PDA

View Full Version : முரண் காட்சிப் பாக்கள்...



Pages : 1 [2]

இளசு
13-04-2004, 09:55 PM
வெல்லக்கட்டி உரசி
பாறை உருகிய
விநோத இதழியல்

மன்மதன்
14-04-2004, 11:26 AM
அட, அட!
இளசு அண்ணா, இக்பால் அண்ணா
தூள்!தூள்!!

அருமையான முரண்காட்சி கவி.... :D

kavitha
14-04-2004, 11:37 AM
ம்ஹ¥ம் மன்மதரே! உமக்கு குறும்பு ஜாஸ்தி! :D

இளசு
14-04-2004, 11:22 PM
மொட்டைக் கிளை
நிழல் தேடும் காகம் -
இலையுதிர்காலம்

kavitha
15-04-2004, 03:44 AM
வேருக்கு நிழல் தந்தது!
மண்மேல் வேர்விட்ட
மொட்டை மரம்!

இது எப்படி அண்ணா? :)

இக்பால்
15-04-2004, 08:02 AM
இலை,பூ,காய்,கனி
எதுவுமில்லை. இருந்தாலும்-
மரம் என்றார்கள்.

மன்மதன்
15-04-2004, 10:01 AM
மரத்தை வெட்ட உதவும்
மரம்..
கோடாரியின் முனையில்

பரஞ்சோதி
15-04-2004, 06:06 PM
மரத்தை வைத்தே இத்தனை முரண்பாக்களா?

கலக்குங்கள் கவிகளே!

இளசு
25-04-2004, 10:18 AM
கவிதா, இக்பால், மன்மதன் --- மும்முரணால் பாட்டரண்... அருமை..

இனி அடுத்த முரண் இதோ...

ஈரம் பட்டே உருகியது
இந்த அதிசய மெழுகு...

முத்தம்..

பரஞ்சோதி
25-04-2004, 04:49 PM
குழந்தையிடம் முத்தம்
கேட்டால் மாமன்,
குமரியிடம் முத்தம்
கேட்டால் காமன்.
என்னப்பா உலகம் இது.

இக்பால்
26-04-2004, 05:58 AM
ஈரம் என நினைத்து...
உரசிய தங்கம்...
உருகிய பின் உணர்ந்தது
தீண்டியது திராவகம்.

kavitha
30-04-2004, 07:48 AM
இளசு, இக்பால் அண்ணாக்களின் வரிசையில் பரம்ஸ் அண்ணாவும்... அசத்துங்கள்! அசத்துங்கள்!!

kavitha
30-04-2004, 07:51 AM
¨Á ¸º¢ó¾ ®Ãò¨¾
¯È¢ïº¢ì ¦¸¡ñ¼Ð
¸¡¸¢¾õ!
þ¾ú¸Ç¢ø ¦¾¡¼÷¸¢ÈÐ
þó¾ §ÀÉ¡ Ôò¾*¸û

இளசு
05-05-2004, 10:33 PM
பரஞ்சோதி, இக்பால், கவி-தா.... பாராட்டுகள்...
இதைத் தொடருங்களேன்...

தாகத்துக்குக் குடிப்பதில் செயற்கை
பாத்திரம் கழுவுவதற்கு இயற்கை -
எலுமிச்சை வாசம்.

இக்பால்
06-05-2004, 04:57 AM
வரும் நேரமோ இருள்.
வந்து கொடுப்பதோ ஒளி -
நிலவு. :)

பரஞ்சோதி
06-05-2004, 05:06 AM
வாழ்க்கை வாழ ஆசை
சேர்க்கிறோம் பணத்தை,
பாதுகாக்க ஆசை
இழக்கிறோம் வாழ்க்கை.

சேரன்கயல்
06-05-2004, 05:10 AM
இக்பால் அண்ணா, இனிய இளசு, நண்பர் பரம்ஸ், கவிதா...
முரண்பாக்களில் அசத்துகிறீர்கள்...

சேரன்கயல்
06-05-2004, 05:10 AM
குழந்தையிடம் முத்தம்
கேட்டால் மாமன்,
குமரியிடம் முத்தம்
கேட்டால் காமன்.
என்னப்பா உலகம் இது.

அதானே...

என்னடா உலகம் இது... :lachen001:

பரஞ்சோதி
06-05-2004, 05:13 AM
குழந்தையிடம் முத்தம்
கேட்டால் மாமன்,
குமரியிடம் முத்தம்
கேட்டால் காமன்.
என்னப்பா உலகம் இது.
அதானே...
என்னடா உலகம் இது...:lachen001:
நண்பா சொந்தக்கதை, சோகக்கதை...:traurig001:

சேரன்கயல்
06-05-2004, 05:17 AM
ஹ¤ம்ம்ம்...
சேரனின் ஆட்டோகிராப் ஏன் ஹிட்டாச்சுன்னு இப்போ புரியுது... :)
(பின்னே பலருக்கும் இதுபோல் அனுபவங்கள் இருக்கும்போது ஹிட் ஆகாதா?)

இக்பால்
06-05-2004, 05:26 AM
அலுவலகத் தோழியிடம் சிறுசிரிப்பு.
அணுகிய மனைவியிடம் கடுகடுப்பு -
இருவர் சொன்னதும் ஒன்றே.

பரஞ்சோதி
06-05-2004, 05:40 AM
ஹ¤ம்ம்ம்...
சேரனின் ஆட்டோகிராப் ஏன் ஹிட்டாச்சுன்னு இப்போ புரியுது...:)
(பின்னே பலருக்கும் இதுபோல் அனுபவங்கள் இருக்கும்போது ஹிட் ஆகாதா?)

