PDA

View Full Version : அவசர உலகம்



durgashankar
23-07-2010, 11:50 AM
நண்பர்களே, இது எனது கவிதை கன்னி முயற்சி. பிழை பொருத்தருள்க.

௧) பிறன்மனை நோக்கா பேராண்மை உண்மை. அவசர உலகில் என் மனை நோக்கவே நேரமில்லை, எனக்கும் உண்டோ பேராண்மை?

௨) அலாரம் அடித்து கண் விழித்து, அடுக்கடுக்காய் அன்றாட கடன் முடித்து, அவசர அவசரமாய் அள்ளி வாயில் போட்டு, அலறி அடித்து பஸ் பிடித்து அலுவலகம் ஓடி, அங்கு அனைவரிடமும் போரிட்டு, மேனஜரிடம் புறமுதுகு காட்டி, கஸ்டமரிடம் பல்லிளித்து, ஊர் உறங்கி நாய் குலைக்கும் நேரத்தில், ஒரு நாள் போல் வீடு வந்து விழுந்தால், பனித்துளியை பார்பதெப்போ? முல்லை மலரை முகர்வதெப்போ? மழலை சிரிப்பில் மகிழ்வதெப்போ? தமிழ் மன்றத்தில் கவிதைதான் படிப்பதெப்போ?

ஆதி
23-07-2010, 12:06 PM
வணக்கம் துர்காசங்கர்,

உங்களின் கன்னி முயற்சிக்கு வாழ்த்துக்கள்..

யந்திர வாழ்வின் யதார்த்தங்களை கவிதையாக்க முயற்சித்திருப்பதற்கு தனி பாராட்டுக்கள்..

வரிகளை ஒடித்து கவிதை வடிவு கொடுத்திருக்கலாமே ?

எழுத எழுத எழுத்து கைப்படும்.. தொடருங்கள்..

durgashankar
23-07-2010, 12:13 PM
மிக்க நன்றி ஆதன்.

ஆதவா
23-07-2010, 12:32 PM
நண்பர்களே, இது எனது கவிதை கன்னி முயற்சி. பிழை பொருத்தருள்க.

௧) பிறன்மனை நோக்கா பேராண்மை உண்மை. அவசர உலகில் என் மனை நோக்கவே நேரமில்லை, எனக்கும் உண்டோ பேராண்மை?

௨) அலாரம் அடித்து கண் விழித்து, அடுக்கடுக்காய் அன்றாட கடன் முடித்து, அவசர அவசரமாய் அள்ளி வாயில் போட்டு, அலறி அடித்து பஸ் பிடித்து அலுவலகம் ஓடி, அங்கு அனைவரிடமும் போரிட்டு, மேனஜரிடம் புறமுதுகு காட்டி, கஸ்டமரிடம் பல்லிளித்து, ஊர் உறங்கி நாய் குலைக்கும் நேரத்தில், ஒரு நாள் போல் வீடு வந்து விழுந்தால், பனித்துளியை பார்பதெப்போ? முல்லை மலரை முகர்வதெப்போ? மழலை சிரிப்பில் மகிழ்வதெப்போ? தமிழ் மன்றத்தில் கவிதைதான் படிப்பதெப்போ?


அலாரம் அடித்து கண் விழித்து,
அடுக்கடுக்காய் அன்றாட கடன் முடித்து,
அவசர அவசரமாய் அள்ளி வாயில் போட்டு,
அலறி அடித்து பஸ் பிடித்து அலுவலகம் ஓடி,
அங்கு அனைவரிடமும் போரிட்டு,
மேனஜரிடம் புறமுதுகு காட்டி,
கஸ்டமரிடம் பல்லிளித்து,
ஊர் உறங்கி நாய் குலைக்கும் நேரத்தில்,
ஒரு நாள் போல் வீடு வந்து விழுந்தால்,
பனித்துளியை பார்பதெப்போ?
முல்லை மலரை முகர்வதெப்போ?
மழலை சிரிப்பில் மகிழ்வதெப்போ?
தமிழ் மன்றத்தில் கவிதைதான் படிப்பதெப்போ?


-------

எழுத்துக்களைச் சுருக்கி, வார்த்தைகளை அடிக்கி, வரிகளை ஒடுக்கி கவிதை எழுதப் பழகுங்கள்.
கவிதையை இப்படி அழகாக அடுக்கும் பொழுது கவிதை, கவிதையாகவே இருக்கும்.

காலம் குறித்து இரண்டு வகை இருக்கிறது...
முதலாவது அதன் கையில் நாம் சிக்க வேண்டும்
இரண்டாவது நம் கையில் காலம் சிக்க வேண்டும்..

உங்கள் கவிதை முதலாம் வகை நபரைக் குறிக்கிறது.. பெரும்பாலான இயந்திரத்தன மனிதர்கள் அப்படியாகத்தான் இருக்கிறார்கள். கவிதை நாயகன் இரண்டுக்கும் நடுவில் சிக்கித் தவிக்கிறான். ஒருவேளை அது நீங்களோ என்னவோ?

