்த ஞாபகம். (எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அந்தக் காலத்தில திருச்சி வந்தா அங்கதான் தங்குவாங்கலாம். நிறைய கர்ண பரம்பரைக் கதைகள் உண்டு)..

அந்தச் சர்க்கிளை சுத்தி வந்ததுதான் மிச்சம். அரிஸ்டோ என எழுதப்பட்ட அலங்கார வளைவைக் காணோம்.

மீண்டும் வந்த வழியே திரும்பி பஸ் ஸ்டாண்ட் வந்தாச்சி. அங்க ஹோட்டல் அரிஸ்டோன்னு கேட்டதுக்கு அவங்க சொன்ன வழி ஒண்ணும் பிடிபடறதா இல்லை.

ஞாபக சக்தி மேல நம்பிக்கை வச்சு மறுபடி அதே ரூட்டில போனேன். அதே சர்க்கிள் திரும்ப வர மறுபடி இன்னொருவர்கிட்ட கேட்டோம்.. அப்படிப் போங்க என அவர் கைகாட்டினார்.

என்னோட உள்ளுணர்வு அந்தச் சர்க்கிளை விடாதே விடாதேன்னு சொல்ல, யோசிச்சேன்.

கல்லூரியில் இருந்து திருச்சி வரும்பொழுது நேர் எதிரில் ஒரு சர்க்கிளில் அரிஸ்டோன்னு போர்டு தெரியும்.. அதைத் தாண்டிப் போனா திருச்சி மத்தியப் பேருந்து நிலையம்.

அப்படிப் பார்க்கப் போனா இதுதான் அந்த சர்க்கிள்.. சர்க்கிளை சுற்றி பஸ் நிலையம் பேகும் பக்கத்திற்கு ஓரமாய் காரை நிறுத்தி அங்கிருந்த ஒருவரிடம் அரிஸ்டோ எங்க இருக்குன்னு கேட்டேன்..

அவர் திரும்பக் கேட்டார்...

அரிஸ்டோ... பழசா? புதுசா??

தொடரும்

செல்வா
10-08-2010, 12:07 PM
நல்லவேளை எங்கஊர்ப்பக்கம் வந்து அரிஸ்டோனு (அரிஷ்டம்) கேக்கல. அரிஷ்டம் (மாம்பட்டை என்பது பொதுப்பெயர்) என்பது மெத்தில் ஆல்கஹாலின் சித்தமருத்துவ வடிவம் (சாராயம் எத்தில் ஆல்கஹால்) (அப்படித்தான் எங்க ஏழாம் வகுப்பு அறிவியல் ஆசிரியர் சொன்னது ).

எங்கஊர்ல வந்து கேட்டிருந்தா சித்த மருத்துவக் கடைக்கு வழிசொல்லிருப்பாங்க :lachen001:

ஆதி
10-08-2010, 12:31 PM
’கொல்’லிமலைதானுங்க.... ஊருக்கு வந்துட்டு கூப்பிடுங்க.. போலாம்!!!! (சிங்கம் சிக்னல் காட்டியாச்சு!!)

நானு...... நானு.... நானு வர்றேன்.. :D :D :D

தாமரை
10-08-2010, 12:55 PM
நானு...... நானு.... நானு வர்றேன்.. :D :D :D

கொல்லி மலைக்குப் போறதுன்னா ஆடி மாசம்தான் நல்லது. கொஞ்சமாவது மக்கள் வந்து போய்கிட்டு இருப்பாங்க. மத்த மாதங்களில் கூட்டம் மிகக் குறைவாக இருக்கும்.

வடகிழக்கு பருவக்காற்று காலத்தில் அருவியில் குளிக்க முடியாது..

ஆடி மாசம் வல் வில் ஓரி விழா இரண்டு நாள் நடக்கும்..

மற்றபடி சித்திரை வைகாசியில் அந்தப் பக்கம் போகவேணாம்.. வேணாம்னா வேணாம் அம்புட்டுதான்...

சாப்பாட்டுக்கு நாம ஊரிலிருந்து கிளம்பறதுக்கு முன்னால் ஆர்டர் குடுத்திடணும். சோளக்காடு என்ற ஊரில் ரெண்டு புரோட்டா கடை இருக்கு. பி.ஏ. ஹாலிடே இன் ரிசார்ட்ஸ், நல்லதம்பி ரிசார்ட்ஸ் அப்படின்னு இரண்டு தங்கும் விடுதிகள் இருக்கு. முன்பே ரிசர்வ் பண்ணிட்டு போறது நல்லது. கொல்லி ஹில் ரிசார்ட்ஸ் என்ற பெயரில் காட்டேஜ்களும், ஒரு அரசு தங்கும் விடுதியும் இருக்கு,

மற்றபடி எந்த நவீன வசதியும் இல்லாத ஜாலியான இடம் கொல்லிமலை..

திட்டம் போட்டா குரூப்பா போகலாம்.:icon_b:

செல்வா
10-08-2010, 01:06 PM
திட்டம் போட்டா குரூப்பா போகலாம்.:icon_b:

ஆகஸ்ட் இறுதி அல்லது செப்டம்பர் முதல் வார இறுதிகளில் திட்டம் போட்டுக்கலாமா?

18ம் தேதிக்கு மேல் நான் ஊரில் தான். குறைந்தபட்சம் ஒருவாரம் ஊரில் அதன் பின் ஈரோட்டில் என்று எதிர்பார்க்கிறேன்.
தாமரையண்ணா, ஆதி, செல்வா,
ஆதவா?, மதி?, தக்ஸ்?, சூரியன்?....

இன்னும் யாரெல்லாம் வரலாம்... இந்த வருட மன்றத்தின் சங்கமாமாக்கிடலாமா? :)

தாமரை
10-08-2010, 01:09 PM
ஆகஸ்ட் இறுதி அல்லது செப்டம்பர் முதல் வார இறுதிகளில் திட்டம் போட்டுக்கலாமா?

18ம் தேதிக்கு மேல் நான் ஊரில் தான். குறைந்தபட்சம் ஒருவாரம் ஊரில் அதன் பின் ஈரோட்டில் என்று எதிர்பார்க்கிறேன்.
தாமரையண்ணா, ஆதி, செல்வா,
ஆதவா?, மதி?, தக்ஸ்?, சூரியன்?....

இன்னும் யாரெல்லாம் வரலாம்... இந்த வருட மன்றத்தின் சங்கமாமாக்கிடலாமா? :)

இந்தப் பொல்லாத திட்டத்திற்கு எல்லாம் நான் உடன் பட மாட்டேன்..

நான் முதல்லயே சொல்லிட்டேன்..ஆமா!!

ஆதி
10-08-2010, 01:10 PM
ஆகஸ்ட் இறுதி அல்லது செப்டம்பர் முதல் வார இறுதிகளில் திட்டம் போட்டுக்கலாமா?

18ம் தேதிக்கு மேல் நான் ஊரில் தான். குறைந்தபட்சம் ஒருவாரம் ஊரில் அதன் பின் ஈரோட்டில் என்று எதிர்பார்க்கிறேன்.
தாமரையண்ணா, ஆதி, செல்வா,
ஆதவா?, மதி?, தக்ஸ்?, சூரியன்?....

இன்னும் யாரெல்லாம் வரலாம்... இந்த வருட மன்றத்தின் சங்கமாமாக்கிடலாமா? :)

ஈரோடு பக்கத்துல சந்திப்பு வைத்தா ஆதவா வர்றதா சொல்லிருக்கார், ஆதவா வருவார்..

மதி & தக்ஸ் வர்ரீகளா னு சொல்லுங்க ?

சூரியனுக்கு மீண்டும் எப்ப விடியுமோ ?

தாமரை
10-08-2010, 01:12 PM
நான் தான் முதல்லயே சொல்லிட்டனே இந்த மாசம் பலி கொடுக்கற மாஆஆஆஆசம் னு...

"கொல்லி" மலையிலையும் பலி கொடுக்க வச்சிடாதீங்க...

ஆதி
10-08-2010, 01:16 PM
நான் தான் முதல்லயே சொல்லிட்டனே இந்த மாசம் பலி கொடுக்கற மாஆஆஆஆசம் னு...

"கொல்லி" மலையிலையும் பலி கொடுக்க வச்சிடாதீங்க...

ஹி.. ஹி... இந்த முறை ஒரு பக்றா பாலைவனத்தில் இருந்து வர போகுது.. :D

ஆதவா
10-08-2010, 02:25 PM
ஆகஸ்ட் இறுதி அல்லது செப்டம்பர் முதல் வார இறுதிகளில் திட்டம் போட்டுக்கலாமா?

18ம் தேதிக்கு மேல் நான் ஊரில் தான். குறைந்தபட்சம் ஒருவாரம் ஊரில் அதன் பின் ஈரோட்டில் என்று எதிர்பார்க்கிறேன்.
தாமரையண்ணா, ஆதி, செல்வா,
ஆதவா?, மதி?, தக்ஸ்?, சூரியன்?....

இன்னும் யாரெல்லாம் வரலாம்... இந்த வருட மன்றத்தின் சங்கமாமாக்கிடலாமா? :)

எல்லாரும் முடிவு பண்ணுங்க....
நேரம் எல்லோருக்கும் அமைஞ்சா, ஓகே தானே!

தாமரை
10-08-2010, 02:36 PM
ஆகஸ்டு 27 வரை என் கால்சீட்டு இல்லை..

ஆகஸ்டு 21, 22 ல் ஈரோட்டில் வேணும்னா சந்திக்கலாம்.. (அக்கம் பக்கம் போகலாம்)

தாமரை
10-08-2010, 03:07 PM
பழசா? புதுசா? இந்தக் கேள்வியைக் கேட்டதும் அரண்டு போயிருப்பேன்னு தானே நினைப்பீங்க. இல்லியே..

இரண்டும் எங்க எங்க இருக்குன்னு சொல்லுங்க அப்படின்னேன்..

புதுசு திண்டுக்கல் ரோட்ல இருக்கு.. பழசு தா இங்க பாருங்க .. இதுதான்.. என்று எனக்கு இடது பக்கம் காட்டினார்.

அவர் காட்டிய இடத்தை திரும்பிப் பார்த்தேன்.

சுற்றி இருந்த கட்டிடங்கள் எல்லாம் வளர்ந்து இருக்க அந்த அலங்கார வளைவு குறுகிப் போய் கூன் விழுந்த பாட்டி மாதிரி இருந்தது. அரிஸ்டோ என்ற பெயர் கூட இல்லை..

டேய் இதாண்டா வா உள்ள போகலாம்..

உள்ளே போய் வரவேற்பில் விசாரிக்க.. அங்கேதான் தங்கி இருந்தாங்க மக்கள்..

அன்னிக்கு பாச்சாவுக்குப் பிறந்த நாள். அதனால் மைசூர் பாகோட வரவேற்பு இருந்தது..

சுந்தரை நீண்ட நாள் கழிச்சு பார்க்கிறேன். என்னோட நான்காம் வருட அறை நண்பன். ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி - நம்பர் 5. நான் நம்பர் -6 :)

பாழடைஞ்ச மண்டபம் படிச்சிருப்பீங்களே - அதில நான்கு ஹீரோக்களில் இவனும் ஒருத்தன். தினம் காலை பெரிய கிணற்றில் நீச்சலுக்குப் போவது முதல், கேண்டீன் போவது, கிளாஸ்ல அட்டெனன்ஸ் போட்டுட்டு டீ குடிக்கப் போறது, லைப்ரரி பொறது, கல்லூரி தோழிகளின் டிஃபன் பாக்ஸில் இருக்கும் உணவைப் பங்கு போட்டுச் சாப்பிடுவது, .கல்லூரி மகளிர் அணிக்கு வாலிபால் கோச்சிங் தருவது, மாலை வாக்கிங் போவது, இராத்திரி நடந்தே சினிமா போவது, பாடிகிட்டே திரும்ப வருவது இப்படி இவனோடு கழித்த நேரங்கள் கொஞ்ச நஞ்சமில்ல.

அவன் இப்ப ஒரு கல்லூரி முதல்வர். முனைவர் பட்டம் வாங்கினவன்.

சுந்தரைப் பார்த்ததும் நானும் சுந்தரும் பேசத் தொடங்கினோம்.

பாச்சா, பாஷா, ராஜகணபதி, சுதர்சன், சிகாமணி, அஞ்சு ரூபா, புல்டாக், எம்.ஜி.ஆர், ஆமை தியாகு, என ஒவ்வொருவராக வர ஆப்பு இன்னும் வரவில்லை.. ரூமுக்கு போய் கட்டி இழுத்து வர வேண்டியதா இருந்தது..

சரி வாங்க டிஃபன் சாப்பிடப் போகலாம் என்றான் பாச்சா..

நாங்கதான் சாப்பிட்டாச்சே!, நங்க முன்னால காலேஜூக்குப் போறோம் என்றேன் நான்..

சுந்தர் எங்களோட சேர்ந்து கிட்டான்.. இப்போ நாங்க நாலு பேர். எங்கள் கார் கல்லுரியை நோக்கிப் போக அவர்கள் கார் ஹோட்டல் நியூ குறிஞ்சியை நோக்கிப் போனது..

பாஸ்கர், பெரிசு இரண்டு பேரும் என் பேச்சில் களைத்துப் போயிருக்க நானும் சுந்தரும் பழைய கதைகளும் புதிய கதைகளும் கலந்து கலந்து பேசியவாறே போனோம்..

தொடரும்

சுகந்தப்ரீதன்
10-08-2010, 06:13 PM
கொல்லிமலையை பற்றி நீங்கள் சொன்ன தகவல்களை பார்த்ததும், 'என்னடா சுகந்தா, இவ்ளோ பக்கத்து இருந்தும் இத்தனைநாளா போய் பார்க்காம இருந்திருக்கியேன்னு' உள்மனசுல ஒரு உறுத்தல் உண்டாயிடுச்சி..!! சரி அதனால என்ன... இனி போகும்போது நீங்க கொடுத்த தகவல்களையும் கையோட கொண்டு போயி சரிதானான்னு பார்த்திடுறேன்..!!:)

செல்வா
10-08-2010, 06:16 PM
கொடுத்து வைத்த மனிதனய்யா நீர்... :)

பொறாமையும் புன்முறுவலும் ஓரு சேர வரவைக்குது பதிவு :)

தொடருங்கள் அண்ணா...

அமரன்
10-08-2010, 08:04 PM
கொல்லி மலையிலயே ஆசிரமத்துக்கு இடமும் பாத்திடுங்க.

அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில், கொல்லிமலை சிவச்சித்தர் சொன்னாரு என்று கருணாஸ் சொல்வாரு. அதுலயும் உண்மை இருக்குப் போல..

ஆதவா
11-08-2010, 04:20 AM
எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்..

இந்த பட்டப்பெயர்களுக்குப் பின்னாடி என்ன இருந்தது..???

எதுக்கும் விலாவாரியா கேட்டுவைப்போம்

எப்படி உங்க நண்பர்களுக்கு பட்டப்பெயர் உண்டானது? என்ன காரணம்?

ஆதவா
11-08-2010, 04:27 AM
கொடுத்து வைத்த மனிதனய்யா நீர்... :)

பொறாமையும் புன்முறுவலும் ஓரு சேர வரவைக்குது பதிவு :)

தொடருங்கள் அண்ணா...

ஆமாமாம்..... கூட நீங்க போயிருந்தா, கண்ணீரும் சேர்ந்திருக்கும்... :lachen001::lachen001:

தாமரை
11-08-2010, 04:33 AM
கொல்லி மலையிலயே ஆசிரமத்துக்கு இடமும் பாத்திடுங்க.

அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில், கொல்லிமலை சிவச்சித்தர் சொன்னாரு என்று கருணாஸ் சொல்வாரு. அதுலயும் உண்மை இருக்குப் போல..

அதுக்குத்தான் செல்வா ஒரு மெகா சந்திப்புக்கு "பிளான்" பண்ணிகிட்டு இருக்காரு,,,:icon_b::icon_b::icon_b:

தாமரை
11-08-2010, 04:43 AM
எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்..

இந்த பட்டப்பெயர்களுக்குப் பின்னாடி என்ன இருந்தது..???

எதுக்கும் விலாவாரியா கேட்டுவைப்போம்

எப்படி உங்க நண்பர்களுக்கு பட்டப்பெயர் உண்டானது? என்ன காரணம்?

பட்டப் பெயர்களுக்குப் பின்னாடி அவர்களோட பெயர்தான் இருந்தது..:eek::eek::eek:

Ensemble - 89: பிரிந்தவர் கூடினால்...!!! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6369)
திரியைப் படிக்கவும்

ஆப்பு - ஆப்பம் போட வசதியான தலை
அஞ்சு ரூபா - சொல்லியாச்சி
பெரிசு - சொல்லியாச்சு
பேஸ்கர் - சொல்லியாச்சி பேஸ்கிடார் வாசிப்பவன்
கருத்த பாண்டியன் - சிகாமணியின் வண்ணம்
பாச்சா - பார்த்தசாரதியின் சுருக்கம் பா.சா. அதுதான் பாச்சா
துக்காராம் - பழைய சிவாஜி படம் புதையல் பார்க்கவும்
ஆமை - நிதானமானவன்..
புல்டாக் - சொல்லியாச்சு (ஃபேஸ்கட்)
எம்.ஜி.ஆர் - பேரு இராமச்சந்திரன். கிணத்தில குதிடா என்று சொன்னால் தனக்கு நீச்சல் தெரியாட்டி கூட குதிச்சிருவான், இன்னொரு பேரு தையல் நாயகன். ஒரு முறை குவார்ட்டர் பாட்டிலை பேக் பாக்கெட்டில ஒளிய வச்சுகிட்டு இரவில் கபடி ஆட பாட்டில் உடைந்து பஞ்சராகி தையல் போட்டு.... அடுத்த மாசம் அவங்க அண்ணன் சீலிங் ஃபேனை முறித்து அடிக்க அடுத்த சைடில தையல்... இப்படி பல தையல்கள் பெற்றதால்

ஆதி
11-08-2010, 07:12 AM
பட்டப் பெயர்களுக்குப் பின்னாடி அவர்களோட பெயர்தான் இருந்தது..:eek::eek::eek:


ஏஏஏஏ.. :icon_clap:நான் மட்டும் பல்பு வாங்கள :icon_rollout:

தாமரை
11-08-2010, 01:02 PM
கல்லூரி வந்தாச்சு!!!

