PDA

View Full Version : இந்திய ரூபாய் குறியீடுஅறிஞர்
16-07-2010, 03:10 PM
அமெரிக்க டாலருக்கு இணையாக ரூபாய் சின்னம் விரைவில் பிரபலமாகும்

தமிழர் வடிவமைத்த சின்னம் தேர்வு

இந்திய ரூபாய்க்கு புதிய சின்னத்தை மத்திய அமைச்சரவை நேற்று முடிவு செய்து அறிவித்துள்ளது. டாலர், பவுண்ட், யூரோ வரிசையில் இனி இந்திய ரூபாய் சின்னத்தால் குறிப்பிடப்படும்.

அமெரிக்க டாலர், ஐரோப்பிய யூரோ, பிரிட்டிஷ் பவுண்டு, ஜப்பான் யென் என வளர்ந்த நாடுகளின் கரன்சிக்கு சின்னங்கள் உள்ளன. அவை உலக அளவில் பிரபலமாக உள்ளன. அதுபோல, இந்திய கரன்சியான ரூபாய்க்கும் சின்னம் அறிவிக்கப்படும் என்று கடந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவித்திருந்தார்.

சின்னத்தை வடிவமைத்து அனுப்ப மக்களுக்கு கடந்த பிப்ரவரியில் வாய்ப்பு தரப்பட்டது. அதற்கு ஏராளமானோர் தங்கள் படைப்பை அனுப்பினர். கடந்த சில மாதங்களாக அவை பரிசீலிக்கப்பட்டன. அவற்றில் 5 சின்னங்களை மத்திய அரசு இறுதிச் சுற்றுக்கு தேர்வானதாக கடந்த மாத இறுதியில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இந்திய கரன்சிக்கான சின்னத்தை மத்திய அமைச்சரவை நேற்று தேர்வு செய்து அறிவித்துள்ளது.

ஐஐடி மும்பை பட்டதாரியான சென்னையை சேர்ந்த உதய் குமார் என்பவர் அனுப்பியது இந்த சின்னம். அவருக்கு சன்மானமாக ரூ.2.5 லட்சம் அளிக்கப்படுகிறது. இந்த சின்னத்தால் இந்திய ரூபாயின் வலிமை அதிகரிக்கும். சர்வதேச அளவில் பிரபலமாகும். ‘ருப்யா’ என்ற பெயரையே கொண்டுள்ள அண்டை நாடுகளில் இருந்து இந்திய ரூபாய் தனித்துவம் பெறும் என பொருளாதார நிபுணர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
“இது நமது கலாசாரம், தனித்தன்மையை காட்டுகிறது. இந்திய, ரோம எழுத்துகளின் கலவை. இது மக்களை கவரும்” என்று மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்தார்.

தேசிய கொடி போன்றது

சின்னத்தை வடிவமைத்த தமிழகத்தை சேர்ந்த உதய குமார் கூறுகையில், “தேசிய கொடியின் மூன்று வண்ணங்களை மனதில் வைத்து உருவாக்கினேன். மேலே இரண்டு கோடுகளும், நடுவே வெள்ளை நிறத்துக்கான இடைவெளியும் இருக்கும். எனது படைப்பு வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார். இவர் சென்னையில் 1978ல் பிறந்தவர். நாட்டின் கரன்சி சின்னமாக உதய குமாரின் வடிவம் தேர்வானதால், அவரை தனது கல்லூரியின் துணை பேராசிரியராக கவுகாத்தி ஐஐடி நியமித்தது.

நன்றி - தினகரன்

http://static.guim.co.uk/sys-images/Guardian/Pix/pictures/2010/7/16/1279284321329/new-indian-rupee-006.jpg

ஆதவா
16-07-2010, 03:35 PM
இது ஒரு நல்ல செய்தி!

nambi
16-07-2010, 03:49 PM
நல்ல செய்தியை பகிர்ந்தமைக்கு நன்றி!

பாலகன்
16-07-2010, 04:27 PM
பெருமைபடத்தக்க செயலை செய்த உதயக்குமாரை வாழ்த்துவோம்.

aren
16-07-2010, 04:41 PM
இந்திய நாணயமும் உலக தரத்திற்கு ஒரு நாள் உயரும் என்று ஆருடம் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு என் வாழ்த்துக்கள்.

கூடிய விரைவில் இந்தியப் பணத்தை வெளிச்சந்தைகளில் மாற்றிக்கொள்ளும்படியான விதிமுறைகள் வெளியாகும்.

வாவ்!!! இதை ஒரு நாள் பார்க்க ஆசையாக இருக்கிறது.

மதி
16-07-2010, 04:45 PM
வாழ்த்துகள் உதயகுமாருக்கு...!

சிவா.ஜி
16-07-2010, 07:06 PM
அட நம்ம ஆளா...ரொம்ப சந்தோஷம். உதயகுமாருக்கு வாழ்த்துக்கள்.

govindh
16-07-2010, 10:11 PM
வாழ்த்துக்கள் உதயக்குமார்.

அமரன்
16-07-2010, 10:48 PM
தன் நாணயத்தை பிரபல்யமாக்க சீனாவும் பல முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் காலக் கட்டத்தில் அவசியமான ஒன்றுதான். உதயகுமாரின் உழைப்பு தெரிவானமை மகிழ்ச்சியே.

தமிழ் மைந்தன்
17-07-2010, 04:42 AM
தமிழருக்கு பெருமை சேர்த்த உதயகுமாருக்கு வாழ்த்துக்கள்!!

ரவிசங்கர்
22-07-2010, 06:29 PM
வாழ்க...
தமிழன் புகழும், பெருமையும்.
பாராட்டுக்கள்.

ரவிசங்கர்
22-07-2010, 06:32 PM
அவருக்கு சன்மானம் வெறும் ரூ.2.5 லட்சம் மட்டும் தானா?

sasipushpa
12-08-2010, 11:25 AM
தமிழர் வடிவமைத்த ரூபாய் சின்னம் அங்கீகாரம் பெற்றது நமக்கு பெருமை அளிக்கக் கூடிய விசயம்.

தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா