PDA

View Full Version : இல்லாத இல்..!



பூமகள்
27-07-2010, 11:33 AM
http://img37.imagefra.me/img/img37/8/7/27/poomagal/f_la3xs1y81sm_0582574.jpg




இல்லாத இல்..!



இருளோடு இயைந்து
இமை மூடும்
நேரத்தில்
கனவுகள் தொலைத்து
ஒரு பயணம்..

வேரோடு பெயர்த்தெடுத்து
புகுந்த வீட்டில்
வேர்விடும் முன்னே
தாக்கும்
வெட்டுக் கிளிகளின்
விடம்
அன்பிலை பரப்பாமல்
அழிக்கப் பார்க்கும்...

நிம்மதியை நாடி
நிதம் நினைத்து
பதமாக புறப்பட்ட
நாட்களெல்லாம்
கானலானது
கண் முன்னே..

அதிகாலை
அவசர அவதியில்
அப்பாவோடு
போட்டிக்கு நின்று
முதலாய் கிளம்பிய
நாட்கள் கனவில்
நடைபயின்றபடியே..

இளைப்பாற ஓடி
தினம் சாயும்
நாற்காலிச் சண்டை
இனி இல்லை வீட்டில்..

அந்நிய நாட்டிலிருந்து
ஆசையாய் வந்தாலும்
இல்லத்தரிசி என்ற பட்டத்துடன்
இல்லம் மாறியதும்
அந்நியமாகி
மறைந்து போகின்றது
அனைத்துமே..!

muthuvel
27-07-2010, 12:16 PM
ஆழமாக இருந்தது ,
உணர்சிபூரவமான கவிதை

muthuvel
27-07-2010, 12:23 PM
நிறைய எதிர்பார்கிறேன்

பூமகள்
27-07-2010, 01:18 PM
மிக்க நன்றிகள் முத்துவேல் அண்ணா..

என் எழுத்துகளோடான பழக்கம் வெகு காலமாக விடுபட்டுவிட்டது. முடிந்தவரை உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தியாக்க முயல்கிறேன்.

ஆதவா
27-07-2010, 03:00 PM
அநேகமாக இதற்கு பதில் கவிதை யாரேனும் எழுதக்கூடும்...

வேறென்ன சொல்ல... காலத்தின் மாற்றம் தான்.
தாய்க்குக் குழந்தைதான் என்பதால் பாலூட்டத்தான் முடியுமா?
தந்தைக்குப் பிள்ளையென்பதால் மடிதவழ முடியுமா?

ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு முகம் உரிந்து உரிந்து முகமே மாறிவிடுகிறது.. இல்லையா?

உங்கள் கவிதைக்கு வாழ்த்துகள், எளிமையாகவும் சிறப்பாகவும் இருந்தது.

அன்புடன்
ஆதவா.

சசிதரன்
27-07-2010, 03:12 PM
நல்ல கவிதை பூமகள்...

//ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு முகம் உரிந்து உரிந்து முகமே மாறிவிடுகிறது.. இல்லையா?//

ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்...

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
27-07-2010, 08:44 PM
இத்தனை நாள் இதயத்தில் ஏந்தியிருந்த உறவுகளை அப்படியே கொஞ்சம் ஒதுக்கி அவ்விடத்தல் அறியா ஒருவரை வைக்க வேண்டும். மிகச் சிரமம்தான் பெண்களுக்கு. நல்ல கவிதை பூ.

அமரன்
31-07-2010, 02:38 PM
ஒரு பெண்ணின் மாற்றத்தை அற்புதமாக வெளிப்படுத்தி உள்ளீர்கள்.

மாற்றதை ஏற்படுத்தியோரே கவிதைக்கும் பக்கபலமாக நிற்கிறார்கள்.

பாராட்டுகள்.

சுடர்விழி
01-08-2010, 12:34 AM
நல்ல கவிதை...ஒரு பெண்ணோட மனதை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்...பாராட்டுக்கள் !

lenram80
04-08-2010, 01:45 PM
என்றைக்கும் பழய நினைவு சுகமாக இருக்கும். காலம் போடும் கோலம் இது! இன்றைய நாள் என்பது வரமா ? சாபமா? புரியாமலே விடிகிறது.

கவிதைக்கு நன்றி! எழுத்துக்களோடு நீங்கள் விலகியிருந்தாலும் கவிதைக்கும் உங்களுக்கும் சொந்தம் ஒன்னும் விட்டு விடவில்லை.

பூமகள்
05-08-2010, 04:36 AM
அநேகமாக இதற்கு பதில் கவிதை யாரேனும் எழுதக்கூடும்...
வேறென்ன சொல்ல... காலத்தின் மாற்றம் தான்.
ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு முகம் உரிந்து உரிந்து முகமே மாறிவிடுகிறது.. இல்லையா?
உண்மை தான்.. பெண்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலை என்ற கேள்வி மட்டும் என்னில் எப்போதும். இருபது, இருபத்தியைந்து வருடங்கள் ஓரிடத்தில் வளர்ந்து, வேரோடு பெயர்த்து மற்றொரு வீட்டுக்குள் நடுவது.. கிட்டத்தட்ட பெரும் கொடுமை.. அது வார்த்தைகளால் வடிக்க இயலாது.. ஆயினும்.. அதைத் தாங்கிய படியே இன்னும் நம் பெண்கள் காலங்காலமாய்..

