PDA

View Full Version : சாத்தானை வென்றெடுத்தல்..



சசிதரன்
30-07-2010, 05:58 PM
சாத்தானுடனான சதுரங்க ஆட்டம்
விளையாட சுவாரஸ்யமாயிருக்கும்.

நீங்கள் அஞ்சி அஞ்சி அனுப்பும்
உங்கள் சிப்பாய்களை அது
கருணையின்றி வெட்டி வீழ்த்தும்போது
கொஞ்சம் நடுக்கமாயிருக்கும்.

தோல்வியின் பயம் உங்களை
ஆக்கிரமிக்க தொடங்கும் தறுவாயில்
உங்கள் குதிரைகளின் தலையும்
மண்ணில் விழும்.

இழப்பின் வலி வெளியெங்கும் தெறிக்க
மதம் பிடித்தபடி ஓடத் தொடங்கும்
உங்கள் யானைகளின் காலடியில்
நசுங்கத் தொடங்குவர் சாத்தானின் சிப்பாய்கள்.

உங்கள் கால் நனைக்கும்
எதிரி சிப்பாயின் குருதியில்
இன்னும் இன்னும் வெறியோடு
வெட்டி வீழ்த்தப்படும் தலைகள்.

உங்கள் வெறித்தனத்தில் சாத்தான்
கொஞ்சம் நடுங்கிப் போகையில்
தாமதம் ஏதுமின்றி அதன் படையனைத்தையும்
வெட்டி வீழ்த்துங்கள்.

தனிமையின் பெரும்பயத்தைக் கண்டு
கதறத் தொடங்கும் சாத்தான்
உங்கள் முன் மண்டியிட்டுக் கெஞ்சுகையில்
கருணையின்றி அதன் தலையைக் கொய்யுங்கள்.

ஒன்றை மட்டும்
கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்..

சாத்தானை வெற்றி கொண்டு
ஒரு கடவுளென நீங்கள் மாறும் வேளையில்
பார்ப்பவர்கள் உங்களை உருவகப்படுத்தக்கூடும்
சாத்தானென.

வியாசன்
30-07-2010, 06:12 PM
நல்ல கவிதை சசிதரன் வாழ்த்துக்கள்

இறுதியில் சாத்தானின் வெற்றிக் கொண்டுக
என்பது சாத்தானை வெற்றி கொண்டு என்று வரவேண்டுமென்று நினைக்கின்றேன். இல்லாவிடின் கவிதையின் பொருளே மாறிவிடும்.

சசிதரன்
04-08-2010, 03:01 PM
நன்றி வியாசன்.... :) சுட்டி காட்டியமைக்கு நன்றி... :)

சுகந்தப்ரீதன்
08-08-2010, 11:57 AM
சிம்ளி சூப்பர்ப்ப்.. வாழ்த்துக்கள்..!!

நான் உங்கள் எழுத்தின் நிரந்தரசிகன் சசிதரன்..!!

சசிதரன்
08-08-2010, 04:39 PM
சிம்ளி சூப்பர்ப்ப்.. வாழ்த்துக்கள்..!!

நான் உங்கள் எழுத்தின் நிரந்தரசிகன் சசிதரன்..!!

மிகவும் நன்றி சுகந்தவாசன்... :)

பூமகள்
11-08-2010, 12:07 PM
தீயதைக் கொல்வது எப்போதும் நல்லது மட்டுமே.

அநியாயத்தை வெல்வது எப்போதும் நியாயமே.

இருளை நகரச் செய்வது வெளிச்சம் மட்டுமே.

இங்கு சாத்தானை வெல்வது சாத்தானா ?? கடவுளா?? விடை தெரியாத இந்த கேள்விக்கு விடை காண சிந்திக்க வைத்துவிட்டீர்கள் சசி.

மிகுந்த பாராட்டுகள்.

--
தக்ஸ் பதிவில் உங்களின் இயல் அறிந்தேன். மகிழ்ந்தேன். தேனமுது குடும்பத்தின் அமுதப் படைப்பு நீங்கள் தானோ?? இன்னும் பல படைப்புகள் தந்து சிறந்த படைப்பாளியாக மென்மேலும் மிளிர வாழ்த்துகள்.

உங்கள் படைப்புகளின் விசிறிகளின் எண்ணிக்கையில் எனக்கும் ஓர் இடம் உண்டல்லவா?? :)

சசிதரன்
11-08-2010, 01:53 PM
தீயதைக் கொல்வது எப்போதும் நல்லது மட்டுமே.

அநியாயத்தை வெல்வது எப்போதும் நியாயமே.

இருளை நகரச் செய்வது வெளிச்சம் மட்டுமே.

இங்கு சாத்தானை வெல்வது சாத்தானா ?? கடவுளா?? விடை தெரியாத இந்த கேள்விக்கு விடை காண சிந்திக்க வைத்துவிட்டீர்கள் சசி.

மிகுந்த பாராட்டுகள்.

--
தக்ஸ் பதிவில் உங்களின் இயல் அறிந்தேன். மகிழ்ந்தேன். தேனமுது குடும்பத்தின் அமுதப் படைப்பு நீங்கள் தானோ?? இன்னும் பல படைப்புகள் தந்து சிறந்த படைப்பாளியாக மென்மேலும் மிளிர வாழ்த்துகள்.

உங்கள் படைப்புகளின் விசிறிகளின் எண்ணிக்கையில் எனக்கும் ஓர் இடம் உண்டல்லவா?? :)


ஹா ஹா ஹா... என்ன பூமகள்... . அவன் கொஞ்சம் அதிகமா இப்படிதான் சொல்லி வைப்பான். உங்கள் படைப்புகளின் விசிறி நான். நீங்கள் இப்படி கேட்பதில் எனக்குதான் பெருமை... :)

Ravee
11-08-2010, 03:09 PM
தீயதை அளிப்பதெல்லாம் நல்லதல்ல
தீயதை தீயதும் எதிர் கொள்ளும்

தீயதும் தீயதும் பொருந்துகையிலே
பெருந்தீயது வெற்றிகொள்ளுமாம்

நல்லதும் நல்லதும் நாடயிலே
நல்லது ரெண்டும் நட்பு கொள்ளுமாம்

நல்லதும் கெட்டதும் நம்முள்தான்
மூளையினால் மூளும் பகை

இதயத்தை கேட்டு வாழுங்கள்
நாளும் நல்லது ஜெயிக்கும்