PDA

View Full Version : முரண் காட்சிப் பாக்கள்...



Pages : [1] 2

இளசு
03-11-2003, 09:54 PM
விழிக்காட்சிப்பாக்கள் இங்கே:
http://www.tamilmantram.com/board/viewtopic.php?t=445

எங்கோ படித்த காட்சிப்பாக்கள் இங்கே:
http://www.tamilmantram.com/board/viewtopic.php?t=481

கடன் வாங்கிய காட்சிப்பாக்கள் இங்கே:
http://www.tamilmantram.com/board/viewtopic.php?t=2335

இனி.......
முரண் காட்சி சொல்லும் பாக்கள்

பிரிவு சோகம் காட்டச்சொல்லி
அருமையாய் நடித்துக் காட்டினார்
அவுட்டோரில் இயக்குநர்...
திரைச் செய்தி படித்துவிட்டு
வெறுமையாய் புன்னகைத்தாள்
வீட்டில் புதுமனைவி.

0---0

நோ.நோ... சிகரெட் இனி கூடவே கூடாது..
கடைசி நோயாளியை எச்சரித்துவிட்டு
அறை பூட்டி பற்றவைத்தார்
இதய நோய் நிபுணர்.

0---0

கோர்ட்டுக்கு நேரமாச்சு..
முக்கியமான டைவர்ஸ் கேஸ்..
இன்னிக்கும் டிபன் லேட்டாடி?
பளார்..பளார்..

0---0

பகுத்தறிவுக் கழகம்...
புதிய கட்டடம்..
ஒரு தேங்காய் தோட்டம் போக
ஒழுங்காய் பூமி பூஜை..

0---0

முத்து
03-11-2003, 11:22 PM
ஆச்சரியமில்லை ... அன்றாட உண்மைகள் ...
நல்லாயிருக்கு அண்ணா ... நன்றி ..

Nanban
04-11-2003, 04:21 AM
கல்வி........

செங்கற்களை எண்ணி
அடுக்கினான் தொழிலாளிச்சிறுவன் -
ஸ்கூல் கட்டுவதற்கு.

பாரதி
04-11-2003, 04:39 AM
பாராட்டுக்கள் அண்ணா..வுக்கும், நண்பனுக்கும்.

இக்பால்
04-11-2003, 10:16 AM
எத்தனை காட்சியப்பா நம் மன்றத்திலே...

அண்ணாவுக்கு பாராட்டுக்கள்.

-இளவல்.

lavanya
04-11-2003, 10:51 AM
அருமையான கவிதைகள்.... பாராட்டுக்கள் பதிவை துவங்கிய இளசுவுக்கும் கூடுதல் தந்த நண்பர்க்கும்....

Chiru_Thuli
04-11-2003, 02:33 PM
முரண் காட்சிப்பா நல்ல முயற்சி!
கலந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் பாராட்டுக்கள்.
தொடங்கி இருக்கும் இளசு அவர்களுக்கு "ஸ்பெஷல்" பாராட்டுக்கள்.

poo
04-11-2003, 06:31 PM
அழகான புள்ளிகள்..

கோலங்கள் தொடரட்டும்!!!

எறும்பாய் ருசித்து பாராட்டுகிறேன்!!

Chiru_Thuli
05-11-2003, 02:52 PM
அனாதை குழந்தைகளை அரசு தத்தெடுக்கும்
அறிவிப்போடு
தொட்டில் குழந்தை திட்டத்தை
தொடங்கி வைத்தார் மந்திரி.
சின்ன வீட்டில் நடந்த பெரிய தவறை மறைக்க
காதோடு காதாக செயலாளருக்கு உத்தரவு..
எப்படியாவது கலைக்கச் சொல்லனும்!

--------------------------------------------------

எதிர்த்துப் பேசிய மனைவிக்கு
மந்திரி கொடுத்தார் "பளார்".
அன்றைய கூட்டம்
"பசுவதையைத் தடை செய்வோம்".

Chiru_Thuli
05-11-2003, 03:01 PM
ஏன்?

வழிதவறி கரையில் ஒதுங்கிய
திமிங்கிலங்கள்!
மீண்டும் உள்ளே தள்ளிய
மீனவர்கள்!

பாரதி
05-11-2003, 03:28 PM
அருமை சிறுதுளி. பாராட்டுக்கள்.

இளசு
05-11-2003, 04:49 PM
நண்பனுக்கு பாராட்டு..
இளமையில் கல் என்ற கபிலனின் வரிகள்
நினைவுக்கு வருகிறது..

அருமை சிறுதுளி.. பாராட்டுகள்..
உங்கள் ரப்பர் மர காட்சிப்பா கண்டு வந்த உந்துதலில்
நான் பதித்த முரண் காட்சிகள் இவை.. நன்றி உங்களுக்கு...

இன்னும் முரண் காட்சிகள் பதியுங்கள்... நண்பர்களே...

கருத்து சொல்லி நன்றி மட்டும் என்னிடம் இருந்து பெற்றால் போதுமா??

காட்சி தந்து பாராட்டும் பெற வேகம் வர வேண்டாமா?????

அலை...
06-11-2003, 02:28 AM
கடும் வெள்ளப்பெருக்கு..என்று கனவு கண்டேன்.
...தூங்கிய இடம்: சென்னை

-அலை...

இளசு
06-11-2003, 06:26 AM
நண்பர் (அனில்) அலை அவர்களே...
உங்கள் படைப்பு வெள்ளம்
மன்றத்தில் பெருக வாழ்த்துகள்..

chezhian
06-11-2003, 12:20 PM
இனிய இளசு, அருமை நண்பன், சிறுதுளி, அலை அனைவருக்கும் பாராட்டுக்கள்.

தலைச்சுமை அதிகம்
முகத்தில் புன்னகை
விறகு விற்பவன்

அலை...
06-11-2003, 02:49 PM
நண்பர் (அனில்) அலை அவர்களே...
உங்கள் படைப்பு வெள்ளம்
மன்றத்தில் பெருக வாழ்த்துகள்..

நன்றி இளசு...

அறிமுகப்பகுதியில் ஓடோடி வந்து வாழ்த்து சொல்லிய உங்களை போன்றவர்களின் ஊக்கம் இருந்தால் எவரும் படைப்பார்..

அலை...

இ.இசாக்
06-11-2003, 04:42 PM
காட்சிகளின் மீதான விமர்சனப்பார்வை இளசு அண்ணாவுக்கு இயல்பாக உள்ளது.

அதனை பக்குவமாக பயன்படுத்தி பாவடிக்கிறார் இளசு அண்ணா!

இளசு
06-11-2003, 04:56 PM
இனிய நண்பன் செழியனின் முரண்பா அருமை..

நண்பர் அலை அவர்களே....
உங்களை வரவேற்றதில் உங்களுக்கு நான் கொடுத்த மகிழ்ச்சியை விட
அச்செயலில் நான் பெற்ற மகிழ்ச்சி சற்று கூடுதல்தான்...
படைப்புகளில் பங்கேற்று அதை இன்னும் கூட்டுகிறீர்கள்... நன்றி அலை!

இளவல் இசாக்கின் கருத்து இனிக்கிறது.. நன்றி!

Chiru_Thuli
06-11-2003, 05:10 PM
காந்திஜி பிறந்த நாள்

கைதிகளுக்கு கருணை விடுதலை.
வெளியே வந்தவன் நொந்து கொண்டான்
இன்னைக்குப் போயி வெளியே வந்தேனே
எல்லாக் கடையும் அடைச்சிருக்கு!

சுதந்திர தினம்

சுதந்திர தினம்
கைதிகளுக்கு
வடை பாயாசத்தோடு சாப்பாடு!

அறவழியில் போராட்டம்

புறப்பட்டார் தலைவர்
பின்னாலேயே
பாதுகாப்புக்கு
துப்பாக்கியுடன் பூனைப்படை

இளசு
06-11-2003, 05:14 PM
நன்றி சிறுதுளி.. அருமை...

கடைசிப்பா கண்டு ஓர் உந்துதல்...

சுதந்திர தினவிழா
கொடியேற்றும் தலைவர்..
கூண்டுக்குள்..

Chiru_Thuli
06-11-2003, 05:56 PM
இளசு அவர்களே,
இது தான் இன்றைய உண்மை நிலை.
நாட்டு நிலைமைக்கு சாட்சி சொல்லும் காட்சி தந்தமைக்கு நன்றி!



சுதந்திர தினவிழா
கொடியேற்றும் தலைவர்..
கூண்டுக்குள்..

gankrish
07-11-2003, 09:47 AM
இளசு தொடங்கி வைத்த முரண்பா.. நண்பன் எழுதிய முரண்பா.. மற்றும் சிறுதுளி எழுதியவை ... இன்றைய காலகட்டத்துக்கு பொருந்தும். (வீட்டிலே ராமன் ... வெளியே கிருஷ்ணன்) .. நல்ல தொகுப்பு

Nanban
08-11-2003, 08:28 AM
குருடனின் பிச்சைத் தட்டு
இலக்குத் தவறாது நீளும் -
குருடராவர் பார்த்தவர்.