திருச்சியில் இருந்து சினிமா பார்த்து விட்டு வந்தால் இறங்கும் இரயிவே கேட், களமாவூர் செல்லும் வண்டித்தடம், மேலப்புது வயல் செல்லும் வண்டித்தடம் எல்லாம் கடந்து வாசலுக்கு வந்தோம்.

பலப் பல இளிஞர்கள், இளைஞிகள் கூட்டம். எல்லாம் புதுப் புது முகங்கள்.

கல்லூரிக்கு வெளியே காரை நிறுத்திட்டு நேரா ஹைவே ரெஸ்டாரெண்ட் போனோம். நாங்க போன நேரம் அங்கே டீ காலியாகி விட்டிருந்தது.

அங்கிருந்து ஸ்ட்ரைக் காலத்தில் நாங்கள் படுத்திருந்த கட்டாந்தரையைப் பார்வையிட்டோம். ஒன்றிரண்டு வீடுகள் அந்தப் பகுதியில் வந்து விட்டிருந்தன.

மற்படி கல்லூரி வாசலுக்கு வந்தோம். ராஜீவ் காந்தி பிரச்சாரத்திற்கு இந்தப் பக்கம் வந்த போது கொடியேற்றிய கொடிக்கம்பம், ஒரு நாள் சண்டை போட்டுகிட்டு நான் வந்து படுத்திருந்த அந்த வளைந்த சுவர் :icon_ush: இப்படி அணு அணுவா ஒவ்வொரு இடத்தையும் பார்த்து பழைய நினைவுகளை அனுபவிக்க ஆரம்பித்தோம்.

பின்னர் கல்லூரி உள்ளே சென்றோம். காரை அதற்கான பக்தியில் நிறுத்திட்டு உள்ளே போனா வருகைப் பதிவு..

வர்ரேன்னு சொன்னவங்க பேரெல்லாம் ஒரு லிஸ்ட்ல இருந்தது. எங்களொட பெயருக்கு எதிரில் கையெழுத்து போட்டு விட்டு பிரியாணி பொட்டலத்துக்கு (மதிய உணவு) டோக்கன் வாங்கியாச்சி.

தெரிஞ்ச முகம் எதுவுமில்ல. இது ஒரு கலப்பான கும்பல். எல்லாமே இளைய தலைமுறைதான். எங்க தலைமுறையில் வேற யாருமில்ல.

சரி, இனி கல்லூரியைச் சுற்றிப் பார்க்கலாம் என்று நாங்க முதல்ல போனது பாழடைந்த மண்டபம் இருந்த ஏரியாவுக்கு.

மண்டபம் இல்லைன்னாலும், அந்த இடத்திற்கு மரியாதை செலுத்தி விட்டு கம்ப்யூட்டர் லேப், எலெக்ட்ரானிக் லேப், லைப்ரரி, பழைய வகுப்பறைகள் அப்படின்னு ஒண்ணொன்னா ஒண்ணொன்னா பார்த்துக் கொண்டே வந்தோம்.

எனக்கும் சுந்தருக்கும் அந்தப் பகுதியில் பலப்பல நினைவுகள் உண்டு.. எல்லாவற்றையும் நினைத்து பேசி கண்கள் பனிக்க

அந்தப் புளிய மரத்தின் அருகே வந்தோம்.

அதிக உயரம் வளர்ந்திருக்க வேண்டும்.. ஆனால் வளரவில்லை. இருபத்தைந்து ஆண்டுகளுக்கான வளர்ச்சியா இது. இல்லை. இருந்தாலும் நெடு நாள் கழித்துப் பார்க்கும் சுந்தருக்கும், இந்த மரத்துக்கும் அதிக வித்தியாசம் இல்லை. எத்தனை கதைகள் இந்த மரத்திக்கடியில் விதைக்கப்பட்டு வளர்ந்திருக்கின்றன. ஒவ்வொரு ஜோடியைப் பற்றியும் எண்ணிப் பார்த்தோம். பின்னர் தான் அவற்றைக் காட்டினேன்.

17 மரங்கள், என்னை விட இரண்டு மடங்கு உயரம் வளர்ந்து விட்ட மரங்கள் இருந்தன.

ஆமாம் 2004 என்ஸெம்பிள் 89 சந்திப்பின் போது நட்ட மரங்கள்தான் அவை. எவ்வளவு உயரம் வலர்ந்து விட்டன. இனி அவை தாக்குப் பிடித்து விடும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.

வெளியில்தான் டீ கிடைக்கலை. உள்ளே உள்ள கேண்டீனில் கிடைக்குமா என கேண்டீனுக்குச் சென்றோம். அங்கே டீ இருந்தது..

டீ சாப்பிடும் போது நிமிர்ந்து பார்த்தால் ராஜப்பா. தன் மனைவி மக்களுடன் வந்திருந்தான். அனைவரையும் அறிமுகப் படுத்த சற்று நேரம் அவனுடன் பேசினோம்.

இதன் பிறகு ஹாஸ்டலைப் பார்க்கலாம் எனக் கிளம்பினோம்.

வழியில் தான் அந்தப் பெண்ணைப் பார்த்தேன். ரொம்பப் பழகிய முகம். அவள் தலைக்கு மேல் வளர்ந்த மகன். அவர்க்ளோடு பேசிக்கொண்டிருந்தவர் எங்களை நோக்கி வந்தார்.

ஹாய் தாமரை என்னை ஞாபகமிருக்கா? நான் சுரேஷ்.

எந்த சுரேஷ் எனக்குப் புரியலை..

இருந்தாலும் அவனோடு சற்று நேரம் பேசிவிட்டு ஹாஸ்டலை நோக்கி நடக்கத் தொடங்கினோம்.

மெக்கானிகள் ஷெட்டைக் கடக்கும் பொழுது மீண்டும் அவளைக் கவனித்தேன். இப்பொழுது எங்களின் அன்பிற்குரிய தண்ணீர் எடுத்து வைக்கும் பாட்டியுடன் பேசிக் கொண்டிருந்தாள்.

இம்முறை நேரடியாகப் பாட்டியிடம் சென்றோம். பாட்டிக்கு என்னையும் சுந்தரையும் பார்த்ததும் சந்தோஷம் பீறிட்டது. உச்சி முகர்ந்து கட்டிக் கொண்டார். அவரை நலம் விசாரித்தேன்.

அத்தனை மரத்துக்கும் தண்ணீர் ஊற்றி வளர்ப்பது அவர்தான். இருபத்தைந்து ஆண்டுகளாக தோற்றம் மாறாமல் இருந்த பாட்டியிடம் பேசினபோது அவள் என்னிடம் பேசத்தொடங்கினாள்.

தாமரை என மிகவும் அன்பாக பேசியபோது உங்க பேரு எனக் கேட்க கூச்சமாக இருந்தாலும் கேட்டேன்.

நளினி பத்மனாபன்..

சொன்னவுடன் முடிக்கிடந்த நினைவறைக் கதவுகள் சடாரெனத் திறந்து கொண்டன. கல்லூரிக் குயிலாய் வலம் வந்தவளாயிற்றே. அறுவடை நாள் திரைப்படத்தில் வரும் தேவன் கோவில் பாட்டை பாடிப் புகழ் பெற்றவள். நான் எழுதிய நாடகத்தில் நடித்தவள் என எல்லாம் நினைவிற்கு வந்து விட்டது. இப்போது கூடவே சுரேஷ் யாருன்னும் ஞாபகம் வந்திட்டது.

சுரேஷ் நளினியோட கிளாஸ்மேட். ஒரு முறை லாங் ஜம்பில் 4 மீட்டர் 7 செமீ தாண்டி விட்டு 4.7 என்று குறிக்கப்பட்டதால் மூணாவது இடம் பிடித்தவன். ஹாக்கி கோலியாக இருந்தவன் (அவங்க பள்ளியில்) கல்லூரிப் போட்டியில் எங்க அணியில் முதல் பாதியில் கோலியாக இருந்து 6 கோல் வாங்கி கோபமாகி பந்தை தனியாளா அடுத்த கோலுக்கே எடுத்துக் கொண்டு போக அவனுக்குப் பதிலா நான் கோலியாக நின்றேன்.

நளினியோட எங்க கல்லூரி ஆர்க்கெஸ்ட்ரா அனுபவங்களை பகிர்ந்து கொண்டு மகிழ்ந்தோம். பல நண்பர்களை அவள் விசாரிக்க, எல்லோர் மின்னஞ்சலும் நான் அனுப்பி வைக்கிறேன் என வாக்களித்தேன். (வந்தது அனுப்பிட்டேன். நம்புங்கப்பா)

அதன் பின்னால் அங்கிருந்து ஹாஸ்டலை நோக்கிப் போனோம். அங்கே ஹாஸ்டலில் எல்லா கண்ணாடி ஜன்னல்களும் தகர ஜன்னல்களாக மாறிவிட்டிருந்தன. நானும் சுந்தரும் வாழ்ந்த அறை எண் 23 க்குப் போனோம். அங்கிருந்த மாணவர்களோட பேசினோம்.

அப்புறம் அங்கிருந்து வந்து டி.வி வைக்கப்படும் இடத்தில் இருந்து ஒவ்வொரு வருடமும் வாழ்ந்த அறைகளை எல்லாம் பார்த்தோம். (இரண்டாம் ஆண்டு அறை எண் 1, மூன்றாம் ஆண்டு அறை எண் 4) அப்புறம் மெஸ்ஸையும் ஒரு பார்வை பார்த்து விட்டு விளையாடு மைதானத்துக்கு வந்தோம்.

அங்கே இருந்த பேரல்லல் பாரில் நானும் சுந்தரும் தலைகீழாக தொங்கி விளையாடியதையும், நாங்கள் கிரிக்கெட் விளையாடும் இடத்தையும், வாலிபால் கோர்ட்டையும் பார்த்து பழைய நினைவுகளை மீட்டு மீட்டி மகிழ்ந்தோம்.

அதன் பின்னால், மெஸன்னஸ் நடந்த அதே இடத்தில் போடப்பட்டிருந்த விழா மேடைக்குப் போனோம்.

தொடரும்

அமரன்
11-08-2010, 06:47 PM
நினைவுகளினூடே நடமாடி உள்ளீர்கள்.

எத்தனை பேருக்கு இந்தமாதிரி நல்வாய்ப்புக் கிடைக்கும். அனுபவிக்க முடிகிறதுண்ணா.

தாமரை
12-08-2010, 09:54 AM
விழாப் பந்தலில் முன் வரிசைகள் ஆசிரியர்கள் அலுவலர்களுக்கு ஒதுக்கப் பட்டிருந்தன.. பாதி வரை நிரம்பி இருந்தது. தெரிந்தவை மூன்று முகங்கள் மட்டுமே.. இரவிசங்கர், அன்பரசி மற்றும் நிம்மதி.

மூன்று பேரிடமும் சிறிது நேரம் பேசினோம். பிறகு வெளியே வர எதிரே வந்தான் கலிய மூர்த்தி..

இவனை எப்படிச் சொல்வது.. ஈஸியா சொல்வதுன்னா மன்றத்தில் செல்வாவுக்கும் எனக்கும் உள்ளது மாதிரியானது இவனுக்கும் எனக்குமான உறவு. எங்களை விட ஒரு வருஷம் இளையவன். சுந்தரின் மனைவிக்கு வகுப்பறைத் தோழன்.

அப்படி ஒரு சந்தோசம் அவனுக்கு என்னைப் பார்த்ததும். 21 ஆண்டுகள் கழித்துப் பார்க்கிறோம் அல்லவா!!

பாசப் பிணைப்புகளுடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அங்கே வந்தான் சர்வாதிகாரி.

சர்வாதிகாரியும் எங்களுக்கு இளைய தளபதிதான். அவனிடமும் பேசிக் கொண்டிருந்தோம்.

அப்போதுதான் எங்க சென்னை அணி கல்லூரிக்கு உள்ளே வந்தது.. மறுபடி விழாப் பந்தலின் (விழாதுன்னு நம்பி) உள்ளே போனோம். அவரவருக்கு தெரிந்த முகங்களுடன் பேச ஆரம்பித்தனர்.

ஒரு அரை மணி நேரம் இருக்கும். மணி பனிரெண்டரை. சரி புறப்படலாம் எனக் கிளம்பி விட்டார்கள் எங்கள் அணி..

இரண்டாம் வருட மாணவர்கள் இன்று இரவு தங்கி விட்டுப் போகலாமே எனக் கேட்டனர். இல்லை கொல்லி மலை போறதா பிளான் என்று சொல்லிக் கொண்டிருந்தோம்.

அப்போது தான் அந்த கறுப்பு ஆடி கார் உள்ளே வந்தது..

கௌதம் மேனன் வந்தாச்சி வந்தாச்சி.. காரைச் சுற்றி மாணவர்கள் கூட்டம் கூடி விட்டது.

எல்லோரும் மெதுவாக வெளியே வந்தோம். கௌதம் மேனனின் கார் விழாப்பந்தலுக்கு பின்னே வெகு அருகில் நிற்க இறங்கி அவர் மேடைக்குப் போய் விட்டார்.

கௌதம் வந்தவுடன் விழா தொடங்கி விட்டது. யாரோ வரவேற்றார்கள்.. நாங்கள் வெளியே டீக்கடையில் இருந்தோம்..

கௌதமின் கல்லூரிப் பாசத்தை பிழிந்து கொண்டிருந்தார் ஞானசம்பந்தன்.. இரண்டாம் வருட மாணவர்கள்.. என்ன பிரச்சனை.. சரியான மரியாதை கொடுக்கலையா? ஏன் உள்ளேயே வரமாட்டேன் என்கிறீர்கள் என மிகக் கவலையாக விசாரித்தனர். அப்படி இப்படிச் சமாதானம் சொல்லி விட்டுக் கிளம்பினோம்..

மணி 1:00 க்கு கல்லூரியை விட்டுக் கிளம்பிய காரும் வேனும் சுமார் 2:00 மணிக்கு சமயபுரம் டோல்கேட் அருகே நின்றன.. டாஸ்மாக்கிற்கு நண்பர்கள் விரைய அப்போது தான் ஒரு புது முகத்தைக் கண்டேன்.

எனக்கு அதிகம் அறிமுகமில்லாத முகம். போய் பேச ஆரம்பித்தேன்.

சத்யா, சீனிவாசா பாலிடெக்னிக்.. எங்கள் செட்தான், ஆனால் கீரனூர் சொந்த ஊர் என்பதால் கீரனூரில் அறையெடுத்து தங்கிய்வர்களுக்கு மட்டுமே பழக்கம்.

மூன்று பெட்டி பீர் பாட்டில்கள் வேனில் ஏற்றப்பட காரும் வேனும் புறப்பட்டன.

என்னுடன் பெரிசும் சுந்தரும் தான்.. இவ்வளவு வருஷமாக நான் கடித்த எழுதிய பலப்பல ஐட்டங்களை பேசிக் கொண்டே போனோம். திடீரென காவேரி வாய்க்கால் ஓரமாக வேனை ஓரங்கட்ட நாங்களும் நிறுத்தினோம்.

நிறுத்திய இடம் மிக அழகான இடம். காவிரியை ஒட்டி ஓடும் வாய்க்கால்.. சில்லென்றும் சிலு சிலு வென ஓட்டமெடுக்கும் நீர். நான் திருச்சிக்குப் பேருந்தில் போகும் பொழுதெல்லாம் எப்போதாவது இப்படி இறங்கி ஆசை தீர இரண்டு மணி நேரம் குளித்து விட்டுப் போவோமா என எண்ணுவேன்.

25 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த ஆசை நிறைவேறியது.. வாய்க்காலில் இறங்கி சிக்கிய பாறைகளின் மேல் முதலில் அமர்ந்தோம்..

தொடரும்

த.ஜார்ஜ்
12-08-2010, 10:11 AM
இதுக்குதான் ஆசைபடுகிறாரா செல்வக்குமரா

தாமரை
12-08-2010, 10:14 AM
இதுக்குதான் ஆசைபடுகிறாரா செல்வக்குமரா

இனிமேல்தான் அவரின் ஆசைகளே ஆரம்பம்....

தாமரை
12-08-2010, 10:41 AM
பச்சைப் பசேல் என்று வாய்க்காலின் இருபுறமும் புற்களும் உயர்ந்து வளர்ந்த மரங்களும் நீரில் தங்கள் முகத்தைப் பார்க்க வளைந்து நின்று கொண்டிருந்தன.

டீக்கடையில் இருந்து சைட்டடிக்கும் ரோமியோக்களைத் தாண்டிப் போகும் கல்லூரி மாணவிகள் போல சலசலவென பேசிக்கொண்டே ஓடிக் கொண்டிருந்தது நீர்.(மதி இது சத்தியமா வயசுக் கோளாறு அல்ல)

பேண்டை முழங்காலுக்கு மேல் இழுத்து விட்டுக் கொண்டு, நீரின் மத்தியில் தலை தூக்கிப் பார்த்துக் கொண்டிருந்த அந்தக் கரும்பாறைகள் மேல் அமர்ந்தோம். சாலையோரம் என்றாலும் சட்டென சாலை மறைந்து போக ஏதோ ஏகாந்தப் பிரதேசத்தில் இருப்பது போல ஒரு உணர்வு..

கணுக்காலுக்கும் மேல் நீர் உரசிச் சென்று கொண்டிருப்பது, காதலியின் துப்பட்டா காற்றில் பறந்து முகத்தில் உரசுமே அப்படி ஒரு உணர்வைத் தந்தது.. மேகங்கள் சூரியனுக்குத் தடா போட்டிருந்த காலம் என்பதல் வெப்பம் என்பதே என்னவென்று தெரியாத நிலை..

சக்களத்தி சண்டை வந்தால் ஒரு மனைவி ஒரு காலைப் பிடித்தால் இன்னொரு மனைவி தலையைப் பிடித்து விடுவது போல நீர் காலை வருட தென்றல் உடலை வருடிக் கொண்டிருந்தது. (இதைப் பார்த்து இரண்டு கல்யாணம் பண்ணும் யாருக்காவது வந்தால் அதுக்கு நான் பொறுப்பில்லை)

வேனில் இருந்து பாட்டில்கள் இறக்கப்பட்டு உள்ளே அடைபட்டுக் கிடந்த போராளிகளுக்கு விடுதலை தரப்பட்டது. பொங்கி எழுந்த போறாளிகளை சற்றே அடக்கி ஆளுக்கொரு திசையில் பிரித்து விடப்பட்டனர் (அதாங்க ஆளுக்கு ஒரு பாட்டில் கையில வந்துச்சி)

இனிமையான சூழ்நிலை.. கையில் பாட்டில். .. அடுத்த தேவை என்ன? பாட்டு..

இந்த இனிமையான சூழ்நிலையைக் கெடுக்காத வாறு மிக இனிமையாகப் பாடக் கூடிய ஆள் கருத்த பாண்டியன் திருநடன சிகாமணி மட்டுமே..

சிகாமணி மிகச் சிறந்த பாடகன். கிடார் வாசிக்கத் தெரிந்தவன். இசையமைப்பாளராக வேண்டும் என்ற கனவு சிதைந்தவன். சில ஆண்டுகளாகவே அவன் பாடல்கள் பாட்வதில்லை என முடிவெடுத்திருந்தான்.

ஆனால் அன்பிற்கு முன் எல்லா உணர்ச்சிகளுமே தலை வணங்கித்தானே ஆகவேண்டும்.

ஒரு நாள் போதுமா
இன்றொரு நாள் போதுமா

கணீர் என்ற குரலில் அவன் பாடல் ஒலிக்கத் தொடங்கியது..

அவன் பாடி முடிக்க, அணைப்புகளும் உச்சி முகர்தலுமாக எங்களுது ஆழ்மனது அன்பினை எல்லாம் சேர்த்து வாரி வழங்கினோம்..

நானும் என்பங்கிற்கு சில கவிதைகளைப் பகிர்ந்து கொண்டேன்.

அரை மணி நேரத்திற்கு மேல் எப்படிப் பறந்து போனது என்றே தெரியாது. போய்த்தான் ஆகவேண்டும். இப்போது புறப்படாவிட்டால் கொல்லி மலைக்குப் போவதற்குள் இருட்டி விடும் எனத் தோன்றவே

அந்த இடத்தை விட்டுப் பிரிய மனமில்லாமல் பிரிந்தோம்.

மறுபடி எங்கள் வாகனங்கள் விரைய ஆரம்பித்தன.

தொடரும்

ஆதவா
12-08-2010, 11:01 AM
நீங்கள் தன்னீர் அருந்தமாட்டீர்கள் என்று நினைத்தேனே!! அய்யகோ!

விழா முடிந்து அடுத்து கொல்லியா?? செல்லுங்கள், கூடவே வருகிறோம்...

தாமரை
12-08-2010, 02:37 PM
நீங்கள் தன்னீர் அருந்தமாட்டீர்கள் என்று நினைத்தேனே!! அய்யகோ!



சென்னை மஹா சந்திப்புக்கு அப்புறம் நடந்த சேப்பாக்கச் சந்திப்பூ???

இது வித்தியாசமானவர்களின் சந்திப்பூ??

தலை - மதி - தாமரை பெங்களூர் சந்திப்பூ??

ஆரென் - மதி - செல்வன் - சிவா.ஜி சந்திப்பூ??

எல்லாத்தையும் மறந்திருப்பீங்களே!!!

ஆதவா
12-08-2010, 02:52 PM
சென்னை மஹா சந்திப்புக்கு அப்புறம் நடந்த சேப்பாக்கச் சந்திப்பூ???

இது வித்தியாசமானவர்களின் சந்திப்பூ??

தலை - மதி - தாமரை பெங்களூர் சந்திப்பூ??

ஆரென் - மதி - செல்வன் - சிவா.ஜி சந்திப்பூ??

எல்லாத்தையும் மறந்திருப்பீங்களே!!!

அப்போதெல்லாம் உங்க்ளை ரொம்ப்ப்ப்ப நல்லவர்ர்ர்ர்ர்னு நெனச்சென்

செல்வா
12-08-2010, 03:30 PM
இலக்கியங்களில் காணப்படும் வசந்தவிழாவின் நீட்சியாகப் படுகிறது எனக்கு இது. சொல்லுங்கப்பா... எப்பப்பா போகலாம்?

சூரியன்
12-08-2010, 03:59 PM
ஆகஸ்ட் இறுதி அல்லது செப்டம்பர் முதல் வார இறுதிகளில் திட்டம் போட்டுக்கலாமா?

18ம் தேதிக்கு மேல் நான் ஊரில் தான். குறைந்தபட்சம் ஒருவாரம் ஊரில் அதன் பின் ஈரோட்டில் என்று எதிர்பார்க்கிறேன்.
தாமரையண்ணா, ஆதி, செல்வா,
ஆதவா?, மதி?, தக்ஸ்?, சூரியன்?....

இன்னும் யாரெல்லாம் வரலாம்... இந்த வருட மன்றத்தின் சங்கமாமாக்கிடலாமா? :)

நான் வருகிறேன்.

சூரியன்
12-08-2010, 04:02 PM
சூரியனுக்கு மீண்டும் எப்ப விடியுமோ ?

அடுத்த சந்திப்புக்கு கண்டிப்பா விடியும்....:rolleyes:


ஆகஸ்டு 27 வரை என் கால்சீட்டு இல்லை..

ஆகஸ்டு 21, 22 ல் ஈரோட்டில் வேணும்னா சந்திக்கலாம்.. (அக்கம் பக்கம் போகலாம்)

அண்ணா அப்ப ஈரோட்டில் சந்திப்பை வச்சுடலாமா?:)

த.ஜார்ஜ்
12-08-2010, 05:00 PM
டீக்கடையில் இருந்து சைட்டடிக்கும் ரோமியோக்களைத் தாண்டிப் போகும் கல்லூரி மாணவிகள் போல சலசலவென பேசிக்கொண்டே ஓடிக் கொண்டிருந்தது நீர்.(மதி இது சத்தியமா வயசுக் கோளாறு அல்ல)



கணுக்காலுக்கும் மேல் நீர் உரசிச் சென்று கொண்டிருப்பது, காதலியின் துப்பட்டா காற்றில் பறந்து முகத்தில் உரசுமே அப்படி ஒரு உணர்வைத் தந்தது..



அடடா... சூழ்நிலையில் ரொம்பவே லயித்து போய்விட்டீர்கள் போல..
பாட்டிலை திறப்பதற்கு முன்னே கிறங்கி விட்டீர்களா..அட போங்க பிரதர்.[இரைக்குள்ள தூண்டில் இருக்கோ?]

தாமரை
14-08-2010, 02:15 AM
அடடா... சூழ்நிலையில் ரொம்பவே லயித்து போய்விட்டீர்கள் போல..
பாட்டிலை திறப்பதற்கு முன்னே கிறங்கி விட்டீர்களா..அட போங்க பிரதர்.[இரைக்குள்ள தூண்டில் இருக்கோ?]

தூண்டு + இல் = உணவிருப்பதாக தூண்டி உன்னையே இல்லாமல் ஆக்கி விடக் கூடிய ஒன்று.. தமிழன் எவ்வளவு அழகா யோசனை செய்து பேர் வச்சிருக்கான் பாருங்க... (அடடே.. அடடடடே...)

கொல்லி மலைக்குப் போறமோ இல்லையோ இப்படி ஒரு இடத்துக்குப் போகணும்னு செல்வா இந்த முறை வெறியோடவே வருகிறார்.

அது பல வருடக் கனவு இல்லையா.. அதான் அந்த் இடத்தில் இறங்கியதுமே என்னை மறந்து சூநிலையில் கிறங்கி விட்டேன்..

தாமரை
14-08-2010, 02:18 AM
அடுத்த சந்திப்புக்கு கண்டிப்பா விடியும்....:rolleyes:



அண்ணா அப்ப ஈரோட்டில் சந்திப்பை வச்சுடலாமா?:)

" வாழ்க்கை வெறுத்துவிட்டால்
தற்கொலை செய்து கொள். !
தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

கையொப்பத்தை வாழ்க்கையில் முயன்று பார்க்கும் தைரியமுள்ள சிலரில் நீங்களும் ஒருத்தராகத் தெரிகிறீர்கள்.

சரி திட்டத்தைச் சொல்லுங்கள்!!!

தாமரை
14-08-2010, 02:41 AM
காரும் வேனும் ஒன்றன் பின் ஒன்றாக நூல் பிடித்தாற் போல் சென்று கொண்டிருந்தன.

வாழைப்பழக் கடைகள் முசிறி வந்து விட்டன என அடையாளம் காட்ட ஒரு சிறு பரோட்டா கடையின் எதிரே நிறுத்தி இறங்கினோம்.

மணி மூன்றாகி விட்டது இங்கேயே சாப்பிட்டு விடுவோம் என உள்ளே நுழைந்தோம்.

ஊழி விலகிய உலகாக வயிற்றில் வெறும் நீர் மட்டுமே இருந்தது. பரோட்டாவும் ருசியான சிக்கன் சால்னாவும் படைக்கப்பட்டு அங்கு உயிரோட்டம் உண்டாக்கப்பட்டது.. அதன் பின் ஆம்லெட்..

கோழி முந்தியா முட்டை முந்தியா என்ற கேள்விக்கு இந்த உலகில் கோழிதான் முதலில் என்ற பதில்தான் சரி..

செவிக்கு உணவில்லாத போது சற்று வயிற்றுக்கும் ஈயப்படும் என்றான் அய்யன்.

பேச்சுக்கு சிறிது ஓய்வு.. பசி ஒரு இராச்சசன். அந்த இராச்சசன் மதுவுண்டு கிடக்கும் போது இன்னும் அதிக ஆக்ரோஷத்தோடு இருக்கிறான். பரோட்டா கடைக்காரர் எங்கள் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் திண்றினார்.

வயிறு நிறைந்தது என்ற உணர்வு உண்டான பின்னால் சாப்பிடுவதை நிறுத்திக் கொண்டு வெளியே வந்தோம். யார் பணம் கொடுத்தார் தெரியாது.

முசிறிப் பகுதி ரஸ்தாலி வாழைப்பழங்கள் மிகவும் புகழ் பெற்றவை. மூன்று சீப்பு பழங்கள் வாங்கிக் கொண்டோம். மீண்டும் எங்கள் பயணம் தொடர்ந்தது..

நாமக்கல்.. நாமக்கல் எனது பாட்டி ஊர். கோட்டையை புதிதாக மராமத்து செய்து புதுக்கோட்டை போல அழகாக ஆக்கி இருக்கிறார்கள். இந்தக் கோட்டையைப் பார்க்கும்பொழுது சற்று பெருமையாகவே இருக்கிறது. அந்தக்காலத்தில் எப்படி தலை நகரங்கள் இருந்தன என்று தெரியும். ஆனால் சிறு ஊர்கள் எப்படி ஆளப்பட்டன. எப்படி கிராமங்கள் நிவகிக்கப்பட்டன. எப்படி பாதுகாக்கப்பட்டன என்பதன் விளக்கமெல்லாம் இப்படிப்பட்ட கோட்டைகளில் தானே இருக்கின்றன். (நானும் அனிருத்தும் மூன்று வாரங்களுக்கு முன்பு இங்கே சென்றிருந்தோம். அதைப் பற்றி தனியாகச் சொல்கிறேன் - இதோடு 4 பயணத்திரிகள் காத்திருப்புப் பட்டியலில்)

நாமக்கல் - துறையூர் ரோட்டில் சென்று சேந்தமங்கலம் ரோட்டிற்கு குறுக்கு வழி எடுக்கச் சொன்னார்கள். எங்கள் பாட்டி வீட்டு வழியில் பாலம் கட்டுகிறார்களாம்.. வண்டி அந்த உண்டாக்கப்பட்ட ரோட்டில் திரும்பும் முன்பு "சரக்"கென்று நிறுத்தப்பட்டது..

வேறெதுக்கு... அதான் வண்டியே சொல்லிடுச்சே "சரக்கு" அப்படின்னு

தொடரும்.

தாமரை
14-08-2010, 03:05 AM
எத்தனை பாட்டில்கள்..

விஸ்கியும், பீரும் மட்டும்தான். அதிக வெரைட்டி இல்லை. கூடவே கொறிக்க காரவகைகள். தொட்டியம் முறுக்கு மறந்து விட்டது ஞாபகம் வந்தது, மணப்பாறை போல தொட்டியம் அரிசி முறுக்கு மிகவும் புகழ்பற்ற ஒன்று... நேரம் ஓடிக் கொண்டிருக்கிறது என்ற அவசரத்தில் சில விஷயங்கள் மறந்து போவது போல தொட்டியம் முறுக்கு ஞாபகம் மறந்து போனது இப்போது நினைவு வந்தது.

காருக்கும் வேனுக்கும் கூட நாமக்கல்லிலேயே பசி தீர்த்தோம்.

வேனும் காரும் மீண்டும் அந்தக்கால கணவன் மனைவி போல முன்னும் பின்னுமாக செல்ல ஆரம்பித்தன. (எப்போதும் கணவனின் பின்னால் மனைவி நடந்து வருவாளாம்) வாகனப் போக்குவரத்து குறைந்த சாலையில் மெல்ல குளுமை கோலோச்சத் தொடங்கியது. சேந்தமங்கலம் தாண்டி கொல்லியின் மலைப்பாதை ஆரம்பம்..

இதுவரை அடைந்து கிடைந்த சன்னல்கள் திறக்கப்பட்டன.. சிந்தடிக் தென்றலுக்கு (ஏ.சி) போய் வா என விடை கொடுத்துவிட்டு உண்மைத் தென்றலை உளமாற .. நெஞ்சு நிறைய வரவேற்றோம்..

செம்மேட் முப்பத்தைந்து கிலோ மீட்டர்கள் இங்கிருந்து. அங்குதான் தங்கும் விடுதிகள் இருக்கின்றன. 70 கொண்டை ஊசி வளைவுகள்...

வேகங்கள் மட்டுப் படுத்தப்பட்டு சீராக வாகனங்கள் ஊர்ந்தன. நெடிதுயர்ந்த மரங்கள்.. மரங்களுடன் பின்னிப் பிணைந்த கொடிகள் இக்கால பூங்காக்காதலர்களை நினைவூட்டின.. அணில்கள் அவர்களிடம் சுண்டல் விற்றுக் கொண்டிருந்தன.

கருத்த சாலையில் கருத்தைச் செலுத்தி கவனமாக முன்னேறிக் கொண்டிருந்தோம். எங்களது தூரத்துச் சொந்தங்கள் எங்கள் சொந்தம் புரியாமல் அவர்கள் காரியத்தைக் கவனித்துக் கொண்டிருந்தனர். சிலர் சொந்தம் புரிந்து ஊரிலிருந்து வந்திருக்கிறார்களே ஏதாவது வாங்கி வந்திருக்கிறார்களா என ஏக்கத்துடன் பார்த்தனர்.

மலைமகளின் இடைவளைவுகளில் எங்களை மறந்து கொண்டிருந்தோம். பசுமையும் குளுமையும் கூடிக் கொண்டே போவதாக்த் தெரிந்தது. கொல்லி மலையின் கதைகள் மறந்து போய் அதன் இயற்கை அழகு மட்டுமே தெரிந்தது..

சில இடங்களில் திடீரென பள்ளத்தாக்குகள் தெரியும். பசுமையான அந்தப் பள்ளத்தாக்கு கொல்லி நாட்டின் வளமையை பறைசாற்றும்.

இங்கு பெரிய ஆறு ஒன்றும் கிடையாதுதான். ஆனால் இதன் பசுமைக்கு ஈடில்லை. இறங்கி நின்று உண்மயான இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்கிற கனவினை கொல்லிமலை பறைசாற்றுவதைக் கண்டோம். சில கிராமங்கள். வளமான பூமி.. கொட்டிக் கிடக்கும் பழவகைகள்..உழைப்புக்கு அய்ராத மக்கள்..

பயணம் தொடர்ந்தது...

ஆதவா
14-08-2010, 04:36 AM
அப்படியே கூட வராப்ல இருக்கு... சலசல நீர், பரோட்ட கடை, வாழைப்பழம், சரக்கு என்று ஒரே ‘ஐட்டங்களாக’வே இருக்கிறதே!!! கடைசியில் அந்த புரோட்டா கடையில் யாராச்சும் பணம் கொடுத்தார்களா இல்லையா///

இன்னும் கொல்லிமழைக்கே போகவில்லை... அதற்குள் இத்தனை பக்கமும் வந்தாச்சு!!!

தொடருங்கள்!

தாமரை
14-08-2010, 07:54 AM
அப்படியே கூட வராப்ல இருக்கு... சலசல நீர், பரோட்ட கடை, வாழைப்பழம், சரக்கு என்று ஒரே ‘ஐட்டங்களாக’வே இருக்கிறதே!!! கடைசியில் அந்த புரோட்டா கடையில் யாராச்சும் பணம் கொடுத்தார்களா இல்லையா///

இன்னும் கொல்லிமழைக்கே போகவில்லை... அதற்குள் இத்தனை பக்கமும் வந்தாச்சு!!!

தொடருங்கள்!

பயணம் என்பது முடிவைச் சொல்வது மட்டும் இல்லையே...

யாரோ பணம் கொடுத்து இருப்பார்கள்.. அப்படிக் கொடுக்க மறந்திருந்தாலும், பணியாரக்காரப் பாட்டி வட்டியும் முதலுமா வசூலிச்சிருச்சி...

(பணியாரமா என்று வாய் பிளக்காதீங்க.. பணியாரம், சூப்பு, கிழங்கு, அன்னாசி, பலாப்பழம், கொய்யாப் பழம் இன்னும் என்னென்னவோ இருக்கு,)

தாமரை
14-08-2010, 08:21 AM
வாழ்க்கையை கீழிருந்து தொடங்கும் யாரும் சடாரென நேராக உச்சிக்குப் போய்விடுவதில்லை. பலப் பல திருப்பங்கள் எதிர்படுகின்றன. ஒவ்வொரு வளைவிலும் மாற்றங்கள்.. சில இன்னும் மேலே கொண்டு செல்கின்றன, சில சற்று கீழே இறங்குகின்றன. ஆனால் இலக்கு மட்டும் உச்சியை நோக்கியே இருக்கிறது..

ஏறுவது சற்று கடினம்தான்.. ஆனால் உச்சிப் புகழின் மீதுள்ள ஆசைதான் நம்மைச் செலுத்துகிறது..

வளைவுகளைப் புரிந்து கொண்டு மெல்ல மெல்ல முன்னேறினோம்.

ஒன்றிரண்டு சந்தன மரங்கள், ஆங்காங்கே பலா மரங்கள், வேப்ப மரங்கள், பெயர் தெரியாத பல மரங்கள் எதிர்பட்டன. கொடிகளில் சிவப்பாய், மஞ்சளாய், இளஞ்சிவப்பாய், நீலமாய் கருநீலமாய் பல வண்ணப் பூக்கள்.

எதிர்பட்டவை ஒன்றிரண்டு லாரிகளும், சில பைக்குகளும் மட்டுமே,, மற்றபடி எங்களுக்காக மட்டுமே பாதை என்பது போல் பொக்குவரத்து மிகக் குறைவாக இருந்தது.

எவை ஓய்ந்தாலும் அன்பர்களிடம் பேசும் தாமரையின் வாய் ஓய்வதில்லை. பழசும் புதுசுமாக பல கவிதைகள், கதைகள் அனுபவங்கள் சொல்லிக் கொண்டே காரோட்டிக் கொண்டிருந்தேன்..

ஏடாக்கூடமாக திருப்பி விட்டால் என்னாவது என்ற பயத்திலோ என்னவோ அக்கறையாய் கேட்டு அங்கங்கே சிரித்து சிலாகித்து என்னைச் சந்தோஷமாக வைத்துக் கொண்டனர் சுந்தரும் பெருசும்..

திடீரென அருகருகே கொண்டை ஊசி வளைவுகள் வர ஆரம்பித்து விட்டன. கீழே இருந்து பார்த்தபோது ஒரு பெரிய கட்டிடம் போல வெள்ளையாகத் தெரிந்தது இந்தக் கொண்டை ஊசி வளைவுகள்தான்.

ஒன்றரை மணி நேரம் கடந்து விட்ட போது 70 வளைவுகளும் முடிந்து போய் விட்டிருந்தன. ஒரு பெட்ரோல் பங்க் எதிர் பட்டது. அதைத் தாண்டி இரண்டு சிறிய கடைகள். செம்மேட் என்ற பெயர்ப்பலகையும் வரவேற்றது.. விசாரிக்க வண்டிகள் நிறுத்தப்பட்டன.

அருகேதான் ரிசார்ட் இருக்கு.. அறிந்து கொண்டவுடன் உற்சாகம் தொற்றிக் கொண்டது. சரியாக மாலை மயங்கும் வேளை...

ரிசார்ட்டில் நுழைந்தோம்..

ஆனால் அங்கே ரீ - சார்ட்:eek: நடந்து விட்டு இருந்தது..

என்ன அது?

தொடரும்.

சூரியன்
14-08-2010, 08:53 AM
" வாழ்க்கை வெறுத்துவிட்டால்
தற்கொலை செய்து கொள். !
தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

கையொப்பத்தை வாழ்க்கையில் முயன்று பார்க்கும் தைரியமுள்ள சிலரில் நீங்களும் ஒருத்தராகத் தெரிகிறீர்கள்.

சரி திட்டத்தைச் சொல்லுங்கள்!!!

நம்மகிட்ட தான் திட்டம் போட ஒரு பெரிய கூட்டமே இருக்கே.
மதி அண்ணா,ஆதி அண்ணா,ஆதவா அப்பறம் செல்வா அண்ணா.:)

த.ஜார்ஜ்
14-08-2010, 08:58 AM
வாழ்க்கையை கீழிருந்து தொடங்கும் யாரும் சடாரென நேராக உச்சிக்குப் போய்விடுவதில்லை. பலப் பல திருப்பங்கள் எதிர்படுகின்றன. ஒவ்வொரு வளைவிலும் மாற்றங்கள்.. சில இன்னும் மேலே கொண்டு செல்கின்றன, சில சற்று கீழே இறங்குகின்றன. ஆனால் இலக்கு மட்டும் உச்சியை நோக்கியே இருக்கிறது..



தத்துவம் வழிய வழிய.... நிஜங்களின் தரிசனம். இதமாய் இருக்கிறது எழுத்து.{ ஓ.. மேலே குளிர் ரொம்ப அதிகமோ?]

ஆதவா
14-08-2010, 09:06 AM
பயணம் என்பது முடிவைச் சொல்வது மட்டும் இல்லையே...

யாரோ பணம் கொடுத்து இருப்பார்கள்.. அப்படிக் கொடுக்க மறந்திருந்தாலும், பணியாரக்காரப் பாட்டி வட்டியும் முதலுமா வசூலிச்சிருச்சி...

(பணியாரமா என்று வாய் பிளக்காதீங்க.. பணியாரம், சூப்பு, கிழங்கு, அன்னாசி, பலாப்பழம், கொய்யாப் பழம் இன்னும் என்னென்னவோ இருக்கு,)

:frown::frown::frown:

நானும் அண்ணன் (இறந்தவர்) கோஷ்டிகளோடு சென்றால் சாப்பாடே சாப்பிடமாட்டோம். வழியில் என்ன கிடைக்கிறதோ அதைத்தான் உண்போம். எல்லாமே கிழங்கு, பழ, காய் வகைகளைச் சார்ந்ததாக இருக்கும்...

அந்த நாள் ஞாபகம்....

ரீ சார்ட் ஆ? என்ன அது... சொல்லுங்க சொல்லுங்க.

தாமரை
14-08-2010, 09:08 AM
நம்மகிட்ட தான் திட்டம் போட ஒரு பெரிய கூட்டமே இருக்கே.
மதி அண்ணா,ஆதி அண்ணா,ஆதவா அப்பறம் செல்வா அண்ணா.:)

திட்டம் போடவே திட்டம் போடணுமா..

சரிதான்..:icon_rollout:

சூரியன்
14-08-2010, 09:20 AM
திட்டம் போடவே திட்டம் போடணுமா..

சரிதான்..:icon_rollout:

அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல அண்ணா எனக்கு அந்த ஏரிய அவ்வளவு பழக்கம் இல்ல அதான்.:)

தாமரை
14-08-2010, 09:35 AM
பாச்சாதான் ரிசார்ட் புக் பண்ணினது. ரிசார்ட்லயே ஒதுக்குப் புறமா கொஞ்சம் விசேஷமா தெரிஞ்ச குளு, மணாலி அப்படின்னு இரட்டைக் குடில்களை ஒதுக்கச் சொல்லியிருந்தான். ஆனால் அதை யாரோ ஒதுக்கி விட்டார்கள்.

கோவள்ம், கோவா, சிம்லா தர்ரேன்னு வரவேற்பாளர் சொன்னார். ஆனால் கோவளமா? அது எங்களுக்குக் கேவலம்னு பாச்சா எகிறிகிட்டு இருந்தான்.

எப்படியோ கையைப் பிடிச்சு காலைப் பிடிச்சி.. கா.. கா.. காக்கா பிடிச்சு அந்த வரவேற்பாளர் கடைசியா சம்மதிக்க வ்ச்சிட்டாரு..

ரூமுக்கு வந்ததும் செய்த முதல் காரியம் எல்லா டைனிங் டேபிள்களையும் சேர்களையும் வெளிய எடுத்துப் போட்டதுதான். குளு மணாலி மற்றும் நாங்கள் இருந்த இடம் தவிர வேற எங்கும் விருந்தினர்கள் இல்லை. எனக்கே எனக்கா... ரிசார்ட் எனக்கே எனக்கா என்கிற மாதிரி வெட்ட வெளியில் எங்கள் டைனிங் டேபிள் ரெடியானது.

எல்லோரும் வசதியாக உடை மாற்றிக் கொண்டோம். ட்ராக் பாண்ட், ஷார்ட்ஸ், பைஜாமா, லுங்கி என அவரவருக்கு வசதியாக உடை இருந்தது.. உணவு கொண்டுவரச் சொல்லி உட்கார்ந்தோம்.

ரிசார்ட் மிகப் பசுமையாகவே இருந்தது. உரிமையாளர் விளம்பரப் பிரியர் போல தனக்குத் தானே கட் அவுட் எல்லாம் வச்சிகிட்டு இருந்தார். குடிசைகளுக்கு எதிரே மரங்கள்.. பலாப்பழ மரங்கள்.. தாமரை கவிதைகள் மாதிரி அங்கங்கே தொங்கிகிட்டு இருந்தது. பறிப்பார் யாருமில்லை...

பலாமரம் இருக்கே அது இசைக்கருவிகள் செய்யப் பயன்படும் மரம். அதனால் ஒரு மரம் இலட்சக் கணக்கில் விலைபோகும். ஆனால் முழு மரம் வளர்வதுக்கு 80 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். ஆகவே பேரனுக்குச் சொத்து சேர்க்கணும்னா பலா மரம் வளருங்கள். பையனுக்கு என்றால் தேக்கு மரம். உங்களுக்கே என்றால் மாவோ, வாழையோ எதோ ஒண்ணு..

காற்று சிலு சிலு என வீசிகிட்டு இருந்தது. கருப்பாய் ஒரு நாய் வேகமாக அந்தக் கோடிக்கும் இந்தக் கோடிக்கும் ஓடிக் கொண்டு குரங்குகள் வந்தால் துரத்திக் கொண்டிருந்தது.

முதலில் சிக்கன் கபாப், சில்லி சிக்கன் போன்ற வறண்டவர்கள் வர ஜே ஜே என ஆரம்பமானது கொண்டாட்டம்.

முதலில் பீர் சாப்பிடுவோருக்கு பீர் பாட்டில்கள் விநியோகம் செய்யப்பட்ட பின், ஒன்றாக 10 டம்ளர்கள் வைத்து அளவாய் விஸ்கி ஊற்றி, சோடா கலக்கப்பட்டது..

டம்ளரில் கிளம்பிய காற்றுக் குமிழ்கள் போல அடிவயிற்றிலிருந்து சிலிர்ப்புகள் உண்டாகி உச்சந்தலைக்குச் சென்று பட்டென்ற எனக்கே கேட்காத மெல்லியச் சத்தத்துடன் வெடிக்க ஆரம்பித்தன.. பன்க்கட்டிகள் போடப்பட்டன.

கண்ணிற்கு பொன்னிறம், நாசிக்கு நறுமணம், நாவிற்கு கசப்பு, தோலிற்கு குளுகுளுப்பு, காதுக்கு சியர்ஸ்..

ஐம்புலன்களும் ஆனந்தத்தை அனுபவிக்க ஆரம்பிச்சது.. பேச்சு பல பக்கங்களுக்குத் தாவியது.. கசமுசவென்ற பேச்சைத் தவிர்க்க புல்டாக்தான் அந்த ஐடியா சொன்னான்.

ஆளுக்கு 10 நிமிஷம் என்ன மட்டும் பேசலாம் சொல்லலாம் செய்யலாம்..

ஆரம்பமானது உச்சகட்ட கொண்டாட்டம்.

தொடரும்

சூரியன்
14-08-2010, 09:41 AM
பலாமரம் இருக்கே அது இசைக்கருவிகள் செய்யப் பயன்படும் மரம். அதனால் ஒரு மரம் இலட்சக் கணக்கில் விலைபோகும். ஆனால் முழு மரம் வளர்வதுக்கு 80 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். ஆகவே பேரனுக்குச் சொத்து சேர்க்கணும்னா பலா மரம் வளருங்கள். பையனுக்கு என்றால் தேக்கு மரம். உங்களுக்கே என்றால் மாவோ, வாழையோ எதோ ஒண்ணு..


இந்த விசயம் நல்ல இருக்கே.:icon_b:
மனசுல வச்சுக்கங்க.:rolleyes::rolleyes:

செல்வா
14-08-2010, 09:46 AM
இந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியேத் தொடராதானு யாரும் பாடலியா?

அமரன்
14-08-2010, 11:01 AM
என்ன ருசி... என்ன ருசி..

குறிப்பாக, தாமரைக் கவிதைகள் போல் தொங்கிக்கொண்டிருந்த பழங்கள் ருசியோ ருசி.

ஆதவா
14-08-2010, 11:44 AM
இந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியேத் தொடராதானு யாரும் பாடலியா?

நம்மளை வெறுப்பேத்தறதுக்குன்னே இவரு எழுதறாருன்னு நினைக்கிறேன்!!!! :p

அமரன்
14-08-2010, 03:15 PM
இந்த இடத்துல ஒரு உண்மையைச் சொல்லனும்.

மன்றம் வந்த புதிதில் உங்களை தலைக்கனம் பிடிச்சவராக நினைச்சிருந்தேன். நான் பேசிய மட்டிம் இன்னும் நிறையப்பேர் என்னைப் போல்தான்.

கௌதம் உங்கள் கல்லூரியாளர் என அறிந்தப்போ மேற்சொன்ன நினைப்பு தானாக நினைவுக்கு வந்துச்சு.

மன்னிச்சுக்கோங்கண்ணா.

தாமரை
14-08-2010, 04:27 PM
காரண காரியங்கள் அறியாதவங்களுக்கு தலைக்கனமா தெரிகிற விஷயங்கள் என்னிடம் பல இருக்கு..

எதோ ஒரு இடத்தில் அப்படியே ஃபிரீஸ் பண்ணிப் பார்த்தா நான் படுபயங்கர கர்வக்காரன்.

ஆனால் உங்களைப் போன்ற சில பேருக்குத்தான் தெரியும் என்னதான் நான் உங்களுடன் பேசினாலும் நான் எப்பவுமே பேசறது என்னோட மனசுகிட்டதான் என்று.

அந்த ஒன்றை புரிஞ்சிக்கிற வரை என்னைத் தள்ளி வச்சுப் பார்க்கத்தான் தோணும்..

அதை மாத்திகிட்டா நல்ல பேர் கிடைக்கும்தான். ஆனா என் மனசுக்கு திருப்தி இருக்காதே... அதனால் சிந்தனையை தட்டி விட்டுகிட்டே இருக்கேன்..

தாமரை
14-08-2010, 05:52 PM
உண்மையில் நிறைய பேசனும் என்று தொன்றினாலும் பத்து நிமிஷம் உனக்கே உனக்கு.. நீதான் இந்த நேரத்து ஹீரோ என்று சொல்லி விட்டால் பலருக்கு ஜூரமே வந்து விடுகிறது,,,

அந்தப் பத்து நிமிடத்தை எப்படிச் சிறப்பிப்பது என்று தெரியாத பலபேர்தான் வாய்கிழிய பலரை மணிக்கணிக்காக விமர்சித்துக் கொண்டிருக்கிறோம்.

சிலர் தங்கள் பழைய நினைவுகளைச் சொன்னார்கள். சிலர் தங்களது புது அனுபவத்தைச் சொன்னார்கள். சிகாமணியின் வாய்ப்பு வந்தது..

சிகாமணி பாட மிகவும் சங்கடப்பட்டான். உடனே அவனை எச்சரித்தோம்.. நீ பாடலைன்னா நாங்க பாடுவோம் என்று..

ஆளுக்கு நாலு வரி பாட்வதென்று தீர்மானமாயிற்று, என்முறை வந்தபோது நான் பாடிய பாட்டு

சேரன் வில்லொன்று கண்டேன் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6056)

சிகாமணி இசையமைத்து பல்லவி எடுக்க நான் அந்தக் காலத்தில் எழுதிய பாட்டு. எங்களுக்கு முதல் வெள்ளிக் கேடயம் பெற்றுத் தந்த பாட்டு..

பாடிவிட்டு கேட்டேன் சிகாமணியிடம்.. நம் பாட்டு இது ஞாபகம் இருக்கா..?

அப்போது

எனக்குப் பின்னால் இருந்த பீர் பாட்டில் டப்பென வெடித்துப் பொங்கியது.. நிஜ்மாவே.. உணர்ச்சி வசப்பட்டு தள்ளிட்டேன்னு நினைக்கிறேன்...

பொங்கிய பீருடன் அச்சம் என்பது மடமையடா என்ற சிகாமணியின் கணீர் குரலுடன் பாடல் தொடங்கியது.குளு மணாலியில் தங்கி இருந்தவர்கள் வெளியே வந்து எட்டிப்பார்த்தனர்.. ஓடிக் கொண்டிருந்த நாய் உட்கார்ந்து பாடல் கேட்கத் தொடங்கி விட்டது...

பாட்டு முடிந்தவுடன் பயங்கர கரகோஷம்.. குளு மணாலியில் தங்கி இருந்தவர்களும் வந்தனர்.

வந்தபோதுதான் தெரிந்தது அவர்தான் அந்த ரிசார்ட்டின் முதலாளி, உணர்ச்சி வசப்பட்டு சிகாமணி கையைப் பிடித்து குலுக்கிய அவர் ஒரு ஃபுல் பாட்டிலை பரிசாக அளித்தார்.

கொல்லிமலை சென்று பாடியவர் வெறுங்கையுடன் திரும்பியதில்லை... ஓரி எங்கோ ஒளிந்து கொண்டிருப்பதாகத்தான் தோன்றியது..

ஒருவேளை இந்த விளக்கத்தை அவர் படித்திருக்கக் கூடுமோ என்ற எண்ணம் தோன்றியது

http://www.tamilmantram.com/vb/showpost.php?p=376620&postcount=41

குபுக் என சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.. ஏறிடுச்சி என்றார்கள் சிலர். ஏறித்தானேடா வந்தோம் என்றேன் சிலேடையில்..


மேலும் பாடல்கள் அந்த இடம் களை கட்டியது.. எத்தனை கிளாஸ்கள் காலியாகி காலியாகி நிரம்பின யாருக்கும் தெரியாது..