ஆட்டோகிராப் பார்த்து என் மனைவி சொன்னது உங்கள் கதையை சினிமாவா எடுக்க முடியாது, ஒரு மெகா தொடராகத் எடுக்க முடியும் என்று. எல்லாத்தையும் உளறி/சொல்லி விட்டதன் பலனை இப்போ அனுபவிக்கிறேன்.

பரஞ்சோதி
06-05-2004, 05:42 AM
அலுவலகத் தோழியிடம் சிறுசிரிப்பு.
அணுகிய மனைவியிடம் கடுகடுப்பு -
இருவர் சொன்னதும் ஒன்றே.
இருவரும் என்ன சொன்னார்கள், கணக்கு பண்ண/செய்ய தெரியவில்லை என்றா? :lachen001: :aetsch013:

சேரன்கயல்
06-05-2004, 05:54 AM
ஹ¤ம்ம்ம்...
சேரனின் ஆட்டோகிராப் ஏன் ஹிட்டாச்சுன்னு இப்போ புரியுது... :lol:
(பின்னே பலருக்கும் இதுபோல் அனுபவங்கள் இருக்கும்போது ஹிட் ஆகாதா?)
ஆட்டோகிராப் பார்த்து என் மனைவி சொன்னது உங்கள் கதையை சினிமாவா எடுக்க முடியாது, ஒரு மெகா தொடராகத் எடுக்க முடியும் என்று. எல்லாத்தையும் உளறி/சொல்லி விட்டதன் பலனை இப்போ அனுபவிக்கிறேன்.

அதே கதைதான் இங்கேயும்...
போங்க பரம்ஸ்...நல்லவனா இருந்தாலே இப்படித்தான்... :)

இக்பால்
06-05-2004, 05:56 AM
¸¡À¢ §À¡¼î ¦º¡ýÉ¡÷¸û. (Ó¾ø ´ýÚ-COPY,Á¨ÉÅ¢-COFFEE):)

பரஞ்சோதி
06-05-2004, 11:20 AM
காபி போடச் சொன்னார்கள். (முதல் ஒன்று-COPY,மனைவி-COFFEE) :)

முரண்பாவில் சிலேடையா? தூள் அண்ணா..

இக்பால்
06-05-2004, 02:42 PM
þÄźõ ±ýÈÐõ ¯û§Ç §À¡ö
þø¨Ä ±ýÈÐõ ¦ÅÇ¢§Â ÅóÐ-
±øÄ¡õ À½õ ¦ºöÔõ §Å¨Ä.

kavitha
19-05-2004, 04:22 AM
எதை இலவசம் என்கிறீர்? பணம் செய்யும் வேலை என்றால்? ஒன்றும் புரியவில்லையே அண்ணா

இக்பால்
19-05-2004, 04:42 AM
தங்கை.... அங்கே என்னவோ இலவசமாக தருகிறார்கள் என நினைத்து
உள்ளே போய் பார்த்தால் அப்படி எல்லாம் இல்லை என அறிந்து அதே வேகத்தில் வெளி வரும் கதையைத்தான் அப்படி சொன்னேன். :)

kavitha
20-05-2004, 07:07 AM
மீண்டும் ஒரு முரண்காட்சிப்பா வா? விளக்கத்திற்கு பிறகு ரசிக்க முடிந்தது அண்ணா :). நன்றி!
(பரம்ஸ் அண்ணாவிடம் மேற்கொண்ட உரையாடலின் தொடர்ச்சி என்று நினைத்து விட்டேன்.. இனி பாக்களை நிறங்களிட்டு தாருங்கள்!)

இக்பால்
20-05-2004, 09:13 AM
அய்யய்யோ...அது முரண்காட்சிப்பா மாதிரியே தெரியலையா தங்கையே. நிறைய வார்த்தைகள் எழுதி விட்டேன் என நினைக்கிறேன்.:)

kavitha
20-05-2004, 10:09 AM
அடடா! அப்படி இல்லை அண்ணா! நான் தான் ரொம்ப நாள் கழித்து பார்த்ததால் வரிசையாக படித்து வந்ததில் தவறாக புரிந்து கொண்டேன்..
பா நன்றாகத்தான் உள்ளது


இலவசம் என்றதும் உள்ளே போய்
இல்லை என்றதும் வெளியே வந்து-
எல்லாம் பணம் செய்யும் வேலை.

பரஞ்சோதி
20-05-2004, 10:12 AM
அடடா! அப்படி இல்லை அண்ணா! நான் தான் ரொம்ப நாள் கழித்து பார்த்ததால் வரிசையாக படித்து வந்ததில் தவறாக புரிந்து கொண்டேன்..
பா நன்றாகத்தான் உள்ளது


இலவசம் என்றதும் உள்ளே போய்
இல்லை என்றதும் வெளியே வந்து-
எல்லாம் பணம் செய்யும் வேலை.

உள்ளொன்று, புறமொன்று பேசுதல் கவிஞருக்கு அழகோ?

பரஞ்சோதி
20-05-2004, 10:13 AM
அடடா! அப்படி இல்லை அண்ணா! நான் தான் ரொம்ப நாள் கழித்து பார்த்ததால் வரிசையாக படித்து வந்ததில் தவறாக புரிந்து கொண்டேன்..
பா நன்றாகத்தான் உள்ளது


இலவசம் என்றதும் உள்ளே போய்
இல்லை என்றதும் வெளியே வந்து-
எல்லாம் பணம் செய்யும் வேலை.

உள்ளொன்று, புறமொன்று பேசுதல் கவிஞருக்கு அழகோ?

kavitha
20-05-2004, 11:33 AM
இக்பால் அண்ணா, இதையெல்லாம் நம்பாதீர்கள்...
பரம்ஸ் அண்ணா, நீங்கள் அரசியலுக்கு போகலாம்... ஆனால் இங்கே உங்கள் பருப்பு வேகாது!
(இதுக்குத் தான் அந்த கோ.மூ அண்ணாவோடு அதிகம் பேசாதீர்கள் என்று அத்தை சொன்னார்கள்)

இக்பால்
20-05-2004, 11:50 AM
பரஞ்சோதி தம்பி. :!:

இளசு
02-06-2004, 08:05 PM
காப்பாற்றி பறக்கவிட்ட பூச்சி
நேரே போனது
சிலந்திவலை நோக்கி

kavitha
03-06-2004, 03:51 AM
(உங்களைத் தொடர்ந்து...)

விட்ட கிளி
கூண்டிற்குள் போனது
ஜோசியம் சொல்ல!

செந்தில்
03-06-2004, 03:56 AM
இந்தாப்பா
கல்லாவப் பாத்துக்க
அவசரமாய்த்
தெருவில் இறங்கினார்
ஆரியபவன் முதலாளி
சாப்பிடப்போக!!!

பரஞ்சோதி
03-06-2004, 04:44 AM
பலான இடத்து பெண்ணை
காப்பாற்றி அழைத்து
சென்றார் இன்ஸ்பெக்டர்
தன் வப்பாட்டியாக்கி.

(மக்கா, நான் சும்மா, முரண்பாட்டுக்கு என்று சொன்னது, தவறு இருந்தால் மன்னிக்கவும்)...

mania
03-06-2004, 05:30 AM
இந்தாப்பா
கல்லாவப் பாத்துக்க
அவசரமாய்த்
தெருவில் இறங்கினார்
ஆரியபவன் முதலாளி
சாப்பிடப்போக!!!

:) :)அவர் ஏதாவது சூடான பவனை தேடி போயிருப்பார்..... :lachen001:
அன்புடன்
மணியா

mania
03-06-2004, 05:32 AM
பலான இடத்து பெண்ணை
காப்பாற்றி அழைத்து
சென்றார் இன்ஸ்பெக்டர்
தன் வப்பாட்டியாக்கி.

(மக்கா, நான் சும்மா, முரண்பாட்டுக்கு என்று சொன்னது, தவறு இருந்தால் மன்னிக்கவும்)...

பரம்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்............ :mini023::mini023:

அன்புடன்
மணியா

mythili
03-06-2004, 05:37 AM
இப்படிக் கூட கவிதை எழுதலாமோ என்று வியக்கிறேன். பாராட்டுக்கள்.

தொடருங்கள்.

அன்புடன்,
மைதிலி

செந்தில்
03-06-2004, 05:44 AM
இப்படிக்கூட
கவிதை
எழுதலாம்
மைதிலி!

பரஞ்சோதி
03-06-2004, 05:49 AM
இப்படிக் கூட கவிதை எழுதலாமோ என்று வியக்கிறேன். பாராட்டுக்கள்.

தொடருங்கள்.

அன்புடன்,
மைதிலி

கவி சகோதரி
மைதிலி கேட்கிறார்
முரண்பாட்டு கவி
எழுதுவது எப்படி ?

(இப்படியும் முரன்பாடு எழுதலாம் மைதிலி சகோதரி :).

இளசு
03-06-2004, 09:39 PM
ஆர்வமாய் பங்களிக்கும் நண்பர்கள் அனைவருக்கும்.. பாராட்டும் நன்றியும்..

-----------------------------------------------------
என் கல்லறையில் வேண்டும்
என்றும் வாடாத -
பிளாஸ்டிக் பூக்கள்

kavitha
04-06-2004, 04:21 AM
கவி சகோதரி
மைதிலி கேட்கிறார்
முரண்பாட்டு கவி
எழுதுவது எப்படி ?
(இப்படியும் முரன்பாடு எழுதலாம் மைதிலி சகோதரி :).

அய்யோ! பத்திக்கிச்சு! பத்திக்கிச்சு!
ஓ! பெண்ணே!

அண்ணா! நாங்கள் இணை கோடுகள்... பாலமாய் இருங்கள்... பாத்தி கட்டவேண்டாம்!

kavitha
04-06-2004, 04:27 AM
இப்படிக் கூட கவிதை எழுதலாமோ என்று வியக்கிறேன். பாராட்டுக்கள்.

தொடருங்கள்.

அன்புடன்,
மைதிலி

பாராட்டினால் பத்தாது மைதிலி... பாடினால் தான் பத்தும்...

(பத்து பத்து னு இன்னைக்கு பத்துதே!... காலைல யார் முகத்தில் முழிச்சேன்?
எதிர் வீட்டு பட்டு மாமியோ?)

kavitha
04-06-2004, 05:28 AM
பத்தவக்கும் எதிரணி கவனத்திற்கு:
உண்மையில் பாராட்டினால் பத்தாது (போறாது ) நீயும் பாடனும் (கவிதை எழுத வேண்டும்) அப்பதான் பத்தும் (அப்ப தான் எனக்கு திருப்தி ) அப்டீங்கறது அர்த்தத்தில் சொல்லி இருக்கிறேன்! தப்பா நினைச்சிக்காதே! சரியா!