நன்றிகள் ஆதவா..


நல்ல கவிதை பூமகள்...

நன்றிகள் சசி.. என் கவிதைக்கு இத்தனை வரவேற்பு கிடைக்குமென்று எதிர்பார்க்கவில்லை.. சில நிமிடங்களில் எழுதி முடித்தது. நன்றிகள் கோடி.

இத்தனை நாள் இதயத்தில் ஏந்தியிருந்த உறவுகளை அப்படியே கொஞ்சம் ஒதுக்கி அவ்விடத்தல் அறியா ஒருவரை வைக்க வேண்டும். மிகச் சிரமம்தான் பெண்களுக்கு. நல்ல கவிதை பூ.
ரொம்ப சரியா சொன்னீங்க ஹஸனீ அண்ணா.. இந்த பிரச்சனை ஆண்களுக்கு இல்லையல்லவா?? கொடுத்து வைத்தவர்கள் தான் நீங்க.. உங்களுக்கு குடும்பத்தோடு சேர்த்து புதிய உறவு ஒன்று கிடைக்கிறது.. எதையுமே இழக்காமல்.. எல்லார் அன்பு என்றும் கிட்டியபடியே ஆண்கள்..

இயல்பு, சூழல், மனிதர்கள், உறவுகள் எல்லாம் மாறியும் அனைத்தையும் ஏற்று நாங்கள்..

ரொம்ப நன்றிங்க அண்ணா. :)


ஒரு பெண்ணின் மாற்றத்தை அற்புதமாக வெளிப்படுத்தி உள்ளீர்கள்.
மாற்றதை ஏற்படுத்தியோரே கவிதைக்கும் பக்கபலமாக நிற்கிறார்கள்.
பாராட்டுகள்.
நன்றிங்க அமர் அண்ணா.. என்ன சொல்வது... தாய் வீட்டில் இருந்த சூழல்.. புகுந்த வீட்டில் கிடைக்குமா என்ன... அது வேறு கால கட்டம்.. இது வேறு கால கட்டம்..

அம்மாவுக்கு என்றும் குழந்தை தான்.. நமக்கு அறுபது வயதானாலும்.. ஆனால், புகுந்த வீட்டில் பெண் பெரியவள் அல்லவோ?? குழந்தையாக பாவிக்க யார் உளர் அங்கே...:icon_rollout:
நன்றிங்க அமர் அண்ணா...

நல்ல கவிதை...ஒரு பெண்ணோட மனதை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்...பாராட்டுக்கள் !
நன்றிங்க சுடர்விழி.. ரொம்ப கஸ்டம் தான் இல்ல.. என்ன செய்வது.. :wuerg019:


என்றைக்கும் பழய நினைவு சுகமாக இருக்கும். காலம் போடும் கோலம் இது! இன்றைய நாள் என்பது வரமா ? சாபமா? புரியாமலே விடிகிறது.
கவிதைக்கு நன்றி! எழுத்துக்களோடு நீங்கள் விலகியிருந்தாலும் கவிதைக்கும் உங்களுக்கும் சொந்தம் ஒன்னும் விட்டு விடவில்லை.
பெரும் எழுத்தாளர், கவிஞர் லென்ராம் அண்ணாவிடமிருந்து இவ்வகை விமர்சனத்தை நான் எதிர்பார்க்கவில்லை.. ரொம்ப நன்றிங்க அண்ணா.

அனைத்தும் உண்மையே... பழைய நினைவு நம்மை ஏக்க பெருமூச்சு மட்டுமே விட வைக்கும் அல்லவா... :rolleyes:

சுகந்தப்ரீதன்
08-08-2010, 11:42 AM
அண்டை வீட்டில் வாக்கபடும் பெண்ணுக்குக்கூட இந்தவலி இருக்கத்தான் செய்கிறது..!! இது இன்று நேற்றல்ல... பண்பாடு என்ற பெயரில் பலகாலமா ஆணினம் பெண்ணினத்தின்மீது கண்ணுக்கு தெரியாமல் கட்டியிருக்கும் ஒரு இறுக்கமான கயிறு..!! இதற்கான காரணத்தை நான் ஏற்கனவே விவாதத்திரி ஒன்றில் விளக்கமாக பதிவிட்டதை பார்த்து, நம்ப நவீன நாரதர் பாராட்டி சென்றதாக ஒரு ஞாபகம்.. திரி எதுவென்று நினைவில்லை.. தேடிக்கிடைத்தால் தருகிறேன்..!! இல்லையென்றால் அவரே தேடி தருவார்...:D

கவிதைக்கு வாழ்த்துக்கள் பூமகள்..!! பூ மகள் நலமா..?!:)

----------------------------------------------------------------------
ஸாரி தங்கச்சி... அது விவாததிரியில்ல.. ஓட்டெடுப்பு திரி போலிருக்கு..!!

http://www.tamilmantram.com/vb/showpost.php?p=432479&postcount=43