PDA

View Full Version : காதல்னா சும்மாவா? - காலம் 2 - பாகம் 2



மதி
16-07-2010, 04:36 PM
வணக்கம்..

இது போன வருடம் எழுதிய காதல்னா சும்மாவா? கதையின் காலம் இரண்டு (அதாங்க சீசன் 2). காதலில் சிக்கிய அருண் என்ன ஆனான்? ஸ்ரேயாவின் மனதை ஜெயித்தானா? அவன் காதல் ஜெயித்ததா? இந்த கேள்விகளுக்கு விடை இதோ அடுத்த பாகத்தில்...



http://tamilmantram.com/vb/picture.php?albumid=57&pictureid=232




தற்போது எழுதிவரும் "உலகத்தில் எத்தனையோ பேர் இருக்க நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்?? (http://tamilmantram.com/vb/showthread.php?t=23925)" கதை முடிந்தவுடன் இது ஆரம்பமாகும்.

அதுவரை காலம் ஒன்றை படிக்க இங்கே (http://tamilmantram.com/vb/showthread.php?t=19474) சொடுக்கவும்..

இனி கொஞ்ச நாளைக்கு மன்றத்தை ஆண்டவனால கூட காப்பாத்த முடியாது..... :icon_b::icon_b::icon_b:

செல்வா
16-07-2010, 04:49 PM
ஆஹா... அடுத்த அஸ்திவாரம் தோண்ட ஆரம்பிச்சாச்சா... :)


அட்டைப்படம் ரொம்ப நல்லாருக்கு...

காத்து உங்கப்பக்கம் அடிக்குது தூத்திக்கோங்க... :)

அமரன்
16-07-2010, 11:08 PM
யப்பா.. மதி..

எப்படிப்பா இந்தப் படவேலை எல்லாம் செய்யுறீங்க. கொஞ்சம் சொல்லிக் குடுக்கிறது.

தாமரை
17-07-2010, 01:11 AM
முதல் காலக் கதையை அதுக்குள்ள எல்லாரும் ஒரு முறை மீள் பார்வை செஞ்சுட்டு வாங்க..

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=19474



அப்பதான் முதல் பெஞ்சு காலியாகும்.. நாம டபக்குன்னு உக்காந்துக்கலாம்..

அப்பவே சொன்னமில்ல...

"இதுல பார்ட் டூ எழுதறத்துக்கு சூப்பர் ஸ்கோப் இருக்கு...

பரவாயில்ல பரவாயில்லை..

அடுத்த கதை சீக்கிரமா எழுதுங்க."

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=19474

samuthraselvam
17-07-2010, 11:23 AM
அடுத்த கதையா? நான் சொன்ன யோசனை என்னாச்சு? சிட்டுக்குருவி கதை இல்லையா?

முகப்புப் படம் சூப்பர் மதி.... இனி ஓவியண்ணா இனி, இதழ் தொகுப்புக்கு அட்டைப் படத்துக்கு ஆள் பஞ்சமில்லை....
மதின்னா சும்மாவா?

அடுத்த காதலுக்கு வாழ்த்துகள்.... சீ கதைக்கு வாழ்த்துகள்....:lachen001:

மதி
17-07-2010, 12:46 PM
ஆஹா... அடுத்த அஸ்திவாரம் தோண்ட ஆரம்பிச்சாச்சா... :)


அட்டைப்படம் ரொம்ப நல்லாருக்கு...

காத்து உங்கப்பக்கம் அடிக்குது தூத்திக்கோங்க... :)
:D:D:D வேறென்ன வேலை

யப்பா.. மதி..

எப்படிப்பா இந்தப் படவேலை எல்லாம் செய்யுறீங்க. கொஞ்சம் சொல்லிக் குடுக்கிறது.
நான் ஒரு கத்துக்குட்டி. ஜாம்பவான்கள்ல்லாம் நிறைய பேர் மன்றத்துலேயே இருக்காங்களே...

முதல் காலக் கதையை அதுக்குள்ள எல்லாரும் ஒரு முறை மீள் பார்வை செஞ்சுட்டு வாங்க..

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=19474



அப்பதான் முதல் பெஞ்சு காலியாகும்.. நாம டபக்குன்னு உக்காந்துக்கலாம்..

அப்பவே சொன்னமில்ல...

"இதுல பார்ட் டூ எழுதறத்துக்கு சூப்பர் ஸ்கோப் இருக்கு...

பரவாயில்ல பரவாயில்லை..

அடுத்த கதை சீக்கிரமா எழுதுங்க."

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=19474
நீங்க ஒரு தீர்க்கதரிசி..:icon_b:

அடுத்த கதையா? நான் சொன்ன யோசனை என்னாச்சு? சிட்டுக்குருவி கதை இல்லையா?

முகப்புப் படம் சூப்பர் மதி.... இனி ஓவியண்ணா இனி, இதழ் தொகுப்புக்கு அட்டைப் படத்துக்கு ஆள் பஞ்சமில்லை....
மதின்னா சும்மாவா?

அடுத்த காதலுக்கு வாழ்த்துகள்.... சீ கதைக்கு வாழ்த்துகள்....:lachen001:
சிட்டுக்குருவி கதையெல்லாம் இல்லே.. இப்போதைக்கு டாக் கதை மட்டும் தான். அதைப் பத்தி படிக்கவே நேரம் சரியா இருக்கு..

முகப்புப்படம்... எல்லாம் சுட்டுப் போட்டது தான்..!!

Nivas.T
17-07-2010, 12:50 PM
மதி எப்டீங்க உங்களால மட்டும் முடியுது? :icon_rollout:

:icon_b: நீங்க ஒரு கதை களஞ்சியம் போங்க :icon_b: :D

செல்வா
17-07-2010, 01:55 PM
மதி எப்டீங்க உங்களால மட்டும் முடியுது?



மதியாலத்தான்.

Nivas.T
17-07-2010, 02:12 PM
மதியாலத்தான்.

:confused:

மதி
21-07-2010, 10:13 AM
(குறிப்பு: இந்தக் கதையில் வரும் கதாபாத்திரங்கள் மற்றும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. யாரையும் எதையும் குறிப்பிடுவன அல்ல. இந்தக் கதை புரிய முதல் பாகத்தை படிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்..)

காதல்னா சும்மாவா?! நடந்து ஒரு வருஷமிருக்கும்.

ஒரு வெள்ளிக்கிழமை சாயங்கால வேளை.

பெங்களூர் மாநகரின் புகழ்பெற்ற பப்.

மங்கலான ஒளி அங்கங்கே வீச பாதி வெளிச்சமும் பாதி இருட்டாயிருந்த அந்த பெரிய ஹாலே பிதுங்கி வழிந்தது. டீசர்ட் ஜீன்ஸ் போட்ட இளைஞர்களும் ஸ்லீவ்லெஸ் மற்றும் இன்னபிற லெஸ்களுடன் வெள்ளைத் தோல் யுவதிகளும் பாரபட்சமில்லாமல் வயசு வித்தியாசமில்லாமல் சுதி ஏற்றிக் கொண்டிருந்தனர். அந்த இடத்தில் எங்கேயும் எப்போதும் சந்தோஷம் சங்கீதம். வாலிபத்தைக் கடந்த பிஸினஸ்மேன்கள் பெருந்தொப்பைகளோடு வியாபாரம் பேச சுற்றி உட்கார்ந்து வம்பளத்துக் கொண்டிருந்தனர். சுவரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஸ்பீக்கரில் மேற்கத்திய இசை வழிந்து கொண்டிருந்தது. பேஸ்கிடாரில் எவனோ பாடிக் கொண்டிருந்தான். மாட்டியிருந்த பெரிய சைஸ் டிவியில் மௌனமாய் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். சற்றுத் தள்ளி உள்ளே போனால் இன்னும் கொஞ்சம் இருட்டாயிருந்தது. வருபவர்களின் வசதிக்கேற்ப தடுப்புச் சுவர்கள் வேற. தெரிந்த கொஞ்ச நஞ்ச வெளிச்சத்தில் நாளைய பாரதத் தூண்கள் ஜோடி ஜோடியாய் உட்கார்ந்திருந்தனர். மேஜையில் இருக்கும் பீர் பிண்ட்கள் முக்கால் வாசிக்கும் மேல் காலியாகி அவர்களின் தள்ளாட்டத்தை பறைசாற்றியது. வாய் திறந்தால் அமெரிக்கன் ஆங்கிலம் தான். ஏதோ வழி தடுமாறி வேற நாட்டுக்குள் வந்துவிட்டோமோ என்று சந்தேகம் வரும். அங்கே ஓரமாய் ஒய்யாரமாய் உட்கார்ந்திருந்த அந்த ஆபத்தான பெண் (அழகுனாலே ஆபத்து தானே) தன் காதலன் (நண்பன்) மேல் தொங்கிக் கொண்டு ஸ்டைலாய் சிகரெட்டை வாயில் வைத்து வளையம் வளையமாய் புகை விட்டாள். சுட்டுவிரலுக்கும் நடுவிரலுக்கும் நடுவில் விரல்களின் நுனியில் வலிக்காமல் அவள் சிகரெட்டை பிடித்திருந்த விதம் அழகு. அதிலும் அதன் முனையை சாயம் பூசிய தன் உதட்டோரமாய் வைத்து இழுத்தும் இழுக்காமலும் ஒத்தடம் கொடுத்தது அதை விட அழகு. யாரேனும் ரசிகன் இருந்தால் மிச்சமிருந்த சாயம் பட்ட அந்த சிகரெட்டை லட்சக் கணக்கில் ஏலத்திற்கு எடுத்திருப்பான். அவள் அணிந்திருந்த மேலாடையோ அவளை விட அபாயகரமாய் தொங்கியது. எதைப்பற்றியும் கவலைப்பட மக்கள் பூமியில் இருந்தால் தானே? வானத்தில் எங்கோ தூரமாய்… அளந்து பார்க்க பயணப்பட்டிருந்தனர்.

கதைக்கு வருவோம். ஓரமாய் ஒரு மூலையில் யாரும் தொந்தரவு செய்யாத வண்ணம் உட்கார்ந்திருக்கிறார்கள் அந்த மூவர். உங்களுக்கு முன்பே அறிமுகமானவர்கள் தான். அருண், கணேஷ் மற்றும் ஹரீஷ். அப்போது தான் வந்திருந்ததால் தெளிவாகவே இருந்தனர். ஆர்டர் எடுக்க பேரர் வந்ததும்…

அருண், “ஒரு பிண்ட் பியர். பீநட் மசாலா. ஃபிஷ் பிங்கர் ஒரு ப்ளேட். ஃப்ரைட் கேஷ்யூநட்ஸ்.”

திரும்பி,

“வேற என்னப்பா சொல்லட்டும்?”

ஹரீஷ் ஆர்வமாய்,

“இங்க கார்லிக் சிக்கன் சூப்பரா இருக்கும். ஒரு ப்ளேட் சொல்லிடுங்க.”

அவனை முறைத்தபடி பேரரிடம் அருண்,

“ஒன் ப்ளேட் கார்லிக் சிக்கன்”

பேரர் போனதும் ஹரீஷிடம் திரும்பி,

“இங்க எப்போடா வந்தே..? நீ இத ஆரம்பிச்சதே எனக்குத் தெரியாதே?”

“பேச்சுலர்ஸ் பார்ட்டி இங்க தான் கொடுத்தேன். நீங்க இரண்டு பேரும் தான் இல்லே.”

ஆம். இந்த ஒரு வருடத்தில் நிறைய மாற்றங்கள். ஹரீஷுக்கு கல்யாணமாகி விட்டிருந்தது. அதன் காரணமாக வயிற்றில் சின்னதாய் தொப்பை. ஸ்ரேயாவின் பின்னால் போன அருண் அதன்பின் ஒரு மாதத்திலேயே ப்ராஜக்ட் விஷயமாக அமெரிக்காவிற்கு ஆன்ஸைட்டுக்கு போய்விட்டான். அப்படியே வேற ப்ராஜக்ட் மாறிவிட்டான். கணேஷும் டீம் மாறி இந்தப்பக்கம் ப்ரான்ஸ் பக்கம் போய்விட்டான். ஹரீஷ் மட்டும் பெங்களூரில். ஹரீஷின் கல்யாணத்திற்கு இருவரும் வரவில்லை. வாழ்த்துகளை அனுப்பியதோடு சரி. அப்பப்போ கம்பனி மெசஞ்சரில் பேசிக்கொள்வர். ஆனாலும் வேலை பெண்டை நிமிர்த்தியதால் பழைய மொக்கைத் தனங்களை மறந்திருந்தனர். அருண் ஷ்ரேயாவுடன் சுத்திக்கிட்டு இருந்தது தெரிந்தாலும் அமெரிக்கா போனதும் என்னவாயிற்று என்பதை கேட்கவில்லை. அவரவர் வாழ்க்கைப்பயணத்தில் மூழ்கி இருந்த நிலையில் திரும்பவும் பெங்களூர் வந்தனர். ஒரு வருடத்திற்கு பின் ஒரு வார இடைவெளியில் இருவரும் வர பழைய ஜமாவை கூட்டியிருந்தனர். சின்னதாய் ஒரு பார்ட்டி.

“ம்ம்.. நடத்து நடத்து. உன் பொண்டாட்டிக்குத் தெரியுமா?”

“அன்னிக்கு ஒரு தடவ தான். போனதும் போன் பண்ணி சொன்னேன். கன்னாபின்னான்னு திட்டினா. இப்பல்லாம் நல்லா சமாளிக்க கத்துக்கிட்டேன்”

“ம்ம்.. அவனவன் கல்யாணம்னாலே கஷ்டம்னு புலம்பிக்கிட்டு இருக்கான்.”

“ஆமாமா.. அந்த கஷ்டத்த ஏன் கேக்கறீங்க..?”

“நாங்க கேக்கல.. கொஞ்சம் உள்ள போனதும் நீயா சொல்லுவ..”

அதுவரை அமைதியாக இருந்த கணேஷ் முதன் முறையாக சிரித்தான். அதுவரையில் பலத்த சிந்தனையிலிருந்தான்.

ஹரீஷ் அவனிடம் திரும்பி,

“என்ன பாஸ்.. ரொம்பவே அமைதியா இருக்கீங்க? என்னாச்சி?”

“இல்ல… வீட்ல கல்யாண பேச்சு எடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. அதான் என்ன பண்ணலாம்னு செம யோசனை”

“கவலைய விடுங்க. இதுக்கே கவலைப்பட்டா.. இன்னும் என்னன்னவோ இருக்கே..”

“சொல்லுவடா சொல்லுவ. நீ பரவாயில்ல.. ஆள் கொஞ்சம் பார்க்க நல்லாருக்க. உன் பொண்டாட்டிக்கும் உன்னை புடிச்சுப் போச்சு. என்னைப் பாரு.. புடிச்சு வச்ச புள்ளையாராட்டம். இப்போவே பாட்டி கன்னாபின்னானு திட்டறாங்க.. உடம்ப குறை உடம்ப குறைன்னு. நான் என்ன வேணாம்னா சொல்றேன்.”

அதற்குள் பேரர் ஐட்டங்களை கொண்டு வர ஆளுக்கு ஒரு க்ளாஸில் பீரை ஊற்றிக் கொண்டு சீயர்ஸ் சொல்லி குடிக்க ஆரம்பித்தனர்..

ஹரீஷ் தான்..

“ஸ்ஸ்… ரொம்ப நாளாச்சுங்க. நல்ல வேளை என் பொண்டாட்டி ஊருல இல்லே.. இல்லேன்னா பிச்சுருப்பா”

“ம்ம்.. இருடி.. எல்லாத்தையும் ரெக்கார்ட் பண்ணி உன் பொண்டாட்டிக்கிட்ட காட்டறேன்.”

“ஐயோ.. தெய்வமே.. தயது செஞ்சு அந்த ஒரு வேலைய மட்டும் பண்ணிடாதீங்க. ஏற்கனவே கன்னாபின்னானு அடி விழுது”

சோகமாய் கணேஷ்

“அடியெல்லாம் வேற விழுமாடா? என் அப்பா அம்மா கூட அடிச்சதில்ல. ஆனா கல்யாணம் பண்ணின ஒவ்வொருத்தன் கதைய கேட்க ரொம்பவே பயமாருக்கு. இப்படித் தான் ஒவ்வொருத்தனும் பயமுறுத்தறாங்க..”

“அதெல்லாம் கவலைப்படாதீங்க பாஸ். எல்லாம் அப்படி தான். ஒரு நாள் அணைச்சுக்கிட்டீங்கன்னா.. ஒரு நாள் அடிச்சிப்பீங்க. எல்லாம் சகஜம்ங்க. கல்யாணம் மட்டும் பண்ணிப்பாருங்க. எதை வேணா சாதிக்கலாம்னு தெம்பு வரும். இதையே தாங்கறோம். இனிமே எல்லாத்தையும் தாங்கலாம்னு”

ஹரீஷ் கணேஷை தேற்றினான். மௌனமாய் கார்லிக் சிக்கனை நோண்டிக்கொண்டிருந்த அருண்

“டேய் என்னடா சிக்கன்ல கார்லிக்கே காணல. இத தான் நல்லா இருக்கும்னு சொன்னியாக்கும்”

“அன்னிக்கு சூப்பரா இருந்துது பாஸ்.. ஆமா. எப்போ கேட்டாலும் உங்க கதைய சொல்றேன் சொல்றேன்னு சொல்றீங்களே தவிர சொல்ல மாட்டேங்கறீங்க. எங்ககிட்ட பெரிசா டயலாக்கெல்லாம் பேசிட்டு திடீர்னு காணாம போய்ட்டீங்க. அப்பறம் உங்கள டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு விட்டுட்டோம். ஆன்ஸைட்டுக்கும் ஓடிப்போயிட்டீங்க. ஷ்ரேயாவையும் இங்க காணல. போன்லேயும் அந்த பேச்ச மட்டும் எடுக்கல. என்னாச்சு உங்க காதல். நீங்க எழுதின கதை வேற சூப்பரா இருந்துச்சு. என்னாச்சு பாஸ்?”

சலிப்புடன் அருண்,

“அது ஒன்னு தான் கொறச்சல். எல்லாம் நல்லா தான் போயிட்டு இருந்துச்சு. அவ கூப்பிட்டான்னு நானும் ஓடினேன். நல்லா பேசினா. அவ ப்ராஜக்டே நான் தான் பண்ணி கொடுத்தேன்.”

“அதான் தெரியுமே.. உங்க வேலைய கூட நீங்க பார்க்காததால அப்ரைஸல் ஆப்பரைஸல் ஆச்சாம்ல”

“ம்ம். அதே தான். நான் ஆன்சைட்டுக்குக் கிளம்ப அவ எல்லாம் முடிச்சுட்டு சென்னைக்கு போனா. அமெரிக்காலேர்ந்து போன் பண்ணுவேன். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா பேசறத கொறச்சா.. நான் ப்ரப்போஸ் பண்ணலாம்னு இருந்த நேரத்துல திடீர்னு ஒருத்தன் பேர சொல்லி அவன காதலிக்கறதாவும் எப்படி ப்ரப்போஸ் பண்றதுன்னு தெரியலேன்னும் நான் தான் ஹெல்ப் பண்ணனும்னும் சொன்னா..”

“என்ன பாஸ். இப்படி சொல்றீங்க. நீங்க என்ன பண்ணுனீங்க?”

“என்ன பண்ண.. வழக்கம் போல குட் டிஸிஷன்னு சொல்லி என்னால முடிஞ்சத சொன்னேன். சக்ஸஸ் ஆயிடுச்சாம். அப்புறமா பேசறத கொறச்சுட்டா. அப்பப்போ மெயில் அனுப்புவா. அதில அவன பத்தி அதிகமா பேசுவா. வாழ்த்துகள்னு சொல்லி பதில் அனுப்புவேன். நான் ஐடியா சொல்ற காதல்லாம் சக்ஸஸ் ஆகுது. ஆனா எனக்கு மட்டும் ஏன்?”

அருண் சோக வயலின் வாசிக்க ஹரீஷ் சுவாரஸ்யமாக

“அடடா. இவ்ளோ நடந்துருக்கா.. அந்த கதைய படிச்சிட்டு நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க. இங்க வந்ததும் அனௌன்ஸ் பண்ணுவீங்கன்னு நெனச்சேன். ப்ச். இத எதிர்பாக்கல.”

“அதனால தான் நான் போன்ல கூட உங்ககிட்ட சொல்லல. ஆனா ஒன்னு கதை மட்டும் நல்லா இருந்துச்சுனு மெயில் அனுப்புனா. அவளுக்கு ரொம்ப தான் குசும்பு..”

“அட விடுங்க பாஸ்.. உங்க கதைய வச்சு தான் என் பொண்டாட்டிய இன்ப்ரஸ் பண்ணினேன். எப்படி இருந்த நான் உன்ன பாத்து எப்படி மாறிட்டேன்னு”

“நம்பிட்டாளா?”

“அவ புத்திசாலி. எனக்கு அவள விட்டா ஆள் கிடைக்காதுனு நல்லாவே தெரிஞ்சு வச்சிருக்கா…”

“ம்ம்.. பொழச்சுக்குவ..”

ரொம்ப நேரமாய் ஒரு க்ளாஸ் பீரை கஷ்டப்பட்டு முழுங்கிகிட்டு இருந்த கணேஷ் பக்கம் திரும்பினர்.