இளசு
05-06-2004, 10:36 PM
ஏறி மிதித்துக் கடந்துபோகும்
ரயிலுக்காகக் காத்திருக்கும்--
தண்டவாளம்..

kavitha
07-06-2004, 04:19 AM
சில ஏணிகளும் கூட அப்படித்தான்... நல்ல சிந்தனையுடன் கூடிய பா!

mythili
07-06-2004, 11:04 AM
ஏறி மிதித்துக் கடந்துபோகும்
ரயிலுக்காகக் காத்திருக்கும்--
தண்டவாளம்..

சிலரின் வாழ்கை கூட அப்படித்தானே ஆகிவிடுகிறது. :-(

நல்ல கருத்து இளசு அண்ணா.

அன்புடன்,
மைதிலி

இளசு
10-06-2004, 10:37 PM
நன்றி...கவீ..மைதிலி..

அட்டையில் பெயர் : இன்பம்.
அத்தனை பக்கமும் துன்பம்
காதல் புத்தகம்

kavitha
11-06-2004, 05:59 AM
அட்டையில் பெயர் : இன்பம்.
அத்தனை பக்கமும் துன்பம்
காதல் புத்தகம்

தற்போதைய 'அரிச்சந்திரன்' படமும் நினைவுக்கு வந்தது!
நன்றி இளசு அண்ணா!

எங்களுக்கும் சிறகுகள் வேண்டும்
இது
இலையுதிர் காலம்
வேடந்தாங்கல் மரங்கள்!

இளசு
15-06-2004, 10:07 PM
நன்றி கவீ...
இலையுதிர்கால மரக்காட்சி அருமை....
____________________________________

நீரால் வெளுப்பவன் தெளித்த அழுக்கை
நெருப்பால் எரித்தாள் ---
அக்னிப் பிரவேசம்...

kavitha
16-06-2004, 03:44 AM
நன்றி அண்ணா!
காட்சிப்பாவில் தந்திருக்கவேண்டும் என்று நினைக்கிறேன் :smilie_abcfra:
இருந்தாலும் மரம் பறப்பது முரண்காட்சி தானே!
(சமாளிச்சிட்டேன் ):D

இளசு
16-06-2004, 09:36 PM
கவீ... அது முரண்காட்சிப்பாதான்..
முழுசா சொல்லிப் பாராட்டாதது நான்..

பரிவர்த்தனைகள் தொடரட்டும்...
-----------------------------------
அத்தனை கவனமாய் புரட்டியும்
அட்டை கழண்டு கையோடு.....--
கடன் வாங்கிய பழைய புத்தகம்..

இளசு
21-06-2004, 10:56 PM
யோகாசன வகுப்பு
சிரத்தையாய் மாணவர்கள்
அனைவரும் வெள்ளையர்..

kavitha
22-06-2004, 04:38 AM
சிரத்தையாய் மாணவர்கள்
அனைவரும் வெள்ளையர்..

புரியவில்லையே அண்ணா... நம் மக்களும் இப்போ யோகாசனம் செய்ய ஆரம்பிச்சுட்டாங்களே!

இக்பால்
22-06-2004, 04:55 AM
புரியவில்லயே அண்ணா... நம் மக்களும் இப்போ யோகாசனம் செய்ய ஆரம்பிச்சுட்டாங்களே!

தங்கச்சி நம் மக்கள் ஆரம்பித்ததோடு சரி... :)

kavitha
22-06-2004, 09:39 AM
தங்கச்சி நம் மக்கள் ஆரம்பித்ததோடு சரி...

ஓ! அப்படியா அண்ணா...
எனக்குத்தெரிந்து இப்போது வீட்டுப்பெண்கள் கூட தங்கள் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொண்டு பயிற்சிகள் செய்ய ஆரம்பித்துவிட்டனர்...

kavitha
22-06-2004, 09:41 AM
அத்தனை கவனமாய் புரட்டியும்
அட்டை கழண்டு கையோடு.....--
கடன் வாங்கிய பழைய புத்தகம்..

வீட்டில ஓசி கேட்டாலே அடி விழும்.. கழண்டு விழுந்தா அம்புட்டுத்தேன்.. நான் அம்பேல்...

பரஞ்சோதி
22-06-2004, 10:04 AM
புரியவில்லயே அண்ணா... நம் மக்களும் இப்போ யோகாசனம் செய்ய ஆரம்பிச்சுட்டாங்களே!
தங்கச்சி நம் மக்கள் ஆரம்பித்ததோடு சரி... :)

இது தான் கோயமுத்தூர் குசும்பு என்பது, அருமையாக சொன்னீங்க அண்ணா.

kavitha
25-06-2004, 05:10 AM
மீண்டும் ஒன்று....


நீ வீசிய
புத்தம் புது ரோஜா
அழுதது...
என்னுடைய
புத்தக ரோஜாக்கள்
சிரித்தது...

இளசு
25-06-2004, 10:54 PM
அருமை கவீ..

இங்கே எனக்குத் துணையாய் வரும் தங்கைக்கு நன்றிகள்..

kavitha
26-06-2004, 04:23 AM
:)..... ..... உங்களுடைய அடுத்த பா எங்கே அண்ணா?

இளசு
27-06-2004, 01:40 PM
.:).... உங்களுடைய அடுத்த பா எங்கே அண்ணா?