அதன்பின் என் வாய்ப்பு வந்தது.. நம் மன்றத்தில் முயன்ற லாவணிக் கவிதைகள், அப்ஸ்ட்ராக்ட் கவிதைகள் போன்ற சில வித்தைகளைப் பகிர்ந்து கொண்டேன்.. (ஹி ஹி ஃபுல் காலி.. ) கூடவே இரசத்தில் நவரசமும்..

சாப்பாடும் வந்தது

சப்பாத்தி, நாட்டுக் கோழி குருமா, தோசைகள், விதம் விதமான சட்னிகள் என குறைந்த வகைகள்தான். ஆனால் ருசி..

மூன்று ஃபுல் 10 பீர் காலியாகி நான்காவது ஃபுல் ஓடிக் கொண்டிருந்தது. யார் எவ்வளவு என்ற கணக்கில்லை.. எல்லா விஷயங்களும் மறந்து போய் நண்பர்கள் மட்டுமே தெரிந்து கொண்டிருந்தார்கள்.. பழைய விஷயங்கள் நிறைய பகிரப்பட்டன.. ஒவ்வொருவரிடமும் ஒளிந்து கிடந்த மாணவன் வெளியே வந்தான்.. அத்தனைப் போலித்தனங்களும் மறைந்து போய் விட்டிருந்தது..

தொடரும்

ஆதவா
15-08-2010, 12:54 AM
இந்த இடத்துல ஒரு உண்மையைச் சொல்லனும்.

மன்றம் வந்த புதிதில் உங்களை தலைக்கனம் பிடிச்சவராக நினைச்சிருந்தேன். நான் பேசிய மட்டிம் இன்னும் நிறையப்பேர் என்னைப் போல்தான்.

கௌதம் உங்கள் கல்லூரியாளர் என அறிந்தப்போ மேற்சொன்ன நினைப்பு தானாக நினைவுக்கு வந்துச்சு.

மன்னிச்சுக்கோங்கண்ணா.


காரண காரியங்கள் அறியாதவங்களுக்கு தலைக்கனமா தெரிகிற விஷயங்கள் என்னிடம் பல இருக்கு..

எதோ ஒரு இடத்தில் அப்படியே ஃபிரீஸ் பண்ணிப் பார்த்தா நான் படுபயங்கர கர்வக்காரன்.

ஆனால் உங்களைப் போன்ற சில பேருக்குத்தான் தெரியும் என்னதான் நான் உங்களுடன் பேசினாலும் நான் எப்பவுமே பேசறது என்னோட மனசுகிட்டதான் என்று.

அந்த ஒன்றை புரிஞ்சிக்கிற வரை என்னைத் தள்ளி வச்சுப் பார்க்கத்தான் தோணும்..

அதை மாத்திகிட்டா நல்ல பேர் கிடைக்கும்தான். ஆனா என் மனசுக்கு திருப்தி இருக்காதே... அதனால் சிந்தனையை தட்டி விட்டுகிட்டே இருக்கேன்..

நம் மன்ற நண்பர்தான் அவர்.
அவரை சந்தித்தேன்.
தாமரையிடம் பேசினேன். அவர் தன்னை பெருமையாகவோ அல்லது கர்வமாகவோ நினைத்துக் கொண்டிருக்கிறார் என்றார்.
அப்படியா, நான் பேசியவரையில் அப்படியில்லையே என்றேன்.
இல்லை, அவர் முழு ஆளுமையோடு பேசுகிறார், அது நம்மை பாதிக்கிறது என்றார்.
அவரது குரல், ஆளுமைகளுக்கு உண்டானது, கம்பீரமானது, ஒருவேளை உங்களுக்கு அப்படித் தெரியலாம் என்றேன்.
இல்லையில்லை என்று மறுத்துக் கொண்டே வந்தார்..

இது முழுமையாக அறிந்து கொள்ளாதவர் கொடுக்கும் ஸ்டேட்மெண்ட்.
அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும், சொல்லாட்சியும் சுவைதிறனும் (இன்னபிறவும்) கொண்டவரென..

ஆதவா
15-08-2010, 01:02 AM
பாட்டில் எப்படி வெடித்தது?

1. தாமரை பாடிய பாட்டு
2. கர்ண கொடூர குரல்
3. இவங்க கிட்ட மாட்டிக்கிட்டோமே என்ற அச்சம்
4. உணர்ச்சியை அடக்காமல்......
5. அன்புரசிகன் தான் சொல்லணும்...

ஓரிக்கு பரிசு கொடுக்க பாட்டிலத் தவிர வேற ஏதும் கிடைக்கலயா.... அய்யகோ

நாம கொல்லி மலைக்குப் போனா ஆளுக்கு பத்து நிமிஷம் பேச..... உங்களுக்கு வாய்ப்பே இல்லை!!! :D :D

தாமரை
15-08-2010, 01:56 AM
கருத்த சாலை நீண்டு நெளிந்து முடிவில்லாமல் எங்கோ நீண்டிருந்தது, வேகம். வேகம் .வேகம். தலை தெறிக்கும் வேகம்.. இரத்தம் தலைக்கு சுர்ரென்று பாய்வதால் கண்களும் முகமும் சிவந்திருந்தன. தலையில் இறுக மாட்டிய ஹெல்மெட் நமீதா உடை போல் அவ்வளவு இறுக்கமாய் இருந்தது..

சீறிப் பாய்ந்து கொண்டிருந்தன சுற்றிலும் பைக்குகள். ஒருவரை ஒருவர் மிஞ்ச எங்கோ இருந்த எல்லைக் கோடு..

திடீரென பயம் வந்தது.. எனக்கே பைக் ஓட்டத் தெரியாதே.. எப்படி ஓட்டுகிறேன் என மிரட்சியாகவும் இருந்தது. தோற்றுவிடக் கூடாது முண்ணனியில் இருக்கிறோம் என்ற படபடப்பு உண்டாகியது. ஆக்ஸிலேட்டரை இயன்ற வரை முடுக்கினேன்.. புயல் வேகம் மின்னல் வேகம் என்றெல்லாம் சொல்லுவார்கள்..

ஆனால் பூமி சுழல்வது தனியே தெரியும் வேகம் என்று சொல்லலாம். அப்படித்தான் இருந்தது.. பூமிக்கும் எனக்கும் சம்பந்தமில்லாமல் பைக் உயர எழும்பி சறுக்கிக் கொண்டு சென்றது.. ரோட்டிற்கும் பைக்கிற்கும் அரையடி இடைவெளி இருந்தது... பறந்தது பைக.

வளைவுகள் கவலையில்லை... காற்றின் எதிர்ப்பு.. பிரச்சனையில்லை. இலக்கு எங்கிருக்கிறது கவலையில்லை.. பறப்பது பிடித்திருந்தது.,.. போட்டியை மறந்து விடுவேனோ? ஆமையிடம் தோற்ற முயலைப் போல ஏமாந்து விடுவேனோ?

சுர்ரென பயம் உள்ளங்கால் முதல் உச்சி வரை ஒரு தீப்பந்ததால் உரசிய மாதிரி எரிந்து ஏறியது. இவ்வளவு தூரம் ஜெயித்தாயிற்று.. விடக் கூடாது..

ஆக்ஸிலேட்டரை மீண்டும் முடுக்கினேன். அவர்கள் பின்னால் மிக அருகில் வந்து கொண்டிருக்கிறார்கள்.. எல்லையைத் தொடும் வரை ரிலாக்ஸ் செய்ய முடியாது.,.. எல்லையைத் தாண்டி அனுபவிக்கலாம்...

வேகத்தில பூமி வடக்கிலிருந்து தெற்காகச் சுழன்றது.. வெளிச்ச புள்ளிகளான நட்சத்திரங்கள் வெளிச்ச கோடுகளாகத் தோன்றின.. நிலவு பைக்கில் மாட்டிக் கொண்டது போல... பெரிய வால் நட்சத்திரம் போல சிதறிக் கொண்டிருந்தது.. . எல்லைக் கோடு அதோ தெரிகிறது.. நிலவு பாரமாகி வண்டியை பின்னுக்கு இழுக்கிறது. மற்றவர்கள் நெருங்குகிறார்கள்,..

டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....என்று ஒரே இரைச்சல காதே செவிடாகி விடும் போல... எல்லோரும் நெருங்கி விட்டார்கள்.. என்னைப் பதட்டம் தொற்றிக் கொண்டு விட்டது..

திடீரென ஒலித்தது அந்தக் குரல்...

"தூங்காதே தம்பி தூங்காதே"

சட்டென விழிப்பு வந்தது.. யாரோ ஒருவன் இதை அலாரத்திற்கு செட் செய்து வைத்திருக்கிறான்..

இன்னும் பைக்குகள் ஓடிக் கொண்டுதான் இருந்தன. குறட்டைதான்..

செல்ஃபோனை பையில் வைத்திருப்பான் போல.. சுந்தர்தான். ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி தான் இப்படி பழைய எம்.ஜி.ஆர் பாடல்களை கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.

எழுந்து கழிவறை சென்று வந்தேன்... அடித்து ஓய்ந்த பாடல் மீண்டும் ஆரம்பித்தது. சுந்தரும் எழுந்தான்...

மணி விடியற்காலை நாலு..

வாக்கிங் போலாமா என்றான் சுந்தர்...

தொடரும்

தாமரை
15-08-2010, 02:01 AM
பாட்டில் எப்படி வெடித்தது?

1. தாமரை பாடிய பாட்டு
2. கர்ண கொடூர குரல்
3. இவங்க கிட்ட மாட்டிக்கிட்டோமே என்ற அச்சம்
4. உணர்ச்சியை அடக்காமல்......
5. அன்புரசிகன் தான் சொல்லணும்...

ஓரிக்கு பரிசு கொடுக்க பாட்டிலத் தவிர வேற ஏதும் கிடைக்கலயா.... அய்யகோ

நாம கொல்லி மலைக்குப் போனா ஆளுக்கு பத்து நிமிஷம் பேச..... உங்களுக்கு வாய்ப்பே இல்லை!!! :D :D

பாட்டில் மயங்கியவன் பாட்டில் கொடுப்பது தான் சந்தேகமே..

ஓரிக்கு தாமரையைத் தெரிந்திருக்கு. அதான் அப்படி கொடுத்து நக்கல் செய்திருக்கிறார்..

"அய்யா" "கோ" என்றழைத்தவர் அய்யகோ எனக் காலொடிந்து போனது உண்மைதான்.. ஆனால் அய்யா "GO" என்று சொல்லமாட்டார்.. ஓரி,,

கண்டிப்பா அடுத்த அத்தியாயம் படிச்ச உடன் அன்புவே வெடித்தாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை.. :icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout:

தாமரை
15-08-2010, 03:12 AM
இல்லை, அவர் முழு ஆளுமையோடு பேசுகிறார், அது நம்மை பாதிக்கிறது என்றார்.
அவரது குரல், ஆளுமைகளுக்கு உண்டானது, கம்பீரமானது, ஒருவேளை உங்களுக்கு அப்படித் தெரியலாம் என்றேன்.
.

நல்ல வேளை ஆதவா இது எழுத்துக்களை பார்த்து படிக்கும் இடமாப் போச்சுது.. இல்லை குரல்கள் என்றிருந்தால் ...?

மேடையேறிப் பேசிய அந்தக் காலங்களை நினைச்சுப் பார்க்கிறேன்.. அன்று இருந்த வென்றே தீருவேன் என்ற வெறி... வார்த்தைகளின் சிக்கல்களில் மாட்ட வைத்து எக்காளமிட்டு ஒலிக்கும் உரத்த குரல் (அரை கிலோ மீட்டருக்கு கேட்கிற மாதிரி மைக் இல்லாம கத்துவமாக்கும்..:wuerg019::wuerg019::wuerg019:)

என்னை பலர் இப்போ ஆள் வச்சு அடிச்சுப் போட்டிருப்பாங்க...

போச்சு போச்சு எல்லாம் போச்சு... நீங்க எல்லாம் ஒரு மிகப் பெரிய அரசியல்வாதியை இழந்துட்டீங்க...:icon_rollout::icon_rollout::icon_rollout:

மதி
15-08-2010, 05:38 AM
நியூட்டனின் மற்றும் இதர விஞ்ஞானிகளின் விதிகள் அனைத்தும் பொய்த்துப் போகும் இதன் முன்... ஹிஹி.. ஆல்கஹால்.. ஆளுக்கு ஆள்..

சிவா.ஜி
15-08-2010, 05:56 AM
படு சுவாரசியமா போய்க்கிட்டிருக்கு....நிதானமா வாரேன். கொல்லிமலை...நிஜமாவே...கொல்லுது.....அசத்துங்க தாமரை.

ஆதவா
15-08-2010, 07:20 AM
பாட்டில் மயங்கியவன் பாட்டில் கொடுப்பது தான் சந்தேகமே..

.. :icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout:

செம டைமிங்....... எதிர்பாக்கல.

அதுசரி, தூக்கத்தில தானே ஓட்டனீங்க.. நல்லவேளை.
நிலான்னவுடனே நான் கூட நடிகை நிலா:D வா இருக்குமோன்னு நெனச்சு பயந்துட்டேன்:D


போச்சு போச்சு எல்லாம் போச்சு... நீங்க எல்லாம் ஒரு மிகப் பெரிய அரசியல்வாதியை இழந்துட்டீங்க..

தமிழ்நாடு தப்பிச்சுது! :aetsch013::D

அமரன்
15-08-2010, 08:17 AM
நம் மன்ற நண்பர்தான் அவர்.
அவரை சந்தித்தேன்.
தாமரையிடம் பேசினேன். அவர் தன்னை பெருமையாகவோ அல்லது கர்வமாகவோ நினைத்துக் கொண்டிருக்கிறார் என்றார்.
அப்படியா, நான் பேசியவரையில் அப்படியில்லையே என்றேன்.
இல்லை, அவர் முழு ஆளுமையோடு பேசுகிறார், அது நம்மை பாதிக்கிறது என்றார்.
அவரது குரல், ஆளுமைகளுக்கு உண்டானது, கம்பீரமானது, ஒருவேளை உங்களுக்கு அப்படித் தெரியலாம் என்றேன்.
இல்லையில்லை என்று மறுத்துக் கொண்டே வந்தார்..

இது முழுமையாக அறிந்து கொள்ளாதவர் கொடுக்கும் ஸ்டேட்மெண்ட்.
அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும், சொல்லாட்சியும் சுவைதிறனும் (இன்னபிறவும்) கொண்டவரென..

இந்த உரையாடல் எனக்கும் இன்னொருவருக்கும் இடையிலும் நடந்திருக்கே ஆதவா..

தாமரை
15-08-2010, 08:40 AM
நியூட்டனின் மற்றும் இதர விஞ்ஞானிகளின் விதிகள் அனைத்தும் பொய்த்துப் போகும் இதன் முன்... ஹிஹி.. ஆல்கஹால்.. ஆளுக்கு ஆள்..

All கா All இன்னும் இருக்கு...

தாமரை
15-08-2010, 08:41 AM
படு சுவாரசியமா போய்க்கிட்டிருக்கு....நிதானமா வாரேன். கொல்லிமலை...நிஜமாவே...கொல்லுது.....அசத்துங்க தாமரை.

அடியே கொல்லுதே,,,

பாடறதுக்கு அங்க யாருமில்லை.,.. அதான் மேட்டரே....:icon_ush::lachen001:

தாமரை
15-08-2010, 08:46 AM
இந்த உரையாடல் எனக்கும் இன்னொருவருக்கும் இடையிலும் நடந்திருக்கே ஆதவா..



நான் யாரையும் புகழ்வதில்லை என்பதுதான் முக்கியக் காரணம் என்று நினைக்கிறேன்.

அந்தக் கலை எனக்குக் கைவராத ஒண்ணு..

தாமரை
15-08-2010, 09:47 AM
இந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியேத் தொடராதானு யாரும் பாடலியா?

உங்க ஏக்கம் புரியுது செல்வா..:aetsch013::aetsch013::aetsch013:

அமரன்
15-08-2010, 09:53 AM
நான் யாரையும் புகழ்வதில்லை என்பதுதான் முக்கியக் காரணம் என்று நினைக்கிறேன்.

அந்தக் கலை எனக்குக் கைவராத ஒண்ணு..

இருக்கலாம் அண்ணா..

அதே நேரம் உங்கள் புகழ்ந்தல், உங்கள் சினேகம் வேண்டும் என்ற எதிர்பார்ப்பும், கிட்டாததால் ஏற்பட்ட அங்கலாய்ப்பும் என்றும் நினைக்கிறேன்.

செல்வாக் கூடச் சொல்வான்..

அவரு திரியில் நாம என்னத்தை எழுதுறது. எல்லாத்தையும் அந்தாளே எழுதிடறாரே..:)

தாமரை
15-08-2010, 03:21 PM
அவரு திரியில் நாம என்னத்தை எழுதுறது. எல்லாத்தையும் அந்தாளே எழுதிடறாரே..:)


இது எப்ப இருந்து அமரா என் திரி உன் திரி எந்திரி மந்திரி என்று???

இந்த வித்தியாசத்தை ஒழிக்கத்தானே ....... எவ்வளவோ செய்தோம்..

தாமரை
15-08-2010, 03:54 PM
சுந்தரும் நானும் கிளம்பி வெளியே வந்தோம். ஆளவரமற்ற மலைக்காடு.. மெல்ல ரிசார்டை விட்டு வெளியே வந்து சாலையில் மேல் நோக்கி நடக்க ஆரம்பித்தோம்..

இன்னும் பறவைகள் விழிக்க வில்லை என்று நினைக்கிறேன்.. நாங்கள் இருந்தது மேற்குச் சரிவு அதுவும் இன்று பௌர்ணமி.. பாரதிராஜா பட சூட்டிங்கில் ஹனி ஐ ஸ்ரங் த கிட்ஸ் என்பது போல் நாங்கள் சுருங்கி ஏதோ ஒரு தேவதையின் வெள்ளுடையில் சிக்கிக் கொண்ட மாதிரி பனி எங்களைச் சூழ்ந்து கொண்டிருந்தது.. சிறிது தூரம் வரை பாதை தெரிந்தது..

பழக்க தோசம்.. சாலையின் ஓரம் கிடந்த குச்சிகளில் தடிமனும் நீளமுமாக இருந்ததை எடுத்துக் கொண்டோம். (பாழடைந்த மண்டபம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9598)).