இளசு
08-11-2003, 09:30 AM
மிக அருமையான முரண் காட்சி நண்பனே..
ஆனால் அரிதான காட்சியல்ல...
படம் பிடித்தமைக்குப் பாராட்டுகள்..

poo
08-11-2003, 10:16 AM
வெற்றிநடைபோடும் படைப்புகளில் இதுவுமொன்று..

தொடங்கிய இளசு அண்ணனுக்கும் தொடரும் நண்பர்களுக்கும் பாராட்டுக்கள்..

(எதையுமே ஆரம்பிப்பதோடு நிறுத்திவிட்டு அடுத்த கூட்டிற்கும் பாயும் அண்ணனே.. இதில் அடுத்த பாக்களை பார்ப்பதெப்போது?!!!)

அலை...
12-11-2003, 01:09 AM
குழந்தைத் தொழிலாளர்கள்

அலை...

(பி.கு)
தலைப்பை எழுதி, படித்துப் பார்த்தேன்
வேறு ஏதும் எழுதத் தோன்றவில்லை..
தலைப்பே ஒரு முரண் பா..!

lavanya
12-11-2003, 06:12 PM
இடம்பெற்றிருப்பவை எல்லாமே அருமையான முரண்பாக்கள்...

நமக்குதான் ஒண்ணும் தோணலை.....

சமீபத்தில் எங்கோ படித்தது...

அஹிம்சையை போதிக்க
ஆசிரியர் வந்தார்
கையில் பிரம்போடு....

இ.இசாக்
12-11-2003, 06:18 PM
இடம்பெற்றிருப்பவை எல்லாமே அருமையான முரண்பாக்கள்...

நமக்குதான் ஒண்ணும் தோணலை.....

சமீபத்தில் எங்கோ படித்தது...

அஹிம்சையை போதிக்க
ஆசிரியர் வந்தார்
கையில் பிரம்போடு....

படிக்க சொல்லி பள்ளிக்கு அனுப்புவதே ஒரு முரண் தான்
அதுவும்
இன்றைய இந்திய கல்வி முறை.
என்ன சொல்லி என்ன செய்ய.

தஞ்சை விவசாயி குழந்தை
ஆங்கிலப்பள்ளியில்
ரைன் ரைன் கோயவே
- புதுவை தமிழ்நெஞ்சன் வரி.

அலை...
13-11-2003, 06:29 AM
படிக்க சொல்லி பள்ளிக்கு அனுப்புவதே ஒரு முரண் தான்

உண்மை இசாக் அவர்களே முற்றிலும் உண்மை...

அலை...

Hayath
13-11-2003, 07:05 AM
எல்லாமே அருமையான முரண்பாக்கள். இளசு அவர்கள் ஆரம்பித்தது என்றால் சும்மாவா..

எங்கோ படித்தது. கீழ்கண்டவாறு...

"மக்கள் ஆசைப்படக் கூடாது
என்று புத்தர் ஆசை பட்டார்."

Chiru_Thuli
15-11-2003, 05:27 AM
அகிம்சை

என்கெளன்ட்டர் முடித்து
வெற்றிகரமாக திரும்பி வந்தார் இன்ஸ்பெக்டர்.
இருக்கைக்குப் பின்புறம் காந்தி சிரித்துக் கொண்டு!

சட்டம்

குற்றச்சாட்டு - ரோட்டில் தனியாகப் போகும் போது வழிப்பறி!
கேட்டார் ஏட்டு - சாட்சி இருக்கா?

Nanban
15-11-2003, 06:08 AM
அகிம்சை

என்கெளன்ட்டர் முடித்து
வெற்றிகரமாக திரும்பி வந்தார் இன்ஸ்பெக்டர்.
இருக்கைக்குப் பின்புறம் காந்தி சிரித்துக் கொண்டு!


சிறுதுளி, நீங்கள் தவறாக நினைக்கவில்லை என்றால், கவிதையின் வடிவத்தை இன்னும் கொஞ்சம் சீர்திருத்துங்களேன் - வார்த்தைகளைக் குறைத்து - உ.ம்.

என்¢
இன்ஸ்
காந்


ஆமாம், 5/7/5 அசைகள் என்ற ஹைகூவின் இலக்கணம் கச்சிதமாகப் பொருந்துவதைப் பாருங்கள்.....

ஒரு வெற்றி பெற்ற எழுத்தாளரிடம், உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன என்று கேட்ட பொழுது சொன்னார், 'கற்பனை 1%, உழைப்பு 99%' என்றார்.

நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்......

உங்களிடம் கருத்து வலிமை இருக்கிறது. சொற்சிக்கனமும் சேர்ந்தால், கவிதை சக்திமிக்கதாக ஆகும்.

(வண்ணத்தில் அசை பிரித்து .......)

Chiru_Thuli
15-11-2003, 11:14 PM
நன்றி நண்பரே!

தவறாக நினைப்பதா?
என் எழுத்துமேல் உள்ள தூசியைத் துடைக்க உங்கள் கருத்து உதவும். நன்றிகள் ஆயிரம்.

ஆனால்,
ஆசையில்லாமல் இல்லை
அசை பிரிக்க
அறியாததாலே தான்!

தமிழ் இலக்கணம்
பள்ளியில் படித்தது
மறந்து விட்டது!

முயல்வேன் இனியும்!

Nanban
16-11-2003, 03:55 PM
அசை பிரிப்பது மிகவும் சுலபம்....
.
வண்ணத்தில் காட்டியுள்ளேன்......

எப்படி என்றால் -
நெடில், நெடிலைத் தொடர்ந்த புள்ளி உள்ள எழுத்து - அசை
குறில் தினித்து நிற்காது. தொடர்ந்து மேலும் ஒரு குறில், அல்லது ஒரு நெடில், இத்துடன் புள்ளி உள்ள எழுத்துகள் - அசை

இவைதான் அடிப்படையில் அசை பிரிப்பது........
வெகு சுலபம்.......

இளசு
16-11-2003, 09:28 PM
நண்பர்கள் அலை, லாவண்யா, இளவல் இசாக்,
அன்பின் ஹுமாயூன், அன்பு சிறுதுளி
அனைவருக்கும் பாராட்டுகள்.

நண்பனின் பணிக்கு நன்றி...

இளசு
16-11-2003, 09:35 PM
மூன்று மணி நேரம் ஷகீலா படம்
மிஞ்சிய முப்பது காசு சில்லறையில்
தெருக்கோயிலுக்குக் கற்பூரம்...

அலை...
17-11-2003, 03:13 AM
ஊருக்கே படியளந்த
விவசாயிக்கு
மதிய உணவு திட்டம்...

அலை...

இளசு
17-11-2003, 09:55 PM
பாராட்டுகள் அலை...

வலிக்கு வலிதான் மருந்தாமே
என்னை இன்னொரு முறை காதலித்து
இன்னொரு தோல்வி கொடேன்...

puppy
17-11-2003, 09:58 PM
மூன்று மணி நேரம் ஷகீலா படம்
மிஞ்சிய முப்பது காசு சில்லறையில்
தெருக்கோயிலுக்குக் கற்பூரம்...

மூன்று மணி நேரமா....அதுதான் ஆளை காணோமா.....
என்ன படம் எப்படி படம்ன்னு சொல்லுங்க
சரியா

puppy
17-11-2003, 10:00 PM
ஆனால் எனக்கு ஒன்னும் இதில் முரண்பாடு தெரியவில்லை இளசு...
நீங்க என்ன சொல்ல வர்றீங்க.......சொல்லுங்க......சரஸ்வதி சபதம்
பார்க்கிறவன் தான் கற்பூரம் ஏத்த முடியுமா ?

முத்து
17-11-2003, 10:01 PM
மூன்று மணி நேரம் ஷகீலா படம்
மிஞ்சிய முப்பது காசு சில்லறையில்
தெருக்கோயிலுக்குக் கற்பூரம்...

மூன்று மணி நேரமா....அதுதான் ஆளை காணோமா.....
என்ன படம் எப்படி படம்ன்னு சொல்லுங்க
சரியா



..... :D

இளசு
17-11-2003, 10:05 PM
அறுசுவையில் அதீத இடம்
இனிப்புக்குத் தரும்
இன்றைய அவசர வாழ்வின் பங்கீட்டு முரணைச்
சொன்னேன் பப்பி அவர்களே..

அம்மாவிடம் டெலிபோன் பேச்சைக் கட் பண்ணிட்டு
ப்ரவுசிங் - சாட்டிங்குக்கு லைனை கிளியர் பண்ணும்
காலம் அல்லவா?

puppy
17-11-2003, 10:12 PM
அது சரி..அதுக்கு சினிமான்னு பொதுவா சொல்லி இருக்கலாம்..அதை
சொன்னேன்...

இளசு
17-11-2003, 10:14 PM
எந்த சினிமாவுக்குக் கூட்டம் போகுதோ அந்த சினிமாவைச் சொன்னேன் பப்பி அவர்களே...

மற்றபடி ஒரு குறிப்பிட்ட நடிகையை தரக்குறைவாக்கும் எண்ணமில்லை.

தவறென்றால் நீக்கிப்பதிக்கிறேன்..

puppy
17-11-2003, 10:15 PM
நான் நடி¨கையை பத்தியே பேசலை இங்க..உங்களுக்கு பிடிச்ச நடிகையை
குறையா சொன்னதா நினைச்சா மன்னிச்சிடுங்க......

இளசு
17-11-2003, 10:21 PM
நான் நடி¨கையை பத்தியே பேசலை இங்க..உங்களுக்கு பிடிச்ச நடிகையை
குறையா சொன்னதா நினைச்சா மன்னிச்சிடுங்க......

ஷ்.....ஷ்.. சிம்ரன் காதுல விழுந்தா கோவிச்சுக்குவாங்க... :lol:

முத்து
17-11-2003, 10:23 PM
நான் நடி¨கையை பத்தியே பேசலை இங்க..உங்களுக்கு பிடிச்ச நடிகையை
குறையா சொன்னதா நினைச்சா மன்னிச்சிடுங்க......

அண்ணா ...
என்ன ஆச்சு ...
எல்லோரும் இப்படி திடீர் திடீர்ன்னு காலை வாருராங்க ...

puppy
17-11-2003, 10:25 PM
ஹாஹா அடுத்த கோ.கோ-வா முத்து.....அண்ணாவுக்கு ஏற்ற தம்பி தான்...

நிலா
17-11-2003, 10:26 PM
அண்ணா ...
என்ன ஆச்சு ...
எல்லோரும் இப்படி திடீர் திடீர்ன்னு காலை வாருராங்க

அதுசரி இவர் சிம்ரனே கதின்னு விழுந்து கிடக்கறப்போ நாங்க(நானும் சேர்ந்துக்கறேன் பப்பி) எங்கயிருந்து வாருரது?

வந்துட்டாரு வள்ளுவரு அண்ணன காப்பாத்த! :lol:

முத்து
17-11-2003, 10:33 PM
ஹாஹா அடுத்த கோ.கோ-வா முத்து.....அண்ணாவுக்கு ஏற்ற தம்பி தான்...


அதுசரி இவர் சிம்ரனே கதின்னு விழுந்து கிடக்கறப்போ நாங்க(நானும் சேர்ந்துக்கறேன் பப்பி) எங்கயிருந்து வாருரது?
வந்துட்டாரு வள்ளுவரு அண்ணன காப்பாத்த!

எல்லாம் மொத்தமா சேர்ந்திருக்காங்கபோல தெரியுதே ...

இவங்க தனித்தனியா இருந்தாலே சமாளிப்பது கடினம் ....
நான் கொஞ்ச நேரங்கழித்து வர்ரதுதான் நல்லதுன்னு தோணுது ..
எஸ்கேப் .................

இளசு
17-11-2003, 10:34 PM
எஸ்கேப்தான் ஒரே வழி..
அண்ணன் காட்டிய நல்வழி!

puppy
17-11-2003, 10:41 PM
படம் பெயர் சட்டென
நினைவுக்கு வரவில்லை
தினம்தோறும்...

ஹாஹா..இது முரண்பாவா

இளசு
17-11-2003, 10:43 PM
டைமிங்கோட பின்னிட்டீங்க..பப்பி...

puppy
17-11-2003, 10:46 PM
படம் பெயர் சட்டனெ
நினைவுக்கு வரவில்லை
தினம்தோறும்...
ஹாஹா..இது முரண்பாவா

இதுக்கு காரணம் இதுவே..
http://www.tamilmantram.com/board/viewtopi...p?p=33281#33281

இளசு
17-11-2003, 10:47 PM
நான் சொன்ன "டைமிங்"கும் அதனாலேயே..

puppy
17-11-2003, 10:49 PM
அது எனக்கு தெரியும்......உங்களுக்கும் தெரியும்..நம்ம நண்பன் வருவாரு
அலை வருவாரு சி.துளி வருவாரு....அவங்க அவங்க ஒரு கருத்து
சொல்றதுக்கு முன்னாடி ....எதுக்கு குழப்பம்ன்னு .....

இளசு
17-11-2003, 10:51 PM
அவசர புத்தியை நிரூபிச்சிட்டேன் பார்த்தீங்களா? :lol:

puppy
17-11-2003, 10:52 PM
உண்மையைத்தானே சொல்லி இருக்கேன் மனசெல்லாம் கதையிலே?

முத்து
17-11-2003, 10:56 PM
உண்மையைத்தானே சொல்லி இருக்கேன் மனசெல்லாம் கதையிலே ?

அடுத்த பாகம் எப்போ ... ?
சீக்கிரமா கோ.கோ பகுதியில கேக்கறதுக்கு முன்னாடி கொடுத்திடுங்க ...

Chiru_Thuli
19-11-2003, 04:49 PM
ஒரே நாளில் எத்தனை முறை?

நான் சொல்லுவதெல்லாம் உண்மை
உண்மையைத் தவிர வெறொன்றும் இல்லை
சாட்சிக்கு சரி.
நீதிமன்ற ஊழியருக்கு?

சத்தியம்

கோவிலில் திருடியவன்
உண்மையை சொல்ல
பகவத் கீதையின் மேல்
கைவைத்து சத்தியம்.

முத்து
19-11-2003, 08:42 PM
வித்தியாசமான சிந்தனை ..
மிக நன்று சிறுதுளி ..
நன்றிகள் .. மற்றும் பாராட்டுக்கள் ...

Nanban
20-11-2003, 10:43 AM
புகைபிடித்தவாறு
புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறான் -
புகைப்பதை நிறுத்து எப்படி?

சுஜாதா
20-11-2003, 11:42 AM
அருமையான முரண்..
பாராட்டுக்கள் நண்பன் அவர்களே..

இளசு
20-11-2003, 05:37 PM
கவிஞர்கள் சிறுதுளிக்கும் நண்பனுக்கும்....

உங்கள் மீது பொறாமைத் தீ....
வேகும் உள்ளம் பாராட்ட...
விழுவதோ பனித்துளி...

இளசு
24-11-2003, 06:47 PM
படிப்பு ஏற ஏற
இறங்குது தலைக்கனம்..

puppy
25-11-2003, 09:41 PM
மரம் வெட்டுபவன்
இளைப்பாறினான்
மரத்தின் நிழலில்!

இளசு
25-11-2003, 10:43 PM
அருமை பப்பி அவர்களே...
பலப் பல காட்சிகளை

மனக்கண் முன் கொண்டு வரும்
முரண் காட்சி உங்கள் பா...

மருமகளிடம் மிரட்டி வாங்கி
மகள் வாழக் கொடுக்கும் தாய்

மாணவர்களிடம் போதை விற்று
மகன் படிக்க பணம் கட்டும் தந்தை

முரண்களின் அணிவகுப்பு தொடரட்டும்..

maduraiveera
26-11-2003, 01:02 PM
கா... கா... என்று கத்தினால்
சேர்ந்து உண்ண வரும் காகம்
உதறிச் செல்வான் சிறுவனின் நண்பன்.

இளசு
26-11-2003, 05:19 PM
அருமை மதுரை வீரா..

மன்றத்தின் இன்றியமையாத பங்களிப்பாளராய்
பரிமான வளர்ச்சி காண்கிறேன்..கண்டு உங்கள் மேல்
அபிமானம் கூட வாழ்த்துகிறேன்..

maduraiveera
26-11-2003, 05:47 PM
பாராட்டுக்களுக்கும் பரிந்துரைகளுக்கும் நன்றி.
முயன்றேன் ! முயல்கிறேன் !! முயல்வேன் !!!

puppy
26-11-2003, 06:50 PM
பப்பியின் விடுகதை
சரியான விடை
இளசு மட்டுமே

இளசு
26-11-2003, 06:52 PM
உப்புப்பெறாத விசயத்தில் மட்டும்
இளசுவுக்கு சாமர்த்தியம்
எப்பவுமே ஜாஸ்திதான்..

puppy
26-11-2003, 11:16 PM
விரக்தியான புன்னகையுடன், கையில்
"வாழ்க்கையை ஒழுங்குபடுத்தும் வழிமுறைகள்"
நூலகர்

இளசு
26-11-2003, 11:27 PM
படிப்பது ராமாயணம்...

பாராட்டுகள் பப்பி..

இளசு
27-11-2003, 12:51 AM
கூழுக்கு ஆசை
வளர்ந்தது மீசை மட்டும்

poo
27-11-2003, 10:45 AM
மீசைமேல் கோபம்..
முத்தம் தரமறுக்கும்
குழந்தை!

