PDA

View Full Version : 800...!!



ஓவியன்
22-07-2010, 09:09 AM
http://i230.photobucket.com/albums/ee210/ooveyan/119648.jpg

காலியில் நடைபெறும் தனது இறுதி டெஸ்ட் போட்டியில் 800வது விக்கெட்டை வீழ்த்திய முத்தையா முரளிதரனை வாழ்த்துவோம், வாங்க...! :)

அப்படியே இந்த திரியில் முரளிதரனின் டெஸ்ட் சாதனைகளைப் பட்டியல் படுத்தலாமென இருக்கின்றேன். :)

மதி
22-07-2010, 09:10 AM
அண்ணாத்தேயின் 800 விக்கட்களுக்கு வாழ்த்துகள்... இறுதிப்போட்டியில் இறுதிவிக்கட்டை 800ம் விக்கட்டாக எடுத்தது இன்னும் சிறப்பு..!

ஆதவா
22-07-2010, 09:12 AM
வாவ்... முரளி!!! அவர் 1000 விக்கெட் எடுப்பார் என்று நினைத்திருந்தேன்.. ஆனால் அதற்குள் ஓய்வு அறிவித்துவிட்டார்!!! :frown:

தாமரை
22-07-2010, 09:36 AM
சொல்லி அடிச்ச கில்லி...

காலியில் காலி..

இப்படியெல்லாம் நாளைத் தினத்தந்தி செய்தி வரும் பாருங்க.

பா.ராஜேஷ்
22-07-2010, 10:31 AM
மிகச்சிறந்த பந்து வீச்சாளர் என்பதை இறுதி போட்டியிலும் விக்கெட்டுகள் வீழ்த்தி உறுதி செய்து விட்டார்... 800 எடுத்த முரளிக்கு வாழ்த்துக்கள்...

govindh
22-07-2010, 11:43 AM
வாழ்த்துக்கள் முரளி.:)

தூயவன்
22-07-2010, 04:25 PM
அபாரமான ஆட்டம்.. முரளி இஸ் த பெஸ்ட்

அமரன்
22-07-2010, 09:11 PM
இந்த எண்ணூறில் எத்தனையோ இருந்தாலும், எனக்குப் பிடித்தது அம்பயராக கார்ப்பர் இருந்தது..

வாழ்த்துகள் முரளி!

மச்சான்
22-07-2010, 09:26 PM
800 விக்கட்டை கைப்பற்றி இனிமேல் யாராலும் முறியடிக்க முடியாத சாதனை படைத்த தமிழ்நாட்டு மருமகன் முத்தையா முரளிதரனுக்கு வாழ்த்துக்கள்.:)


அப்படியே இந்த திரியில் முரளிதரனின் டெஸ்ட் சாதனைகளைப் பட்டியல் படுத்தலாமென இருக்கின்றேன். :)
படுத்துங்க...... படுத்துங்க.....!!:D
.

செல்வா
22-07-2010, 09:34 PM
வாழ்த்துக்கள் முரளி...!

அன்புரசிகன்
22-07-2010, 11:31 PM
இந்த சாதனைகளுக்கு இடையில் எத்தனை இன்னல்கள்...
இவரது சாதனை பற்றி முன்னாள் இலங்கை துடுப்பாட்ட அணி தலைவர் அர்ஜூன கூறியது...
--------------
இவர் தமிழன் என்பதால் அரசியல் ரீதியிலும் பல அழுத்தங்கள் தலையீடுகள் வந்ததாம் அவற்றை எதிர்கொள்வதே அணிக்கு பெரும்பாடாக இருந்தததாம். எக்காலத்திலும் எவராலும் விட்டுக்கொடுக்கப்படாத ஒருவராக அணியில் விளங்கியவராம்.
------------------

உண்மை தான். அந்த விடையத்தில் அர்ஜூனவுக்கு முரளி கடமைப்பட்டுள்ளார். முரளிக்காக ஆட்டத்தையே நிறுத்தி மைதானத்திலிருந்து வெளியேற வைத்தவர் அவர். அவரையும் இந்த தருணத்தில் நன்றிகூறவேண்டும்.

முரளீதரனின் முகம் பொறித்த தங்க நாணயத்தினால் தான் இனிமேல் இலங்கையில் விளையாட்டு ஆரம்பத்தில் சுண்டப்படுமாம்.

உண்மையில் இமாலய சாதனை. வாழ்த்துக்கள். இனிவரும் காலத்தில் இந்த சாதனை முறியடிக்கப்படாமலேயே போய்விடலாம் என சப்பல் கூறியுள்ளார். ம். பார்க்கலாம்.

---
இவரது ஓய்வு அறிக்கைக்கு காரணம் சங்ககார என்றும் ஒரு தரப்பு பேசுகிறது. மஹெலவின் டில்ஷானின் பக்கபலத்துடன் இருந்தவர் மஹெல வெளியேறமுன் தான் வெளியேறியதாக ஒரு செய்தி. உண்மை பொய் தெரியவில்லை. :icon_ush: