PDA

View Full Version : எவ்வளவோ பார்த்திட்டோம்



த.ஜார்ஜ்
12-07-2010, 04:02 PM
“சும்மா வாங்க போயிட்டு வரலாம்” நாலு பேர் போகிற காரில் ஏழாவது நபராக என்னையும் ஏற்றிக் கொண்டார்கள்.
“ஒரு குரூப்பா போனாதானே நல்லாயிருக்கும்.” பெருசுகள் மீசையை முறுக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தன.
கோயில் கட்டுவதற்கு நிதி திரட்டதான் இந்த பயணம்.
வசதியுள்ள,தாராள மனம் கொண்ட, நம் காரில் வருகிறவர்களுக்குத் தெரிந்த புண்ணியவான்களை நாடுவது நோக்கம்.
அப்படியான ஒரு வீட்டிற்கு அந்தி வேளையில் போய் சேர்ந்தோம்.ஒரு சோலைக்கு நடுவில் பிரமாண்டமாய் இருந்தது வீடு.
அழைத்து போனவர், ‘ஃபாரின் பார்ட்டி. நைசா பேசனும்” என்றார்.
முன்னறையில் பெரிது பெரிதாய் இயேசு படங்கள். மாலைகள். விளக்குகள், புகையும் ஊதுபத்தி.. ஒரு கோயிலுக்குள் நுழைந்த மாதிரி இருந்தது.
வரவேற்ற பெண்மணி நடுத்தர வயதை கடந்திருந்தார். உயர்தர கவுள் அணிந்திருந்தார். கண்களில் ஒரு கிறக்கம். இளமையாக காட்டிக் கொண்டிருந்தார்.
லைட்டை போட்டார்: விசிறியை சுழல விட்டரர்.”இருங்க. காபி கொண்டாரேன்’
பெரிய பெரிய அறைகள் இருந்த வீட்டில் அவர் தனியாக இருப்பதை கண்டுணர முடிந்தது.
காபியை தந்து விட்டு “ நீங்க வருவீங்கன்னு சாமியாரு சொன்னாரு. என்ன விசயம்” என்றார். சாமியார் முன்னே இந்த ஊரில் பணியாற்றியவர்.

யாரும் சட்டென்று விசயத்தை சொல்ல வில்லை. “அந்த காலத்தில இந்த ஊர்ல திருவிழான்னா எல்லா செலவும் அண்ணிதான் செய்யும்” இப்படி ஒருவர் உறவு முறையோடு தொடங்கினார். அந்த அம்மாள் லேசாக புன்னகைத்தார்.
“இவங்கதானே தேரே செய்து கொடுத்ததா சொன்னங்க..”
“பிஷப் வந்தா இவங்க வீட்டிலதான் சாப்பிடுவாருன்னா பாத்துக்கோயேன்.”
அந்த அம்மாள் புளகாங்கிதத்தில் மிதந்தார். “ எல்லாம் சாமியாரு சொல்லிட்டாரா..”

“எவ்வளவு செய்து என்ன. இப்ப உள்ள பயலுக மதிக்கிறதேஇல்ல.”என்று தொடங்கி அவர் செய்த தான தர்மங்களை விவரிக்கத்தொடங்கினார்.
மண்டைய, மண்டைய ஆட்டிகிட்டு கேட்டுகிடிருந்தோமா.. நேரம் போனதே தெரியலை.. இருட்டிபோச்சி.

பேச்சை மாற்ற விரும்பிய ஒருவர், “அண்ணன் எங்கே அண்ணி.” என்றார்.
“அந்த குடிகாரனுக்க பேச்ச நீ எடுக்காத..”
மாறி மாறி முகத்தை பார்த்துக் கொண்டோம். “....அந்த கிறுக்கு மனுசன் தொந்தரவே வேண்டாம்னுதானெ இங்க வந்திருக்கேன்.”

”ஏதாவது பிரச்சனையா..”
“அவனோட என்னைக்குதான் பிரச்சனை இல்லை.. என்னைக்கு இந்த குடும்பத்தில வாழ்க்கை பட்டேனோ அன்னைக்கே இவன் கூட மல்லுகட்டி.. மல்லுகட்டி.. ஆனா என்கிட்ட நடக்குமா .. விடுவனா.. ஆமா நிங்க எதுக்கு வந்தீங்க..”
“ஊர்ல கோயில் கட்டிறோம். அதான் நன்கொடை..”
“கோயில் கட்டனும்னா சாமியாரெல்லாம் இப்ப இங்கதான் வாரானுவ... போன மாசம் ஃபாதர் செல்வராஜ் இப்படிதான் வந்தாரு .அம்பதாயிரம் வாங்கிட்டுதான் போனாரு. தெரியுமா’
கொட்டாவி வந்தது. ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்து முதுகு வலிக்க, மூத்திரம் நிரம்ப.. நெளிந்தார்கள் பெருசுகள்.
சுதாரித்துக் கொண்ட ஒருவர் “ஒரு ஐயாயிரம் போடுவோமா” ரசீது புத்தகத்தை ஒருவர் நீட்டினார்.
“ ஐயாயிரமா. ஒரு இருபத்தஞ்சா எழுதுங்க. யாருக்கெல்லாமோ எவ்வளவோ கொடுக்கிறோம். நம்ம அந்தோணியார் கோயிலுக்கு கொடுக்கிறதில கொறைஞ்சு போயிட மாட்டேன்.”
திருப்தியாய் நிமிர்ந்து உட்கார்ந்தோம். அன்றைய உட்சபட்ச தொகை அது. கண்களால் கை குலுக்கிக் கொண்டோம்.
ரசீது கிழித்து கொடுக்கப்பட்டது.
“என்கிட்ட இப்ப பணம் இல்ல. ஒண்ணாம் தேதிக்கு அப்புறம் வாங்க.”
“சரி.. சரி பரவாயில்ல. வாரோம்.”
“இருங்க அந்த மனுசன்கிட்டயும் கேளுங்க. நல்லா பணம் வச்சிருக்காரு. நான் தந்தேன்னு சொல்லிராதீங்க. அங்க எவகூடவோ கட்டில்ல உருண்டுகிட்டு கிடப்பாரு.. நாறப் பய..” என்று ஜெர்மனிக்கு போன் போட்டு கொடுத்தார். அண்ணனிடம் பேசியவர் “ அண்ணன் அடுத்த வாரம் வாராராம். அப்ப பார்க்கலாம்னு சொல்றாரு” என்றார்.
காரில் திரும்பி வரும் போது அவள் சமர்த்தியத்தை ஒருத்தர் வியந்தார். இப்படி சும்மா பேசிட்டேயிருந்தா வீட்டுகாரன் சண்டை போடாம என்ன பண்ணுவான். இது இன்னொருத்தர்.

. சரி விசயத்துக்கு வருவோம்..

அடுத்த மாதம் அந்த வீட்டுக்கு போன போது உள்ளே அழைத்து போனார். வீடு இருளில் மூழ்கி இருந்தது. மின்சாரம் இல்லை. மெழுகுவர்த்தி வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருந்தது.அவர் கணவரும் இருந்தார்.
சோபாவில் உட்காரலாம் என்றிருந்த போது அப் பெண்மணி தொடங்கினார்.”உங்களைதான் தேடிட்டெ இருந்தேன்.”
பணம் தருவதற்குதான் தேடியிருப்பார்கள் என்று நம்பி உட்கார்ந்தோம். “எத்தனை பேரு இப்படி கிளம்பியிருக்கீங்க.. கொள்ளையடிக்கிறதுக்கு..” திடுக்கிட்டு உறைந்தோம்.
“மாத்திரையை போட்டிட்டு லேசா மயக்கத்தில இருந்தா.. நல்ல ஆளுக.. நான் ரசீத பாத்த பிறகுதானே தெரிஞ்சிது.. பெருங்களவாளியால்லா இருக்கிய..”
மூஞ்சை மூஞ்சை பார்த்துக் கொண்டோம். “இது போதாதூன்னு போனைப் போட்டு அவருகிட்ட லட்ச ரூபா... பணம் என்ன கொட்டியா கிடக்கு.. ஒண்ணா இருக்க குடும்பத்த பிரிக்க பார்க்கிரேளா? ஒத்த பைச தர மாட்டேன்.இந்த பக்கம் வந்திராதீங்க..” என்ன நிர்பந்தமோ.
அவர் கணவனை ஏறிட்டேன். முகம் கறுக்க திரும்பிக் கொண்டார். “அப்ப அந்த ரசீது.”
“அத நான் கிழிச்சிப் போட்டாச்சி. அந்த எழவு எனக்கு எதுக்கு”

சொல்லிக்கொள்ளாமலே திரும்பினோம்.

ஹும்... ஆப்பு எந்த வடிவிலெல்லாம் வந்து தொலைக்கிறது.

அன்புரசிகன்
12-07-2010, 11:44 PM
எனக்கு ஒரு டவுட். இங்க ஜார்ஜ் என்ற பெயரில வடிவேலு தான் வந்திருக்காரோ................
ம்.. எவ்வளவோ பார்த்திட்டோம். இத பார்க்க மாட்டோமா... ஆனாலும் வெளிநாட்டில இருந்து புருசன் வந்த நேரத்தில நீங்கள் அங்க போனது உங்க தப்பு சாரே.... :D

ஆதவா
13-07-2010, 06:42 AM
தலைப்பைப் பாருங்க... “எவ்வளவோ பார்த்திட்டோம்”

அப்படின்னா இந்தமாதிரி நிறைய பார்த்திட்டீங்க.... சரிவிடுங்க, பத்தோட பதினொண்ணு. :aetsch013:

செல்வா
13-07-2010, 07:18 AM
தொழில மாத்தியாச்சா ? :)

சிவா.ஜி
13-07-2010, 09:19 AM
நிஜமாவே ரெண்டாவது முறையா அங்கப் போனவங்களை நினைச்சுப் பரிதாபமா இருக்குங்க ஜார்ஜ்...அந்தம்மாவுக்கு என்ன நிர்பந்தமோ....!!!


அன்பு சொன்னதைப் பாத்தா...எனக்கும் டவுட்டாத்தேன் இருக்கு....!!!

மச்சான்
13-07-2010, 09:34 AM
ஆனாலும் வெளிநாட்டில இருந்து புருசன் வந்த நேரத்தில நீங்கள் அங்க போனது உங்க தப்பு சாரே.... :D

அன்பு சொன்னதைப் பாத்தா...எனக்கும் டவுட்டாத்தேன் இருக்கு....!!!
நீங்கள்லாம் என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்கு ஒண்ணுமே புரியல....!!:aetsch013:

பாலன்
13-07-2010, 02:46 PM
நிறைய அனுபவத்தை தொகுத்து வச்சிருக்கீங்க ஜார்ஜ். ஆனா எப்பவுமே கைப்புள்ளயாவே இருக்கீங்களே ஏன்?

த.ஜார்ஜ்
18-07-2010, 08:39 AM
எனக்கு ஒரு டவுட். இங்க ஜார்ஜ் என்ற பெயரில வடிவேலு தான் வந்திருக்காரோ................
ம்.. எவ்வளவோ பார்த்திட்டோம். இத பார்க்க மாட்டோமா... ஆனாலும் வெளிநாட்டில இருந்து புருசன் வந்த நேரத்தில நீங்கள் அங்க போனது உங்க தப்பு சாரே.... :D

உடனே வாங்க என்று அந்தம்மாதான் போன் போட்டிச்சு.[முத நாள் போதையில இருந்தாங்களாம்.அன்றைக்கு போனதுதான் தப்பாம்.]

த.ஜார்ஜ்
18-07-2010, 08:42 AM
தலைப்பைப் பாருங்க... “எவ்வளவோ பார்த்திட்டோம்”

அப்படின்னா இந்தமாதிரி நிறைய பார்த்திட்டீங்க.... சரிவிடுங்க, பத்தோட பதினொண்ணு. :aetsch013:

ம்.....

ஓவியன்
18-07-2010, 08:44 AM
ஆஹா இப்படியெல்லாம் நடக்குதா உங்களுக்கு..??

இது போன்ற பல்வேறு ஆப்புக்கள் உங்களைத் தொடர என் வாழ்த்துகள் :), அப்போ தானே இப்படி ஒவ்வொரு ஆப்பையும் வாசித்து இரசிக்கலாம். :cool:

த.ஜார்ஜ்
18-07-2010, 08:46 AM
தொழில மாத்தியாச்சா ? :)

ஆமா. அதுக்காக அடுத்த வாரம் கோயில்ல ஏழு பேருக்கும் ஒரு கௌரவ பட்டம் தந்தாங்க. 'அமுக்கிட்டானுகடோய்' [எப்படி நல்லாருக்கில்ல]

த.ஜார்ஜ்
18-07-2010, 08:47 AM
நிஜமாவே ரெண்டாவது முறையா அங்கப் போனவங்களை நினைச்சுப் பரிதாபமா இருக்குங்க ஜார்ஜ்...அந்தம்மாவுக்கு என்ன நிர்பந்தமோ....!!!


அன்பு சொன்னதைப் பாத்தா...எனக்கும் டவுட்டாத்தேன் இருக்கு....!!!

எதையும் ஆராயணும்னு நீங்கதான் சொன்னீங்க.

த.ஜார்ஜ்
18-07-2010, 08:49 AM
நீங்கள்லாம் என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்கு ஒண்ணுமே புரியல....!!:aetsch013:

நீங்க ரொம்ப நல்லவங்க மச்சான்.[அதான் தப்ப நினைக்க தோணலை]

த.ஜார்ஜ்
18-07-2010, 08:51 AM
நிறைய அனுபவத்தை தொகுத்து வச்சிருக்கீங்க ஜார்ஜ். ஆனா எப்பவுமே கைப்புள்ளயாவே இருக்கீங்களே ஏன்?

நீங்க ஒருத்தராவது எனக்காக கவலை படறதுக்கு இருக்கீங்களே.

த.ஜார்ஜ்
18-07-2010, 08:53 AM
ஆஹா இப்படியெல்லாம் நடக்குதா உங்களுக்கு..??

இது போன்ற பல்வேறு ஆப்புக்கள் உங்களைத் தொடர என் வாழ்த்துகள் :), அப்போ தானே இப்படி ஒவ்வொரு ஆப்பையும் வாசித்து இரசிக்கலாம். :cool:

என்னே ஆனந்தம்.[ உங்கள் வாழ்த்து அப்படியே பலிக்கட்டும்]

அமரன்
18-07-2010, 02:54 PM
ஒண்ணுமே புரியலப்பா.

பொதுச்சேவைக்கு வந்திட்டால் இதெல்லாம் சகஜம்கிறது மட்டும் உண்மை.

பா.ராஜேஷ்
18-07-2010, 05:18 PM
"கண்கள்ல ஒரு கிறக்கம்" கண்ட பிறகு கூடவா நம்பினீங்க.... என்ன கொடும சார் இது!!??

விகடன்
27-07-2010, 07:04 AM
ஹீ...ஹீ....ஹீ.....
நாம் பத்துரூபாவுக்கு ஒரு ஃபுக்மார்க் விக்க எவ்வளவு கஸ்ட்டப்பட்டோம். கடைசிலே கடுப்பேறி நம்ம காசைபோட்டு ஏதோ கொஞ்சமாவது வித்ததாக காட்டிக்கொண்டிருக்கிறோம்.

இவங்க காரை புடிச்சு போன காசு குடித்துடிவாங்களாக்கும். கடைசில கார் புடிச்ச காசுதான் நஸ்ட்டம் :D