PDA

View Full Version : காக்கைகளின் கால்களைப் போல முகங்களும்..ஆதி
02-08-2010, 10:57 AM
நமக்கு பரிட்சயமான இடங்களில் அலையும் காக்கைகள்
மனிதனின் கால்கள் உற்றிருப்பவை

ஓட்டுக்கூறையில்.. குளியலறை சுவற்றில்.. கரைந்திரந்து
கூட்டத்தொடு பகிர்ந்துண்ணுல் அறியாத
சுயநலமானவை..

மிக உயர்ந்து பறக்கும் சிறகுகளுற
சகக்காக்கையை பருந்துக்கு கூலித்தரும்
அரக்க மனமுண்டவை..

தன் வடையைக்காத்துக்கொள்ள
நரிகளிடத்து
பிறர் வடையை காட்டிக்கொடுக்கும் வஞ்சமுள்ளவை..

யாரோ கல்லிட்டு நிறைத்த ஜாடியை ஆக்ரமித்து
நீரையும், ஜாடியையும் தனதென்று சொந்தமுரைக்கும்
தயக்கமற்ற பொய்ச்சொல்லுடையவை..

தமை மிரட்டும் கூகைகளுக்கு
காவல் நாயாக ஒப்பந்தித்துக் கொண்டு
இனங்காக்கும் காக்கைகளை
துரோகத்தால் வேட்டையாடும் சூழ்ச்சியானவை..

சில பனம்பழங்களை சிதைக்கவே
மேலழுந்த அமர்ந்து விழுப்பிப்பவை..

நமக்கு பரிட்சயமான இந்த காக்கைகளுக்கு
கால்களைப் போன்று
முகங்களும்
மனிதனுடையவை..

பாலகன்
02-08-2010, 11:11 AM
காக்கையின் மறுபக்கத்தை சொல்லியவிதம் அருமை.... இது கவிதை என்பதனால் சில வார்த்தைகள் எழுத்துப்பிழை போல் தோன்றுகிறது. உதாரணத்திற்கு வஞ்சங்முற்றவை

மிகமிக அருமையான கவிதையை தந்த உங்களுக்கு என் பாராட்டுகள்

பாலன்
02-08-2010, 03:50 PM
உருவேற்றம், ஒப்புமை என கவிதையில் அடிமுதல் நுனிவரை மனிதனுக்குள் மண்டிக்கிடக்கும் காக்கையின் குணங்களை அலசி ஆராய்ந்துவிட்டீர்கள். பாராட்டுக்கள் திரு.ஆதன்.

ஆதி
12-08-2010, 01:33 PM
காக்கையின் மறுபக்கத்தை சொல்லியவிதம் அருமை.... இது கவிதை என்பதனால் சில வார்த்தைகள் எழுத்துப்பிழை போல் தோன்றுகிறது. உதாரணத்திற்கு வஞ்சங்முற்றவை

மிகமிக அருமையான கவிதையை தந்த உங்களுக்கு என் பாராட்டுகள்

நன்றி மகாபிரபு


உருவேற்றம், ஒப்புமை என கவிதையில் அடிமுதல் நுனிவரை மனிதனுக்குள் மண்டிக்கிடக்கும் காக்கையின் குணங்களை அலசி ஆராய்ந்துவிட்டீர்கள். பாராட்டுக்கள் திரு.ஆதன்.

நன்றி பாலன்

சசிதரன்
12-08-2010, 01:44 PM
நல்லதொரு கவிதை ஆதன்.... :) காக்கை ஒற்றுமைக்கு பெயர் போனது. அதனை மனிதனின் கருப்பு பக்கங்களுக்கு பொருத்தியிருப்பது முரணாக தோன்றினாலும்.... கவிதையை ரசிக்க முடிகிறது... :)

Ravee
13-08-2010, 07:50 AM
நல்ல கவிதை , ஆனால் ஆதன் உங்களுக்கு காக்கைகள் மேல் என்ன கோவம் இப்படி மனிதர்களுடன் ஒப்பிட்டு பேசி கேவலப்படுத்திவிடீர்கள் அவைகளை . இது தெரிந்து என் ஆபிஸ் வாசலில் ஒரு காக்காய் மின்கம்பத்தில் இருந்து தற்கொலை செய்து கொண்டது. அதற்கு ஒரு நூறு காக்கைகள் அழைப்பு இல்லாமல் வந்து அழுது கொண்டு இருக்கிறது. மறுப்பு அறிக்கை இடுங்கள் பாவம் தற்கொலை எண்ணிக்கை அதிகரிக்கும் .... :frown:

கீதம்
15-08-2010, 01:35 AM
வார்த்தை வீச்சு மிகப்பிரமாதம். கவிதையின் கனத்த கருவைத்தாங்கி நிற்கும் கடைசி பத்தி வெகு அழகு. பாராட்டுகள், ஆதன்.

தாமரை
15-08-2010, 02:58 AM
மனோஜின் மனிதனும் விலங்குகளும் காலத்தை நினைவு படுத்தியது உங்கள் கவிதை

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9192

அங்க எழுதிய பின்னூட்டம்

கரடியும் முதலையும்
நாயும் நரியும்
சிங்கமும் குரங்கும்
எருமையும் கழுதையும்
மனிதனுக்கு
உதாரணங்களாகிப் போயின..

மனிதத்துக்கு உதாரணமாய்
ஒரு மனிதன்
இல்லாது போனான்

இப்போ என்னடான்னா உதாரணமா திகழ்ந்தவைகளுக்கே கெட்ட பேர் வாங்கிக் கொடுக்கற ஆகியாச்சி...

கூடவே

காந்திக்கு மீசை உண்டா?
அலுவலகத்தில் கேட்டபொழுது

உண்டென்றவர் - இருவர்
இல்லையென்றவர் - 7 பேர்
தெரியலையே என குழம்பினவர் - 32
100 ரூபாய் பணத்தில் தேடியவர் - 12

கண்மணியின் இந்தக் கேள்வியும்... :lachen001::lachen001::lachen001::lachen001: