PDA

View Full Version : எக்ஸெல் 2003 கற்கலாம் வாங்க.



நூர்
14-07-2010, 02:49 AM
புதியவர்களுக்காக!
-------------------
MS.XL 2003
-----------
எனக்கு தெரிந்த சில டிரிக்ஸ் மற்றும் பார்முல,அதை பயன்படுத்துவதை பற்றி பதிவிடுகின்றேன்.

விரைவில்......

(பி.கு)
உங்களுக்கு xl பற்றி என்ன சந்தேகம் இருப்பின் கேளுங்கள், நம் மன்ற நண்பர்கள் பதிலிடுவார்கள்.

நூர்
14-07-2010, 02:49 AM
பாடவிதான சுட்டிகள்


சரியா? தவறா? (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=480910#post480910)
சில குறியீடுகள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=482024#post482024)
( ) அடைப்பு குறி (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=483012#post483012)
வரி (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=484210&postcount=70)
ஆட்டோசம் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=491510&postcount=83)
கன்வர்ட் (CONVERT)1 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=493049&postcount=84)
கன்வர்ட் (CONVERT)2 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=493975&postcount=85)

அன்புரசிகன்
14-07-2010, 03:02 AM
நிச்சயம் நிறையக்கேள்வி என்னிடம் கைவசம். தொடங்குங்கள். மிக மிக பயனுள்ள விடையம். வாழ்த்துக்கள் நூர்...

nambi
14-07-2010, 03:34 AM
பயனுள்ள தொடர்! தொடருங்கள் நூர்....வாழ்த்துக்கள்!

samuthraselvam
14-07-2010, 04:27 AM
நன்றி நூர்... இதுபோல பனி சம்பந்தமான புதிய தகவல்களையும் சந்தேகங்களையும் தீர்க்க உங்கள் திரிகள் பெரும்பாலும் உதவுகிறது....

ஸ்ரீதர்
14-07-2010, 04:37 AM
ஆஹா!!! தங்கள் பதிவினை பார்க்க ஆவலுடன் இருக்கிறேன்

அமரன்
14-07-2010, 02:42 PM
நிச்சயம் நிறையக்கேள்வி என்னிடம் கைவசம். தொடங்குங்கள். மிக மிக பயனுள்ள விடையம். வாழ்த்துக்கள் நூர்...

பக்கத்துக் கதிரை எனக்கு!

குணமதி
14-07-2010, 02:49 PM
ஆவலுடன் வரவேற்கிறேன்.

ஓவியன்
15-07-2010, 03:56 PM
ஹா, எக்செல்லா...??

அப்போ நானும் ஆட்டத்துக்கு ரெடி..!! :icon_b:

மதி
15-07-2010, 05:52 PM
நானும்...!!!

நூர்
15-07-2010, 06:23 PM
அனைவருக்கும் வணக்கம்.
கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.

1.சரியா? தவறா?
------------------------

Excel ஒப்பன்செய்யுங்கள்.

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/1-88.jpg

மேல் உள்ளதைபோல் டைப் செய்து கொள்ளுங்கள். உங்கள் விருப்பம் போல் ஆங்கிலத்திலும் டைப் செய்யலாம்.

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/2-81.jpg

''தலைப்பு'' என்ற செல்லில் செலக்ட் செய்து, நீங்கள் விரும்பும் இடம் வரை இழுங்கள்.

படத்தில் வட்டமிட்டு காட்ட பட்ட, Merge and center என்பதை கிளிக் செய்யுங்கள். அது நடுவில் வந்துவிடும்.

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/2A-1.jpg

தேவையான செல்களை செலக்ட் செய்து Font அளவை பெரியது செய்தால், செல்லின் அளவும் பெரிது ஆகும்.

அந்த text க்கு ஒரு பார்டர் கொடுக்க வேண்டும்மென்றால்,

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/3-82.jpg

படத்தில் காட்டிய டூலை கிளிக் செய்து Border கொடுக்கலாம்.

Border வேண்டாம் என்றால், முதலில் இருக்கும் பார்டரை கிளிக் செய்யுங்கள்.
-------------------------------------------
http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/5-74.jpg


1/1/2010 என்ற தேதியின் செல்லை கிளிக் செய்யுங்கள்.

ஒரு நீள் சதுர கட்டம் இருக்கிறதா. அதன்

கீழ் மூலையில் வட்டமிட்டு காட்டபட்ட இடத்தில், கர்சரை கொண்டுசெல்லுங்கள், ஒரு சிறிய
''+'' தோன்றும் ,

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/6-15.jpg

அப்பொழுது மவுசை (இடது) கிளிக் செய்தபடி மெதுவாக கீழாக இழுங்கள்.


இதைபோல் ஒன்றொன்ரையும் செய்து பாருங்கள்.

எண்2,எண்3 -ல்

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/8-10.jpg

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/9-6.jpg

இரண்டு செல்லை செலக்ட் செய்து, செய்து பாருங்கள்.

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/10-7.jpg

==================================

சரியா! தவறா!
--------------

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/z1-1.jpg

எந்த இடத்தில் நமக்கு விடை வரவேண்டுமோ அந்த செல்லை செலக்ட் செய்யுங்கள், அதில் பார்முலா வை டைப் செய்து என் டர் கீயை தட்டுங்கள். விடை கிடைக்கும்.

அல்லது, படத்தில் வட்டமிட்டு காட்டிய இடத்தில் பார்முலா வை டைப் செய்து என் டர் கீயை தட்டுங்கள்.

=5=7

எல்லா பார்முலாவும் ''='' இந்த குறியீட்டில் தான் ஆரம்பிக்கவேண்டும்.

5,7 இடையில் உள்ள = இந்த குறியீடு சமம் என்பதற்காக பயன் படுத்துகிறோம்.

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/z2-1.jpg

நான் பார்முலா வை ஆரம்பத்தில் புள்ளி வைத்து, டைப் செய்து இருக்கின்றேன். நீங்கள் அந்த புள்ளி இல்லாமல் பயன் படுத்துங்கள்.


இதன் தொடர்சி...http://www.tamilmantram.com/vb/showpost.php?p=482024&postcount=50

செல்வா
15-07-2010, 07:37 PM
நல்ல ஒரு கணிணிக் கல்வித் திரியாக மலர வாழ்த்துக்கள். தெரியாதவற்றைக் கற்றுக் கொள்கிறேன். தெரிந்தச் சிலவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன் (நேரம் கிடைக்கும் போது :) ).

அன்புரசிகன்
15-07-2010, 10:42 PM
5=7 அடித்தால் சரியா தவறா என வரும் என்று இன்று தான் தெரிந்துகொண்டேன். இதுவரை வேறு இரு செல்களில் இருப்பவற்றை தெரிந்துகொள்வது எப்படி என்று மட்டும் அறிந்திருந்தேன். நல்லதொரு ஆரம்பம். தொடருங்கள். நன்றி.

ஒரு சிறு யோசனை. தவறென்றால் மன்னிக்க.

ஒவ்வொரு பாடநெறியின் போதும் உங்களது பதிவின் சுட்டியை உங்களது முதலாவது பதிவின் கீழ் பகுதியில் இணைத்தால் பிற்காலத்தில் பார்வையிடுபவர்களுக்கு உதவும்.

மச்சான்
16-07-2010, 12:26 AM
நல்ல பகிர்வு நண்பரே. மிக்க நன்றி.

மதி
16-07-2010, 02:46 AM
நல்ல பகிர்வு.. தெரிந்தவற்றை மீளப்பார்க்கவும் தெரியாதவற்றை கற்றுக் கொள்ளவும் உதவும்.. நன்றி

ஓவியன்
16-07-2010, 03:27 AM
நல்லதொரு பகிர்வு நூர், உண்மையில் இந்த திரி பலருக்கும் பயனுள்ளதாக அமையும்... :)

ஸ்ரீதர்
16-07-2010, 06:15 AM
நண்பர்களே ,

எனக்கொரு சந்தேகம்

இந்தியாவில் ஒரு லட்சம் என்பதை 1,00,000 என்று ( , ) வைத்து எழுதுவோம்.

எக்ஸலில் அதை பார்மேட் செய்யும் போது 100,000 என்றுதான் வருகிறது.

அதை இந்திய முறைப்படி வரவைக்க ஏதாவது வழிமுறை உள்ளதா???

தெரிந்தவர்கள் பகிருங்கள்..

நன்றி..

அன்புரசிகன்
16-07-2010, 08:29 AM
அப்போ ஒரு மில்லியனை எவ்வாறு எழுதுவீர்கள்???

ஸ்ரீதர்
16-07-2010, 11:02 AM
இந்திய எண் முறைப்படி மில்லியன் கணக்கு இல்லை என நினைக்கிறேன். இந்திய முறைப்படி ,

ஒரு லட்சம் 1,00,000
பத்து லட்சம் 10,00,000
ஒரு கோடி 1,00,00,000

இப்படித்தான் எழுதுவோம் என நினைக்கிறேன்.

nambi
16-07-2010, 11:14 AM
அது மாதிரி பல முறை முயற்சித்து பார்த்துவிட்டேன் வரவில்லை....கஸ்டம் கரன்சியிலும் மாற்றி முயற்சித்து பாத்தாகிவிட்டது.....மில்லியன் கணக்கில் தான் வருகிறது. இந்திய கணக்கு முறையில் வருவதில்லை.

nambi
16-07-2010, 11:35 AM
பிறகு பார்மட், செல், கரன்சி, கஸ்டம்ஸ் சென்று.........Rs.##","##","##0.00 இப்படி அமைத்து பயன்படுத்தி வருகிறேன் இதை பயன்படுத்திப்பாருங்கள்! சரியாக வருகிறதா? என்றும் முயற்சித்து பார்க்கலாம். எனக்கு சரியாக வருகிறது.

ஸ்ரீதர்
16-07-2010, 11:54 AM
எனக்கு சரியாக வரவில்லையே!!! இந்த பார்மேட்டை accept செய்ய மறுக்கிறதே!!

nambi
16-07-2010, 12:10 PM
அதாவது எனக்கிருக்கும் டிஜிட்டுக்கு ஏற்றபடி கொடுத்திருக்கிறேன்....

நீங்கள் Rs.##","##","##","##0.00 என்று கொடுக்கவும் முக்கியம் இரட்டை கோர்ட்ஸ் கொடுக்க வேண்டும் ஒற்றை கோர்ட் கொடுக்க கூடாது. ஒற்றை கோர்ட் வழக்கமானது. அந்த பார்முலாவில் வராது. இன்னும் டிஜிட் ஏற்ற வேண்டும் என்றால் அதாவது கோடிக்கு மேல்...மீண்டும் Rs. முன்னாடி இரட்டை கோர்ட்ஸ் கொடுத்து மூடி மறுபடியும் அரைப்புள்ளி வைத்து மறுபடியும் இரட்டை கோர்ட்ஸ் கொடுத்து தொடங்கி அமைக்கவேண்டும்..... ஏற்றுக்கொள்ளும்...இல்லாவிட்டால் ஏற்றுக்கொள்ளாது...மேலே டிஜிட் குறைவாக வைத்து பண்ணியுள்ளேன் கீழே டிஜிட் அதிகமாக வைத்து பண்ணியுள்ளேன் ஒப்பிட்டு பார்த்தால் விளங்கும்...மேலே இலட்சத்துக்கு கீழே கோடிக்கு....புரிகிற மாதிரி பதிவிட்டிருக்கின்றேனா? தெரியவில்லை...முயற்சித்து விட்டு தெரிவிக்கவும்.

nambi
16-07-2010, 12:22 PM
இலக்கம் பிரிக்க அரைப்புள்ளி மற்றும் இரட்டை கோர்ட்ஸ், இலக்கம் ஏற்ற # இந்த குறியீடு......முடிவில் Rs. முன்னாடி கோர்ட்ஸ் போடாமல் விடவேண்டும்....

பாரதி
16-07-2010, 02:31 PM
பலருக்கும் பயனுள்ள திரியாக அமையும் என்பது பின்னூட்டங்களிலேயே தெரிகிறது. நன்றி நண்பர்களே.

பா.ராஜேஷ்
16-07-2010, 09:20 PM
பயனுள்ள திரியை துவக்கியமைக்கு பாராட்டுக்கள் நூர்..

govindh
16-07-2010, 10:07 PM
நல்ல பகிர்வு...மிக்க நன்றி.

அமரன்
16-07-2010, 11:05 PM
இன்றைக்கு வாத்தியார் கட்டடிச்சுட்டாரப்பா.

நூர்
17-07-2010, 02:47 AM
நண்பர் நம்பி சொல்வது சரிதான். உங்களுக்கு அந்த பார்முலா ஏற்கவில்லை என்றால், இதை முயற்சி செய்து பாருங்கள்.

பார்மட், செல், கஸ்டம்ஸ் சென்று. கீழ் உள்ள கோடுவை டைப் செய்யுங்கள். அல்லது காப்பி செய்து, Ctrl+v கொடுத்து பேஸ்ட் செய்யுங்கள்.

[>=10000000]##\,##\,##\,##0;[>=100000] ##\,##\,##0;##,##0

If you want to add RS.
----------------------

[>=10000000]"RS "##\,##\,##\,##0;[>=100000]"RS " ##\,##\,##0;"RS "##,##0

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/untitled-16.jpg

nambi
17-07-2010, 03:04 AM
இது மாதிரி பயன்படுத்தினாலும் சரியாக வருகிறது....மிக்க நன்றி நூர்....... ஆனால் இதில் 100000 இலட்சம் ரூபாய்க்குமேல் உள்ள இலக்கம் மட்டுமே பிரிக்கிறது அதற்கு கீழ் உள்ள எண்கள் வரவேண்டுமென்றாலும் (அதாவது 1000 ரூபாய்க்கு மேல் உள்ள தொகைகள்).... பைசா மற்றும் ரூபாய்க்கான குறியீடு சேர்த்து வேண்டுமென்றால் இப்படியும் பயன்படுத்திப்பார்க்கலாம்.... (இப்படி பயன்படுத்தினால் இலட்சத்திற்கு மேல் கோடி வரை பிரிக்கிறது)

[>=1000]ரூ##\,##\,##\,##0.00;[>=1000] (''ரூ'' பக்கத்தில் புள்ளி வைக்க கூடாது)

[>=1000]Rs.##\,##\,##\,##0.00;[>=1000]

இப்படியும் பயன்படுத்தலாம்.......

ரூ???","??","??","???.00 (குறிப்பு ''ரூ'' பக்கத்தில் புள்ளி வைக்கவேண்டாம்)

(ஆங்கிலத்தில் என்றால்...Rs.???","??","??","???.00)

nambi
17-07-2010, 05:39 AM
http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/z1-1.jpg

எந்த இடத்தில் நமக்கு விடை வரவேண்டுமோ அந்த செல்லை செலக்ட் செய்யுங்கள், அதில் பார்முலா வை டைப் செய்து என் டர் கீயை தட்டுங்கள். விடை கிடைக்கும்.

அல்லது, படத்தில் வட்டமிட்டு காட்டிய இடத்தில் பார்முலா வை டைப் செய்து என் டர் கீயை தட்டுங்கள்.

=5=7

எல்லா பார்முலாவும் ''='' இந்த குறியீட்டில் தான் ஆரம்பிக்கவேண்டும்.

5,7 இடையில் உள்ள = இந்த குறியீடு சமம் என்பதற்காக பயன் படுத்துகிறோம்.

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/z2-1.jpg

நான் பார்முலா வை ஆரம்பத்தில் புள்ளி வைத்து, டைப் செய்து இருக்கின்றேன். நீங்கள் அந்த புள்ளி இல்லாமல் பயன் படுத்துங்கள்.

நன்றி. மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.

நன்றி! நூர்....இடையிடையே சில சூத்திரங்கள் (பார்முலா) தமிழாக மாற்றுவதற்கு மட்டும்....மற்றபடி நூர் இன் பகிர்வின் படியே தொடர்ந்து கொண்டிருக்கும்...

TRUE or FALSE வராமல் தமிழிலேயே ''சரி'', ''தவறு''.... என்று மட்டும் மாற்றுவதற்கு...இந்த சூத்திரத்தை பயன்படுத்தலாம்...

=IF(7=5,"சரி","தவறு")
சரி மற்றும் தவறுக்கு பதில் சமம், சமமில்லை என்று விருப்பத்திற்கேற்றவாறு மாற்றலாம்... ஒவ்வொரு D வரிசை செல் அல்லது அறைக்குள்ளும் இந்த சூத்திரத்தை மாற்றியமைத்துக்கொள்ளலாம் ......=IF(6=6,"சரி","தவறு")......

நன்றி!

ஸ்ரீதர்
17-07-2010, 08:12 AM
நண்பர் நம்பி சொல்வது சரிதான். உங்களுக்கு அந்த பார்முலா ஏற்கவில்லை என்றால், இதை முயற்சி செய்து பாருங்கள்.

பார்மட், செல், கஸ்டம்ஸ் சென்று. கீழ் உள்ள கோடுவை டைப் செய்யுங்கள். அல்லது காப்பி செய்து, Ctrl+v கொடுத்து பேஸ்ட் செய்யுங்கள்.

[>=10000000]##\,##\,##\,##0;[>=100000] ##\,##\,##0;##,##0

If you want to add RS.
----------------------

[>=10000000]"RS "##\,##\,##\,##0;[>=100000]"RS " ##\,##\,##0;"RS "##,##0

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/untitled-16.jpg
கலக்கிட்டீங்க நூர் & நம்பி அவர்களே!!!!

இப்போ இது சரியாக வருகிறது.

உங்கள் உதவிக்கு மிக்க நன்றி..

சீக்கிரமே அடுத்த கேள்வியுடன் வருகிறேன்....

ஸ்ரீதர்
17-07-2010, 08:18 AM
ஒரு column அதாவது A1 இலிருந்து A500 வரை நிறைய டேடா ஒன்றன் கீழ் ஒன்றாக இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்.

அதில் உள்ள டூப்ளிகேட் டேட்டாக்களை எப்படி கண்டுபிடிப்பது? (பில்டர் உபயோகிக்காமல் , பார்முலா மூலமாக)

நீண்ட நாளுக்கு முன்னால் எங்கோ படித்தது.. சட்டென்று நினைவு கூற முடியவில்லை..

நண்பர்கள் உதவுங்களேன்...

ஓவியன்
17-07-2010, 08:48 AM
எக்செல் 2007 என்றால் Conditional Formating சென்று Highlight Cells Rules - Duplicate Values எனக் கொடுத்தால் மீள வரும் உள்ளீடுகளைக் கண்டு பிடிக்கலாம், ஆனால் 2003 ...?? :confused:

ஸ்ரீதர்
17-07-2010, 09:32 AM
எக்ஸ்ல் 2003 தாங்க நான் உபயோகிப்பது..

nambi
17-07-2010, 10:38 AM
ஒவியன் சொல்வது சரி... அந்த தனிப்பட்ட சலுகை 2003 இல் இல்லை....ஆனால் இப்படி உபயாகிக்கலாமே........பெரும்பாலும் எல்லோரும் 2003 தான் பயன்படுத்துகிறார்கள் இன்னும் 2007 னுக்கு போகவில்லை....


http://officeimg.vo.msecnd.net/en-us/files/118/816/ZA001147478.gif


http://officeimg.vo.msecnd.net/en-us/files/139/597/ZA001147479.gif


http://officeimg.vo.msecnd.net/en-us/files/318/033/ZA001147482.gif

இங்கு குறிப்பிட்டுள்ளபடி உபயோகித்து பார்த்தால் சரியாக வருகிறது.........சோதித்து பார்த்தேன் சரியாக வருகிறது...நான் சொந்த பயன்பாட்டிற்கு பிரிமிய நினைவூட்டல்களை இந்த பார்மட் முறையில் அமைத்திருக்கிறேன்...சரியான தவணை நாட்களுக்கு முன்பு இது விசேட வண்ணத்தில் நினைவூட்டும்....

இது மாதிரி 10 நெடுக்கு வரிசையில் இரண்டு முறை ஒரே எண் வருகிற மாதிரி கலந்து கொடுத்து சோதித்து பார்க்கலாம்...தமிழில் வருகின்ற மாதிரி பயன்படுத்தலாம்...நிபந்தனையுடன்...கூடிய பார்மட் (கன்டிஷன் பார்மட் முறையிலும் தனியான வண்ணம் தோன்றி வெளிப்படுத்தும் வகையில் கொடுக்கலாம்..இதில் >1 என்பது 1 முறைக்கு மேல் மறுபதிவானது (டுப்ளிகேட் பதிவு).....>2....>3 .முறையே இரண்டு மூன்று முறை மறு பதிவானவானவைகளை பிரித்தறிய மாற்றி மாற்றி பயன்படுத்திக்கொள்ளலாம்....

=IF((COUNTIF(E:E,E20)>1),"மறுபதிவு","ஒரே பதிவு") உதாரணத்திற்காக E வரிசை பயன் படுத்தப்பட்டிருக்கிறது....E வரிசை முழுவதும் என்றால் E:E இல்லையேல் எந்த வரிசை வரையில் என்பதை எண் ஆரம்பம் மற்றும் முடிவுடன் கொடுக்கலாம்.....இதில் E20 என்பது எந்த வரசையில் அல்லது எண்ணிலிருந்து கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற உள்ளீடு....மேலே கொடுத்துள்ள மாதிரி படத்தில் A வரிசை பயன்படுத்தப்பட்டிருக்கும்....அதையும் ஒப்பீட்டு பார்த்து புரிந்து கொள்ளலாம்...அது இணையத்தில் இருந்து எடுத்த மாதிரிப் படம்..(ஸ்கிரின் ஷாட்)...விளக்கப்படம் (http://mistupid.com/viewlets/excel/xlcondformatdupes.htm)

(http://mistupid.com/viewlets/excel/xlcondformatdupes.htm)
நன்றி!

ஸ்ரீதர்
17-07-2010, 12:06 PM
அதே!!! அதே!! மிக்க நன்றி நண்பர்களே !!!! அட்டகாசமா வேலை செய்கிறது!!

இவ்வளவு சீக்கிரமா பதில் கொடுத்தா அடுத்த கேள்வி எப்படி கேக்கிறதாம்!!!!

நம்பி அண்ணா & நூர் அண்ணா தூள் கிளப்பறீங்க!!!!

nambi
17-07-2010, 12:45 PM
முடிந்தளவு எக்சல்லை ஒரு வழி பண்ணிடலாம் அதுவா நாமளா? ஒரு கை பார்த்துவிடுவோம்!....நூர் தொடர்ந்து பதிவிட்டு கொண்டே வரட்டும்.. இது நெடுந்தொடராக போகும் என நினைக்கின்றேன்....ஆனால் நூர் அளவுக்கு புரிகின்ற அளவுக்கு முடியுமா? என்பது சந்தேகமே!....அவர் அதிக சிரத்தை எடுத்து பதிவிடுவது என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது (ஒவ்வொன்றும் பதிவேற்றவேண்டும்....அப்பாடி! பாராட்டுக்கள் நூர்)

(குறை இணையவேகத்தில் இது சாத்தியமில்லை.......)

இரண்டு, மூன்று வருடங்களுக்கு முன் இவைகளை சோதித்து பயன்படுத்தியது...நூர் பதிவின் மூலம் அவைகளை திரும்ப நினைவிற்கு கொண்டு வந்து விடலாம்...சில டேட்டா பேஸ்கள் தமிழில் உள்ளது சிலவற்றை மட்டும் மாற்றவேண்டும்...என்னுடைய சொந்த டேட்டா பேஸ்க்கும் சில சூத்திரங்கள் தேவைப்படுகிறது...தமிழில் அனைத்தையும் கொண்டு வந்து பதிவிடலாம்...

எக்சல் ஒரு கடல் என்று ஒரு நண்பர் குறிப்பிட்டார்.... அது உண்மை தான்...அவ்வளவையும் பகிரலாம்...ஒன்னும் பாதகமில்லை...சூத்திரங்கள் பயன்படுத்தி கொண்டே இருந்தால் தான் நினைவில் இருக்கும்...சில செய்முறைகள் (டெமோக்கள்) இருக்கிறது...அதையும் பயன்படுத்திக்கொள்ளலாம் ஆங்கிலம் வராமல்...

நன்றி!

ஸ்ரீதர்
17-07-2010, 02:12 PM
எக்ஸல்லில் உள்ள Group & Outline ஐ எப்படி எதற்கு பயன்படுத்துவது என்று விளக்குங்களேன்..

அமரன்
17-07-2010, 02:37 PM
என்னையப் போல அரிவரிப் பிள்ளைகளுக்கும் கொஞ்சம் சான்ஸ் குடுங்களேன்

ஸ்ரீதர்
17-07-2010, 02:41 PM
அது என்னங்கண்ணா அரிவரிப் பிள்ளை????

ஓவியன்
17-07-2010, 03:10 PM
அது என்னங்கண்ணா அரிவரிப் பிள்ளை????

ஆ, ஆ, இ, ஈ, உ, ஊ மற்றும் A, AA, B, BB, C, CC படித்துப் பழகும் பிள்ளைகளை அரிவரிப் பிள்ளைகளென ஈழத்தில் அழைப்பது வழக்கம்..!! :):D

மதி
17-07-2010, 03:23 PM
ஆ, ஆ, இ, ஈ, உ, ஊ மற்றும் A, AA, B, BB, C, CC படித்துப் பழகும் பிள்ளைகளை அரிவரிப் பிள்ளைகளென ஈழத்தில் அழைப்பது வழக்கம்..!! :):D
:icon_b::icon_b:

ஸ்ரீதர்
17-07-2010, 04:01 PM
ஆ, ஆ, இ, ஈ, உ, ஊ மற்றும் A, AA, B, BB, C, CC படித்துப் பழகும் பிள்ளைகளை அரிவரிப் பிள்ளைகளென ஈழத்தில் அழைப்பது வழக்கம்..!! :):D

ஓ அப்படியா!! அப்படியெனில் நானும் ஒரு அரிவரிப்பிள்ளைதான்...

nambi
17-07-2010, 07:30 PM
எக்ஸல்லில் உள்ள Group & Outline ஐ எப்படி எதற்கு பயன்படுத்துவது என்று விளக்குங்களேன்..

http://www.youtube.com/watch?v=g0RqQI9xn0Q

நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் டேட்டா வகைகளை தனித்தனியாக பிரித்து கணக்கிடப் பயன்படுத்தப்படுவது....

மொத்தமாக இருக்கும் டேட்டாவில் போனமாதம் வரைக்கும் என்ன வணிகம் நடந்தது என்று மாதவாரியாக பிரித்து பயன்படுத்துவது....இப்படி பல்வேறு பயன்களுக்காக....நமது மன்றத்தில் முகப்பில் பல்வேறு பிரிவுகளை எப்படி சுருக்கி, நீட்சியடைய வகை செய்யப்பட்டுள்ளதோ அதை போன்றது தான்...கூடுதலாக கூட்டுத்தொகையை அந்தந்த குரூப்பில் இறுதியிலேயே பார்த்துக்கொள்ளலாம்...சப்டோட்டல் வசதியையையும் பயன்படுத்திக்கொள்ளலாம்...

10 டேட்டா வை அடித்து சோதித்தால் இதன் பயன் விளங்கும்...இல்லையேல் அந்த ஒளிப்படக்காட்சியில் கூறியது போன்று பயன்படுத்திப் பார்க்கலாம்....குரூப், அன்குரூப், சப்டோட்டல்....இது சார்ட், வரைபடம் போன்றவைகளுக்கு இந்த குரூப்பிங் முறை பயன்படும்....

பா.ராஜேஷ்
18-07-2010, 06:29 PM
ஒரு column அதாவது A1 இலிருந்து A500 வரை நிறைய டேடா ஒன்றன் கீழ் ஒன்றாக இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்.

அதில் உள்ள டூப்ளிகேட் டேட்டாக்களை எப்படி கண்டுபிடிப்பது? (பில்டர் உபயோகிக்காமல் , பார்முலா மூலமாக)

நீண்ட நாளுக்கு முன்னால் எங்கோ படித்தது.. சட்டென்று நினைவு கூற முடியவில்லை..

நண்பர்கள் உதவுங்களேன்...

நம்பி கூறியதை போலவே, =COUNTIF(A:A,A:A) என்பதை அந்த வரிசை செல்களில் தட்டச்சு செய்தல், எத்தனை முறை ஒரு குறிப்பட்ட மதிப்பு திரும்ப வருகிறது என்றும் அறிந்து கொள்ளலாம்...

nambi
19-07-2010, 05:06 AM
நன்றி! ராஜேஷ்...இது எத்தனை முறை பதிய பட்டிருக்கிறது என்ற எண்ணிக்கையில் கொடுக்கும்.....இப்படி பயன்படுத்துவது எளிதில் டூப்ளிக்கேட்களை கண்டறிந்து சீர் செய்யலாம்.....

A வரிசையில் எண்களை கொடுத்துவிட்டு B வரிசையில் சோதித்து பார்த்தால் வரும்....''1 முறை''. ''2 முறை''..... என்று தமிழில் வரவேண்டும் என்றால் இப்படியும் பயன்படுத்தலாம்... =COUNTIF(A:A,A:A)&"முறை"

ஸ்ரீதர்
19-07-2010, 06:03 AM
என்னங்க!!! வேற யாருமே கேள்வி கேட்க மாட்டேங்குறீங்க!!!!

அடுத்த கேள்வியை நானே கேட்டிடவா???

ஸ்ரீதர்
19-07-2010, 06:15 AM
அடுத்த கேள்வியை கேட்பதற்கு முன் , எக்ஸல்லில் உபயோகிக்க நான் நீண்ட காலமாக பயன்படுத்தி வரும் ஒரு utility யை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இதன் பெயர் ASAP Utilities. அதை இந்த சுட்டியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். http://www.asap-utilities.com இது எக்ஸல்லில் உபயோகிக்ககூடிய ஏட் இன் வகையை சேர்ந்தது,

எக்ஸல்லில் அதிகமாக பயன்படுத்தும் , மற்றும் திரும்ப திரும்ப உபயோகிகிக்க என பல வகையான உபயோகங்கள் இதில் உள்ளன.

இது பலவகையில் எனக்கு உதவிகரமாக இருக்கிறது.

நண்பர்கள் முயற்சித்துப்பாருங்கள்...

நூர்
22-07-2010, 01:50 PM
23/07/2010
==========

2. சில குறியீடுகள்.
---------------------

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/er2.jpg

பார்முலா விதிப்படி முதலில் = இந்த குறியீட்டை டைப் செய்து,ஒவ்வொன்றையும் செய்து பாருங்கள்.

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/untitledy.jpg

சில நேரங்களில் நாம் , பார்முலா கொடுத்து என்டர் செய்யும் போது, சில
பிழை செய்தி தரும் . உதாரணமாக கீழ் உள்ள படத்தை பாருங்கள்.

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/AQ.jpg

அதன் விபரம்.கீழே...
------------------------------

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/errK.jpg

(இதை நம் நண்பர்கள் யாராவது தமிழில் பெயர்த்தால், நானும் புரிந்து கொள்வேன்)
===================================

+ கூட்டல்
----------

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/untitled1-1.jpg


முதலில் பார்முலா விதிப்படி = என்பதை டைப் செய்யுங்கள்.

A1 என்ற செல்லில் இருக்கும் எண் 8 ஐ டைப் செய்யுங்கள்.

அடுத்து, குறியீட்டை டைப் செய்யுங்கள்.

அடுத்து, B1என்ற செல்லில் இருக்கும் எண் 4 ஐ டைப் செய்யுங்கள். எண்டர் தட்டுங்கள்.

=8+4

----------------------------------------------

இப்படி, A1 என்ற செல்லில் இருக்கும் எண் ஐ டைப் செய்வதற்கு பதிலாக A1 என்று டைப் செய்யலாம்.

இதைப்போல,B1 என்ற செல்லில் இருக்கும் எண் ஐ டைப் செய்வதற்கு பதிலாக B1 என்று டைப் செய்யலாம்.


ஆம். இதுதான் மிக எளிதானதும், சிறப்பானது ஆகும்.

எளிதானது என்பது உங்களுக்கு டைப் செய்யும் போது தெரியும்.

எப்படி சிறப்பானது என்று ஒரு உதாரணத்துடன் பார்க்கலாம்.
-----------------------------------

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/untitled1-1.jpg

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/untitled2-1.jpg

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/untitled3.jpg

=8+4 என்ற பார்முலா வில் செய்த கணக்கு, விடை 12 சரியாக வந்தது.

படத்தில் வட்டமிட்டு காட்ட பட்ட இடத்திற்கு கர்சரை கொண்டு செல்லுங்கள். சிறிய + தெரியும். அப்பொழுது மவுசை கிளிக் செய்தபடி கீழாக இழுங்கள்.

அந்த விடை காப்பி செய்து காட்டபடும்.

ஆனால்,

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/untitled4.jpg

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/Untitled-6-1.jpg

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/untitled7-1.jpg

=A1+B1 என்ற பார்முலா கொடுத்து செய்யுங்கள்.

சிறிய + தெரியும் பொழுது, மவுசை கிளிக் செய்தபடி கீழாக இழுங்கள்.

ஆம். எல்லா கணக்குகளுக்கும் சரியான விடை வந்து இருக்கும்.


http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/Q7.jpg



இதைப்போல், =A1+B1 என்ற பார்முலா வில் ஒரேஒரு கணக்கு இட்டு, சிறிய + தெரியும் பொழுது, மவுசால் கிழே இழுங்கள்.

முதல் கணக்கு க்கு விடையும், மற்ற செல் களில் 0...0...0... என காட்டும். இருந்தாலும் அது கணக்கிட தயாராக இருக்கிறது.

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/Q8.jpg

அதற்கு முன் உள்ள செல்லில் எண்களை டைப் செய்ய,செய்ய விடை தானாக வரும்.

=====================================

( ) அடைப்பு குறி
===============

எக்ஸெல்-லில் அதிகமாக பயன் படுத்தும் குறியீடுகளில் இதுவும் ஒன்று.

இதை ஏன் பயன்படுத்த வேண்டும்? இதனால் என்ன பயன்? என்று ஒரு உதாரணத்துடன் பார்ப்போம்....

இதன் தொடர்சி... http://www.tamilmantram.com/vb/showpost.php?p=483012&postcount=56

nambi
22-07-2010, 04:52 PM
நன்றி நூர்! நல்ல விளக்கமாக பதிவிட்டுள்ளீர்கள்....

nambi
23-07-2010, 04:35 AM
23/07/2010
==========


http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/errK.jpg

(இதை நம் நண்பர்கள் யாராவது தமிழில் பெயர்த்தால், நானும் புரிந்து கொள்வேன்)





#DIV/0!.... சுழியத்தை வகுத்தாலோ அல்லது வெற்று தரவு தாள் அறையை (பிளாங்க் செல்லை) வகுத்தாலோ இந்த பிழைச்செய்தி வரும்
உ.தா....
...... A..........B
1...... 46..... =(A1/0) (கிடைக்க கூடிய விடை #DIV/0! ...என்ற பிழைச்செய்தி)
2....... 0


http://0.tqn.com/d/spreadsheets/1/G/Z/4/-/-/divide_0_error.gif

=D1/D2 என்ற சூத்திரத்தை பயன்படுத்தும் பொழுது D2 செல் வெற்றிடமாக உள்ளிட்டு வகுத்ததால் இந்த பிழை செய்தி...
............................................
#NAME?.... இதற்கு எக்சல் (தரவு தாள்) அங்கீகரிக்க முடியவில்லை எனபதான பொருள்… வரிசையில் உள்ள எண்களையெல்லாம் கூட்டுத்தொகை (சம்) செய்யும் பொழுது (காலன்) நிறுத்தற்குறி அல்லது முக்காற்புள்ளி வைக்கமால் சூத்திரத்த்தை உள்ளிட்டோமானால் இந்த பிழைச் செய்தி வரும். இன்னும் பல.... ஒற்றை மேற்கோள் (கொட்டேசன்) குறியீடு உள்ளீடாமால் இன்னொரு தரவு தாளின் சூத்திரத்தை நடப்புத் தாளில் இணைத்தோமானாலும் இந்த பிழைச்செய்தி வரும்....சூத்திரங்களின் பெயர்களை எழுத்துப்பிழையுடன் உள்ளிட்டோமானாலும் இந்த செய்தி வரும்...
உதா....
http://i837.photobucket.com/albums/zz297/nambitn/EXCELNAMEERSS.jpg
.... A........B
1... 46
2... 46
3.... =sum (கிடைக்க கூடிய விடை #NAME? ...என்ற பிழைச்செய்தி)
............................
#N/A ......சரியான அல்லது பொருந்தாத தரவுத் தகவல்களை, (டேட்டா) (நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ) உள்ளிட்டோமானால் இம்மாதிரி பிழைச்செய்தி வரும்....நீங்கள் கேட்டத் தகவல் கிடைக்கவில்லை என்பதான பொருள்...''லுக்அப்'' சூத்திரங்கள் பயன்படுத்தும் பொழுது அது தேடிய தகவல்கள் கிடைக்காதபொழுது இச்செய்தி வரும்.....
உ.தா....
http://i837.photobucket.com/albums/zz297/nambitn/EXELTAMILLOOKUPEGSS.jpg

......A.......B.........C
1... 25....55........=LOOKUP(24,A1:A3,B1:B3) (கிடைக்க கூடிய பிழைச்செய்தி #N/A) .
2...55.....55

3...55.....28

(சூத்திரத்தில் தேடபணிக்கப்பட்ட சிவப்பு வண்ணத்தில் உள்ள 24 என்ற எண் பட்டியலில் இல்லை....)


..........................


#NULL! பல தரவு அறைகளில் உள்ள எண்களை கூட்டும் பொழுது பயன்படுத்தப்படவேண்டிய குறியீடுகளை சரிவர சூத்திரங்களில் பயன்படுத்தாமல் போனால் இம்மாதிரி பிழைச்செய்தி வரும்....

உ.தா
http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/AQ.jpg

படத்தில் =A2+B1 C1+D1 என்ற சூத்திரத்தின் இடையில் ''+'' விடுபட்டு போயிருக்கிறது....ஆகையால் இந்த பிழைச்செய்தி....
.................
#NUM! சில சூத்திரங்களில் நேர் குறியீட்டு எண்கள் வரவேண்டிய இடத்தில் எதிர் குறியீட்டு எண்கள் வருவதால் ஏற்படும் பிழைச்செய்தி
உ.தா....
http://i837.photobucket.com/albums/zz297/nambitn/EXELTAMILREFSS.jpg

.....A
1...-1
2...=ERF(A1) இந்த சூத்திரத்தில் எதிர் குறியீட்டு எண் வந்தால் இப்படிபட்ட பிழைச்செய்தி #NUM!

...........

#REF! சரியான அறை எண்ணைக் (செல் ரெபரன்ஸ் நெம்பர்) குறிப்பிடாமல், வரிசை எண்ணை குறிப்பிடாமல் விட்டால் இம்மாதிரி பிழைச்செய்தி வரும்
http://i837.photobucket.com/albums/zz297/nambitn/EXCELREFERTAMILSS.jpg
...... A ..... B ........C
1..... 455....450......=VLOOKUP(B1,A1:A2,2,0)
2..... 450
(இதில் 2 என்ற எண் தேடவேண்டிய நெடுக்கு வரிசையை குறிப்பது...A என்ற வரிசை மட்டுமே உள்ளது அதற்கு 1 என்று குறிப்பிடவேண்டும் 2 என்று குறிப்பிட்டதால் இந்த #REF! பிழைச்செய்தி வந்தது)
..................
#VALUE! எண்களின் இடையே சொற்கள், கூட்டுத்தொகைக்கான சூத்திரம் பயன்படுத்தும் பொழுது வரிசையினைடையே எண்களுக்கு பதிலாக வார்த்தைகள் (பெயர்..டெக்ஸ்ட்) இடம் பெற்றால் இந்த பிழைச்செய்தி வரும்.
உ.தா.....
http://i837.photobucket.com/albums/zz297/nambitn/EXCELVALUEERSS.jpg

=A1,A3 அறைகளில் மதிப்பு உள்ளிடப்பட்டு A3 இல் மட்டும் பெயர் உள்ளிடப்பட்டதால்...இந்த பிழைச் செய்தி #VALUE! வந்தது...

மதி
23-07-2010, 04:59 AM
அழகுத் தமிழில் எனக்கு விருப்பமான எக்ஸல் பற்றி விளக்கியுள்ளீர்கள்... ஏற்கனவே தெரிந்த விஷயங்களையும் தமிழில் படிக்க புதிதாய் இருந்தது.. நன்றி நூர் மற்றும் நம்பி

மச்சான்
23-07-2010, 05:29 AM
நூர், நம்பி இருவருக்கும் நன்றிங்ணா...! ரொம்பவே உபயோகமான தகவலை பகிர்ந்திருக்கிறீர்கள். தொடர்ந்து பதியுங்கள். நன்றி.

.

நூர்
23-07-2010, 05:42 AM
மேலதிக தகவல் தந்த, நண்பர் நம்பிக்கு நன்றி.

நூர்
28-07-2010, 05:11 AM
( ) அடைப்பு குறி
===============

எக்ஸெல்-லில் அதிகமாக பயன் படுத்தும் குறியீடுகளில் இதுவும் ஒன்று.

இதை ஏன் பயன்படுத்த வேண்டும்? இதனால் என்ன பயன்? என்று ஒரு உதாரணத்துடன் பார்ப்போம்....

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/xc3.jpg

என் நண்பர் ஒருவருக்கு, 3 ஆப்பில்,2 ஆரஞ்சு பழம் கொடுத்தேன். இதை போல் 4 நண்பர்களுக்கு கொடுத்தேன்.

நான் கொடுத்த மொத்தபழம் எத்தனை?

3+2x4= 11

(3+2)x4= 20

இதில் எது சரி ?

நம் கேள்விக்கு சரியான விடை
இரண்டாவது விடைதான்.

இருந்தாலும்,இரண்டுவிடைகளும் சரியானதே. அது எப்படி?

கணிதபடி, முதலில் பெருக்கல் கணக்கை செய்துவிட்டு, பின் கூட்டல் செய்ய வேண்டும்.

அதைதான் காட்டுகிறது, முதல் விடை.

இரண்டாவது கணக்கில்,

அடைப்புகுறியில் இரண்டு எண் இருந்தாலும்,

அதன் நடுவில் உள்ள குறியீட்டுக்கு

ஏற்ப,கணித்து ஒரே எண்னாக எடுத்துகொண்டு

அருகில் உள்ள எண்னால் பெருக்க படுகிறது.

ஆக, அடைப்புக்குறி பயன் படுத்தும் போது,

கவனமாக இருங்கள்.

-----------------------------------


இதை தவிர, பார்முலாவில் அடிப்படையாக பயன்படுத்தப்படுகிறது. அதிலும் ஒரு சில பார்க்கலாம்.

எக்ஸெல்லில், பேசிக்காக,

முதலில் மாதம் / தேதி / வருடம் வரும்.

இதன் அடிப்படையில் கீழ் உள்ள பார்முலா வை செய்து பாருங்கள்.

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/XC1.jpg

ஏதாவது ஒரு செல்லில் கீழ் உள்ள பார்முலாவை அப்படியே டைப் செய்து என் டர் தட்டுங்கள்.

=TODAY()

=NOW()

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/XC2.jpg


A1 ல் பிறந்த தேதி, B1ல் இன்றைய தேதி.என்று இருந்தால்.
-------------------------------------------------------

மொத்த வருடங்கள் பார்க்க. =DATEDIF(A1,B1,"Y")

மொத்தமாதங்கள் பார்க்க. =DATEDIF(A1,B1,"M")

மொத்த நாள்கள் பார்க்க. =DATEDIF(A1,B1,"D")

வருடம்போக மீதி உள்ள மாதம் பார்க்க.

=DATEDIF(A1,B1,"YM")


நேரத்தை கணக்கிட நம் நண்பர்கள் உதவுவார்கள்.
-------------------------------------------------


% சதவீதம்.
==========

ஆடி மாத தள்ளுபடி 15% , 20% ,30% என விளம்பரம் செய்வார்கள்.

அதைபற்றி பார்க்கலாம்.

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/xc4.jpg


A1 ல் Amout, B1 சதவீதம் இருந்தால்.

தள்ளுபடி மட்டும் பார்க்க. =A1*B1

(இது பெருக்கல் கணக்கு போல் இருந்தாலும் B ல் % என்ற குறியீடு

இனைந்து இருப்பதை கவனியுங்கள்.)

Amount ல் தள்ளுபடியை கழித்து பார்க்க.

=A1-A1*B1

இதன் தொடர்சி வரும் வாரம் வரும்....

அன்புரசிகன்
28-07-2010, 05:36 AM
சிரத்தை எடுத்து பதியும் நூருக்கு வாழ்த்துக்கள். மிகவும் பயனுள்ள விடையம். பலரும் கவனக்குறைவில் அடைப்புக்குறி இட மறந்துவிடுகிறார்கள். விடையும் பிழைத்துவிடும்.

(சுட்டிகளை 2வது பதிவில் இணைக்க தொடங்கலாமே... பலபதிவுகள் வந்தால் பின் கண்டுபிடித்து இணைப்பது கடினமாகிவிடும்.)

நூர்
28-07-2010, 06:41 AM
.....
(சுட்டிகளை 2வது பதிவில் இணைக்க தொடங்கலாமே... பலபதிவுகள் வந்தால் பின் கண்டுபிடித்து இணைப்பது கடினமாகிவிடும்.)

நன்றி.

நான் ஏற்கனவே, முதல் பதிவில் சுட்டியை இனைத்து வருகின்றேன்.

ஒவ்வொரு பதிவிக்கும் முன் உள்ள பதிவில் சுட்டியை இனைக்க வேண்டும் என்றால், பேஜ் (பக்கம்) மாறினால் தானே இனைக்க முடியும்!

வேறு வழி இருக்கிறதா.

நன்றி.

அன்புரசிகன்
28-07-2010, 06:53 AM
நன்றி.

நான் ஏற்கனவே, முதல் பதிவில் சுட்டியை இனைத்து வருகின்றேன்.

ஒவ்வொரு பதிவிக்கும் முன் உள்ள பதிவில் சுட்டியை இனைக்க வேண்டும் என்றால், பேஜ் (பக்கம்) மாறினால் தானே இனைக்க முடியும்!

வேறு வழி இருக்கிறதா.

நன்றி.
நீங்கள் பதிவது இந்த திரியின் 11 பதிவில். அதை நான் கவனிக்கவில்லை. உண்மையில் தகுந்த இடம் இந்த திரியின் 2வது பதிவு தான். அதனால் தான் உங்களது பதிவாக ஒரு பதிவினை 2வது பதிவாக இந்த திரியில் ஏற்படுத்தியுள்ளேன். நீங்கள் பதியும் பாடவிதானத்தின் சுட்டியாக அந்தந்த பதிவுகளின் சுட்டியை அந்த 2வது பதிவில் சேமிக்கலாம். ஒவ்வொரு பதிவுகளின் சுட்டியை அந்தந்த பதிவுகளின் வலதுபக்க மேல்மூலையில் உள்ள பதிவு இலக்கத்திலிருந்து பெறலாம். உதாரணமாக இந்த திரியின் இரண்டாவது பதிவின் சுட்டி இது:

http://www.tamilmantram.com/vb/showpost.php?p=481886&postcount=2
இதனை அந்த இலக்கத்தை வலது கிளிக் செய்து copy shortcut என்பதன் மூலம் பெறலாம்.

நூர்
28-07-2010, 07:22 AM
.... வலதுபக்க மேல்மூலையில் உள்ள பதிவு இலக்கத்திலிருந்து பெறலாம். உதாரணமாக இந்த திரியின் இரண்டாவது பதிவின் சுட்டி இது:

http://www.tamilmantram.com/vb/showpost.php?p=481886&postcount=2
இதனை அந்த இலக்கத்தை வலது கிளிக் செய்து copy shortcut என்பதன் மூலம் பெறலாம்.

மிக்க நன்றி.

இப்படி ஒரு வழி இருப்பதை தெரிந்து கொண்டேன்.

அன்புரசிகன்
28-07-2010, 10:38 AM
மிக்க நன்றி.

இப்படி ஒரு வழி இருப்பதை தெரிந்து கொண்டேன்.
நான் சொன்னதை நீங்கள் சரிவர புரிந்துகொள்ளவில்லை. ஒருவேளை நான் தான் தவறாக சொன்னேனோ தெரியவில்லை.

இந்த திரியின் இரண்டாவது பதிவை (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=481886#post481886)பார்த்தீர்களா???

அது பாடவிதான சுட்டிகளை இணைப்பதற்காக நான் உங்களது பதிவாக இணைத்தது.

அதிலே தான் உங்களது ஒவ்வொரு விளக்கக்குறிப்புக்களை இணைக்கச்சொன்னேன். வருங்காலத்தில் அது சிரமமின்றி தேடிப்படிக்க உதவும்.

இல்லையேல் ஒவ்வொருபதிவாக படித்து படித்து பார்க்கவேண்டிவரும்.

உதாரணமாக உங்களது இரண்டாவது பதிவை (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=481886#post481886)பாருங்கள்.

நூர்
28-07-2010, 11:46 AM
.....

அது பாடவிதான சுட்டிகளை இணைப்பதற்காக நான் உங்களது பதிவாக இணைத்தது.

அதிலே தான் உங்களது ஒவ்வொரு விளக்கக்குறிப்புக்களை இணைக்கச்சொன்னேன். வருங்காலத்தில் அது சிரமமின்றி தேடிப்படிக்க உதவும்.

......


நன்றி. ஆமா. இது ரொம்ப சுலபமாக இருக்கிறது. இப்படியே தொடர்கின்றேன்.

nambi
28-07-2010, 02:17 PM
( ) அடைப்பு குறி
===============

A1 ல் பிறந்த தேதி, B1ல் இன்றைய தேதி.என்று இருந்தால்.
-------------------------------------------------------

மொத்த வருடங்கள் பார்க்க. =DATEDIF(A1,B1,"Y")

மொத்தமாதங்கள் பார்க்க. =DATEDIF(A1,B1,"M")

மொத்த நாள்கள் பார்க்க. =DATEDIF(A1,B1,"D")

வருடம்போக மீதி உள்ள மாதம் பார்க்க.

=DATEDIF(A1,B1,"YM")


நேரத்தை கணக்கிட நம் நண்பர்கள் உதவுவார்கள்.
-------------------------------------------------



தோழர் நூர் விளக்கமாக பதிவிட்டுள்ளார் மிக்க நன்றி!
DATEDIF சூத்திரத்தை இப்படியும் பயன்படுத்தி வயதை அறியலாம்...இந்த சூத்திரம் லோட்டஸ் இல் இருந்து பின்பற்றி வருகின்ற சூத்திரம்... சிலவற்றை இங்கே உங்கள் பார்வைக்காக...(இந்த சூத்திரத்திற்கு தொடர்புடையவன மட்டும்....(மற்றவை அந்தந்த பகுதி வரும்போது பகிரலாம்...!)
படம்....1 DATEDIF சூத்திரம்...அதற்கு மேலேயே இன்னொரு சூத்திரம் பயன்படுத்தி வயது கண்டுபிடிப்பதற்கான வழிமுறை உள்ளது அதை இரண்டாவது படத்தில் பார்க்கவும்...
http://i837.photobucket.com/albums/zz297/nambitn/TAMILDOB2DATEDIF.jpg


2 வது படம்.....

http://i837.photobucket.com/albums/zz297/nambitn/TAMILDOB1SS.jpg

இதில் TODAY() என்ற சூத்திரத்திற்கான தனி வரிசை உருவாக்காமல் இப்படி அமைத்து கொள்ளலாம்....இதில் 365.25 என்பது வருடத்திற்கு 365 நாள்...4 மணி நேரம்...பூமி சூரியனை சுற்றிவர ஆகும் காலம்..அதன்படி இந்த நாத்திரமும் லீப் வருடத்திற்கு ஏற்றவாறு அமைக்கபட்டிருக்கிறது....

INT தேதியை இன்னொரு தேதியுடன் கழிக்கும் பொழுது எல்லாமே சீரியல் எண்ணாக மாற்றி கழிக்கும் வயது என்று வரும்பொழுது நாட்கணக்கையும் காட்டும் அது வராமல் இருக்க இந்த INT பயன்படுத்தினால் முழு எண்ணாக மாற்றி வயதை காட்டுவதற்காக பயன்படுத்தப்படுகிறது. இதை வீட்டில் உள்ளவர்கள் அனைவரது பிறந்தநாட்களை குறிப்பிட்டு அட்டவணைப்படுத்தி வைத்துக்கொள்ளலாம். பிறந்த கிழமையையும் காணலாம். ''=TEXT(பிறந்த நாள், "dddd")'' என்று தனி வரிசையில் கிழமைக்கான வரிசையில் இந்த சூத்திரத்தை கொடுத்தால் கிழமை வரும். ஆனால் தமிழில் வர ''பின்னல் நிலை'' சூத்திரத்தை பயன்படுத்தவேண்டும். (nested function)...அதை பிறகு தருகிறேன்..இல்லை அது குறித்து தொடர்ச்சி வரும்பொழுது தருகிறேன்.

பொதுவாக எக்சல் இல் 1900 வருடத்திற்கு பிறகு வருகின்ற பிறந்த தேதிகளையே கணக்கில் எடுத்து கொள்ளும் அதற்கு முன் அதாவது மகாத்மா காந்தி எத்தனையாவது பிறந்த தினம் என்பதை அவருடைய பிறந்தநாளை வைத்து கண்டறியமுடியாது. அப்படி உள்ளிட்டால் பிழைச்செய்தி வரும்.

அதற்கும் வழி இருக்கிறது...அதை பிறகு பார்க்கலாம்....(கூடுதலாக சில ஆட் இன் செயற்பாடுகளை நிறுவவேண்டும் அது இணையத்திலேயே இலவசமாக இருக்கிறது. நிறுவாமல் பயன்படுத்தவும் வழிஇருக்கிறது. பிறகு பார்க்கலாம்.)

இதற்கு பிறகு கீழே நேரம் குறித்த சூத்திரம்.....தொடரும்...

நன்றி!

nambi
28-07-2010, 02:29 PM
இதன் பெயர் ASAP Utilities. அதை இந்த சுட்டியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். http://www.asap-utilities.com இது எக்ஸல்லில் உபயோகிக்ககூடிய ஏட் இன் வகையை சேர்ந்தது,



நண்பர்கள் முயற்சித்துப்பாருங்கள்...

மிக்க நன்றி தோழரே!
இதில் சிலவற்றை சோதித்து பார்த்தேன் அந்த தளத்திலேயே மிக உபயோகமாக இருக்கிம் என நினைக்கிறேன். பிறகு தான் முழுமையாக அறிய வேண்டும். பகிர்வுக்கு நன்றி!
மேலும் இதன் சிறப்புகள் பயன்படுமுறைகள் இருந்தால், பயன்படுத்தியிருந்தால் அதையும் இங்கே பகிர்ந்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும். நேரமிருப்பின்.........

நன்றி!

நூர்
28-07-2010, 03:18 PM
மேலதிக தகவல் தந்த, நண்பர் நம்பிக்கு நன்றி.

nambi
28-07-2010, 03:56 PM
எக்சல் இல் நேரம் என்பதற்கு பல்வேறு சூத்திரங்கள் உள்ளன.........

ஆனால் பெரும்பாலும் பயன்படும் சூத்திரமான...TIME என்ற சூத்திரத்தை மட்டும் இங்கே தருகிறேன் இந்த சூத்திரம் பயனபடுத்தாமலும் தரவு அமைக்கலாம்..

இரண்டையும் சேர்த்து அமைத்த ஒரு சிறு தரவுத்தாளை பயன்படுத்தி பார்த்தால் மிக எளிதாக புரியும் மற்ற சூத்திரங்களை தேவைப்படும் பொழுது பயன்படுத்திக்ககொள்ளலாம்.

=TIME(மணி, நிமிடம், வினாடி)
இந்த அடைப்புக் குறிக்குள் மணி, மற்றும், வினாடியை உள்ளிட்டால் முழுமணித்துளிகளை வழங்கும் .....

அதற்கு முன்....
ஒரு நாள் என்பது 24 மணி நேரம்...
24 மணி நேரம் என்பது 1440 நிமிட நேரம்...

1440 நிமிட நேரம் என்பது 86,400 வினாடிகள் இதெல்லாம் ஒருநாளைக்குரிய நேர அலகுகளின் அளவீடுகள்....

முதல் படம்....

http://i837.photobucket.com/albums/zz297/nambitn/TIMECALTAMILTYPE1.jpg


ஒரு நிறுவனத்திற்குள்...அல்லது ஏதோவொரு கட்டடத்திற்குள்..... நுழைவு நேரம்....நுழைந்து விட்டு பின் கட்ட்டத்திலிருந்து (பில்டிங்) வெளியேறிய நேரம் குறிப்பிட்டு எவ்வளவு நேரம் உள்ளிருந்தார் எனபதை கணக்கிட சூத்திரம் அமைக்கப்பட்டது. இதில் ஆரம்பத்தில் 1- என்று குறிப்பிடப்பட்டு சூத்திரம் அமைக்கப்பட்டிருக்கும்..இல்லையேல் ஆரம்ப எண்ணையும் கூட்டி தவறான கணக்கிடாக காட்டும் என்பதால் 1- கொடுக்கப்பட்டுள்ளது.


இரண்டாவது படம்....
http://i837.photobucket.com/albums/zz297/nambitn/TIMECALTAMILTYPE2.jpg

இரண்டாவது படத்தில் ஆரம்ப நாள் மற்றும் நேரம் (தொடர்வண்டி நேரமாக கூட இருக்கலாம்...திரும்பி வரும் தேதி மற்றும் அங்கே 00:00 என்று குறிப்பிடப்பட்டுள்ளது நள்ளிரவு நேரமாகும்....அதன்பிறகு முடிவு..அல்லது திரும்பும் நாள் மற்றும் நேரம் அதே நள்ளிரவு...அதற்கான சூத்திரம் கொடுக்கப்பட்டு 24 ஆல் பெருக்கப்பட்டிருக்கும்...இப்பொழுது எத்தனை மணி நேரம் பயன்படுத்தப்பட்டது பிரயாணம் செய்யப்பட்டது என்பதை கணக்கிடலாம். அதாவது அங்கே உள்ளிடப்பட்ட ஆலம்ப தேதி முடிவு தேதி நேரத்தின் படி 10248 மணி நேரம் பிரயாணம் நடந்துள்ளது என்று கணக்கிட்டு கொள்ளலாம்.

நேரம் ஆங்கிலத்தில் PM AM என்று வரும் அதை தமிழில் மாற்றுவதற்கு கட்டளை பட்டியில் ''வடிவமை'' (பார்மட்) சென்று....பிறகு அறை (''செல்'') சென்று ....''எண்''...அதற்கு பிறகு ''நேரம்' (Time) தேர்வு செய்யவும்...''எந்த மொழி'' எனபது கீழே இருக்கும் அதில் ''தமிழ் (Tamil)'' என்பதை தேர்வு செய்தால் காலை, மாலை என்று தானாகவே வரும். படத்தில் காட்டயுள்ளதின்படி முயன்றால் போதுமானது....ஆங்கிலத்திலும் இதே மாதிரி தான்...ஆங்கில கட்டளை மெனு வைத்துக்கொண்டாலும் தமிழ் வடிவமைப்பை (பார்மட்டை) மேற்கொள்ள முடியும்....
http://i837.photobucket.com/albums/zz297/nambitn/TAMILTIMESETTINGINTAMILEXCEL.jpg

(படத்தில் 1 வது செயலுக்கு பிறகு தனி கீழிறங்கு மெனு ஒன்று வரும் அதில் செல் என்ற தொடுப்பை சுட்டினால்....மேற்கண்ட படம் வரும்)

மாலை நேரத்தை உள்ளிடும் பொழுது..தொடர்வண்டி நேர முறையில் 13;10, 14;00....இப்படி உள்ளிட வேண்டும் அது தானாகவே மாலைக்கு மாற்றிக்கொண்டு விடும்.

மூன்றாவது படம் கீழே தருகிறேன் அதை கொண்டு எப்பொழுது வேண்டுமானாலும் நேரக்கணக்கீடு செய்யலாம் இந்த நேரத்திலிருந்து இத்தனை நிமிடம் கூட்டனால் எவ்வ்வளவு? வினாடி கூட்டினால் எவ்வளவு...?

http://i837.photobucket.com/albums/zz297/nambitn/TAMILTIMEFORMATSERIESFORTM.jpg

nambi
28-07-2010, 04:32 PM
http://i837.photobucket.com/albums/zz297/nambitn/TIMECALTAMILSS3NEW.jpg
இதில் ஆரம்ப நேர கட்டத்தில் ஆரம்ப நேரத்தை குறிப்பிட்டு...மணி சேர்ப்பு கட்டத்தில் வேண்டிய மணி எண்ணிக்கை, நிமிட சேர்ப்பு, வினாடி சேர்ப்பில்.... முறையே உள்ளிட்டாலும் சரி... இல்லை ஒன்றில் உள்ளிட்டு மற்றவற்றில் காலியாக விட்டாலும் இதில் குறப்பிடப்பட்ட மணித்துளிகளை கணக்கிட்டு காட்டும். விடை கட்டம் அல்லது விளைவு கட்டத்தில் (ரிசல்ட்) பார்த்துக்கொள்ளலாம். இந்த சூத்திரம் பயன்பாடு புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

இதே போன்று தான் =HOUR(), =MINUTE(), =SECOND()போன்ற சூத்திரப் பயன்பாடுகள்....=HOUR(13:25) விடை (13) என்று வரும்.....

நன்றி!

jayashankar
29-07-2010, 06:57 PM
நம்பியாருக்கு மிக்க நன்றி.

அழகுத் தமிழில் எளிமையாக எக்ஸெல் 2003.

புடிங்க பாராட்டுதல்களை நம்பி.

nambi
30-07-2010, 04:02 AM
பிடித்துக் கொள்கிறேன்! தோழரே!....பாராட்டிய தோழருக்கும், அனைவருக்கும் நன்றிகள்! கோடி!...............:082502hi_prv:

நூர்
03-08-2010, 07:12 PM
அனைவருக்கும் வணக்கம். 4/8/2010
========================================

...சென்ற பதிவில் தள்ளுபடி பற்றி பார்த்தோம்.

அந்த பார்முலாவை = A1-A1*B1 கவனித்து பாருங்கள்,அதில் அடைப்புகுறி பயன் படுத்தவில்லை.

அதன் காரணம்.

கணிதவிதிபடி, பெருக்கல் கணக்கை செய்த பின் தான் , கூட்டல் அல்லது கழித்தல் செய்ய வேண்டும். எக்ஸெல்லும் அப்படிதான் செய்யும்.

நமக்கும் இப்பொழுது, தேவையும் அதுதான்.அதனால் நாம் அடைப்பு குறியை பயன்படுத்தவில்லை.

வரி.
===

தமிழ்நாட்டில் ஒரு மின்னனு பொருள் வாங்கினால், வாட்வரி 4% விதிப்பார்கள். அதை பற்றி பார்க்கலாம்.


http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/A1X.jpg

======================================================

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/A2X.jpg


உ.ம்

A1 ல் விலை, B1 வரி சதவீதம் இருந்தால்.
------------------------------------------------------

வரி மட்டும் பார்க்க =A1*B1

விலை,வரி இரண்டையும் சேர்த்துபார்க்க.=A1+A1*B1

இப்பொழுது உங்களுக்கு, தள்ளுபடி மற்றும் வரி பார்க்க தெரியும். இனி இன்னொரு ஸ்டெப் அதிகமாக பார்க்கலாம்.

PF, ESI
=======

என் நிறுவனத்தில், PF10% , ESI 4% என்று என் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்வார்கள்.
அதை பார்ப்போம்.

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/b1-4.jpg

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/b2-4.jpg

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/b3-4.jpg

A1-ல் மாத சம்பளம் இருந்தால்,

B1-ல் =A1*10/100 இதை டைப் செய்து என் டர் அழுத்துங்கள்.
C1-ல் =A1*4/100 இதை டைப் செய்து என் டர் அழுத்துங்கள்.

D1-ல் =A1-(B1+C1) இதை டைப் செய்து என் டர் அழுத்துங்கள்.பிடிப்பு போக மீதி சம்பளம் பார்க்கலாம்

குறிப்பு.

இதில் சதவீதத்திற்கு என்று தனியாக செல் வரிசையை பயன் படுத்த வில்லை.


வருமான வரி.
--------------------
http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/A3Xa.jpg

===========================================

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/a4x1.jpg


ஒரு நிறுவனத்தில், பலர் வேலை செய்வதாக வைத்துக்கொள்ளுவோம். அதில் ஒவ்வொருவரும், தகுதிக்கு ஏற்ப சம்பளம் பெறுகிறார்கள்.

இதில், 12,000 க்கு மேல் சம்பளம் வாங்குபவர்களுக்கு மட்டும்,10% வருமானவரி விதிக்க வேண்டும்.


A1-ல் சம்பளம், B1-ல் வருமானவரி சதவீதம் இருந்தால்,

(12,000 க்கு மேல் சம்பளம் வாங்குபவர்களுக்கு மட்டும் வரி விதிக்கப் படும்.)

வருமானவரி பார்க்க =IF(A1>12000,A1*B1,A1)
-----------------------------

A1-ல் சம்பளம், B1-ல் வருமானவரி சதவீதம் C1-ல் வருமான வரி ரூபாய்இருந்தால்,

(12,000 க்கு மேல் சம்பளம் வாங்குபவர்களுக்கு மட்டும் வரி கழிக்கப் படும்.)

சம்பளத்தில்,வருமான வரி பிடித்தம் போக மீதி சம்பளம் பார்க்க.

=IF(A1>12000,A1-C1,A1)

====================================

இந்த தலைப்பின் சம்பந்தமான PMT பார்முலாவை நண்பர் நம்பி பதிவிட விரும்புகின்றேன்.

வரும்,வாரம் 'ஆட்டோ சம்' பயன் படுத்தி 'மார்க் சீட்' போடலாம்....

nambi
03-08-2010, 08:25 PM
நூர் அருமையாக விளக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.

எக்சல் தேதி மூலம் குறித்தும் சில பதிவுகள் பதிந்து வைத்திருந்தேன். நேரமின்மையாலும், அது நூரின் பதிவிற்குப்பிறகு தொடர்ச்சிக்காகவும் தாமதப்படுத்தி வைக்கப்பட்டது...அதையும் பதிவிட்டு விட்டு...PMT பற்றி ஒரளவுக்கு முயற்சிக்கின்றேன்.

இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள படம்.... பல சிறு குறு நிறுவனங்கள் இதை கணிப்பதற்கு தடுமாறுகின்ற ஒன்று தான்...பலரும் அறிந்த ஒன்று தான்...சமயத்தில் வாடிக்கையாளர் வந்து திடீரென கேட்கையில் தெரிந்த விஷயம் கூட எப்படி கண்டுபிடிப்பது? என்று யோசிக்க வைக்கும்....நமக்கும் அன்றாட தள்ளுபடி விலை மோசடிகளை அறிந்து கொள்ள இது வழிவகுக்கும்....(இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்...ஆனால் பொரும்பாலும் இது மோசடி தான்)

அதற்கான சூத்திரம்....நூர் தெரிவித்த (சூத்திரத்தின்) மூலத்தின் அடிப்படையில்...

http://i837.photobucket.com/albums/zz297/nambitn/ACTUALPRICECALCULATIONTMSS.jpg

மேலே உள்ள படத்தில் மஞ்சள் வண்ணம் உள்ள கட்டத்தில் தள்ளுபடி விலை மற்றும் தள்ளுபடி சதவீதம் கொடுத்தால் உண்மையான அல்லது அசல் விலை (ஆக்சுவல் வேல்யூ) கிடைக்கும். நிறுவனங்களில் வாடிக்கையாளர் பலர் இம்மாதிரி அணுகுவது உண்டு. எனக்கு அசல் விலை மறந்து விட்டது. ஆனால் தள்ளுபடி செய்து தரப்பட்ட விலை எனக்கு தெரியும் என்று குறிப்பிடுவார்கள் அப்போது இதை பயன்படுத்தலாம்.

இதில் D வரிசையில் உள்ள சதவீத வேறு பாடு கட்டத்தில் =100%-C6 என்று மூலமைக்கவேண்டும். தள்ளுபடி விலையை சதவீத வேறுபாடு கோண்டு வகுத்தோமானால் அசல் விலை வந்துவிடும். (கணித முறை சரிதானா? என்று தெரியவில்லை. இந்த அமைப்பு ஒரளவிற்கு கை கொடுக்கிறது)

ஆடித்தள்ளுபடி என்று அசல் விலை குறிப்பிடாமல் மோசடி செய்யும் போதும் இல்லையேல் சும்மா பேருக்கு அசல் விலை குறிப்பட்டு அதை அடித்து கீழே கொடுப்பார்கள். (தள்ளுபடி விலையே லாபத்துடன் கூடிய அசல் விலை தான்) அப்போது பயன்படுத்திக்கொள்ளலாம். கணிப்பான் (கால்குலேட்டர்) கொண்டும் அங்கேயே கணித்து கொள்ளலாம். சிவப்பு கட்டங்களில் மூலங்கள் உள்ளது என்பதை குறிக்கின்றன. மஞ்சள் கட்டங்கள் உள்ளீடு செய்யவேண்டும் என்று குறிக்கின்றன.

அடுத்து கீழே தேதி மூலம் (சூத்திரம்) குறித்து சில....

nambi
03-08-2010, 08:38 PM
எக்சலில் தேதி மற்றும் நேர மூலங்களின் (சூத்திரங்களின்) பட்டியலில் இந்த சூத்திரம் முதன்மையான சூத்திரமாக பயன்படுத்தப்படுகிறது.
DATE(வருடம், மாதம், தேதி) என்ற வகையில் உள்ளடுமாறு அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம்;

=DATE(YEAR,MONTH,DAY)
இதன்படி

A1 2010
A2 07
A3 31
A4 =DATE(A1,A2,A3) என்று உள்ளிட்டோமானால் விடை இன்றைய தேதி வரும்...இப்படி 31/07/2010

இதனடிப்படையில் கூடுதலாக இப்படி பட்டயிலடிப்பட்ட படம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் வலதுபக்க F நெடுக்கு வரிசை
இல் கொடுக்கப்பட்டுள்ள சூத்திரத்தினை பயன்படுத்தி சோதித்து அறியலாம். இதில் கிழமை ஆங்கிலத்தில் வருமாறு அமைக்க =TEXT(தேதி,"dddd") என்று கிழமை E கட்டத்தில் உள்ளிட்டோமானால் கிழமைகள் ஆங்கிலத்தில் பெறலாம். தமிழில் வருவதை பற்றியும் பிறகு பார்க்கலாம். இதில் தேதிகள் பண்டிகை முடிந்த அடுத்த நாளே தானாக மாறிக்கொளுமாறு அமைக்கலாம். அதற்கு இங்கு கொடுக்கப்பட்ட மூலத்தை உங்கள் தரவுத்தாளின் மேற்கோளுக்கு (செல் ரெபரன்ஸ் எண்) ஏற்றவாறு மாற்றி ''D'' நெடுக்கு வரிசையில் படத்தில் கொடுக்கப்பட்டுள்ள சூத்திரத்திற்கு மாற்றாக கொடுக்கவும்.

=IF(TODAY()>DATE(YEAR(NOW()),1,14),DATE(YEAR(NOW())+1,1,14),DATE(YEAR(NOW()),1,14))

(குறிப்பு ஒவ்வொரு பண்டிகையின் தேதி மற்றும் மாதங்களை மாற்றவேண்டும், இது நாம் பிட்டாயிலிட்டு வைத்துக்கொள்ள பயன்படுகின்ற ஒரு பட்டியல்...)

http://i837.photobucket.com/albums/zz297/nambitn/NEXTDATEFESTTMSSNEW.jpg


நன்றி...அடுத்த பதிவில்....

nambi
04-08-2010, 05:45 PM
எக்சல் PMT செயல்பாடுகள் குறித்து...

(வங்கியல், வணிகவியல் பாடத்தின் படி எனக்கு பயன்படுத்த தெரியாது....சொந்த உபயோகத்திற்காக பயனுபடுத்துவதை வைத்து குறிப்பிட்டிருக்கிறேன், அந்த துறை சார்ந்தவர்கள் விளக்கினால் நலம் பயக்கும்....)

முதலில் PMT சூத்திரத்தின்..தன்மைகள்..
நிதி மற்றும் வணிக கணக்கீடுகளை செய்வதற்கு இந்த சூத்திரம் பயன்படுகிறது...சொந்த உபயோகத்திற்காக பல வழிகளில் பயன்படுத்தலாம்.

(சூத்திரம். என்பதற்கு பதில் இனி விதி என்றே குறிப்பிடலாம் எக்சல் தமிழில் அப்படித்தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது)
விதி....
=PMT(rate,nper,pv,fv,type)
Rate= வட்டி விகிதம்
Nper= காலவரை (tenure…மாதங்கள், ஆண்டுகள்...)
Pv=அசல்
................................
Fv= முதிர்வுத்தொகை (சேமிப்பு தொகையை கணக்கிடும்போது...தேவைப்பட்டால் பயன்படுத்தாலும்)
Type= பணம் செலுத்துகின்ற வகை...இது தேவைப்பட்டால் பயன்படுத்துவது.
(0 என்பது டிபால்ட்...ஆரம்பத்திலேயே செலுத்து தொகையை...நிர்ணயிப்பது...
1 இறுதியில் அதாவது முதிர்வின் போது செலுத்து தொகையை நிர்ணயிப்பது... ‘’Type’’ இது அதிகம் தேவையில்லை...வங்கியியல் வணிகவியல் சம்பந்தபட்டவர்களுக்கு அதிக உபயோகம்...)
இதை முழுவதும் விளக்குவதற்கு பதில் உதாரணப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரத்தின் படி தரவுத்தாளை உள்ளிட்டு பயன்படுத்தி பார்த்தால் இதன் பயன்பாடு புரியும்....


http://i837.photobucket.com/albums/zz297/nambitn/PMTCALTAMILSS.jpg

இந்த PMT விதியில் விடை..... எதிர் மறை மதிப்பாக சிவப்பு நிறத்தில் தானாகவே வரும்....
உதாரணத்திற்கு இந்த விதியுடன் கூடிய மதிப்பை ஏதாவது ஒரு செல்லில் பயன்படுத்தி பார்த்தால் புரியும்...

=Pmt(8%/12, 3*12, 5000, 1000, 0)

(இப்படி பயன்படுத்தினாலும் நேர்மறை எண்ணாக வரும்
=-Pmt(8%/12, 3*12, 5000, 1000, 0) விதியுன் முன் கழித்தல் குறியீடு இட்டும் நேர்மறை எண்ணாக மாற்றலாம்....ஆனால் ஒரு வரிசையில் மட்டும் கழித்தல் குறியிட்டு விடை மாற்றப்பட்டிருக்கிறது)

(இது பற்று.... வரவு...என்று வங்கியியல், வணிகவியல் சம்பந்தமாக இருக்கலாம்...அது பற்றித் தெரியாது...தெரிந்தவர் விளக்கலாம்....இந்த விதியைக்கொண்டு வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கும், மேற்கொள்ளும் கணக்கு முறைகளை மட்டும் எடுத்துக் கொண்டேன்.)


ஆகையால் (நெகட்டிவ் வேல்யுவை தவரிப்பதற்காக) எதிர் மறை மதிப்பை தவிர்ப்பதற்காக ''- '' குறியீடு B நெடுக்கு வரிசையில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது....இப்பொழுது விடை நேர்மறையாக வரும்.
...........................................................

வட்டி விகிதம் தெரியாத பட்சத்தில் வெறும் தவணைத்தொகை மற்றும் அசல் தொகையை வைத்து கீழேக்கொடுக்கப்பட்ட விதியை பயன்படுத்தி அறியலாம். இது PMT விதியை போன்றது தான் ஆனால் வட்டி விகிதம் எவ்வளவு என்பதை அறிய உதவுகிறது.

=RATE(number of payments, payments, pv,fv,type)



http://i837.photobucket.com/albums/zz297/nambitn/RATETAMILSSTM.jpg
................................................................................
வழக்கமாக குறுகிய கால தனநபர் கடன் வழங்கும்பொழுது, அதுவும் தனியார் வங்கிகள் உண்மையான வட்டி விகிதத்தை கூறுவதில்லை...அப்படி கூறினால் யாரும் கடன் பெற முன்வரமாட்டார்கள் என்பது வங்கி கடன் வாங்கித்தரும் தரகர்களுக்கும், வங்கி வணிகப் பிரதிநிதிகளுக்கும் நன்கு தெரியும். பெரும்பாலும் ஒருவருடத்திற்கான வட்டியை மட்டும் கூறுவார்கள்....ஆனால் உண்மையில் அது 3 வருடமாக மாறும் பொழுது மிக அதிக வட்டியாக மாறுகிறது....

உதாரணமாக........
19 சதவீத வட்டி என்று ஒரு தனிநபர் கடன் (பர்சனல் லோன்), நுகர்வோர் கடன் (கன்சியுமர் லோன்) கொடுக்கப்பட்டால் (உண்மையில் அது 19 சதவீதமல்ல...செலுத்தும் காலவரை வரை வட்டி ஆண்டுக்கு கணக்கிடப்படுகிறது, இது தண்டல் முறை, கந்து வட்டி முறைகள் தான்)...அதவாது மூன்று வருடத்திற்கான காலம் என்றால் 19*3=57 ஆக 57 சதவீத வட்டி கணக்கிடப்படுகிறது. இந்த வட்டியை குறிப்பிட்டால் எவரும் கடன் பெற முன்வரமாட்டார்கள் என்ற நோக்கத்தில் ரொம்ப காலமாக ஊரை ஏமாற்றிக்கொண்டிருந்தார்கள். அது வினையில் முடிந்தது....

இந்த படம் அதை எப்படி கணக்கிடப்படுகிறது என்பதை காட்டுகிறது....

http://i837.photobucket.com/albums/zz297/nambitn/INTRATECALTNNEWTAMILCORRECTEDONE.jpg


ஒரளவுக்கு புரிகிற அளவுக்கு பதிவிட்டுருக்கிறேனா? தெரியவில்லை...மேலும் விளக்கமான தகவல்கள் தயாரித்தபின் இதனோடு சேர்க்கிறேன் அல்லது தனிப்பதிவாக சேர்க்கிறேன்.

மச்சான்
04-08-2010, 05:53 PM
அடேய்ய்ங்கப்ப்பா.......! எவ்வளவு விஷயங்கள்.....? வாத்தியார் நம்பிக்கு நன்றி......!:icon_b:

.

நூர்
04-08-2010, 09:32 PM
நான், எதிர்பார்த்தபடி மிக எளிமையாக பதிவிட்டு இருக்கிறீர்கள். மிக்க நன்றி.

nambi
05-08-2010, 05:27 PM
நன்றி நூர்!
..................

வழக்கமாக வங்கிகள் வாடிக்கையாளரிடம் (கடன் பெறுவோரிடம்) தெரிவிப்பது (பிளாட் ரேட்) ஒரு வருட வட்டி விகிதம் மட்டுமே அதை எத்தனை வருடத்திற்கு திரும்ப செலுத்த வேண்டுமோ?


அதற்கேற்றவாறு பெருக்கி....

உதாரணத்திறகு

15000 கடன் அதற்கான பிளாட் ரேட் வட்டி 10% கடன் திருப்பி செலுத்தும் காலம் 3 வருடம் என்றால் 15000X10%X3=4500 ரூபாய் வட்டி வரும் அதை 15000 த்தோடு கூட்டி பிறகு வரும் 19500 தொகையை 36 இல் (36 மாதம்) வகுத்தால் வரும் தொகை 541.66 எனபது மாதத்தவணையாகும்....இதன் மொத்த வட்டித்தொகை 30% இதை சுலபமாக தெரிந்து கொள்ள இந்த அட்டவணைப்படி கொடுக்கப்பட்டுள்ள விதியில் பயன்படுத்தினால் சுலபமாக அறியலாம்.
http://i837.photobucket.com/albums/zz297/nambitn/INTRATECALINTAMILNEWFLATERATE.jpg

இதில் மாதங்களின் எண்ணிக்கை மற்றும் மாதத்தவணையை மற்றும் அசல் தொகையை முறையே B, C, D வரிசைகளில் உள்ளிட்டோமானால் E செல்லில் மொத்த வட்டித்தொகையும் F செல்லில் பிளாட் ரேட் வட்டித்தொகையும் தெரியும்...
F செல்லின் விதி அங்கேயே குறிப்பிடப்பட்டிருக்கிறது...

E செல்லில் உள்ளிடவேண்டிய விதி =RATE(B55,-C55,D55)*12

இம்முறையில் மொத்த வட்டி விகிதம் தெரியாதவைகளுக்கு இம்மாதிரி விதிகளை அமைத்து பிளாட் ரேட் வட்டி விகிதத்தை உள்ளிட்டு தெரிந்து கொள்ளலாம்.

இந்த வட்டி வகிதம் சரியா? என்பதை கணிக்க இந்த அட்டவணையும் பயன்படுத்தி ஒப்பிட்டு பார்த்தால் சரியாக வரும்.....

http://i837.photobucket.com/albums/zz297/nambitn/FLATERATECALEMINEW.jpg

nambi
09-08-2010, 07:50 AM
அதே போல கூட்டு வட்டி கணக்கீட்டை எப்படி எக்சல் பணித்தாளில் விதிகள் (சூத்திரங்கள்) பயன்படுத்தி அறியலாம் என்பதை இந்த படத்தின் வாயிலாக அறியலாம்....இதில் இந்திய அஞ்சலக சேமிப்பு வகைகளை தமிழில் உள்ளிட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது...வழக்கமாக நமது அஞ்சலகங்களில் இதற்கான கணக்கீடு முறைகளை அவ்வளவாக தருவதில்லை...நாம் இதுமாதிரி பணித்தாள ஏற்படுத்தி வைத்துக் கொண்டால் நாம் ஏன்? அவர்களை நம்பிக்கொண்டிருக்க வேண்டிருக்கத் தேவையில்லையே....இதற்கான சூத்திரங்களை அதாவது அந்ந்த செலுலக்குரிய விதிகளை கீழே தனியே வரிசையிட்டு பதிவிடுகிறேன் அதை அப்படியே பணித்தாள் தயாரித்து பயன்படுத்தி வந்தால்....எளிதாக அறிந்து கொள்ளலாம்...

(இதில் சில அதாவது தொடர் வட்டி முறைகள் (ரிக்கரிங் டெப்பாசிட்) இணையத்தில் விளக்கமாக தரப்படவில்லை...அதற்கான கணித சூத்திரம் ஒரு வங்கி இணையத்தளத்தில் இருந்து தரப்பட்டுள்ளது ஆனால் அதை அப்படியே எக்சல் தாளில் பயன்படுத்த முடியாது வேண்டுமானால் வி பி விசுவல் பேசிக் பயன்படுத்தி பண்ணலாம்...அதுவும் எங்கும் தரப்படவில்லை...வேண்டுமானால் அந்த கணித சூத்திரம் பதிவிடுகிறேன் அதை வைத்து முயற்சித்து பார்க்கலாம்........இங்கு ஒரளவுக்கு மிக நெருங்கிய மதிப்பீடு வருகின்ற அளவுக்கு விதிகள் அமைத்து தயாரித்து இருக்கிறேன்....பயன்படுத்தி பாருங்கள் ஏதாவது மாற்றம் செய்யலாமா? என்பதனையும் பதிவிட்டுத் தெரிவிக்கலாம்...இது நமக்கு நாமேத் திட்டம் போலத்தான்...)

http://i837.photobucket.com/albums/zz297/nambitn/POSTOFFICESAVINGSFVCALSSTM.jpg

கீழை கொடுக்கப்பட்டுள்ளவை ஒவ்வொரு சேமிப்புத் திட்டங்களின் வரிசை எண்ணிற்கேற்ப சூத்திரங்கள் F வரிசைக்காக ....கூடுதலாக 4 திட்டத்தில் E வரிசை வட்டி விகிதத்தில் இந்த விதியை அல்லது சூத்திரத்தை பயன்படுத்திக்கொள்ளவும்.
அஞ்சலக இணையதளவும் கீழே தரப்பட்டுள்ளது...இதில் பயன்படுத்தி மதிப்பீடுகளை அதனோடு ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளவும்....ஏதாவது புதிய வித்தியாசம் தெரிந்தால் அதையும் இங்கு பகிர்ந்து கொள்ளலாம்....

