PDA

View Full Version : மனதோடு மழைக்காலம்

மதி
23-07-2010, 11:04 AM
“அண்ணே.. அண்ணே.. அண்ணே.. இதை வாங்கிக்கண்ணே..”

அப்போது தான் மழை தூற ஆரம்பித்திருந்தது. எதையும் கண்டுக்காமல் அந்த சின்னக்கூடையில் இருந்த ப்ளாஸ்டிக் பொருட்களை விற்க முனைந்தாள் அவள். ஏறக்குறைய ஆறு வயதிருக்கும். கையில் மட்டும் சின்னக் கிழியலோடு மேல்சட்டையும் அழுக்கான பாவாடையும் அணிந்திருந்தாள். இந்த சிக்னலில் எப்போதும் அவளைப் பார்ப்பேன். சிக்னல் விழ எப்படியும் இரண்டு நிமிஷமாகும். அதற்குள் முடிந்தவரை விற்றுவிடவேண்டும் என்ற உத்வேகம் அவள் விற்பதில் இருக்கும். கடந்த ஒருவாரமாக என்னிடம் ஒரே மாதிரி பொருளை விற்றுக் கொண்டிருக்கிறாள். அன்றும் அப்படி தான் ஒரு பொருளையாவது என்னிடம் தள்ளிவிட முனைந்தாள். அத்தனையும் குழந்தைகள் விளையாடும் சின்ன சின்ன பொருட்கள்.

“ஏற்கனவே உன்கிட்ட தானே நிறைய வாங்கியிருக்கேனே. இன்னிக்கும் என்ன? திரும்ப திரும்ப ஒரே பொருளையே வாங்க சொல்ற.. இத வச்சுக்கிட்டு என்ன செய்யறது?”

“வீட்டுல பாப்பா இருந்தா விளையாடக்குடு. இல்லாட்டி யாராச்சும் சின்னப் புள்ளைங்க விளையாட வந்தா குடு. ப்ளீஸ்ண்ணே.. ஒன்னே ஒன்னு வாங்கிக்கண்ணே..”

பெரிய மனுஷி மாதிரி அவள் பேச சிக்னல் விழ இன்னும் முக்கால் நிமிஷமே இருந்தது. அதற்குள் ஒன்றையாவது என்னிடம் தள்ளிவிட முனைந்தாள். பால்மணம் மாறாத அவளின் முகத்தை கெஞ்சுவது போல் வைத்துக் கொள்ள அவசர அவசரமாக சட்டைப்பையில் இருந்து பணம் எடுத்து கொடுத்து வாங்கினேன். சிக்னல் விழுந்தால் கன்னாபின்னாவென்று ஹாரன் அடித்து காதை செவிடாக்குவார்கள். சிக்னல் விழ நான் கிளம்ப அவள் அடுத்த ஆளைத் தேடிப் போனாள் பெரிதாய் பெய்ய ஆரம்பித்த மழையிலும்.

மழையில் சொட்ட சொட்ட நனைந்தபடி வீட்டுக்குள் நுழைந்ததும் துண்டை எடுத்து நீட்டினாள் என் தர்மபத்தினி. இனிய இல்லத்தரசி. இவளைக் கைப்பிடித்து ஓராண்டு முடிந்து இரண்டாம் ஆண்டு. வீட்டுக்குள் நான் நுழையும் போது எதிரில் இவள் புன்னகையோடு வரும் போது எப்பேர்ப்பட்ட தலைவலியும் பறந்து போகும். ஆபிஸில் மேனேஜரிடம் சண்டையா, கொடுக்கல் வாங்கலில் பிரச்சனையா.. எல்லாம் மறந்து போகும். அத்தனை வசீகரமான சிரிப்பு அவளுடையது. தலையை துவட்டிக் கொண்டே சட்டையை கழட்ட பையில் இருந்து டிபன் பாக்ஸை எடுக்கப் போனவள் பரிகாசமாய் சிரித்தாள்.

“இதோடு பதினொன்னாவது..”

“என்னாது..?”

“விளையாட்டு ஜாமான்… தினமும் ஒன்னு வாங்கிட்டு வர்றீங்க. அதுவும் ஒரே மாதிரி..க்கும்..”

செல்லமாய் நொடித்தாள்.

“அடியே.. எல்லாம் நம்ம குழந்தைக்குத் தானடி.. இப்போவே எல்லாத்தையும் சேத்துட்டு இருக்கேன்”

பனியனுடன் இருந்த நான் ஆசையாய் நன்றாய் மேடிட்டிருந்த அவள் வயிற்றை தடவ மறுபடி நக்கல் சிரிப்புடன்

“இதுக்கு ஒன்னு தான் கொறச்சல். உங்க புள்ள வந்ததும் உங்கள தான் கேக்கப் போறான்.. லூசாப்பா நீன்னு. ஒரே மாதிரி எத்தனை சாமான் செட்டு வாங்கி வச்சிருக்க..”

“அவன்.. இல்லே.. அவ.. நமக்கு பொண்குழந்த தான்..”

“அதெல்லாம் முடியாது. பையன் தான் பொறக்கப் போறான். இப்போவே நான் பேர் யோசிச்சுட்டு இருக்கேன்…”

அந்த விளையாட்டுப் பொருளை மறந்து எங்கள் விளையாட்டு தொடர்ந்தது.

“நீ ஒரு கர்நாடகம்… இளஞ்சேரலாதன்… இமயவரம்பன்னு ஏதாச்சும் பேர் வப்ப.. அதெல்லாம் முடியாது. பொண்ணு தான். நான் தான் பேர் வைப்பேன்..”

“ம்ஹூம்.. அதெல்லாம் முடியாது.. பையன் தான். நான் தான் பேர் வைப்பேன்.. நீங்க என்ன சொன்னாலும் சரி..”

