PDA

View Full Version : நீ ஒரு தமிழிலக்கியம்.



Vel Tharma
03-08-2010, 12:47 PM
புறந்தள்ளினாய் எனை நானூறு தடவை
அதனால் நீயொரு புறநானூறு.
மனம் மாறினாய் நானூறு தடவை
அதனால் நீயொரு அகநானூறு
என் மனமெனும் சிலம்புடைத்தாய்
அதனால் நீயொரு சிலப்பதிகாரம்.
எனை ஏழரைச் சனியாக ஆட்டினாய்
அதனால் நீயொரு கலித்தொகை.
என் காதல் கவி கேட்டு குதிரை போல் குதித்தாய்
அதனால் நீயொரு பரிபாடல்.
என் வாழ்வில் தொலைந்த காப்பியம் நீ
அதனால் நீயொரு தொல்காப்பியம்.
மனதில் மணியாகப் உனைப் பதித்தேன்
அதனால் நீயொரு மனோன்மணியம்.
உனை எட்ட நினைத்தேன் பல முறை
அதனால் நீ ஒரு எட்டுத்தொகை
எதற்கும் வளையாமல் நின்றாய் நீ
அதனால் நீ ஒரு வளையாபதி
மனதில் பதித்து உன் மேல் பக்திவைத்தேன்
அதனால் நீ ஒரு பதிற்றுப்பத்து
மலையாகப் பாடல்கள் படித்தேன் உன்பால்
அதனால் நீ ஒரு குறிஞ்சிப்பாட்டு
எனை விரும்பாதது போல் கணக்குவிட்டாய்
அதனால் நீயும் பதினெண் கீழ்க்கணக்கு
மொத்தத்தில் நீயொரு தமிழிலக்கியம்.

சுடர்விழி
04-08-2010, 03:56 AM
நல்ல முயற்சி !!பாராட்டுக்கள் !

சுகந்தப்ரீதன்
06-08-2010, 07:41 AM
இதுக்குதான் தர்மா இங்கிலீஸ்காரியை பார்த்து கரெக்ட் பண்ணனுங்கிறது..?!

கவிதை அழகு... வாழ்த்துக்கள்..!!

அமரன்
07-08-2010, 01:14 PM
வாங்க தர்மா..

புதுக்கவிதையும் தமிழிலக்கியம்தான்.

பாராட்டுகள்.

ஆர்.ஈஸ்வரன்
14-08-2010, 10:48 AM
நல்ல முயற்சி. கவிதை அழகு...
வாழ்த்துக்கள்

Nivas.T
14-08-2010, 11:34 AM
காதல் உவமையாக இலக்கியங்கள்

நல்ல ஒரு கவிதை

வாழ்த்துக்கள் வேல் தர்மா

தமிழ் மைந்தன்
14-08-2010, 11:54 AM
நல்ல முயற்சி !!வாழ்த்துக்கள் !

nambi
14-08-2010, 01:40 PM
கவிதை நன்று! பகிர்வுக்கு நன்றி!

வியாசன்
14-08-2010, 02:05 PM
தர்மா கொன்னுட்டீங்க போங்க வாழ்த்துக்கள்