PDA

View Full Version : நகைச்சுவை துணுக்கு



கலையரசி
25-07-2010, 09:59 AM
”என்னமோ மாதிரியிருக்கு. குடிக்க ஏதாவது கொடேன்”

சூடாவா? இல்ல ஜில்லுன்னு வேணுமா?

”தலையை வலிக்கிற மாதிரியிருக்கு. சூடாவே கொடு”.

காபியா? இல்லே டீயா?

ம்.. காபியே கொடு.

பில்டர் காபி வேணுமா? அல்லது புரூ காப்பியா?

பில்டர் காபி தான் எனக்குப் பிடிக்கும். அதையே கொடு.

நரசுஸ் காபித் தூள்ல போடவா? இல்ல காபி டேயா?

நரசுஸ் தூள்லேயே போடு.

ஸ்டிராங்கா வேணுமா? இல்லேன்னா லைட்டா வேணுமா?

ஸ்டிராங்காவே இருக்கட்டும்.

சர்க்கரை போட்டு வேணுமா? இல்லேன்னா போடாமலா?

சர்க்கரை போட்டே கொடு.

கிளாசுலே வேணுமா? இல்ல டம்ளரில தரவா?

”சே! ஒங்கிட்ட போய் காபி கேட்டேன் பாரு, என் புத்தியைச் செருப்பால
அடிக்கணும்”

”ஒன் செருப்பாலயா? இல்ல, என் செருப்பாலயா?”



(பல வருடங்களுக்கு முன் ஆனந்த விகடனில் ஒரு ந.துணுக்கு வந்தது. நண்பனைப் பாடச் சொல்வான் ஒருவன். அவனது சரமாரியான கேள்விகளால் நொந்து போனவன், கடைசியில் இப்படித்தான் முடிப்பான். அதே பாணியில் இந்த நகைச்சுவை துணுக்கு)

மச்சான்
25-07-2010, 12:03 PM
இதே மாதிரி கவுண்டமணி, செந்தில் நடித்த நகைச்சுவை காட்சியும் ஒரு படத்தில் இடம் பெற்றிருக்கிறது.

nambi
25-07-2010, 01:20 PM
ஆமாம் இதே சாயல்ல :D நிறைய திரைப்படங்களிலே வந்திருக்கு...இன்னும் தொடரலாம்..
ஏன் உன் செருப்பாலத்தான் அடியே...
பிஞ்ச செருப்பா? பிய்க்காத செருப்பா...
பிஞ்ச செருப்புலேயே....
ஒரு தடவையா? ''ஒன்பது'' தடவையா?
ஒன்பது தடவை தான் ...யேன்?
நிக்கவிட்டு .....ணுமா? ஒடவிட்டு ......ணுமா?:D

அன்புரசிகன்
25-07-2010, 11:13 PM
பொதுவா ஒரு தத்துவம் சொல்லுவாங்களே... நமக்கு கஷ்டம் வந்தால் நம்மைவிட கூடிய கஷடம் உள்ளவரை பார்த்து நாம தேற்றிக்கணும் என்று. அது போல தான் மனைவி நினைச்சிருப்பா... அந்த தலைவலியிலும் பெரிய தலைவலியை கொடுத்தால் இருந்த தலைவலி மாயமாய் மறைந்திடும் என்று.... :D

சிவா.ஜி
26-07-2010, 05:30 PM
ஹா...ஹா.....எப்பவோ கேட்டதுன்னாலும்....இப்ப படிக்கவும் நல்லாத்தான் இருக்கு.

பா.ராஜேஷ்
04-08-2010, 04:32 AM
கேட்ட தமாசுதான் இருந்தாலும் ரொம்ப நல்லாருக்கு... பகிர்விற்கு நன்றி மேடம்.

TamilPura
04-08-2010, 08:09 AM
முன்பு படித்ததுதான் என்றாலும் இப்போது படிக்கும்போதும் சிரிப்பு வருகிறது.

sures
04-08-2010, 05:01 PM
அவனுக்கு கிடைத்த பதில்களிலே தலைவலி பறந்தே இருக்கும் :)

வியாசன்
04-08-2010, 09:17 PM
நன்றி பகிர்விற்கு

ஜிங்குசாங்கு
01-09-2010, 12:08 AM
படித்ததுதான், ஆனாலும் மீண்டும் படிக்க திகட்டவில்லை! நன்றி

suriya_2411
16-09-2010, 07:17 AM
மிக அருமை :lachen001::lachen001:

முருகன்
16-09-2010, 07:39 AM
அருமையாக உள்ளது..
தொடரட்டும் உங்கள் துணுக்குகள்.

lenram80
17-09-2010, 04:35 PM
சும்மா... எல்ல்லோரும் அருமையாக உள்ளது என்றால் எப்படி?

இது ஏறக்குறைய 15 வருடங்களுக்கு முன் நான் கேள்விப்பட்ட ஜோக்.

நான் கலையரசிக்கு தரும் அறிவுறை:-
நீங்களாகவே யோசித்து எழுதிய உங்களின் படைப்பைப் தருங்கள் !!!

ஊக்குவிக்கும் நண்பர்கள் படை இங்கே இருக்க.... பிறகு என்ன தயக்கம்???

அனுராகவன்
22-09-2010, 03:40 PM
நகைச்சுவை துணுக்குகள் ஒவ்வொன்றும் அருமை...
படிக்க சிரிப்பு..அதை ஏன் தொடரல அதானல் எனக்கு வெறுப்பு..
இனி தொடர்ந்தால் இங்கு மக்கள் ஈர்ப்பு..

ஆன்டனி ஜானி
27-10-2010, 05:07 PM
காமடி ரெம்ப நல்ல இனிப்பான உணவு இது எல்லாருக்கும் பிடித ஒரு உணவு

S.Muralikrishnan
27-10-2010, 05:13 PM
பழைய துணுக்கு என்றாலும், தலை வலி நேரத்தில், எதோ சிரிப்பு வரத்தான் செய்தது.

ஆன்டனி ஜானி
27-10-2010, 07:00 PM
:medium-smiley-002: உன்களுக்கு தலைவலி வந்தால் பலய துணுக்குகளை பார்து சிரின்கள்......சிரி....சிரி