PDA

View Full Version : பூவில்லாத் தலை.



அமரன்
24-07-2010, 10:52 AM
ஒதுக்குப் புறத்தில்
என்னையும் உன்னையும்
தப்புச் செய்தியாக்கிய
அந்த ஊர்தான்
இன்றைய தலைப்புச் செய்தி..!

வருபவர்கள் கேட்கிறார்கள்
மகிழ்ச்சியாகத்தானே இருக்கிறீர்கள்.
அவர்களுக்குச் சொல்ல முடியுமா
மகிழ்ச்சியாகத் தெரிகிறோம் என்று..

முன்பெல்லாம்
நாங்கள் உறங்கிக் கொண்டிருப்போம்
உணர்வுகள்
ஊரெங்கும் உலவிக் கொண்டிக்கும்.

இப்போதோ....
உணர்வுகள் எங்கோ உறங்குகின்றன
நாங்கள்
ஊரெல்லாம் உலவுகிறோம்..

முன்பு நாம் பிசினெடுத்த
அந்த மரங்கள் எல்லாம்
மரத்துப் போய் விட்டன...
மனங்களும் ஒட்டவில்லை..

இடிக்கப்பட்ட வீடுகள்
மோட்சம் பெற்றிருக்கின்றன.
இருக்கும் வீடுகளோ
இடிந்து போய்க் கிடக்கின்றன..

அட..
காற்றுக் கூட கையிழந்து
ஊனமாகி விட்டது..
இப்போதெல்லாம்
தீண்டுவதில்லை.. சீண்டுவதில்லை..
எரிவுடன் இருக்கிறோம்..

தெருக்களில் நடந்தால்
குருதி வருமளவில் பாதம் சுரண்டும்
என்பு விரல்கள்..

வீழ்ந்த விதைகளை
வாழ்வாகத் தந்தபூமி
விதைகள் வீழ்ந்ததில்
ஆனது செம்பூமி..

கடையாய்..

கிணறும் நிரம்பி இருக்கு
ஆனால்
புதிதாய் ஏதும் ஊற்றில்லை..

இறைத்தால்தால் ஊற்றெடுக்குமென்ற
விஞ்ஞானம் அறியாதளா நீ...

வியாசன்
24-07-2010, 11:32 AM
உணர்வுகளை கொட்டித் தீர்த்துவிட்டீர்கள். அமரன் எமது காவல் தெய்வங்களை விமர்சித்தவர்கள் சிலர். அவர்கள் இல்லாத இன்று நாளென்றுக்கு நாலைந்து படுகொலைகள் திருட்டுக்காய். அச்சத்துடன் அச்சமில்லாதவர் போன்ற வாழ்க்கை. விடியுமா?
.................
.................
விடியும் எமது கரங்கள் ஒன்றாய் இணைந்தால்.............. கடிதங்களால் எமக்கு விடிவில்லை. கடிதங்கள் சுயநலங்களுக்காய் தொடரும்...... உறவுகள் இணையும் நாள் தொலைவிலில்லை.

கிணறும் நிரம்பி இருக்கு
ஆனால்
புதிதால் ஏதும் ஊற்றில்லை..

பழைய ஊற்றிலிருந்து பீறிட்டுபாயும் எமது எழுச்சி புதிதாய் எமக்கோர் ஊற்று தேவையில்லை.

உங்கள் ஏக்கத்துடன் இணையும் வியாசன்

சுடர்விழி
25-07-2010, 12:55 AM
அருமையான கவிதை...மெல்லிய உணர்வுகளைத் தெளிவாகக் காட்டியிருக்கிறீர்கள்...


”இறைத்தால்தால் ஊற்றெடுக்குமென்ற
விஞ்ஞானம் அறியாதளா நீ...”

நல்ல வரிகள்.....பாராட்டுக்கள்...

குணமதி
25-07-2010, 03:42 AM
வலியின் நுட்ப வெளிப்பாடு.

பாராட்டு.

கலையரசி
25-07-2010, 05:40 AM
மனதைப் பாதித்த கவிதை.
இன்று சேறு சகதியால் மூடிக்கிடக்கும் கிணற்றைத் தூர் வாரி ஊற்றெடுக்கும் காலம் நிச்சயம் வரும்.
தாயகத்தில் உணர்வுகளை உலாவவிட்டு வெறும் கூடுகளாய்த் தொலைதூர நாடுகளில் உலவும் உறவுகள், மீண்டும் ஒன்று கூடும் நாள் வெகு தூரத்திலில்லை.
காலம் மாறும்;அதுவரை பொறுத்திருப்போம் அமரன்!

சசிதரன்
27-07-2010, 03:09 PM
உணர்வுகளை ஆழமாகவும் நுட்பமாகவும் வெளிப்படுத்தும் கவிதை... அருமை அமரன்...

பூமகள்
28-07-2010, 04:02 AM
எப்போதும் போல் நான் :confused::confused:. மீண்டும் மீண்டும் படித்து புரிந்த பின்னே என் விமர்சனம்.. மன்னிக்கவும் அமர் அண்ணா.

nambi
28-07-2010, 07:13 AM
உணர்ச்சிகளுடன் கூடிய கவிதை நன்று!

அமரன்
28-07-2010, 09:44 PM
உணர்வுகளை கொட்டித் தீர்த்துவிட்டீர்கள். அமரன் எமது காவல் தெய்வங்களை விமர்சித்தவர்கள் சிலர். அவர்கள் இல்லாத இன்று நாளென்றுக்கு நாலைந்து படுகொலைகள் திருட்டுக்காய். அச்சத்துடன் அச்சமில்லாதவர் போன்ற வாழ்க்கை. விடியுமா?
.................
.................
விடியும் எமது கரங்கள் ஒன்றாய் இணைந்தால்.............. கடிதங்களால் எமக்கு விடிவில்லை. கடிதங்கள் சுயநலங்களுக்காய் தொடரும்...... உறவுகள் இணையும் நாள் தொலைவிலில்லை.

கிணறும் நிரம்பி இருக்கு
ஆனால்
புதிதால் ஏதும் ஊற்றில்லை..

பழைய ஊற்றிலிருந்து பீறிட்டுபாயும் எமது எழுச்சி புதிதாய் எமக்கோர் ஊற்று தேவையில்லை.

உங்கள் ஏக்கத்துடன் இணையும் வியாசன்

ஊருல பிரச்சினை என்று சொல்லி, வதிவிட உரிமை பெற்று பிறகு பாஷை படிச்சு, நாட்டின் அடிப்படைச் சட்டம் படிச்சு பிரிஜாவுரிமை பெற்றுக்கொண்டு இப்ப நாட்டுக்குப் போகும் எம்மவர்களை நன்றாகத் திட்டுங்கோ. என்னுடன் வேலை செய்யு|ற வெள்ளைக்காரன் கேக்குறான் ‘நாட்டில இப்ப பிரச்சினை என்றுதானே ஸ்ரீலங்காவுக்குப் போயினம் உங்கட ஆக்கள்’..

அமரன்
28-07-2010, 09:45 PM
அருமையான கவிதை...மெல்லிய உணர்வுகளைத் தெளிவாகக் காட்டியிருக்கிறீர்கள்...


”இறைத்தால்தால் ஊற்றெடுக்குமென்ற
விஞ்ஞானம் அறியாதளா நீ...”

நல்ல வரிகள்.....பாராட்டுக்கள்...

நன்றி சுடர்விழி.

அமரன்
28-07-2010, 09:46 PM
வலியின் நுட்ப வெளிப்பாடு.

பாராட்டு.

நன்றி குணமதி.

அமரன்
28-07-2010, 09:47 PM
மனதைப் பாதித்த கவிதை.
இன்று சேறு சகதியால் மூடிக்கிடக்கும் கிணற்றைத் தூர் வாரி ஊற்றெடுக்கும் காலம் நிச்சயம் வரும்.
தாயகத்தில் உணர்வுகளை உலாவவிட்டு வெறும் கூடுகளாய்த் தொலைதூர நாடுகளில் உலவும் உறவுகள், மீண்டும் ஒன்று கூடும் நாள் வெகு தூரத்திலில்லை.
காலம் மாறும்;அதுவரை பொறுத்திருப்போம் அமரன்!

ஆறுதலான சொற்கள்.

உண்மைதான்.. காலம் மாறும். காலம் மாற்றும்.

நன்றி கலையரசி.

அமரன்
28-07-2010, 09:48 PM
உணர்வுகளை ஆழமாகவும் நுட்பமாகவும் வெளிப்படுத்தும் கவிதை... அருமை அமரன்...


அற்புதக் கவிஞரிடமிருந்து பாராட்டா. உச்சி குளிர்ந்தேன். நன்றி சசி.

