PDA

View Full Version : ஈர நினைவுகள் !



கலைரசிகை
04-08-2010, 02:14 AM
கடைசி நிமிடம்..
கண்களில் கனவு கலைந்து
நிஜத்தை உணர்ந்த அந்த நிமிடம் !

எனது என்று சொந்தம் பேசி
கட்டி தழுவிய உன்னை
அந்நியனாக விட்டு விலகிய நிமிடம் !

கண்களில் வலி !
கன்னத்தில் ஈரம் !

ஈரம் !
உனது இதழ்கள்
வரைந்த கோலம் அல்ல !
என் இதயம்
வரைந்த சுவடுகள் !

காலப்போக்கில் கரைந்துவிட்டது ஈரம்
காலம் கடந்தும் கரையாத கோலமாய்
உன் நினைவுகள் மட்டும்
இன்றும் என்னிடம் !

சுடர்விழி
04-08-2010, 02:17 AM
அருமையான கவிதை.......

“ஈரம் !
உனது இதழ்கள்
வரைந்த கோலம் அல்ல !
என் இதயம்
வரைந்த சுவடுகள் !”

காதல் வலி தெறிக்கும் வரிகள்...பாராட்டுக்கள்!!!

கலைரசிகை
04-08-2010, 02:20 AM
நன்றி, சுடர் விழி ! தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் !