PDA

View Full Version : சூஃபிப் பாடல்(Sufi Song)நாகரா
18-07-2010, 09:45 AM
அல்லா ஒருவனே தேவன்
நல்லான் நபியவன் தூதன்
எங்கே திரும்பினும் அல்லாவின் முகமது
நன்றே காட்டும் நெஞ்சுள் அகமது

அன்பாம் ஆதியே அல்லா - நல்
லறிவாம் போதியே நல்லான்
நாதமா(ஞ்) ஜோதியே குர்-ஆன்
நேசமாய் ஓதினான் வல்லான்

சமரச மார்க்கமே இஸ்லாம்
அமரக நேசமே எல்லாம்
தயாபரன் யார்க்குமே அல்லா
தயைசெய் செய்யது நல்லா

தாயக நெஞ்சினை ஓம்பி
நாயக வள்ளலைக் காண்பாய்
பாயச வெள்ளமாம் உண்*மை
நேசமே அல்லா உண்பாய்

மெக்கா மெய்யதில் உள்ளது
நெஞ்சக் காபாக் கல்லது
வஞ்ச மாயைக் குள்ளது
துஞ்ச வோயாம் செய்தது
(அல்லா மனிதனைக் கேட்பதாய்க் கொள்ள வேண்டும்)

காபா உள்ளே ஓடுது
தேனாய்ப் பாலாய் ஆறது
நேசன் அல்லா வீடது
மார்பின் உள்ளே தேடது

பாலகன்
18-07-2010, 01:32 PM
ஒருவனே தேவன் - இன் ஷா அல்லா!

இசுலாம் ஒரு அருமையான மார்க்கம்! அதை அறியாதவர்களும் அதை அரைகுரையாக அறிந்தவர்களும் அதை படுத்தும் பாடு தான் மனதுக்கு துன்பமாக உள்ளது. 3 ஆண்டுகள் ஒரு முஸ்லிம் நாட்டில் மிகவும் நன்றாக வாழ்ந்தேன். நாடு முழுக்க ஒரே மதம்! அதுவும் ஒருவிதத்தில் நல்லதே..... மதக்கலவரங்களுக்கு இடமே இல்லை.

அருமையான கவிதை நாகரா அண்ணா! நன்றி

Narathar
18-07-2010, 02:18 PM
நன்றாக இருக்கிறது நாகரா

நாகரா
19-07-2010, 08:59 AM
ஒருவனே தேவன் - இன் ஷா அல்லா!

இசுலாம் ஒரு அருமையான மார்க்கம்! அதை அறியாதவர்களும் அதை அரைகுரையாக அறிந்தவர்களும் அதை படுத்தும் பாடு தான் மனதுக்கு துன்பமாக உள்ளது. 3 ஆண்டுகள் ஒரு முஸ்லிம் நாட்டில் மிகவும் நன்றாக வாழ்ந்தேன். நாடு முழுக்க ஒரே மதம்! அதுவும் ஒருவிதத்தில் நல்லதே..... மதக்கலவரங்களுக்கு இடமே இல்லை.

அருமையான கவிதை நாகரா அண்ணா! நன்றி
உம் பின்னூட்டத்துக்கு நன்றி தம்பி, விரைவில் இப்பாடலின் mp3 ஒலிப்பதிவை இணைக்கிறேன்!

இஸ்லாம் = இச்லாம் = ச்+இ+ம்+ஆ+ல் = ம்+ஆ+ச்+இ+ல் = மாசில்(அநாகர விளையாட்டு, the anagram game)

"மாசில்" என்றால் குற்றம் இல்லாத அதாவது பரிசுத்தம்

ISLAM

Lower case of 'L' is 'l', this is the Upper Case of 'i'

'I' is hidden in 'L'! That is the Eye(I) Which Sees Allah Who 'IS' & Understands His Fully Aware Presence 'AM' Everywhere All the Time!

