PDA

View Full Version : பெய்யென பெய்யும் மழை...

சசிதரன்
16-07-2010, 03:46 AM
நான் சொல்லும் மழைக் கதைகள்
நீங்கள் விரும்பிக் கேட்பவை.

என் கதைகளின் மழைத்துளிகள்
வழக்கத்தை விடவும்
குளிர்ச்சியாயிருப்பதையும்

என் கதையில் பெய்யும் மழை
இரவு பகல் பாராது இடைவிடாது
ஒரு காட்டெருமையின் மூர்க்கத்தோடு
பெய்வதையும்

கண்கள் வழியே உள்நுழையும் மழை
உங்கள் அடர் வனங்களை நனைப்பதையும்
நீங்கள் உணரலாம்.

மெல்ல மெல்ல ஒரு
காட்டு வெள்ளமென உருமாறும் மழை
அதனூடே உங்களை இழுத்துச் செல்வதையும்

யாதொரு தடமுமற்ற வெளியில்
பற்றுதல்களுக்கான காத்திருப்பில்
சோர்ந்திருக்கும் கரங்களிடையே
உங்களை விட்டுச் செல்வதையும்
உணரும்போது

நீங்களும் சொல்லத் தொடங்குவீர்கள்..
யாவரும் விரும்பும் மழைக் கதைகளை.

ஆதவா
16-07-2010, 05:14 AM
சபாஷ்!! அருமை! ( விமர்சனம் பிறகு )

மதி
16-07-2010, 05:16 AM
வாவ்... நல்லாருக்கு சசி.. நான் விரும்பிக் கேட்ட மழைக்கதைகள் நிறைய..!!

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
16-07-2010, 09:51 PM
கடைசி வரை கதையை சொல்லவே இல்லையே சசி.

கரு பிறழாமல் நேர்கோட்டில் செல்லும் அருமையான கவிதை. பாராட்டுக்கள்.

ஆதவா
21-07-2010, 02:26 AM
மிக அழகான, எளிமையான வார்த்தைகளால் கட்டப்பட்ட பின்நவீன கவிதை. எழுதப்பட்டிருக்கும் ஒவ்வொரு வார்த்தைக்குள்ளும் மழைவாசம் குவிந்திருப்பதை நுகரமுடிகிறது. அதுதான் கவிதையின் வெற்றி.. இக்கவிதையின் கருவை பல்வகையில் பொருத்திப் பார்க்கலாம்... ஒரு கவிதை, தனது வெற்றியைக் குறித்து பெருமிதப்படுவ்தாகவும் அல்லது தோல்வியாகவும் கூட........... அல்லது பொருத்தாமலேயே விட்டுவிடலாம். (அதுவே சிறந்தது!)

உங்கள் அடர் வனங்களை நனைப்பதையும்
நீங்கள் உணரலாம்.

இந்த வரிகள்தான் இறுதியாக சொல்லப்படும் “நீங்களே சொல்லத்துவங்குவீர்கள் கதைகளை” என்பதற்கு மிகுந்த அழுத்தம் தருகிறது. கவிதையின் வாசம் இழுத்து தன்னுள் நிரப்பி, தன் அடர்காட்டின் ஒவ்வொரு மூலையையும் ஈரப்பதப்படுத்தத் தெரிந்தவர்களாலேயே அக்கவிதையின் அனுபவத்தோடு பயணிக்க இயலும்.

ரொம்ப நன்றாக இருக்கிறது சசி!! நீங்கள் கவிதையுலகில் நல்ல இடத்தை அடையப்போகிறீர்கள்!!

சசிதரன்
21-07-2010, 04:13 PM
வாவ்... நல்லாருக்கு சசி.. நான் விரும்பிக் கேட்ட மழைக்கதைகள் நிறைய..!!

நன்றி மதி அண்ணா :)

சசிதரன்
21-07-2010, 04:14 PM
கடைசி வரை கதையை சொல்லவே இல்லையே சசி.

கரு பிறழாமல் நேர்கோட்டில் செல்லும் அருமையான கவிதை. பாராட்டுக்கள்.

நன்றி நண்பரே... :)

சசிதரன்
21-07-2010, 04:17 PM
மிக அழகான, எளிமையான வார்த்தைகளால் கட்டப்பட்ட பின்நவீன கவிதை. எழுதப்பட்டிருக்கும் ஒவ்வொரு வார்த்தைக்குள்ளும் மழைவாசம் குவிந்திருப்பதை நுகரமுடிகிறது. அதுதான் கவிதையின் வெற்றி.. இக்கவிதையின் கருவை பல்வகையில் பொருத்திப் பார்க்கலாம்... ஒரு கவிதை, தனது வெற்றியைக் குறித்து பெருமிதப்படுவ்தாகவும் அல்லது தோல்வியாகவும் கூட........... அல்லது பொருத்தாமலேயே விட்டுவிடலாம். (அதுவே சிறந்தது!)

உங்கள் அடர் வனங்களை நனைப்பதையும்
நீங்கள் உணரலாம்.

இந்த வரிகள்தான் இறுதியாக சொல்லப்படும் “நீங்களே சொல்லத்துவங்குவீர்கள் கதைகளை” என்பதற்கு மிகுந்த அழுத்தம் தருகிறது. கவிதையின் வாசம் இழுத்து தன்னுள் நிரப்பி, தன் அடர்காட்டின் ஒவ்வொரு மூலையையும் ஈரப்பதப்படுத்தத் தெரிந்தவர்களாலேயே அக்கவிதையின் அனுபவத்தோடு பயணிக்க இயலும்.

ரொம்ப நன்றாக இருக்கிறது சசி!! நீங்கள் கவிதையுலகில் நல்ல இடத்தை அடையப்போகிறீர்கள்!!

நன்றி ஆதவா. உங்கள் வாழ்த்துக்களுடன் தொடர்ந்து பயணிக்கிறேன்..:)