மெல்ல நடந்தோம்..

கொல்லிமலையில் சித்தர்கள் இருப்பாங்களாமே.. சுந்தர்தான் ஆரம்பித்தான்.

இருக்கலாம். இப்பகூட நம்மைச் சுத்தி இங்க எங்கியாவது இருக்கலாம்.. நம் பின்னால் நம் என்ன பேசறோம்னு கேட்டுகிட்டே நடக்கலாம். அல்லது நமக்குள்ளே நுழைந்து வெளியேறிகிட்டும் இருக்கலாம்..

சித்தர்கள் என்ற பின்னே பேச்சு நிற்குமா? ஆன்மீகம் பேச்சில் ஆரம்பித்தது. நான் காசி கயா அலகாபாத் சென்றதைச் சொல்ல அவன் வருடா வருடம் காசி செல்வதைப் பற்றிச் சொன்னான்.

கண்மணியின் சித்தகிரியைப் பற்றியும் சொன்னேன்..
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=18322


பேச்சு வளர வளர பாதையும் வளர்ந்து கொண்டே போனது..

சற்றே வானம் தெளிவடையத் தொடங்கியபோது இருவரும் வெகுதூரம் வந்துவிட்டிருந்தோம்.. வளர்ந்த குழந்தைகள் குளித்தது போல் மரங்கள் நின்றன. வானத் தாய் மேகத் துவாலையால் அவர்களின் தலைகளை துவட்டிக் கொண்டிருக்கிறாள். அவைகளின் மீதிருந்து சில துளிகள் உதிர்ந்து எங்களையும் அந்தக் குழந்தைகளில் ஒன்றாக மாற்றிக் கொண்டு இருந்தன.

பறவைகள் விழித்து விட்டன.. கூவும் பறவைகள், கத்தும் பறவைகள் கீச்சிடும் பறவைகள் அலறும் பறவைகள் எனப் பறவைகளில்தான் எத்தனை வகை. எங்கே இருந்தன இத்தனை பறவைகள் நேற்று..

வெளிச்சம் சற்றே அதிகரித்திருந்தது.. சலசலப்புகள் கேட்க ஆரம்பித்திருந்தது. விலங்குகள் நடமாட்டம். சித்தர்கள் நடமாட்டம் போலவே கண்ணிற்குத் தெரியாமலேயே இருந்தது.

எங்கும் ஈரம்.. வடிகட்டிய ஈரக்காற்று.. நுரையீரல் நிரம்ப இழுத்து விட்டோம். எத்தனை ஆண்டுகள் ஆகுமோ மறுபடி இப்படிச் சுத்தமான காற்றைச் சுவாசிக்க.. வித்தியாசமான மணத்துடன் கூடிய அந்தக் காற்று சுவாசிக்க சுவாசிக்க களைப்பு பறந்து புத்துணர்வு மட்டுமே எஞ்சி இருந்தது..

மணி 5:30 என்றது கடிகாரம். சரி திரும்புவோம் என ஆரம்பித்தோம். போன வழி மேடு என்பதால் திரும்பும் வழி இறக்கமாய் இருந்தது.. வானம் வெளுத்துக் கொண்டிருந்தது,

6:30 க்குத் திரும்பிவிட்டோம். சுடசுட காஃபி தயாராக இருந்தது...

தொடரும்

அமரன்
16-08-2010, 06:57 AM
இது எப்ப இருந்து அமரா என் திரி உன் திரி எந்திரி மந்திரி என்று???

இந்த வித்தியாசத்தை ஒழிக்கத்தானே ....... எவ்வளவோ செய்தோம்..

கருத்து என்னதில்லங்கோ..

அமரன்
16-08-2010, 07:00 AM
நானிலமும் எனக்குப் பிடிக்கும் என்றாலும் குறிஞ்சி மீதெனக்கு முதற்பிரியம்.

வர்ணனை என்னை மயக்குது.

படம் எடுக்கலையோ..

ஆதவா
16-08-2010, 07:07 AM
மலைக்காடா??? அய்யோஒ வேண்டவே வேண்டாம்.... எனக்கு மலையென்றாலோ காடென்றாலோ நினைவுக்கு வருவது லெஷ்மி தான் (அம்பாஸிடன் கார்) அதுவும் இரவு....

இருந்தாலும் இங்க மன்றம் கூட்டமா இருந்தா..... செமையா இருக்கும்...

அனிருத் ஸ்வேதா (குழந்தைகள்)
ஆதி, நான், செல்வா, மதி, டக்ஸ் (இளசுகள்)
தாமரை, தலை, சிவா.ஜி, மன்மி, ஷீநிசி, ஜார்ஜ், மனோ.ஜி (??)
சமுத்ராசெல்வம், மலரு, கண்மணி, அகிலா ஆர்டி, மிரா (பெண்கள்)
அன்பு அக்னி, அமரன், ஓவியா, கீதம் போன்ற அயல் நண்பர்கள்/சகோதரிகள்
அப்பறம், காணாமல் போனவர்கள்,
கண்டும் காணாமல் இருப்பவர்கள்,
காணாமல் போனவர்களைப் போல நடிப்பவர்கள் :redface:

அடா அடா..... என்னா அருமையா இருக்கும் கூட்டம்...!!!!!!
நெனச்சுப் பார்த்தேன்..... !!!! :icon_b:
கனவு.:frown:

தாமரை
16-08-2010, 07:08 AM
கருத்து என்னதில்லங்கோ..

உங்க வாயில் இருந்து வர்ரப்போ அதை நீங்க ஒத்துகிட்டதாத்தான் அர்த்தம்.:D

தாமரை
16-08-2010, 07:13 AM
நானிலமும் எனக்குப் பிடிக்கும் என்றாலும் குறிஞ்சி மீதெனக்கு முதற்பிரியம்.

வர்ணனை என்னை மயக்குது.

படம் எடுக்கலையோ..

நான் படம் எடுக்கலை.. நண்பர்கள் எடுத்தார்கள்..

அதான் மறுபடி போவமில்ல அப்ப எடுத்துக்கலாம்..

தாமரை
16-08-2010, 07:14 AM
மலைக்காடா??? அய்யோஒ வேண்டவே வேண்டாம்.... எனக்கு மலையென்றாலோ காடென்றாலோ நினைவுக்கு வருவது லெஷ்மி தான் (அம்பாஸிடன் கார்) அதுவும் இரவு....

இருந்தாலும் இங்க மன்றம் கூட்டமா இருந்தா..... செமையா இருக்கும்...

அனிருத் ஸ்வேதா (குழந்தைகள்)
ஆதி, நான், செல்வா, மதி, டக்ஸ் (இளசுகள்)
தாமரை, தலை, சிவா.ஜி, மன்மி, ஷீநிசி, ஜார்ஜ், மனோ.ஜி (??)
சமுத்ராசெல்வம், மலரு, கண்மணி, அகிலா ஆர்டி, மிரா (பெண்கள்)
அன்பு அக்னி, அமரன், ஓவியா, கீதம் போன்ற அயல் நண்பர்கள்/சகோதரிகள்
அப்பறம், காணாமல் போனவர்கள்,
கண்டும் காணாமல் இருப்பவர்கள்,
காணாமல் போனவர்களைப் போல நடிப்பவர்கள் :redface:

அடா அடா..... என்னா அருமையா இருக்கும் கூட்டம்...!!!!!!
நெனச்சுப் பார்த்தேன்..... !!!! :icon_b:
கனவு.:frown:

பென்ஸ், அல்லிராணி எல்லாம் மறந்தாச்சி போல இருக்கே!!!

ஆதவா
16-08-2010, 07:33 AM
பென்ஸ், அல்லிராணி எல்லாம் மறந்தாச்சி போல இருக்கே!!!

அல்லிராணி, ஆளைக் காணோம்,.
பென்ஸ் ஆ? யாருங்க அது!!:confused:

அப்படிப்பார்த்தா,
பிரதிப் கேடி, ராகவன், சர்சரன் அப்படின்னு பலபேர் இருக்காங்களே...

தாமரை
16-08-2010, 07:34 AM
அல்லிராணி, ஆளைக் காணோம்,.
பென்ஸ் ஆ? யாருங்க அது!!:confused:

அப்படிப்பார்த்தா,
பிரதிப் கேடி, ராகவன், சர்சரன் அப்படின்னு பலபேர் இருக்காங்களே...
:confused: சரியான ஸ்மைலிதான்..
இந்த ஸ்மைலி மாதிரியே தலையில் முடி நட்டுகிட்டாரே அவர்தான். :sprachlos020::sprachlos020::sprachlos020:

தாமரை
16-08-2010, 08:57 AM
தங்கி இருந்த ரிசார்ட்டில் ஒரே ஒரு குறைதான். தண்ணீர் மஞ்சளாக இருந்தது. புது நீர் என்பதனால் இருக்கலாம்.

ஆகாச கங்கையில் குளிச்சிக்கலாம் எனப் பலர் சொன்னாலும் நானும் பெரிசும் மட்டும் ஒரு முறை குளிச்சோம்.

சூடான இட்லி, வடை, பொங்கல், உப்புமா என காலை டிபனை சூட்டோடு சூடாக முடித்து விட்டுக் கிளம்பினோம்.

முதலில் அருவியில் குளித்து விட்டு அப்புறம் அறப்பளீஸ்வரர் தரிசனம்.

வாகனங்கள் அந்த கறுத்த சாலையில் மெல்ல ஊர ஆரம்பித்தன. அங்கங்கே சாலையோரம் பழவகைகளை வைத்துக் கொண்டு பலர் விற்றுக் கொண்டிருந்தார்கள். சோளக்காடு என்ற ஊரில் சில கடைகள் இருந்தன.. எல்லாம் தாண்டி அறப்பளீஸ்வரர் கோவில் அருகே வந்தோம்.

கோவில் அருகே காரை நிறுத்தினேன். ஆடிப் பௌர்ணமி என்பதால் கொஞ்சம் கூட்டம் இருக்கத்தான் செய்தது. ஒரு ஓரமாய் இடம் இருக்க, காரை ரிவர்ஸ் எடுத்து பார்க் செய்தேன்.

வேன் டிரைவர் இறங்கி வந்தார்.. இன்னும் கொஞ்சம் ரோட்ல நீட்டிகிட்டு இருக்கு நான் சொல்றேன் வாங்க என பின்னால் இருந்து சிக்னல் காட்ட

இன்னும் கொஞ்சம் பின்னால நகர்த்தினேன். வண்டி முழுக்க சாலியில் இருந்து உள்ளே வந்து விட்டது.

காரில் இருந்து இறங்கினேன். காரின் பின்னே ஒரு பெரும் பள்ளத்தாக்கு அங்குதான் அருவி ஓடுதாம்.

போய் எட்டிப் பார்த்தேன். எதேச்சையாக காரின் பின்புறம் பார்க்க...

காரின் இடது பின் சக்கரம் மிகச் சரியாக பள்ளத்தாக்கின் விளிம்பில் இருந்தது. கொஞ்சம் அசைந்தாலும் காரை காயலான் கடைக்காரனை அழைத்து வந்துதான் எடுக்க வேண்டும்.

சுற்றும் முற்றும் ஓடி சில கற்களையும் கட்டைகளையும் கொண்டுவந்து முன் சக்கரத்திற்கு பின்னால் முட்டுக் கொடுத்தோம். அப்புறமா காரில் ஏறி காரை சற்று முன்னுக்குக் கொண்டு வந்து மற்படி கல் கட்டையால் அரண் கட்டிவிட்டு இறங்கினோம்.

அருவியின் மேல்பகுதி அறப்பளீஸ்வரர் கோவிலின் இடது பக்கம் இருக்கிறது. அங்கிருந்து 180 அடி சரேலென்று கீழே விழும்.

அருவியின் மேல் பக்கம் தடுப்பணை மாதிரி கட்டி இருப்பார்கள். பெண்கள், குழந்தைகள், நீர் வீழ்ச்சிக்கு இறங்க முடியாதவர்கள் அங்கே குளிப்பார்கள்.

முடிந்தவர்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம் (எழுநூற்றுச் சொச்சம் படிகள்) கீழே இறங்கி குளிக்கலாம். முக்கால் வாசிப் பேர் நீர்வீழ்ச்சிக்குப் போகலாம் என்ற போது, முதலில் மேலே இருக்கும் அருவியைப் பார்த்துட்டு கீழே போகலாம் என்றேன் நான்..

ச்சீ.. வாடா வயசாயிப் போச்சா உனக்கு என்று பாச்சா ப்ரஸ்தபிக்க

இல்லை.. மூக்குத்தி மீன்களைப் பார்க்கவேணும் என்றேன் நான்...

தொடரும்

தாமரை
16-08-2010, 12:23 PM
மூக்குத்தி மீன்கள்.. கொல்லி மலை ஸ்பெசல்.

ஐயாறு அருவியில் உள்ள மீன்கள் கொஞ்சம் ஸ்பெஷலானவை..

(அவ்வளவு ருசியான்னு எல்லாம் கேக்கப்படாது.. நேத்து மாதிரியா இன்னிக்கு இருக்கேன்? நேத்து இருந்தது வேற தாமரை.. இன்னிக்குப் பாருங்க எவ்வளவு நல்ல பையனா இருக்கேன்.)

கோயிலின் அருகில் ஐயாறு நதியில் மீன்களுக்கு பக்தர்கள் உணவு பொருட்களை வழங்கியும், மீனை பிடித்து மூக்கு குத்தியும் மகிழ்வது வழக்கம். இதனால் மூக்குத்தி மீன்கள் என்று பெயர். இந்தப் பெயரில் ஒரு சினிமா கூட வந்திருக்கு.

ஒரு சமயம், பக்தர் ஒருவர் அறியாமையால் மீனைப்பிடித்து அறுத்து சமைக்க ஆரம்பித்தார். மீன் குழம்பு கொதிக்க ஆரம்பித்தது. அப்போது கொதிக்கும் குழம்பில் இருந்து மீன்கள் தாவிக்குதித்து ஓட ஆரம்பித்தன. எனவே, இந்த கோயில் ஈஸ்வரனுக்கு, ""அறுத்த மீனை பொருத்தி உயிர்ப்பித்த அறப்பளீஸ்வர்'' என்ற பெயர் உண்டு.

அறப்பளீஸ்வரர் மீன் வடிவில் இருப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். இதனால் கோயிலுக்கு செல்வதற்கு முன்னரே பக்தர்கள் ஆற்றில் உள்ள மீன்களுக்கு சாதம், பலவகை தின்பண்டங்களை அளித்து வழிபாடு செய்கின்றனர். அதன்பின்பே அவர்கள் கோயிலுக்கு சென்று வணங்குகின்றனர்.

நானும் இப்ப பக்தன் தானே!.. மீன்களைப் போய்ப் பார்த்து ஒரு ஹலோ சொல்ல வேணாமா?

கதையைச் சொன்னதும் சரி பார்ப்போம் என எல்லோரும் சொல்லவே பொரி வாங்கிகிட்டுப் போனோம்.

அருவியின் கரையில் இருந்து மீன்களுக்கு பொரி போட்டபோது

"மவனே இதுவே வேற எடமா இருந்தா எங்களைப் பொரிச்சிருப்பீங்க.. இப்ப பொரி போடறீங்களா"

என்கிற மாதிரி எல்லாம் மனசில எதுவும் சொல்லித் திட்டிச்சோ தெரியலை. ஆனால் பொரியை சாப்பிட எகிறிக் குதித்தன. மூக்கு குத்தின மீன் என்று பார்த்தால் ஒண்ணு கூட கண்ணுக்கு கிடைக்கல.. எதோ சில மீன்களுக்கு புள்ளியா அடையாளம் மாதிரி தெரிஞ்சது.

மீன்களுக்கு அன்னமிட்ட பிறகு, ஆகாச கங்கையில் நீராட இறங்கினோம். ஆரம்பத்தில் மிக சாதாரணமான சரிவா தெரிஞ்ச படிகளில் ஜாலியா மக்கள் இறங்கினாங்க. ஆனால் எனக்குத் தெரியும். இது இப்படியே தொடராது என்று..

ஒரு 100 படிகள் இறங்கின பின்னால் எதிரில் படிகளைக் காணோம். குனிந்து பார்த்தால்தான் தெரிஞ்சது.. அவ்வளவு நெத்துக் குத்தலாய் படிகள் இறங்க ஆரம்பிச்சது.

பாஸ்கருக்கு மூட்டு வலி இருந்ததால் இறங்க முடியலை. ஆப்பு உடம்பைத் தூக்கிகிட்டு இறங்க முடியலை அவனும் 300 படியில் அவுட். இரண்டு பேர் மேல இருந்தே வரலைன்னு சொல்லிட்டாங்க.. ஆக ஒரு பத்து பேர் மட்டும் இறங்கினோம்.

மத்தியில் ஒரு இளைப்பாறும் இடத்தில் ஆப்பும் பாஸ்கரும் உட்கார்ந்துகிட்டாங்க. அதற்கு மேல் படிகள் வளைந்து வளைந்து போய்க்கொண்டிருந்தன. இன்னும் நானூத்திச் சொச்சம் படிகள் இருக்கு.

மலையில் சில இடங்களில் குகைகள் இருந்தன. சிலர் அங்க ஏறி ஃபோட்டோ எடுத்துகிட்டாங்க. மெதுவா ஆனா ஸ்திரமா நாங்க இறங்கிகிட்டு இருந்தோம். இன்னும் அருவி கண்ணுக்குத் தெரியலை. ஆனால் அருவி விழும் பேரிரைச்சல் காதில் கேட்க ஆரம்பிச்சது..

அடிவாரம் வரை இறங்கியாச்சி. வெண்மேகம் போல தண்ணீர் காற்றில் விரவி இருக்க ஒரு திருப்பம் மாதிரி வந்தது..

அங்கே

உயரத்தில் இருந்து சோவென அருவி கொட்டிக் கொண்டு இருந்தது. தண்ணீர் நேரடியா விழுவதால் அடி பலமாத்தான் இருக்கும் என்று தோணிச்சி.. அருவி விழுந்து குளம் போல் தேங்கி வழிந்து ஓடிக் கொண்டிருந்தது..

தண்ணீர் சில்லென்று ஒரு மாதிரி பசுமஞ்சள் நிறத்தில் ஓடிகிட்டு இருந்திச்சி. அருவியில் தலை நீட்டினால் தலை மேல் கல்லைப் போட்ட மாதிரி இருக்குமோ அப்படின்னு பயமா இருந்தது.. 30 வினாடிகளுக்கு மேல அருவியில் நிற்பது பெரிய சாதனையா இருக்கும் போல.

தண்ணீரில் இறங்கினோம்.. மெல்ல மெல்ல முன்னேறி அருவி அருகில் சென்றோம்.

மெதுவாக முதுகைக் காட்ட

ஈவ் டீசிங் செஞ்சவனுக்கு பொதுமாத்து விழற மாதிரி தட தடன்னு கணக்கு வழக்கில்லாம அடி விழுந்தது!!

தொடரும்

ஆதவா
16-08-2010, 01:14 PM
இதைப் படிச்சதும், நீங்களும் அனிருத்தும் திருமூர்த்தி மலையில் குளித்த ஞாபகம் வருது!!!!

என்ஜாய்!! :icon_b:

தாமரை
16-08-2010, 01:16 PM
இதைப் படிச்சதும், நீங்களும் அனிருத்தும் திருமூர்த்தி மலையில் குளித்த ஞாபகம் வருது!!!!

என்ஜாய்!! :icon_b:

அதுக்குப் பின்னாடியும் தினமும் குளிச்சிகிட்டு தான் இருக்கோம் என்பதை மிகத் தெளிவாக தெரியப்படுத்திக் கொள்கிறேன்

அமரன்
16-08-2010, 01:16 PM
வயசானவங்க எப்பவும் தம்மை இளமையானவங்கன்னு சொல்லிக்குவாங்க.

இளசுகள் அப்படீல்ல.

படியிறங்கிய காதை இதையும் உறுதிப்படுத்துது.

தாமரை
16-08-2010, 01:22 PM
வயசானவங்க எப்பவும் தம்மை இளமையானவங்கன்னு சொல்லிக்குவாங்க.

இளசுகள் அப்படீல்ல.

படியிறங்கிய காதை இதையும் உறுதிப்படுத்துது.

ஆமாம் அமரன்.. முடிக்கு(இருக்கற வரைதான்) சாயமிட்டு, முகத்துக்கு கிரீம் பூசி, ஜீன்ஸ் டீ ஷர்ட் போட்டு, இளமை "ஆனவங்க" வேற..:icon_rollout:

இளமையாவே இருக்கறவங்க வேற.. :icon_rollout::icon_rollout::icon_rollout:

தாமரை
16-08-2010, 05:35 PM
இதைப் படிச்சதும், நீங்களும் அனிருத்தும் திருமூர்த்தி மலையில் குளித்த ஞாபகம் வருது!!!!

என்ஜாய்!! :icon_b:

ஆமால்ல.. அப்பகூட நீ குளிக்கலதானே!!:icon_ush::icon_ush::icon_ush:

தாமரை
16-08-2010, 06:07 PM
கொஞ்சம் அருவியில் அடிவாங்கறது.. கொஞ்சம் தேங்கி நிற்கும் தண்ணீரில் முங்குவது.. இப்படி ஒரு 20 நிமிஷக் குளியல். இறங்கிய அசதி எல்லாம் ஓடியே போச்சு..

புத்துணர்வோட கிளம்பி படியேறத் துவங்கினோம்..

20 படிகள் ஓய்வு, 20 படிகள் ஓய்வு.. இப்படிப் படிப்படியாத்தான் படி ஏறினோம்.

இந்த சரிவுகளில்தான் எங்கயோ கோரக்கர் வாழ்ந்த குகையும்.. காலங்கி நாதர் வாழ்ந்த குகையும் இருக்காம்..

இறங்க 30 நிமிஷம் என்றால் ஏற 1 மணி நேரத்துக்கு மேல் ஆனது.. இவ்வளவு உழைப்பை ஒரேடியாக செய்து பழக்கப்படாத தொடைத்தசைகள் கர்வத்தில் இறுமாந்து விரைத்துக் கொண்டு இருந்தன.

மேலே ஏறியவுடன் கண்ணில் பட்டது சூப்பு கடை..

கொல்லி மலை பாறை இடுக்களில் ஒரு கிழங்கு கிடைக்கும். ஆட்டின் காலைப் போல ரோமம் அடர்ந்த கிழங்கு. இதை உப்பு, மிளகு போட்டு சூப்பாக செய்தால் ஆட்டுக்கால் சூப் போலவே ருசி இருக்கிறது.

இது... மூட்டுவலி, உடல் உபாதை, உடல் சூடு, போன்ற பல வகையான நோய்களைப் போக்கும். ஆளுக்கு இரண்டு டம்ளர் குடித்தோம். ருசி மிகவும் பிடித்துப் போய் விட்டது. ஆட்டுக்கால் கிழங்கு கிலோ 20 ரூபாய்க்கு கிடைத்தது. 6 மாசம் கூட வைத்திருந்து சூப் போட்டு சாப்பிடலாம். இரண்டு கிலோ வாங்கி காரில் போட்டுக் கொண்டேன்.. மற்றவர்களும் வாங்கினார்கள்.

உடம்பு இப்போ தெம்பாகி விட்டது. மணி பனிரெண்டை நெருங்கி விட்டது. தரிசனம் செய்யலாம் அப்படின்னு கோயிலுக்குள் போனோம்.

கோவிலின் படிகளில் தான் பார்த்தேன். மூக்குத்தி மீன்களைச் செதுக்கி வைத்திருந்தார்கள். அறப்பளீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி, விசுவநாதர், விசாலாட்சி, மஹாலஷ்மி, அனுமன், ஆறுமுகன், ஆனைமுகன் இப்படி அனைவரையும் வணங்கினோம்.

கோவிலின் சுவரில் உள்ள கற்களில் கல்வெட்டுகள் செதுக்கப்பட்டு இருக்கு. இது இராஜராஜனின் பாட்டி செம்பியன் மாதேவி காலத்தில் செதுக்கப்பட்ட கல்வெட்டு உள்ளது.

கூடவே இந்தப் பாடலும்

"அச்சுதன் கொங்கி லறப்பள்ளி நாதர் ஆற்றிலுறை
பச்சைநன் மீனைப் பிடித்தறுத் தாக்கப் பசுந்துருக்கர்
கச்சணி கொங்கை அறச்சாலை வல்லிகயல் குதிக்க
மச்சமும் துள்ளி விளையாடு மேகொங்கு மண்டலமே!"

கொல்லி மலை மூலிகைகளைப் பற்றி நக்கீரன் பதிப்பகம் ஒரு நூலே பிரசுரிக்க இருக்கிறது.

அறப்பள்ளி ஈசனைத் தொழுத பின்னே வெளியே வந்தோம்.. அடுத்தது முக்கிய வேலை. பழங்கள் வாங்குவது..

கோயிலைச் சுற்றி இருந்த பல கடைகளில் விலை விசாரித்தோம். கோவிலில் வாங்குவதை விட தலைச்சுமையாய் கொண்டுவருபவர்களிடம் வாங்கலாம் என்று எண்ணி

மூன்று பலாப்பழம் மற்றும் சிறிது அன்னாசிப்பழம் மட்டும் வாங்கிக் கொண்டு கீழிறங்கத் தொடங்கினோம். வழியில் ஒருவர் 10 இருபது பலாப்ழங்கள் வைத்திருந்தார். பலாப்பழங்களில் சில வகைகள் இருக்கும் போல.. பச்சையாய் உருண்டையாய் சில பழங்கள் இருந்தன. சற்றே மஞ்சள் கலந்த பச்சையாய் நீளமாய் சில பழங்கள் இருந்தன.

எங்க அப்பா மஞ்சள் கலந்த நீளமான பழத்தைத்தான் வாங்கி வருவார் என்று ஞாபகம் இருந்தது அதையே விலைபேசினோம். 10 பழம் 500 ரூபாய்.. விலை படிந்தது..

வரும் வழியில் சைஸ் வாரியாக அன்னாசிப் பழமும் அடுக்கி வைத்திருந்தனர். பெரிய பழமாக எக்கச் சக்கமாக வாங்கினோம். நான் மட்டுமே 10 பழங்கள் வாங்கினேனாக்கும்.

திரும்பும் வழியில் சமணர் கொவில், கொல்லிப் பாவை (துர்க்கை) கோவில். இரண்டுக்கும் போய் அட்டெண்டன்ஸ் கொடுத்தோம்.

பிறகு சோளக்காடு கிராமத்தை அடைந்தோம்.

மசாலா ஐட்டங்கள். அன்னாசிப் பூ, வெந்தயம், சீரகம், கொத்தமல்லி, மிளகு, சோம்பு, பட்டை, கிராம்பு, ம்ராட்டி மொக்கு..

எல்லாம் புத்தம் புதுசாய் மணமாய், சகாய விலையில்

அன்று நல்ல வியாபரம் என்றுதான் சொல்லணும். சனிக்கிழமை அதுவும் காலையில் போனால் நேரடியாக மலையாளிகளிடமே வாங்கலாம். இன்னும் சீப்பாக இருக்கும்.

சோளக்காடு ஷாப்பிங் முடிந்து கீழிறங்கத் தொடங்கினோம்

வேன் டிரைவர் எச்சரித்தார், கீழே போனதும் வண்டியை நிறுத்தி ஓய்வெடுத்திட்டுப் போகணும். இல்லைன்னா வீல் ட்ரம் சூடாகி ட்யர் பஞ்சராக வாய்ப்பிருக்கு,,

சீராக இறங்கத் தொடங்கினோம்.

தொடரும்

ஆதவா
17-08-2010, 04:22 AM
ஆமால்ல.. அப்பகூட நீ குளிக்கலதானே!!:icon_ush::icon_ush::icon_ush:

சும்மா சும்மா குளிக்கவேணாம்னுதான்!!! :)

தாமரை
17-08-2010, 07:09 AM
சும்மா சும்மா குளிக்கவேணாம்னுதான்!!! :)

அப்ப துண்டு கட்டிக்கலாமில்ல..:lachen001::lachen001::lachen001:

தாமரை
17-08-2010, 07:22 AM
இறங்கும் போது தான் சில மேகக் கூட்டங்களையும் கடக்க வேந்தி வந்தது. நான் எனக்கே எனக்குன்னு செய்த குட்டி மேகம் கூட இதில் இருக்கலாம்னு ஒரு நினைப்பும் வந்தது...

ஓ அதைச் சொல்லலியே..

காலையில் வாக்கிங் போகும் போதுதான் அது நடந்தது.. மலைப் பிரதேசத்துக்குப் போனால் குழந்தையாய் மாறி நாம செய்யற ஒர் விஷயம்..

வாயைத்திறந்து சூடான காற்றை வெளியிட, அது வெள்ளையாக ஒரு குட்டியூண்டு மேகமா வெளிப்பட்டு சுற்றி இருக்கும் பனித்திரையில் கலப்பது..

அதை வச்சிகிட்டு சிலர் புகை பிடிப்பது போல் நடிப்பாங்க.

ஆனா நமக்கு அப்படி இல்லையே..

சின்ன வயசில ரொம்பவே யோசிச்சி இருக்கேன். இந்த மேகமெல்லாம் எங்கிருந்து வரும்?

ஒரு நாள் இரயில் போறதைப் பாக்கும்போது அந்த யோசனை வந்தது. ஓ.. இரயில் புகை விடுதில்லையா அந்தப் புகைதான் அப்படியே மேலே போய் மேகம் ஆயிடுது..

அப்ப நிறைய இரயில் விட்டா நிறைய மழை பெய்யும் அப்படின்னு.

(ஒருத்தர் சொன்னார், நான் இன்னமும் புகைதான் மேகமாகிறதுன்னு நினைச்சிகிட்டு இருக்கேன்னு)

மேகம் என்பது நீராவி சட்டென்று குளிர்ந்து உறைவதால் உண்டாவது. நம்ம மூச்சுக் காற்றில் நீராவி இருக்கில்லையா? அதனால் நம் விடும் ஒவ்வொரு மூச்சும் குட்டியூண்டு மேகமாக பெரிய மேகத்தோடு இணைஞ்சிருது இல்லையா?

அப்படி கொல்லியில் நாங்கள் படைத்த குட்டி மேகங்களை நினைத்துக் கொண்டேன். எதோ ஒரு புல்லின் மீது பனித்துளியாகி மண்ணில் இறங்கி கொல்லியில் என் வாசத்தைப் பதிவு செஞ்சிருக்கேன்.. எதாவது ஒரு ஜென்மத்தில் மறுபடி கொல்லிக்குப் போனால் நினைவு வரலாம். :D:D:D:D

வளைந்து வளைந்து வந்த பாதையில் 34 ஆம் கொண்டை ஊசி அருகே சந்தன மரங்கள் இருந்தன. (இதுக்குன்னே மேல கேட்டுகிட்டு வந்தமே). .வண்டியை நிறுத்தி சந்தன மரத்தை அடையாளம் கண்டு இரசித்தோம்.

மீண்டும் கிளம்பிய நாங்கள் பாதையில் கண்ட அத்தனைக்கும் மீண்டும் வருவேன் என்று சொல்லிக் கொண்டே வந்து அடிவாரம் அடைந்தோம்.

மணி 3:00 பசித்தது. சரி ஒரு டீ சாப்பிட்டு விட்டு இராசிபுரத்தில் சாப்பிட்டுக் கொள்ளலாம் என இறங்கினேன்.

என் கார் இரத்த ருசி பார்க்கப் போகிறது என அறியாமலேயே!!!

தொடரும்

ஆதவா
17-08-2010, 07:48 AM
ஆட்டுக்கால் சூப்பு கிழங்கு, பலாப்பழம், அன்னாசின்னு அடுக்கிட்டே போறீங்களே, மன்றத்தில ஆதவான்னு ஒருத்தன் இருக்கான், அவனுக்கு ஒரு பார்சல் வாங்கணும்னு தோணுச்சா???
இதில சந்தன மரத்தோட கொஞ்சி குழாவல் வேற... (கூடவே கோடாரிய எடுத்துட்டு போயிருந்தா வெட்டி எடுத்துட்டு வந்திடலாம்!!! அடுத்தடவை அதைத்தான் செய்யணும்)

ஆதவா
17-08-2010, 07:51 AM
அப்ப துண்டு கட்டிக்கலாமில்ல..:lachen001::lachen001::lachen001:

துண்டு கட்டிகிட்டு குடும்பமா நடத்த??

தாமரை
17-08-2010, 08:36 AM
துண்டு கட்டிகிட்டு குடும்பமா நடத்த??

துக்கடாவுக்கு துண்டுதானே பொருத்தம்!!!:D:D:D

தாமரை
17-08-2010, 08:38 AM
ஆட்டுக்கால் சூப்பு கிழங்கு, பலாப்பழம், அன்னாசின்னு அடுக்கிட்டே போறீங்களே, மன்றத்தில ஆதவான்னு ஒருத்தன் இருக்கான், அவனுக்கு ஒரு பார்சல் வாங்கணும்னு தோணுச்சா???
இதில சந்தன மரத்தோட கொஞ்சி குழாவல் வேற... (கூடவே கோடாரிய எடுத்துட்டு போயிருந்தா வெட்டி எடுத்துட்டு வந்திடலாம்!!! அடுத்தடவை அதைத்தான் செய்யணும்)

அடுத்து பணியாரம்.. கொய்யாப் பழம்...

பிடாரி(கொல்லிப்பாவை) வாழும் இடத்தில் கோடாரியா?

அமரன்
17-08-2010, 08:44 AM
எங்கடா நான்வெஜ்ஜை காணொமேன்னு பாத்தேன். நெருங்கிட்டுதா..

ஆதவா
17-08-2010, 08:51 AM
துக்கடாவுக்கு துண்டுதானே பொருத்தம்!!!:D:D:D

அய்யய்யோ... துக்கடான்னா என்னான்னு தெரியலையே.... :confused::confused:


அடுத்து பணியாரம்.. கொய்யாப் பழம்...

பிடாரி(கொல்லிப்பாவை) வாழும் இடத்தில் கோடாரியா?

ஏதோ ஒரு படத்தில சொல்லுவாங்களே,....
இத்தனையையும் சாப்பிட்டு இதென்ன வயிறா இல்ல வண்ணாந் தாழியா?

அப்படி இருக்கு!!! நீங்க எங்களை விட ஓவர் டேக் பண்ணுவீங்க போல!!



எங்கடா நான்வெஜ்ஜை காணொமேன்னு பாத்தேன். நெருங்கிட்டுதா..

ஆச்சு!!
இப்போ ஒரு திரி ஆரம்பிச்சு எல்லாரோட வாய்லயும் ஜொள்ளை வரவைக்கல..........:mini023::mini023:

என் பேரு சண்முகம் இல்ல!! (:confused:)

சூரியன்
17-08-2010, 10:46 AM
இப்படி ரவுண்டு கட்டி சாப்டீங்களே எங்களுக்கு ஏதாவது வாங்கீட்டு வந்தீங்களா?:fragend005::fragend005:

தாமரை
17-08-2010, 10:47 AM
அய்யய்யோ... துக்கடான்னா என்னான்னு தெரியலையே.... :confused::confused:



(:confused:)

ஏக் மார் தோ துக்கடா.. இதுவும் ஒரு சினிமாவில் வந்த டயலாக்தானே..

துக்கடா என்ற ஹிந்தி வார்த்தைக்கு துண்டு என்று தமிழில் அர்த்தம்.


சத்யராஜ் ஆரம்ப காலத்தில் வில்லன் கோஷ்டியில ஒரு கையாளா வருவார் இல்லையா.. அந்த மாதிரி வேஷங்களை துக்கடா வேஷங்கள் என்பார்கள். ஏன்னா அதற்கு தொடக்கமும் இருக்காது முடிவும் இருக்காது.. ஒரு துண்டு சீன்... அவ்வளவுதான்.