ISlAM

IS-I-AM

IS = அல்லாவின் பேரிருப்பு
L = the Hidden Eye = I = ஒவ்வொன்றுள்ளும் ஒளிந்து ஒளிரும் "ஐ"யாம் அல்லாவின் தலைமை
AM = அல்லாவின் அருண்விளக்கம்

அல்லாவே ஈடிணையிலா மகாபிரபு மந்திர
இஸ்லாமே தூயனாம்நபி தந்திரம்

குருநபி தந்திரங் கற்கநின் அகமது
குகையெனக் குந்திடு தவத்தில்

நாகரா
19-07-2010, 09:00 AM
நன்றாக இருக்கிறது நாகரா
நன்றி திரு. நாரதர்

நாகரா
19-07-2010, 03:22 PM
அல்லா என்றதோர் நாமம்
எல்லா நோயுமே தீர்க்கும்
நல்லான் நபியவன் ரூபம்
நெஞ்சாங் கண்தனில் தோன்றும்

அல்லா என்றுமே அன்பேதான்
நல்லான் நெஞ்சுளே மின்னேதான்
குர்ஆன் வல்லான் சொல்லேதான்
எல்லாம் அல்லாவின் பிள்ளைதான்
(மின் = ஒளி)

இஸ்லாம் என்றால் சமரசமே
எல்லாம் இங்கே சரிசமமே
பாழும் பேதங்கள் சரிந்தனவே
யாம்ஓர் குலந்தான் புரிந்ததுவே

யாதுமே நம்மூர் பூமியிலே
யாருமே நம்மாள் தானிங்கே
அல்லா நேசமே ஆயுதமாய்
பொல்லாப் போர்களை வென்றோமே
(நம்மாள் = நம் நெருங்கிய உறவு)

ஏக தேவன் அருளாலே
பாப ரோக மருளாதி
நாச மாகத் தெருளோடே
வாழச் செய்தார் குருநபியே
(பாப ரோக = பாவம் மற்றும் நோய், மருள் = மயக்கம், தெருள் = தெளிவு)

மெய்யாந் தேகத் துள்ளேயே
உள்ளான் தூய நெஞ்சுள்ளே
அல்லா ஏகன் என்றுண்மை
நல்லான் பீரே ஊட்டினாரே
(பீர் = நபிகள்)

மச்சான்
19-07-2010, 03:23 PM
அருமையான பாடல்கள். பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே.

நாகரா
22-07-2010, 11:35 AM
அருமையான பாடல்கள். பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே.
பாடல்களை ரசித்த உமக்கும் நன்றி நண்பரே

நாகரா
22-07-2010, 11:36 AM
"பிஸ்மில்லாஹ்" என்றால் சேருஞ் ஞானம்
"அர்ரஹ்மான்" என்றால் தேயும் பாவம்
"அர்ரஹீம்" என்றால் தீரும் ரோகம்
"பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்" நாவிலும்
நெஞ்சுள்ளும் பதிந்தால் சாவும் மாயும்

அல்லாஹூ அக்பரின் நற்தூதன் முகம்மது
எல்லாமே உய்ய அன்போடு அருளும்
குர்-ஆனின் சாரம் அல்லாவின் உண்*மை

ஆங்கார நாசத் தந்திரம் புகட்டும்
ஓங்கார நாத மந்திரப் பொருளே
"பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்" ஆகும்

"அர்ரஹீம்" என்றால் மன்னிக்குந் தயாபரன்
"அர்ரஹ்மான்" என்றால் அருளாளன் கருணாகரன்
"பிஸ்மில்லாஹ்" என்றால் அன்பென்னும் ஏகாக்கரன்
அல்லாவின் பேரில் நெஞ்சுள்ளே ஏற்றேபின்
நின்னாவில் சாரந் தித்திக்க உண்பாய்

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
22-07-2010, 08:28 PM
அற்புதமான கருத்துக்கள் நாகரா. அல்லாவின் பெயருக்கு நல்லதொரு விளக்கம் கற்பித்து உள்ளீர்கள்.

நாகரா
23-07-2010, 06:03 AM
உம் ஊக்க வரிகளுக்கு நன்றி திரு. ஹஸனீ

நாகரா
24-07-2010, 07:06 AM
"அல்லாவின் பேரிலெ"ன்றால் சேருஞ் ஞானம்
"அருளாளன் கருணாகரன்" என்றே நெஞ்சுருக
உச்சரித்தால் இருள்சேர் இருவினைகள் தேயும்
"மன்னிக்குந் தயாபரன்" என்றே தண்டிக்கும்
வஞ்சத்தை "அன்பென்னும் ஒன்றேயாம் என்றென்றும்
நின்னெஞ்சுள்" என்றோதும் அல்லாவுக் கர்ப்பணித்தால்
இற்றுப்போம் நரைதிரை மூப்போடு நோயும்
"அருளாளன் கருணாகரன் மன்னிக்குந் தயாபரன்
அல்லாவின் பேரிலெ"ன்றால் கொடுஞ்சாவும் மாயும்
வல்லானாம் அல்லாவின் நற்தூதன் நபிகள்
எல்லாமே உய்யத்தான் அன்போடு அருளும்
குர்-ஆனின் இச்சாரம் அல்லாவின் உண்மை
ஆங்கார நாசத் தந்திரம் புகட்டும்
ஓங்கார நாத மந்திரப் பொருளே
"அருளாளன் கருணாகரன் மன்னிக்குந் தயாபரன்
அல்லாவின் பேரிலெ"னும் குர்-ஆனின் சாரம்
நல்லான்தான் மின்னும்நின் நெஞ்சுள்ளே ஏற்றேபின்
நின்னாவில் இச்சாரந் தித்திக்க உண்பாய்

நாகரா
25-07-2010, 06:22 AM
அன்பே ஏகனாந் தேவன்
சற்குரு பிரானவன் தூதன்
எங்கே திரும்பினும் அன்பின் குருமுகம்
நன்றே காட்டும் நெஞ்சுள் இருதயம்

அன்பாம் ஆதியே ஏகன் - நல்
லறிவாம் போதியே தூதன்
நாதமா(ஞ்) ஜோதியே வேதம்
நேசமாய் ஓதினான் தேவன்

சமரச மார்க்கமே தந்தான்
அமரக நேசமாம் வல்லான்
தயாபரன் யார்க்குமே நல்லான்
"தயவாய் இரு"எனச் சொன்னான்

தாயக நெஞ்சினை ஓம்பி
நாயக வள்ளலைக் காண்பாய்
பாயச வெள்ளமாம் உண்*மை
நேசமே அள்ளியே உண்பாய்

மெய்யாந் தேகத் துள்ளது
நெஞ்சாம் நேசக் கண்ணது
வஞ்ச மாயைக் குள்ளது
துஞ்ச வோயாம் செய்தது

ஆகா! நெஞ்சுள் ஓடுது
தேனாய்ப் பாலாய் ஆறது
ஏக தேவன் வீடது
மார்பின் உள்ளே தேடது

மச்சான்
25-07-2010, 06:55 AM
அற்புதமான வரிகள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நண்பரே நாகரா.

