PDA

View Full Version : எனக்கெனவே நின்றவளே..,



kulirthazhal
02-08-2010, 10:57 AM
இமை மூடும்போதும்
களவாடும் தேகம்
விழி ஓய்ந்துபோனதடி.,,
கனவெல்லாம்
காதலாடுதடி..,
ஏழிசையும்
நாடி பாடிதடி....,

புரியாதபோதும்
தலையாட்டும் பாடம்
என்னோடு சேர்ந்ததடி..,
அறிவெல்லாம்
அசந்துபோனதடி..,
தொலைவொன்றே
நினைவிலாடுதடி...,

நடைபோடும்போதும்
எதிரோடும் வேகம்
பலமாக தள்ளுதடி..,
நேரம்
விரைவாக செல்லுதடி..,
தூரம்
பெரிதாகி கிள்ளுதடி..,

விடுமுறையின் ஏக்கம்
உதடுகொண்ட தேக்கம்
வேல்லும்நேரம் வந்ததடி..,
மணிநேரம்
தாமதமாகுதடி...,
உனைத்தீண்ட
சேலை ஏங்குதடி..,

களம்கானும்போதும்
குறையாத வீரம்
உனக்காக உள்ளதடி..,
உலகையே
பரிசாகக ஏக்கமடி..,
பதிலாக
முழம்பூவே பேசுமடி...,

மெலிதான கோபம்
பேய்பாடும் வேதம்
அழகாகி அடங்குதடி...,
எனக்கெனவே நின்றவளே
இனி
பணியுன்னை வெல்வதிலே.....,

- குளிர்தழல்.

kulirthazhal
02-08-2010, 11:02 AM
முதல் பத்தியில் நாடிபாடுதடி என்பது நாடி பாடிதடி என்று தவறாக பதிப்பிக்கப்பட்டுவிட்டது தவறுக்கு வருந்துகிறேன்.... மன்னிக்கவும்.....,

பாலன்
02-08-2010, 03:56 PM
கடைசி பத்திக்கு முந்தைய பத்தியிலும் பரிசாக்க ஏக்கமடி என்பது பரிசாகக ஏக்கமடி என்று பதிக்கப்பட்டுள்ளது. கவிதை கவர்கிறது. நன்றி திரு.குளிர்தழல்.

கலையரசி
02-08-2010, 04:07 PM
உலகையே
பரிசாக்க ஏக்கமடி..,
பதிலாக
முழம்பூவே பேசுமடி...

நான் ரசித்த வரிகள். பாராட்டுக்கள் குளிர்தழல்.

வியாசன்
02-08-2010, 09:22 PM
அவளை வெல்வதற்கு எனது வாழ்த்துக்கள் நல்லகவிதை குளிர்தழல்

கீதம்
02-08-2010, 11:15 PM
அடி அடியென்று எத்தனை அடிகள்!
தாங்குமோ தளிருடல்?
அடி தொழுதும்
ஏற்க மறுப்பாளோ குளிர்தழல்?

கவிதை வெகு அழகு. பாராட்டுகள்.

சுடர்விழி
03-08-2010, 01:45 AM
நல்ல கவிதை ..பாராட்டுக்கள் !!

kulirthazhal
07-08-2010, 11:09 AM
ரசித்து விமர்சித்தமைக்கு நன்றி நண்பர்களே....