சிணுங்க ஆரம்ப அவள் முகம் சிவக்க ஆரம்பித்தது. நாளாக நாளாக அவள் முகம் பளபளப்பாகிக் கொண்டிருந்தது. அழகு கூடிக்கிட்டு இருக்கு. கர்ப்பகாலத்தில் தான் பெண்கள் அழகாக இருப்பாங்கன்னு சொன்னது உண்மை தான். தாய்மை என் தனத்தின் அழகை இன்னும் அழகாக்கிக் கொண்டிருந்தது.

தனம், அவளைக் கைபிடிக்கும் போது பி.எஸ்.ஸி முடித்து கனவுலகில் இருந்தாள். தமிழ் மேல் அளவுகடந்த காதல். அடிக்கடி கவிதை கதை என்றெழுதி என்னிடம் படிக்கக் கொடுப்பாள். அதுவரை அதிகம் தமிழ் படிக்காததாலும் அவ்வளவு ஆர்வம் இல்லாததாலும் கஷ்டப்படுவேன். அவளே படித்து அர்த்தமும் சொல்வாள். எல்லாம் என்னுடைய ‘ரொம்ப நல்லா எழுதறடி’னு நான் சொல்லும் வார்த்தைகளுக்காக. டி.வி. பார்ப்பதில் கூட சண்டை வரும். அவள் தமிழ் சானல் பார்க்க அடம் பிடிக்க நான் மூவிஸ் பார்க்க எங்கள் செல்ல சண்டையில் யாருமே பார்க்காமல் டி.வி மட்டும் ஓடிக் கொண்டிருக்கும்.

“சரி.. உனக்கும் வேணாம். எனக்கும் வேணாம். நமக்குள்ள ஒரு டீல். பொண்ணு பொறந்தா நான் பேர் வைப்பேன்… நேஹா, சுஷ்மிதானு ஏதோ ஒன்னு. பையன் பொறந்தா நீ பேர் வைய்யி. ஆனா பேர் வைக்கற வரைக்கும் ஒருத்தருக்கொருத்தர் தெரியக் கூடாது என்ன பேர்னு. என்கிட்ட கேட்டு டார்ச்சர் பண்ணக் கூடாது..”

சின்னதாய் முகம் சுருங்கி “ம்ம்.. சரி..”. உடனே மலர்ந்தவளாய், “தலைய சீக்கிரம் தோட்டிட்டு வாங்க. உங்களுக்குப் புடிச்ச பலகாரம் பண்ணிருக்கேன்..”

அடுத்தநாளும் அப்படியே. ஆனால் கொஞ்ச நல்ல சொக்காய் போட்டு வந்தாள். சிக்னல் தான் வண்டியை நிறுத்திவிட்டு அவளைக் கூப்பிட்டேன். வண்டியை பார்த்து நிதானித்து வந்தாள். என்னைப் பார்த்து வழக்கமான சிரிப்பு.

“பேர் என்ன?”

“செல்வி…”

“அதான் உன் பேரா…?”

“இல்ல.. தமிழ்ச் செல்வி. எதுக்கு கேக்கறீங்க?”

விற்பதற்கு அடுத்த ஆளை பிடிக்க வேண்டுமென்று அவசரப்பட்டாள்.

“செல்வி.. கொஞ்சம் இரு. ஒன்னுக்கு ரெண்டா வாங்கிக்கறேன். இதெல்லாம் வச்சு நீ விளையாண்டிருக்கியா?”

“இல்ல. கொண்டுட்டு போனவுடனே அம்மா எடுத்து வச்சுடும். விளையாண்டா பழசாயிடுமாம். யாரும் வாங்க மாட்டாங்களாம்..” பரிதாபமாய் சொன்னாள்.

“சரி. நீ ஸ்கூலுக்கெல்லாம் போலியா..?”

“ப்ச்.. அதெல்லாம் எதுக்கு? ஸ்கூல் போறேனு சொன்னா அம்மா திட்டும். எனக்கும் ஆசையா இருக்கும். யூனிபார்ம்லாம் போட்டு போணும்னு. அதுக்கு நெறைய செலவாவுமாம். அம்மா சொன்னுச்சு..”

பையிலிருந்து நூறு ரூபாய் எடுத்துக் கொடுத்து,

“நூறு ரூபாய்க்கு குடு. உன் யாபாரத்த கெடுத்துட்டேன். சரி, நான் சேத்துவுட்டா போறியா?”

ரூபாய்க்கு தகுந்தவாறு ஜாமான்களைப் பொறுக்கியவள் நிமிர்ந்தாள். கண்ணில் ஒளி.

“ம்ம். போறேன்…”

“உன் வீடு எங்க இருக்கு..? நாளைக்கு உன்கூட வந்து உங்க அம்மாக்கிட்ட வந்து பேசறேன்”

“அதோ அந்த ஆத்த தாண்டி போணும். சரி.. வரேன்ண்ணா.. ரொம்ப டாங்க்ஸ்..” பெரிய மனுஷி மாதிரி சொல்லி சென்றாள்.

அன்றும் வழக்கம் போல தனம் நக்கலாய் சிரித்தாள்.

“வரவர நெறைய செலவழிக்கறீங்க போல. புள்ள பொறக்கறதுக்குள்ள அந்த சின்னப் பொண்ணு உங்களாலேயே பெரிய பணக்காரி ஆயிடுவா போல..”

புன்னகையினூடே.. “அப்படித் தான் வச்சுக்கயேன். பாவம் சின்னப் பொண்ணு. வெயிலேயும் மழையிலேயும் கஷ்டப்படுது. அதான்.”

“உங்கள மாதிரி ஆளுங்களால தான் மழையே பெய்யுதுன்னு இன்னிக்கு டிவியில சொன்னாங்க..”

நக்கலாய் பேச செல்லமாய் நான் அடிக்க முற்பட அவள் நகர்ந்தாள். என்னை வம்பிற்கு இழுப்பது தான் அவள் முழுநேர பொழுதுபோக்கு. எப்படியும் சிரிக்க வைத்துவிடுவாள். ரசிக்க வைத்துவிடுவாள்.

