PDA

View Full Version : இந்தியா சிறீலங்கா 3வது டெஸ்ட் போட்டி

வியாசன்
03-08-2010, 08:40 AM
இணையத்தில் காண்பதற்கு (http://isaitoday.com/)

xavier_raja
03-08-2010, 01:34 PM
இந்த மூன்றாவது டெஸ்ட் ஆடுவதன் மூலம் அதிக டெஸ்ட் மேட்ச் விளையாடியவர்கள் வரிசையில் முதலிடத்தை பிடித்த சச்சினுக்கு வாழ்த்துகள்..(164 என்று நினைக்கிறன்)

அறிஞர்
03-08-2010, 01:40 PM
இலங்கைக்கு டாஸ் ஜெயிப்பதில் எப்பொழுதும் சாதகம்....

மூன்று போட்டியிலும் முதல் பேட்டிங்க்... இந்த போட்டி எப்படி செல்லும்...

முதல் நாள் இலங்கை 293/4

வியாசன்
03-08-2010, 09:15 PM
நாளை மதியத்துக்குள் இலங்கையை ஆட்டமிழக்கசெய்தால் இந்தியவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்

aren
04-08-2010, 02:24 AM
என்னுடைய மாணவ பருவத்தில் நாங்கள் கட்டாந்தரையில் பிட்ச் போட்டு கார்க் பந்தில் கிரிக்கெட் விளையாடும். அந்த கட்டாந்தரையில் கார்க் பாலில் நாங்கள் ஸ்பின் செய்வோம். பந்தும் ஸ்பின் ஆகும். ஆனால் டெஸ்ட் மாட்ச் என்று சொல்லிக்கொண்டு கட்டாந்தரையை விட ஒரு மட்டமாக இருக்கும் பிட்சில் கிரிக்கெட் ஆடி எதற்கு நேரத்தை வீணாக்கவேண்டும்.

வெறும் ரெக்கார்டுக்கு மட்டும் டெஸ்ட் ஆடுவது போல் இருக்கிறது இந்தத் தொடர்.

மச்சான்
06-08-2010, 11:16 AM
நாளை மதியத்துக்குள் இலங்கையை ஆட்டமிழக்கசெய்தால் இந்தியவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்
உங்களின் ஆசை நாளை நிறைவேறும்போல்தான் தெரிகிறது.:)

வியாசன்
06-08-2010, 09:13 PM
உங்களின் ஆசை நாளை நிறைவேறும்போல்தான் தெரிகிறது.:)

இப்போது பார்த்தால் பிச்சை வேண்டாம் நாயை.......
இந்தியா வென்றால் இந்த தொடர் சமனாகிவிடும்.

கண்ணன்
06-08-2010, 10:44 PM
என்னுடைய கணிப்பு, இலங்கை 100+ ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி. இந்தியா வெற்றி பெற வாய்ப்பு 0.05% க்கும் குறைவு. பந்து கன்னாபின்னாவென்று திரும்புகிறது. இதையும் மீறி வென்றால், 2001 கல்கத்தா வெற்றியுடன் ஒப்பிடலாம்.

- கண்ணன்

மச்சான்
07-08-2010, 09:14 AM

இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி....! தொடர் யாருக்குமே வெற்றி தோல்வியில்லாமல் சமனாகிவிட்டது. இதனை நீங்கள் சொன்னதுபோல் கல்கத்தா வெற்றியோடு தாராளமாக ஒப்பிட்டுக் கொள்ளலாம். கல்கத்தாவிலும் வி.வி.எஸ். லஷ்மண் தான் விளாசினார். இதிலும் அவர்தான் இறுதிவரை அவுட் ஆகாமல் 103 விளாசியிருக்கிறார்....!:)

aren
07-08-2010, 09:34 AM
இந்தத் தொடர் எனக்குப் பிடிக்கவில்லை. வெறும் கட்டாந்தரை கிரிக்கெட் என்று இதைச் சொல்லலாம்.

இரண்டு பேருக்கும் வெற்றியுமில்லை தோல்வியுமில்லை.

இந்த மாதிரியாக பிட்ச் தயாரித்தால் வருங்காலத்தில் பெளலர்களே இருக்க மாட்டார்கள், அனைவரும் பாட்ஸ்மேன்களாகவே வர விரும்புவார்கள்.

அப்படிப் போனால் கிரிக்கெட்டே அழிந்துவிடும்

மச்சான்
07-08-2010, 09:41 AM

நீங்கள் சொன்னாமாதிரி பிட்ச் இரண்டாவது டெஸ்ட்டில்தான் தயாரித்திருக்கிறார்கள் ஆரன் அண்ணா....! அதில்தான் பேட்ஸ் மேன்களால் மட்டும் சோபிக்க முடிந்தது. மற்ற இரண்டு டெஸ்ட்களிலும் பேட்ஸ்மேன்களும், பௌலர்களும் தங்கள் திறமையை வெளிப்படுத்தியமையால்தான் முடிவுகள் தெரிய வாய்ப்பு கிடைத்தது.

வியாசன்
07-08-2010, 09:41 AM
தொடரை இந்தியா சமன் செய்தது. வி.வி லக்ஸ்மன் சதமடித்துபோட்டியின் சிறந்த ஆட்டக்காரராகியுள்ளார். ரெய்னாவின் அபார ஆட்டம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

கண்ணன்
07-08-2010, 11:30 AM
இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி....! தொடர் யாருக்குமே வெற்றி தோல்வியில்லாமல் சமனாகிவிட்டது. இதனை நீங்கள் சொன்னதுபோல் கல்கத்தா வெற்றியோடு தாராளமாக ஒப்பிட்டுக் கொள்ளலாம். கல்கத்தாவிலும் வி.வி.எஸ். லஷ்மண் தான் விளாசினார். இதிலும் அவர்தான் இறுதிவரை அவுட் ஆகாமல் 103 விளாசியிருக்கிறார்....!:)

:D:D:D:D
என்னுடைய கணிப்பு பொய்த்ததைப்பற்றி என்னைவிட அதிக மகிழ்ச்சி யாருக்கும் இருக்காது.

-கண்ணன்

அமரன்
07-08-2010, 11:39 AM
இலங்கையின் பல வெற்றிகளுக்குப் பந்து வீச்சாளர்களே சொந்தக்காரர்.
இனி அந்நிலை இல்லை. மட்டையாளர்களை நம்பி ஸ்ரீலங்கா அணி. மட்டை அடிக்காமல் இருந்தால் சரி.

ரைனா இந்தியாவின் புதிய ரன் ரெயினா. தன் ரசிகனாக்கிட்டார் என்னை. திராவிட் ஏமாற்றிட்டார்.

தமிழ் மைந்தன்
07-08-2010, 02:51 PM
இந்திய கிரிகெட் வீரர்களுக்கு பாராட்டுக்கள்.

வியாசன்
07-08-2010, 09:04 PM
இலங்கையிடம் தோற்காதவரை மகிழ்ச்சி