தமிழ் தாட்சாயிணி
27-11-2003, 12:00 PM
படிப்பது தேவாரம்
இடிப்பது சிவன் கோயில்

இளசு
27-11-2003, 07:41 PM
மீண்டும் பூ -வாசம்...
தொடரட்டும்...

தங்கை தமிழ்தாட்சாயணி - இன்னும் முரண்கள் தாருங்கள்..

இருவருக்கும் பாராட்டுகள்.

Nanban
28-11-2003, 06:05 AM
கடைசி நாள் கனவுகள்
சம்பளக் கவரில் வருகிறது
முதலாம் நாளன்று.

puppy
28-11-2003, 07:09 PM
நண்பனே பா நன்று...முரண்பாவா இது....உண்மைக் காட்சி மாதிரி இருக்கே?

Nanban
29-11-2003, 06:46 AM
நண்பனே பா நன்று...முரண்பாவா இது....உண்மைக் காட்சி மாதிரி இருக்கே?

கடைசி நாள், முதல் நாள் என்ற இரண்டு தேதிகளுக்கும் உள்ள முரண் அவ்வளவு தான். அதை இங்கே பதிக்கலாமா இல்லை கடன் வாங்கிய காட்சிப்பாவில் பதிக்கலாமா என்ற யோசனையுடன் தான் இங்கே பதித்தேன்.......

poo
01-12-2003, 05:47 PM
ஊரெல்லாம் மழை..
முளைத்துவிட்டிருந்தது
விதைநெல்-பானைக்குள்!

poo
01-12-2003, 05:51 PM
கைம்பெண் எதிரில்..
தண்ணீர் குடித்து
பொறுத்து கிளம்பினான் -
கந்தசாமிக்கு காரியம்!

அலை...
09-12-2003, 12:16 AM
ஊரெல்லாம் மழை..
முளைத்துவிட்டிருந்தது
விதைநெல்-பானைக்குள்!

ஆழமான கருத்து செரிந்த கவிதை..

(யாரும் கவனிக்கவில்லைப் போல?)
பாராட்டுதல்கள் பூ

அன்புடன்

அலை...

இளசு
09-12-2003, 12:23 AM
பூவின் வீரிய மன(ண)ம் வீசும் கவிதைகள்..பாராட்டுகள்..

எடுத்துக்கொடுத்த அலைக்கு நன்றி..

பாரதி
09-12-2003, 01:26 PM
நல்ல கவிதைகள் பூ... பாராட்டுக்கள்.

Nanban
09-12-2003, 02:02 PM
ஊரெல்லாம் மழை..
முளைத்துவிட்டிருந்தது
விதைநெல்-பானைக்குள்!

அருமை......... அருமை...........

இப்படியான காட்சிகளை அடிக்கடி கொடுங்கள்...........

puppy
10-12-2003, 10:17 PM
பெண்மையை தெரிந்து கொள்ளுங்கள்
ஒரு ஆணிடமிருந்து

இது முரண்பாவா?

முத்து
10-12-2003, 10:19 PM
நல்லாயிருக்கு பப்பி அவர்களே ...
இது முரண்பாவேதான் ...

இளசு
10-12-2003, 10:53 PM
பெண்மையை தெரிந்து கொள்ளுங்கள்
ஒரு ஆணிடமிருந்து
இது முரண்பாவா ?

எந்த ஆணுக்குள்ளும்
கொஞ்சம் பெண்மையுண்டு..
தாளாத நேசத்தில்
தாயுமானவனுண்டு

இளசு
14-12-2003, 07:51 AM
அருகருகே இருந்தும்
ஒன்றையொன்று பார்த்ததில்லை
கண்கள்..

puppy
14-12-2003, 07:55 AM
தனிதனியே இருந்தும்
எதையும் தனியாக
பார்ப்பதில்லை
கண்கள்

இளசு
14-12-2003, 08:00 AM
எதிரொலி முன்னால் ஒலிக்க
முதல் ஒலி பின்னால் வர..
முரண் ஒலி!

இளசு
14-12-2003, 08:01 AM
வலி கொடுக்கும் பார்வை..
இதயம் வலிக்கும்போது அழுகை..
கண்கள்..

puppy
15-12-2003, 05:06 PM
சவ ஊர்வலம்
பச்சை மூங்கிலில்

poo
15-12-2003, 05:16 PM
பாடையோடு
சுடுகாட்டிற்கு...
பூக்களும்!!

poo
15-12-2003, 05:18 PM
இருவரிகளில் எத்தனை வீரியம்..

பாராட்டுக்கள் பப்பி அவர்களே!!

இளசு
15-12-2003, 05:41 PM
பச்சை மூங்கில்...
பாதை நெடுக பூக்கள்..

முரண்களை அளித்த பப்பிக்கும் பூவுக்கும் பாராட்டுகள்..

இளசு
15-12-2003, 05:47 PM
முரண்??

என் எதிரியடி நீ!
இடது கழுத்தில் முத்தமிடும்போது
வலதுபக்கம் முகம் திருப்புவதால்...

poo
15-12-2003, 05:49 PM
உண்மையில் வித்தியாசமாய் உள்ளது அண்ணா!!

என்னே ஒரு சிந்தனை!!!!!?

maduraiveera
15-12-2003, 06:19 PM
அருமையான முரண் காட்சிப் பாக்கள் வழங்கிய
பப்பி, இளசு இருவருக்கும் பாராட்டுக்கள்.

அலை...
18-12-2003, 05:12 AM
முரண்??

என் எதிரியடி நீ!
இடது கழுத்தில் முத்தமிடும்போது
வலதுபக்கம் முகம் திருப்புவதால்...

இளசு...எதாவது விசேஷமா? இந்த வாரம் மனதை நெகிழ்த்தும் சம்பவம் எதாவது நடந்ததா?. நீங்கள் எழுதிய அத்தனைக் கவிதைகளும் அருமை அருமை...அருமை...

ஒருத் தனி அழகு தெரிகிறது...

அன்பு

அலை...

இளசு
18-12-2003, 09:13 PM
இந்தத் தலைப்பின் 100வது பதிவைத் தந்த
மதுரை வீரா

என் "மனதை நெகிழ்த்தும்" கருத்து தந்த
அலை

நன்றி...

உன் சிரிப்பின்போது என்னை ஒதுக்கு..
சிரித்தபடி காத்திருப்பேன்..
அழும்போது நிச்சயம் அருகே வரவிடு

இளசு
23-12-2003, 10:01 PM
கனி

பாரதி முண்டாசு கட்டினான்...
உண்மைதான்
முண்டாசு கட்டியவனெல்லாம் பாரதியா?

(எனக்குக் கனிமொழி, பழனி பாரதி
இருவரையும் பிடிக்கும்)

http://www.tamilmantram.com/board/viewtopic.php?t=2902

இளசு
26-12-2003, 12:55 PM
மண்ணும் மரமும்

உனக்குள் புதைந்த
என்னைப் பார்த்துச் சொன்னாய்:
"உங்களுக்கு பாரம் நான்"

அலை...
26-12-2003, 04:56 PM
ஆழமானக் கவிதை இளசு...
இதோ என் பங்கு,

செல்லமாய்த்தான் வளர்க்கிறேன்.
சோகமாய் கூண்டுக்குள்
கிளி

puppy
26-12-2003, 09:21 PM
கடற்கரைக்குச் சென்றான்
அமைதியைத் தேடி

முத்து
26-12-2003, 09:48 PM
அஜீரணத்துக்கு மருத்துவரைத் தேடும் வழியில்
குப்பைத்தொட்டியில் பிச்சைக்காரர்கள்
எச்சில் இலை தேடி ..

இளசு
26-12-2003, 10:18 PM
அலையின் பாராட்டுக்கு நன்றி
முரண் பாவுக்கு பாராட்டு..

இளசு
26-12-2003, 10:20 PM
கடற்கரைக்குச் சென்றான்
அமைதியைத் தேடி

அமைதி
உள்ளே இருக்க
வெளியில் தேடினான்..

இளசு
26-12-2003, 10:24 PM
அஜீரணத்துக்கு மருத்துவரைத் தேடும் வழியில்
குப்பைத்தொட்டியில் பிச்சைக்காரர்கள்
எச்சில் இலை தேடி ..

அருமை முத்து..

உனக்காக நான் என்ற படத்தில் பாடல் வரி...

பசி வர அங்கே மாத்திரைகள்
பட்டினியால் இங்கே யாத்திரைகள்...

இளசு
26-12-2003, 11:24 PM
காதல் விரதம்
முடித்து வைத்தாய்
எச்சில் முத்தம் தந்து..

poo
27-12-2003, 12:20 PM
அண்ணா.. நம்ம மேட்டர்...

சூப்பர் "ச்"!!

அலை...
27-12-2003, 06:14 PM
காதல் விரதம்
முடித்து வைத்தாய்
எச்சில் முத்தம் தந்து..

என்ன விஷயம்...? இந்தப் போடு போடுறீங்க...?

அன்பு

அலை...

இளசு
27-12-2003, 10:56 PM
நன்றி..பூ, அலை..

தேடித்தேடி
கண்டுபிடித்தேன்
என்னைத் தொலைப்பதற்கு...

poo
28-12-2003, 04:40 AM
தொலைத்தபின்னும்
தேடத்தோணவில்லை...
என்னை!!

poo
28-12-2003, 04:42 AM
அண்ணா... ரொம்ப ஜாலியா இருக்கு... இதே ரூட்ல வண்டியை விடுங்க!!!

அலை...
28-12-2003, 05:24 AM
கண்ணும் கண்ணும்..

என் கண்களில்
நீ விட்ட அம்பு
எப்படி இதயத்தில் பாய்ந்தது?

அலை...
28-12-2003, 05:25 AM
ஒரு கை பாத்துடுவோம் பூ..

இளசு
28-12-2003, 11:42 PM
பூ, அலை வாங்க வாங்க
டிரிபிள்ஸ் போலாம்...

இணையும்போது சந்தோஷம் கூட்டிய
அந்தப் பிரிவு கூட
இப்போது பிடிச்சிருக்கு...

Nanban
29-12-2003, 04:17 AM
முரண்கள் எங்கெங்கும்
அலைவீசியடித்துப் பறக்கிறது
எல்லாவற்றிலும் பெண்கள்.

காட்சிகளில் பலவும்
கிடைக்குமென்றாலும் மகளிரணித்
தாக்குதல் இங்கு அதிகம்...

அவர்கள் அறியாமலே....

இளசு
29-12-2003, 10:10 PM
காட்சிக்கு வந்த நண்பன் தந்த கருத்துக்கு நன்றி..

பூ, அலை --
இப்ப சின்ன பை -பாஸ்!
மறுபடி நம்ம ரூட்டுக்கு வந்திடலாம்.. சரியா?

எல்லார்க்கும் நல்லவனாக எண்ணி
எவருக்கும் நல்லவனாக வில்லை..
எனக்கே கூட..

இளசு
29-12-2003, 10:12 PM
ஒரு குடம் பாலை
சிறுதுளியால் வென்றதால்
விஷமே பெரிது..?????

அலை...
30-12-2003, 06:48 AM
பாவம் சிற்பி...

பாறையை
சிற்பமாக்கும்
உளியா பெரிது?

சிற்பமாகும் பாறையா?

அல்லது சிற்பமா?

இளசு
30-12-2003, 08:05 AM
அலை....
"குஷி"யான கேள்வி...

இக்பால்
30-12-2003, 08:38 AM
அலையக்கூடாது.
நினைத்தது மனம்.
அடைந்த பிறகு.

மன்மதன்
30-12-2003, 08:39 AM
சரியா சொன்னிங்க. இக்பால்...
மனம் ஒரு குரங்குன்னு சும்மாவா சொன்னாங்க..

இளசு
31-12-2003, 12:08 AM
அலையக்கூடாது.
நினைத்தது மனம்.
அடைந்த பிறகு.

சுளீர், முரண்!
அருமை இளவலே..
பாராட்டுகள்.

அலை...
31-12-2003, 01:17 AM
அலை....
"குஷி"யான கேள்வி...

இளசுவின் ரவுசு... :wink:

அண்ணா...கலக்கல் கவிதை எங்களையெல்லாம் தூக்கி சாப்பிட்டாச்சு...

இக்பால்
31-12-2003, 03:58 AM
சின்னப் பிரச்னையில்
வாழ்க்கை முழுவதும் பேசாத
அளவு கடந்த பாசம்.

இக்பால்
31-12-2003, 03:58 AM
சுளீர், முரண்!
அருமை இளவலே..
பாராட்டுகள்.

நன்றி அண்ணா.

இளசு
01-01-2004, 12:31 AM
மீண்டும் ஒரு அருமையான முரண்..
பாராட்டுகள் இளவல் இக்பாலுக்கு...

இனி என் புத்தாண்டுச் சிந்தனை..

நல்லதை முதலில் சொல்..

எப்போதும் கசப்பை மட்டும் உமிழ்ந்துவிட்டு
எல்லாரிடமும் எதிர்பார்க்கிறேன்
இனிப்பை

இக்பால்
01-01-2004, 03:14 AM
பாராட்டுக்களுக்கும், புத்தாண்டுச் சிந்தனைக்கும் நன்றி அண்ணா.

அலை...
01-01-2004, 03:21 AM
முரண்...

இனிப்பு வியாதிக்கு
கசப்பு மருந்து...

நிலா
01-01-2004, 05:28 AM
கலக்கிக்கொண்டிருகும் நண்பர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்!
காட்சியை நீங்கள் உள்வாங்கும் விதத்தை வியந்தபடியே .....நான்!

இக்பால்
01-01-2004, 11:13 AM
தொண்டையில் வீக்கம்.
ஊசி போடப்பட்டது
என்னவோ கையிலே.

poo
01-01-2004, 11:27 AM
அய்யய்யய்யய்ய்ய்ய்யோ!!!!!

எங்கே செல்லும் இந்த பாதை?!!

இக்பால்
01-01-2004, 11:30 AM
அய்யய்யய்யய்ய்ய்ய்யோ!!!!!

எங்கே செல்லும் இந்த பாதை?!!

பாக்கள் கொடுங்கள் தம்பி... அப்படியே மாலையில் காலாற கடற்கரைப்
பக்கம் போய் விட்டு வாருங்கள். உடன் அம்மாவையும், பூக்களையும் கூட்டிச்செல்லுங்கள்.

இளசு
04-01-2004, 08:58 PM
அன்பு...

சீக்கிரம் கிளம்புங்க...
அப்புறம்..
ஒரே ஒரு விஷயங்க....

அலை...
04-01-2004, 10:44 PM
இளசு...இது என்ன புது முரணா?..அருமை..!

இளசு
04-01-2004, 10:48 PM
காதலின் முரண் எல்லாம்
கண்டவுடன் அலை வருவது

ம்ம்ம்ம்.
அது அவரின் தற்போதைய நிலைமை...

புரியுது அலை...

அலை...
04-01-2004, 11:00 PM
இளசு..இந்தக் கதையெல்லாம் வேண்டாம்...
நீங்கள் தானே சீக்கிரம் பழைய ட்ராக்கில் வண்டி விடலாம்னு சொன்னிங்க...

அலை...

பார்த்திபன் என்று சொன்னதால் பழி வாங்கும் படலமா?

இளசு
04-01-2004, 11:14 PM
பார்த்திபன்னு சொன்னதுக்கு நன்றில்லே சொல்லணும் அலை...

அதுசரி,
உங்க அலை அலையான காதல் காட்சிகளை
எடுத்து விடுங்களேன்...

இக்பால்
05-01-2004, 03:51 AM
நாசிக்கில் வேலை.
காசில்லை கையில்.

Nanban
05-01-2004, 11:16 AM
இக்பால் புகுந்து விளையாடுகிறார், போலும். எல்லோரும் துண்டைக் காணோம், துணியைக் காணோம்னு ஓட முயற்சிக்கிற மாதிரி இல்ல இருக்குது.... ஆனாலும், முதல் இரு முரண்கள், பளிச்... இக்பாலுக்குப் பாராட்டுகள்..... (கணக்கு வழக்கெல்லாம், அவசரம், அவசரமா முடிக்கிறதா புகார் வந்ததே, கவனிக்காமல் விட்டுவிட்டீர்களே......)

இளசு
05-01-2004, 10:10 PM
நாசிக்கில் வேலை.
காசில்லை கையில்.

அருமை இக்பால்

தண்ணீரில் நின்றுகொண்டு
தாகம் என்பாய்..
தண்ணீரில் நிற்கும்போதே வேர்க்கின்றது...

(வைரமுத்து முரண்களின் நினைவில்....)

Nanban
06-01-2004, 06:23 AM
அமீரக விழா ஒன்றில், கவிஞர் அறிவுமதி சொன்னார் - கவியரங்கக் கவிதைகள் எழுதுவது எப்படி என்று. இனிய முரண்களால் எழுதப்பட்ட கவிதைகள் தான், கேட்கும் புலனுக்கு இன்பமளிக்கும் என்று. அந்த வகையான முரண் பயிற்சி இங்கு இனிதே நடை பெறுகிறது......

இக்பால்
06-01-2004, 09:38 AM
வருகிறேன் என்றார்.
போய்க் கொண்டே.

இக்பால்
06-01-2004, 09:41 AM
இறந்து போனவனை
கடித்தது எது?
நல்ல பாம்பு.

இக்பால்
06-01-2004, 09:43 AM
பிறவியில் ஊமை.
தெரியும் முன்னர்
வைத்த பெயர் திருநாவுக்கரசு.

Nanban
06-01-2004, 10:28 AM
சுபர்ப், இக்பால்........

பிரமாதப்படுத்துறீங்க......

தொடருங்கள்.......

எறும்பூறக் கல்லும் தேயும், சித்திரமும் கைப்பழக்கம்......

இக்பால்
06-01-2004, 10:42 AM
நன்றீங்க நண்பன்.
:)

இக்பால்
06-01-2004, 10:43 AM
காலில் வலி.
மருத்துவரிடம் போனேன்.
இப்பொழுது கையில் வலி.

இக்பால்
06-01-2004, 10:46 AM
தொட்டிக்குள் இறங்கினேன்.
நீர் மட்டமோ ஏறியது.

Nanban
06-01-2004, 11:00 AM
காலில் வலி.
மருத்துவரிடம் போனேன்.
இப்பொழுது கையில் வலி.

இப்பொழுது பையில் வலி......

ம்ம்ம்ம்...... அசத்துங்க இக்பால்.......

poo
06-01-2004, 11:46 AM
இக்பால் அண்ணா...

எப்படீங்க இதெல்லாம்?!!!

வாழ்த்துக்கள்...

இக்பால்
06-01-2004, 03:52 PM
எனக்கு எதுக்குங்க
வேண்டாம் என்றான்
கையை நீட்டிக் கொண்டே.

நிலா
06-01-2004, 04:01 PM
கலக்குறீங்க இக்பால்!தூங்கிக்கிட்டுயிருந்த கவி முழிச்சுட்டாருன்னு நினைக்கிறேன்!பாராட்டுகள்!வாழ்த்துகள்!

Nanban
06-01-2004, 04:16 PM
தானே படைக்க ஆரம்பித்து விட்டதால், இனி அடுத்தவர் பதிப்புகளுக்கு விசிட் செய்வதைக் குறைத்து விடாதீர்கள்.......

இக்பால்
06-01-2004, 04:44 PM
நன்றி நிலாத் தங்கை.

நண்பரே ... அப்படியெல்லாம் இல்லைங்க. நான் பார்வையிடா விட்டால் கூட படைப்பாளிகள் விடமாட்டார்கள். ஏன் எல்லோருக்கும் விமர்சனம் கொடுக்கும் நீங்கள் என் படைப்பிற்கு வரவில்லை என தனிக் கடிதம் எழுதி விடுவார்கள். அவ்வளவு உரிமை. நான் எல்லோருக்கும் பொதுதானே!

-அன்புடன் இக்பால்.

puppy
06-01-2004, 10:05 PM
பேருந்துக்குள்ளே
இடிதாங்கிகள்
பெண்கள்

இளசு
06-01-2004, 10:07 PM
இரண்டு காலில்
நேராய் நின்றபடி
பன்றிகள்

இக்பால்
07-01-2004, 03:24 AM
அணுக்கரு ஆராய்ச்சி.
புகுந்து விளையாடுங்கள்...
என வாழ்த்துக்கள்.

இக்பால்
08-01-2004, 06:09 AM
அதிக நேரம் ...
ஓடிய அவனை ....
கடைசி என்றார்கள்.

Nanban
08-01-2004, 06:14 AM
பேருந்துக்குள்ளே
இடிதாங்கிகள்
பெண்கள்

அருமை......

பெண்களின் இடர்பாடுகளை இத்தனை சுருக்கமாக, கிண்டலாக வேறு எவராலும் சொல்ல முடியாது.

இந்த வார்த்தைகளில் உண்மை இருந்தது - அதனால் அருமை.
ஆனால், இதே காட்சிகளை தான் சங்கர் தன் பாய்ஸ் படத்தில் வைத்திருந்தார். ஆனால், அதில் உண்மை இல்லை. கவர்ச்சியும், பாலுணர்வும் தூண்டப்படும் விதத்தில் தான் வைக்கப்பட்டிருந்தது. பையன்களையும் கேவலப்படுத்தி, பெண்களுக்கும் வக்காலத்து வாங்காமல், வைக்கப்பட்ட காட்சிகள் அது. அதனால் தான் மக்கள் சங்கரை ஒருவழி பண்ணிவிட்டார்கள் - விமர்சனங்களால்.

அலை...
08-01-2004, 06:15 AM
இக்பால் அண்ணன் வீடு கட்டி விளையாடுகிறார்..

கலக்குங்க..

அன்பு

அலை...

Nanban
08-01-2004, 06:18 AM
அதிகநேரம்
ஓடிய அவனை
கடைசி என்றார்கள்

இது முரணா இல்லை நகைச்சுவையா? நன்றாக இருக்கிறது.

ஆனால், இக்பால், இதிலேயே முடங்கிப் போய்விடாதீர்கள். மேலும் கவிதைகளை - எல்லா தளத்திலும் நின்று அனுபைக்க வேண்டிய கவிதைகளை எழுதுங்கள் - வாழ்த்துகள்.......

நேராய் நின்றபடி
இரண்டு கால்களில்
பன்றிகள்......

இளசு புரியவில்லை. மன்னிக்கவும்.....

இளசு
09-01-2004, 09:44 PM
நண்பன்

உரசும் ஜந்துக்கள்...
பப்பி கவிதை ஒட்டியது..
அவை நாலுகால் இல்லாமல்
நேராய் நிற்பதே முரண்..

இளசு
09-01-2004, 09:45 PM
எனக்குப் பிடிக்காது...
அப்ப வேண்டாம்...
இல்லை உனக்குப் பிடிக்குதே, வேணும்..

Nanban
10-01-2004, 05:58 AM
நன்றி இளசு.........

உங்கள் விளக்கத்திற்குப் பின் விளங்கியது...... அருமையான சாட்டையடி..........

பப்பியின் கவிதையை கோட் பண்ணி அதன் தொடர்ச்சியாக இருந்திருந்தால், நன்றாகப் புரிந்திருக்கும்.....

இளசு
18-01-2004, 08:39 PM
சப்தம் மெல்ல மெல்ல அதிகமாகி
என்னையே விழுங்கியபடி...
உன் மௌனம்..

இக்பால்
19-01-2004, 04:39 AM
உண்மை...
உண்மையைத் தவிர வேறெதுவுமில்லை.
உறுதிமொழி மட்டும் உண்மை.

இளசு
19-01-2004, 11:25 PM
பாராட்டுகள் இளவலே.. நெத்தியடி முரண்..

காரைக்குடியான்
20-01-2004, 03:54 AM
நாற்சந்தியின் நெரிசலில்
எல்லோரும் இந்நாட்டு மன்னர்
போக்குவரத்து காவலர் வரும் வரை.

இக்பால்
20-01-2004, 04:26 AM
எதிரியே...கவலை வேண்டாம்.
உன்னைப் பற்றிக் கவலைப்பட...
நான் இருக்கிறேன்.

இளசு
08-02-2004, 02:10 PM
மந்திரித்த மரத்தில் பழம்
பறித்தவன் ரத்தம் கக்குவானாம்
சிரித்தன அணிலும் கிளியும்...

பரஞ்சோதி
08-02-2004, 07:25 PM
எங்களை தேர்ந்தெடுங்கள்
தருகிறோம் நல்லாட்சி
என்றார் எதிர்கட்சி தலைவர்.

இளசு
08-02-2004, 10:06 PM
காலத்துக்கேற்ற (முரண்)காட்சி!
காலந்தோறும் மாறாக் காட்சி..

பாராட்டுகள் தம்பி பரஞ்சோதிக்கு.....

இக்பால்
09-02-2004, 03:37 AM
நலமுடன் உள்ளவர்.
மனசு சரியில்லை என்றார்.
உடலெங்கும் காயம்.
நலம் என்றார்.

அலை...
09-02-2004, 04:34 AM
பலே மீண்டும் களை கட்டுகிறது..மு.கா.பா.

தொடருங்கள் நண்பர்களே...

இளசு
09-02-2004, 08:34 PM
பாராட்டுகள் இளவல் இக்பால்..

நன்றி அலை.. (அப்படியே முத்தக்கவிதை பக்கமும் எட்டிப்பாருங்க)

இன்றைய முரண்பா...

அழிவாயுதம் என் கையில்...
ஆனாலும் வளர்ச்சி
அழிப்பது களைகளை மட்டும் !

இக்பால்
10-02-2004, 03:35 AM
வெட்டும் ஆயுதம் தோட்டக்காரன் கையில்...
ஆனாலும் வெட்டுவது களைகளை மட்டும் அல்ல.
புது வளர்ச்சியையும் கூட!!!
-அன்புடன் இக்பால்.

அலை...
10-02-2004, 03:44 AM
அட என்ன ஒரே வெட்டு குத்தா இருக்கே..

இக்பால்
10-02-2004, 03:56 AM
வெட்டுவது தம்பிக்கு இனிப்பைக் கொடுக்க.
குத்துவது தம்பிக்கு உணவைக் கொடுக்க.

நலமா அலைத் தம்பி?-அன்புடன் அண்ணா.

பரஞ்சோதி
10-02-2004, 07:58 PM
40 வயதில் மரணம்
அவர் எழுதியதோ
100 வயது வரை வாழ்வது எப்படி?

இளசு
10-02-2004, 08:10 PM
நூல் எழுதியவரிடம்
முரண் எழுதியது.. விதி!

பாராட்டுகள் இளவல் பரஞ்சோதிக்கு...

தொடரட்டும் முரண்களின் ஊர்வலம்..

பரஞ்சோதி
10-02-2004, 08:18 PM
நூல் எழுதியவரிடம்
முரண் எழுதியது.. விதி!
பாராட்டுகள் இளவல் பரஞ்சோதிக்கு...

தொடரட்டும் முரண்களின் ஊர்வலம்..

நன்றி இளசு அண்ணா!.

எல்லாம் பூவோடு சேர்ந்த நாரின் மணம் மாதிரி,
இளசு அண்ணலோடு சேர்ந்ததன் பலன்.

இளசு
10-02-2004, 08:22 PM
யாரும் நாரல்ல
நாம் வேறு வேறல்ல..

ஒருவருக்கொருவர்
வேராய், நீராய்
மாறி மாறி...

சேர்ந்து வளர்வோம் இளவலே..

பரஞ்சோதி
11-02-2004, 05:17 PM
அம்மா! தாயே பிச்சை போடும்மா,
போட்டபின் கேட்டேன்,
உன் பெயர் என்னப்பா?
கோடீஸ்வரன்

இக்பால்
12-02-2004, 05:14 AM
பாம்பைக் கொன்றவரிடம்
நல்லவேளை
காப்பாற்றினீர்கள் என்றார்கள்.

karikaalan
12-02-2004, 08:43 AM
வருமான அதிகாரி முழங்கினார்
வரி ஏய்க்காதீர்
வீட்டிலே CBI சோதனை
கண்டது கருப்புப் பணம்.

===கரிகாலன்

karikaalan
12-02-2004, 08:44 AM
நம்ம பங்குக்கு ஒண்ணு எழுதிட்டேன்.

===கரிகாலன்

இக்பால்
12-02-2004, 10:03 AM
கரிகாலன் அண்ணா அருமை.
அறிவுரை அடுத்தவர்களுக்குத்தானே!!!

பரஞ்சோதி
12-02-2004, 02:42 PM
இக்பால் அண்ணா, கரிகாலன் அண்ணா அருமை, தொடருங்கள்.

இளசு
12-02-2004, 09:17 PM
நம்ம பங்குக்கு ஒண்ணு எழுதிட்டேன்.

===கரிகாலன்

எங்களின் முதல்வர் தாங்கள் அண்ணலே
இந்தப்பங்கு போதாது
இன்னும் அதிகம் தாருங்கள் அண்ணலே

kavitha
13-02-2004, 05:32 AM
எல்லோரும் அசத்தியிருக்கீங்க..
இதோ என் பங்கு,

ஏற்றுக்கொண்டால் முரண்காட்சிப்பா..

குடைகளுக்குள் மழை
கவிழ்ந்த கண்களுக்குள்
கண்ணீர்

*******************
நெற்றியில் காயம்
ரத்தத்திற்குத் தெரியாது
அவள் விதவை என்று

******************

பரஞ்சோதி
13-02-2004, 07:18 AM
கவிதாவும் வந்தாச்சா, வாருங்கள், தாருங்கள். அருமையாக இருக்கிறது.

பரஞ்சோதி
13-02-2004, 07:19 AM
மக்கட்தொகை 100 கோடி
நாட்டின் முதல்குடிமகன்
பிரதமமந்திரி
திருமணம் ஆகாதவர்கள்.

இளசு
15-02-2004, 07:36 PM
தங்கை கவிதா, தம்பி பரஞ்சோதி

அருமை அருமை.என் மனமார்ந்த பாராட்டுகள்..

இக்பால்
16-02-2004, 04:17 AM
கவிதா தங்கை... பரஞ்சோதி தம்பி... நல்லாத்தான் யோசிக்கிறீங்க.

பாராட்டுக்கள். தொடருங்கள். -அன்புடன் அண்ணா.

இக்பால்
16-02-2004, 04:18 AM
விழுந்ததில்...
பயங்கர அடி.
வலிக்குதா என்றார்கள்.

இக்பால்
16-02-2004, 04:21 AM
வேண்டாம் எனக் கதறியும்
மரண தண்டனை.
கொடுத்தவர்கள் கேட்ட கேள்வி.
"கடைசி ஆசை என்ன?"

karikaalan
16-02-2004, 07:13 AM
இக்பால்ஜி

அருமையான வரிகள். வாழ்த்துக்கள்.

===கரிகாலன்

இக்பால்
16-02-2004, 04:33 PM
நன்றி அண்ணா. :)

பரஞ்சோதி
16-02-2004, 06:46 PM
இக்பால் அண்ணா,

அருமையாக உள்ளது உங்கள் முரண்பாக்கள்.

இதே என்னுடைய ஒன்று,

மேடையில் ஜீவகாருண்யம் பேச்சு
ஓங்கி ஒரு அடி
கையில் ரத்தம் குடித்த
கொசு காலி.

இளசு
16-02-2004, 09:41 PM
இளவல்கள் இக்பால், பரஞ்சோதி

இருவரும் தந்த முரண்பாக்கள் அருமை..
பாராட்டுகள்..

இளசு
16-02-2004, 09:42 PM
எறும்பும் தேளும் இருந்தால் என்ன?
எடுத்துப் போட்டுவிட்டு இன்னும் குடிக்கிறேன்..
இனிக்கிறது வாழ்க்கைக் கள்!

இக்பால்
17-02-2004, 04:59 AM
வாயினால் கூறிய வார்த்தைகளை...
கேட்ட காதுகள்தானே வலிக்க வேண்டும்.
இதயமே நீ வலிப்பது ஏன்?

இளசு
17-02-2004, 11:02 PM
நல்ல முரண்தான்..

இதயம் காதைவிட மென்மையானது..

பாராட்டுகள் இளவலுக்கு!

இக்பால்
18-02-2004, 03:31 AM
சரிதான் இளசு அண்ணா. :)

பரஞ்சோதி
18-02-2004, 01:31 PM
நான் கிள்ளை அவளுக்கு,
முதல் பிள்ளை
பிறக்கும் வரை.
இப்போ நானோ
தீராத தொல்லை.

இளசு
20-02-2004, 10:57 PM
ம்ம்ம்ம் பரஞ்சோதி

அனுபவம் பேசுகிறதா?

நல்ல முரண்பா..பாராட்டுகள்.

இளசு
20-02-2004, 10:58 PM
சொந்த வீடு வாங்கி
குடும்பத்துடன் ஒன்றாய் இருக்க
தனியாய் புலம் பெயர்ந்து.........

பரஞ்சோதி
20-02-2004, 11:33 PM
ம்ம்ம்ம் பரஞ்சோதி
அனுபவம் பேசுகிறதா?
நல்ல முரண்பா..பாராட்டுகள்.

இது அனுபவம் இல்லை அண்ணா,

நான் எப்பொழுதும் எதிர்காலத்தை நிகழ்காலத்திற்கு கொண்டு வருபவன்.

அதில் உதிர்த்தது அந்த முரண்பா.

உங்கள் பாராட்டுக்கு நன்றி அண்ணா.

kavitha
21-02-2004, 10:42 AM
இளசு அண்ணா,
'வாழ்க்கைக் கள்' மட்டுமல்ல; 'வாழ்க்கையை கல்!' என்கிறது இக்கவிதை
அனுபவப்பூர்வ உண்மை.அருமையான கவிதை.

இதயத்தில் இடி
கண்ணில் மழை!
(இதயம் படத்தில்)

-----------------

வலிக்கிறது
ஆனாலும்
பூத்திருக்கிறேன்.
தேன்உறிஞ்சும்
வண்டிடம் பூ!

karikaalan
21-02-2004, 12:19 PM
வாயினால் கூறிய வார்த்தைகளை...
கேட்ட காதுகள்தானே வலிக்க வேண்டும்.
இதயமே நீ வலிப்பது ஏன்?

வாரியார் சுவாமிகள் சொல்வார்: "பேசிக்கினே இருந்தா வாய் வலிக்கும்; பார்த்துக்கினே இருந்தா கண் வலிக்கும். ஆனா, கேட்டுக்கினே இருந்தா காது வலிக்காது. ... காது வலிக் காது!"

இக்பால்ஜி, நன்றே நிங்கள் கவிதை.

===கரிகாலன்

karikaalan
21-02-2004, 12:23 PM
எறும்பும் தேளும் இருந்தால் என்ன?
எடுத்துப் போட்டுவிட்டு இன்னும் குடிக்கிறேன்..
இனிக்கிறது வாழ்க்கைக் கள்!

கல்லும் முள்ளும் நிரம்பியதே இந்த வாழ்க்கை என்கிற கள். குடிக்கக் குடிக்க இன்பம் அதிகரிக்கும் அல்லவா! வாழ்த்துக்கள் இளவல்ஜி.