மறுநாள். வழக்கம் போல அவளுக்காக சிக்னலருகில் காத்திருக்க ஆளைக்காணோம். என்னவாயிற்று என்று தெரியாமல் அவள் சொன்ன ஆற்றைத் தாண்டி இருந்த குடிசைப் பகுதிகளில் விசாரித்தால் அவள் பெயரில் யாரையும் தெரியாதென்று சொன்னார்கள். இரண்டு மணிநேரத்திற்கும் மேல் அலைந்து வீடு திரும்ப நேரமாகிவிட்டது. வாசலிலேயே காத்திருந்தாள் தனம்.

“ஒரு போனாச்சும் பண்ணிருக்க கூடாதா..? என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன்”

பையை வாங்கிக் கொண்டே சொல்ல..

“சொல்லலாம்னு தான் நெனச்சேன். கொஞ்சம் வேலை அதிகமாயிடுச்சு. நேரமானதே தெரியல. செமையா பசிக்குது. என்ன செஞ்சிருக்க..?”

“கைகாலெல்லாம் அலம்பிட்டு வாங்க.. எடுத்து வைக்கிறேன். உங்களுக்குப் புடிச்ச புட்டு”

அடுத்த வாரத்தில் ஏழாம் மாசம் என்று அவள் வீட்டில் கூட்டிப் போக கண்கலங்கினாள்.

“வேளா வேளைக்கு சாப்பிடணும். கன்னாபின்னானு ஹோட்டல்ல போய் சாப்பிடாதீங்க. சாதம் மட்டும் வச்சிக்குங்க. கொழம்பு பக்கத்து வீட்டு கலா அக்காக்கிட்ட வாங்கிக்குங்க. அவங்ககிட்ட சொல்லிட்டேன். மறக்காம உடம்ப பாத்துக்குங்க. தலை குளிச்சா நல்லா துவட்டுங்க. அப்படியே சீவாதீங்க. ஜலதோஷம் பிடிச்சுக்கும். கண்டபடி மழையில நனையாதீங்க..”

சரவெடி மாதிரி லிஸ்ட் போட்டுக் கொண்டே போனாள். அவளை ரயிலில் ஏற்றிவிட்டு வீட்டுக்குள் நுழையும் போது உயிரில்லாத உடல் மாதிரி இருந்தது. ஊருக்குப் போகும் போது வீட்டின் ஜீவனையும் எடுத்துக்கிட்டு போயிட்டாள். மனசு வெறுமையாக இருந்தது.

அடுத்த இரண்டு வாரங்களில் செல்வி சொன்ன இடம் போய் தேடிப் பார்த்தேன். அலைந்தது தான் மிச்சம். ஆளைப் பார்க்க முடியவில்லை. இதற்கிடையில் வளைகாப்பிற்கு போய் வந்ததும் அவள் பிரசவ வலி எடுத்ததும் என நாட்கள் வேகமாக ஓடியது. பிரசவ நேரத்தில் வெளியில் இருந்து இதுவரை வேண்டாத தெய்வங்கள் எல்லாம் வேண்டி அழகுசிலை போல பெண்குழந்தை பெற்றெடுத்தாள். அப்படி அவளை மாதிரி மூக்கும் முழியும்.

ஆசை ஆசையாய் அவளருகில் போய் நெற்றியில் முத்தமிட்டு,

“அப்படியே உன்ன மாதிரி இருக்கா…?” தந்தையான பூரிப்புடன் சொன்னேன்.

இன்னும் களைப்பாய் இருந்த அவள்..

“நீங்க ஜெயிச்சுட்டீங்க…” சிரித்தாள்.
"ச்சீ.. அசடு...".. மறுபடியும் சிரித்தாள்.

ஒருமாதம் கழித்து பேர் வைக்கும் வைபவம். அதுவரை என்ன பேரென்று யாரிடமும் சொல்லவில்லை. புரோகிதர்,

“பொண்ணு பேரை காதில் சொல்லுங்கோ..!” என

குனிந்து என் மகள் காதில்

“செல்வி.. தமிழ்ச்செல்வி” என்றேன்.

கண்களில் ஆச்சர்யத்துடனும் இன்ப் அதிர்ச்சியிலும் தனம் என்னைப் பார்க்க அவளைப் பார்த்து கண்ணடித்தேன்.

செல்வா
23-07-2010, 12:00 PM
தல சூப்பர்
அடுத்த வாட்டி பொண்ணு பாக்க போகும் போது உங்க கதைகள் எல்லாம் பிரின்ட் போட்டு எடுத்திட்டுப் போங்க. இராமன் தேடிய சீதை ஹீரோ மாதிரி.
பொண்ணு உடனே உங்க கூட வரேன்னாலும் ஆச்சரியப் படுறதுக்கில்ல :icon_ush:
ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க.

மதி
23-07-2010, 12:02 PM

எதுக்கு தல.. எத்தனையாவது கண்ணாலம்னு கேக்கவா?:cool::cool:
நன்றி..

ஆதவா
23-07-2010, 12:10 PM
சிறப்பாக இருக்கிறது மதி. இருந்தாலும் அந்த பெண் என்னவானாள் என்பது மட்டும் கேள்விக் குறி..

பேர் சமாச்சாரம் சொன்னதுமே சட்டென யூகிக்க முடிந்தது “செல்வி” என்ற பெயர்தான்.. ஆனால் அந்த பெயர் வைக்குமளவுக்கு செல்வியின் கேரக்டர் அவ்வளவு அழுத்தம் கிடையாது இல்லையா..

இருந்தாலும் இந்த வரிகள் எல்லாம் (நீங்கள் எழுதியதால்) சட்டென்ற சிரிப்பை வரவைத்தது..

“இனிய இல்லத்தரசி.”

”வீட்டுக்குள் நான் நுழையும் போது எதிரில் இவள் புன்னகையோடு வரும் போது எப்பேர்ப்பட்ட தலைவலியும் பறந்து போகும்.”

“உங்க புள்ள வந்ததும் உங்கள தான் கேக்கப் போறான்.. லூசாப்பா நீன்னு.”