“ஏன் டா என்ன ஆச்சு? ரொம்ப கஷ்டப்படற போலிருக்கு? ப்ரான்ஸ் போய் மொடாக்குடியன் ஆனேன்னு கேள்விப்பட்டேன்”

“ஹஹா.. எவனோ போட்டு குடுத்திருக்காங்க. கொஞ்சமா தான் குடிப்பேன். அதிகம்ல்லாம் இல்லே. நான் அதிகமா சாப்பிட்டது ப்ரஞ்ச் ப்ரைஸ் தான். பாத்தாலே தெரியுதுல்ல.”

“அது சரி… ஆமா ப்ரான்ஸ்ல ப்ரஞ்ச் ப்ரைஸ எப்படி சொல்லுவாங்க..”

“ம்ம்.. ப்ரீட்ஸுன்னு..”

“சரி..சரி.. உன் கதைய சொல்லு.. ப்ரான்ஸ்ல என்னல்லாம் பண்ண..?”

“அடப்போங்கடா.. போனேன்னு தான் பேரு. பாரீஸ கூட முழுசா சுத்திப்பாக்கல”

“நீ ஒரு வெட்டிடா. எப்போ பாத்தாலும் எதையாவது சாக்குபோக்கு சொல்லிக்கிட்டு”

நேரம் ஆக ஆக அவர்களின் பேச்சு குழற ஆரம்பித்தது. ஒருத்தரை ஒருத்தர் திட்டிக் கொள்வதிலும் ஓட்டுவதிலும் மிகுந்த அக்கறையோடு இருந்தனர். ஒருவருஷத்துக்கு அப்புறம் நடக்கற சந்திப்பு ஆச்சே. டான்ஸ் ப்ளோர் ஆரம்பித்ததும் தள்ளாட்டத்துடன் எழுந்து அருண் ஆட போய்விட்டான்.

வியர்க்க விறுவிறுக்க அரைமணிநேரம் ஆடிவிட்டு தள்ளாடிக்கிட்டே அவன் இடத்திற்கு வருவதற்கும் அவனது செல்போன் மணி அடிப்பதற்கும் சரியாக இருந்தது.

Akila.R.D
21-07-2010, 11:06 AM
அடடா பரவாயில்லயே மதி...
இந்தக் கதையிலயும் அரட்டை இரண்டு பக்கத்துக்கு போயிடும் பார்த்தேன்...

சீக்கிரம் கதையை ஆரம்பிச்சுட்டீங்க...

இதே வேகத்துல கொண்டு போங்க...

samuthraselvam
21-07-2010, 11:10 AM
குடிகாரப் பசங்க... அப்புறம்......

மதி
21-07-2010, 11:50 AM
குடிகாரப் பசங்க... அப்புறம்......
ஹாஹா...:icon_ush::icon_ush:
பாவன் அருண், ஹரீஷ் மற்றும் கணேஷ்... இப்படி திட்டறீங்க... :cool::cool:

அப்புறம்.... :fragend005:

மதி
21-07-2010, 11:51 AM
அடடா பரவாயில்லயே மதி...
இந்தக் கதையிலயும் அரட்டை இரண்டு பக்கத்துக்கு போயிடும் பார்த்தேன்...

சீக்கிரம் கதையை ஆரம்பிச்சுட்டீங்க...

இதே வேகத்துல கொண்டு போங்க...
:D:D
கதையை தேடுவோம்.. கதை பண்றது இருக்கே...ஸ்ஸ்.. யப்பா...!!!

அதுவும் பப்பெல்லாம் எப்படி இருக்கும்னு அங்க போனவங்ககிட்ட விசாரிச்சு... எவ்ளோ கஷ்டப்பட வேண்டியிருக்கு...:traurig001::traurig001::traurig001:

Nivas.T
21-07-2010, 04:43 PM
மதி அற்புதம் உங்க கதையோட காலம் 1 படிச்சுட்டுதான் வந்தேன் எவ்வளவு அழகான ஒரு காதல் கதை:) அத டப்புன்னு முடிச்சிட்டீங்கலே:confused:. உங்க சொந்த கதைன்னாலும் இன்னும் கொஞ்சம் சொல்லிருக்க கூடாதான்னு தோனுது:rolleyes:. அதோட என்னோட:confused: பழைய நினைவுகளும்..........:icon_ush:

அது சரி
பீர ராவா அடிச்சாங்களா, இல்ல தண்ணி கலந்து அடிச்சாங்களா?:lachen001:

Nivas.T
21-07-2010, 05:06 PM
//நான் ப்ரப்போஸ் பண்ணலாம்னு இருந்த நேரத்துல திடீர்னு ஒருத்தன் பேர சொல்லி அவன காதலிக்கறதாவும் எப்படி ப்ரப்போஸ் பண்றதுன்னு தெரியலேன்னும் நான் தான் ஹெல்ப் பண்ணனும்னும் சொன்னா..”// :confused: :traurig001:

//ஆனா ஒன்னு கதை மட்டும் நல்லா இருந்துச்சுனு மெயில் அனுப்புனா.//:traurig001:

இந்த பொண்ணுங்கலே இப்படிதான் எசமான்:sauer028:


சரி விடுங்கப்பா படம்னா ஒப்பெனிங்ல பைட் வைக்கிறதும் பஞ்சாயத்துன்னா பெட்டர்மாஸ் லைட் வைக்கிறதும் சகஜம்தான:lachen001:

மதி
21-07-2010, 06:36 PM
மதி அற்புதம் உங்க கதையோட காலம் 1 படிச்சுட்டுதான் வந்தேன் எவ்வளவு அழகான ஒரு காதல் கதை:) அத டப்புன்னு முடிச்சிட்டீங்கலே:confused:. உங்க சொந்த கதைன்னாலும் இன்னும் கொஞ்சம் சொல்லிருக்க கூடாதான்னு தோனுது:rolleyes:. அதோட என்னோட:confused: பழைய நினைவுகளும்..........:icon_ush:

அது சரி
பீர ராவா அடிச்சாங்களா, இல்ல தண்ணி கலந்து அடிச்சாங்களா?:lachen001:
ஹாஹா.. சொந்த கதை..ஆமா.. உண்மையிலேயே என் சரக்கு தான்.. ஆனா எது உண்மையா நடந்தது.. எது கலந்ததுங்கறதுல தான் த்ரில்லே...:D:D:D.

காலம் 2-கும் காலம் 1-கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லேங்கறதாலேயும்.. அதில வர்ற கதாபாத்திரங்களையே இந்த கதைக்கும் பயன்படுத்தலாம்ங்கற எண்ணத்திலேயும் வந்தது தான் இந்த காலம்..:icon_ush::icon_ush::icon_ush::icon_ush:. மத்தபடி... பீர எப்படி அடிச்சாங்கன்னு சரியா தெரியல.. :eek::eek::eek::eek:

அது சரி.. உங்க நினைவுகளை கொஞ்சம் எடுத்துவிடறது:icon_b:

ஆதவா
22-07-2010, 07:33 AM
(குறிப்பு: இந்தக் கதையில் வரும் கதாபாத்திரங்கள் மற்றும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. யாரையும் எதையும் குறிப்பிடுவன அல்ல.


நம்பிட்டோம்!

ஆதவா
22-07-2010, 07:43 AM
நல்லா குடியும் குடித்தனமுமாத்தான் கதை போகுது....

வசனம் எல்லாம் சூப்பர்.. ஜோடனை இல்லாமல்.. யதார்த்தம். இந்த கதை “மார்க்+ஜெஸி” கதைமாதிரி சட்டுனு முடியாம இருக்கட்டும்...

அடுத்த பாகம்............. நோக்கி

மதி
22-07-2010, 07:53 AM
நன்றி ஆதவரே... அடுத்த பாகம்.. விரைவில்... இந்த கதையும்... நாலஞ்சு பாகத்தைத் தாண்டாதுன்னு நினைக்கிறேன்.. :eek::eek:

Nivas.T
22-07-2010, 08:02 AM
இந்த கதையும்... நாலஞ்சு பாகத்தைத் தாண்டாதுன்னு நினைக்கிறேன்.. :eek::eek:
:confused: :confused: :confused: :confused:
:traurig001: :traurig001: :traurig001: :traurig001: :traurig001:

Nivas.T
22-07-2010, 08:03 AM
அது சரி.. உங்க நினைவுகளை கொஞ்சம் எடுத்துவிடறது:icon_b:

:icon_rollout: :icon_rollout: :icon_rollout:

மதி
22-07-2010, 08:13 AM
:icon_rollout: :icon_rollout: :icon_rollout:
இப்ப என்ன சொல்லிட்டேன்னு சின்னப்புள்ளையாட்டம்... அழக்கூடாது...!!! :icon_ush::icon_ush:

Nivas.T
22-07-2010, 08:27 AM
இப்ப என்ன சொல்லிட்டேன்னு சின்னப்புள்ளையாட்டம்... அழக்கூடாது...!!! :icon_ush::icon_ush:

:lachen001: எனக்கும் ஆசை தான் மதி:) ஆனா எனக்கு கோர்வையா எழுத வராது :eek:இருந்தாலும்... பார்க்கலாம்:rolleyes:. உங்களையெல்லாம் பாத்தா தான் கொஞ்சம் பாவமா இருக்கு:mad: .... உங்களை தற்கொலை செய்யனுமான்னு?:lachen001:

மதி
22-07-2010, 08:30 AM
:lachen001: எனக்கும் ஆசை தான் மதி:) ஆனா எனக்கு கோர்வையா எழுத வராது :eek:இருந்தாலும்... பார்க்கலாம்:rolleyes:. உங்களையெல்லாம் பாத்தா தான் கொஞ்சம் பாவமா இருக்கு:mad: .... உங்களை தற்கொலை செய்யனுமான்னு?:lachen001:
எல்லோரும் பிறக்கும்போதேவா எழுத கத்துக்கிட்டு வராங்க... நான் எல்லோரையும் பாத்து கத்துக்கிட்டு இருக்கற மாதிரி.. நீங்களும் வாங்க.. சேர்ந்தே கத்துக்கலாம்... இதுக்கெல்லாம் யாராச்சும் தற்கொலை செஞ்சுப்பாங்களா ? :icon_b:

ஆதவா
22-07-2010, 08:50 AM
:confused: :confused: :confused: :confused:
:traurig001: :traurig001: :traurig001: :traurig001: :traurig001:

நாலஞ்சு பாகம் இருக்கான்னு அழுகிறீங்களா?
இல்லை
நாலஞ்சுதான் இருக்கான்னு அழுகிறீங்களா?

மதி
22-07-2010, 09:12 AM
நாலஞ்சு பாகம் இருக்கான்னு அழுகிறீங்களா?
இல்லை
நாலஞ்சுதான் இருக்கான்னு அழுகிறீங்களா?
இப்படியும் இருக்கோ...???:rolleyes::rolleyes::eek::eek::wuerg019::wuerg019:

Nivas.T
22-07-2010, 09:36 AM
நாலஞ்சு பாகம் இருக்கான்னு அழுகிறீங்களா?
இல்லை
நாலஞ்சுதான் இருக்கான்னு அழுகிறீங்களா?

ஆதவா சும்மா சொல்லகூடாதுங்க:D, பயங்கரமான ஆளுங்கோ!:eek:
இப்ப சொல்றேன் அரசியல்ல உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு:icon_b:

"என்ன ஒரு வில்லத்தனம்" :rolleyes:

:lachen001::lachen001::lachen001:

மதி
22-07-2010, 09:39 AM
ஆதவா சும்மா சொல்லகூடாதுங்க:D, பயங்கரமான ஆளுங்கோ!:eek:
இப்ப சொல்றேன் அரசியல்ல உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு:icon_b:

"என்ன ஒரு வில்லத்தனம்" :rolleyes:

:lachen001::lachen001::lachen001:
ஆதவன்னா.. சும்மாவா??? சூரியனாச்சே... :icon_b::icon_b:

ஆதவா
22-07-2010, 09:49 AM
நம்மளவிட பெரிய வில்லத்தனம் இன்னொருத்தர்கிட்ட இருக்குங்க.... நாமள்ளாம் சும்மா... தம்மாத்தூண்டு..

சுடர்விழி
22-07-2010, 01:29 PM
முதல் பாகம் இப்ப தான் படிச்சேன்...ரொம்ப நல்லா இருக்கு.....இரண்டாம் பாகத்தில் நண்பர்கள் கூட்டணி என்ன பண்ண போறாங்களோ ! உங்க எழுத்து நடை வித்தியாசமாகவும் ரசிக்கும்படியாகவும் இருக்கு....பாராட்டுக்கள்

மதி
22-07-2010, 02:02 PM
முதல் பாகம் இப்ப தான் படிச்சேன்...ரொம்ப நல்லா இருக்கு.....இரண்டாம் பாகத்தில் நண்பர்கள் கூட்டணி என்ன பண்ண போறாங்களோ ! உங்க எழுத்து நடை வித்தியாசமாகவும் ரசிக்கும்படியாகவும் இருக்கு....பாராட்டுக்கள்
நன்றி சுடர்விழி..

அன்புரசிகன்
23-07-2010, 12:48 AM
மதி பாஸ்... நீங்கள் பீர் எல்லாம் அடிப்பீங்களா? ம். நடத்துங்க. நடத்துங்க....
அப்புறம்? யார் போன் பண்ணினாங்க?

அன்புரசிகன்
23-07-2010, 12:48 AM
நம்மளவிட பெரிய வில்லத்தனம் இன்னொருத்தர்கிட்ட இருக்குங்க.... நாமள்ளாம் சும்மா... தம்மாத்தூண்டு..
நீங்க தம்மன்னாத்துண்ணு என்றல்லவா அறிந்தேன்.

மதி
23-07-2010, 02:55 AM
மதி பாஸ்... நீங்கள் பீர் எல்லாம் அடிப்பீங்களா? ம். நடத்துங்க. நடத்துங்க....
அப்புறம்? யார் போன் பண்ணினாங்க?
ஹாஹா... எழுதறதெல்லாம் என்னைப்பத்தின்னு முடிவு பண்ணிட்டா... :D:D:D:D:D

மதி
23-07-2010, 02:56 AM
நீங்க தம்மன்னாத்துண்ணு என்றல்லவா அறிந்தேன்.
:D:D:D:eek::eek::eek:

தாமரை
23-07-2010, 04:33 AM
ஹாஹா... எழுதறதெல்லாம் என்னைப்பத்தின்னு முடிவு பண்ணிட்டா... :D:D:D:D:D

இல்லை இல்லை.. அவங்களைப் பற்றியும் நீங்க எழுதறீங்கன்னு ஒத்துக்கறோம். :rolleyes::rolleyes::rolleyes:

ஆதவா
23-07-2010, 04:37 AM
நீங்க தம்மன்னாத்துண்ணு என்றல்லவா அறிந்தேன்.

ஆஹா... நன்றி அன்பு.....

நீங்க சொன்னது தேன் வந்து பாய்ச்சறமாதிரி இருக்கு..... :209:

தம்மன்னாத்துண்ணு.. - தம்மன்னா-துண்ணு - தமன்னாதுன்னு...... அதாவது நான் தமன்னாவுக்காவே பிறந்தவன்னு!!!! :D :icon_give_rose:

மதி
23-07-2010, 04:56 AM
இல்லை இல்லை.. அவங்களைப் பற்றியும் நீங்க எழுதறீங்கன்னு ஒத்துக்கறோம். :rolleyes::rolleyes::rolleyes:
இந்த கதையும் உங்களுக்குத் தெரியும்னு..ஹூம்..:eek::eek:

மதி
23-07-2010, 04:57 AM
ஆஹா... நன்றி அன்பு.....

நீங்க சொன்னது தேன் வந்து பாய்ச்சறமாதிரி இருக்கு..... :209:

தம்மன்னாத்துண்ணு.. - தம்மன்னா-துண்ணு - தமன்னாதுன்னு...... அதாவது நான் தமன்னாவுக்காவே பிறந்தவன்னு!!!! :D :icon_give_rose:
நெனப்பு தான்.. கெடுக்கும்னு சொல்லுவாக..:icon_b:

ஆதவா
23-07-2010, 05:33 AM
Top Posters ல் மதி பேர்தான் முண்ணனியில இருக்கு.... அன்னாத்தேக்கு வேலை இல்லைன்னு இப்படியெல்லாம் தெரிஞ்சுவேண்டியதா இருக்கு.........

மதிக்கு அடுத்து நாந்தாம்லே.....

அன்புரசிகன்
23-07-2010, 06:03 AM
நீங்க வேற. அவர் லீவு போட்டு பொண்ணு தேடுறாராம்... :icon_ush:

ஆதவா
23-07-2010, 06:11 AM
நீங்க வேற. அவர் லீவு போட்டு பொண்ணு தேடுறாராம்... :icon_ush:

:lachen001::lachen001:

அப்படின்னா, அடுத்து வேலைக்கு சேரமாட்டார்னு சொல்லுங்க.... பொண்ணு கிடைச்சாத்தானே வேலை!! :aetsch013:

samuthraselvam
23-07-2010, 10:00 AM
நீங்க சொல்லுறதை பார்த்தால் வேலைக்கே போக மாட்டார் போல இருக்கே....

ஏங்க மதி அப்படியா?

நீங்க சென்னை போங்க, அங்க உங்கள கூட்டு சேர்க்க உங்களை மாதிரியே ஒருத்தர் இருக்காரில்லையா? அவர்கூட இருந்தா நெறைய பொண்ணு பார்க்கலாம். அவரோட பார்ட் டைம் ஜாப்பே அதுதானாம்...ஹா ஹா....

மதி
23-07-2010, 10:05 AM
நீங்க சொல்லுறதை பார்த்தால் வேலைக்கே போக மாட்டார் போல இருக்கே....

ஏங்க மதி அப்படியா?

நீங்க சென்னை போங்க, அங்க உங்கள கூட்டு சேர்க்க உங்களை மாதிரியே ஒருத்தர் இருக்காரில்லையா? அவர்கூட இருந்தா நெறைய பொண்ணு பார்க்கலாம். அவரோட பார்ட் டைம் ஜாப்பே அதுதானாம்...ஹா ஹா....
இப்போவே தண்டோரா போட சொல்லியாச்சு...!!! :icon_b::icon_b:

samuthraselvam
24-07-2010, 03:15 AM
இப்போவே தண்டோரா போட சொல்லியாச்சு...!!! :icon_b::icon_b:

தண்டோரா போடறது சரி.. சம்பந்தப்பட்டவருக்கு மட்டும் கேட்காம போடுங்க:icon_ush:, இல்லன்ன அவர் என்னை போட்டுடுவார்...:eek: ஒரு நல்லவரை(?!?!?):lachen001: கொலைகாரரா மாத்திறாதீங்க....:D

மதி
24-07-2010, 04:02 AM
தண்டோரா போடறது சரி.. சம்பந்தப்பட்டவருக்கு மட்டும் கேட்காம போடுங்க:icon_ush:, இல்லன்ன அவர் என்னை போட்டுடுவார்...:eek: ஒரு நல்லவரை(?!?!?):lachen001: கொலைகாரரா மாத்திறாதீங்க....:D
இப்போவே கத்தியோட அலைஞ்சுக்கிட்டு இருக்கறதா கேள்வி.. பாத்து சென்னை பக்கம் போயிடாதீங்க:eek::eek::eek:

ஆதவா
24-07-2010, 04:20 AM
இப்போவே கத்தியோட அலைஞ்சுக்கிட்டு இருக்கறதா கேள்வி.. பாத்து சென்னை பக்கம் போயிடாதீங்க:eek::eek::eek:

கத்தியோட அலையறாரா? இல்லை கத்திட்டே அலையறாரா? :aetsch013:

மதி
24-07-2010, 04:40 AM
கத்தியோட அலையறாரா? இல்லை கத்திட்டே அலையறாரா? :aetsch013:
கத்திக்கிட்டே கத்தியோட அலையறதா கேள்வி..!!:eek::eek::eek::eek:

மதி
27-07-2010, 10:25 AM
போதையின் உச்சத்தில் இருந்த அருண் தன் செல்போனை எடுத்துப் பார்த்தான்.

“Mani Calling..”

மணி அவன் நெருங்கிய நண்பர்களுள் ஒருவன். அதே பெங்களூரின் மறுமுனையில் இருக்கும் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கிறான். கை நிறைய சம்பளம், சொந்தமாய் ஒரு வீடு மற்றும் கார் என ஏகபோக வாழ்க்கை வாழ்பவன். அவனை அருண் சந்தித்தது சென்னையில்.

ஆறேழு வருடங்களுக்கு முன் சென்னையில் எல்லோரும் வேலை தேடிக்கொண்டிருந்த சமயம். அசோக்பில்லருக்கருகில் ஒரு குடியிருப்பில் மூன்றாம் மாடியில் அருணும் அவன் நண்பர்களும் வீடு பிடித்துத் தங்கியிருந்தனர். தினமும் காலையில் எழுந்ததும் குளித்து கிளம்பி ஒவ்வொரு கம்பெனியாக படையெடுக்க வேண்டியது தான் அவர்கள் வேலை. டிப்டாப்பாக டிரஸ் செய்து கொண்டு ஆளாளுக்கு மாற்றி மாற்றி ஷூவைப் போட்டு பஸ் பிடித்து ஐ.டி.பி.எல் மற்றும் இதர கம்பெனி வாயிலில் தவம் கிடந்தனர். அப்போதெல்லாம் இருக்கும் கொஞ்ச நஞ்ச பணத்தில் மிச்சம் பிடித்து வாரம் தவறாமல் சினிமா செல்வதும் வாரயிறுதியில் ஸ்பென்ஸர் மற்றும் மெரினாவில் சுற்றுவதும் தான் பொழுதுபோக்கு.

அப்போது அறிமுகமானவன் தான் மணி. பார்க்க வாட்டசாட்டமாய் கொஞ்சம் கருப்பாய் சுருளான முடியுடன் இருந்தான். ஒரு கம்பெனி வாக்-இன் என்று கேள்விப்பட்டு அரக்கபரக்க அருண் ஓடிய வேளையில் மணியும் அங்கே தான் இருந்தான். அப்போது நடந்த தள்ளுமுள்ளுவின் அருண் கீழே விழ மணி தான் அவனை தூக்கிவிட்டான். அப்போது ஆரம்பித்தது அவர்கள் நட்பு. கொஞ்சம் கொஞ்சமாய் அருணின் கூட்டத்தில் ஐக்கியமாகிவிட்டான். ஒவ்வொருத்தராய் வேலை கிடைத்து செல்ல அருண் பெங்களூர் வர அவன் கூடவே மணியும் வந்துவிட்டான்.

இருவரும் எப்படியோ கஷ்டப்பட்டு ஆளுக்கொரு கம்பெனியில் ஒட்டிக்கொள்ள இதோ ஆறு வருடங்களுக்குப் பின் நல்லதொரு நிலைமையில் இருக்கின்றனர். அவன் தான் கூப்பிடுகிறான் அதுவும் நள்ளிரவில்.

போனை எடுத்த அருண்..

“என்னடா.. இந்த நேரத்துல?”

“ஏன்.. மப்பு போட்டுட்டு இருக்கியா..?”

“ஆமா.. சும்மா ஆபிஸ் ப்ரண்ட்ஸ் கூட.. ரொம்ப நாளாச்சு அதான்..”

“முன்னல்லாம் சேந்து தான் மப்பு போடுவோம். இப்பல்லாம் கூப்பிட மாட்டேங்கற..”

“என்னா பண்றது.. நீ பாட்டுக்கு வீடு வாங்கிட்டு ஊருக்கு அந்தப்பக்கமா போயிட்ட.. உன்ன கூப்பிட்டு நீ கிளம்பி வரத்துக்குள்ள மூடே போயிடும்.. நீ மட்டும் என்னவாம்.. எவ எவ கூடயோ பப்புக்கு போய் போட்டோ எடுத்து ஆர்குட்ல போடுற.. கேட்டா டான்ஸ் க்ளாஸ் பழக்கம்.. சும்மா ப்ரண்ட்ஸ்னு சொல்ற.. யாருக்குத் தெரியும்..?”

“டேய்..நிஜமாயே ப்ரண்ட்ஸ் தான் டா. அவங்கல்லாம் பெரிய இடத்து பொண்ணுங்க.. ரொம்ப நல்லவங்க..”

“என்னமோ போ.. தனியா வேற அபார்ட்மெண்ட்ல இருக்க.. ஏதாச்சும் லிவிங் டு கெதரா..? உண்மைய சொல்லிடு. உன் அம்மா அப்பாக்கிட்ட சொல்லி சீக்கிரம் பொண்ணு பாக்க சொல்றேன்..”

“ஹாஹா.. அங்க மட்டும் என்ன வாழுதாம். முதல்ல நீ கல்யாணம் பண்ணு. நானாச்சும் பொண்ணுங்க கூட பப்புக்கு போறேன்.. நீ ஏதாச்சும் ஒரு பொண்ண இண்ட்ரட்யூஸ் பண்ணிருக்கியா.. கேட்டா பெத்த கம்பெனியில வேல பாக்கறேன்னு பெரும வேற..”

“யேய்.. என்ன பத்தி என்ன வேணும்னாலும் சொல்லு. கம்பெனி என்ன பண்ணுச்சு. நான் மாட்டுன டிபார்ட்மெண்ட் அப்படி. சுத்தி முத்தி பொண்ணுங்களே கிடையாது. அதுக்காக.. நான்ல்லாம்.. அந்தக் காலத்துல.. ஸ்கூல் படிக்கும் போதே…”

“போதும் போதும்.. எத்தினி தடவ தான் இந்த கதைய கேக்கறது. மப்புல இருக்கும் போது போன் போட்டது என் தப்பு.. சரி.. ஒரு முக்கியமான விஷயத்த பத்தி பேசத் தான் கூப்பிட்டேன்”

அதுவரை நடந்த சம்பாஷணைகளை ஆற அமர கேட்டுக் கொண்டிருந்தனர் ஹரீஷும் கணேஷும்.

“ம்ம்.. சொல்லுடா..”

“இப்போ சொல்லலாமா.. இல்ல நாளைக்குப் பேசட்டுமா.. உன் நிலைமையே சரியில்ல..”

“டேய்.. உனக்கே தெரியும். என்னிக்கும் கண்ட்ரோல் மீறிப் போனதில்ல. சும்மா சொல்லு.”

“ஒரு லைஃப் மேட்டர். அதான்.”

“அட சொல்லித் தொலைடா…”

“அது… என் ஃப்ரண்ட் ஒருத்தனுக்கு உங்க கம்பெனியில வேலைப் பாக்கற பொண்ண கல்யாணத்துக்கு பாக்கறாங்களாம். இப்போ தான் ஜாதகம் வந்திருக்கு போல. இதான் மொத பொண்ணுங்கறதால பையன் ரொம்ப ஆர்வமா இருக்கான். அந்த பொண்ணப் பத்தின டீடெயில்ஸ் கலக்ட் பண்ணனும். உன்னால முடியுமா..?”

“வாவ்.. பையன் யாரு.. உன் கூட வேல பாக்கறவனா?”

“ஆமா பேர். கிருஷ்ணா. என் டீம்ல தான் இருக்கான். ஒரு நிமிஷம் அவன்கிட்டேயே கொடுக்கறேன்”

“ஹலோ.. பாஸ். நான் கிருஷ்ணா.”

“ஹலோ சொல்லுங்க பாஸ்…மணி மேட்டர சொன்னான்.”

“ஆமா. வீட்ல பாத்துட்டு இருக்காங்க. ஜாதக பொருத்தத்திற்கு ஜோசியர பாக்கணும்னு சொல்றாங்க. அதுக்குள்ள முடிஞ்சா பொண்ணு எப்படினு தெரிஞ்சுக்கலாம்னு.”

“ஓ.. பேஷா”

“நீங்க ஒன்னும் தப்பா எடுத்துக்கலியே..”

“சேச்சே.. என்ன பாஸ் இப்படி சொல்லிட்டீங்க. இத ஒரு சமூக சேவையாவே பண்ணிட்டு வர்றேன். சுவாரஸ்யமான விஷயம் இது. என்ன இது வரை பசங்கள பத்தி மட்டும் தான் விசாரிச்சுருக்கேன். மொத தடவையா பொண்ண பத்தி விசாரிக்கறேன்”

“ஓ….”

உற்சாகமாய் அருண்

“ஆமாம்..பாஸ். என்னால ஒரு பையனோட ஒரு கல்யாணமே நின்னு போயிருக்கு..ஹாஹா”

“என்ன சொல்றீங்க..?”

