PDA

View Full Version : அஞ்சரைக்குள்ள வண்டி

த.ஜார்ஜ்
23-07-2010, 09:55 AM
"வேகமா போ.வண்டிய புடிக்கணும்"

"டிக்கட் எடுத்துகிட்டியா?"

"அதெல்லாம் ஆச்சி. ரோட்டைப்பார்த்து ஓட்டு."

"சரி எத்தனை மணிக்கு வண்டி "

"அஞ்சரைக்குள்ள வண்டி"

"அஞ்சரைக்கா. இன்னும் பத்து நிமிசம்தான் இருக்கு. கொஞ்சம் சீக்கிரமாவே கிளம்பியிருக்கலாமில்ல"

ஆக்சிலேட்டரை அழுத்தினேன்.
சேவியரையும்,விக்டரையும் ரயிலேற்றி விடவேண்டும்.சென்னைக்கு.
கார் முன் விளக்கை போட்டுக் கொண்டு,ஆரனை அழுத்திக்கொண்டு,கோட்டாறு பாரம் ஏற்றி இருக்கும் லாரிகளின் நெருக்கடியை தாண்டி... ஸ்டேசனை நெருங்க.. நல்லவேளை முதல் நடைமேடையில் ரயில் நின்றது.பதற பதற இறங்கி..ஓடி..எஸ் 3 ல் ஏறியதும்தான் 'அப்பாடா'என்று நிம்மதி வந்தது. கை காட்டுவதற்குள் ரயில் கிளம்பிற்று.
ஆசுவாசமாக வெளியேறி காரை ஸ்டார்ட் செய்த போது சேவியரிடமிருந்து போன் "உருப்படுவியாடா நீ" என்றான்.

நான் அப்படியே ஷா.....க்கா......யிட்டேன்.

செல்வா
23-07-2010, 10:53 AM
இப்படி பாதியில விட்டுட்டுப் போனா சேவியர் கேட்ட கேள்விய நாங்களும் கேக்குறமாதிரியில்ல ஆகுது.

பாரதி
23-07-2010, 12:00 PM
ஆஹா....!
சிரமப்பட்டு பதறாமல் கொண்டு சேர்த்தவரை நல்ல சொற்களினால் விமர்சித்தாரா சேவியர்...! ஹூம்.... காலம் மாறிப்போச்சு.

செல்வா
23-07-2010, 12:32 PM
தப்பான வண்டியில கொண்டு சேத்துட்டீங்களோ?

இல்ல எதையாவது விட்டுட்டு வந்துட்டீங்களா?

ஆதவா
23-07-2010, 12:36 PM
ada pongappa

பாலமுரளி
23-07-2010, 12:40 PM
அஞ்சரைக்குள்ள வண்டின்னு சொல்லிட்டு அஞ்சு நாளா காக்க வைத்து விட்டீர்களே......?

அன்புரசிகன்
23-07-2010, 01:56 PM
டேஞ்சரஸ் ஃபலோஸ்...:lachen001:

த.ஜார்ஜ்
23-07-2010, 02:07 PM
தப்பான வண்டியில கொண்டு சேத்துட்டீங்களோ?

இல்ல எதையாவது விட்டுட்டு வந்துட்டீங்களா?

சேவியர் சொன்னதை காட்சியாக ஓட்டிப்பார்த்தால்......
இவர்கள் இருக்கை எண்ணை கண்டுபிடித்து உட்காரபோனபோது, அதில் ஏற்கெனவே இரண்டு பேர் உட்காந்திருந்தார்கள். இவனுக்கு கோபமோ கோபம். “சீட் காலியா இருந்தா உட்காந்திரதா.. எந்திரிங்க சார். இது நாங்க ரிசர்வ் செய்த சீட்” என்றான் தெனாவட்டாக ,
“இல்லியே நாங்களும் ரிசர்வ் பண்ணிதான் வாரோம்.”
“கோச் மாறி ஏறியிருப்பீங்க. சரியா பாருங்க” என்று அவர் மடி மீது பெட்டியை வைத்தாயிற்று. “பார்த்து ஏற மாட்டீங்களா”
அவரும் சந்தேகத்தோடு எழுந்தார். “இது எஸ் 3 தானே.”
“ஆமா”
“அப்ப எப்படி.. உங்களுக்கும் மூனுதான் போட்டிருக்கா...”
“பின்ன..கண்ணு தெரியாமலா வந்து ஏறியிருக்கோம்.”
“அப்படி இருக்காதே.... டிக்கெட்ட எடுங்க தம்பி பார்த்திருவோம்..”அவரது பயணச்சீட்டையும் எடுத்துக் கொண்டார்.
“பாருங்க. நல்லா பாருங்க” என்று இவன் எடுத்து நீட்டிய டிக்கெட்டை வாங்கிப் பார்த்தவர் நக்கலாய் சிரித்தார்.
“என்ன என்ன சிரிப்பு வேண்டிகிடக்கு”
“பெட்டி எண், இருக்கை எண் எல்லாம் சரிதான்..ஆனா...”
ஏற்கெனவே இருக்கையை ஆக்கிரமித்திருந்த சேவியர் முகத்தில் கேள்விக்குறி.

“இது அனந்தபுரி வண்டி டிக்கெட். அஞ்சேமுக்கால் வண்டி.”

மதி
23-07-2010, 02:09 PM
ஹிஹி.. வண்டி மாத்தி ஏத்திவிட்டுட்டு... நண்பர் திட்டினா வாங்கிக்க வேண்டியது தானே?

கலையரசி
23-07-2010, 02:20 PM
வண்டி மாறி ஏறியதுக்கு இவர் மட்டுமே பொறுப்பல்லவே! வண்டி புறப்பட பத்து நிமிஷத்துக்கு முன் கிளம்பி அவசர அவசரமாக பயணிக்கும் போது இப்படியெல்லாம் நடக்கும் தான்.
உருப்படுவியா நீ என்று காரில் கொண்டு வந்து விட்ட நண்பரைத் திட்டுகிறார். சரியான வண்டி தானா என்று அவரே பார்த்திருக்க வேண்டியது தானே?

த.ஜார்ஜ்
23-07-2010, 03:02 PM

நல்லா கேளுங்க தாயி..

த.ஜார்ஜ்
23-07-2010, 03:05 PM
ஹிஹி.. வண்டி மாத்தி ஏத்திவிட்டுட்டு... நண்பர் திட்டினா வாங்கிக்க வேண்டியது தானே?

திரும்ப திரும்ப அவன் அஞ்சர வண்டினுதான் சொன்னான். [மலையாள பட நினைப்புல இருந்தானோ என்னவோ]

த.ஜார்ஜ்
23-07-2010, 03:07 PM
ada pongappa

வேறெதையோ எதிர்பார்த்து வந்தீங்களோ?

த.ஜார்ஜ்
23-07-2010, 03:08 PM
ஆஹா....!
சிரமப்பட்டு பதறாமல் கொண்டு சேர்த்தவரை நல்ல சொற்களினால் விமர்சித்தாரா சேவியர்...! ஹூம்.... காலம் மாறிப்போச்சு.

இல்ல ... ரயில் மாறிப் போச்சி

த.ஜார்ஜ்
23-07-2010, 03:10 PM
அஞ்சரைக்குள்ள வண்டின்னு சொல்லிட்டு அஞ்சு நாளா காக்க வைத்து விட்டீர்களே......?

அஞ்சு நாளா?!!!!!!!!!!

எங்கே போய் காத்திருந்தீங்க.

அமரன்
23-07-2010, 11:26 PM
நினைச்சேன்..

ஜார்ஜுக்கு மட்டும் ஏன் இப்படின்னு தனியே உக்காந்து யோசிங்க எல்லாரும்..

அமரன்
23-07-2010, 11:27 PM
அஞ்சரைக்குள்ள வண்டின்னு சொல்லிட்டு அஞ்சு நாளா காக்க வைத்து விட்டீர்களே......?

வாங்க முரளி.

நீங்கதான் அவரா..

உறுப்பினர் அறிமுகப் பகுதியில் உங்களி அறிமுகப்படுத்துங்களேன்.

த.ஜார்ஜ்
24-07-2010, 10:50 AM
நினைச்சேன்..

ஜார்ஜுக்கு மட்டும் ஏன் இப்படின்னு தனியே உக்காந்து யோசிங்க எல்லாரும்..

யோசிங்க ஆனா அத சொல்லாம போயிராதீங்க.

தாமரை
26-07-2010, 03:48 AM
அஞ்சரைக் குள்ள வண்டின்னா இடிக்குமே..

அஞ்சரைக்கு உள்ள, உள்ளே இருக்கணும்னு தானே அஞ்சரைக்குள்ள வண்டின்னு சொல்றாங்க..

aren
26-07-2010, 04:53 AM
மலையாள பிட் பட நினைப்பால் அவர் தப்பாக சொல்லியிருக்கலாம். நீங்களாவது கொஞ்சம் கவனித்திருக்கவேண்டும்.