ஆல் த பெஸ்ட் மதி...

ஆதவா
23-07-2010, 12:13 PM
தல சூப்பர்
அடுத்த வாட்டி பொண்ணு பாக்க போகும் போது உங்க கதைகள் எல்லாம் பிரின்ட் போட்டு எடுத்திட்டுப் போங்க. இராமன் தேடிய சீதை ஹீரோ மாதிரி.
பொண்ணு உடனே உங்க கூட வரேன்னாலும் ஆச்சரியப் படுறதுக்கில்ல :icon_ush:
ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க.

சரி சரி.... உங்களோட ஐடியாவை நீங்க ஏன் லீக் அவுட் பண்றீங்க?

மதி
23-07-2010, 12:15 PM
நன்றி ஆதவா.. அந்த கேரக்டருக்கு அழுத்தம் கிடையாது. ஆனால் சில சமயம் ஏதோ ஒன்று நினைக்க ஏதோ ஒன்று நினைவுக்கு வரும். மனைவி மேலிருந்த பாசத்தால் தமிழ்பெயர் வைக்க நினைக்கையில் சட்டென தோன்றிய பேர் தமிழ்செல்வின்னு எடுத்துக்கலாமே... :):)

எனக்கும் அந்த வரிகள்.. சினிமாத்தனமாய் தோன்றியது. என்ன பண்ண..? அனுபவம் இல்லியே??

மதி
23-07-2010, 12:17 PM
சரி சரி.... உங்களோட ஐடியாவை நீங்க ஏன் லீக் அவுட் பண்றீங்க?
:D:D:D:D:D

செல்வா
23-07-2010, 12:36 PM
சரி சரி.... உங்களோட ஐடியாவை நீங்க ஏன் லீக் அவுட் பண்றீங்க?
வெளங்கிரும் நான் எழுதின கதைகள எடுத்துட்டுப் போனாக்கா... :lachen001::lachen001::lachen001: ஏழு ஜென்மத்துக்கும் பொண்ணே கெடைக்காது :eek:

ஆதவா
23-07-2010, 12:40 PM
நன்றி ஆதவா.. அந்த கேரக்டருக்கு அழுத்தம் கிடையாது. ஆனால் சில சமயம் ஏதோ ஒன்று நினைக்க ஏதோ ஒன்று நினைவுக்கு வரும். மனைவி மேலிருந்த பாசத்தால் தமிழ்பெயர் வைக்க நினைக்கையில் சட்டென தோன்றிய பேர் தமிழ்செல்வின்னு எடுத்துக்கலாமே... :):)

எனக்கும் அந்த வரிகள்.. சினிமாத்தனமாய் தோன்றியது. என்ன பண்ண..? அனுபவம் இல்லியே??

அதுவும் சரிதான்... கதையில் நீங்கள், அவனுக்கும் தமிழுக்குமான உறவைக் குறிப்பிட்டதும், அவனுக்குத் தமிழ் பெயர்கள் குறித்த பரிச்சயம் இல்லையென்று சொன்னதும் குறிப்பிடத்தக்கது!!! அதனாலேயே அவனுக்கு சற்றேனும் ஸ்பார்க் ஏற்படுத்திய பெயரை வைத்திருக்கிறான்.....

மீள்வாசிப்பில் கதை இன்னும் நன்றாகவே இருந்தது!!

பாலமுரளி
23-07-2010, 12:47 PM
தங்கள் கதை சிறப்பாக இருந்தது. மேலும் இது போன்ற படைப்புகளை உருவாக்கிட வாழ்த்துக்கள்

மதி
23-07-2010, 12:56 PM
அதுவும் சரிதான்... கதையில் நீங்கள், அவனுக்கும் தமிழுக்குமான உறவைக் குறிப்பிட்டதும், அவனுக்குத் தமிழ் பெயர்கள் குறித்த பரிச்சயம் இல்லையென்று சொன்னதும் குறிப்பிடத்தக்கது!!! அதனாலேயே அவனுக்கு சற்றேனும் ஸ்பார்க் ஏற்படுத்திய பெயரை வைத்திருக்கிறான்.....

மீள்வாசிப்பில் கதை இன்னும் நன்றாகவே இருந்தது!!
நன்றி... ஆதவரே..:)
நேற்று வண்டியில் போய்க் கொண்டிருக்கும் போது மழைத்தூற ஆரம்பிக்கையில் எதிர்திசையில் அந்தப் பெண்ணைப் பார்த்தேன். அதிலிருந்து எடுத்து.. கோர்த்து...!!:D:D

மதி
23-07-2010, 12:57 PM
தங்கள் கதை சிறப்பாக இருந்தது. மேலும் இது போன்ற படைப்புகளை உருவாக்கிட வாழ்த்துக்கள்
நன்றி பாலமுரளி..!:)

மதி
23-07-2010, 12:59 PM
வெளங்கிரும் நான் எழுதின கதைகள எடுத்துட்டுப் போனாக்கா... :lachen001::lachen001::lachen001: ஏழு ஜென்மத்துக்கும் பொண்ணே கெடைக்காது :eek:
என்ன இப்படி சொல்லிட்டீங்க..? உங்க தொடர்கதை..சூப்பர்.. அதை கொண்டு போய் குடுங்க..!! இப்படியெல்லாம் குடுத்து தான் பொண்ணு கட்டணுமா நீங்க..? அதான் ஊர்ல நான் நீனு போட்டி போட்டுக்கிட்டு பொண்ணு குடுக்க ரெடியாயிருக்காங்க...:icon_b:

ஆதவா
23-07-2010, 01:05 PM
நன்றி... ஆதவரே..:)
நேற்று வண்டியில் போய்க் கொண்டிருக்கும் போது மழைத்தூற ஆரம்பிக்கையில் எதிர்திசையில் அந்தப் பெண்ணைப் பார்த்தேன். அதிலிருந்து எடுத்து.. கோர்த்து...!!:D:D

