PDA

View Full Version : முகமூடிகள்



சுடர்விழி
26-07-2010, 12:51 PM
சிரித்து சிரித்து
முதுகில் குத்துவர்....
பேச்சின் நடுவே
குழி பறிப்பர்..
அழுது புலம்பி விழ வைப்பர்...
'வாழ்தல் சாத்தியமா
இவர்கள் நடுவே !' என
பயம் கொடுப்பர்....

எங்கே ஓடுவது இவர்களை வெறுத்து...?

முதலைக் கண்ணீர் ;
ஓணாய் கரிசனம் ;
நரியின் தந்திரம்;
புலியின் கொடூரம் ;
இன்னும்..இன்னும்..
மனிதன் எனும்
முகமூடிகளுடன்
உலக உருண்டையின்
எல்லா மூலைகளிலும் பலர்...

எங்கே ஓடுவது இவர்களை வெறுத்து...?

வேறு வழியில்லை
அன்பெனும் கேடயம் எடுத்து
புன்னகை அம்புகள் தொடுத்து
போரற்ற களத்தில் சந்தித்து
வீரமாய் ..விவேகமாய்...
இவர்களை திருத்து..
இல்லையேல் விலக்கு...!


------சுடர்விழி

கலையரசி
26-07-2010, 01:14 PM
’உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்’
எங்கும் முகமூடி மனிதர்கள் நிறைந்திருக்கிறார்கள்.
முகமூடி மனிதர்களை ஒன்று திருத்த வேண்டும். அல்லது நம் வாழ்விலிருந்து விலக்க வேண்டும்.
நல்லதொரு கருத்தைச் சொல்லும் கவிதை. பாராட்டு சுடர்விழி!

சுடர்விழி
27-07-2010, 03:03 AM
நன்றி கலையரசி !

ஆதவா
27-07-2010, 03:08 PM
நல்ல கவிதைங்க சுடர்விழி.

முதுகில் குத்துபவர்கள் எதிர்நோக்கியே இருங்கள். அவர்களிடம் நெஞ்சில் அடி வாங்குங்கள்... தெரிந்தே...

இன்னும் கொஞ்சம் முயற்சி எடுத்து எழுதுங்கள்.
கவிதைக்கு வாழ்த்துகள்!

சுடர்விழி
28-07-2010, 03:15 AM
நன்றி நண்பரே....[இந்த கவிதை நான் கல்லூரியில் படித்த போது எழுதியது]

nambi
28-07-2010, 07:12 AM
கவிதை நன்று! பாராட்டுக்கள்!

சுடர்விழி
28-07-2010, 12:30 PM
நன்றி நம்பி !

மச்சான்
28-07-2010, 12:32 PM
நல்ல கவிதை. வாழ்த்துக்கள் சுடர்விழி.

சுடர்விழி
28-07-2010, 12:35 PM
நன்றி நண்பரே !

அமரன்
28-07-2010, 09:57 PM
சிரிச்சு சிரிச்சு முதுகில் குத்துவோரில் தொடங்கி
சிரிச்சு எல்லாத்தையும் எதிர்கொள்வோரில் முடிகிறது கவிதை..

மனத்தூளியிலிருந்து
புன்னகை அம்பெடுத்துப் பொருத்தி
இதழ்வில் வளைத்து
அன்பெனும் நாண் ஏற்றி
போர் தொடுப்போம்..
பார் வெல்வோம்..

அருமையான சொல்.

பாராட்டுகள் சுடர்விழி.

சுடர்விழி
29-07-2010, 04:56 AM
நன்றி அமரன் !!

கீதம்
02-08-2010, 11:06 PM
திருத்தவும் முடியாமல்
விலக்கவும் இயலாமல்
விதிக்கப்பட்ட வாழ்க்கையென
சிலர் மட்டும் விதிவிலக்கு!

பாராட்டுகள், சுடர்விழி.

சுடர்விழி
03-08-2010, 01:28 AM
நன்றி கீதம் !