PDA

View Full Version : விலைவாசி



ஷேக் முஹைதீன்
05-08-2010, 12:58 PM
"ஏம்பா..தங்கத்துக்கு விலை சொல்றியா?தக்காளிக்கு விலை சொல்ர்றியா?"ஆச்சரியமும் கோபமும் கலவையில் கேட்டாள் மேகனா.
"வாங்கனும்னு கட்டாயம் இல்ல.கட்டுச்சுனா வாங்குங்க.. இல்லன்னா உட்ருங்க"பதிலுக்கு கடைக்காரன்.
"எனக்கு வயசு ஏறுகிற மாதிரி விலைவாசியும் ..ம்ம்ம்ம்ம்ம் இதுக்கு என்னைக்கு விடிவு காலமோ?புள்ளையாரப்பா நீதான் கேட்க்கனும்"
முனங்கியபடி பணத்தை கடைக்காரனிடம் கொடுத்துவிட்டு நகர்ந்தாள் மேகனா.

வீட்டில்...
"என்னங்க நீங்க கொடுக்கிற 3000 வச்சு என்னால சமாளிக்க முடியாது.அடுத்த மாசதிலேருந்து கூட ஒரு 1000 கொடுங்க"
"என்னடி ஆபிஸ்லேருந்து வந்ததும் வராததுமாய்....மனுசன் ஒரு கப் டீ குடிக்ககூட இல்ல.அதுக்குள்ள் பஞ்சாயத்தா?"எரிச்சலுடன் முரளி பதிலளித்தான்.
"ம்ம்ம்ம்..அந்த காலத்துல நான் காலன்ன்வுக்கு ஒரு கடையையே வாங்கிட்டு வருவேன்."சலித்தவாறு முரளியின் தாயார் கண்ணம்மாள்.
"காலனாவுக்கு கடையை வாங்குன சரி...அப்ப ஒரு ஆளுக்கு சம்பளம் எவ்வளோ இருந்துச்சி?ஒரு ருபாயா?ரெண்டு ருபாயா?"இப்ப கொடுக்குற மாதுரி பத்தாயிரம் கொடுத்தாங்களா?ஆ..ஊன்னா இப்படிதான் எல்லோரும் சொல்ரிங்க."முரளி.
"எதுக்கு தேவையில்லாம வாக்குவாதம்..நான் கேட்டத கொடுங்க..அப்பத்தான் என்னால் சமாளிக்க முடியும்..இல்லன்னா நீங்களே அடுத்த மாசத்லேருந்து வரவு செலவ பார்துக்குங்க"பஞ்சாயதுக்கு தீர்ப்பு சொன்னாள் மோகனா.
"முதல்ல தேவைகள கொஞ்சம் சுருக்கிக்க முயற்சி பன்னு...யார் வரவு செலவ பார்த்தாலும் கதை ஒன்னுதான்..காலைல காப்பி கட் பன்னு.வாரத்துக்கு ரெண்டு தடவ இறைச்சி எடுக்குறத ஒரு தடவையாக்கு...துணி இனி நாமே துவச்சுக்கலாம்..டி.வி அதிகம் பாக்குறது..அடிக்கடி ஃபேன் போடுறது,தேவையில்லாம லைட் போடுறது கொஞ்சம் குறைசுக்கலாம்...இப்படி செஞ்சா நீயும் நிதி அமைச்சர்தான்"
கணவனின் பதிலில் ஓரளவுக்கு திருப்தியடைந்தவளாய் மற்ற வேலைகளை கவனிக்க தொடங்கினால் மோகனா.

அடுத்த மாதம்...
"என்னங்க நீங்க சொன்னமாதிரி நான் நடந்துகிட்டதால் இந்த மாதம் 700 ருபாய் மிச்ச மாச்சு.பக்கத்து வீட்டு மாலதி பார்ட் டைம் ஜாப் செய்யுறா..நானும் அதுல ஜாய்ன் பன்னிக்கலாம்னு இருக்கேன்.நீங்க என்ன சொல்ரிங்க?"
"நீ என்ன செஞ்சாலும் எனக்கு பிரச்சினை இல்ல.என் கிட்ட மறுபடியும் வரக்கூடாது அவ்வளவுதான்..புரிஞ்சுதா?"
"சரி...நான் ஒன்னு கேட்பேன்..கோப படக்கூடாது"
"விசயத்த சொல்லு புதிர் போடாத்"
"அந்த மாலதிக்கு அவர் வீட்டுக்காரர் போத்திஸ்ல ஒரு ட்ரெஸ் எடுத்து கொடுத்துருக்கார் பாருங்க..அப்படியே சினேகா உடுத்துனமாதிரி இருக்கு...எனக்கும் அதமாதுரி வாங்கனும்னு ஆசை...கிடைக்குமா?"
அடுத்த பிரச்சனை ஆரம்பம் ஆகபோவதை உணர்ந்த முரளிக்கு தலை சுற்றியது.

(நன்றி ;அறுசுவை)

மச்சான்
05-08-2010, 01:34 PM
என்னத்த மிச்சம் பிடிச்சு எதுக்கு.....?
புடவைக்கும், நகைக்கும்
ஆசை இருக்கும்வரை
என்னத்த மிச்சம் பிடிச்சு எதுக்கு...?:sprachlos020:


.

ராஜா
21-07-2012, 01:57 PM
பெண்கள்..!

Keelai Naadaan
29-07-2012, 01:41 PM
நடுத்தர குடும்பங்களின் ஒருநாள் பொழுது இயல்பாய் பதிவாகியுள்ளது. பாராட்டுக்கள்

kulakkottan
30-07-2012, 03:22 AM
ஆசை யார தான் விட்டுச்சு !