விர்சுவலா ஒரு லைஃபே நடத்திட்டு வரீங்க!!! :icon_wink1: ஆகட்டும்..:icon_smokeing:

மதி
23-07-2010, 01:11 PM
விர்சுவலா ஒரு லைஃபே நடத்திட்டு வரீங்க!!! :icon_wink1: ஆகட்டும்..:icon_smokeing:
அடுத்து பேரன் பேத்தி எடுக்கற மாதிரி ஒரு கதை எழுதணும்... தேடிக்கிட்டு இருக்கேன் கதையை.. :icon_b:

கலையரசி
23-07-2010, 02:12 PM
கதை ரொம்ப நல்லாயிருக்கு மதி. ஆனால் அந்தப் பெண்ணுக்கு என்ன ஆகியிருக்கும் என ஒரே யோசனை. பெண் குழந்தை என்றவுடனே அந்தச் சிறுமியின் பெயர் தான் என்பது தெரிந்துவிட்டது.
ஒரே நேரத்தில் இத்தனை கதைகளா? அசத்துகிறீர்கள் மதி. பாராட்டுக்கள்.

மதி
23-07-2010, 02:17 PM

நன்றி கலையரசி... இப்போ கொஞ்சம் வெட்டியா இருக்கேன் அதான்.. அந்த சிறுமியை பற்றி சொல்லத் தான் நினைத்தேன். பின் ஏற்கனவே நிறைய கதைகளில் வந்தது போலிருக்கும் என படிப்பவர் யூகத்திற்கே விட்டுவிட்டேன்.... !!!

த.ஜார்ஜ்
23-07-2010, 02:27 PM
கதையை படிக்கிறபோது எனக்கு இப்படிதான் தோன்றியது: 'ஆளாளுக்கு இந்த மனுசனை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கலாய்த்துக் கொண்டிருக்க இவரோ பிள்ளைக்கு பொம்மை சேகரித்துக் கொண்டிருக்கிறாரே' கதையிலாவது இது நடக்கட்டும் என்று நினைத்து விட்டீர்களா?[பொண்டாட்டியிடம் கொஞ்சுகிற லட்சணத்தைப் பார்த்தால் கல்யாணம் ஆகவில்லை என்று சொல்வதை நம்ப முடியவில்லை]

Nivas.T
23-07-2010, 02:33 PM
என்னக நீங்க உங்கள பாராட்டனும்னா தமிழ்ல வார்த்த தேடனும்..... என்னமோ போங்க - :icon_b:

ஐயா நீங்க கல்யாணம் ஆனவரா? இல்ல ஆகாதவரா? :icon_rollout:

மதி
23-07-2010, 02:42 PM
கதையை படிக்கிறபோது எனக்கு இப்படிதான் தோன்றியது: 'ஆளாளுக்கு இந்த மனுசனை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கலாய்த்துக் கொண்டிருக்க இவரோ பிள்ளைக்கு பொம்மை சேகரித்துக் கொண்டிருக்கிறாரே' கதையிலாவது இது நடக்கட்டும் என்று நினைத்து விட்டீர்களா?[பொண்டாட்டியிடம் கொஞ்சுகிற லட்சணத்தைப் பார்த்தால் கல்யாணம் ஆகவில்லை என்று சொல்வதை நம்ப முடியவில்லை]
நன்றி.. ஜார்ஜ்.. எல்லாம் சும்மா லுலுவாய்க்கு..
அட.. உண்மையிலேயே கல்யாண்ம் ஆகலீங்க...:icon_b::icon_b::icon_b:

மதி
23-07-2010, 03:27 PM
என்னக நீங்க உங்கள பாராட்டனும்னா தமிழ்ல வார்த்த தேடனும்..... என்னமோ போங்க - :icon_b:

ஐயா நீங்க கல்யாணம் ஆனவரா? இல்ல ஆகாதவரா? :icon_rollout:
நன்றி நிவாஸ்..

உண்மையிலேயே எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலீங்க... ஏதாச்சும் இப்படி சொல்லி.. கல்யாணம் ஆகும் போது.. விளையாடிடாதீங்க.. :icon_b:

Nivas.T
23-07-2010, 03:49 PM
உண்மையிலேயே எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலீங்க... ஏதாச்சும் இப்படி சொல்லி.. கல்யாணம் ஆகும் போது.. விளையாடிடாதீங்க.. :icon_b:

:confused:
என்னக நீங்க 39:rolleyes: வருசமா நடக்குற நல்ல முயச்சி வெற்றிபெறும்போது:icon_b: யாரும் விளையாட மாட்டாங்க நான் மட்டும் எப்டி?;)

:lachen001: :D :lachen001: :D

மதி
23-07-2010, 03:54 PM
:confused:
என்னக நீங்க 39:rolleyes: வருசமா நடக்குற நல்ல முயச்சி வெற்றிபெறும்போது:icon_b: யாரும் விளையாட மாட்டாங்க நான் மட்டும் எப்டி?;)

:lachen001: :D :lachen001: :D
அட அறுவதெல்லாம் தாண்டி போய்க்கிட்டு இருக்கு... 39ன்னு சொல்றீங்க?:rolleyes:

Nivas.T
23-07-2010, 04:11 PM
அட அறுவதெல்லாம் தாண்டி போய்க்கிட்டு இருக்கு... 39ன்னு சொல்றீங்க?:rolleyes:

:confused::confused::confused::confused::confused:

அமரன்
23-07-2010, 11:02 PM
எத்தனையோ பயணங்கள்..
அவற்றுள்
எப்போதாவது நிகழ்வதுண்டு..

சில நபர்களுடன்
பயணம் செய்த பெட்டி
மனசுக்குள் இடம்பெயரும் மாயம்.

தமிழ்ச்செல்வி.. அந்த ரகம்!!!

கதை சுகராகம்.

மேடிட்ட பனியனைத் தடவுகையில் முதல் வாசிப்பில் தடுமாறினேன்.