நாங்களும் ஒரு நாள் கல்கத்தாவிலிருந்து ஜம்ஷத்பூர் போகவேண்டும், ஏர்போர்ட்டிற்கு வண்டி வந்து டரைவர் எங்களை அழைத்துக்கொண்டு கல்கத்தா ஹவுரா ரயில் நிலையம் வந்து எங்களுக்கு ரிசர்வ் செய்த டிக்கெட்டையும் கொடுத்து எங்களை ரயிலில் ஏற்றுவதற்க்காக எங்களுடனேயே வந்தார். அவர் எங்களை அழைத்துக்கொண்டு பிளாட்பாரம் சென்று ஜம்ஷத்பூர் செல்லும் ரயிலில் சரியான இருப்பிடத்திற்குச் சென்றவுடன் அங்கே எங்கள் இருக்கையில் மற்றவர்கள் உட்கார்ந்திருந்தார்கள்.

இது எங்கள் இடம் என்று சொன்னவுடன் அவர்கள் எழுந்து எங்களை உட்காரச் சொல்லிவிட்டார்கள். நாங்களும் டிரைவருக்கு நன்று சொல்லி அவரை அனுப்பிவிட்டோம்.

இரண்டு நிமிடம் கழித்து மறுபடியும் எங்கள் இருப்பிடத்தில் உட்கார்ந்திருந்தவர்கள் வந்து, உங்கள் டிக்கெட்டை கொஞ்சம் கொடுங்கள் சரி பார்க்கவேண்டும் என்றார்கள்.

சரியென்று நாங்களும் எங்கள் டிக்கெட்டைக் கொடுத்தோம். அதைப் பார்த்துவிட்டு, சாரி இது நீங்கள் செல்லவேண்டிய ரயில் இல்லை, அது அடுத்த பிளாட்பாரத்திலிருந்து கிளம்புகிறது. இன்னும் பத்து நிமிஷம் இருக்கிறது என்றார்கள்.

ஐய்யய்யோ என்று அலறியடித்தோம், அவர்களே எங்கள் லக்கேஜுகளை எடுத்துக்கொண்டு வந்து எங்களை சரியான ரயிலில் ஏற்றிவிட்டுச் சென்றார்கள்.

நாங்கள் அசடு வழிந்தோம்.

ஆனால் ஒன்று, இரண்டு ரயிலுமே ஜம்ஷத்பூர்தான் செல்கிறது. அதனாலே டிரைவர் தவறு செய்துவிட்டான்.

த.ஜார்ஜ்
26-07-2010, 01:29 PM
அஞ்சரைக் குள்ள வண்டின்னா இடிக்குமே..

அஞ்சரைக்கு உள்ள, உள்ளே இருக்கணும்னு தானே அஞ்சரைக்குள்ள வண்டின்னு சொல்றாங்க..

ஆமென்

த.ஜார்ஜ்
26-07-2010, 01:34 PM
ஆரேன் .. நம்ம ரெண்டு பேர் அனுபவமும் [இந்த இடத்தில யாராவது மூக்க நுழைக்காம இருக்கணுமே]
எவ்வளவு நெருக்கமா ஒத்து போகுது பாத்தேளா..

Mano.G.
26-07-2010, 01:43 PM
அஞ்சரை , அஞ்சேமுக்காலாச்சா,
அதான் அவசரகாரனுக்கு ஏதோன்னு ஏற்கனவே
சொல்லிவச்சிருக்காங்களே.

மனோ.ஜி

விகடன்
26-07-2010, 02:17 PM
பயணத்தின்போது நேரந்தாழ்த்தி புறப்படுவதே தப்பு. அதுக்குள்ள இந்தக்கேள்வி வேறையா????

சிவா.ஜி
26-07-2010, 05:22 PM
அதுசரி...அந்த வண்டியும் அதே திசையிலத்தானே போச்சு....இல்ல எதிர் திசையிலா.....???

கீதம்
26-07-2010, 11:10 PM
ஒருமுறை நான் குடும்பத்துடன் திருச்சியிலிருந்து சென்னைக்கு வருவதற்காக முன்பதிவு செய்திருந்த பேருந்தில் ஏறி அமர்ந்த சமயம், ஒருவர் இன்னொருவரிடம் வாதிட்டுக்கொண்டிருந்தார். இருவருமே அதே இருக்கைக்கு முன்பதிவு செய்ததாகக் கூற பெரிய பிரச்சனையாகிவிட்டது. நடத்துநர் வந்து பார்த்தபிறகே தெரிந்தது, ஒருவரது பயணச்சீட்டு மறுநாளைக்கான முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. அவர் யாரிடமோ முன்பதிவு செய்யக்கொடுத்ததில் அந்த நபர் தேதியைத் தவறாகக் குறிப்பிட்டு முன்பதிவு செய்திருக்கிறார். இவரும் அதை கவனிக்கவில்லை. இவருக்கு அவசரமாக அன்றே சென்னை செல்லவேண்டிய நிர்பந்தம்போலும். பிறகென்ன? முன்பதிவு செய்திருந்தும் பலனில்லாமல் பணம் கொடுத்து பயணச்சீட்டு பெற்றுக்கொண்டும் சண்டையிட்டவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டும், முன்பதிவு செய்த நபரை (நண்பரோ?) சபித்துக்கொண்டும் அதே பேருந்திலேயே வந்தார்.

த.ஜார்ஜ்
27-07-2010, 02:05 PM
அதுசரி...அந்த வண்டியும் அதே திசையிலத்தானே போச்சு....இல்ல எதிர் திசையிலா.....???

இரண்டும் சென்னைக்கு.ஒன்று கன்னியாகுமரியிலிருந்து, மற்றது திருவனந்தபுரத்திலிருந்து.

த.ஜார்ஜ்
27-07-2010, 02:06 PM
ஒருமுறை நான் குடும்பத்துடன் திருச்சியிலிருந்து சென்னைக்கு வருவதற்காக முன்பதிவு செய்திருந்த பேருந்தில் ஏறி அமர்ந்த சமயம், ஒருவர் இன்னொருவரிடம் வாதிட்டுக்கொண்டிருந்தார். இருவருமே அதே இருக்கைக்கு முன்பதிவு செய்ததாகக் கூற பெரிய பிரச்சனையாகிவிட்டது. நடத்துநர் வந்து பார்த்தபிறகே தெரிந்தது, ஒருவரது பயணச்சீட்டு மறுநாளைக்கான முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. அவர் யாரிடமோ முன்பதிவு செய்யக்கொடுத்ததில் அந்த நபர் தேதியைத் தவறாகக் குறிப்பிட்டு முன்பதிவு செய்திருக்கிறார். இவரும் அதை கவனிக்கவில்லை. இவருக்கு அவசரமாக அன்றே சென்னை செல்லவேண்டிய நிர்பந்தம்போலும். பிறகென்ன? முன்பதிவு செய்திருந்தும் பலனில்லாமல் பணம் கொடுத்து பயணச்சீட்டு பெற்றுக்கொண்டும் சண்டையிட்டவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டும், முன்பதிவு செய்த நபரை (நண்பரோ?) சபித்துக்கொண்டும் அதே பேருந்திலேயே வந்தார்.

பலருக்கும் இது நேர்ந்திருக்கிறது இல்லையா.
பகிர்வுக்கு நன்றி கீதம்.

த.ஜார்ஜ்
27-07-2010, 02:08 PM
விராடன்,
மனோ
உங்கள் குறிப்புகளை
விட்டுக் சென்றதற்கு நன்றி.

பாலன்
28-07-2010, 04:44 PM
உங்களுக்கு ஒரு உண்மையை சொல்லட்டுமா? இப்போதெல்லாம் எனக்கு டிவியில வடிவேல் சாரை பார்த்தாலே ஜார்ஜ் சார் ஞாபகம்தான் வருது.

பா.ராஜேஷ்
28-07-2010, 05:26 PM
நல்லதொரு சுவையான நிகழ்ச்சிதான்...பகிர்விற்கு நன்றி ஜார்ஜ்

த.ஜார்ஜ்
29-07-2010, 02:35 PM
உங்களுக்கு ஒரு உண்மையை சொல்லட்டுமா? இப்போதெல்லாம் எனக்கு டிவியில வடிவேல் சாரை பார்த்தாலே ஜார்ஜ் சார் ஞாபகம்தான் வருது.

என்னை ரொம்ப புகழ்ந்திருக்கீங்க பாலன்.இப்போதான் கவனிச்சேன். [ஏதாவது காரியம் ஆகவேண்டியிருக்கா?]

பாலன்
29-07-2010, 02:47 PM
// [ஏதாவது காரியம் ஆகவேண்டியிருக்கா?] //

இதுவரைக்கும் இல்ல, இனி வந்தா சொல்லிவிடுறேன்.