“வேற ஒன்னுமில்ல. ஒரு பையன பத்தி விசாரிச்சேன். அவன் பழைய கம்பெனியில ஒரு பொண்ணு மேட்டர்ல தான் வெளிய வந்தானாம். அத பொண்ணு வீட்டுக் காரங்களுக்கு சொன்னேன். அவங்களும் அந்த கம்பெனியில விசாரிச்சுட்டு நிறுத்திட்டாங்க… சரி. பொண்ண பத்தின டீடெயில்ஸ் குடுங்க..”

“ம்ம்.. அத மறந்துட்டேனே. பொண்ணு பேர் வித்யா. அப்பா பேரு கோபாலன். ரெண்டு வருஷமா அங்க தான் வேலை பாக்குறதா சொன்னாங்க..”

“சூப்பர்.. இந்த டீடெயில்ஸ் போதும். மத்ததெல்லாம் நான் பாத்துக்கறேன். இன்னும் ரெண்டுநாள்ல கால் பண்ணுங்க. நம்பர மணிக்கிட்ட வாங்கிக்குங்க..”

“ஓக்கே..பாஸ். ராத்திரி நேரத்தில டிஸ்டர்ப் பண்ணிட்டேன்.. தாங்க்ஸ்.. மணிக்கிட்ட தர்றேன்..”

போன் கைமாற

“என்னடா.. எல்லாத்தையும் கேட்டுக்கிட்டியா?”

“மணி.. எங்கேர்ந்துடா புடிக்கற இந்த மாதிரி ஆளுங்கள எல்லாம். சரி இன்னும் ரெண்டு நாள்ல ஏதாச்சும் கேட்டு சொல்றேன்”

“ம்ம்.. ஓக்கே டா. இந்த மாதிரி விஷயத்துக்கெல்லாம் உன்ன விட்டா யார் இருக்கா..”

“சரி. போதும் போனை வைய்யி.. ஏற்கனவே இங்க மொறைக்க ஆரம்பிச்சுட்டாங்க. அப்புறம் பேசறேன்..”

போனை வைத்ததும் இருவரையும் பார்த்தான் அருண். அந்த போதையிலும் முறைத்துக் கொண்டிருந்தனர். கணேஷ் தான் வாயைத் திறந்தான்.

“ஏன் டா. இத்தனை நாளாகியும் இன்னும் அந்த பழக்கத்த விடலியா?”

“எந்த பழக்கம்..”

“ம்ம்.. போன்ல மொக்க போடுறது.. யார் போன் போட்டாலும் ஒரு மணி நேரத்துக்கு பேச வேண்டியது…”

“விடுடா.. எல்லாம் ஒரு பொண்ணு கெடக்கிற வரைக்கும் தான்.. “

ஹரீஷ் ஆர்வமாய்..

“அப்புறம்..?”

“அந்த பொண்ணு கூட மொக்க போட வேண்டியது தான்..”

“சுத்தம்.. பாஸ். என் அனுபவத்துல சொல்றேன். அதிகமா பேசுறேன்னு கன்னாபின்னானு பேசினீங்கன்னா ஒரு பொண்ணும் ஏறெடுத்துப் பாக்க மாட்டா. ரெண்டு பொண்ணுக்கிட்ட பேசி அவஸ்தைப்பட்டு மூணாவதா அந்த பொண்ணு பேசறத கேட்டதால தான் எனக்கு கல்யாணமாச்சு. தெரிஞ்சுக்கோங்க..”

கணேஷ் முகம் சுருங்கியது. நேரம் ஆக ஆக அந்த பப்பை இருட்டு சூழ அனைவரும் உச்சநிலையில் ஆடிக் கொண்டிருந்தனர். கணேஷ்,

“சரி.. போன்ல என்ன மேட்டர்?”

“ஏதோ பொண்ண பத்தி விசாரிக்கணுமாம்..அலையன்ஸ் விஷயமா?”

“சுத்தம்.. நல்லா விசாரி. நாலு பேருக்கு நம்மால கல்யாணம் நல்லபடியா நடந்தா நமக்கும் சீக்கிரமே நடக்குமாம். பாட்டி சொன்னாங்க.”

“நடக்கும். நடக்கும். அப்படி பாத்தா எனக்கு பத்து கல்யாணமாவது ஆயிருக்கணும்.. எரிச்சல கிளப்பாதடா…”

ஹரீஷ்,

“ஓக்கே பாஸ்.. அப்போ பாக்கலாம். இப்போவே ரொம்ப லேட்டாயிடுச்சு. கிளம்பறேன்..”

“இரு.. எல்லோரும் போலாம். ஆட்டோல தானே போணும்.?”

“ஆமா.. வண்டி ஓட்டற நெலமைல இருக்க மாட்டோம்னு வீட்டுலேயே விட்டுட்டு வந்துட்டேன்”

“ம்ம்.. சரி வா. எங்க வீட்டுக்கு போற வழியில தானே உன் வீடு. வழியில இறங்கிக்கோ. ஆட்டோக்கு ஏன் தண்டச்செலவு?”

“அதுவும் சரி தான்.. சரி டா பார்ப்போம்”

கணேஷை விட்டு இருவரும் பிரிய கணேஷ் வேறொரு ஆட்டோ பிடித்தான். ஹரீஷை அவன் வீட்டில் விட்டுவிட்டு தன் வீட்டுக்கு வந்து கட்டிலில் விழும் போது மணி இரவு ஒன்றைத் தாண்டி இருந்தது.

அடுத்த நாள் சனிக்கிழமை காலையில் லேசான தலைவலியுடன் எழுந்திருக்கும் போது முந்தைய நாள் மணி போன் பண்ணியதை சுத்தமாய் மறந்திருந்தான்.

அன்புரசிகன்
27-07-2010, 11:00 AM
இப்படி என்கிட்ட 3-4 பேர் வந்திருக்காங்க. திருமணமாகி சந்தோசமா(??) இருக்காங்க... :D :D :D

தொடருங்க... கதை கேட்க்க ஆவலா இருக்கு... இந்த கதையையாவது ஒவ்வொருநாளா பதியுங்களேன். குறைந்தது 2 நாளுக்கு ஒருதடவை...

மதி
27-07-2010, 11:09 AM
இந்த கதையையாவது ஒவ்வொருநாளா பதியுங்களேன். குறைந்தது 2 நாளுக்கு ஒருதடவை...
:D:D:D
சனி ஞாயிறு லீவ். நேற்று விடுப்பு. இன்னிக்கு தான் ஆபிஸ் வந்திருக்கேன் அதான் லேட்.. ஹிஹி :icon_b:

Nivas.T
27-07-2010, 04:09 PM
/அந்தக் காலத்துல.. ஸ்கூல் படிக்கும் போதே…/

:confused: அதுக்கு அப்புறம் என்னங்க :icon_rollout:

மதி நான்கூட அசோக்பில்லர் தாங்க இருந்தேன், ரொம்ப நாள் :rolleyes:

பாரதி
05-08-2010, 11:55 AM
இன்னிக்குத்தான் எல்லாப்பாகத்தையும் படிச்சேன்.
பப்லேயே கதையே முடிஞ்சிரும் போல இருக்கே..!
அப்புறம் என்னாச்சு... மதி?