1.=IF(AND(C37>1499,D37<=2),"திரும்ப பெறும்.தொ.ரூ "&(C37-(C37*2%)),IF(AND(C37>1499,D37<6),"திரும்ப பெறும்.தொ.ரூ "&(C37-(C37*1%)),IF(AND(C37>1499,D37=6),"மா.வட்டி.ரூ. "&C37*E37/12&" & " &"மு.தொ.ரூ "& C37*(1+10%),"முதலீடு குறைவானது")))

((மேலே 1 வது மாதாந்திர சேமிப்பு எளிய வழியில் திருத்தப்பட்டுள்ளது)
குறைந்த பட்ச முதலீடு ரூ.1500 அதற்கு உள்ளிட்டால் மாதாந்திரமாக பெறும் வட்டித்தொகை மற்றும் முதிர்வுத் தொகை கிடைக்கும்...குறைந்த பட்ச முதலீட்டுக்காலம் 6 வருடம்..அதற்கு கீழ் உள்ள காலவரையில் முதலீடு செய்ய முடியாது இருப்பினும் முதலீடு செய்து விட்டு கணக்கை முறித்து கொண்டால் அசல் தொகையில் 1 அல்லது 2 சதவீதங்கள் கழித்து திரும்ப பெறும் தொகையாகத் தரப்படும் அதன்படி சூத்திரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அஞ்சல் தளத்தில் தெளிவாக இல்லை..ஆகையால் வேறொரு தளத்தில் உள்ள கணிப்பான் கொண்டு சரி செய்யப்பட்டு சூத்திரம் அமைக்கப்பட்டுள்ளது....கணிப்பான் உள்ள தளம் (http://www.investmentkit.com/government/pomonthlyscheme-calculator.shtml))


2.=ROUND(C40*(POWER(1+E40,D40)),2)

3.=ROUND(C43*((1+(E43/4))^(D43*4)-1)/(1-(1+(E43/4))^(-1/3)),2)

(குறிப்பு மேலே குறிப்பிட்டுள்ள சூத்திரம் இந்திய வங்கிகள் மற்றும்அஞ்சலகங்கள் பினபற்றும் ஒரே மாதிரியான நடைமுறை...அவர்கள் பின்பற்றும் கணித சூத்திரத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது.....(திருத்தப்பட்டது))

4.=IF(D46<1,"1 வருடத்திற்கும் குறைவு",(ROUND(C46*(1+E46/4)^4,0)))

4.1 E வரிசை=IF(D46<1,"வட்டி கிடையாது",IF(D46<=2,6.25%,IF(D46=3,6.5%,IF(D46=4,7.25%,IF(D46=5,7.5%,"5 வருடத்திற்கு மேல் ஏற்றுக்கொள்ளாது")))))

5.=ROUND(C49*(POWER(1+E49/2,D49*2)),2)

6.=IF(C52<=70000,ROUND(C52*(((1+E52)^D52-1)/E52)*(1+E52),2),"ரூ.70000- அதிகமான மதிப்பு")


(சூத்திரம் சரிபார்க்கப்பட்டு திருத்தப்பட்டுள்ளது...ஒருவர் பிபிஎப் பப்ளிக் (பிராவிடன்ட் பண்ட்) ஒருவருடத்திற்கு இவ்வளவு தொகை என்று செலுத்தினால் 15 வது வருட முடிவில் அதாவது 16 வது வருடத்தில் பெறும் தொகை எவ்வளவு என்பதை கணிக்கும் சூத்திரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது....)
இணையத்தில் உள்ள கணிப்பான் (http://money.outlookindia.com/scripts/ppf_calci_results.asp)

7.=IF(D55<5,(((C55-(C55*1%))*E55)*D55)+C55,IF(D55<2,(((C55-(C55*2%))*E55)*D55)+C55,IF(D55=5,((C55*E55)*D55)+C55,"மதிப்பு பொருந்தவில்லை")))

8.=((C58*E58)*D58)+C58


இது இந்திய அஞ்சலக இணையதளம் (http://www.indiapost.gov.in/Netscape/Banking.html) இங்கு சென்று ஒவொரு திட்டத்தையும் சொடுக்கி இந்த சேமிப்புத் திட்டத்தில் கணிப்பானில் உள்ளிட்டு கணக்கிட்டு கொள்ளலாம் அப்படியே இதையும் ஒப்பிட்டு கொள்ளலாம்...இது பலருக்கு பயனுள்ளதாய் இருக்கும் என நம்புகிறேன்...

(இதெல்லாம் அரசு தமிழில் வெளியிட்டால் மக்கள் இதை அறிந்து அஞ்சலகத்தில் சேமித்து பயனுறுவார்கள் நிதி நிறுவனத்தில் சிக்கி கொள்ளமாட்டார்கள்...அரசு தான் யோசிக்க வேண்டும்.....)

நன்றி!

nambi
11-08-2010, 12:23 PM
வங்கிகள் வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்களை மக்கள் கேட்டாலும் சரிவர சொல்லுவதேயில்லை....அதுவும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விசாரிப்பு என்ற பெயரில் கேள்விகள் கேட்டாலே எறிந்து விழுவது வாடிக்கையான ஒன்று....இனி அவர்களை நம்பாமல் ....நமக்கு நாமே கணக்கிட்டு கொள்ளலாம்...எக்சலைப் பயன்படுத்தி....கீழே தொடர்வது...அதற்கான விதிகள் (சூத்திரங்கள்) தான்... (தோழர் நூர் இன் பாடவிதானம் இதனால் தடைபடாது என நினைக்கிறேன்...வட்டிக்கணக்கோடு தொடர்புடையதால் இதனோடு பதிந்தால் தொடர்பு விடுபடாமல் இருக்கும் என்ற எண்ணத்தில்....நன்றி!)

http://i837.photobucket.com/albums/zz297/nambitn/DATAVALIDATIONSET5.jpg

மேற்கண்ட படத்தில் இரண்டு விதமாக (பிக்சட் டெப்பாசிட்) வைப்புத்தொகை வட்டிகள் கணக்கிடப்படப்படுகிறது...ஒன்று பிளாட் ரேட் எனப்படும் சாதாரண வட்டி இன்னொன்று கூட்டு வட்டி...அதேபோன்று நாள்கணக்கில் வைப்புத்தொகை வங்கிகளில் பெறப்படுகிறது, மற்றொன்று மாதக்கணக்கில் பெறப்படுகிறது என நினைக்கிறேன்...வங்கிகளுக்கு கேற்ப மாறுபடலாம்...

இதில் சாதாரண வட்டி, கூட்டு வட்டி முறையில் மாதம், காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு என வட்டி தொகைகள் கணக்கிடப்படுகின்றன.

நாட்கணக்கில் பெறப்படும் வைப்புத்தொகை மேலுள்ள படம் (பிரௌன் வண்ண படம்) காட்டுகின்றது.

மாதக்கணக்கில் பெறப்பபடும் வட்டி கீழுள்ள பச்சை சிற படம் சுட்டிக்காட்டுகிறது. அதற்கான சூத்திரங்கள் அங்கே அம்புகுறியிட்டு காட்டப்பட்டுள்ளவாறு கீழேத் தருகிறேன் அதே மாதிரி உள்ளிட்டு கணக்கிட்டுப் பார்க்கலாம்.

கூடுதலாக சில வசதிகள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இதில் அசல் தொகை மற்றும் நாட்கணக்கு, மாதக்கணக்கு மட்டும் உள்ளிட்டால் போதும் (தட்டச்சு) செய்தால் போதும் மற்றவைகள் இழுவை பட்டியல் தேர்வு முறையில் உள்ளிடலாம் அது எப்படி உருவாக்குவது என்பதனை கீழே தொடரும் பின்னூட்டத்தில் பதிவிடுகிறேன்.
இப்போது அதற்கான்...சூத்திரம்...(^ இந்த குறியீடு வர்க்கத்திற்காக பயன்படுத்துவது...=POWER() என்ற சூத்திரத்தின் மூலமும் பயன்படுத்தலாம்...அப்படி பயன்படுத்தாமல் இப்படியும் (Exponent) குறியீடு பயன்படுத்தி அமைக்கலாம்....வட்டிக்கான சூத்திரங்கள்.... கணித சூத்திரங்களின் அடிப்படையில் தான் அமைக்கப்பட்டுள்ளது...அந்த சூத்திரங்களின் தளங்களையும் பிறகு இதனோடு இணைக்கிறேன்....)

1.D8

=IF(E5="சாதாரண வட்டி",ROUND(B5*(C5*D5)/365,2),IF(AND(E5="கூ.வட்டி மாதம்",C5>30),ROUND(B5*(1+D5/12)^(C5/30),2)-B5,IF(AND(E5="கூ.வட்டி காலாண்டு",C5>90),(ROUND(B5*(1+D5/4)^(C5/91.25),2))-B5,IF(AND(E5="கூ.வட்டி அரையாண்டு",C5>90),(ROUND(B5*(1+D5/2)^(C5/182.5),2))-B5,IF(AND(E5="கூ.வட்டி முழுஆண்டு",C5>=365),(ROUND(B5*(1+D5)^(C5/365),2))-B5,"")))))

..........................

2.F8

=IF(E5="சாதாரண வட்டி",B5+D8,IF(AND(E5="கூ.வட்டி மாதம்",C5>30),ROUND(B5*(1+D5/12)^(C5/30),2),IF(AND(E5="கூ.வட்டி காலாண்டு",C5>90),ROUND(B5*(1+D5/4)^(C5/91.25),2),IF(AND(E5="கூ.வட்டி அரையாண்டு",C5>180),ROUND(B5*(1+D5/2)^(C5/182.5),2),IF(AND(E5="கூ.வட்டி முழுஆண்டு",C5>=365),ROUND(B5*(1+D5)^(C5/365),2),"")))))
...........................................

3.D20

=IF(E17="சாதாரண வட்டி",ROUND(B17*(C17*D17)/12,2),IF(AND(E17="கூ.வட்டி மாதம்",C17>1),ROUND(B17*(1+D17/12)^(C17/12),2)-B17,IF(AND(E17="கூ.வட்டி காலாண்டு",C17>=3),(ROUND(B17*(1+D17/4)^(C17/3),2))-B17,IF(AND(E17="கூ.வட்டி அரையாண்டு",C17>=6),(ROUND(B17*(1+D17/2)^(C17/6),2))-B17,IF(AND(E17="கூ.வட்டி முழுஆண்டு",C17>=12),(ROUND(B17*(1+D17)^(C17/12),2))-B17,"")))))

................

4.F20

=IF(E17="சாதாரண வட்டி",B17+D20,IF(AND(E17="கூ.வட்டி மாதம்",C17>1),ROUND(B17*(1+D17/12)^(C17/12),2),IF(AND(E17="கூ.வட்டி காலாண்டு",C17>=3),ROUND(B17*(1+D17/4)^(C17/3),2),IF(AND(E17="கூ.வட்டி அரையாண்டு",C17>=6),ROUND(B17*(1+D17/2)^(C17/6),2),IF(AND(E17="கூ.வட்டி முழுஆண்டு",C17>=12),ROUND(B17*(1+D17)^(C17/12),2),"")))))

மேற்கண்ட சூத்திரங்களை குறிப்பிட்ட செல்களில் உள்ளிட்டு விட்டால் நமக்கு வேண்டியத் தொகைக்கான வட்டி மற்றும் முதிர்வுத்தொகைகளை தேர்வு செய்து கொள்ளலாம். அவ்வப்பொழுது வட்டித்தன்மையை தட்டச்சு செய்யாமல்...இழுவை பட்டியில் தேர்வு முறையில் உள்ளிடுவது (Drop Down Menu) எப்படி என்பது கீழேத் தருகிறேன்...

இந்த பட்டியல் சூத்திரம் இணையத்தில் உள்ள ஒரு கணிப்பானோடு ஒப்புமை படுத்தி உருவாக்கப்பட்டது...விடைகள் மிக நெருக்கமாகத்தான் வந்துள்ளது...ஒரு சில மட்டுமே தசமத்திற்கு பிறகு 1 இலக்கு வித்தியாசம் வருகிறது...

(இப்படி பட்டியலிட்டு உருவாக்கப்பட்டவைகளை ஒரே எகசல் தாளில் ''முகப்புத்தாள்'' என்று பெயரிட்டு உருவாக்கி அங்கிருந்து எல்லாபட்டியல்களையும் கணக்குகளையும் அஞ்சலக மற்றும் வங்கி கணக்குகளை ''மிகை இணைப்பு நுழை'' hyperlink" கொடுத்து டெஸ்க் டாப்பில் வைத்து கொள்ளலாம். அவசரத்திற்கு ஒவ்வொன்றையும் எங்கே உள்ளது கணிணி கோப்புகளில் தேடிக்கொண்டிருக்க வேண்டாம். அதை எப்படி இணைப்பது என்பது பற்றி பிறகு படத்துடன் வெளியிடுகிறேன்.)

வைப்புத்தொகை கணிப்பான் இணையதளம் சென்று பார்க்க.... (http://www.rupeetimes.com/calculators/fixed_deposits/fixed_deposit_interest_income_calculator.php?download=0&btnClicked=btnSubmit&deposit=1000&duration=625&rate=4&compound=6)

(இதில் ஏதாவது வேறுபாடு தெரிந்தால்...... வேறு சூத்திரம் என்று கண்டுபிடித்தால் தெரிவிக்கவும்...நன்றி!)

nambi
11-08-2010, 01:38 PM
E செல்லில் வட்டித்தன்மை மற்றும் D செல்லில் வட்டிவிகிதத்தை குறிப்பிடுவதற்கும்...இன்னும் வேறு எல்லா வற்றிற்கும் இழுவை பட்டியல்..உருவாக்குவதற்கு....கர்சரை E6 இல் வைத்து கட்டளை பட்டியில் (கமாண்ட் மெனு) தரவு (டேட்டா) என்ற கட்டளையை சொடுக்கினால் கிடைக்கும் பட்டியில்...''செல்லத்தக்கதாக்குதல்'' (டேட்டா வேலிடேசன்) ஐ சொடுக்கினால் இந்த படத்திற்கு அடுத்து காட்டப்பட்டுள்ள விண்டோ வரும்.......

http://i837.photobucket.com/albums/zz297/nambitn/DATAVALIDATIONSET2.jpg


இதில் ''அமைப்பு'' (செட்டிங்) என்பதை சொடுக்கி....அடுத்து உள்ள ''அனுமதி'' (பர்மிசன்) பட்டியை சொடுக்கினால் ஒரு வரிசை பட்டியல் கீழிறங்கும் அதில் ''பட்டியல்'' (லிஸ்ட்) என்பதை தேர்வு செய்து அதற்கு கீழே உள்ள ''மூலம்'' என்றுள்ள இடைவெளியில் தேவையான வரிசை பட்டியலை அரைப்புள்ளியிட்டு இடைவெளி விடாமல் தட்டச்சு செய்யவேண்டும்...

உதாரணமாக..

சாதாரண வட்டி,கூ.வட்டி மாதம், கூ.வட்டி காலாண்டு,கூ.வட்டி அரையாண்டு,கூ.வட்டி முழுஆண்டு

என்று தட்டச்சு செய்யலாம்..நமக்கு பிடித்த மாதிரி வார்த்தைகளை அமைத்து கொள்ளலாம் (கமா (,) போட்டால் அடுத்த வரிசையில் வந்துவிடும்)..அதன்பின் ''சரி'' (ஒகே) என்றபொத்தானை அழுத்தினால் வரிசை பட்டியல் அந்த செல்லில் அம்புக் குறியுடன் வந்து விடும்..இதே போல் வட்டிக்கும் வேண்டுமானால்....குறிப்பிட்ட செல்லுக்கு சென்று மீண்டும் மேற்சொன்ன முறைகளில் உள்ளிடவேண்டும் 1%,1.5%....அதே மாதிரி சரி என்ற பொத்தானை அழுத்தினால் அதிலும் அதே மாதிரி வரிசை வந்துவிடும் பிறகு நம்க்கு வேண்டிய வட்டித்தொகையை தட்டச்சு செய்யாமல்...அதே போன்று வட்டித்தன்மையை தட்டச்சு செய்யாமல்...இழுவை முறையில் தேர்வு செய்து பயன்படுத்தலாம்....

(இதை நுழை (insert), பெயர் (name) வரையறு (define), என்ற முறையிலும் பயனபடுத்தலாம். ஆனால் அதற்கு தனியான ஒரு செல் வரிசைகள் கொடுக்கவேண்டும்...அது பற்றி பிறகு விளக்கமாக அறியலாம்)

http://i837.photobucket.com/albums/zz297/nambitn/DATAVALIDATIONSET3.jpg
....................................
அதன்பிறகு அதில் நமக்கு அல்லது பிறருக்கு நினைவூட்டுதற்காக...அந்த செல் எதை குறிக்கிறது என்பதை தகவலாக தெரிவிக்க அதே முறையில் பயன்படுத்தவேண்டும்...அது அடுத்த பின்னூட்டத்தில்...

nambi
11-08-2010, 01:51 PM
இதிலேயே விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது...மேற்சொன்ன முறையில் எந்த செல்லில் தகவல் தெரியவேண்டுமோ? அதில் கர்சரை நிறுத்தி அதே போன்று...''தரவு''-''செல்லத்தக்கதாக்குதல்''-சொடுக்கினால்வரும் விண்டோவில் ''தகவல் உள்ளிடல்'' என்பதை சுட்டி வரும் இடைவெளியில் தலைப்பை தட்டச்சு...
உதாரணமாக...
தலைப்பு; ''வட்டித் தேர்வு''

உள்ளீடு தகவல்;..................(ஏதாவது அவரவர் விருப்பம் போல் தட்டச்சு செய்து) சரி என்ற பொத்தானை அழுத்தினால் அந்த செல் சென்றாலே நமக்கு என்ன உள்ளிட வேண்டும் என்பதை நினைவூட்டும்.






http://i837.photobucket.com/albums/zz297/nambitn/DATAVALIDATIONSET4.jpg


அதை போன்று ஒவ்வொரு செல்லிற்கும் ''உரைகள்'' வைக்கலாம்..இந்த செல்லில் எதை உள்ளிடவேண்டும் என்பதை நமக்கு தெரிவிப்பதற்காக...(சில நாள் கழிந்தவுடன் இது பற்றி மறந்து விடும்..அதற்காக இந்த வசதி) கீழ்கண்டவாறு...(படத்தில்...)




http://i837.photobucket.com/albums/zz297/nambitn/DATAVALIDATIONSET6-1.jpg

nambi
20-08-2010, 09:24 AM
குறிப்பு; மேற்கண்ட அஞ்சலகம் மற்றும் வங்கி கணக்கீட்டு அட்டவணைகளில் இந்த IF செயற்பாட்டு சூத்திரங்கள் பயன்படுத்துவதை (ARRAY) வரிசை சூத்திரங்களாக அல்லது நெஸ்ட்டட் செயற்பாட்டு சூத்திரங்களாக கருதுவதுண்டு....இது சரியாக செயல்பட சூத்திரங்கள் பயன்படுத்தியவுடன்.......சுட்டியை விதிப்பட்டி அல்லது சூத்திரப்பட்டியில் அல்லது செல்லில் வைத்து F2 பங்ஷன் விசையை அழுத்தவும் பின்பு கன்ட்ரோல் (ctrl+shift+Enter) ஷிப்டு மற்றும் என்டர் விசையை ஒருசேர அழுத்தவும் {} இந்த அடைப்புக்குறி கர்லி பிரேசஸ் என்ற அடைப்புக்குறி அந்த சூத்திரத்தை பாதுகாத்துக் கொள்ளும் பின்பு கணிப்பது துல்லியமாக இருக்கும்...இது அந்த குறிப்பிட்ட எல்லைக்குள் தேடுவதற்கு அதன் மென்பொருள் வழிவகுக்கின்றது. அப்படி குறிப்பிட மறந்து விட்டாலும் பிறகு வேறொரு சந்தர்ப்பத்தில் பயன்படுத்தும் பொழுது இது மாதிரி அழுத்தி சேமித்து வைத்துக்கொள்ளலாம். மீண்டும் திருத்தம் ஏதாவது விதிப்பட்டியில், சூத்திரங்களில் திருத்தங்கள் மேற்கொண்டால் இந்த அடைப்புக்குறி நீங்கிவிடும். எல்லா சீரமைப்புகளும் செய்தபின் இம்மாதிரி மீண்டும் பயன்படுத்தி பாதுகாத்துக்கொள்ளவேண்டும். சில பல சூத்திரங்களில் இதன் முக்கியத்துவத்தை நேரிடையாக அறியலாம்...IF செயற்பாட்டு சூத்திரங்கள் அதிகபடசமாக 7 மட்டுமே அமைக்கமுடியும். அதற்கு மேல் உள்ளிட்டால் செயல்படாது என்பதனையும் நினைவிற்கொள்ளவேண்டும். அம்மாதிரி சமயங்களில் வேறுமாதிரி or, and பயன்படுத்தி மாற்றியமைக்க முயற்சிக்கலாம்....

நன்றி!

Jamilabanu
03-09-2010, 10:34 AM
நூர் மற்றும் நம்பி அவர்களுக்கு மிக்க நன்றி. உங்களுடைய எக்ஸெல் பாடம் எங்களுக்கு உபயோகமாக உள்ளது. நீங்கள் கொடுத்துள்ள வரை பிரிண்ட் அவுட் எடுத்து விட்டேன். மேலும் உங்களுக்கு தெரிந்தவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். மிக்க நன்றி

அன்புடன்

ஜமிலா பானு

நூர்
13-09-2010, 04:25 PM
இந்த வாரம் நாம் ஆட்டோசம் பற்றி பார்க்கலாம்.
--------------------------------------------------

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/button-autosum.gif

இதுதான் ஆட்டோசம்.

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/Untitled-12-1.jpg

அதன் அருகில் இருக்கும் சிறிய ஆரோவை கிளிக் செய்தால் அதில்


Sum - கூட்டல் கணக்கு
Average - சராசரி
Count - செல்களின் எண்னிக்கை
Max - அதிக படியான எண்
Min - குறைவான எண்

-------------------------

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/as3-2.jpg

A,B,C,Dஎன்ற செல்களில் எண்ணை டைப் செய்து இருக்கின்றேன்.

நமக்கு எந்த செல்லில் விடை வேண்டுமோ. அந்த செல்லை செலக்ட் செய்து கொள்ளுங்கள்.

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/button-autosum.gif

இப்பொழுது இந்த குறியீட்டை கிளிக் செய்தால். அது தானகவே செல்களை செலக்ட் செய்து விடும்.மேலும் பார்முலாவையும் தானாகவே போட்டுவிடும்.

அது செலக்ட் செய்த செல்கள் ஒகே என்றால்.

எண்டர் தட்டுங்கள்.

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/as5.jpg

அல்லது மவுசால் உங்கள் விருப்பபடி செல்களை செலக்ட் செய்து.எண்டர் தட்டுங்கள்.

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/as6.jpg

அல்லது,

அங்கு ஒன்று,இங்கு ஒன்று,நடுவில் ஒன்று எனசெலக்ட் செய்ய விரும்பினால்,Ctrl கீயை அழுத்தியபடி மவுசால் நீங்கள் விரும்பிய செல்லை கிளிக் செய்து,எண்டர் தட்டுங்கள்.

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/as3-1.jpg

சரி, இதை போல்Sum - Average Count - Max - Min இவை களையும் செய்து பாருங்கள்.

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/as10.jpg

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/as11.jpg

குறிப்பு.

ஒரு கணக்குக்கு பார்முலா போட்டால் போதும், இழுப்பதின் மூலம் மற்ற எல்லா கணக்குகளுக்கும் விடை போட்டு விடலாம்.

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/q1-2.jpg

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/q2a.jpg

ஆட்டோ சம்க்கு சாட்கட் கீ , Alt+=

நன்றி.

அடுத்த வாரம் "கன்வெட்டர்" பற்றி பார்க்கலாம். அதாவது, ஒன்றை இன்னொன்றாக மாற்றுவது.

நூர்
25-09-2010, 02:24 PM
மாற்றுவது. (CONVERT) 1

----------------------------------
நீங்கள் மாற்ற விரும்பும் எண் A1-ல்

இருப்பதாக வைத்துக்கொள்வோம், அதன்

பார்முலா கிழே...

ஒரு சாதாரண எண் ஐ ரோமன் எண் ஆக

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/mama/X1.jpg


மாற்றும் பார்முலா.. =ROMAN(A1)

ரோமன் எண் ஐ, சாதாரண எண் ஆக மாற்ற

பார்முலா(எனக்கு தெரிந்த வரை) இல்லை.

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/mama/X2.jpg

டாலராக மாற்ற. =DOLLAR(A1)

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/mama/X3.jpg

தேதியாக மாற்ற =DATE(C3,A3,B3)

=DATE(வருடம்,மாதம்,நாள்)


http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/mama/X4.jpg


சிறிய எழுத்தாக மாற்ற =LOWER(A1)

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/mama/xa2.jpg

பெரிய எழுத்தாக மாற்ற =UPPER(A1)


http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/mama/xa1.jpg

பின்ன எண் ஐ, சாதாரண எண் ஆக மாற்ற =N(A1)

முழு எண் ஐ டைப் செய்து பின், ஒரு 'பேஸ்'

விட்டு, பின்ன எண் ஐ டைப் செய்யுங்கள்.


http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/mama/x6.jpg

முதல் எழுத்து மட்டும் பெரிய எழுத்தாக மாற்ற =PROPER(A1)


நன்றி.

மைல் ஐ, கி.மீ , மீட்டர் ...

மேலும், பவுண்ட் ஐ, கிலோ, கிராம் மற்றும்

ஹார்ஸ் பவரை வாட்ஸ் ஆக,இன்னும்

சிலவற்றை மாற்றுவது பற்றி அடுத்த வாரம்

பார்க்கலாம்.

நூர்
02-10-2010, 05:58 AM
கன்வர்ட்-(Convert) 2
-----------------------------
நீங்கள் மாற்ற விரும்பும் எண் A1ல் இருப்பதாக வைத்துக்கொள்வோம்....

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/mama/X1A.jpg

ஒரு சாதாரண எண்ஐ பைனரி எண் ஆக மாற்ற =DEC2BIN(A1)

உங்களுக்கு விடை #NAME? என்று வந்தால், ஆட் இன் அனலைஸ் செய்து கொள்ளுங்கள்.

அதை எப்படி செய்யலாம்? என பார்ப்போம்.

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/mama/X2-1.jpg

Tools -> Add-ins கிளிக் செய்யுங்கள்.

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/mama/X3-1.jpg

வரும் விண்டோவில்

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/mama/X4-1.jpg

Analysis Toolpak அருகில் இருக்கும் பாக்ஸ்ல் டிக் மார்க் இட்டு Ok கொடுங்கள்.

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/mama/X5.jpg

வரும் விண்டோவில் YES கொடுத்து, உங்கள், MS OFFICE cd யை cd டிரைவில் இடுங்கள். அது தானாகவே இன்ஸ்ட்டால் செய்து கொள்ளும் அவ்வளவுதான்.


http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/mama/X6-1.jpg

ஒரு சாதாரண எண்ஐ பைனரி எண் ஆக மாற்ற =DEC2BIN(A1)

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/mama/X7.jpg

ஒரு பைனரி எண்ஐ சாதாரண எண் ஆக மாற்ற =BIN2DEC(A1)

(அந்த பார்முலாவை திருப்பி போடுங்கள்)


பார்முலாவில் பயன்படுத்தும் போது சுருக்கு எழுத்தை பயன்படுத்த வேண்டும் உ.ம் Year- yr.

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/mama/xz1.jpg

இந்த பட்டியலில் உள்ளதை எதையும்,எதுவாகவும் மாற்றலாம்.

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/mama/XZ2.jpg

மணியை நிமிடமாக மாற்ற பார்முலா
=CONVERT(A1,B1,C1)

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/mama/XZ3.jpg

இதில் நாம் 4 செல்களை பயன்படுத்தி இருக்கின்றாம்.

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/mama/xz4.jpg

இதையே 2 செல்களை பயன்படுத்தியும் செய்யலாம்.

அதன் பார்முலா =CONVERT(A1,"hr","mn")


http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/mama/xz8.jpg
--------------------------------------------

இதே அடிப்படையில் கீழ் உள்ளவற்றையும் செய்து பார்ருங்கள்.

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/mama/xz9.jpg

சுருக்கு எழுத்து பட்டியல் தொடரும்...

அன்புரசிகன்
02-10-2010, 10:59 AM
பலருக்கும் உதவியாக இருக்கும். தொடருங்கள் நூர் மற்றும் நம்பி

nambi
15-10-2010, 03:16 PM
தோழர் அன்புக்கு நன்றி!
..............................
ஜமிலா பானு அவர்களுக்கு நன்றி!
........................................

நூர் அருமையாக இரு பதிவுகளை தந்திருக்கிறார் நன்றி! மிகத்தெளிவாக உள்ளது.

டாலர் சூத்திரம் கொண்டு பணப் பெயரை மாற்றுவதைப்போல......

''டாலர்டி''(''DOLLARDE'', ''DOLLARFRC'') என்ற இரு சூத்திரத்திங்களை கொண்டு தசம எண்ணை பின்னமாகவும், பின்னங்களை முழுஎண்ணாகவும் மாற்றலாம்...இன்னும் இதைக்கொண்டு சிலக் கணக்குகளுக்கும் பயன்படுத்தலாம்....

உதாரணமாக....தசம எண்ணில் உள்ளிடும் எண்ணை நேரக்கணக்காக மாற்றலாம் படத்தில் காட்டியுள்ளது போல...........
http://i837.photobucket.com/albums/zz297/nambitn/DOLLARDEFUNCTION.jpg

அதேப்போல அடி, அங்குல கணக்கிறகும் பயன்படுத்தலாம்.........

ஆனால் அடி அங்குல கணக்கிறகு டாலர்டி ஐ விட கூடுதலாக இன்னொரு மென்பொருள் அதாவது கூட்டு சேர்ப்புகள்....ஆட் இன்ஸ் (Add Ins) பயன்படுத்தி தரவுத்தாளில் நிறுவி எளிதாகப் பயன்படுத்தலாம்.....

இதை இந்த தளத்திலிருந்து இறக்கி வட்டில் சேமித்து பின்........(2003,2007..)


http://www.josh.com/InchCalc/index.htm

கூட்டுச்சேர்ப்பு படத்தில் உள்ள மேய்தல் (பிரவுஸ்) என்ற பொத்தானை அழுத்தி எந்த போல்டரில் இறக்கியிருந்தீர்களோ? அந்த இடம் சென்று திறந்து கூட்டுசேர்ப்பில் வரவழைத்தவுடன்...டிக் மார்க் செய்தால் இதன் பயன்பாடு செயலுக்கு வந்துவிடும்........

அதன் பின் இந்த சூத்திரத்தை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம் ....

தசம எண்களை அடி அங்குல கணக்கில் மாற்றவேண்டும் என்றால் =i2s() அடி அங்குலங்களை முழுவதும் அங்குலமாக மாற்றுவதற்கு =s2i() என்ற சூத்திரத்தை பயன்படுத்தலாம்...பைனரி டு டெசிமல்...என்ற சூத்திரத்தைப் போல......

கட்டுமானப் பணிக்கான கணக்குகள், மனை வாங்குவதற்கு ச.அடி கணக்கிடுவதற்கு இந்த வகை சூத்திரங்கள் அதிகப் பயனுள்ளதாக இருக்கும்....ஒரு சதுரஅடி வீட்டின் மதிப்பு எவ்வளவு? என்பதை கணிப்பதற்கு பயனுள்ளதாக இருக்கும்.

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/mama/X4-1.jpg


கூட்டுச்சேர்ப்பு விண்டோ மூலமாக பிரவுஸ் செய்து உள்ளே அந்த சேர்ப்பை (ஆட் இன்ஸ்) வரச்செய்யவேண்டும்...

மேலேக் குறிப்பிட்ட கூட்டுசேர்ப்பு மூலம் கீழ்க்கண்டவாறு (படத்தில்) கணக்கிடலாம்......
(குறிப்பு " ' " இந்த குறியீடு அடிக்கான குறியீடு, " " " இந்தக் குறியீடு அங்குலத்திற்கான குறியீடு இந்தக்குறியீடுகளை செல்களில் பயன்படுத்தி கணக்கிட்டாலும் இந்த சூத்திரத்தினால் சாதரணமாக கணக்கிடமுடியும்)

அடிகளை எல்லாம் அங்கலமாக மாற்றி பின் அதை சதுர அடியாக மாற்றுவது....

http://i837.photobucket.com/albums/zz297/nambitn/SIADDONSFORFTINCHESCALEXCELEG.jpg

மேலும் சதுர அடி கணக்குகளுக்கான விவரங்களுக்கு இந்த தளம் சென்று காணலாம (http://www.josh.com/InchCalc/index.htm)

(மேலே படத்தில் சதுர அடியின் விலை 4 ரூபாய் என்று உதாரணத்திற்காக கொடுக்கப்பட்டுள்ளது...இன்றைய நிலையில் காலி மனையின் விலையே சதுர அடிக்கு 1200 ரூபாயிலிருந்து 3000....என்று போய்க்கொண்டேயிருக்கிறது..இடத்திற்கேற்ப...கட்டுமானத்துடன் என்றால் இன்னும் கூடுதலாக இருக்கும்....இப்படித்தான் சதுர அடியின் விலை கணக்கிடப்படுகிறது...)

கூடுதல் தகவலுக்காக......

நன்றி.....

rajesh2008
14-06-2011, 07:10 PM
ஒவ்வொரு முறை கோப்பை திறந்து மூடி பின் திறக்கும்போது ஒரு செல்லில் உள்ள எண் அடுத்தடுத்த எண்ணாக மாறி வர வைக்க எக்ஸெல்லில் செய்யமுடியுமா..? என்ன பார்முலா ? தெரிந்தவர் சொன்னால் தெரிந்து கொள்வேன்.

உதாரணத்துக்கு 23785 என்று ஒரு செல்லில் இருக்கும் எண் அந்தக் கோப்பை மூடிவிட்டு மறுபடித்திறக்கும் போது 23786 என்று வர வேண்டும் எனக்கேட்கிறேன்.

அன்புரசிகன்
15-06-2011, 02:09 AM
ஒவ்வொரு முறை கோப்பை திறந்து மூடி பின் திறக்கும்போது ஒரு செல்லில் உள்ள எண் அடுத்தடுத்த எண்ணாக மாறி வர வைக்க எக்ஸெல்லில் செய்யமுடியுமா..? என்ன பார்முலா ? தெரிந்தவர் சொன்னால் தெரிந்து கொள்வேன்.

