PDA

View Full Version : காதலின் இலக்கணம்



ஷேக் முஹைதீன்
04-08-2010, 12:38 PM
காதல் என்பது அலையும் கரையும்

அருகிலும் இருக்கலாம் அனைத்தும் கொள்ளலாம்

நட்பு என்பது தண்டவாளம்
அருகில் இருக்கலாம்
அனைக்க முடியாது

பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருந்தால்
பற்றிக்கொள்ளும்
இது காதல் மொழி

அருகில் இருந்தாலும் தன் பசிக்கு
இருதயத்தை இரையாக்காது இரைப்பை
இது நட்பின் புது மொழி

இருதய அரங்கத்தில் காதலுக்கு
இரண்டு இருக்கைகள்
நட்பிற்கு பல இருக்கைகள்

காதல் காமத்தின் கலப்பட பொருள்
நட்பு என்பது அக்மார்க் அன்பு

இலக்கணம் இன்றி கவிதை இயம்புவது எப்படி?

காதலின் இலக்கணம் நட்பு

சுகந்தப்ரீதன்
06-08-2010, 07:35 AM
இலக்கணம் சிலநேரம் பிழையாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் இங்கு தவறாகலாம்..!!

இதையெல்லாம் அறியாதவரா நீங்கள்...?! முதலில் உங்கள் கவிதையில் இருக்கும் எழுத்து பிழையை நீக்குங்க ஷேக்...!!

கவிதைக்கு என் வாழ்த்துக்கள்..!!