PDA

View Full Version : யாதென விளக்கப்படும் காதல்



சசிதரன்
11-07-2010, 01:26 PM
சலிக்காத புன்னகையோடு
இடைவிடாத தொலைபேசி அழைப்புகளை பெறுகிறான்
பாடல்களை தொகுத்து வழங்கும்
ஜீன்ஸ் இளைஞன்.

அவரவர் காதல் அனுபவம் பற்றி
தொலைபேசும் அனைவரிடமும் கேட்கபடுகிறது.

தன காதலன் பெயர் சொல்லி
அறையே அதிரும்படி
காதல் எறிகிறாள் பெண்ணொருத்தி.
தொடரும் பாடல் அவர்கள் காதல் சின்னமாகிறது.

பின் வரும் பெண்ணிடமும்
காதல் குறித்து கேட்கப்படுகிறது.
"அய்யய்யோ... எனக்கு கல்யாணமாயிடுச்சு.." என்றபடி
அவசரமாய் மறுக்கிறாள் அப்பெண்
காதல் ஏதுமில்லையென.

nambi
11-07-2010, 02:20 PM
பகிர்வுக்கு நன்றி!

சிவா.ஜி
11-07-2010, 03:19 PM
ம்...காதலை புரிந்துகொண்டது அந்த லட்சணத்தில் இருக்கிறது. கல்யாணத்துக்குப் பிறகு காதலில்லா வாழ்க்கை வாழும் அந்தப் பெண்ணைப்போல பலருண்டு.

அழகாய் சொல்லியிருக்கிறீர்கள் சசி. வாழ்த்துக்கள்.

பாலன்
11-07-2010, 04:25 PM
காதல் என்ற சொல்லின் அடர்த்தி நம் சமூகத்தில் பிறழ்ந்து போனதன் விளைவு இது.

சசிதரன்
16-07-2010, 03:28 AM
நன்றி நம்பி, சிவா அண்ணா மற்றும் அரும்பு.. :)