தொடர்ந்து கவிதை எழுதுங்கள்>>>

durgashankar
23-07-2010, 02:02 PM
நன்றி ஆதவா. காலத்தை பற்றி நீங்கள் கூறியதும் சரிதான். கவிங்கனை பற்றியும் நீங்கள் கூறியது சரிதான் என்று தோன்றுகிறது. ஒருக்கால் கவி என்பவன் காலத்தின் கையில் சிக்கி இக்கரையில் இருந்துகொண்டு அக்கரைபார்த்து பெருமுச்சு விடுபவனோ என்னவோ? காலம் முழுவதுமாய் கையில் கிடைத்தால் பனித்துளியை பார்த்துக்கொண்டு காலம் முழுக்க இருக்கமுடியுமா? தெரியவில்லை?

கலையரசி
23-07-2010, 02:46 PM
கணிணித் துறையில் வேலை பார்க்கும் பெரும்பான்மையோரின் நிலைமை இன்று இப்படித்தான் இருக்கிறது. பணம் வருகிறது. ஆனால் வாழ்வை அனுபவிக்க நேரமில்லாதது துரதிஷ்டம் தான்.
நன்றாக எழுதுகிறீர்கள் சங்கர். தொடர்ந்து எழுதுங்கள்.

ஆதவா
24-07-2010, 04:17 AM
நன்றி ஆதவா. காலத்தை பற்றி நீங்கள் கூறியதும் சரிதான். கவிங்கனை பற்றியும் நீங்கள் கூறியது சரிதான் என்று தோன்றுகிறது. ஒருக்கால் கவி என்பவன் காலத்தின் கையில் சிக்கி இக்கரையில் இருந்துகொண்டு அக்கரைபார்த்து பெருமுச்சு விடுபவனோ என்னவோ? காலம் முழுவதுமாய் கையில் கிடைத்தால் பனித்துளியை பார்த்துக்கொண்டு காலம் முழுக்க இருக்கமுடியுமா? தெரியவில்லை?

கவிஞன் எப்பொழுதுமே காலத்தை இன்னொரு கரையிலிருந்து பார்ப்பவனாகவே இருக்கவேண்டும்..
காலம் எப்பொழுதுமே கையில் கிடைக்காது.........
அது தானுன்னு தன் வேலையுண்டு என்று ஒருபக்கமாக இருக்கும்.....
நாம்தான் எடுத்துக் கொள்ளவேண்டும்.......... :icon_b:

பனித்துளியை நீங்கள் ஐந்து நிமிடங்களுக்கு மேல் பார்க்கமுடியாது... ஏன் சொல்லுங்கள்!!
அது கரைஞ்சுடும்ல.....:D

கீதம்
24-07-2010, 07:29 AM
அன்றாட அலுவல்களிலிருந்து விடுபட்டு கவிதை எழுதத் தொடங்கிவிட்டீர்கள் அல்லவா? இனி காலம் உங்கள் கையில்தான்!

முதல் கவிதை முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். தொடரட்டும் உங்கள் கவிதை ஊர்வலம்.

சுடர்விழி
25-07-2010, 12:48 AM
அவசர உலகத்தின் நிலையை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்...முதல் முயற்சிக்கு பாராட்டுகள்..தொடர்ந்து எழுதுங்கள்...

durgashankar
28-07-2010, 08:26 AM
கணிணித் துறையில் வேலை பார்க்கும் பெரும்பான்மையோரின் நிலைமை இன்று இப்படித்தான் இருக்கிறது. பணம் வருகிறது. ஆனால் வாழ்வை அனுபவிக்க நேரமில்லாதது துரதிஷ்டம் தான்.
நன்றாக எழுதுகிறீர்கள் சங்கர். தொடர்ந்து எழுதுங்கள்.

மிக்க நன்றி கலைஅரசி. நானும் இப்போது இரு கணினி துறையில் தான் வேலை செய்து கொண்டு இருக்கிறேன்.

durgashankar
28-07-2010, 08:30 AM
அன்றாட அலுவல்களிலிருந்து விடுபட்டு கவிதை எழுதத் தொடங்கிவிட்டீர்கள் அல்லவா? இனி காலம் உங்கள் கையில்தான்!

முதல் கவிதை முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். தொடரட்டும் உங்கள் கவிதை ஊர்வலம்.

மிக்க நன்றி கீதம். தங்களின் ஊக்கம் நிறைந்த வார்த்தைகளுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி.

durgashankar
28-07-2010, 08:32 AM
அவசர உலகத்தின் நிலையை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்...முதல் முயற்சிக்கு பாராட்டுகள்..தொடர்ந்து எழுதுங்கள்...

மிக்க நன்றி சுடர்விழி. ஊக்கமே முயற்சிக்கு உறுதுணை. தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு எனது மனமார்ந்த நன்றி.