PDA

View Full Version : கோழியில இருந்து தான் முட்டை வந்துச்சு! - உலகமகா புதிருக்கு விடை கிடைத்தது.



பாலகன்
15-07-2010, 04:27 PM
http://tm.dinakaran.com/pdf/2010/07/15/20100715a_00810101101.jpg

‘முட்டைல இருந்து கோழி வந்துச்சா? கோழியில இருந்து முட்டை வந்துச்சா’ன்னு கேட்டு போடுவாங்களே ஒரு புதிரு.. அதற்கு இப்போது விடை கிடைத்திருக்கிறது. மிக நீண்..ட ஆராய்ச்சிக்குப் பிறகு, ‘கோழிதான் முதலில் உருவானது.. அதன் பிறகே முட்டை’ என்று பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.


முதலில் வந்தது முட்டையா அல்லது கோழியா என்ற குழப்பம் உலக அளவில் இன்று வரை அனைவருக்கும் உள்ளது. இந்தப் புதிருக்கு விடை கண்டுபிடித்து விட்டனர் கோலின்ஃப்ரீமென் தலைமையிலான, ஷெபீல்ட் மற்றும் வார்விக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள். இக்குழுவினர் இந்தக் குழப்பத்திற்கு தீர்வு காணும் வகையில் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். நீண்ட ஆராய்ச்சிக்குப் பின் கோழிதான் முதலில் வந்தது என்ற உண்மையை அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளனர்.


இவர்களின் ஆராய்ச்சி உண்மை கணினி மூலம் மிகத் துல்லியமாக கண்டுபிடிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. ஹெக்டார் என்ற மிக உயர்தொழில் நுட்ப கணினி இந்த ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் முட்டை ஓட்டில் உள்ள ஓவோஸ்லீடின் என்ற மிகக் கடினத் தன்மையுடைய புரதச்சத்து கொண்ட மரபணுக்கள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட போது தனது வேதியியல் பண்பில் இருந்து மாறவில்லை. மாறாக, அவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தியது தெரியவந்துள்ளது.


எனவே முட்டை போடும் நிலையில் உள்ள கோழியின் உடலில் இருக்கும் சத்துக்கள் மூலம்தான் முட்டை ஓட்டுக்குத் தேவையான புரதப் பொருள் உருவாவது கண்டறியப்பட்டது. முட்டை ஓட்டில் உள்ள புரதம், கிரியா ஊக்கியாகச் செயல்பட்டு தன்னுள் இருக்கும் திரவங்களில் உள்ள கால்சியம் கார்போனேட்டை கருவில் உள்ள கோழிக்குஞ்சின் உடலில் கால்சைட் அதாவது சுண்ணாம்புப் படிமங்களாக மாற்றுவதும் தெரியவந்தது.


முட்டைக்குப் பாதுகாப்பான அதன் கடினமான ஓடு உருவான பின்னர்தான் கரு அதனுள் செல்கிறது. முட்டைக்குத் தேவையான புரதம் மற்றும் இதர சத்துக்கள் நிச்சயம் கோழி கொடுத்ததே என்பதால், கோழிதான் முதலில் வந்தது என்று உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது.
இனி, சிறுவர்களுக்கு புதிர் போடுபவர்கள் விடையையும் சொல்லுங்கள். ‘கோழியில இருந்துதான்டா முட்டை வந்துச்சு’னு!
உலக மகா புதிருக்கு விடை

நன்றி : மாலைமுரசு

தூயவன்
15-07-2010, 04:56 PM
முட்டைக்குப் பாதுகாப்பான அதன் கடினமான ஓடு உருவான பின்னர்தான் கரு அதனுள் செல்கிறது. முட்டைக்குத் தேவையான புரதம் மற்றும் இதர சத்துக்கள் நிச்சயம் கோழி கொடுத்ததே என்பதால், கோழிதான் முதலில் வந்தது என்று உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது.
நன்றி : மாலைமுரசு

சரி முட்டை முதலில் வரவில்லை என்றால் கோழி எப்படி வந்திச்சு ? :D:lachen001::lachen001:

அன்புரசிகன்
15-07-2010, 10:35 PM
சரி முட்டை முதலில் வரவில்லை என்றால் கோழி எப்படி வந்திச்சு ? :D:lachen001::lachen001:
பார்ரா........... ம்.......ஹூம்....

மச்சான்
15-07-2010, 11:25 PM
‘முட்டைல இருந்து கோழி வந்துச்சா? கோழியில இருந்து முட்டை வந்துச்சா’ன்னு கேட்டு போடுவாங்களே ஒரு புதிரு.. அதற்கு இப்போது விடை கிடைத்திருக்கிறது. மிக நீண்..ட ஆராய்ச்சிக்குப் பிறகு, ‘கோழிதான் முதலில் உருவானது.. அதன் பிறகே முட்டை’ என்று பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
அப்பாடா........! ஒரு பெரிய பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வச்சாச்சுய்யா......!:D பகிர்ந்தமைக்கு நன்றி மகாபிரபு.....!:)

.

aren
16-07-2010, 01:53 AM
இனிமே இந்த மாதிரியான கேள்வியைக் கேட்டு மக்களை யாரும் துன்புறுத்தமாட்டார்கள் என்றே நினைக்கிறேன்

ஆதவா
16-07-2010, 05:21 AM
இனிமே இந்த மாதிரியான கேள்வியைக் கேட்டு மக்களை யாரும் துன்புறுத்தமாட்டார்கள் என்றே நினைக்கிறேன்

அப்படின்னா உங்களை யாரோ துன்புறுத்தியிருக்காங்கன்னு நினைக்கிறேன் சரியா அண்ணா? :aetsch013:

nambi
16-07-2010, 05:33 AM
வெகு நாட்களாக மொக்க போட்டு கொண்டிருந்த விடயத்திற்கு விடை கிடைத்துவிட்டதா? நன்று! பகிர்வுக்கு நன்றி பிரபு!

தாமரை
16-07-2010, 11:01 AM
முதலில் வந்தது முட்டையா அல்லது கோழியா என்ற குழப்பம் உலக அளவில் இன்று வரை அனைவருக்கும் உள்ளது. இந்தப் புதிருக்கு விடை கண்டுபிடித்து விட்டனர் கோலின்ஃப்ரீமென் தலைமையிலான, ஷெபீல்ட் மற்றும் வார்விக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள். இக்குழுவினர் இந்தக் குழப்பத்திற்கு தீர்வு காணும் வகையில் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். நீண்ட ஆராய்ச்சிக்குப் பின் கோழிதான் முதலில் வந்தது என்ற உண்மையை அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளனர்.


இவர்களின் ஆராய்ச்சி உண்மை கணினி மூலம் மிகத் துல்லியமாக கண்டுபிடிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. ஹெக்டார் என்ற மிக உயர்தொழில் நுட்ப கணினி இந்த ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் முட்டை ஓட்டில் உள்ள ஓவோஸ்லீடின் என்ற மிகக் கடினத் தன்மையுடைய புரதச்சத்து கொண்ட மரபணுக்கள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட போது தனது வேதியியல் பண்பில் இருந்து மாறவில்லை. மாறாக, அவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தியது தெரியவந்துள்ளது.


எனவே முட்டை போடும் நிலையில் உள்ள கோழியின் உடலில் இருக்கும் சத்துக்கள் மூலம்தான் முட்டை ஓட்டுக்குத் தேவையான புரதப் பொருள் உருவாவது கண்டறியப்பட்டது. முட்டை ஓட்டில் உள்ள புரதம், கிரியா ஊக்கியாகச் செயல்பட்டு தன்னுள் இருக்கும் திரவங்களில் உள்ள கால்சியம் கார்போனேட்டை கருவில் உள்ள கோழிக்குஞ்சின் உடலில் கால்சைட் அதாவது சுண்ணாம்புப் படிமங்களாக மாற்றுவதும் தெரியவந்தது.


முட்டைக்குப் பாதுகாப்பான அதன் கடினமான ஓடு உருவான பின்னர்தான் கரு அதனுள் செல்கிறது. முட்டைக்குத் தேவையான புரதம் மற்றும் இதர சத்துக்கள் நிச்சயம் கோழி கொடுத்ததே என்பதால், கோழிதான் முதலில் வந்தது என்று உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது.
இனி, சிறுவர்களுக்கு புதிர் போடுபவர்கள் விடையையும் சொல்லுங்கள். ‘கோழியில இருந்துதான்டா முட்டை வந்துச்சு’னு!
உலக மகா புதிருக்கு விடை

நன்றி : மாலைமுரசு

தமிழை எந்த அளவுக்கு பத்திரிக்கைகள் பாதுகாக்கின்றன என்பதற்கு உதாரணமாக இந்தச் செய்தி விளங்குகிறது.

1. அதன் மூலம் முட்டை ஓட்டில் உள்ள ஓவோஸ்லீடின் என்ற மிகக் கடினத் தன்மையுடைய புரதச்சத்து கொண்ட மரபணுக்கள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட போது தனது வேதியியல் பண்பில் இருந்து மாறவில்லை. மாறாக, அவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தியது தெரியவந்துள்ளது.

இங்கே தனது - அவற்றில் என்பதற்கு எதைச் சுட்டுகிறார்கள்? எது மாறலை எது மாறிச்சுன்னு ஒரு தெளிவு இருக்கா?

2. முட்டைக்குப் பாதுகாப்பான அதன் கடினமான ஓடு உருவான பின்னர்தான் கரு அதனுள் செல்கிறது. முட்டைக்குத் தேவையான புரதம் மற்றும் இதர சத்துக்கள் நிச்சயம் கோழி கொடுத்ததே என்பதால், கோழிதான் முதலில் வந்தது என்று உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது.


கோழி மட்டும்தான் முட்டை போடுதா என்ன? மீன்கள் கோழிக்கு முன்பே உண்டானவை என்று நாம் படித்திருக்கிறோம். அவையும் முட்டையிடும். அதன் பின்னால் வந்த நீர்-நில வாசிகளான ஆமைகளும், முதலைகளும் கூட முட்டையிடும்.

அதன் பின்னால் வந்த ஊர்வனவைகளான பாம்புகள், பல்லிகள், டைனோசர்கள் எல்லாம் முட்டையிடும். பறவையினங்களும் முட்டையிடும்.

இதில் ஊர்வன, பறவை இனங்களில் முட்டை ஓடுகள் சுண்ணாம்புச் சேர்மத்திலான ஓட்டைக் கொண்டிருக்கும்.

அதாவது கோழி மட்டுமே முட்டை போடறதா இருந்தா கோழியில் இருந்துதான் முட்டை வந்ததுன்னு சொல்றது ரைட்டு. ஆனால் பரிணாம வளர்ச்சித் தத்துவத்தின் படி கோழிகள் தோன்றுவதற்கு பலகாலங்களுக்கு முன்பிருந்தே முட்டைகள் இருந்திருக்கின்றன. ஏதோ ஒரு பறவை மரபணுக் கோளாறினால் இட்ட முட்டையில் இருந்து கோழி வந்திருக்கு.. ஆக முட்டைதான் முதல்ல, இதற்கு பெரிய அளவில் இப்படி ஆராய்ட்சி பண்ணி இருக்கணும் என்ற அவசியம் இல்லை.

இந்த ஆய்வில் இவர்கள் கோழி முட்டையை கோழிதான் போடுது அப்படீன்னு நிரூபிச்சி இருக்காங்க.. இங்கிருக்கும் தகவல்களைக் கொண்டு பார்க்கும்போது அதுதான் நிரூபணமாகுது.

ஓவோஸ்லீடின்-17 என்ற் புரதம் கோழிக்கு முந்தைய வேறு எந்த உயிரினத்திலும் இல்லை என நிரூபிச்சாதான் முட்டை முதலில் என்ற கோட்பாட்டை ஒத்துக்க முடியுமே தவிர..

ஓவோஸ்லீடின்-17 கோழியில் இருக்கு.. இது கால்சியம் சத்தை முட்டை ஓடாக மாற்ற உதவுது என்பது

கோழியும் முட்டை போடும் என்பதை மட்டுமே நிரூபிக்கும் ஒன்று ஆகும்.

என்னை மாதிரி ஒரு மேனேஜர் இல்லாட்டி இப்படித்தான் வெட்டியா பணத்தை செலவழிப்பாங்க போல இருக்கு.

பாலகன்
16-07-2010, 01:08 PM
தாமரை அண்ணனின் விளக்கவுரை மிகவும் அற்புதம். உங்கள் கூற்றுப்படி கோழிமுட்டை தான் முதலில் வந்திருக்கவேன்டும். சரிதானே

தாமரை
16-07-2010, 01:54 PM
தாமரை அண்ணனின் விளக்கவுரை மிகவும் அற்புதம். உங்கள் கூற்றுப்படி கோழிமுட்டை தான் முதலில் வந்திருக்கவேன்டும். சரிதானே

ஆமாம்.. இன்னொன்றையும் சுட்டிக் காட்ட ஆசைப்பட்டேன்,

ஒரு காலத்தில் பத்திரிக்கையாளர்கள் என்றால், அவர்கள் பல செய்திகளைப் படிப்பவர்கள்.. அதனால் அறிவு அதிகமா இருக்கும் அப்படி என்ற நம்பிக்கை மிக ஆழமா வேரூன்றி இருந்தது.. ஆனால் இந்தக் காலப் பத்திரிக்கைச் செய்திகளைப் படிக்கப் படிக்க இப்படியுமா அப்படின்னு கோபம் வருது.

போன வாரம் பாருங்க, அமாவாசை. அதே சமயம் தென்னமெரிக்கப் பகுதிகளில் சூரிய கிரகணம் தெரியும். இந்தியாவில் தெரியாதுன்னு பத்திரிக்கைச் செய்தி..

ஆனால் அதுக்குக் குடுத்த காரணம் இருக்கே அடேங்கப்பா.. நீங்களே படிங்க



ஆனால், 11ம் தேதி அமாவாசை என்பதால், இந்தியாவில் இந்த முழு சூரிய கிரகணத்தை காண முடியாது.


http://thatstamil.oneindia.in/news/2010/07/07/solar-eclipse-july-11.html

திணமணிச் செய்தி (http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=India&artid=267900&SectionID=130&MainSectionID=130&SEO=&Title=%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88%2011-%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%20%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D:%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81)

தினமலர் செய்தி (http://www.dinamalar.com/News_Detail.asp?Id=34393)

தினத்தந்தியும் இதே தகவலை வெளியிட்டு இருந்தது..

அடப்பாவிகளா. சூரிய கிரகணமே அமாவாசையில்தான் வரும்னு 4 வது படிக்கறப்ப படிக்கலையா? சந்திர கிரஹணம் பௌர்ணமி அன்னிக்குத்தான் வரும்னு படிக்கலையா?

சூரிய கிரகனம் உண்டாகும் நேரத்தில் இந்தியாவில் இரவு நேரம் அதனால இந்தியாவில தெரியலை.. அதை விட்டுபுட்டு இப்படி அமாவாசை மேல பழி போடறாங்களே.. இதைப் படிக்கற சில பேர் அமாவாசைன்னா அன்னிக்குச் சூரிய கிரஹணம் வராதுன்னு தப்பா நினைச்சுக்க மாட்டாங்களா?

இப்படிப் பல அறிவியல்செய்திகளை யாராவது கொடுத்தா அது அடிப்படையிலேயே பொய்யா இருந்தாலும் பிரசுரிச்சி பத்திரிக்கைகள் மேல இருக்கிற மரியாதையையே குறைச்சிட்டாங்க போங்க...

அதனாலதான் எந்த நியூஸ்னாலும் அதனோட அடிப்படையை ஆராயாமல் நான் சரின்னு சொல்றதில்லை. எதோ நமக்கு ஏன் லாஜிக்கா தப்பா படுதுன்னு சொன்னா நாலு பேர் முட்டாளாகாம தப்பிப்பாங்க இல்லையா.. அதனால லாஜிக்கை விளக்கமா சொல்றேன்.

தம்பி தக்ஸூ... ஊடகத்துறையில் இருக்கறவங்க நினைச்சா இப்படி மக்களுக்கு நல்ல அறிவு கொடுக்கலாம்.. ..:icon_b:

Narathar
16-07-2010, 02:18 PM
தம்பி தக்ஸூ... ஊடகத்துறையில் இருக்கறவங்க நினைச்சா இப்படி மக்களுக்கு நல்ல அறிவு கொடுக்கலாம்.. ..:icon_b:

யப்பா தாக்ஸு
நம்ம ஷரத்துகிட்ட சொல்லி தாமரைக்கு ஒரு வேலை ஏற்பாடு செய்யப்பா.........

அவர் இப்ப எடுக்குற சம்பளத்துல டபுள் கொடுக்கனும் ஆமா சொல்லிப்புட்டேன்;):D:lachen001::):icon_b:

தாமரை
16-07-2010, 03:51 PM
என்னையெல்லாம் வச்சு சமாளிக்க முடியாது நாரதரே... ..

சம்பளத்தைப் பற்றி நான் கவலைப்பட மாட்டேன்.. ஆனா கொஞ்சம் ஓவரா அடம்புடிப்பேன்...

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.. (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=17311) படிச்சீங்கதானே!!!

பாலன்
16-07-2010, 06:31 PM
செய்திகளின் நம்பகதன்மையை பற்றி ஆதாரத்துடன் எடுத்து சொன்ன தாமரைக்கு நன்றி. ஊடகங்கள் உள்ளார்ந்த ஈடுபாடில்லாமல் வணிகரீதியில் மட்டும் நடத்தப்பட்டால் இப்படித்தான். அதில் செய்தியின் உண்மைதன்மை, நடுநிலை,அதை வெளியிட வேண்டியதன் அவசியம் என்று ஆராயந்தால் நாம் எளிதாக முனைவர் பட்டமே பெற்றுவிடலாம்.