பிரித்து அழிக்க நினைக்கும்
பிறவிகளும் உலவும் இடம்--
பெயர் --இணையம்..

karikaalan
27-06-2004, 03:00 PM
யோகாசனம் என்றால் எல்லாம் தெரிந்திருப்பது போல் நம்மவர்
தெரிந்துகொள்ள விருப்பமுடன் பங்கு பெறுவோர் வெள்ளையர்

இதைத்தான் இளவல்ஜி குறிப்பிட்டுள்ளார், கவிதாஜி.

===கரிகாலன்

kavitha
29-06-2004, 07:08 AM
பிரித்து அழிக்க நினைக்கும்
பிறவிகளும் உலவும் இடம்--
பெயர் --இணையம்..

'நச்', டைமிங் (தமிழ்ப்பதம் என்ன?) முரண்பா..



யோகாசனம் என்றால் எல்லாம் தெரிந்திருப்பது போல் நம்மவர்
தெரிந்துகொள்ள விருப்பமுடன் பங்கு பெறுவோர் வெள்ளையர்

இதைத்தான் இளவல்ஜி குறிப்பிட்டுள்ளார், கவிதாஜி.

===கரிகாலன்

அதாவது வெள்ளையர்கள் நம் கலாச்சாரத்தையும், நம்மவர்களைப்பற்றியும் தெரிந்து கொள்வதில் நம்மவர்களைவிட ஆர்வம் காட்டுகின்றனர் என்று சொல்கிறீர்கள்.. அப்படித்தானே?

இக்பால்
29-06-2004, 07:54 AM
யோகாசனம் என்றால் எல்லாம் தெரிந்திருப்பது போல் நம்மவர்
தெரிந்துகொள்ள விருப்பமுடன் பங்கு பெறுவோர் வெள்ளையர்

இதைத்தான் இளவல்ஜி குறிப்பிட்டுள்ளார், கவிதாஜி.

===கரிகாலன்

அதாவது வெள்ளையர்கள் நம் கலாச்சாரத்தையும், நம்மவர்களைப்பற்றியும் தெரிந்து கொள்வதில் நம்மவர்களைவிட ஆர்வம் காட்டுகின்றனர் என்று சொல்கிறீர்கள்.. அப்படித்தானே?

கரிகாலன் அண்ணா...........

kavitha
29-06-2004, 09:22 AM
:confused:

பரஞ்சோதி
30-06-2004, 04:54 AM
இக்பால் அண்ணா, உங்கள் முரண்பா கவிகள் எங்கே?

பரஞ்சோதி
30-06-2004, 04:55 AM
மீண்டும் ஒன்று....

நீ வீசிய
புத்தம் புது ரோஜா
அழுதது...
என்னுடைய
புத்தக ரோஜாக்கள்
சிரித்தது...

எனக்கு புரியலையே சகோதரி, விளக்கம் கொடுங்களேன்.

அலை...
19-07-2004, 04:55 AM
.....பல பாக்கட்டுக்கள்
வைத்து சட்டை தைக்க சொன்னேன்..
எத்தனை முறை எண்ணியும்..
தையற்கூலியில் இரண்டு ரூபாய் இடித்தது..

அன்புடன்

அலை...

பி.கு.
இளசு...மீண்டும் மீண்டும் என்னை மண்றத்துக்குள் இழுக்கும் உங்கள் காந்த எழுத்துக்கு மிக்க நன்றி ("வந்து வந்து போகும் அலை" - யில் உங்கள் வார்த்தைகளை சொல்கிறேன்). (இது முரண்பா அல்ல..)

பரஞ்சோதி
19-07-2004, 11:06 AM
......உள்ளே வெளியே..

.....பல பாக்கட்டுக்கள்
வைத்து சட்டை தைக்க சொன்னேன்..
எத்தனை முறை எண்ணியும்..
தையற்கூலியில் இரண்டு ரூபாய் இடித்தது..

அன்புடன்

அலை...

பி.கு.
இளசு...மீண்டும் மீண்டும் என்னை மண்றத்துக்குள் இழுக்கும் உங்கள் காந்த எழுத்துக்கு மிக்க நன்றி ("வந்து வந்து போகும் அலை" - யில் உங்கள் வார்த்தைகளை சொல்கிரேன்). (இது முரண்பா அல்ல..)

முரண்பாட்டு கவியை கொடுத்து கலக்கிய நண்பர் அலை அவர்களே, அந்த இரண்டு ரூபாயை கட்டிங்கில் கழித்து விடுங்கள்.

இளசு
22-07-2004, 01:59 AM
அலை...

ஆசைக்கனவுக்கும் நிதர்சனத்துக்கும் உள்ள இடைவெளியைச் சொன்ன
முரண்பாவுக்கு பாராட்டு..

அதுசரி...

இரும்பு நான்.. காந்தம் நம் நண்பர்கள்..
துரும்பை அலை பழித்தால் எப்படி?
அலைக்கழிவதும்...
இழுக்கப்படுவதும்..
நானல்லவா இங்கு அதிகம் படுவது?

அலை...
23-07-2004, 12:58 AM
காய்க்கிற மரம்தானே கல்லடி படும்...?

இளசு..ஒன்று சொல்லட்டுமா...

எல்லோரும் காந்தமாய் இருக்கும் ஊரில்
இரும்பு காந்தம் என அழைக்கப்படும்.

kavitha
24-07-2004, 09:16 AM
எல்லோரும் காந்தமாய் இருக்கும் ஊரில்
இரும்பு காந்தம் என அழைக்கப்படும்..

காந்தமாகவே மாறியும் விடுமாம்..இயற்பியல் உண்மை!

இளசு
24-07-2004, 10:44 AM
இரும்பு .....
காந்தமாகவே மாறியும் விடுமாம்..இயற்பியல் உண்மை!

கவிதை விமர்சனத்திலும்
கற்றுத்தரும் கவீ..
அது கவீயின் இயல்பியல்..

இளசு
25-07-2004, 09:41 AM
இருந்தபோது கிளையாக நிழல்..
விழுந்தபோது விறகாகி அனல்..--
போதி(க்கும்) மரம்!

karikaalan
25-07-2004, 01:51 PM
விழுந்து அனலாகும்போதும்
ஏழைகளின் வயிற்று அனலை
அணைக்கும் இம்மரம்.

இளவல்ஜி, மிக அருமையான முரண். வாழ்த்துக்கள்.

====கரிகாலன்

அலை...
27-07-2004, 01:47 AM
அசத்தல் இளசு...உங்கள் டச் தெரிகிறது....

பரஞ்சோதி
27-07-2004, 11:10 AM
இருந்தபோது கிளையாக நிழல்..
விழுந்தபோது விறகாகி அனல்..--
போதி(க்கும்) மரம்!

அருமை அண்ணா, தொடர்ந்து கொடுப்பதற்கு நன்றி.

பரஞ்சோதி
27-07-2004, 11:12 AM
முரண்பாடான மனிதர்களுக்கு
முரணற்ற நல்வழி காட்டும்
இளசு அண்ணாவின் முரண்பாக்கள்.

மன்மதன்
27-07-2004, 11:27 AM
ஆ.வி யில் படித்து ரசித்தது...

பயணிக்கும்
ஜீன்ஸ், முதல் சுடிதார் வரை
மேய்ந்து திரும்பி
சட்டென
என்னிடம்
எப்படிச் சொல்ல முடிகிறது
புடவைய
இழுத்துப் போர்த்தென..
--
மேகலா பானு , வேளச்சேரி..

இளசு
27-07-2004, 09:48 PM
தொடர்ந்து என்னை ஏதாவது கிறுக்க வைப்பதே உங்கள் விமர்சனக் கருத்துகள்தான்..

நன்றி அண்ணல், அலை, இளவல் பரஞ்சோதிக்கு..

இளவல் மன்மதனின் சுட்ட முரண் அருமை.. சுளீர் என உறைக்கிறது..

_____________________________________

மலையுச்சி பிரசங்கம்
மக்கள் காது போகவில்லை..
இடையில் பள்ளத்தாக்கு..

மன்மதன்
28-07-2004, 02:44 PM
நன்றி இளசு அவர்களே.. தொடர்ந்து கொடுங்கள்....

அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
28-07-2004, 06:13 PM
மக்கள் வயிற்றுக்கு
போட்ட திட்டம்
அரசியல்வாதிகளின்
வயிற்றுக்கே
போதவில்லை

இளந்தமிழ்ச்செல்வன்
28-07-2004, 06:40 PM
ஒவ்வொன்றும் அருமையாய் இருக்கிறது (சுடுகிறது). அருமை நண்பர்களே.

kavitha
31-07-2004, 09:50 AM
கவிதை விமர்சனத்திலும்'
கற்றுத்தரும் கவீ..
அது கவீயின் இயல்பியல்..

கற்றுத்தரும் அளவிற்கு நானில்லை அண்ணா... மிகச்சிறியவள்.
எனினும் நன்றி!



இருந்தபோது கிளையாக நிழல்..
விழுந்தபோது விறகாகி அனல்..--
போதி(க்கும்) மரம்!

ஆமாம் மரங்களுக்கு 6ம் அறிவு இல்லை. சுய( நல)அறிவு!



முரண்பாடான மனிதர்களுக்கு
முரணற்ற நல்வழி காட்டும்
இளசு அண்ணாவின் முரண்பாக்கள்.

நேர்மறையை நேர்மறையாக பார்ப்பது ஒரு குணம்.
எதிர்மறையையும் நேர்மறையாக பார்ப்பது உன்னத குணம்.
முரணும் இங்கே முரண்பட்டுப்போகும்.

(உ.ம்)
நபர் 1: உன்வீடு வர சேற்றில் நடந்தேன்.சாண் ஏறினால் முழம் சறுக்கிறதே!
நபர் 2: அப்புறம் எப்படி என்வீட்டிற்கு வந்தாய்?
நபர் 3: என் வீட்டிற்கு திரும்பிப் போக நினைத்தேன். இங்கே கொண்டு வந்து விட்டது! :)



பயணிக்கும்
ஜீன்ஸ், முதல் சுடிதார் வரை
மேய்ந்து திரும்பி
சட்டென
என்னிடம்
எப்படிச் சொல்ல முடிகிறது
புடவைய
இழுத்துப் போர்த்தென..

"தெரிந்தும் தெரியாமல்" அது அப்படித்தான்..



மக்கள் வயிற்றுக்கு
போட்ட திட்டம்
அரசியல்வாதிகளின்
வயிற்றுக்கே
போதவில்லை

வயிற்றுக்கா ... வாய்க்கே போதாது!

அலெக்ஸாண்டரின் இந்த இறுதி வரிகளை அவர்கள் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.

"கல்லறையில் எனது கைகளை மட்டும் வெளியே வைத்திருங்கள்
இவன் போகும்போது ஒன்றும் எடுத்துச்செல்லவில்லை என்பதை மக்கள் அறிந்துக்கொள்ளட்டும்!"