அவன் ஏன் மேடிட்ட தன் பனியனைத் தடவ வேணும்.:)

govindh
23-07-2010, 11:50 PM
மனதோடு மழைக்காலம்-
மனதோடு ஒட்டிக் கொண்டது....

வாழ்த்துக்கள் மதி.

அன்புரசிகன்
24-07-2010, 12:30 AM
அந்த செல்வி கண்ணுக்குள்ள உறுத்துறாங்கப்பா. சிக்னல்ல சாமான் விற்பாள் என்கிறீங்க.... அங்கே தான் கதையின் சிறப்பு மேலோங்குகிறது. வாழ்த்துக்கள் மதி.

தல சூப்பர்
அடுத்த வாட்டி பொண்ணு பாக்க போகும் போது உங்க கதைகள் எல்லாம் பிரின்ட் போட்டு எடுத்திட்டுப் போங்க. இராமன் தேடிய சீதை ஹீரோ மாதிரி.
பொண்ணு உடனே உங்க கூட வரேன்னாலும் ஆச்சரியப் படுறதுக்கில்ல :icon_ush:
ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க.

இதுல கதைக்கு பதிலா கவிதை என்றும் இந்த பின்னூட்டம் ஆதவனுக்காக என்றும் நினைச்சுப்பார்த்தேன். சிப்பு வந்திடிச்சு. சிப்பு...:lachen001::lachen001:

மதி
24-07-2010, 03:57 AM
எத்தனையோ பயணங்கள்..
அவற்றுள்
எப்போதாவது நிகழ்வதுண்டு..

சில நபர்களுடன்
பயணம் செய்த பெட்டி
மனசுக்குள் இடம்பெயரும் மாயம்.

தமிழ்ச்செல்வி.. அந்த ரகம்!!!

கதை சுகராகம்.

மேடிட்ட பனியனைத் தடவுகையில் முதல் வாசிப்பில் தடுமாறினேன்.

அவன் ஏன் மேடிட்ட தன் பனியனைத் தடவ வேணும்.:)
அந்த இடத்துல சரியா வரி அமையாம போச்சுனு நினைக்கிறேன்... இப்போ சரி பண்ணியாச்சு..

நன்றி அமரன்:icon_b:

மதி
24-07-2010, 04:00 AM
மனதோடு மழைக்காலம்-
மனதோடு ஒட்டிக் கொண்டது....

வாழ்த்துக்கள் மதி.
நன்றி கோவிந்த்

அந்த செல்வி கண்ணுக்குள்ள உறுத்துறாங்கப்பா. சிக்னல்ல சாமான் விற்பாள் என்கிறீங்க.... அங்கே தான் கதையின் சிறப்பு மேலோங்குகிறது. வாழ்த்துக்கள் மதி.

இதுல கதைக்கு பதிலா கவிதை என்றும் இந்த பின்னூட்டம் ஆதவனுக்காக என்றும் நினைச்சுப்பார்த்தேன். சிப்பு வந்திடிச்சு. சிப்பு...:lachen001::lachen001:
நன்றி ரசிகரே....
ஆதவன் எல்லா கவிதையையும் எடுத்துட்டு போகணும்னா லாரியில கொண்டு போய் அந்த பொண்ண படிக்க சொல்றத நினைச்சு பாத்தா எனக்கும் சிப்பு.. சிப்பா வந்துச்சு. :icon_b:

ஆதவா
24-07-2010, 04:05 AM
அந்த செல்வி கண்ணுக்குள்ள உறுத்துறாங்கப்பா. சிக்னல்ல சாமான் விற்பாள் என்கிறீங்க.... அங்கே தான் கதையின் சிறப்பு மேலோங்குகிறது. வாழ்த்துக்கள் மதி.

இதுல கதைக்கு பதிலா கவிதை என்றும் இந்த பின்னூட்டம் ஆதவனுக்காக என்றும் நினைச்சுப்பார்த்தேன். சிப்பு வந்திடிச்சு. சிப்பு...:lachen001::lachen001:

வந்தோமா படிச்சோமான்னு இல்லாம... இதென்ன சின்னப்புள்ளத்தனமா........... :sauer028:

அப்படி ஒருவேளை கவிதைகளை பிரிண்டு போட்டு போய் பொண்ணூ பார்த்தா, பொண்ணு அவங்கம்மா காதுல சொல்லும் “ மாப்பிள்ளை கீழ்பாக்கம் கேஸ் இல்லையே” நு.. :rolleyes:

மதி
24-07-2010, 04:07 AM

பாத்ததுமே சொல்லுமா.. படிச்சிப் பாத்துட்டு சொல்லுமா?? :D:D:D:D

samuthraselvam
24-07-2010, 04:20 AM
அடுத்து பேரன் பேத்தி எடுக்கற மாதிரி ஒரு கதை எழுதணும்... தேடிக்கிட்டு இருக்கேன் கதையை.. :icon_b:

அப்ப, கதையிலையே வாழ்ந்து முடிச்சுருவீங்க போலிருக்கே?

ஆனா கதை சூப்பர் மதி... வரவர நீங்க நினைக்கிறதெல்லாம் (அதாவது, உங்களுக்கு விரைவில் நடக்கப்போறது) கலக்கலான கருவோட கதையா கொடுத்திட்டே இருக்கீங்க....

கதையின் போக்கு, கவிதை... கணவன், மனைவிக்குள் நடக்கும் உரையாடல்கள் மனதை வருடுகிறது....

நேற்று வண்டியில் போய்க் கொண்டிருக்கும் போது மழைத்தூற ஆரம்பிக்கையில் எதிர்திசையில் அந்தப் பெண்ணைப் பார்த்தேன். அதிலிருந்து எடுத்து.. கோர்த்து...!!:D:D

அப்படின்னா அநதக் கணவன் கதாப்பாத்திரம் மதிதானா? அந்த மனைவி கதாப்பாத்திரம்?

மேடிட்ட பனியனைத் தடவுகையில் முதல் வாசிப்பில் தடுமாறினேன்.

அவன் ஏன் மேடிட்ட தன் பனியனைத் தடவ வேணும்.:)

ஹா ஹா:lachen001::lachen001: இதைப்படித்ததும் சிரிப்பு வந்திடுச்சுபா.... அந்த வாக்கியம் கொஞ்சம் மாற்றி அமைக்கலாம் என்பது என் கருத்து, ஏனெனில் எனக்கும் அதைப் படிக்கும் போது கொஞ்சம் தடுமாறியது...

மாத்திட்டீங்களா? அப்ப, சரி....:icon_b:

கதைகள் படித்து சந்தோசப்படுவது ஒரு புறம் இருந்தாலும் அதை மத்தவங்க (கலாய்க்கிறது...ஹா ஹா...) விமர்சிக்கிறதும் அதுக்கு உங்க பதிலும் படிக்கறப்போ இருக்கிறது சந்தோசம் இருக்கே அட அட அடா.. இதுக்காகவே உங்க திரிக்கு வரேன்னா பார்த்துக்கோங்களே..

ஆதவா
24-07-2010, 04:23 AM
பாத்ததுமே சொல்லுமா.. படிச்சிப் பாத்துட்டு சொல்லுமா?? :D:D:D:D

:sport-smiley-005::waffen093:

மதி
24-07-2010, 04:38 AM
அப்ப, கதையிலையே வாழ்ந்து முடிச்சுருவீங்க போலிருக்கே?

ஆனா கதை சூப்பர் மதி... வரவர நீங்க நினைக்கிறதெல்லாம் (அதாவது, உங்களுக்கு விரைவில் நடக்கப்போறது) கலக்கலான கருவோட கதையா கொடுத்திட்டே இருக்கீங்க....

கதையின் போக்கு, கவிதை... கணவன், மனைவிக்குள் நடக்கும் உரையாடல்கள் மனதை வருடுகிறது....

அப்படின்னா அநதக் கணவன் கதாப்பாத்திரம் மதிதானா? அந்த மனைவி கதாப்பாத்திரம்?

ஹா ஹா:lachen001::lachen001: இதைப்படித்ததும் சிரிப்பு வந்திடுச்சுபா.... அந்த வாக்கியம் கொஞ்சம் மாற்றி அமைக்கலாம் என்பது என் கருத்து, ஏனெனில் எனக்கும் அதைப் படிக்கும் போது கொஞ்சம் தடுமாறியது...

மாத்திட்டீங்களா? அப்ப, சரி....:icon_b:

கதைகள் படித்து சந்தோசப்படுவது ஒரு புறம் இருந்தாலும் அதை மத்தவங்க (கலாய்க்கிறது...ஹா ஹா...) விமர்சிக்கிறதும் அதுக்கு உங்க பதிலும் படிக்கறப்போ இருக்கிறது சந்தோசம் இருக்கே அட அட அடா.. இதுக்காகவே உங்க திரிக்கு வரேன்னா பார்த்துக்கோங்களே..
நன்றி லீலுமா..

கணவன் மனைவி கதாபாத்திரம் என் நண்பர்கள் சிலரை வைத்து எழுதியது. அவர்கள் போனில் தன் மனைவியிடம் பேசும் தோரணையை வைத்தும் மனைவியை ஊருக்கு அனுப்பிவிட்டு புலம்பியதை வைத்தும் எழுதியது...!!

அடிக்கடி திரிக்கு வாங்கோ..!

கீதம்
24-07-2010, 08:00 AM
கதை மனதோடு ஒட்டிக்கொண்டது. பெண்குழந்தைதான் பிறக்கும் என்பதும் அக்குழந்தைக்கு தமிழ்ச்செல்வி என்றுதான் பெயரிடப்போகிறீர்கள் என்பதும் படித்துக்கொண்டிருக்கும்போதே புரிகிறது.

ஆனால் அந்த சிறுமிக்கு ஏதேனும் துர்சம்பவம் நிகழ்ந்துவிடுமோ என்ற பதைபதைப்பு கடைசிவரை தொடர்ந்தது. நல்லவேளை! அப்படி எதுவுமில்லை.

எப்படியோ கதாநாயகனுக்கு தன் மனைவியிடம் நல்லபெயர் கிடைத்துவிட்டது.

பாராட்டுகள், மதி.

மதி
24-07-2010, 09:08 AM

நன்றிங்க கீதம்.

சிவா.ஜி
27-07-2010, 01:07 PM
அட....இது மதி தயாரிப்பில வந்ததான்னு......ஆச்சர்யத்தோட....படிச்சேன். அசத்தியிருக்கீங்க மதி. ரொம்ப இயல்பான உரையாடல்கள். போகும்போது இந்த வீட்டின் ஜீவனையும் எடுத்துட்டுப் போனா.....கலக்கல் வரிகள். கதாநாயகனுக்குத் தமிழில் அத்தனைப் பரிச்சயம் இல்லைன்னு முன்னாலே சொல்லி....கடைசியில தமிழ்ச்செல்விங்கற பேரை வெச்சு....மனைவிக்கும் பிடிச்சதுன்னு....கோர்த்து.....பிரமாதம்.

ஒருபக்கம் கிரைம் கதை...இன்னொரு பக்கம் மனைசை இதமா வருடற மாதிரி மழைக்காலச் சாரல்....சூப்பர். கலக்குங்க....வாழ்த்துக்கள்.

மதி
27-07-2010, 01:16 PM
அட....இது மதி தயாரிப்பில வந்ததான்னு......ஆச்சர்யத்தோட....படிச்சேன். அசத்தியிருக்கீங்க மதி. ரொம்ப இயல்பான உரையாடல்கள். போகும்போது இந்த வீட்டின் ஜீவனையும் எடுத்துட்டுப் போனா.....கலக்கல் வரிகள். கதாநாயகனுக்குத் தமிழில் அத்தனைப் பரிச்சயம் இல்லைன்னு முன்னாலே சொல்லி....கடைசியில தமிழ்ச்செல்விங்கற பேரை வெச்சு....மனைவிக்கும் பிடிச்சதுன்னு....கோர்த்து.....பிரமாதம்.

