PDA

View Full Version : நட்பிலக்கணம்



கோபாலன்
19-07-2010, 01:09 PM
நட்பிலக்கணம்

வாடிய பூவைக்கண்டாலே வதங்கிப்போகும் நீ
எனக்காய்
வானம் உயரமென்று வெட்டிவிடத் துணிந்தாய்!
பனித்துளி பாரமென்று கலங்கிப்போகும் நீ
எனக்காய்
கடல் ஆழமென்று கண்மாயாக்கத் துடித்தாய் !
நிலவொளி சுடுமென்று ஒதுங்கிப்போகும் நீ
எனக்காய்
சூரியச்சுடரொளி வெம்மைஎன்று பொசுக்கிவிடக் கொதித்தாய் !
தென்றல்காற்று தீங்கென்று தலைதெறிக்கும் நீ
எனக்காய்
சூறாவளி சுலபமென்று சுழற்றி தலைகவிழ்த்தாய் !
கடினமென்று மலைக்கும்போது மடியில்தாங்கும் நீ
எனக்காய்
மணல்கூட நிழலைச்சுடுமென்று மடித்துவிட முயன்றாய்!
உலகமே கூடி வந்தாலும் மயங்காது எதிர்த்து நிற்பேன்
ஆனால்
ஒருநொடி என்னை நீங்கினால் மனம் தளர்ந்து உயிர் துறப்பேன் !

சுடர்விழி
19-07-2010, 01:18 PM
கோபாலன் அவர்களே ! போட்டிக்கான கவிதைகளை தனிமடலில் அனுப்ப வேண்டும்..திரியை சரியாகப் பார்த்து உரியவருக்கு அனுப்புங்கள்...வாழ்த்துக்கள்

அன்புரசிகன்
20-07-2010, 06:41 AM
நண்பரே.. உங்கள் கவிதையை (நட்பிலக்கணம்) ஏற்கனவே பலரும் பார்த்திட்ட படியால் இம்முறை பொதுவில் உங்கள் கவிதையை இட்டிருக்கிறேன்.

கவிதை போட்டி சம்பந்தமான விதிமுறைகளுக்கு இங்கே (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=23860) செல்லுங்கள்.
இன்றுக்குள் வேறு கவிதை ஒன்றி விதிமுறைகளுக்கு உட்பட்டு அனுப்பிவையுங்கள்.

பா.ராஜேஷ்
20-07-2010, 09:46 AM
அப்படியே உங்களை பற்றிய அறிமுகத்தையும் கொடுங்களேன் நண்பரே..