உதாரணத்துக்கு 23785 என்று ஒரு செல்லில் இருக்கும் எண் அந்தக் கோப்பை மூடிவிட்டு மறுபடித்திறக்கும் போது 23786 என்று வர வேண்டும் எனக்கேட்கிறேன்.
நீங்கள் எந்த Excel பாவிக்கிறீர்கள் என்று கூறினால் மிக எளிது.
2007 அல்லது 2010 எனில்.....
முதலில் Excel Option > Popular> Show Developer Tab in the Ribbon என்பதை தெரியுங்கள். பின்னர் உங்கள் Excel கோப்பை Excel Macro-Enabled Workbook ஆக சேமியுங்கள். (Save As Type) - .xlsm

http://i701.photobucket.com/albums/ww12/anburasihan/Mantram/Excel/counting1.jpg

பின்னர் Developer tab இல் Visuaட Basic Editor ஐ அழுத்துங்கள்.

http://i701.photobucket.com/albums/ww12/anburasihan/Mantram/Excel/counting2.jpg

வருவதில் Project - VBAProject என்பதைதில் Toggle Folder ஐ தெரிந்தால் Thisworkbook என்று இருக்கும். அதை double click செய்தால் வருவதில் கீழ் உள்ளவாறு பதியுங்கள்.



Private Sub Workbook_Open()
Worksheets("Sheet1").Select
Range("A1") = Range("A1") + 1
End Sub

http://i701.photobucket.com/albums/ww12/anburasihan/Mantram/Excel/counting3.jpg

close செய்துவிட்டு excel ஐ மூடி திறவுங்கள். பின்னர் தானாகவே மாறும்.

இங்கு Sheet1 என்பது அதனது பெயர். அது மாற்றமாகியிருப்பின் அதனை மாற்றுங்கள். அடுத்தது A1 என்பது எங்கு இலக்கம் மாறப்படவேண்டியது என்பதே... அதையும் மாற்றவேண்டின் மாற்றுங்கள். அடுத்தது அந்த இடம் 0 ஆக இருந்தால் 0 இலிருந்து ஆரம்பிக்கும். இல்லாது விடில் நீங்கள் ஒரு இலக்கத்தை கொடுக்கலாம்.

சிலவேளை Macro security பிரச்சனை வரும். Developer Tab இல் Macro Securuty இல் Enable all macros என்பதை தெரியுங்கள். Not recommended என்று இருக்கும். ஆனால் இல்லாதவிடத்து நான் தந்தது வேலைசெய்யாது.
சந்தேகம் இருப்பின் கேளுங்கள். முடிந்த அளவு முயல்வேன்.

rajesh2008
15-06-2011, 05:24 PM
என்னிடம் இருப்பது எக்செல் 2003, ஆபீசில் எக்செல் 2007 இருக்குது, முயன்று பார்த்துவிட்டு பதில் பதிக்கிறேன். தங்கள் பதிலுக்கு மிக்க நன்றி.

பின்னர் பதிந்தது

அருமை நண்பரே, நான் 2003 யிலேயே செக் செய்து பார்த்துவிட்டேன், சூப்பரா வேலை செய்யுது,பாராட்டுகள் உங்கள் அறிவுக்கும் அதன் பகிர்வுக்கும்.

நாஞ்சில் த.க.ஜெய்
15-06-2011, 05:32 PM
அருமையான அறியாத தகவல்களின் எக்செல் தொகுப்பு ...தெரிந்தவற்றை தொடர்ந்து தாருங்கள் நண்பர்களே ...

rajesh2008
16-06-2011, 07:11 PM
Private Sub Workbook_Open()
'change C6 to your desired cell

Range("C6").Select
Selection.ClearContents

End Sub



ஒரு எக்ஸெல் பைலை மூடித் திறக்கும்போது ஒரு செல்லை கிளியர் செய்ய இந்த முறையில் முடிகிறது, அதுவே ஒரே வரிசையில் அமையாத அதாவது (C6,D3,H9) போன்ற நாலைந்து செல் வேல்யூக்களை கிளியர் செய்ய என்ன செய்யலாம்..? நண்பர்கள் உதவுங்களேன்.

அன்புரசிகன்
16-06-2011, 11:31 PM
அதற்கு Null என்பதை பாவிக்கலாம்.
Range("C6")= Null
இவ்வாறே உங்களுக்கு வேண்டிய செல்களுக்கு நீங்கள் கட்டளை இடலாம்.

அதில் ஒரு இலக்கமோ அல்லது எழுத்துக்களோ வரவேண்டும் எனில்
Range("C6")= ”10”
Range("C6")= ”Rajesh"
---
Range("C6", "D3").Clear
Range("C6", "D3").Delete
Range("C6", "D3").ClearContents
இவற்றையும் பாவிக்கலாம்.

clear மற்றும் Delete போன்றவை குறிப்பிட்ட செல் இலுள்ள format களையும் நீக்கிவிடும்.
ஆனால் clearcontents உள்ள பெறுமானங்கள் அல்லது எழுத்துக்களை மட்டுமே நீக்கும். உங்களுக்கு தேவையான செல்களின் பெயர்களை குறைப்புள்ளியுடன் கொடுக்கலாம்.

rajesh2008
17-06-2011, 03:50 AM
மிக்க நன்றி நண்பா, ஆனால் நான் c6 மற்றும் E10 இரண்டு செல்லின் வேல்யூக்களை மட்டுமே இந்த முறையில் கிளியர் செய்ய முடியவில்லை. அந்த ரேஞ்சில் உள்ள நீள் செவ்வக வடிவில் செலெக்ட் ஆகும் அனைத்து செல்களின் வேல்யுக்களுமே சேர்த்து கிளியர் ஆகின்றது.

அதாவது C6 மற்றும் E10 என்பதற்குப் பதில் C 6 முதல் E10 வரை என்று எடுக்கிறது (லைக் C6:E10)

உங்கள் பதில் பதிவு நோக்கி ஆவலுடன்

அன்புரசிகன்
17-06-2011, 05:57 AM
மிக்க நன்றி நண்பா, ஆனால் நான் c6 மற்றும் E10 இரண்டு செல்லின் வேல்யூக்களை மட்டுமே இந்த முறையில் கிளியர் செய்ய முடியவில்லை. அந்த ரேஞ்சில் உள்ள நீள் செவ்வக வடிவில் செலெக்ட் ஆகும் அனைத்து செல்களின் வேல்யுக்களுமே சேர்த்து கிளியர் ஆகின்றது.

அதாவது C6 மற்றும் E10 என்பதற்குப் பதில் C 6 முதல் E10 வரை என்று எடுக்கிறது (லைக் C6:E10)

உங்கள் பதில் பதிவு நோக்கி ஆவலுடன்

Range("C6")= Null
Range("E10")= Null
என்று கொடுத்துப்பார்த்தீர்களா???

அங்கு உள்ள கோடிங் ஐ இங்கு பதியுங்கள்.

rajesh2008
17-06-2011, 04:14 PM
ரொம்ம்ம்ம்ப நன்றி. இது வேலை செய்கிறது. நன்றி


ஒரு செல்லின் வேல்யூவை நிரப்பாமால் பிரின்ட் எடுக்க முயன்றால் முதலில் அதை நிரப்பிவிட்டு பிரின்ட் எடுக்க இந்த முறையில் செய்ய முடிகிறது

Private Sub Workbook_BeforePrint(Cancel As Boolean)
If Worksheets("Sheet1").Range("C9").Value = "" Then
MsgBox "You must fill in C9"
Cancel = True
End If

ஒரே வரிசையில் அமையாத ஐந்தாறு செல்களை நிரப்பி இருக்கிறதா என்று பார்த்து பிரின்ட் கமாண்ட் செல்ல ஏதும் வழி உள்ளதா..?

அன்புரசிகன்
18-06-2011, 12:03 AM
ரொம்ம்ம்ம்ப நன்றி. இது வேலை செய்கிறது. நன்றி


ஒரு செல்லின் வேல்யூவை நிரப்பாமால் பிரின்ட் எடுக்க முயன்றால் முதலில் அதை நிரப்பிவிட்டு பிரின்ட் எடுக்க இந்த முறையில் செய்ய முடிகிறது

Private Sub Workbook_BeforePrint(Cancel As Boolean)
If Worksheets("Sheet1").Range("C9").Value = "" Then
MsgBox "You must fill in C9"
Cancel = True
End If

ஒரே வரிசையில் அமையாத ஐந்தாறு செல்களை நிரப்பி இருக்கிறதா என்று பார்த்து பிரின்ட் கமாண்ட் செல்ல ஏதும் வழி உள்ளதா..?
If Worksheets("Sheet1").Range("C9").Value = "" And Worksheets("Sheet1").Range("C15").Value = "" And Worksheets("Sheet1").Range("A10").Value = "" Then

இவ்வாறு and உடன் கொடுக்கலாம். அதாவது அத்தனையும் உண்மை என்றால் மட்டும்...

rajesh2008
18-06-2011, 02:42 AM
மிக்க நன்றி நண்பரே, நீங்கள் கொடுத்த கோடிங்கில் அண்டுக்குப் பதில் ஆர் போட்டுப் பார்த்தேன், அனைத்து செல்லும் நிரம்பி இருந்தால் மட்டுமே பிரின்டுக்கு செல்லும்படியாக அமைக்க முடிந்தது.எனக்கு தேவையானதும் கிடைத்தது.நன்றி தங்களின் உடனடி பதிலுரைக்கும்,அருமையான விளக்கத்திற்கும்.

rajesh2008
20-06-2011, 05:08 PM
பார்மின் பயன்பாடு பற்றியும் அதன் திறன், செயலாக்கம் பற்றியும் விரிவாக விளக்க முடியுமா..? ஒன்றிற்கு மேற்பட்ட பார்ம்களை ஒரு வொர்க்புக்கில் உருவாக்க முடியுமா..?

Ravee
20-06-2011, 10:33 PM
2010 வந்த பொது இன்னமும் என்ன 2003 என்று பார்த்தேன் ... பல புதிய வழிகள் கற்றுக்கொண்டேன் மிக்க நன்றி ...... :)

அன்புரசிகன்
20-06-2011, 11:35 PM
பார்மின் பயன்பாடு பற்றியும் அதன் திறன், செயலாக்கம் பற்றியும் விரிவாக விளக்க முடியுமா..? ஒன்றிற்கு மேற்பட்ட பார்ம்களை ஒரு வொர்க்புக்கில் உருவாக்க முடியுமா..?

இது ஏறத்தாள MS Access ஐ எளிமையாக மட்டுப்படுத்தப்பட்ட பயன்பாட்டுடன் பாவிப்பது போன்றது. சரியாக விளக்கத்தெரியவில்லை. access இருக்கும் என்றால் அதிலேயே பாவிக்கலாம்.

உதாரணமாக worksheet இல் பெயர் விலாசம் அலைபேசி எண் வயது என்று தலைப்புகள் வைத்து அதன் கீழ் விடையங்கள் உள்ளன என்றால் முதலாவது வரிசையில் தலைப்புக்களை வைக்க வேண்டும். பின் அதனை செலக்ட் செய்து form ஐ கொடுத்தால் முதல் வரிசையில் இருப்பதை criteria ஆக எடுக்கும். பின்னர் உதாரணமாக Ravi என்ற பெயரில் உள்ள விடையங்களை மாற்றவேண்டும் என்றால் பெயரில் ரவியை கொடுத்து தேடி பின் மாற்றி enter செய்தால் போதும்.

ஒரு வேர்க்புக் என்ன. ஒரு வேர்க்ஷீட்டிலேயே பல form களை உருவாக்கலாம்.

rajesh2008
21-06-2011, 03:35 AM
ஒரு டேட்டா பார்மில் 32 பீல்டுகள் வரையே அமைக்க முடியும் என்று பார்த்தேன். எனக்கு 37 பீல்டுகள் வரை தேவை. ஒன்றிற்கு மேற்பட்ட பார்ம் அமைக்க ஒரு ஒர்க்ஷீட்டில் முடிந்தால் மிக உதவியாக இருக்கும். எப்படி அமைப்பது.. ? விளக்குங்களேன் நண்பரே..

ஒரு பட்டனைக் கிளிக்கினால் முதல் 32 பீல்டுவரை ஒரு பார்மும், அடுத்த பட்டனைக் கிளிக்கினால் அடுத்த 5 பீல்டுகள் வரை என்டிரி செய்ய இன்னொரு பார்மும் லோட் ஆகும்படி அமைக்கவேண்டும். மேக்ரோ ரெக்கார்ட் செய்து பார்த்தேன். ஆனால் இரண்டு பட்டனை அழுத்தும்போதும் ஒரு பார்ம் மட்டுமே (முதலாவது) தெரிகிறது.

உதவுங்களேன்.?


Sub Macro1()
'
' Macro1 Macro
' Macro recorded 1/1/2002 by PADMALATHA
'

'

Range("A1:AF1").Select
ActiveSheet.ShowDataForm
End Sub
Sub Macro2()
'
' Macro2 Macro
' Macro recorded 1/1/2002 by PADMALATHA
'

'
Range("AJ1:AN1").Select
ActiveSheet.ShowDataForm
End Sub

அன்புரசிகன்
21-06-2011, 04:15 AM
முதலில் ActiveX Control இலுள்ள command Button மூலம் 2 command button உருவாக்குங்கள். சாதாரணமாக அதன் பெயர் CommandButton1 என்றும் caption இலும் CommandButton1 என்றும் இருக்கும். caption ஐ நீங்கள் வேண்டியவாறு மாற்றுங்கள். உதாரணமாக Dataform 1. ஆனால் scripts இல் நீங்கள் பெயரை தான் பாவிக்க வேண்டும். (Name)

பின்னர் Visual Basic Editor (Alt+F11) ல் நீங்கள் எந்த sheet ஐ பாவிக்கிறீங்களோ அதில் double click செய்து வருவதில்




'Dataform 1
Private Sub CommandButton1_Click()
Range("A1:AF1").Select
ActiveSheet.ShowDataForm
End Sub

' Dataform 2
Private Sub CommandButton2_Click()
Range("AJ1:AN1").Select
ActiveSheet.ShowDataForm
End Sub

rajesh2008
22-06-2011, 04:25 PM
நண்பரே உங்கள் கோடிங்குக்கு நன்றி. ஆனால் இந்த முறையில் முயன்றாலும் முதல் பார்ம் மட்டுமே தெரிகிறது.முதல் பட்டனை கிளிக்கும்போது மட்டுமே வேலை செய்கிறது.உங்களுக்கு சரியாக வருகிறதா..?

அன்புரசிகன்
22-06-2011, 11:26 PM
ஆம். வருகிறது..

ஒரே ஷீட் இல் முயலாதீர்கள். காரணம் ஒருமுறை ஒரு போர்ம் ஐ ஒரு இடத்தில் இட்டால் அது பெயரிட்டுவிடும். அதை நீக்க clear all செய்து தான் முயலவேண்டும். ஒரு blank book இல் முயலுங்கள்.

rajesh2008
23-06-2011, 04:17 PM
எனக்கு விளங்கவில்லை.நண்பரே தாங்கள் உருவாக்கிய அந்த மாதிரி வொர்க் ஷீட்டை எனக்கு மின்னஞ்சலில் அனுப்ப இயலுமா..? தங்களுக்கு மெயில் அனுப்பி இருக்கிறேன்.
கொஞ்சம் கணினி அறிவு குறைவுதான் எனக்கு.

sun
23-06-2011, 04:27 PM
மிகவும் அருமை.தொடருங்கள்.

அன்புரசிகன்
24-06-2011, 12:50 AM
http://www.contextures.com/xlUserForm01.html
நான் ஒன்றும் மேதை அல்ல. Excel version பிரச்சனையாக இருக்கலாம்.
உங்களுக்கு தேவை dataform ஐ தானாக உருவாக்கப்படவேண்டியது என்றால் கீழ் கண்ட சுட்டிக்கு செல்லுங்கள்.
http://www.contextures.com/xlUserForm01.html.

இங்கு கூறியவாறு முயலுங்கள். பின்னர் நீங்கள் விரும்பியவாறே செயற்படலாம்.


ws.Cells(iRow, 1).Value = Me.txtPart.Value
ws.Cells(iRow, 2).Value = Me.txtLoc.Value
ws.Cells(iRow, 3).Value = Me.txtDate.Value
ws.Cells(iRow, 4).Value = Me.txtQty.Value

உங்களுக்கு 10 row தெவைப்படும் என்றால் நீங்கள் பத்துவரை போடவேண்டியிருக்கும்.
நீங்கள் இரண்டாவது dataform ஐ உருவாக்க வேண்டும் அந்த சுட்டியில் வந்தது போல் இன்னொரு userform உருவாக்க வேண்டியிருக்கும்.
அதில் உதாரணமாக நீங்கள் row P இலிருந்து ஆரம்பிக்க உள்ளீர்கள் எனில்
iRow = ws.Cells(Rows.Count, 1) _ இல் 1 ஐ 16 ஆக மாற்ற வேண்டும். அதாவது P என்பது எத்தனையாவது row என்று பார்க்க வேண்டும்.
முயன்று கூறுங்கள்.

vseenu
20-09-2011, 03:37 PM
பயனுள்ள தகவல்கள்.எக்ஸெல் அறிமுகமில்லாதவருக்கு மிகவும் உபயோகமுள்ளதாகஇருக்கும்.

sujeendran
04-10-2011, 04:40 PM
அருமை பகிர்வுக்கு நன்றி

nellai tamilan
10-10-2012, 12:59 PM
எக்ஸல் நான் அதிகம் காதலிக்கும் ஒரு மென்பொருள்.
பகிர்தலுக்கு நன்றிகள்