PDA

View Full Version : இ-கலப்பை குழுமத்தில் இணைந்து பணியாற்ற தன்னார்வலர்கள் தேவை...!



செல்வா
15-07-2010, 06:08 PM
உறவுகளே...

தமிழ் தட்டச்சிற்காக இ-கலப்பை மென்பொருளை நம்மில் பலர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். பொருள்கருதாது பணிசெய்யும் ஒரு சிலர் இணைந்து அந்த மென்பொருளை வடிவமைத்துள்ளனர். இப்போதைய இ-கலப்பையானது விண்டோஸ் இயங்குதளத்தில் மட்டுமே இயங்குமாறு வடிவமைக்கப் பட்டுள்ளது. அதை லினக்ஸ் இயங்குதளத்தில் இயங்குமாறும் வடிவமைத்தல் மற்றும் பல மேம்பாட்டுப் பணிகளை அந்தக் குழுவானது திட்டமிட்டுள்ளது. இன்னும் பலர் இணைந்து செயல்படும் போது வேகமாகவும் விரைவாகவும் பல மேம்பாடுகளைக் கொண்டுவர இயலும்.

இக்குழுவுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமுள்ள மென்பொருள் வல்லுநர்கள் உங்கள் மின்னஞ்சல்களை எனக்குத் தனிமடலில் அனுப்புங்கள்.

நன்றி.

வெற்றி மகிழன்
15-07-2010, 06:33 PM
தனி மடல் என்றால் உங்கள் contact info பகுதியில் இருக்கும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம?

செல்வா
15-07-2010, 06:40 PM
"Contact Info" பகுதியிலேயே "send private message to செல்வா" என்றிருக்கும் பாருங்கள். அதைச் சுட்டினால் மன்றத்தின் தனிமடல் பகுதி திறக்கும்.
அதன் வழியாகவும் அனுப்பலாம்.

பாரதி
16-07-2010, 01:37 AM
நல்லது. மகிழ்ச்சி. விரைவில் எண்ணம் ஈடேற வாழ்த்து.

த.ஜார்ஜ்
20-07-2010, 12:59 PM
இது சரியான தமிழ் பணியாயிருக்கும்.
வெற்றி பெற வாழ்த்துக்கள்.

எந்திரன்
21-07-2010, 12:38 PM
லாப நோக்கமில்லாமல் தமிழுக்கு தொண்டு செய்ய முன்வரும் மென்பொருள் வல்லுநர்களுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

விரைவில் வெற்றிகரமாக லினக்ஸில் இயங்கும் வண்ணம் வெளியிட வாழ்த்துக்கள்

செல்வா
21-07-2010, 02:45 PM
நன்றி நண்பர்களே. உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாரேனும்இருந்தால் அறிமுகப் படுத்துங்களேன்.

பொறுப்பாளர்கள் கொஞ்ச நாட்களுக்கு இந்தத் திரியை ஒட்டி வைக்க ஆவனசெய்யும் படி கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

பாலன்
24-07-2010, 04:48 PM
மென்பொருள் துறைக்கும் நமக்கும் ரொம்பதூரம் அன்பரே. என்னால் பங்களிக்க முடியாமைக்கு வருந்துகிறேன். தன்னலம் பாராது தமிழ் தொண்டாற்றும் அன்பர்களுக்கு என் வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறேன். நன்றி.

matheen
17-11-2011, 12:03 PM
தமிழை வளர்போம் தமிழா.......