PDA

View Full Version : மான்குட்டியைக் கைவிட்ட பின்



M.Rishan Shareef
15-07-2010, 04:39 AM
மான்குட்டியைக் கைவிட்ட பின் (http://mrishanshareef.blogspot.com/2010/07/blog-post_15.html)

கனவுகளின் பிறழ்வுகளுக்குள்
மான்குட்டிகளை ஓடவிட்டபடி
பெருநகரத்துத் தெருவழியே
மேய்ப்பாளன் நடந்தான்
அழகழகாய்ப் புள்ளிகளிட்ட மான்கள்
அமைதியாக
அவன் காட்டிய திசை நடந்தன
ஆஸ்திகளனைத்தையும் அவனிடம் கொடுத்து
ஓர் மான்குட்டி வாங்கினேன்
என்னிடமிருந்து துள்ளிப்பாய்ந்த மான்
எங்கோடிற்றென நினைவில்லை
மான்குட்டியும் ஆஸ்திகளும்
கனவுகளின் பிறழ்வுகளினிடையிருந்து
இன்னும் மீளவேயில்லை
நானும்

- எம்.ரிஷான் ஷெரீப்
இலங்கை

நன்றி
# அம்பலம் கலை இலக்கிய இதழ் - ஜனவரி, 2010
# சொல்வனம் இதழ் - 28
# உயிர்மை