PDA

View Full Version : யார் எழுதியது தெரியாது. எனக்கு அனுப்பிய நன்பனுக்கு நன்றி



பிரேம்
04-08-2010, 11:34 AM
எனக்கு என்னைப் பிடித்திருப்பதே
உனக்கு என்னைப் பிடித்திருப்பதால்தான்.
*
அந்த மூன்று வார்த்தைகளைக் கேட்டாலும்
”எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான்” என்று
வெட்கப்படுகிறவளை என்ன செய்ய?
*
கோபமாய் நீயென்னை முறைக்கும்போதெல்லாம்
எனக்கு வருத்தமாயிருக்கிறது.
ஓவியனாய்ப் பிறக்கவில்லையென!
*
உன் வாசனையை
என்னுடன் கூட்டிச்செல்வதற்காகவே
தினமும் உன் கைக்குட்டை வாங்கிச் செல்வேன்.
*
உனக்கொரு ரகசியம் சொல்வதாக நானும்,
எனக்கொரு ரகசியம் சொல்வதாக நீயும் சந்தித்தபோது,
இரண்டுமே ஒன்றுதான் என்பதறிந்து
ரகசியமாய்ச் சிரித்துக் கொள்ளும் காதல்!
*
இதுவரை நீ வந்த
கனவுகளையெல்லாம் சேர்த்து
ஒரே கனவாக காணும்
ஓர் இரவு கிடைக்குமா?
*
ஒவ்வொரு சந்திப்பிலும் நிரூபிக்கிறாய்.
கவிதையென்பது எழுதப்படுவதன்று
நிகழ்த்தப்படுவது என்று!
*
தூசிவிழுந்த இடக்கண்ணில்
நீ ஊதிவிடுவதைக் கண்டு
பொறாமையில் மூடிக்கொள்ளும் வலக்கண்!
*
என் பிறந்தநாளுக்கு அனுப்ப
காதல் தேடும் வாழ்த்து
நீ!
*
நான் தேடுகிறேனென்பதற்காக உடனே கிடைத்துவிடாதே.
ஊடலும் கூடலும் மட்டுமல்ல…
காதலில் தேடலும் சுகம்தான்!

சுகந்தப்ரீதன்
04-08-2010, 11:45 AM
உங்களுக்கும் உங்கள் நண்பனுக்கும் என் நன்றி..!!

கடைசி கவிதை நவரசம்..!!:D

குணமதி
04-08-2010, 11:59 AM
***தூசிவிழுந்த இடக்கண்ணில்
நீ ஊதிவிடுவதைக் கண்டு
பொறாமையில் மூடிக்கொள்ளும் வலக்கண்!***

சுவையான கற்பனை.