அமரன்
28-07-2010, 09:48 PM
எப்போதும் போல் நான் :confused::confused:. மீண்டும் மீண்டும் படித்து புரிந்த பின்னே என் விமர்சனம்.. மன்னிக்கவும் அமர் அண்ணா.

:sauer028::sauer028::sauer028:

அமரன்
28-07-2010, 09:49 PM
உணர்ச்சிகளுடன் கூடிய கவிதை நன்று!

நன்றி நம்பி.

ஓவராத்தான் உணர்ச்சி வசப்பட்டுட்டனோ..:)

மதி
29-07-2010, 03:03 AM
'உண்மை'யான கவிதை. வலி என்ற உணர்வின் வெளிப்பாடாய் அழகான வார்த்தைகளுடன்..

பூமகள்
29-07-2010, 08:31 AM
:sauer028::sauer028::sauer028:
:icon_ush::icon_ush: ஏன் அண்ணா?? :traurig001:

என்ன சொல்ல வர்றீங்கன்னு பாதி புரிஞ்சாலும்.. முடிக்கையில குழப்பமா இருக்கு.. அதான் எதுக்கு வம்புன்னு உண்மையைச் சொன்னேன்.. உண்மையைச் சொன்னால்.. கோவிச்சுப்பீங்களோ?? :icon_rollout::fragend005:

govindh
29-07-2010, 09:05 AM
பூவில்லாத் தலை -
வலிக்க வைக்கும் வரிகள்...

'காற்றுக் கூட கையிழந்து
ஊனமாகி விட்டது..'

'இப்போதோ....
உணர்வுகள் எங்கோ உறங்குகின்றன
நாங்கள்
ஊரெல்லாம் உலவுகிறோம்..'

மனதை கனக்க வைக்கும்
உயிர் வலிகள்..
உயர் வரிகள்...

அருமையாக அமைத்து இருக்கிறீர்கள்....
பாராட்டுக்கள்.

அமரன்
31-07-2010, 01:24 PM
'உண்மை'யான கவிதை. வலி என்ற உணர்வின் வெளிப்பாடாய் அழகான வார்த்தைகளுடன்..

உண்மை என்றால் வலி இல்லாமலா.

நன்றி மதி.

அமரன்
31-07-2010, 01:26 PM
:icon_ush::icon_ush: ஏன் அண்ணா?? :traurig001:

என்ன சொல்ல வர்றீங்கன்னு பாதி புரிஞ்சாலும்.. முடிக்கையில குழப்பமா இருக்கு.. அதான் எதுக்கு வம்புன்னு உண்மையைச் சொன்னேன்.. உண்மையைச் சொன்னால்.. கோவிச்சுப்பீங்களோ?? :icon_rollout::fragend005:

தேவை அற்றவை என்று நான் நினைத்ததால்தான் அவற்றை மறைத்திருக்கிறேன். பிறகேன் அங்கயே நிக்கிறீங்க.:) நடவுங்க.. காற்றாடட்டும்.

அமரன்
31-07-2010, 01:27 PM
....
பாராட்டுக்கள்.

நன்றி கோவிந்த்.

கீதம்
02-08-2010, 11:00 PM
கண்முன்னே வலம் வருகின்றன, அவலக்காட்சிகள்! மனதில் இருப்பவற்றை அப்படியே வார்த்தைகளில் வடிக்க ஒரு தனித்திறன் வேண்டும். அது உங்களிடம் நிறையவே இருக்கிறது. (எனினும் நீங்கள் நினைத்த யாவற்றையும் வடித்தீர்களா என்பது நீங்கள் மட்டுமே அறிந்த உண்மை.)

பாதம் சுரண்டும் என்பு விரல்கள் என் இதயத்தையும் சுரண்டி வலி உண்டாக்குகின்றன.

இங்கே மறைக்கப்பட்ட வரிகளில் தங்கி நிற்கிறது, கவிதை மொத்தத்துக்குமான கரு.

கனத்த மனதுடன் பாராட்டுகிறேன், அமரன்.

lenram80
04-08-2010, 01:35 PM
பாதிக்கப்பட்ட தேசத்தின் நாசத்தைப் பற்றி பதிக்கப்பட்ட இக்கவிதையில் துக்கத்தின் தாக்கம் சொன்ன அமரனின் உணர்ச்சிக்கு நன்றி!