PDA

View Full Version : தமிழாசிரியர்



ஷேக் முஹைதீன்
05-08-2010, 12:55 PM
"பொங்கலுக்கு
வந்து ரெண்டு வர்த்தைகள்
கற்று தந்தால் போதும்
கரும்பு தேவையில்லை ஐயா!

நீங்கள் குறள்பிரிக்க
கற்று தந்தபோது
உங்கள் குரலை பிரிவேனென
உறக்கத்திலும் நினைத்ததில்லை ஐயா.

ப்ரேயரில்
குறள் ஒப்பிப்பதை பெரிய
குற்றமாகக் கருதி
பலவாரங்கள் உங்களை
பார்க்காமல் இருந்ததற்க்கு
இப்போது வருந்துகிறேன் ஐயா.

எனக்கு அகரம் கற்றுத் தந்த
சிகரம் நீங்கள்!
வல்லினம் கற்றுத் தந்த
வள்ளல் நீங்கள்!

தமிழ் நிறையபேருக்கு
பற்களுக்கிடையில்
பரிதவித்தபோது
நாவினை சுழற்றி அதை
விடுதலை செய்ய கற்றுத்தந்த
வித்தகர் நீங்கள்!

இப்போது எங்கே
இருக்கிறீர்கள்?

உங்களை நான் மறக்கவில்லை

என் நினைவு மேகங்கள்
அலைந்து திரிந்து
அழுவது உங்களைத் தேடித்தான்.

விருட்சமாய் நான் வளர்ந்திருந்தாலும்
விதை போட்டது நீங்கள்தானே ஐயா!

nambi
05-08-2010, 01:02 PM
தமிழாசிரியரை மறக்காமல் தேடும் கவிதையா? நன்று! பகிர்வுக்கு நன்றி!

ஆனால் தமிழாசிரியர் படித்தால்...''ப்ரேயர்'' என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டதை செல்லமாக கடிந்து கொள்வார்....:D

அனுராகவன்
23-09-2010, 02:26 AM
தமிழுக்கு அறபணியே செய்பவர் இவரே!!
அவரை வாழ்த்த வார்த்தையேயில்லை..
பகிர்வுக்கு நன்றி....