நாகரா
26-07-2010, 06:19 AM
அற்புதமான வரிகள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நண்பரே நாகரா.
உம் ஊக்க வரிகளுக்கு நன்றி மச்சான்

நாகரா
26-07-2010, 06:20 AM
ஏகன் தேவ நாமம்
பாப நாசத் தீர்த்தம்
சற்குரு நாதன் ரூபம்
நெஞ்சக வாயுள் போதம்
('ஏ'காரம் உறுதியையும், "க" ஒன்றையும், தமிழின் கடைசி எழுத்து "ன்" முடிவையும், ஆக "ஏகன்" ஒன்றின் முடிவான உறுதியைக் குறிக்கிறது, "ஏம்" இருதய உயிர் பீஜமாகும், இரு சுழி "ன்" இரு 'த' 'ய'ச் சுழியைக் குறிக்கிறது, னகர மேற்புள்ளியாம் அன்பின் வட்டத்தில் சகலமும் அடங்கி விடுகிறது)

ஏகன் என்றுமே அன்பேதான் - குரு
நாதன் நெஞ்சுளே மின்னேதான்
வேதம் தேவன் சொல்லேதான்
யாவும் ஏகன் பிள்ளைதாம்
(மின் = ஒளி)

வேத உண்மை சமரசமே
யாவும் இங்கே சரிசமமே
பாழும் பேதங்கள் சரிந்தனவே
யாம்ஓர் குலந்தான் புரிந்ததுவே

யாதுமே நம்மூர் பூமியிலே
யாருமே நம்மாள் தானிங்கே
ஏகனாம் நேசமே ஆயுதமாய்ப்
பாதகப் போர்களை வென்றோமே
(நம்மாள் = நம் நெருங்கிய உறவு)

ஏக தேவன் அருளாலே
பாப ரோக மருளாதி
நாச மாகத் தெருளோடே
வாழச் செய்தார் சற்குருவே
(பாப ரோக = பாவம் மற்றும் நோய், மருள் = மயக்கம், தெருள் = தெளிவு)

மெய்யாந் தேகத் துள்ளேயே
உள்ளான் தூய நெஞ்சுள்ளே
வல்லான் ஏகன் என்றுண்மை
சற்குரு நாதர் ஊட்டினாரே

நாகரா
27-07-2010, 06:03 AM
ஏகனைத் தவிர வேறொன்றிலா உண்*மை
நேசகத் தவிழும் அமுதம்
(நேசகம் = நேச அகம் = அன்பு மய இருதயம்)
நேசகத் தவிழும் அமுதம் உண்ண
ஏகனின் உண்மை நிதர்சனம்

ஏகனின் உண்மை நிதர்சனம் ஊன
விழிகள் காணா உத்தமம்

ஊன விழிகள் காணா உத்தமர்
ஏகனை இருதயங் காணும்

ஏகனை இருதயங் காணப் பருவுடல்
தேகமே திருமெய் யாகும்

தேகத்தைத் திருமெய்யாய்! உயிர்த்தெழச் செய்யுஞ்
ஞானத்தை அருள்வான்யார்? ஏகனே.

ஏகனே அம்மை யப்பனாய் இருதயத்
தோங்கிடும் சற்குரு நாதன்

சற்குரு நாதனே நபிகள் கிறிஸ்து
புத்தராம் ஏகனின் தூதன்

ஏகனின் தூதனாய்ப் பூமியில் வாழவே
தேகமெய் யெடுத்துளாய் நீ

ஏகனே பரப்பிரம்மம் பரமபிதா அல்லா(ஹ்)
நாமமாம் அனந்தமுந்தான் கொண்டான்

நாமமோ ரூபமோ இல்லான் ஏகனே
நாமமாய் ரூபமாய் இறைந்தான்

யாவுமே கடந்த கடவுள் ஏகனே
யாவுமாய் இறைந்த இறைமை

நாகமே கக்கும் நஞ்சினைத் தாண்டி
ஏகனை நெஞ்சுளே காண்

நாகரா
28-07-2010, 07:39 AM
ஏகன் அன்பாம் உண்மை
தூய நெஞ்சின் தன்(ண்)மை
மாயை என்னும் பொய்ம்மை
மாய மின்னும் மெய்ம்மை

அன்பை மறந்துத் துஞ்சும்
உன்னை எழுப்ப நெஞ்சுள்
தட்டும் பரம குருவைப்
பற்ற இரவு விடியும்

பரம குருவைத் தேடிப்
புறத்தே திரிந்துங் காணாய்
அகத்தே திரும்பி நாடு
உகந்தே அருவைக் கூடு

இறக்கும் மனித உருவைச்
சிறக்க மேலே ஏற்றிச்
சிரத்தைக் காலில் தேய்த்தோ
பரம ஏகன் காண்பாய்

பரம ஏகன் உண்மைத்
தரமே நேச நெஞ்சம்
தவமே மார்பைப் பிளக்க
ஏகனைப் பார்க்க லாகும்

அனந்த உருக்கள் பண்ணும்
மனத்தைத் திருப்பி நெஞ்சுள்
மின்னுங் குருவைக் கண்டு
சுத்த அருவைச் சேர்வாய்

சுத்த அருவுள் ஒன்றி
மின்னுஞ் சித்த குருவைப்
பற்ற நெஞ்ச குகையுள்
உய்வாய் இன்பங் காண்பாய்

மார்பின் இடமும் வலமும்
மேலுங் கீழும் நடுவும்
ஏழு தாழ்கள் திறக்க
ஏகன் மெய்ம்மை விளங்கும்

நாவை வாயுள் பூட்டு
பேச வேணாம் வீணே
ஏழு தாழ்கள் திறக்க
ஏகன் தாளைச் சேர்வாய்

மார்பில் கவனம் வைத்து
ஏகன் அன்பை உணர்வாய்
நேசன் உண்*மை பாயும்
ஏழு தாழ்கள் உடையும்

எளிய மார்க்கஞ் சொன்னேன்
கனிய வேண்டும் நெஞ்சம்
பனிக்க வேண்டுங் கண்மை
சரணம் ஏகன் பாதம்

நாகரா
29-07-2010, 11:13 AM
வார்த்தையுள் பிடிபடான் அல்லா - கருமனக்
கோட்டையுள் அடைபடான் வல்லான் - குருநபி
மார்க்கமாம்மெய் வழிராஜ பாட்டையை இருதய
தீர்க்கமேகாட் டுமாம்ஏகன் சரணம்
(இருதய தீர்க்கம் = நெஞ்சகக் கண்ணின் அதீத விழிப்பு)

நாகரா
30-07-2010, 03:52 PM
ஆதி மூலம் ஏகன் தானே
தானாய் ஓங்கும் பூரண மாகும்!
தானே தனக்குத் தார மாகித்
தானே தன்னைப் புணரும்! மகவாய்த்
தானே தன்னைப் பெற்றுக் கொள்ளும்!
தானே தானான நிலையே தந்தை*யாம்*
தானே நானெனும் நிலையே அம்மை*யாம்*
நானே நீயதுவாய் விரிநிலை பிள்ளை*யாம்*
மூவரும் பின்னிப் பிணைந்த ஏகனாம்
நேசமாய் உள்ளோம் யாமே அபயமாய்!
அம்மை யப்பன் சமேத சற்குரு
நெஞ்சுள் வாழும் ஏகன் யாமே!
சற்குரு வடிவாய் தேகமெய் யெடுத்த
உன்றனை அறிவாய்! "யாமெனும் அபயமாய்"
மண்மிசை விடிவாய்! ஏகன்மேல் ஆணை!

