PDA

View Full Version : கருங்கடலுக்கு அடியில் மெகா ஆறு கண்டுபிடிப்பு



aren
04-08-2010, 04:21 AM
இது எப்படி சாத்தியம் என்று என்னுடைய சிறிய மூளைக்கு எட்டவில்லை. தெரிந்தவர்கள் யாராவது எனக்கு எடுத்துச் சொன்னால் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்.

இந்தக் கட்டுரை இன்றைய தினகரனில் வந்துள்ளது. விபரம் கீழே:

லண்டன் :கிழக்கு ஐரோப்பாவையும் மேற்கு ஆசியாவையும் பிரிக்கும் வகையில் ரஷ்யா, துருக்கி ஆகிய நாடுகளை ஒட்டி அமைந்துள்ளது கருங்கடல். இதைப் பற்றி லண்டன் லீட்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.


கருங்கடலுக்கு அடியில் அதிக வேகத்தில் ஆறு ஓடுவதை சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர். இதன் ஆழம் 115 அடி என்றும் தெரியவந்துள்ளது. பூமியின் மேற்பரப்பில் இது இருந்திருந்தால், உலகின் 6&வது பெரிய ஆறு என்ற பெருமையை பெற்றிருக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
தேம்ஸ் நதியில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரத்தை விட 350 மடங்கு அதிகமாக இந்த நீரோட்டத்தில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்ய வாய்ப்பு இருக்கிறது என்கின்றனர். இந்த ஆறு ஓடும் மிக பிரமாண்டமாக பரப்பில் ஏகப்பட்ட மேடு, பள்ளங்கள் இருப்பதால் நீர்வீழ்ச்சிகள் இருப்பதற்கும் வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

நன்றி: தினகரன்

http://www.dinakaran.com/sciencedetail.aspx?id=11989&id1=21

ஆதி
04-08-2010, 04:31 AM
அண்ணா, கடலுக்கு நடுவில் இது போன்றா ஆறுகள் உள்ளதென்பது உண்மையே..
ராமேஸ்வரம் கடல் பகுதியில் கூட ஒரு இடத்தில் நன்னீர் கிடைக்கும் என்பார்கள், அது கூட கடலுக்கு நடுவில் ஓடும் ஆறால் தான் என்றும் சொல்வார்கள்..

சுகந்தப்ரீதன்
04-08-2010, 08:44 AM
இதை நம்பவும் முடியலை.. நம்பாம இருக்கவும் முடியலை..!!:frown:

அனுராகவன்
18-09-2010, 06:23 PM
நம்பமுடியல..:mini023:
:confused::lachen001::lachen001:

பென்ஸ்
19-09-2010, 03:24 PM
கென்டக்கி மாநிலம், ஆமெரிக்காவில் ..மாமத் கேவ்ஸ் என்று ஒரு பூங்கா இருக்கிறது. இங்கு மண்ணுக்கு அடியில் மிக மிக பெரிய சுரங்கங்கள் இருக்கின்றன... இவை மண்ணுக்கு அடியில் ஓடும் ஆறுகளல் உருவானவை. இந்த சுரங்கம், நாலு ஆடுக்கு மாடியை போல இருக்கிறது.. இவை எல்லாவற்றிக்கும் அடியில் இன்னும் அந்த ஆறு ஓடி கொண்டிருக்கிறது....
மேலும் தகவலுக்கு...

http://www.nps.gov/maca/

Narathar
19-09-2010, 03:36 PM
இலங்கையிலும் மாத்தளை என்னும் பகுதியில் நிழக்கீழ் ஆறு ஒன்று ஓடுவதாக இலங்கை அறிஞ்சர்கள் கூறுகின்றார்கள்........

அப்பகுதியில் புதிய கட்டிடங்கள் அமைப்பதற்கும் இப்போது அனுமதிஅளிக்கப்படுவதில்லை.... அதுபோல அப்பிரதேசத்துக்கு செல்லும் இரயில் பாதையும் மாத்தளை நகரோடு நிறுத்தப்பட்டிருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாம்!! அதிக அதிர்வுகள் ஆபத்தை ஏற்படுத்தும் எனும் அச்சமே இத்தடைக்கு காரனம்.

எனவே இது சாத்தியம் தான் என்று நினக்கின்றேன்

Nivas.T
26-09-2010, 04:08 PM
இதுவும் அப்படி ஒரு தகவல்தான்
http://learn2here.blogspot.com/2009/12/river-under-sea.html

விகடன்
04-10-2010, 06:06 AM
சாமான்யமான சிந்தனைக்கு அப்பாற்பட்ட விடயம். மேலதீக தகவல்கள் கிடைக்கப்பெற்றால் எமக்கும் அறியத்தரவும். படித்து தெரிந்துகொள்வோம்.