ஒருபக்கம் கிரம் கதை...இன்னொரு பக்கம் மனைசை இதமா வருடற மாதிரி மழைக்காலச் சாரல்....சூப்பர். கலக்குங்க....வாழ்த்துக்கள்.
நன்றிண்ணா.. எல்லாம் பலரோட கதைகளை படிச்சதால வந்த பாதிப்பு தான். எல்லாவிதமாவும் முயற்சி செய்யலாம்னு ஒரு எண்ணத்துல எழுதின கதை.. எதிர்பார்த்ததைவிட கொஞ்சம் நல்லா வந்திருக்கு போல.. :icon_b:

தொடர்ந்த உற்சாகத்திற்கும் ஊக்கத்திற்கும் நன்றி.. சீக்கிரமே சந்திப்போம்..!!! :)

சிவா.ஜி
27-07-2010, 01:23 PM
நிச்சயம் சந்திப்போம்....மழையும் வந்தா இன்னும் நல்லாருக்கும்....எதுக்கும்...மடிவாளா சிக்னல்ல பாத்துக்கிட்டே வரேன்....இந்தக் கதையில தொலைஞ்சிபோன செல்வி இருக்காளான்னு......!!!!

மதி
27-07-2010, 01:25 PM
நிச்சயம் சந்திப்போம்....மழையும் வந்தா இன்னும் நல்லாருக்கும்....எதுக்கும்...மடிவாளா சிக்னல்ல பாத்துக்கிட்டே வரேன்....இந்தக் கதையில தொலைஞ்சிபோன செல்வி இருக்காளான்னு......!!!!
கதை நடக்கறது தமிழ்நாட்டில... :D:D

பாலன்
28-07-2010, 05:29 PM
உங்க போன கதையை படிச்ச பாதிப்புல இந்த பக்கமே வராம போயிட்டேன். நல்லவேளை இந்தமுறை விதி என்னை விரட்டவில்லை. கதையை நன்றாகவே தந்திருக்கிறீர்கள், நன்றி திரு.மதி

மதி
28-07-2010, 05:45 PM
உங்க போன கதையை படிச்ச பாதிப்புல இந்த பக்கமே வராம போயிட்டேன். நல்லவேளை இந்தமுறை விதி என்னை விரட்டவில்லை. கதையை நன்றாகவே தந்திருக்கிறீர்கள், நன்றி திரு.மதி
:) விதி வலியது...
நன்றி பாலன்.!:)

samuthraselvam
29-07-2010, 07:01 AM
உங்க போன கதையை படிச்ச பாதிப்புல இந்த பக்கமே வராம போயிட்டேன். நல்லவேளை இந்தமுறை விதி என்னை விரட்டவில்லை. கதையை நன்றாகவே தந்திருக்கிறீர்கள், நன்றி திருமதி

ஹா ஹா....:lachen001:

மதி
29-07-2010, 07:14 AM
ஹா ஹா....:lachen001:
நடுவில் இருந்த புள்ளியை சரியாக கவனிக்கவில்லையோ??? :rolleyes::rolleyes::D:D

samuthraselvam
29-07-2010, 11:13 AM
கவனித்தேன் மதி... எல்லாம் ஒரு கற்பனை தான்

மதி
29-07-2010, 11:15 AM
கவனித்தேன் மதி... எல்லாம் ஒரு கற்பனை தான்
திரு.மதியின் திருமதி... எங்கே எங்கேனு தான் வலைவீசி நாலாபக்கமும் தேடுறேன்.. ம்ஹூம்... இந்த காலத்து பெண்கள் எல்லோரும் புத்திசாலிகள்..!:icon_b:

அதனால தான் உங்களுக்கு கல்யாண சாப்பாடு தள்ளிப் போகுது.. அப்பாவியா யாராவது இருந்தா சொல்லுங்க.. :D

பாலன்
29-07-2010, 01:37 PM
கவனித்தேன் மதி... எல்லாம் ஒரு கற்பனை தான்அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும்தாழ்; ஆனால் கற்பனைக்கு உண்டு தாயே!

இந்த காலத்து பெண்கள் எல்லோரும் புத்திசாலிகள்..இப்படியெல்லாம் ரிலேட்டிவ் ஸ்டேட்மெண்ட் கொடுத்து எங்களை முட்டாள் ஆக்காதிங்க* திரு.மதி அவர்களே.

மதி
29-07-2010, 01:42 PM
அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும்தாழ்; ஆனால் கற்பனைக்கு உண்டு தாயே!

இப்படியெல்லாம் ரிலேட்டிவ் ஸ்டேட்மெண்ட் கொடுத்து எங்களை முட்டாள் ஆக்காதிங்க* திரு.மதி அவர்களே.
ரிலேட்டிவ் ஆக தான் யாரும் முன்வரல.. ஸ்டேட்மெண்ட்டாவது குடுக்கலாமேன்னு :icon_b:

பாலன்
29-07-2010, 01:52 PM
//ரிலேட்டிவ் ஆக தான் யாரும் முன்வரல.. ஸ்டேட்மெண்ட்டாவது குடுக்கலாமேன்னு//

அதுசரி. அப்ப* ஸ்டேஜ் போட்டு நடத்துங்க, நாங்களும் குடும்பத்தோட வந்து வாழ்த்த்திட்டு போறோம்.

பாரதி
05-08-2010, 11:15 AM
நல்ல கதைக்களம் அமைந்தால் எப்போதும் மனதோடு மழைக்காலமே..!
கதை நன்றாக இருந்தது மதி. இனிய பாராட்டு.

மதி
05-08-2010, 11:18 AM
நல்ல கதைக்களம் அமைந்தால் எப்போதும் மனதோடு மழைக்காலமே..!
கதை நன்றாக இருந்தது மதி. இனிய பாராட்டு.
நன்றிண்ணா