===கரிகாலன்

karikaalan
21-02-2004, 12:26 PM
நான் கிள்ளை அவளுக்கு,
முதல் பிள்ளை
பிறக்கும் வரை.
இப்போ நானோ
தீராத தொல்லை.

பரஞ்சோதிஜி

தொல்லையாக இருக்காதீர், தொலைவில் விட்டுவிடுவாள்!

===கரிகாலன்

karikaalan
21-02-2004, 12:31 PM
வலிக்கிறது
ஆனாலும்
பூத்திருக்கிறேன்.
தேன்உறிஞ்சும்
வண்டிடம் பூ!

பூவுக்குத் தெரியுமே வண்டின் பயன்!

கவிதாஜி, வாழ்த்துக்கள்.

===கரிகாலன்

இக்பால்
21-02-2004, 01:37 PM
தொலைவோ எட்டாயிரம் மைல்.
நண்பர் கேட்டதோ...
அடிக்கடி பார்க்க முடிவதில்லையே என்பது.

பரஞ்சோதி
21-02-2004, 07:03 PM
இக்பால் அண்ணா, முரண்பாக்களில் தனி இராஜ்ஜியமே நடத்தி வருகிறீர்கள். வாழ்த்துக்கள்.

kavitha
23-02-2004, 02:36 AM
காய்த்து விட்டன அவளின்
கனிந்த கைகள்
குடி தண்ணீர் இறைத்து!

இக்பால்
23-02-2004, 07:51 AM
முள் குத்தியதாம்.
நீ அதை மிதித்ததை
ஏன் மறந்து விட்டாய்?

பரஞ்சோதி
23-02-2004, 06:56 PM
காய்த்து விட்டன அவளின்
கனிந்த கைகள்
குடி தண்ணீர் இறைத்து!

அருமை சகோதரி, பாராட்டுக்கள்.

இளசு
23-02-2004, 11:00 PM
இளவல்கள் இக்பால், பரஞ்சோதி , கவிதா

நல்ல கவிதைகள். பாராட்டுகள்..தொடருங்கள்..

இளசு
23-02-2004, 11:02 PM
ஒரு பெண்ணின் டைரிக்குறிப்பு:

என் மௌனங்கள்
அவை அர்த்தம் பொதிந்தவை
உன் மௌனங்கள்
அவை அலட்சியத்தில் பிறந்தவை

இளசு
24-02-2004, 11:01 PM
கணக்கு

பாவம் ஏற ஏற
காணிக்கையும்...

பாரதி
27-02-2004, 12:06 AM
நல்ல பாக்கள் அண்ணா...
ஒரு சந்தேகம் - கணக்கு முரண்பாதானா..?

இக்பால்
27-02-2004, 01:12 PM
நம்மிடம் தவறுகள் குறையும்பொழுது
மதிப்பு மட்டும் ஏனோ கூடுகிறது.:)

இளசு
28-02-2004, 05:09 PM
பாரதி...
பக்தி உண்மை என்றால் அது ஏற ஏற பாவம் குறையும்.. அது நேர்க்கணக்கு

இங்கே சொன்னது முரண் கணக்கு

இளவல் இக்பால்
நல்லதொரு முரண்பா..பாராட்டுகள்...

இளசு
28-02-2004, 05:11 PM
செம்மையில்

கோடி கோடியாய் மனதிலேயே
கொட்டி முடித்ததாலோ என்னவோ
நேரில் பேச ஒன்றுமில்லை?

இளசு
09-03-2004, 07:14 PM
நெனப்புதான் பொழப்ப..

உர்ர்ர்ர்ர்..
சிங்கமாய் கர்ஜித்தேன் - என் நினைப்பு

லொள்..
ஏன் நாயாய் குரைக்கிறான் - கேட்டவர் நினைப்பு

kavitha
10-03-2004, 02:34 AM
நான்: ஒன்றுமே பேசவில்லை
அவன்: மௌன மொழி பேசினாள்
(உல்டா?!?)

karikaalan
10-03-2004, 07:02 AM
இளவல்ஜி

காட்சிகள்தான் பார்வைக்குப் பார்வை மாறும் என்று அறிந்திருக்கிறேன்.
பேச்சும் கூடவா! இருக்கலாம்.

===கரிகாலன்

இக்பால்
10-03-2004, 10:52 AM
உன்னைப் பார்க்கவில்லை என்பதற்காக...
என்னைப் பார்க்காமல் இருந்துவிடாதே. :)

karikaalan
10-03-2004, 12:57 PM
இக்பால்ஜி

நிச்சயமாக!

===கரிகாலன்

இளசு
10-03-2004, 06:52 PM
உன்னைப் பார்க்கவில்லை என்பதற்காக...
என்னைப் பார்க்காமல் இருந்துவிடாதே.

நல்ல முரண் - இளவல் இக்பாலுக்கு என் பாராட்டுகள்..

kavitha
11-03-2004, 03:26 AM
நட்பில் அப்படி நடக்க வாய்ப்பே இல்லை அண்ணா.
உறவுகளிடம் கூட நாம் முகம் தூக்கிக்கொள்ளக்கூடும்.
நட்பு என்றால் 'அவனுக்கு என்ன கஷ்டமோ' என்று தான் நினைப்போம்.
நல்ல முரண் பா!

இளசு
13-03-2004, 07:50 PM
மன்னராட்சி முடிந்து
மக்களாட்சி மலர்ந்த பிறகும்
இந்தியாவில் இன்னும் ஒரு ராஜா
இளையராஜா

(நன்றி - இயக்குநர் பாலா; இவன் தான் பாலா...தொடர்
விகடன்)

மன்மதன்
14-03-2004, 09:23 AM
காட்டில் உள்ள மான்
புலியின் கால் இசையறியும்
நாட்டில் உள்ள மானின்
இசை உலகறியும்..
ரஹ்மான்..

(யாரோ - நான் எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்)

இளசு
16-03-2004, 10:39 PM
புறநகரில் புது கான்கிரீட் தோட்டம்
கிராம வயலில் சிவப்பு நர்சரி

செங்கல் சூளை

பாரதி
17-03-2004, 12:32 AM
ரொம்ப நல்லா இருக்கு அண்ணா... ஆனால் அடிக்கடி முரண்பா எதுன்னு குழப்பம் வருது.

karikaalan
17-03-2004, 11:09 AM
இளவல்ஜி

கிராமங்களில் நல்ல விளைநிலங்களில் காளவாய் போடுகிறார்கள் என்றால், அவர்கள் இரண்டடி அளவுக்கு மண்ணை அப்புறப்படுத்துகிறார்கள் செங்கற்களுக்காக. இவ்வாறு செய்யும்போது
நிலத்தில் ஆண்டுக்கணக்காகப் போடப்பட்ட, தேவைக்கதிகமான பூச்சிக்கொல்லிகள், இரசாயனங்கள் வெளியேற்றப்படுகின்றன.

பிறகு கம்போஸ்ட் மண்ணாலும், குளத்தடி சேறாலும் வயற்காட்டை நிரப்பி அடுத்த போகத்துக்கு நிலத்தை தயார் செய்கிறார்கள்.

ஆகவே ஒருவகையில், "கிராம வயலில் சிவப்பு நர்சரி" நன்மையே பயக்கிறது எனலாம்.

===கரிகாலன்

இளசு
22-03-2004, 10:12 PM
நன்றி பாரதிக்கும், அண்ணலுக்கும்.. (புதிதாய்க் கற்றேன் அண்ணலே)

பாரதி..முரண் எல்லாம் ஒரு குன்சா..
இது எப்படின்னு சொல்லவும்...

ஐஸ் திம்பியா..ஐஸ் திம்பியா
அடிச்ச அம்மா முதுகில் அடி
ஆலங்கட்டி மழை

பாரதி
23-03-2004, 12:34 AM
அடித்தாலும்
ஆலங்கட்டி மழையில்
குடையாய் அம்மா...!

இளசு
25-03-2004, 10:23 PM
அருமை ரிவிட் முரண் பாரதி...

அண்ணன் டாப்பிக்கலாய் ஒண்ணு சொல்லட்டுமா...

விளம்பரத்தில் பெரிய விளம்பரமே
என்னை விளம்பரப்படுத்தாதீங்கன்னு
விளம்பரதுதான்... :oops:

பாரதி
26-03-2004, 12:21 AM
:) :icon_b::icon_rollout:

இளசு
28-03-2004, 08:16 PM
தீப்பந்தம் கொண்டு - பல
தேனீக்கள் கொன்ற கை..
நக்கினால் இனிக்கிறது.

இக்பால்
29-03-2004, 02:31 PM
கடவுளைக்
காப்பாற்றும்
மக்கள்!

kavitha
30-03-2004, 03:54 AM
அட, அட!
இளசு அண்ணா, இக்பால் அண்ணா
தூள்!தூள்!!