நாகரா
31-07-2010, 04:52 AM
தாயு மானவன் தந்தையு மானவன்
ஏகன் அவனே பிள்ளையு மானவன்
தந்தை என்பது அன்பின் இருப்பு
அன்னை என்பது அன்பின் இருப்பில்
ஊன்றிப் பாயும் அருளின் பெருக்கு
பிள்ளை என்பது அன்பின் இருப்பை
அருளின் பெருக்கைத் தன்னை ஒன்றெனக்
கருதும் யாமெனும் அபயச் சிறப்பு
அன்பின் இருப்பே தனிப்பெருங் கருணை
அருளின் பெருக்கே அருட்பெருஞ் ஜோதி
அபயச் சிறப்பே தயாவுரு வள்ளல்
அன்பின் இருப்பே ஏகன் நாமம்
அருளின் பெருக்கே ஆதி ரூபம்
அபயச் சிறப்பே போதி ஞானம்
ஏகன் ஆதி சமேத போதி
யாமென ஓங்கு அபய மாகி
பூமியில் நீஇரு தயவே யாகி
கிருஷ்ணன் புத்தன் கிறிஸ்து முகம்மது
முருகன் அன்னோர் சற்குரு வடிவமே
அவர்போல் ஆக அவர்தம் வழிப்படு(அவர் தாம் வகுத்த மெய் வழியில் நடை போடு, இதுவே
மெய்யான வழிபாடு)
தயவே தவமாய் புவிமேல் விழித்திரு
உருக்கள் அடங்கும் சற்குரு அருவம்
திருவாய் நெஞ்சுள் ஒளிந்தே ஒளிரும்
உருகக் கன்மனம் வெளிப்படும் இருதயம்
உருமெய்க் குள்ளது அன்பின் உயிர்நிலை
உருக்கள் அனந்தமும் விட்டே பற்றிடு
உருமெய்க் குள்ளே நெஞ்சுள் சற்குரு
உண்*மை உண்ணத் தருவார் அவரே
உண்மை சொன்னேன் சற்குரு சரணம்

நாகரா
28-12-2010, 06:42 AM
அல்லாஹ் மேலே இல்லை
அல்லாஹ் கீழே இல்லை
அல்லாஹ் வலத்தே இல்லை
அல்லாஹ் இடத்தே இல்லை
அல்லாஹ் முன்னே இல்லை
அல்லாஹ் பின்னே இல்லை
அல்லாஹ் இங்கே இல்லை
அல்லாஹ் அங்கே இல்லை
அல்லாஹ் மேலுங் கீழும்
வலமும் இடமும் முன்னும்
பின்னும் இங்கும் அங்கும்
எங்கும் இல்லா மையம்

அம்மையம் நெஞ்சுள் கண்டால்
அல்லாஹ் மேலே உண்டு
அல்லாஹ் கீழே உண்டு
அல்லாஹ் வலத்தே உண்டு
அல்லாஹ் இடத்தே உண்டு
அல்லாஹ் முன்னே உண்டு
அல்லாஹ் பின்னே உண்டு
அல்லாஹ் இங்கே உண்டு
அல்லாஹ் அங்கே உண்டு
அல்லாஹ் மேலுங் கீழும்
வலமும் இடமும் முன்னும்
பின்னும் இங்கும் அங்கும்
எங்கும் உள்ள மையம்

இல்லை உண்டு தாண்டி
நெஞ்சுள் அல்லாஹ் மையம்

தோன்றா அல்லாஹ் மையம்
தோன்றும் யாவின் மூலம்

அம்மையங் காணா மூடம்
மாயைப் பேயின் மூலம்

மார்பின் உள்ளே ஏகு
ஆழ நெஞ்சுள் ஊன்று
ஆதி இருதயந் தோன்றும்
ஜோதி குருநபி முகமது
போதி அருண்மய நிலவது
காட்டுந் தன்கரு அகமது
நேசன் அல்லாஹ் கதிரது
ஏகன் மையம் புதிரது
நாதன் தானே அவிழ்ப்பது

உயிர்மை அல்லாஹ் மறதி
உயிர்மெய் கொல்லும் விடமாம்
உயிர்மை அல்லாஹ் நினைப்பு
உயிர்மெய் கொள்ளும் அமுதாம்

அல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ்
என்றே அல்லும் பகலும்
நன்றே உள்ளம் உருக
நெஞ்சங் கனிய நினைப்பாய்
நல்லான் முகம்ம தருளால்
அல்லாஹ் மையங் காண்பாய்