இளசு
02-08-2004, 05:22 AM
அலெக்சாண்டர் சொன்ன வரிகளை மேற்கோள் காட்டி
நிறைவான விமர்சனம் தந்த கவீக்கு நன்றி சொல்லி..
_______________________________________________

விண்கோள் சொந்தமாய் செய்வோம்..
குடிநீர்,கோலா செய்ய
அந்நியரை அழைப்போம்

இளசு
17-08-2004, 12:06 AM
குடை பிடித்து நனையாமல்
வீட்டுக்கு வந்தவுடன்...
ஜில்லென 'ஷவர்க்' குளியல்..

mythili
17-08-2004, 05:01 AM
குடை பிடித்து நனையாமல்
வீட்டுக்கு வந்தவுடன்...
ஜில்லென 'ஷவர்க்' குளியல்..

சிரித்தேன். ரசித்தேன். :D :D :D :D.

அன்புடன்,
மைதிலி

மன்மதன்
17-08-2004, 10:52 AM
குடை பிடித்து நனையாமல்
வீட்டுக்கு வந்தவுடன்...
ஜில்லென 'ஷவர்க்' குளியல்..

சிரித்தேன். ரசித்தேன். :D :D :D :D

அன்புடன்,
மைதிலி

சிரித்தேன். ரசித்தேன்..குளித்தேன்..(கவிதையில்..)

அருமை இளசு..

அன்புடன்
மன்மதன்

kavitha
17-08-2004, 11:06 AM
விண்கோள் சொந்தமாய் செய்வோம்..
குடிநீர்,கோலா செய்ய
அந்நியரை அழைப்போம்

என்னே நையாண்டி கலந்த கனவு!
ஒரு நாள் வரும் அண்ணா.
அன்று, " இந்தியாவிற்கு போகிறோம் வேலை பார்க்க "என்று அயல் நாட்டினர் சொல்வர்.

இளசு
19-08-2004, 10:34 PM
விடாமல் ஊக்கம் தரும் இளவல்கள்..
மைதிலி, மன்மதன், கவிதா..
--நன்றிகள்..
_____________________________________

என்ன தேடல்டா உனக்கு என்றபடி
என் வாழ்வில் நீ நுழையும் வரை
எதையும் நான் தொலைத்ததில்லை..

poo
20-08-2004, 04:15 AM
சின்ன வரிகளில் எத்தனை சிந்தனைகள்....

பாராட்டுக்கள் அண்ணா!

இளசு
06-12-2004, 06:54 PM
நன்றி தம்பி பூவுக்கு..

_____________________________

படித்த தமிழெல்லாம்
பயன்படுத்தி சொன்ன பதில் -
மௌனம்

manitha
14-12-2004, 01:29 AM
நன்றி தம்பி பூவுக்கு..
_____________________________

படித்த தமிழெல்லாம்
பயன்படுத்தி சொன்ன பதில் -
மௌனம்


மெளனம் சம்மதத்திற்கு அறிகுறி என்பார்கள்
ஆனால் என்னைப் பொறுத்த மட்டில்
மெளனத்தை விட கொடிய
ஆயுதம் இவ்வுலகில் இல்லையென்பேன்.
ஏனென்றால் அனுபவித்தால் தான் வலியின் வேதனை புரியும்....

பாரதி
14-12-2004, 01:10 PM
ஆயிரம் வார்த்தைகள்
சொல்லாததை
ஒரு மெளனம்
விளக்கும்.

pradeepkt
15-12-2004, 04:55 AM
உண்மை பாரதி.

ஆனால்,
ஆயிரம் வேல்கள்
கொல்லாததையும்
ஒரு மௌனம்
கிழிக்கும்.

உலகில் அனைத்துக்கும் 2 நிலைகள் உண்டு.
இரண்டிலும் இல்லாத திரிசங்கு நிலை எங்கும் எப்போதும் வேதனைதான்.

நண்பர்கள் அனைவரின் முரண்களும் சிறந்தவையே!

அன்புடன்,
பிரதீப்

பாரதி
01-05-2008, 05:17 AM
ஆனால்,
ஆயிரம் வேல்கள்
கொல்லாததையும்
ஒரு மௌனம்
கிழிக்கும்.

உலகில் அனைத்துக்கும் 2 நிலைகள் உண்டு.
இரண்டிலும் இல்லாத திரிசங்கு நிலை எங்கும் எப்போதும் வேதனைதான்.

நிஜம்தான் பிரதீப்.
உங்கள் மெளனம் எங்களை கிழிக்கிறது.
எப்போது வரப்போகிறீர்கள்?

இளசு
31-08-2008, 10:43 AM
இலட்சம் உயிர் குடித்த
இராட்சதப் புயலுக்குப் பெயர்
மென்மையான மலர் - பேரரளி!
-------------------------------------------

http://en.wiktionary.org/wiki/daffodil

மே 2008 - பர்மாவைச் சூறையாடிய புயலின் பெயர் - நர்கீஸ்
நர்கீஸ் = Daffodil; பேரரளி.

இளசு
31-08-2008, 11:17 AM
அழுகும் மாமிச வாடை
அற்புதச் சுவை
அதிசயம் பழங்களில் - துரியன்!

http://en.wikipedia.org/wiki/Durian

ஓவியன்
31-08-2008, 02:24 PM
இலட்சம் உயிர் குடித்த
இராட்சதப் புயலுக்குப் பெயர்
மென்மையான மலர் - பேரரளி!
-------------------------------------------

http://en.wiktionary.org/wiki/daffodil

மே 2008 - பர்மாவைச் சூறையாடிய புயலின் பெயர் - நர்கீஸ்
நர்கீஸ் = Daffodil; பேரரளி.

அதுவென்னவோ தெரியலை, பயங்கரப் புயல்களுக்கு எப்பவும் பெண்களின் அல்லது பூக்களின் பெயர்களையே சூட்டுகிறார்கள்....

நல்ல முரண் அண்ணா..!! :)

ஓவியன்
31-08-2008, 02:27 PM
அழுகும் மாமிச வாடை
அற்புதச் சுவை
அதிசயம் பழங்களில் - துரியன்!

தூரியனின் வாசனை பல தடவை என்னைக் குழப்பியுள்ளது...
ஆனால், அப்போதெல்லா எனக்கிந்த முரண் உதயமாகலையே...!! :)

முரண் அருமையா இருக்கு அண்ணா..!! :icon_b:

இளசு
02-10-2008, 07:13 AM
''சில வாரங்கள் பூசுங்கள்..
சிவப்பழகு நிச்சயம்'' -
கருத்த முகத்தில் வேர்வையும்
சிரிப்புமாய் - விற்பனைப் பெண்

பாரதி
02-10-2008, 04:14 PM
அருமையான முரண் அண்ணா..!

வெயிலின் வெளிச்சத்தில்
உழைப்பவன்
கறுப்பழகை பூசிக்கொள்கிறான்.

இளசு
02-10-2008, 05:11 PM
கருத்தூட்டங்களுக்கு நன்றி ஓவியன்..





வெயிலின் வெளிச்சத்தில்
உழைப்பவன்
கறுப்பழகை பூசிக்கொள்கிறான்.

சபாஷ் பாரதி!

நம்மூர் வெயில், புற்று தரும் புற ஊதாக் கதிர் தடுக்கும் அரண் -
மெலனின் எனும் கறுப்பு நிறமியே!

கறுப்புதான் நமக்கு ஏத்த கலரு!!

ஆனால் -------------------

வெயிலின்றி வெளுக்கும் தோலுக்கு அதிக மதிப்பாம்..
தமிழகத்தில் வரன் தேடுவோர் சொல்வது -
We want fair skinned person!

Its not fair!

aren
03-10-2008, 04:56 AM
எதையும் தாங்கும்
இதயம்
மென்மையானது!!!

பாரதி
03-10-2008, 07:35 AM
எதையும் தாங்கும்
இதயம்
மென்மையானது!!!

அட....!!!!
பாராட்டு ஆரென். எத்தனை எளிமையான முரண்!

aren
06-10-2008, 11:09 AM
இளமையில் கல்
என்றார்கள்
சான்றோர்கள்!!!

இளமையில் கள்
என்றார்கள்
இந்த கால இளைஞர்கள்!!!

poornima
06-10-2008, 01:32 PM
கள் என்றால் கூட பரவாயில்லை..அதில் நல்லது அறுபது சதவீதம் நல்லதாம்..
இவர்கள் அதைதாண்டி அல்லவா கற்கிறார்கள்..

இளசு
08-11-2008, 08:41 AM
பாராட்டுகள் அன்பின் ஆரென்..

தொடர்ந்து தாருங்கள்..

-------------------------------------------

aren
07-12-2008, 03:37 PM
என்றைக்கும் நம்மைவிட்டு
விலகாத நண்பன்

பணத்தட்டுப்பாடு!!!!

aren
07-12-2008, 03:38 PM
என்றைக்கும்
நம்மை நெருங்காதவன்

நிம்மதி!!!!

aren
07-12-2008, 03:39 PM
கண்ணெதிரில் இருக்கும்
ஆனால் அடைவது மிகவும் கடினம்

காதல்!!!

இளசு
12-12-2008, 05:21 AM
வாழ்க்கைப் பாடங்களைச் சின்னச் சின்ன காட்சிப்பாக்களாய்த் தரும்
அன்பின் ஆரெனுக்குப் பாராட்டுகள்... தொடருங்கள்!

----------------------------------

கரிவேண்டித் தோண்டியவர்கள்
கண்டும் எறிந்தார்கள்
தங்கப் பாளங்களை!

aren
12-12-2008, 05:28 AM
----------------------------------

கரிவேண்டித் தோண்டியவர்கள்
கண்டும் எறிந்தார்கள்
தங்கப் பாளங்களை!

வாவ்!!!

ஒரு விஷயத்தை நோக்கி செல்லும்பொழுது வழியில் என்ன நடக்கிறது என்று பார்க்கவேண்டும். அது சில சமயங்களில் பெரிய புதயலாகக்கூட இருக்கலாம் என்பதற்கு இந்த ஒரு சிறிய பா ஒரு பெரிய எடுத்துக்காட்டு.

இன்னும் கொடுங்கள் இளசு

நன்றி வணக்கம்
ஆரென்

lenram80
07-07-2009, 09:41 PM
அடடா... இந்த பதிவை நான் இன்று தான் பார்க்கிறேன்.
என் பங்குக்கு...


அழுகின்ற குழந்தையை
தாலாட்டி தூங்க வைத்தாள் தாய்!
குப்பைத் தொட்டியில் போட!

lenram80
07-07-2009, 09:43 PM
ரோஜாவுக்கு முத்தம் கொடுத்தால்
முள் கீறி
ரத்தக் கரை உதடுகளில்!

lenram80
07-07-2009, 09:43 PM
காற்று பட்டதும் கீழே விழுந்தது பேப்பர்!
அமுங்கிச் செத்தது, ஒரு செல் அமீபா!

குணமதி
29-12-2009, 04:08 PM
வானம் அழுத கண்ணீர் கீழே விழுந்தது.

பூரித்து மேலெழுந்தது விதையிலிருந்து தளிர்!