உயிரே உனக்காகவில்

பல்லவி இல்லாமல் பாடுகிறேன்
பாதை இல்லாமல் ஓடுகிறேன்
ஊமைக் காற்றாய் வீசுகிறேன்
உறங்கும் போதும் பேசுகிறேன்
இந்த இராகம் தாளம் எதற்காக
உயிரே உனக்காக.. உயிரே உனக்காக
லலல்லா லலல்லால லலல்லா லலல்லால

அப்படின்னு ஒரு துண்டு பாட்டு வருமில்ல, இதுமாதிரி பல்லவி அனுபல்லவி சரணம் எல்லாம் ஒண்ணா அமைஞ்ச சிறிய பாட்டுகளை சங்கீத உலகில் துக்கடா என்பார்கள்.

துக்கடான்னா - ஒரு சின்ன பிட்டு..

தாமரை
17-08-2010, 10:49 AM
இப்படி ரவுண்டு கட்டி சாப்டீங்களே எங்களுக்கு ஏதாவது வாங்கீட்டு வந்தீங்களா?:fragend005::fragend005:

வாங்கிகிட்டு வந்தனே.. நீங்கதான் மப்பும் மந்தாரமுமா இருந்தீங்களே.. உங்க தலை வானத்தில் தெரிஞ்சப்ப எடுத்து நீட்டினேன். நீங்கதான் வாங்கிக்கலை.

அப்படியே பின்னோக்கி போயிட்டீங்க.. என் மனசு எவ்ளோ கஷ்டப்பட்டிருக்கும்.. யோசிச்சுப் பாருங்க..:traurig001::traurig001::traurig001:

சூரியன்
17-08-2010, 10:53 AM
வாங்கிகிட்டு வந்தனே.. நீங்கதான் மப்பும் மந்தாரமுமா இருந்தீங்களே.. உங்க தலை வானத்தில் தெரிஞ்சப்ப எடுத்து நீட்டினேன். நீங்கதான் வாங்கிக்கலை.

அப்படியே பின்னோக்கி போயிட்டீங்க.. என் மனசு எவ்ளோ கஷ்டப்பட்டிருக்கும்.. யோசிச்சுப் பாருங்க..:traurig001::traurig001::traurig001:

என்ன கொடுமை சார் இது.:traurig001::traurig001:
நீங்க கொடுத்து நான் வாங்கலியா எப்ப நடந்துச்சு இது?:traurig001::traurig001:

தாமரை
17-08-2010, 10:55 AM
ஒரு மாலை வேளையில்.. ஜூலை 27 ஆம் தேதி..

ரொம்ப நாள் கழிச்சு மேகக் கூட்டம், விலகியது,, நீங்க(சூரியன்) தெரிஞ்சீங்க..

பலாப்பழம், அன்னாசிப்பழம் எல்லாம் தட்டில வச்சு நீட்டினேன்..

நீங்க(சூரியன்) அப்படியே பின்னாலயே போய் மேற்கில் மறைஞ்சுட்டீங்க..:eek::eek::eek:
அப்பதான்

சூரியன்
17-08-2010, 10:59 AM
ஒரு மாலை வேளையில்.. ஜூலை 27 ஆம் தேதி..

ரொம்ப நாள் கழிச்சு மேகக் கூட்டம், விலகியது,, நீங்க(சூரியன்) தெரிஞ்சீங்க..

பலாப்பழம், அன்னாசிப்பழம் எல்லாம் தட்டில வச்சு நீட்டினேன்..

நீங்க(சூரியன்) அப்படியே பின்னாலயே போய் மேற்கில் மறைஞ்சுட்டீங்க..:eek::eek::eek:
அப்பதான்

அப்படி குடுத்த நான் எப்படி வாங்குவேன்.
நான் கொஞ்சம் வேலையா இருந்ததுனால அத பாத்துருக்க மாட்டேன்,:smilie_bett::smilie_bett::smilie_bett:
:auto003:அத அப்படியே நீங்க பார்சல் அனுப்பி வச்சுருக்கலாமே.

தாமரை
17-08-2010, 11:01 AM
அப்படி குடுத்த நான் எப்படி வாங்குவேன்.
நான் கொஞ்சம் வேலையா இருந்ததுனால அத பாத்துருக்க மாட்டேன்,:smilie_bett::smilie_bett::smilie_bett:
:auto003:அத அப்படியே நீங்க பார்சல் அனுப்பி வச்சுருக்கலாமே.

பார் னு சொல்லி சல் லுன்னு அனுப்பி வச்சனே என் வாய்வழியா.. வரலியா?

சூரியன்
17-08-2010, 11:03 AM
பார் னு சொல்லி சல் லுன்னு அனுப்பி வச்சனே என் வாய்வழியா.. வரலியா?

எனக்கு பழமே வேண்டாம்.:traurig001::traurig001::traurig001:

தாமரை
17-08-2010, 11:06 AM
எனக்கு பழமே வேண்டாம்.:traurig001::traurig001::traurig001:

அப்போ செப்டெம்பர் 11 கொல்லிக்கு வரலியா?:icon_rollout:

சூரியன்
17-08-2010, 11:12 AM
அப்போ செப்டெம்பர் 11 கொல்லிக்கு வரலியா?:icon_rollout:

தல நான் இப்பவே ரெடி.:auto003:

தாமரை
17-08-2010, 11:13 AM
எதுக்கும் முன்னெச்சரிக்கையா ஒரு கேள்வி..

திக் திக் இரவுகள் யாத்திரையில் நீங்க இருந்தீங்களா?
:D:D:D

சூரியன்
17-08-2010, 11:16 AM
எதுக்கும் முன்னெச்சரிக்கையா ஒரு கேள்வி..

திக் திக் இரவுகள் யாத்திரையில் நீங்க இருந்தீங்களா?
:D:D:D

எதுக்கு தல இந்த குதர்க்க கேள்வி.:confused:
(நான் இல்லீங்க அதுல)

தாமரை
17-08-2010, 11:18 AM
எதுக்கு தல இந்த குதர்க்க கேள்வி.:confused:
(நான் இல்லீங்க அதுல)

இல்ல காரு எடுக்கறத லாரி எடுக்கறதா என முடிவு பண்ணத்தான்!!!:D:D:D

சூரியன்
17-08-2010, 11:20 AM
இல்ல காரு எடுக்கறத லாரி எடுக்கறதா என முடிவு பண்ணத்தான்!!!:D:D:D

நான் ஒன்னும் அந்த அளவு இல்ல தல,
நான் ஒரு குழந்தை மாதிரி.:medium-smiley-002:

தாமரை
17-08-2010, 11:26 AM
நான் ஒன்னும் அந்த அளவு இல்ல தல,
நான் ஒரு குழந்தை மாதிரி.:medium-smiley-002:

டைனோசாருக்குக் கூட அதன் குட்டி :icon_rollout:குழந்தைதான்.

அனிருத் : டைனோசாருக்கு ஏன் அப்படிப் பேர் வந்தது?
வாத்தியார் ::( பேய்முழி முழிக்கிறார்):sprachlos020::sprachlos020::sprachlos020:

அனிருத் : எல்லாம் "டை" ஆயிடுச்சி. இப்ப ஒண்ணு கூட "நோ" "ஸார்"

வாத்தியார் :: :medium-smiley-100::medium-smiley-100::medium-smiley-100:

சூரியன்
17-08-2010, 11:28 AM
டைனோசாருக்குக் கூட அதன் குட்டி :icon_rollout:குழந்தைதான்.

அனிருத் : டைனோசாருக்கு ஏன் அப்படிப் பேர் வந்தது?
வாத்தியார் ::( பேய்முழி முழிக்கிறார்):sprachlos020::sprachlos020::sprachlos020:

அனிருத் : எல்லாம் "டை" ஆயிடுச்சி. இப்ப ஒண்ணு கூட "நோ" "ஸார்"

வாத்தியார் :: :medium-smiley-100::medium-smiley-100::medium-smiley-100:

இப்படியெல்லாம் ஓட்ட கூடாது.:redface:
அப்பறம் நான் அழுதுடுவேன்.:traurig001::traurig001:

தாமரை
18-08-2010, 11:57 AM
டீ கடையில் டீ இருந்தது.. சில்லரைதான். இல்லை. பக்கத்தில் ஒரு பாட்டி பணியாரம் சுட்டுகிட்டு இருந்தாங்க..

பணியாரம் இருக்கு யாராவது சாப்பிடறீங்களா?..

எல்லோரும் நம்ம மன்ற மாமணிகள் போல வேணாம் என்றாங்க. எனக்கோ பசி.

கட்டுங்க ஒரு பத்து பணியாரத்தை அப்படின்னு சொன்னேன். பாட்டியும் கர்ம சிரத்தையா பத்து பணியாரம் கட்டினது. காசை எடுக்க பர்ஸை எடுத்தேன். எம்.ஜி.ஆர் வந்தான்.. இங்க ஒரு நாலு பணியாரம் குடுங்க..

பாட்டி நாலு பணியாரம் குடுக்க ஆளுக்கு இரண்டா சாப்பிட்டோம்.

இன்னும் நாலு எம்.ஜி.ஆர் சொல்ல

பாச்சாவும் ஆப்பும் வந்தார்கள்.. எங்களுக்கு நாலு..

கொஞ்ச நேரத்தில் பாட்டி சுடச் சுட பணியாரம் காலியானது வீம்பு பேசினவங்க எல்லாம் பசியிடம் தங்களுடைய தோல்வியை ஒப்புக் கொண்டு பணியாரத்தட்டு சமாதான உடன்படிக்கையில் கையெழுத்து போட வந்தாங்க.

பணியாரம் எவ்வளவு என்று கேட்டேன் ஒண்ணு 1.50 அப்படின்னாங்க. இதுவரை எத்தனை என்று பார்த்தால் 30 பணியாரம் ஓடியிருந்தது. பேஸ்கரும் நானும் 45 ரூபாயை எம்.ஜி.ஆரிடம் கொடுத்தோம் அவனும் பாட்டிக்குக் கொடுக்க..

சத்யா 4 பணியாரம் என்றான்.

பசங்க எத்தனை பணியாரம் வாங்கினாங்க என்று எண்ணி எண்ணி எண்ண மாளாது, ஒரு கோடி இருக்கும் போ.. கொண்டு போய் குடலுக்குள் கொட்டு. அவை ஜீரணமாகி ...( இதுக்கு மேல வேணாம்..)

அடுத்த இரவுண்டு ஆரம்பமானது. நான், பெரிசு, பாஸ்கர் மூணு பேரும் சாப்பிட்டாச்சு. நான் மட்டுமே கார் ஓட்டணும் என்பதால் நாங்க மூணுபேரும் கிளம்பத் தயாரானோம்.

பக்கத்தில ஒரு பாட்டி கொய்யாப்பழம் வித்துகிட்டு இருந்தாங்க. ஒவ்வொண்ணும் திருப்பதி பழைய இலட்டு சைஸ். எச்சில் ஊறியது.. ஒன்னு வாங்கிக் கடிச்சேன். வெளியே பச்சைத்தமிழச்சியா இருந்த அது உள்ள தமன்னா மாதிரி கலர்ல இருந்தது. சுவையோ ஆஹா தேவார்மிர்தம்.

கொய்யாப் பழம் ஒரு டஜன் போறப்ப சாப்பிட. இரண்டு டஜன் வீட்டுக்குக் கொண்டு போக பார்சல்...

பெரிசு காரில் பின் சீட்டில் உட்கார்ந்து இருந்தான்.


பேஸ்கர் முன்சீட்டில் உட்கார்ந்தான். நானும் காரில் ஏறி காரை ஸ்டார்ட் செய்தேன்.

பேஸ்கர் தன் கதவைச் சாத்த ஐயோ அலறல் சத்தம் கேட்டது.

பெரிசு தன் கையை பிடிச்சுகிட்டு அலறிகிட்டு இருந்தான். கையை கதவிடுக்கில் வச்சுட்டான். இரத்தம் பீய்ச்சி அடித்தது.

உடனே விரலைப் பிடிச்சு அமுக்கி, இரத்த்ததை நிறுத்த முயற்சி பண்ணினோம்.

கொஞ்சம் நேரம் கழிச்சு காயத்தை தண்ணீரில் கழிவிட்டு, ஒரு துணியால் இறுகக் கட்டினோம்.

சின்னக் காயம்தான் போல என்று பெரிசு சொன்னான். சரி போகும் வழியில் ஒரு பாண்டேஜ் போட்டுக்கலாம் என்று எண்ணினோம்.

கார் இராசிபுரம் சாலையில் பறந்தது. கொஞ்ச தூரம் போனதும்... ஃபோன் வந்தது பாஸ்கருக்கு..

டேய் பணியாரப் பார்சல் வாங்கினீங்களே, காசு குடுத்தீங்களா?

பாஸ்கர் கொடுத்தாச்சு என்று சொன்னான்.

எவ்வளவு பணியாரம் வாங்கினாங்க என்று கணக்கு விட்டுப் போச்சாம்.

கடைசியில் 200 ரூபா செட்டில் பண்ணிட்டு சென்னை கேங் புறப்பட்டாச்சி.

245 ரூபாய்க்கு 163 பணியாரம். 15 பேர்தான் சாப்பிட்டது ஆளுக்கு பதினொண்ணா..? பத்திச்சா இல்லையா?

கார் இராசிபுரம் தாண்டி சேலம் - நாமக்கல் ஹைவேயை பிடித்து வெகு இலகுவாய் 80 கி.மீ வேகத்தில் பயணிக்கத் தொடங்கியது.

பணியாரங்களும் கொய்யாக்களும் காலியாகின.

கார் தொப்பூர் தாண்டியதும் காருக்கும் பசித்தது. அங்கே அடையாறு ஆனந்தபவன் - பிபீ பெட்ரோல் பங்க் இணைந்த கம்ப்ளக்ஸில் காம்ப்ளக்ஸ் பார்க்காமல் முதலில் காருக்கு தீனி போட்டுட்டு. .அப்புறம் எங்கள் வயிறையும் கவனித்தோம்.

அப்போதான் பெரிசும் கவனித்தான். கையைத் தொங்கப் போட்டால் இரத்தம் மீண்டும் வருது..

சரி இனி இது வேலைக்கு ஆகாது. டாக்டர்கிட்டப் போகணும்.. நேரா ஒசூர் போகலாம்..

காரை அடித்து ஓட்ட ஆரம்பித்தோம். ஒசூரை நெருங்கியபோது மணி 7:00. நேராக ஒரு கிளினிக்கில் பெரிசை இறக்கி விட்டோம், பெரிசின் மனைவி தன் வாகனத்தை எடுத்துகிட்டு வந்துட்டாங்க.

சின்ன காயம் என்று நினைத்தது தவறு, மூணு தையல் போடவேண்டியதாப் போச்சு.

அங்கிருந்து கிளம்பி பெங்களூர்...

கொல்லி கிட்ட சொல்லித்தான் வந்தேன்..

திரும்ப வருவேன் என..

மீண்டும் போவோம்...

வ்ர்ரீங்களா?

முற்றும்

ஆதவா
18-08-2010, 01:26 PM
வெளியே பச்சைத்தமிழச்சியா இருந்த அது உள்ள தமன்னா மாதிரி கலர்ல இருந்தது. சுவையோ ஆஹா தேவார்மிர்தம்.


கன்ஃபர்ம்... :icon_b:
கொய்யாவுக்காக :D
ஆதவா...

த.ஜார்ஜ்
18-08-2010, 04:21 PM
ஆக பெரிய வழியாக விரித்திருக்கிரீர்கள். ஆகா..

தாமரை
18-08-2010, 04:24 PM
ஆக பெரிய வழியாக விரித்திருக்கிரீர்கள். ஆகா..

ஒரு வழியாக முடிச்சிட்டீங்களா என எழுத வந்ததை மாத்தி எழுதினா இப்படித்தான் தப்பு வரும்.

மாட்னீங்களா இல்லையா?:wuerg019::wuerg019::wuerg019::wuerg019:
(வலையில்தான்)

த.ஜார்ஜ்
18-08-2010, 04:34 PM
வலை வழியாகி விட்டது. [மனம்:சுதாரிச்சிக்கோ ]

தாமரை
18-08-2010, 05:28 PM
வலை வழியாகி விட்டது. [மனம்:சுதாரிச்சிக்கோ ]

நீங்களும் தான் (ஒரு வழியாகிட்டீங்க போல)

ஆமாம் யாரு சுதா? யாரு ரிச்சி? சுதா ரிச்சுக்குன்னா உங்க மனசு ஏன் புலம்புது?:wuerg019::wuerg019::wuerg019::wuerg019::wuerg019:

த.ஜார்ஜ்
19-08-2010, 04:32 PM
(ஒரு வழியாகிட்டீங்க போல)



இல்லை இப்போதானே ஆரம்பிச்சிருக்கு.
[நான் வழியாகி விட்டால் , வழியை என்னவென்பது]

தாமரை
19-08-2010, 04:52 PM
(ஒரு வழியாகிட்டீங்க போல)



[நான் வழியாகி விட்டால் , வழியை என்னவென்பது]

நீங்க "ஒரு" வழி தானே ஆனிங்க.. மத்த எல்லா வழியும் அந்தந்த வழியாவே இருக்கும்.

த.ஜார்ஜ்
19-08-2010, 04:57 PM
நீங்க "ஒரு" வழி தானே ஆனிங்க.. மத்த எல்லா வழியும் அந்தந்த வழியாவே இருக்கும்.

நீங்க சொன்ன அந்த வழியிலே ஒரு ஆள் தலைதெறிக்க ஓடுறாரு பாருங்க.. [வேற யாரு நான்தான்.]

தாமரை
30-08-2010, 10:13 AM
நீங்க சொன்ன அந்த வழியிலே ஒரு ஆள் தலைதெறிக்க ஓடுறாரு பாருங்க.. [வேற யாரு நான்தான்.]

ஒன் வேயில் ஒரு தலைராகம்.

இருந்தாலும்.. சுதா யாரு.. ரிச்சி யாருன்னு நீங்க சொல்லவே இல்லை!!!

த.ஜார்ஜ்
30-08-2010, 10:58 AM
சுதா யாரு.. ரிச்சி யாருன்னு நீங்க சொல்லவே இல்லை!!!

அது யாராயிருக்கும்...?[இதெல்லாம் எப்படி கணக்கு வைக்கிறது.]