PDA

View Full Version : அன்புள்ள அம்மாச்சி....!

யாழ்_அகத்தியன்
29-07-2010, 08:39 PM
நான்
கேட்காமல்
கிடைத்த ஆலயம்
என் தாய்

நான்
கேட்டதும்
கிடைத்த தெய்வம்
என் தாரம்

*

இறைவனிடம் வரம்
கேட்டேன்

அவன் தன்னை
கேட்டதாய் நினைத்து

தானே என்
மனைவியானான்

*

எல்லோரும் ஆறுதல்
தேடி ஆலயம் போவார்கள்

நான் உன்னைத் தேடி
வருவேன்

*

என் கவிதைக்குள்
யாரும் இல்லை
கிறுக்கல் ஆனது

என் காதலுக்குள்
நீ இருக்கிறாய்

கவிதையானது
என் வாழ்க்கை

-யாழ்_அகத்தியன்

வியாசன்
30-07-2010, 01:17 AM
காலச்சுமைதாங்கி போல போல மார்பில் எனைதாங்கி வீழும் கண்ணீர் துடைப்பாய்
அதில் என் விம்மல் தணியுமடி

அன்பான மனைவி கிடைத்தால் வாழ்வு இனிதாகும்

நல்ல கவிதை அகத்தியன் வாழ்த்துக்கள்

கீதம்
30-07-2010, 01:21 AM
அன்புள்ள அம்மாச்சி என்ற தலைப்பில் காதல் கவிதையா? என்று ஆச்சர்யத்துடன் வந்தேன். வந்தபின்பும் தலைப்புக்கும் கவிதைக்கும் உள்ள பொருத்தம் விளங்கவில்லை. எங்கள் ஊரில் அம்மாவைப் பெற்ற பாட்டியைதான் அம்மாச்சி என்று சொல்வோம்.

மற்றபடி கவிதை நன்றாக இருக்கிறது. கொடுத்து வைத்தவர் உங்கள் தாரம். அவர்தானே உங்கள் வாழ்வாதாரம். பாராட்டுகள் யாழ் அகத்தியன் அவர்களே.

வியாசன்
30-07-2010, 01:34 AM

அன்பான மனைவியாக இருந்தால் கண்டிப்பாக தாயைபோன்றுதான் இருப்பாள். அதனால்தான் அப்படி அகத்தியன் அப்படியொரு தலைப்பை தேர்ந்தெடுத்திருப்பார்

யாழ்_அகத்தியன்
30-07-2010, 06:09 AM
வாழ்த்துக் கூறிய இருவருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.
என் தாரத்தை செல்லமாக அம்மாச்சி என்றுதான் அழைப்பேன்