PDA

View Full Version : வேறெதுவும் செய்ய இயலாது.



சசிதரன்
21-07-2010, 04:18 PM
உங்களால் வேறெதுவும்
செய்ய இயலாது.

சாலை விபத்தொன்றில்
சாகக் கிடப்பவனின் கடைசிப் பார்வையைத்
தவிர்த்து விடுவதைத் தவிர

உங்கள் மீது பாய்ந்த
துரோகத்தின் கூரிய வாளொன்றை
உங்கள் கைவாளாய் மாற்றிக் கொள்வதைத் தவிர

காதலா காமமா
யாதென குழம்பும் வேளையில்
நட்பென அதற்குப் பெயரிடுவதைத் தவிர

எந்தவொரு மரண ஊர்வலத்திலும்
மரணித்த நபர் நீங்களில்லையென
நிம்மதியடைவதைத் தவிர

உங்களால் வேறெதுவும்
செய்ய இயலாது.

ஓரிரு துளி கண்ணீரோ
கரம்கூப்பி பிரார்த்தனையோ..
இவையன்றி

உங்களால் வேறெதுவுமே
செய்ய இயலாது.

பாலன்
21-07-2010, 05:31 PM
நீங்கள் சொல்வதை ஒப்புக்கொள்வதை தவிர வேறெதுவுமே எங்களால் செய்ய இயலாது சசிதரன். நன்றி.

Narathar
21-07-2010, 06:05 PM
ஆம் சசிதரன்
வேறு எதுவுமே செய்ய முடியாது....
இப்படி ஒரு அருமையான கவிதையை தந்த உங்களை
பாராட்டுவதை தவிர

தொடரட்டும் உங்கள் கவிப்பயணம்

அமரன்
21-07-2010, 08:39 PM
ஏன் இயலாது?

பலதரப்பட்ட தளங்களில் கவிதை வரையும் உங்களைப் பாராட்டாமல் இருக்க இயலாது.

கீதம்
21-07-2010, 10:32 PM
அற்புத வரிகள்! உங்கள் கவித்திறனுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள், சசிதரன் அவர்களே.

சுடர்விழி
22-07-2010, 12:50 PM
கவிதை ரொம்ப அருமை......ஒவ்வொரு வரியிலும் உலவும் உண்மை கவிதைக்கு பலம்...பாராட்டுக்கள்....

kulirthazhal
27-07-2010, 01:20 PM
மனம் இன்னும் விரியட்டும், உலகம் தானே சுருங்கிவிடும்... உலகினை கைப்பிடியில் பிசைவோம்... எல்லா மனங்களின் ரத்தங்களும் கொட்டட்டும் மையாக.... மனம் திருந்தி மீண்டும் மனிதனாய் வாழ்வோம் வேறெதுவும் செய்ய இயலாமல்.... கவிதை இனிக்கிறது... உண்மை கசப்பது கவிதையின் வெற்றியே.......

சசிதரன்
27-07-2010, 03:13 PM
நன்றி நண்பர்களே...:)

பூமகள்
28-07-2010, 09:57 AM
அருமை சசி..!

இயலாததன் பட்டியலிட்டு எங்களை விடை சொல்ல இயலாதவர்களாக்கிவிட்டீர்கள்.

பாராட்டுக்கள்,

govindh
28-07-2010, 11:22 AM
பாராட்டுக்கள் சசி.

nambi
28-07-2010, 11:46 AM
கவிதை நன்று! பகிர்வுக்கு நன்றி!

மச்சான்
28-07-2010, 12:15 PM
நல்ல கவிதை சசிதரன். பகிர்ந்தமைக்கு நன்றி. பாராட்டுக்கள்.